Sunday, May 30, 2010

தமிழ்ப் பதிவுலகம் உங்களை வரவேற்கிறது

இந்தியா வந்திறங்கியாகிவிட்டது. என் வாழ்க்கையின் மிக அழுத்தம் தரக்கூடிய 13 மணி நேரப் பயணமாக ஜே.எஃப்.கே முதல் அபுதாபி வரையிலான விமானப் பயணம் அமைந்து விட்டிருந்தது.

நான் அமெரிக்காவிலிருந்து கிளம்பும் நாள் இந்தியாவில் ஜூனியர் முகிலனை கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதித்திருந்தார்கள். தொலைபேசியில் அழுத என் மனைவியின் குரலில் மகனின் நிலையை எண்ணிய வருத்தத்தை விட சாய்ந்து அழ என் தோள் அணுகும் தூரத்தில் இல்லையே என்ற ஆதங்கமே ஓங்கி ஒலித்தது.

நான் ஜே.எஃப்.கேவில் விமானம் ஏறும்போது நான் பஸ்ஸில் இட்ட கமெண்ட் இந்தியாவுக்குப் போய் என் மகனைப் பார்க்கவேண்டும் என்ற என் அவசரத்துக்கு இடிஹாத் ஏர்வேய்ஸ் தடை போடுகிறார்களே என்ற ஆதங்கத்தில்.

அந்த 13மணி நேரம், இந்தியாவில் பகல் நேரம். என்னவெல்லாமோ நேர்ந்து கொண்டிருக்கும். ஆனால் என்ன நிகழ்கிறது என்று தெரியாமல் இருப்பது, வெளி உலகத்தோடு தொடர்பு கொள்ள முடியாமல் இருப்பது கொடுமை. அந்தக் கொடுமையை அனுபவித்தேன். (இந்த விமானங்களில் இருக்கும் சாட்டிலைட் ஃபோன் எப்படி வேலை செய்கிறது என்று யாராவது இடிஹாத் விமானப் பணியாளர்களுக்குச் சொல்லிக் கொடுங்களேன்? உபயோகப்படுத்த முயன்று தோல்வியே).

அபுதாபியில் இறங்கி மனைவியுடன் பேசி மகன் ஆரோக்கியமாக இருக்கிறான், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகப்போகிறோம் என்ற செய்தியைக் கேட்டதும்தான் நிம்மதி. அபுதாபி விமானநிலையத்தில் பஸ்ஸில் ஏறினால் 100+ பின்னூட்டக் கும்மி. என் மகனின் நிலை பற்றிய செய்தி ஏற்கனவே என்னை ஆசுவாசப்படுத்தி இருந்தமையால் அந்தக் கும்மி என்னைக் காயப்படுத்தவில்லை. மாறாக என் பதிமூன்று மணி நேர அழுத்தத்தை பஞ்சாய்ப் பறக்க வைத்து குஷிப்படுத்தியது. இதற்குத்தான் இருக்கிறார்கள் நண்பர்கள். (சத்தியமாக என் அப்போதைய மனநிலையை அறிந்திருந்தால் அப்படிக் கும்மியிருக்க மாட்டார்கள். மாறாக ஆறுதல் வார்த்தைகள் வெள்ளமாக வந்திருக்கும். ஆனால் அவ்வார்த்தைகளை விட இந்தக்கும்மி என்னை மிகவும் ஆசுவாசப்படுத்தியது என்பது மறுக்க முடியாத உண்மை).

இப்போது கூகிளாண்டவர் என்னைப் பார்த்து இந்த இடுகையின் தலைப்பைப் பெருமிதத்துடன் சொல்வதாக எண்ணுகிறேன்.

இந்தக் கும்மியில் நர்சிம் பற்றி அது சரி எழுதிய கமெண்ட்டைப் படித்தேன். அது என்ன என்று கேட்டுத் தெரிந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நேரம் இல்லை.

