Sunday, May 16, 2010

பிதற்றல்கள் 5/16/2010

இன்று நடந்த ஐ.சி.சி 20-20 உலகக் கோப்பைப்..

ஹலோ இருங்க இருங்க கல்லெடுக்காதீங்க. நான் சொல்ல வர்றது கிரிக்கெட் மேட்டர் இல்லை. ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்ப்பா..

உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு வெற்றி எஃப்.எம்-இல் தனித் தமிழில் நேரடி வர்ணனை செய்யப்படப் போவதாக அதில் பணி புரியும் அண்ணன் லோஷன் சொல்லியிருந்தார். அவரும் அதில் பங்குபெறப் போவதாகவும் சொன்னார்.

தனித் தமிழ் என்று சொன்னதால் சிறிது பயமாக இருந்தது. “டெயிட் கால் திசையில் எறிந்த ஊஞ்சல் பந்தை குட்டைக்கால் திசையில் அடிக்க முற்பட்ட கெவின் பீட்ட்ர்சனின் துடுப்பின் தலைமை ஓரத்தில் பட்டு பந்து மூன்றாம் மனிதனின் திசையில் பிடிக்குச் செல்வது போல பறந்தது. ஆழப் புள்ளி நிலையில் நின்று கொண்டிருந்த டேவிட் ஹஸ்ஸி ஓடிச் சென்று அந்தப் பந்தை பிடிக்கக் கரணம் அடித்தார் ஆனால் பந்து அவருக்குப் பிடிபடாமல் எல்லைக் கோட்டை எட்டிப் பிடித்தது” - இப்படி வர்ணனை செய்து விடுவார்களோ என்று பயமாக இருந்தது.

இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வெற்றி எஃப்.எம்மின் வலைத் தளத்துக்குச் சென்று கேட்டேன். பரவாயில்லை நான் எதிர்பார்த்தது போல இல்லாமல் கிரிக்கெட் சொல்லாடல்களை ஆங்கிலத்திலேயே சொன்னார்கள்.

முதலில் இப்படி ஒரு முயற்சிக்குப் பிடியுங்கள் பாராட்டுகளை. நான் இந்த வர்ணனையை ரசித்துக் கேட்டேன். என் டிவியின் வால்யூமைக் குறைத்துவிட்டு இவர்கள் அளித்த வர்ணனையையேக் கேட்டேன்.

இடையில் பாட்டுகள், நகைச்சுவைத் துணுக்குகள் போன்றவற்றையும் நேயர்கள் அனுப்பிய குறுஞ்செய்திகளையும் வாசித்தார்கள். ஆஸ்திரேலிய வீரர் வாட்சன் இங்கிலாந்து வீரரை தகாத வார்த்தைகளால் திட்டியதை நடுவர் கண்டும் காணாமல் இருந்ததைப் பற்றி ஒருவர் அடித்த கமெண்ட் - ஐ.சி.சி நடுவர்களுக்கு தமிழ், இந்தி, உருது, சிங்களம் தவிர வேறு பாஷை தெரியாது. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள். ரசித்தேன்.

இன்னொரு கமெண்ட் ஷான் டெயிட் வீசிய பந்து க்யீஸ்வெட்டரின் தலைக்கும் தோளுக்கும் இடையில் பறந்தது. வர்ணனையாளர் ஒருவர் கேட்டர். அந்த பந்து க்யீஸ்வெட்டரின் தலையில் பட்டிருந்தால் என்னவாகியிருக்கும்? அவர் தலை தேர்ட் மேனிடம் போய்ச் சேர்ந்திருக்கும்.

நான் கேட்ட வரை எனக்குப் பட்ட ஒரு சில குறைகள்.

