Wednesday, May 6, 2009

சமூகக் கடமை

மே மாதம் 13 ஆம் தேதி எங்கள் ஊரில் தேர்தல். ஒரு இந்தியக் குடிமகனாக என் சமூகக் கடமையை ஆற்றி விட்டு வந்தேன். எங்கள் ஊரில் அந்த வாக்குச் சாவடியில் மொத்தமாக ஆயிரத்தி ஐந்நூறு வாக்குகள். நான் வாக்களிக்கச் சென்ற போது நேரம் ஒரு மணி. அப்போது மொத்தமே நூற்றி நாற்பத்தைந்து வாக்குகள் தான் பதிவாகி இருந்தன. மக்கள் வாக்களிக்க செல்ல மறுப்பதன் அல்லது மறுப்பதன் காரணம் என்ன? இந்திய தேர்தல் முறையில் அவர்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கை இன்மையா? அல்லது இந்திய அரசியலின் மீது அவர்களுக்கு ஏற்பட்ட வெறுப்பா? இல்லை எந்த வாக்காளரும் பணம் கொடுக்கவில்லையா?

இதை எல்லாம் விட கொடுமை, என் பாட்டி. அவருக்கு வயது எழுபத்தைந்து. கிட்டத்தட்ட ஐம்பத்து வருடங்களாக வாக்களித்து வருகிறார். அவருடன் பேசிக்கொண்டிருந்த போது யாருக்கு வாக்களித்தாய் என்று என்னிடம் கேட்டார். நானும் நான் வாக்களித்த வாக்காளர் பெயரை சொல்லி, அவர் சின்னத்தையும் சொன்னேன். என் பாட்டியோ, மற்றொரு சின்னத்தை சொல்லி அதற்கு தான் வாக்களித்ததாக சொன்னதோடு, நான் அந்த சின்னத்திற்கு வாக்களிக்கததற்காக கோவித்துக் கொண்டார். நான் அந்த சின்னத்தில் நின்ற வாகாலரின் பெயர் உங்களுக்கு தெரியுமா என்று அவரிடம் கேட்டேன். அவரோ அதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் நான் அந்த கட்சிக்கு தான் போட்டேன், என்றார். இப்படிப் பட்டவர்கள் இருக்கும் வரைக்கும் அன்னை சோனியா காந்தியைப் போன்றவர்கள் இலங்கையில் இனப் படுகொலையை தொடர்ந்து கொண்டு தான் இருப்பார்கள்.

நான் வாக்களித்தவர், கரை படியாத கரங்களை உடையவர் என்றோ, இதுவரை எந்த ஊழல் குற்றச்சாட்டிலும் மாட்டிக் கொள்ளாதவர் என்றோ அவருக்கு நான் வாக்களிக்கவில்லை. அவர் கரங்கள் கரை படியாமல் இருப்பதற்கு அவருக்கு இதுவரை வாய்ப்பு கிடைக்காது கூட காரணமாய் இருக்கலாம். நான் அவருக்கு வாக்களித்ததற்கு காரணம், எந்த கூட்டணியில் இடம் பிடித்து இவர் பாராளுமன்றத்திற்கு சென்றாலும், அங்கே இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை தடுக்க பலமாக குரல் கொடுக்க இவரை விட்டால் யாரும் இல்லை என்ற காரணத்தால் தான். அவர் வெற்றி பெற ஆசி வழங்க வேண்டும் என்று இந்த ஈழப் பிரச்சினைக்காக உயிர் நீத்த பல நல்ல உள்ளங்களின் ஆன்மாக்களை வேண்டிக்கொள்கிறேன்.

No comments: