Saturday, May 22, 2010

சவாலே சமாளி - தொடர் பதிவுக்கதை

இன்னைக்கு நர்சிம் அவரோட என்ணங்கள்ல - “இனி பழையபடி நிறைய எழுத வேண்டும். இல்லை என்றால் நட்சத்திரம் ஆகிவிடும் அபாயம் இருக்கிறது”-னு எழுதியிருந்தார். இன்னைக்குக் காலையில தான் தமிழ் மணம் அட்மின்ஸ் கிட்ட இருந்து நட்சத்திர அழைப்பு வந்தது. கலக்கமா இருக்கு.


முன்னாடி அமீரகப் பதிவர்கள் தமிழ் மண நட்சத்திர இன்விடேஷன் மாதிரியே ஈ-மெயில் அனுப்பி ‘குசும்பு’ பண்ணுவாங்களாம். அது மாதிரி இருக்குமோ அப்பிடின்னு ஒரு டவுட்டு இன்னும் இருக்கு. அப்பிடியில்லைன்னா, நான் ஐநூறு பதிவு (இடுகை?) எழுதிட்டேன்னு லுல்லலாயிக்கி சொன்னதை தமிழ்மணமும் நம்பிட்டாங்களோ என்னவோ? இல்ல இப்பல்லாம் அடிக்கடி எழுதறதில்லைன்னு ஒரு வாரம் தொடர்ந்து எழுத வைக்கிறதுக்காக நட்சத்திரமாக்கக் கூப்பிடுறாங்களான்னு தெரியலை.


இந்த ஒரு குழப்பம் போதாதுன்னு கவிஞர் ராஜசுந்தரராஜன் முந்தின பதிவுக்கு பின்னூட்டம் போட்டுட்டுப் போயிருக்காரு. இதுவும் அவரே தானா இல்லை அவர மாதிரி யாரு விளையாடுறாங்களான்னு தெரியலை.


பாருங்க, வர வர வாழ்க்கையில நம்பகத்தன்மையே போயிருச்சி. உண்மையா உதவி செய்ய வர்றவங்களைக் கூட சந்தேகக்கண்ணோடயே பாக்குறோம். நம்ம கதிர் ஒரு தடவை எழுதியிருந்த மாதிரி.

சரி அதை விடுவோம். போன பதிவுல நான் விட்டிருந்த சவாலை ஃப்ரடரிக் ஃபோர்சித் ஏத்துக்க முடியாதுன்னு சொல்லிட்டாரு. தன்னோட மறுப்புக்குக் காரணமா கீழ உள்ள காரணங்களைச் சொல்லி இருக்காரு
1. இது மாதிரி இந்தியாவை வச்சி கதை எழுதிற அளவுக்கு இந்தியாவை அறிமுகம் இல்லை
2. வழக்கமா மிலிட்டரி பேஸ்ட் கதையோ இல்லை கே.ஜி.பி, சி.ஐ.ஏ வராமலோ கதை எழுதி ரொம்ப நாளாச்சின்னு சொல்லிட்டாரு.
3. கடைசியா தனக்குத் தமிழ் தெரியாதுன்னு சொல்லிட்டாரு.

வேற வழியில்லாம, நானே எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன். உங்க தலையெழுத்து இப்பிடியிருந்தா நான் என்ன செய்ய முடியும்?

*******************************************************************


சம்பவத்தன்று மதியம் 2:00 மணி

கையிலிருந்த கிளாஸில் தங்கத் திரவம் ஆடிக்கொண்டிருந்தது. கிளாஸைக் கீழே வைத்தான். கையை முகத்துக்கு முன்னால் நீட்டிப்பார்த்தான். கை நடுங்குவது தெளிவாகத் தெரிந்தது. கண்டிப்பாக இது

உள்ளே போன திரவத்தினால் நடுங்குவதில்லை. எத்தனை கிளாஸ் உள்ளே போனாலும் ஸ்டெடியாக இருப்பவன் சுந்தரம். கை நடுங்குவதற்கு வேறு காரணம் இருக்கிறது. கிளாஸை எடுத்து அதில் இருந்த திரவத்தை ஒரே மூச்சில் விழுங்கினான்.

தொண்டை எரிந்தது. தட்டில் இருந்த சிக்கன் துண்டை எடுத்து வாயில் போட்டு மென்றான்.

‘முரளி கண்டுபிடித்து விட்டான். சும்மா விடமாட்டான் எமகாதகன்’ கையில் இருக்கும் சிக்கனை முரளியை நினைத்துக் கொண்டு கசக்கினான். கறையான கையை டிஷ்யூ பேப்பரில் துடைத்துக் கொண்டான்.

சுந்தரமும் முரளியும் ஒரு ட்ராவல்ஸில் வேலை செய்கிறார்கள். முதலாளி இவர்களை நம்பி பிசினஸைக் கொடுத்து விட்டு அமெரிக்காவில் தன் மகளுடன் வசிக்கிறார். சுந்தரம் முரளிக்குத் தெரியாமல் சில பல சித்து வேலைகளுக்கு ட்ராவல்ஸ் கார்களை உபயோகித்து கொஞ்சம் காசு பார்த்தான். இத்தனை நாள் தெரியாமல் இருந்தது இன்று கையும் களவுமாகப் பிடித்து விட்டான் முரளி. நாளைக் காலை 8:00 மணி வரை டயம் கொடுத்திருக்கிறான். அதற்குள் சுந்தரம் முதலாளிக்கு ஃபோன் போட்டு விசயத்தை சொல்லி தப்பை ஒத்துக் கொண்டு முதலாளி தரும் தண்டனையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாம். இல்லையென்றால் அவன் முதலாளியிடம் சொல்லிவிடுவதோடு போலிஸிலும் போட்டுக் கொடுத்துவிடுவதாகச் சொல்லியிருக்கிறான்.

முதலாளி கண்டிப்பானவர். சுந்தரம் தானே ஒத்துக் கொண்டாலும் தகுந்த தண்டனை தராமல் விடமாட்டார். ரிட்டயர்ட் போலீஸ் அதிகாரி வேறு.

‘என்ன செய்யலாம் இந்த முரளியை? அவன் தனிக்கட்டை. சொந்தம் பந்தம் செலவு கிலவு எதுவுமில்லை. ஆனால் நான்? இரண்டு பெண்குழந்தைகள். பள்ளிக்கூடங்கள் பகல் கொள்ளை அடிக்கின்றனர். பள்ளி ஃபீஸ் கட்ட மட்டும் இன்னொரு சம்பளம் தேவைப்படுகிறது. முரளி என்னை வாழவிடமாட்டான். வேறு வழியில்லை’

குவாட்டர் பாட்டிலில் மிச்சமிருந்த சரக்கை மிக்ஸிங் இல்லாமல் பாட்டிலோடு குடித்துவிட்டு மேஜையில் டிப்ஸ் வைத்து விட்டு வெளியேறினான்.

***************************************

ருண் சிகரெட் புகையை விட்டத்தை நோக்கி விட்டான். எதிரில் இருந்த இன்ஸ்பெக்டர் அருணின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். அடுத்த பஃப் இழுத்து விட்டு சிகரெட்டை மேஜையின் மீதிருந்த ஆஷ்ட்ரேயின் மேல் நசுக்கினான்.

“சொல்லுங்க நாராயணன். முரளிக்கு எதிரிகள் யாரும் இருக்காங்களா?”

“எதிரிகள்னு பெரிசா யாரும் இல்லை சார். ஆள் தனிக்கட்டை. சொந்தம் பந்தம் யாரும் இல்லை. நம்ம ரிட்டயர்ட் போலீஸ் கமிஷனர் வித்யாதரனோட ட்ராவல் ஏஜென்சிய முரளியும் சுந்தரமும்தான் பாத்துக்குறாங்க”

“தெரியும் நாராயணன். வித்யாதரன் சார் அமெரிக்காவுல இருந்து என்னைக் கூப்பிட்டு இந்தக் கேஸை ஸ்பெஷலாப் பாக்கச் சொன்னார். முரளிக்கும் சுந்தரத்துக்கும் தகறாரு எதாவது?”

“அப்படியெல்லாம் இல்லை சார். ரெண்டு பேரு நல்ல ஃப்ரெண்ட்ஸ்னு ட்ராவல்ஸ் டிரைவர்ஸ் எல்லாம் சொல்றாங்க”

“அப்படியா? சுந்தரத்தை விசாரிச்சிங்களா?”

“விசாரிச்சோம் சார். அவனும் முரளியப் பத்தி நல்லவிதமாத்தான் சொன்னான். ஆனா முரளிக்கும் யாரோ ஒரு லேடிக்கும் தொடர்பு இருக்கலாம்னு அவன் சந்தேகப்படுறதா சொன்னான் சார்”

“ஹ்ம். இண்ட்ரஸ்டிங். வேற யாராவது இது பத்தி ஹிண்ட் எதாவது குடுத்தாங்களா?”

“இல்ல சார். சுந்தரம் மட்டும் தான் அப்பிடி சொல்லியிருக்கான்”

“ஓக்கே நாராயணன். நாம முதல்ல போய் க்ரைம் சீன் பாத்துட்டு வரலாம். எதுவும் கலைக்கலை தான?”

“இல்ல சார். அப்பிடியே இருக்கு”

“ஓக்கே” என்று சொல்லிக்கொண்டே எழுந்து மேஜைமேல் இருந்த தன் ஐ ஃபோனை எடுத்துக்கொண்டான். இருவரும் இன்ஸ்பெக்டரின் அறையை விட்டு வெளியே வந்தனர்.

“டிப்பார்ட்மெண்ட் ஜீப்லயே போயிடலாம் சார்” என்றவாறு ஜீப் டிரைவரைப் பார்த்தார் நாராயணன். பார்வையில் இருந்த அர்த்தத்தைப் புரிந்து கொண்ட டிரைவர் சாவியை இன்ஸ்பெக்டரிடம் கொடுத்தார்.

இருவரும் வெளியே வந்தனர்.

“அய்யாவை இப்ப பாக்க முடியாதுய்யா.. அய்யா முக்கியமான கேஸ் விசயமா டிஸ்கஷன்ல இருக்காரு” யாரிடமோ வாசலில் இருந்த கான்ஸ்டபிள் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது.

“என்ன மாணிக்கம். என்ன பிரச்சனை?” இன்ஸ்பெக்டரைப் பார்த்ததும் கான்ஸ்டபிள் அனிச்சையாக விரைப்பை உடலுக்குக் கொண்டுவந்து சல்யூட் ஒன்றைப் பிரயோகித்தார்.

“சார் உங்களப் பாக்கணும்னு அரை மணி நேரமா தொணத்திக்கிட்டே இருக்கான் சார் இந்தாளு”

அருண் அந்தாளைப் பார்த்தான். ஒடிசலான, உயரமான உருவம். ஒரு கண்ணாடியைப் போட்டு விட்டால் சினிமா நடிகர் மனோபாலாவைப்போல இருப்பான். கருப்பு உதடுகள் சிகரெட் சிகரெட் என்று சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன. வெள்ளை சட்டை வெள்ளை பேண்ட் போட்டிருந்தான். சட்டைப் பையில் பச்சை எம்ப்ராய்டரி எழுத்துக்கள் வித்யா ட்ராவல்ஸ் என்று சொல்லின.

“யாருப்பா நீயி?” இன்ஸ்பெக்டர் அவனைத் தலை முதல் கால் வரை பார்வையால் அளந்து கொண்டே கேட்டார்.