இந்தியாவில் வந்திறங்கியதும் வலையில் மேய அதிக நேரம் இருக்கவில்லை. சென்னையில் ஐந்து மணி நேரத்தைக் கழித்து விட்டு, மதியம் 11:55 மணி பாரமவுண்டில் மதுரையை நோக்கிப் பயணித்தேன். (அருமையான சேவை. வெறும் ஐம்பது நிமிடப் பயணத்திற்குள் அந்த விமானப் பணியாளர்கள் வழங்கிய உணவும் பானங்களும் அருமை. பாரமவுண்ட் மூடப்படலாம் என்று அரசல் புரசலாகச் செய்தி வழிகிறது. தமிழன் ஒருவன் துவக்கிய விமான சேவை. நம்மால் முடிந்த அளவுக்கு - விமானப் பயணம் செய்யும், செய்கின்ற, செய்யப்போகும் அனைவரும் பாரமவுண்ட் விமானம் உங்கள் சேருமிடத்திற்கு சேவை புரியுமானால் அதை உபயோகப் படுத்துங்கள் என்று வேண்டுகிறேன்)

மகனைப் பார்த்து அவனைச் சமாதானப் படுத்தி என்னுடன் விளையாட விட்டு இதிலேயே என் நேற்றைய பொழுது போய்விட்டது. ஜெட் லாகினால் அதி காலையிலேயே விழிப்பு வந்ததும் விட்டுப்போன பதிவுகளைப் படிக்கத் துவங்கினேன்.

நான் வலையுலகிற்கு அறிமுகமாகி வெறும் ஒன்பது மாதங்களேயாகியிருக்கின்றன. அதனால் இந்த வலையுலகப் பஞ்சாயத்துகள் எனக்கு அவ்வளவாகப் பரிச்சயமாகவில்லை.

ஆதிமூலக்கிருஷ்ணன் நர்சிம்மின் பேட்டி ஒன்றை வெளியிட்டார். நான் நட்சத்திர வாரத்தில் எழுத வேண்டிய பதிவுகளில் ஒன்றாய் நான் நினைத்திருந்தது நான் பிரபலம் என்று எண்ணும் பதிவர்கள் சிலரிடம் சில கேள்விகளை வைத்து அவர்களின் பதிலைப் பெற்றுப் போடலாம் என்று (இப்பப் போய் யாருகிட்டயாவது பேட்டினு கேட்டா என் போட்டிய எடுத்துர மாட்டாங்க?). இதை நான் அந்தப் பதிவின் இரண்டாவது பின்னூட்டமாய் சொல்லியிருந்தேன். (ஆதியும் நல்லா வேணும் என்று சொல்லியிருந்தார்).

அதன் பிறகு மயில் எழுதிய ஹி ஹி நாங்களும் பேட்டி குடுப்போமில்ல என்ற பதிவையும் படித்தேன். மேலோட்டமாகப் படிக்கும் போது அது வழக்கமான பதிவுலகக் குசும்பு என்றுதான் நினைத்தேன். பின்னூட்டமும் இட்டுவிட்டு வந்தேன்.

இன்று காலை அண்ணன் மாதவராஜின் பதிவைப் படிக்கும்போது இந்தப் பதிவிற்கு நர்சிம் எதிர்வினை எழுதியிருப்பதும் கார்க்கி அங்கே ஏதோ சர்ச்சைக்குரிய பின்னூட்டமிட்டதாகவும் அறிய வந்தது. நர்சிம்மின் ப்ளாகில் அந்தப் பதிவைக் காணக்கிடைக்கவில்லை. ஆனால் என் ரீடரில் இருந்தது. (ரீடரில் பின்னூட்டங்களை நான் சப்ஸ்க்ரைப் செய்யாததால் அவற்றைப் படிக்க முடியவில்லை). படித்தேன். மீண்டும் மயிலின் பதிவைப் படித்தேன். மீண்டும் நர்சிம். அதிர்ந்தேன்.

இருவரும் இரண்டு பதிவுகளிலும் வைத்திருக்கும் உள்குத்துகள் ஒன்றல்ல இரண்டல்ல. வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை. அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் திட்டி அல்லது கேலி செய்துகொள்வதோடு அவர்களின் ரசிகர்களாய், பின்னுட்டமிடுபவர்களாய் இருக்கும் சில பல வாசகர்களையும் இதில் இழுத்து விட்டது அநாகரீகத்தின் உச்சக்கட்டம். இதில் என்னை அதிகம் பாதித்தது நர்சிம்மின் பதிவே.