1. வர்ணனை செய்த இரண்டு பேரில் ஒருவர் ஆஸ்திரேலிய ரசிகராகவும்(லோஷன்?), இன்னொருவர் இங்கிலாந்து ரசிகராகவும் இருந்ததாகப் பட்டது. அதானால் கமெண்டரியில் ஒருமுகமாக சில இடங்களில் கமெண்ட் செய்ததாக எனக்குப் (எனக்கு மட்டும் !?) பட்டது.

2. பெரும்பாலான இடங்களில் விகாரமாகத் தமிழ்ப் படுத்தாமல் நல்ல முறையில் தமிழ்ப்படுத்தியும், ஃபீல்டிங் பொசிசன்ஸ் எல்லாம் ஆங்கிலத்திலேயும் சொன்னார்கள். ஆனால் ஒருவர் அடுத்ததாக முகம் கொடுக்க வருவது <பேட்ஸ்மென் பெயர்> என்று அடிக்கடி சொன்னார். அது is going to face the next ball என்பதன் தமிழாக்கம் என்று நினைக்கிறேன். முகம் கொடுக்க என்பதை விட எதிர்கொள்ள என்பது கேட்க நன்றாக இருக்கிறது.

தொடருங்கள் உங்கள் பணியை.

************************

தமிழ்ப் படுத்துகிறேன் என்று படுத்தி எடுக்கிறார்கள் சில நேரங்களில். உதாரணமாக சென்னை விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளருக்கான கழிவறையை - மெய்ப்புல அறைகூவலர் ஒப்பனை அறை என்று போட்டிருப்பார்கள். Physically Challenged ஐத் தமிழ்ப்படுத்தி இருக்கிறார்களாமாம்.

முன்பொருமுறை எதோ ஒரு பதிவில் சைபர் கிரைம் என்பதை சுழிய குற்றம் என்று மக்கள் தொலைக்காட்சியில் சொல்வதாகப் (நான் மக்கள் தொலைக்காட்சி பார்த்ததில்லை) படித்தேன். சுழியம் என்றால் ZERO. சைபர் - என்றால் zeroவா? Cipher - என்றால் zero. Cyber Crime அல்லவா? Cipher Crime இல்லையே?

அதே போல பலர் பரவலாக ஃபேஸ்புக்கை மூஞ்சிப்புத்தகம் என்று அழைப்பதைப் பார்க்கிறேன். ஃபேஸ்புக் என்பது ஒரு பெயர்ச்சொல். அதைத் தமிழ்ப்படுத்துவது சரியா? விண்டோஸ்-7ஐ சன்னல்கள் என்று அழைப்பீர்களா? பில் கேட்ஸை விலைப்பட்டியல் வாசல்கள் என்று அழைப்பீர்களா?

ஃபேஸ்புக் என்பது ஒரு Social Networking கான சாதனம். Social Networkingஐத் தமிழ்ப் படுத்துங்கள். ஃபேஸ்புக்கை இல்லை.

இதையெல்லாம் பார்க்கும் போது முண்டக்கூவி என்று Trunk Call - ஐ யாரோ மொழிபெயர்த்தது நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

******************************

குஷ்பு திமுகவில் சேர்ந்துவிட்டார். குஷ்புவுக்குத் தமிழகத்தில் கோவில் கட்டினார்கள். அதை வைத்துப் பார்க்கும் போது குஷ்பு கடவுளாகிறார். கடவுள் மறுப்பை முதல் கொள்கையாகக் கொண்ட திமுக எப்படி குஷ்புவை ஏற்றுக் கொண்டது?

ஒரு வேளை வல்லமை தாராயோ பட ஒலித்தட்டு வெளியீட்டு விழாவில் செருப்புக் காலை சாமி படங்களின் முன்னால் போட்டிருந்ததால் அவரையும் கடவுள் மறுப்பாளாராகப் பார்க்கின்றார்களோ?

எது எப்படியோ? ஜாக்பாட் நிகழ்ச்சியில் இனி குஷ்புவின் ஜாக்கெட்டைப் பார்க்க முடியாது.