“நான் வித்யா ட்ராவல்ஸ்ல ட்ரைவரா இருக்கேன் சார். முரளி சார் கொலை சம்மந்தமா உங்கக்கிட்ட ஒரு விசயம் சொல்லணும் சார்”

அருணும் நாராயணனும் பார்வையைப் பரிமாறிக்கொண்டனர். எதோ சொல்ல வந்த நாராயணனை மறித்த அருண் “வாங்க உள்ள போய் பேசலாம்” என்று உள்ளே செல்ல திரும்பினான்.

***********************************************************


சம்பவத்துக்கு இரு நாட்களுக்கு முன்

வித்யா ட்ராவல்ஸ் என்ற எழுத்துக்கள் பொன் நிறத்தில் மின்னிக்கொண்டிருந்தன. பெரிய கண்ணாடிக் கதவுகள் உள்ளே ஏசி இருப்பதை பறை சாற்றிக்கொண்டிருந்தன. கட்டிடத்துக்கு முன்னால் இருந்த இடத்தில் ஐந்து கார்களும் இரண்டு வேன்களும் வெள்ளை நிறத்தில் நின்று கொண்டிருந்தன.

ஒரு கையை அம்பாசிடர் காரின் மேல் ஊன்றி சாய்ந்து நின்று கொண்டு சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தான் சுந்தரம். வெயில் உச்சியைப் பிளந்துகொண்டிருந்தது. அவன் நெற்றியில் பூத்திருந்த வேர்வைத்துளிகளில் வித்யா ட்ராவல்ஸ் எழுத்துக்களின் பொன் நிறம் பிரதிபலித்து அவன் நெற்றி ஜொலித்தது.

அந்த மாருதி ஆம்னி உள்ளே நுழைந்தது. அதைப் பார்த்ததும் கையில் இருந்த சிகரெட்டை கீழே போட்டு மிதித்து விட்டு காரை ஓட்டி வந்த டிரைவர் கீழே இறங்குவதை ஆர்வத்துடன் பார்த்தான்.

காரில் இருந்து இறங்கியவர் வெள்ளைச் சட்டை, வெள்ளை பேண்ட் போட்டிருந்தார். அவர் சட்டைப் பையின் மேல் பச்சை எழுத்துக்களில் வித்யா டிராவல்ஸ் என்ற எழுத்துகள் எம்பிராய்டரி செய்யப்பட்டிருந்தன.

“வாங்க பாபு. பிரச்சனை எதுவுமில்லையே?”

“இல்ல சார். ஆனா சீட்டுத்தான் கொஞ்சம் கறையா..”

“சரி சரி. சீட் கவரை சீக்கிரமா கழட்டி வாஷிங்குக்குப் போட்டுடுங்க. பணம் சரியாக் குடுத்தாங்கள்ல?”

“குடுத்துட்டாங்க சார். இந்தாங்க” பையில் இருந்து சில ரூபாய் நோட்டுகளை எடுத்து நீட்டினார். கண்கள் விரிய அந்தப் பணத்தைக் கை நீட்டி வாங்கினான். நாக்கை நீட்டி விரலால் தொட்டு எச்சி செய்துகொண்டு அந்தப் பணத்தை எண்ணி சரி பார்த்தான். அதில் இருந்து சில நோட்டுகளை டிரைவரிடம் நீட்டினான்.

“வச்சிக்குங்க. அடுத்த சவாரி வந்தா சொல்றேன்”

“சார். ஒரு ஐநூறு ரூவா கூடக் கிடைக்குமா?”

சுந்தரத்தின் வாயில் ஒட்டியிருந்த சிரிப்பு ஓடிப்போனது. “எதுக்கு?”

“மூத்த பொண்ணு உக்காந்திருச்சி சார். சேலைத் துணி வாங்கணும்”

“ஏன், முரளிகிட்ட கேக்கலாமே?”