முதல் பதிவை எழுதியது மயிலாக இருந்தாலும் பின்னூட்டம் இட்டக் காரணத்திற்காக மட்டும் சந்தனமுல்லையைத் தாக்கியிருக்க மாட்டார் நர்சிம் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அந்தப் பதிவின் பின்னணியிலும் முல்லை இருந்திருப்பார் என்று நினைக்கிறேன். ஆனாலும் முல்லை உங்களின் இந்தக் கேலி உள் மனதில் இருக்கும் ஒரு அசிங்கமானப் பேயை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. உங்களுக்கும் நர்சிமுக்கும் என்ன பிரச்சனை வேண்டுமானாலும் இருக்கட்டும். அதை நீங்கள் இப்படி பொது இடத்தில் வைத்து, வாய்ப்புக் கிடைத்ததும் எள்ளி நகையாடியதை என்னக் காரணம் சொல்லப்பட்டாலும் என்னால் நாகரீகமானதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நர்சிம், உங்களுக்கு 500க்கும் மேற்பட்ட வாசகர்கள் இருக்கிறார்கள். உங்களின் இலக்கியம் தோய்ந்த எழுத்துகளையும், மெல்லிய நகைச்சுவை இழையோடும் எழுத்துக்கும் வாசகர்களானவர்கள் இவர்கள். நீங்கள் சந்தனமுல்லையால் எவ்வளவுதான் காயப்பட்டிருக்கட்டும். நீங்கள் அந்தக் காயத்துக்கு மருந்து போட்டுக்கொள்வதாக உங்கள் மீதே சாக்கடையை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கிறீர்கள். எத்தனையோ குறள்களுக்கும், சங்கப்பாடலுக்கும் எளிமையாக விளக்கம் எழுதும் நீங்கள் இன்னா செய்தாரை ஒறுத்தல் என்ற அந்தத் தங்கக் குறளுக்கு விளக்கம் தெரியாதவரா என்ன? அல்லது இதுவும் என் ஸ்டைலே என்று எங்களிடம் சொல்ல விரும்புகிறீர்களா? சத்தியமாக நீங்கள் பேட்டியில் சொன்ன “புதிதாய் எழுத வருபவர்கள் எவரும் ஒரு வருடத்திற்கு முன்னர் எழுதிக் கொண்டிருப்பவர்களின் பார்வை, கருத்து, அரசியல் நிலைப்பாடு என எது குறித்தும் தெரிந்துகொள்ள விருப்பமோ, முயற்சியோ எதுவும் எடுப்பதில்லை என்பது என் தாழ்மையான கருத்து.” நினைவுக்கு வந்து தொலைக்கிறது. உங்கள் பார்வை கருத்து நிலைப்பாடு ஆகியவற்றைத் தெரிந்து கொண்டிருப்பேனோ என்று எண்ணுகிறேன்.


நான் மூன்றாமாண்டு படித்துக்கொண்டிருக்கும் போது நிகழ்ந்த சம்பவம் இது. எங்கள் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு வைத்து அவர்களை அறிமுகப் படுத்துவது என்ற பெயரில் மாஸ் ராக்கிங் செய்வது என்பது மரபாக இருந்து வந்தது. நாங்கள் சீனியர்களாக மாறிய அந்த ஆண்டிலிருந்து இந்த அறிமுகப்படலத்திற்கு தடா விழுந்தது. ஆத்திரம் வந்த நானும் என் நண்பனும் ஆசிரியர்களிடம் பெரும் விவாதம் செய்தோம். ஆனால் எங்கள் வாதங்கள் எடுபடவில்லை. ஆசிரியர்கள் நினைத்ததே நடந்தது. பின்னாளில் நான் என் பேராசிரியர் ஒருவரிடம் இதைப் பற்றி பேசியபோது அவர் என்னிடம் சொன்னது - “நீ அன்னிக்குப் பேசினதெல்லாம் நியாயமாத்தான் இருந்திச்சி. ஆனா நீ அதையெல்லாம் தண்ணியடிச்சிட்டுப் பேசின பாரு. அதுனால தான் அதை ஏத்துக்க எங்களால முடியலை. நீ என்ன நல்ல விசயம் பேசினாலும் சரி, அதுக்கு நடுவுல ஒரு சின்ன அநாகரீகமான வார்த்தையோ இல்லை யாரையும் புண்படுத்துற மாதிரி விசயமோ சொல்லிட்டினா, நீ சொன்ன அத்தனை நல்ல விசயங்களும் அடிபட்டுப் போயிடும்” பொட்டில் அறைந்தாற்போல் உறைத்தது.


அண்ணன் மாதவராஜின் பதிவைப் படித்த போது எனக்கு என் பேராசிரியரின் அறிவுரையை அவரிடம் சொல்ல வேண்டுமென்று ஆசைப்பட்டேன். நீங்கள் உங்கள் பதிவில் சொல்லியிருந்தது அத்தனையும் நியாயம். ஆனால் உங்கள் தலைப்பும் நர்சிம்மையும் கார்க்கியையும் அவன் இவன் என்று விளித்ததும் கண்டிப்பாக அந்தத் தரப்பை உங்கள் வார்த்தைகளில் இருந்த நியாயத்தைப் பின்னுக்குத் தள்ளக்கூடிய, தள்ள வேண்டிய நிலைக்குக் கொண்டு செல்லும்.

