Sunday, May 24, 2009

தோள் கொடு தோழா

தமிழீழத் தலைவர் உயிரோடிருக்கிறாரோ இல்லையோ, அவர் ஈழத்தில் இல்லை என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. அவரும் அவரது தளபதிகளும் களமாடிய போதே தமிழர்களை கொன்று குவித்த இலங்கை இராணுவம் இப்போது என்ன செய்யும் என்பதை நினைத்துப் பார்க்க கூட முடியவில்லை. தொப்புள் கோடி உறவுகளாகிய நம் உதவியும் ஆறுதலும் முன்பு எப்போதையும் விட இப்போது தான் ஈழத்தமிழர்களுக்கு தேவை. இவ்வளவு நாள் ராஜீவ் காந்தியைக் கொன்றதற்கு பழி தீர்த்து பாவம் தேடிக் கொண்டோம். இனியாவது ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற ஒன்று சேர்ந்து போராடுவோம்.

நடந்து முடிந்த "தீவிரவாதத்துக்கு" எதிரான இந்த போரில் பல ஆயிரம் அப்பாவி மக்கள் பலி ஆகியுள்ளனர். இந்த போரில் நடந்த மனித உரிமை மீறலை விசாரணை செய்ய ஐரோப்பிய நாடுகள் செய்யும் முயற்சிக்கு தடை போட இலங்கை அரசு முயன்று வருகிறது.

முதலில் மக்கள் இறக்கவில்லை, இறந்தவர்கள் அனைவரும் புலிகளே என்று இராணுவம் சொல்லி வந்தது. பின் புலிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வெளியேறும் மக்களை கண்மூடித்தனமாக சுட்டுக் கொள்வதாக தெரிவித்தது. இந்த இரண்டு செய்திகளில் எது உண்மையாக இருந்தாலும் எதற்காக ஐ.நா வின் முயற்சிக்கு தடை போட வேண்டும்? உன் முதுகில் அழுக்கு இல்லை என்றால் எதற்காக கவலை படுகிறாய்? வந்து பார் என்று சொல்ல வேண்டியது தானே?

இலங்கை அரசின் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதை பார்க்கும் பொழுது மனம் வலிக்கிறது. ஆயுதம் வழங்கினார்கள், தொழில் நுட்பம் சொல்லிக் கொடுத்தார்கள். அதன் பின் ஆள் பலமும் வழங்கினார்கள். அதை எல்லாம் பொறுத்து போனோம். இப்போது இந்த விசாரணையை தடுக்க கூடவா உதவி புரிய வேண்டும்?

நாம் இந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு வோட்டு போட்டதன் மூலம் நம் கைகளில் தேர்தல் மைக்கு பதிலாக ஈழத் தமிழர்களின் ரத்தத்தை வைத்துக் கொண்டோம். அந்த கரையை இப்போது வடுவாக மாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறோம்.. கரையை போக்கி விடலாம் நண்பர்களே. வடு மாறாது.

முத்தமிழ் அறிஞர் "தமிழின காவலன்" கலைஞருக்கு இப்போது அவர் கட்சி எம்.பி களுக்கு மந்திரி பதவி வாங்கி தரும் "பாரிய" கடமை இருக்கிறது. அதை முடித்த பிறகாவது ஈழத்தமிழனைப் பற்றி சிந்திப்பாரா தெரியவில்லை? அனைவரும் போன பின்னால் இரங்கற்பா எழுதி புண்ணியமில்லை தலைவரே.

பல வலை மனைகளில் ஈழத் தமிழர் பற்றி வரும் செய்திகளுக்கு மனம் புண்படும்படி பின்னூட்டம் போடும் தோழர்களே. அழுகின்ற மனிதனுக்கு தோள் கொடுங்கள், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதீர்கள். எங்களைக் காப்பாற்று என்று வரும் மனிதனிடம் நியாய அநியாயம் பேசுவதால் அவன் உயிரைக் காப்பாற்ற முடியாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

2 comments:

senguttuvanraja said...

Bhava,

Excellent article....!!!! Keep it up...!!!!

This is the right time to support Lankan Tamils bcoz they lost their wonderful Leader...!!! He is the real Martyr...!!!

Unknown said...

Thanks senguttuvan.