“சார் அவர்கிட்ட கேட்டா அட்வான்ஸாத்தான் குடுப்பாரு. அப்புறம் சம்பளத்துல பிடிச்சிக்குவாரு. நீங்கன்னா...”

கண்களை இடுக்கி முகத்தில் கடுமையைக் கூட்டி, “அப்ப நான் மட்டும் இளிச்சவாயனா? நீ ஓட்டுற வேலை மட்டுந்தான்யா செய்யிற. கஸ்டமர் பிடிக்க கஷ்டப்படுறது நான். சும்மா ஓசியில தூக்கிக் குடுக்க நான் என்ன தர்ம சத்திரமா நடத்துறேன். போய்யா. வேணும்னா அடுத்த ரெண்டு மூணு சவாரி உனக்கே குடுக்குறேன். அதைத் தவிர வேற ஒண்ணும் என்னால குடுக்க முடியாது”

“சார்..”

“அவ்வளவுதான்யா என்னால செய்ய முடியும். போ போ” என்றவாறு திரும்பி கண்ணாடிக் கதவை நோக்கி நடந்தான்.

வேனுக்குப் பின்னால் நின்று நடந்த அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த அந்த உருவம் டிரைவர் பாபுவை நோக்கி நகர்ந்தது.

**************************************

“உங்க பேரென்ன சொன்னீங்க?” அருண் எதிரில் உட்கார்ந்திருந்த அந்த டிரைவரைப் பார்த்து கேட்டான்.

“இன்னும் சொல்லல்லீங்க அய்யா. என் பேரு ராமராஜ்”

“சொல்லுங்க ராமராஜ். உங்களுக்கு என்ன தெரியும்?”

“சார் நேத்து காலைல ஆஃபீஸ்ல முரளி சாருக்கும் சுந்தரம் சாருக்கும் நடுவுல கொஞ்சம் பிரச்சனைங்க அய்யா. அதுல நானும் சம்மந்தப்பட்டதால நான் கொஞ்சம் ஆர்வக்கோளாறுல என்ன நடந்ததுன்னு ஒட்டுக்கேட்டேன் சார்”

“என்ன பிரச்சனை?”

“சுந்தரம் சார் டிராவல்ஸ் காரை இல்லீகல் விசயத்துக்கு வாடகைக்கு விடுவாருங்கய்யா”

“இல்லீகல் விசயம்னா?”

ஒரு நொடி தயங்கினார். “விபச்சாரத்துக்கு...”

“ஹ்ம்ம். உங்களுக்கு இந்த விசயம் எப்பிடித் தெரியும்?”

“நானே சில நேரம் கார் ஓட்டிட்டுப் போயிருக்கேன் சார். எங்கயாவது ஊருக்கு ஒதுக்குப்புறமாப் போயிட்டு நான் காரை விட்டு எறங்கிப் போயிருவேன்யா. காருக்குள்ளயே எல்லாத்தையும் முடிச்சிட்டு செல்ஃபோன்ல கூப்புடுவாங்க. நான் திரும்ப சிட்டிக்குள்ள ட்ராப் பண்ணிட்டு வந்துருவேன். சாதாரணமா கார் வாடகைய விட இந்த டிரிப்புக்கு மூணு மடங்கு சார்ஜ் பண்ணுவம் சார். ஒரு பங்கு மட்டும் கணக்கு காட்டிட்டு மீதிய சுந்தரம் சார் எடுத்துக்குவார். எனக்கு டபுள் பேட்டா குடுத்துருவாரு”

“நீங்க ஒருத்தரு தான் இப்பிடி ஓட்டுவீங்களா? இல்லை வேற டிரைவர்களும் ஓட்டுவாங்களா?”