என்னவோ.. இந்தப் பதிவுகளும் நிகழ்வுகளும் என்னை பரிகாசத்துடன் பார்த்து இந்த இடுகையின் தலைப்பைச் சொல்வது போல எண்ணுகிறேன்.

21 comments:

ஜெய்லானி said...

வெல்கம் பேக் டு இந்தியா.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

How is your kid...?

vasu balaji said...

omg.சாரி தினேஷ். பென்குவின் எப்படி இருக்கார். நிஜம்மாவே கும்மி ரிலாக்ஸ் பண்ணியிருந்திச்சின்னா சந்தோஷம். சின்ன ஏமாற்றம் இருந்தாலும் சாரி:). மத்த விஷயங்கள்..இதுவும் கடந்து போகும்.

எல் கே said...

hows ur junior. as u said all those posts just inflames the fire

VISA said...

:)

சுசி said...

//தொலைபேசியில் அழுத என் மனைவியின் குரலில் மகனின் நிலையை எண்ணிய வருத்தத்தை விட சாய்ந்து அழ என் தோள் அணுகும் தூரத்தில் இல்லையே என்ற ஆதங்கமே ஓங்கி ஒலித்தது//

//நீ என்ன நல்ல விசயம் பேசினாலும் சரி, அதுக்கு நடுவுல ஒரு சின்ன அநாகரீகமான வார்த்தையோ இல்லை யாரையும் புண்படுத்துற மாதிரி விசயமோ சொல்லிட்டினா, நீ சொன்ன அத்தனை நல்ல விசயங்களும் அடிபட்டுப் போயிடும்” பொட்டில் அறைந்தாற்போல் உறைத்தது.//

ஜூனியர் இப்போ குஷியா இருப்பார். உடம்பும் சரி ஆயிருக்கும்னு நம்பறேன்.

ராஜ நடராஜன் said...

அதிர்ந்தேன்:(

க.பாலாசி said...

சின்ன முகிலன் நலமாக இருப்பதில் மிக்க மகிழ்ச்சி... தொடர்ந்து அவர் நலனையும் கவனியுங்கள்....

செ.சரவணக்குமார் said...

குழந்தை எப்படி இருக்கிறது, நலம் தானே?

விடுமுறை நாட்களுக்கு வாழ்த்துகள் முகிலன் சார்.

அது சரி(18185106603874041862) said...

//
நான் ஜே.எஃப்.கேவில் விமானம் ஏறும்போது நான் பஸ்ஸில் இட்ட கமெண்ட் இந்தியாவுக்குப் போய் என் மகனைப் பார்க்கவேண்டும் என்ற என் அவசரத்துக்கு இடிஹாத் ஏர்வேய்ஸ் தடை போடுகிறார்களே என்ற ஆதங்கத்தில்.
//

அடப்பாவி...

பஸ்ல நீங்க போட்ட கமெண்ட் இது தான்.

//
ஜான். எஃப். கென்னடி விமான நிலையத்தில் புறப்பாடுப் பிரிவில் காத்திருக்கிறேன். இன்னும் விமானத்தில் போர்டிங்க்குக்கு அழைக்கவில்லை.
//

இதைப் படிச்சா "தம்பி, இன்னும் டீ வரலை"ங்கிற மாதிரி இருந்துச்சி...அதான் கும்மிய ஸ்டார்ட் பண்ணி விட்டேன்... நீங்க டென்ஷன்ல இருக்கறது தெரிலப்பா...

சரி விடுங்க...குட்டிப் பையன் இப்போ நல்லாருக்கானா??

அது சரி(18185106603874041862) said...

//
அபுதாபி விமானநிலையத்தில் பஸ்ஸில் ஏறினால் 100+ பின்னூட்டக் கும்மி. என் மகனின் நிலை பற்றிய செய்தி ஏற்கனவே என்னை ஆசுவாசப்படுத்தி இருந்தமையால் அந்தக் கும்மி என்னைக் காயப்படுத்தவில்லை.
//

நாங்கெல்லாம் நாரதர் மாதிரியாக்கும்...என்னா கலகம் பண்ணாலும் நன்மையில தான் முடியும் :)))

அது சரி(18185106603874041862) said...