“நானும் இன்னொருத்தரும் தாங்கய்யா. எங்களுக்குக் கொஞ்சம் பெரிய குடும்பம். பணக்கஷ்டம். இதைக் காரணமா வச்சே எங்களை இந்தத் தப்பு செய்ய வச்சிட்டாரு சுந்தரம் சார். இந்த விசயம் எப்பிடியோ முரளி சாருக்குத் தெரிஞ்சிருச்சி போல. அவரு சுந்தரம் சாரைத்திட்டிப் பேசிட்டு இருந்தாருங்கய்யா. சுந்தரம் சார் கொஞ்ச நேரத்துல ஆஃபீஸ்ல இருந்து வெளிய போயிட்டாரு. நான் முரளி சார்கிட்ட எல்லாத்தையும் சொல்லி கால்ல விழுந்து கெஞ்சினேன். அவரும் என்னை மன்னிச்சிட்டாரு. அவரை சுந்தரம் சார் எதாவது செஞ்சிருக்கலாம்னு நான் சந்தேகப் படுறேனுங்க அய்யா”

“ராமராஜ். இதை கோர்ட்ல வந்து சொல்லுவீங்களா?”

“சொல்றேனுங்கய்யா”

முன்னால் இருந்த நோட்டை மூடிவைத்து விட்டு மூக்குப்பொடியை உறிஞ்சிக் கொண்டிருந்த ரைட்டரை அழைத்து ராமராஜிடம் ஸ்டேட்மெண்ட் வாங்கிக்கொள்ளச் சொன்னார் நாராயணன்.

“நாராயணன். கொலை நடந்த நேரம் சுந்தரம் எங்கெருந்தான்னு சொன்னானா?”

“ஹோட்டல் சரவணபவன்ல சாப்புட்டுட்டு இருந்ததா சொன்னான் சார்”

“சுந்தரம் ஃபோட்டோவைக் காட்டி ஹோட்டல்ல விசாரிக்கச் சொல்லுங்க. சர்வர் யாராவது பாத்தாங்களான்னு. நாம கிரைம் சீன் பாத்துட்டு வந்துரலாம்”

“சரி சார்” நாராயணன் சப் இன்ஸ்பெக்டரை அழைத்து உத்தரவுகளைப் பிறப்பித்து விட்டு ஜீப்பைக் கிளப்பினார்.(மர்மம் தொடரும்)

பலா பட்டறை ஷங்கர் - யாரு நல்லா எழுதறாங்கன்னு சொல்றவங்களுக்கு பாரிஸ்/பர்மா பஜார் இன்பச்சுற்றுலா பரிசாத் தர்றேன்னு சொல்லியிருக்கார். நான் என் பங்குக்கு இந்தக் கதைக்கு நல்ல தலைப்பு வைக்கிறவங்களுக்கு என் செலவுல தாஜ்மகால் பாக்க ஏற்பாடு பண்றேன்.

(டி.வி.டியா, சி.டி.யாங்கிறது ஜெயிக்கிறவங்க சாய்ஸ்)

33 comments:

Anonymous said...

நட்சத்திரமாகபோறீங்களா. வாழ்த்துக்கள்.
என்னோட ஈமெயில் அட்ரஸ் தமிழ்மணத்துகிட்ட இல்லை. அதனால நானெல்லாம் நட்சத்திரமாக முடியாது. :)

Paleo God said...

செய்யறத செஞ்சிட்டுப் போங்க.. வேற என்னத்த சொல்றது??

நானும் விடறதா இல்ல. :)

நாடோடி said...

ம‌ர்ம‌ம் தொட‌ர‌ட்டும் .... ந‌ல்லா இருக்கு..த‌மிழ்ம‌ண‌ ந‌ட்ச‌த்திர‌த்திற்கு வாழ்த்துக்க‌ள்.

Chitra said...

இன்னைக்குக் காலையில தான் தமிழ் மணம் அட்மின்ஸ் கிட்ட இருந்து நட்சத்திர அழைப்பு வந்தது. கலக்கமா இருக்கு.


..... Congratulations! Super!

Unknown said...

வாழ்த்துக்கள்...

அப்புறம் நான் தாஜ்மஹால பார்த்து விட்டதால், மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்கிறேன் ..

ஜெய்லானி said...

கலக்குங்க ..வாழ்த்துக்கள்

எல் கே said...

வாழ்த்துக்கள். உங்கள் பரிசை உங்களுக்கே அளிக்கிறேன்

vasu balaji said...

வாழ்த்துகள் தினேஷ். அருண் வழக்கம் போல் சூப்பர்ப்.:)

ஈரோடு கதிர் said...

நட்சத்திர வாய்ப்பிற்கு வாழ்த்துகள்

Raghu said...

வாழ்த்துக‌ள் :)

சுசி said...

நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள் முகிலன்.

// உங்க தலையெழுத்து இப்பிடியிருந்தா நான் என்ன செய்ய முடியும்?//

ஹிஹிஹி..

பனித்துளி சங்கர் said...

கதை நல்லா இருக்குங்க . ஆனால் நீங்க தொடரும் என்று முடித்து இருப்பதால் இதற்கு தகுந்த தலைப்பை சொல்லயிலாதவனாய் . பகிர்வுக்கு நன்றி !

நசரேயன் said...

//சின்ன அம்மிணி said...
நட்சத்திரமாகபோறீங்களா. வாழ்த்துக்கள்.
என்னோட ஈமெயில் அட்ரஸ் தமிழ்மணத்துகிட்ட இல்லை. அதனால நானெல்லாம் நட்சத்திரமாக முடியாது. :)
//

அம்மணி நீங்க என்னைக்குமே நட்சத்திரம் தான்

அன்புடன் அருணா said...

த‌மிழ்ம‌ண‌ ந‌ட்ச‌த்திர‌த்திற்கு வாழ்த்துக்க‌ளும் பூங்கொத்தும்!

Unknown said...

@சின்ன அம்மிணி

தமிழ்மணம் கூப்புடலைன்னாலும் நீங்க ஸ்டார்தாங்க..

Unknown said...

@ஷங்கர் - பாக்கலாம்.. :)

Unknown said...

//நாடோடி said...
ம‌ர்ம‌ம் தொட‌ர‌ட்டும் .... ந‌ல்லா இருக்கு..த‌மிழ்ம‌ண‌ ந‌ட்ச‌த்திர‌த்திற்கு வாழ்த்துக்க‌ள்//

நன்றி நாடோடி

Unknown said...

//Chitra said...
இன்னைக்குக் காலையில தான் தமிழ் மணம் அட்மின்ஸ் கிட்ட இருந்து நட்சத்திர அழைப்பு வந்தது. கலக்கமா இருக்கு.


..... Congratulations! Super!//


அதெல்லாம் இருக்கட்டும். வெட்டிப்பேச்சு பேசி ரொம்ப நாளாச்சே..

Unknown said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
வாழ்த்துக்கள்...

அப்புறம் நான் தாஜ்மஹால பார்த்து விட்டதால், மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்கிறேன் ..//

நன்றி கே.ஆர்.பி.எஸ்.

Unknown said...

//ஜெய்லானி said...
கலக்குங்க ..வாழ்த்துக்கள்//

நன்றி ஜெய்லானி

Unknown said...

//LK said...
வாழ்த்துக்கள். உங்கள் பரிசை உங்களுக்கே அளிக்கிறேன்//

அந்தப் படத்தை நான் ஏற்கனவே பாத்துத் தொலைச்சிட்டேனே???

Unknown said...

நன்றி சார். அடுத்த வாரம் உங்களுக்குக் கூப்புடுறேன்.

Unknown said...

//ஈரோடு கதிர் said...
நட்சத்திர வாய்ப்பிற்கு வாழ்த்துகள்//

நன்றி கதிர்.

Unknown said...

//ர‌கு said...
வாழ்த்துக‌ள் :)//

நன்றி ரகு.

Unknown said...

//சுசி said...
நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள் முகிலன்.