//
இந்தக் கும்மியில் நர்சிம் பற்றி அது சரி எழுதிய கமெண்ட்டைப் படித்தேன். அது என்ன என்று கேட்டுத் தெரிந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நேரம் இல்லை.
//

இதை நர்சிம்மை பற்றி நான் கூகுள் பஸ்ஸில் தவறாக பேசிக் கொண்டு திரிகிறேன் என்று பலரும் நினைத்து விட வாய்ப்பிருப்பதால், பஸ்ஸில் நான் எழுதிய கமெண்ட்..

டெல்டா நேதன் என்று வருவது என் பெயர்.

//
Delta Nathan - அதெல்லாம் இருக்கட்டும், நர்சிம் என்ன இப்படி நாரசமா ஆயிட்டாரு?

Delta Nathan - நாங்கெல்லாம் ரொம்ப டீஜண்ட்டானவய்ங்கன்னு போஸ் குடுத்துட்டு எப்பிடில்லாம் கேவலமா எழுதறாங்க?

Delta Nathan - enakku oru elavum puriyalai...but avaroda post romba kevalama irukku.

Delta Nathan - Sa.Ni koooda ippadi kevalama elutha mattaar.

Delta Nathan - Read this, and tell me what you feel. http://www.narsim.in/2010/05/blog-post_29.html

Delta Nathan - It was posted by Narsim, and i feel its full of shit.

//

அவ்ளோ தான் நான் எழுதிய கமெண்ட். இதில் கவனிக்க வேண்டியது, நர்சிம் என்ற தனிமனிதரை பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. நான் சொல்லியிருப்பது எல்லாமே அவரது அந்த குறிப்பிட்ட இடுகை குறித்தே.

இப்பொழுது கேட்டாலும் இதையே மீண்டும் சொல்வேன்.

பழமைபேசி said...

முகிலன்...மன்னிக்கணும்.... உரிமையில் சொல்கிறேன்....


சென்றதோ மிகக் குறுகிய கால விடுமுறையில்.... அதிலும் இளவலை நன்றாக உடனிருந்து கவனிக்க வேண்டிய தருணம்.....

இச்சூழலில், போய்ச் சேர்ந்தும் சேராததுமாக??

விடுப்பை நன்றாக அனுபவியுங்கள்... உற்றார் உறவினர், தாயகத்தைக் கண்டு களியுங்கள்... நண்பர்களுடன் உரையாடுங்கள்... கணினிக்கு பெரிய பூட்டாக ஒன்றை மாட்டவும்!!

rajasundararajan said...

பிள்ளை நல்லா இருக்கில்ல. இருக்கணும். ஆண்டவருக்கு நன்றி.

நாமெல்லாரும் மனிதர்கள்தாம். தவறுவது இயல்பு. நரசிம்மும் மன்னிப்புக் கேட்டுவிட்டார். ஆனால் தோழர்கள் ஓய்ந்தபாடில்லை. நானும் ஒரு தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்து கம்யூனிஸ்ட்டாகவும் இருந்தேன் என்று பின்னோக்க வெட்கமாக இருக்கிறது. வழக்கம்போல ஜாதியை ஒரு கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் தோழர்கள்.

நானும் நர்சிம்மை உற்சாகப் படுத்துபவர்களில் ஒருவன். அவர் இன்ன ஜாதி என்று கூட இதுநாள்வரை எனக்குத் தெரியாது. அவருடைய 'புளிக்காரக்கா' கதைதான், சரக்குள்ள ஆளாய் இருப்பார்போல் இருக்கிறதே என்கிற எண்ணத்தை எனக்கு உண்டு பண்ணியது. பிறகு அவர் ரசிகனானேன். பழைய பதிவுகளியும் வாசித்தேன். 'பூக்காரி' பதிவுக்கு நானும் கண்டணம் எழுப்பி இருக்கிறேன். சொல்லப் போனால், இன்றைய அத்தனை எதிர்வினைகளும் என் பின்னூடம் கொடுத்த புள்ளியில் இருந்தே தாவுகின்றன. இந்த ஆட்டு மந்தைகளுக்காக நான் வெட்கப் படுகிறேன். நான் யார் என்பதை மனுஷ்யபுத்ரனின் 'நீராலானது' தொகுப்புக்கு சுஜாதா எழுதிய முன்னுரையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். வாய்ப்பில்லை என்றால் நேசமித்ரன் கவிதைகளுக்கு நான் தரும் புரிதல்களையாவது கவனியுங்கள்.