// உங்க தலையெழுத்து இப்பிடியிருந்தா நான் என்ன செய்ய முடியும்?//

ஹிஹிஹி.//

நன்றி சுசி. :)

Unknown said...

//♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
கதை நல்லா இருக்குங்க . ஆனால் நீங்க தொடரும் என்று முடித்து இருப்பதால் இதற்கு தகுந்த தலைப்பை சொல்லயிலாதவனாய் . பகிர்வுக்கு நன்றி !//

கண்டிப்பா அடுத்த பாகத்துல முடிச்சிருவேன்.

Unknown said...

//நசரேயன் said...
//சின்ன அம்மிணி said...
நட்சத்திரமாகபோறீங்களா. வாழ்த்துக்கள்.
என்னோட ஈமெயில் அட்ரஸ் தமிழ்மணத்துகிட்ட இல்லை. அதனால நானெல்லாம் நட்சத்திரமாக முடியாது. :)
//

அம்மணி நீங்க என்னைக்குமே நட்சத்திரம் தான்//

கரெக்டா சொன்னீங்க தளபதி

Unknown said...

//அன்புடன் அருணா said...
த‌மிழ்ம‌ண‌ ந‌ட்ச‌த்திர‌த்திற்கு வாழ்த்துக்க‌ளும் பூங்கொத்தும்!//

நன்றி அருணா..

ராஜ நடராஜன் said...

கதை விடுவீங்கன்னு கதை படிக்கமாட்டோமில்லோ:)

rajasundararajan said...

அதுக்குள்ளார இத்தனை பின்னூட்டங்களான்னு வந்து பார்த்தா, பாதிக்கு மேல ஆசிரியரே போட்டிருக்காரு!!!!!!!!!!!!!!!

//அவன் நெற்றியில் பூத்திருந்த வேர்வைத்துளிகளில் வித்யா ட்ராவல்ஸ் எழுத்துக்களின் பொன் நிறம் பிரதிபலித்து அவன் நெற்றி ஜொலித்தது// நல்லா இருக்கு. இது வெறும் வர்ணனைதானா? அல்லது உள்ளுறை வைத்து எழுதி இருக்கிறீர்களா?

நீங்கள் வடித்திருக்கிற story structure நல்லா இருக்கு.

பலா பட்டறை ஷங்கர் தொடுத்திருக்கிற தொடுப்பும் பாராட்டலாம். ஆனா இப்படியே தொடுத்துத் தொடுத்து வாசிக்க நேரம் கிடைக்குமான்னுதான் தெரியலை.

கலகலப்ரியா said...

ஆகா.. நட்சத்திரப் பதிவருக்கு வாழ்த்துகள்...

Thamira said...

ஹெஹே.. நா அமிச்ச மெயில உண்மைனு நம்பிட்டிங்களா? ஸ்டாருக்கெல்லாம் இந்த ஸ்பீடுல எழுதக்கூடாது.. அதெல்ல்லாம் நெம்ப கஸ்டம்.. ஆவாது ஆவாது.!!

(ஹிஹி.. குழப்பிங்காதீங்க. சும்மா லுலுலாயிக்கு. ஸ்டார் வாழ்த்துகள் உங்களுக்கு)

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் :)) வாழ்த்துக்கள்ங்க..

அவரோட கதையப் படிச்சதும் தான் மண்டைக் குடைச்சல் நின்னுது :)) சண்டை போட்டதுக்கு நல்ல காரணந்தான் :)

சொல்ல மறந்துட்டேன்.. படிச்சதுமே எனக்கு சென்னை செண்ட்ரல் சரவணபவன் ஞாபகம் வந்தது.. கதையில் சொன்னது அப்படியே உண்மைங்க.. சீட்டுக்காக சாப்பிடறவங்க பின்னாடியே நின்னுட்டு இருக்கனும்.. நம்ம பின்னாடியும் இருப்பாங்க :((