கழுதைக்குப் பிறந்தவர் கூட blog writer ஆகலாம், ஆனால் சுமை தூக்குவதென்பது முற்றிலும் வேறு. Be responsible and remove all the controversial inputs.

ஹேமா said...

முகிலன் மனங்களைக் காற்றாட விடுங்கள்.அதுவே உடல் நலம்.
சந்தோஷம் என்றும் நிலைத்திருக்கும்.
குட்டி முகிலன் சுகமாயிடுவார்.

Unknown said...

Welcum to india..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

இங்கயிருந்துட்டுப் போனா, நிறைய குட்டீஸ்க்கு இப்படித் தான் ஆகும்.. இப்ப சரியாயிட்டான் தானே?

இதத் தாண்டி, சத்தியமா நீங்க எழுதியிருக்கறது ஒன்னும் புரியல. புரிஞ்சுக்கவும் விரும்பல :)) ஆனா, ரொம்ப வெளிப்படையா எல்லாரையும் சுட்டியிருக்கீங்க.. தைரியந்தான்..

நல்ல ரெஸ்ட் எடுங்க.. பொட்டிய மூடுங்க.. ஊரெல்லாம் சுத்துங்க.. நல்லபடியாத் திரும்பி வாங்க...

க ரா said...

குழந்தை நலமா. விடுமுறைய நல்லா என்ஜாய் பன்னுங்க பாஸ். பதிவுலக அரசியல்ல விட்டுத்தள்ளுங்க. அது தானா கானமப்போகும். please let them get cool down. once they got cooled then they will know what mistake they made in their life.

Unknown said...

@ஜெய்லானி - நன்றி ஜெய்லானி

@பட்டாபட்டி - He is good patta.

@வானம்பாடிகள் - ஏமாற்றம் எல்லாம் எதுவும் இல்லை சார். முகிலன் ரொம்ப நல்லா இருக்கான் இப்போ. நான் இன்னைக்கு உங்களுக்கு கூப்புடுறேன்.

@LK - ஜூனியர் நல்லா இருக்கான் கார்த்தி. நீங்கள் சொல்வது சரிதான்.

@விசா - :)

@சுசி - ஆமா சுசி. உடம்பு சரியாயிடுச்சி

@ராஜநடராஜன் - நன்றி

@சி.பாலாசி - கண்டிப்பாக. அதுதானே என் முதல் பணி

@செ.சரவணக்குமார் - நலம் தான். நன்றி சரவணன்.

@அதுசரி - குட்டிப்பையன் நல்லா இருக்கான் அதுசரி. கண்டிப்பாக நீங்கள் போட்ட கும்மி என் மனதை ஆறுதல்படுத்தியதே தவிர புண்ணாக்கவில்லை. எனக்கு என் கஷ்டத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் என்றுமே இருந்ததில்லை. ஆனால் அன்று எதாவது சொல்லவேண்டும் என்று பலமுறை எழுதி எழுதி அடித்து அடித்து கடைசியில் இதை மட்டும் பதிந்து சென்றேன்.
நர்சிம் பற்றி என்று மொட்டையாக எழுதியது தவறான அர்த்தத்தைத் தருவிக்கும் என்று புரிகிறது. இப்போதே மாற்றி விடுகிறேன்.

@பழமைபேசி - சரிதாண்ணே.. நீங்க சொல்றது. அப்படியே செய்யறேன்.

@ராஜசுந்தரராஜன் - வினவு எழுதியதை இன்று தான் படித்தேன். எல்லாவற்றுக்கும் சாதிச்சாயம் பூசுவது என்பது மிகக் கேவலமானது. கண்டிப்பாக காண்ட்ரவர்சியலாக எந்த பின்னூட்டம் வந்தாலும் அதை நீக்குவிடுவேன்.

@ஹேமா - நன்றி ஹேமா.

@பேநா மூடி - நன்றி ஆனந்த்

@எல் போர்ட் - நன்றி எல் போர்ட்

@இராமசாமி கண்ணன் - சரிதான் கண்ணன். ஆனாலும் என் ஆதர்ச ப்ளாகர்களில் ஒருவர் இப்படி எழுதியதும் அவரை இப்படித் தூண்டியதும் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

Anonymous said...

இந்தக்கம்ப்யூட்டரை பொட்டி கட்டி வைச்சுட்டு எஞ்சாய் பண்ணுங்க முகிலன்.

ஜூனியர் நலம் தானே

ராம்ஜி_யாஹூ said...

again this matter from beginning is boring