*******************************
அண்ணன் அழகிரி பாராளுமன்றத்துக்குப் போகாமல் நாடு சுற்றிப் பார்ப்பது இப்போது பெரும் பிரச்சனையாகியிருக்கிறது. அழகிரி செய்வது ஒரு புறம் இருக்கட்டும்.

18 மொழிகள் அதிகாரப்பூர்வ மொழிகளாக இருக்கும் ஒரு நாட்டில் அமைச்சர் ஒருவர் தன் தாய்மொழியில் பேச பாராளுமன்ற நடைமுறைகள் அனுமதிப்பதில்லை என்பது எந்த விதத்தில் நியாயம்? அவர் பேசுவதை On-the-Fly  மொழிபெயர்க்க நம்மிடம் தொழில்நுட்பம் இல்லையா என்ன?

கேள்விகளுக்குப் பயந்து ஒரு அமைச்சர் ஓடி ஒளிகிறார் என்றால் அது அமைச்சரின் தவறு. இந்தியிலோ ஆங்கிலத்திலோ பேச முடியாததால் ஓடி ஒளிகிறார் என்றார் அது பாராளுமன்றத்தின் தவறு.

*******************************

1996ம் வருடம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுக்காக பிரச்சாரம் செய்த நடிகை மனோரமா, திமுக-தமாகா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த ரஜினியை பொதுக்கூட்ட மேடைகளில் மெண்டல் என்றும் பைத்தியம் என்றும் (முன்பொரு காலத்தில் பத்திரிக்கைகள் எழுதியதை வைத்து) கேலி செய்து பேசினார். பின்னாளில் அவர் அதற்கு வருத்தம் தெரிவித்ததும் ரஜினி பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டதும் வரலாறு.

ஆனால் இப்போது அதே அம்பு அவருக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது. உலகம் உருண்டைதான்.

ஆனாலும் ஒரு வயது முதிர்ந்த சீனியர் நடிகையைப் பற்றி இப்படி ஆதாரம் இல்லாமல் எழுதும் பத்திரிகைகளின் மீதான் எனது கண்டனத்தை இங்கே பதிவு செய்கிறேன்.

19 comments:

settaikkaran said...

தனித்தமிழ் கொஞ்சம் பயமாகத்தானிருக்கு! இவ்வளவு சிரமப்பட்டு, எல்லாரையும் சிரமப்படுத்துவாங்களா? அவ்வ்வ்வ்வ்!

க‌ரிச‌ல்கார‌ன் said...

த‌னித்த‌மிழ்

ஐஸ்கீரிம் ‍ ப‌னிக்குழைவு
காஃபி குழ‌ம்பி

இவ‌னுக‌ அல‌ப்ப‌றை தாங்க‌ முடிய‌ல‌

Paleo God said...

ஆஸி ஆஸி ஆஸி அவ் அவ் அவ்வ்வ்வ்:(

Paleo God said...

மதுரைங்கறீங்க, பின்னாடி வெண்பளிங்கு காதல் சமாதி (அதாங்க தாஜ்மஹால்!) தெரியிது. புள்ள வேற நெம்ப இளைச்சா மாதிரி தெரியிது?

நாடோடி said...

//ஜாக்பாட் நிகழ்ச்சியில் இனி குஷ்புவின் ஜாக்கெட்டைப் பார்க்க முடியாது.//

ஒருவேளை "மானாட‌ ம‌யிலாட‌" நிக‌ழ்ச்சியில் பார்க்க‌லாமோ!!!!!!..

சைவகொத்துப்பரோட்டா said...

//முண்டக்கூவி என்று Trunk Call - ஐ யாரோ மொழிபெயர்த்தது நினைவுக்கு வந்து தொலைக்கிறது.//

அவ்வ்...............ரூம் போட்டு யோசிப்பாங்களோ!!!

யாசவி said...

//மெய்ப்புல அறைகூவலர் ஒப்பனை அறை என்று போட்டிருப்பார்கள். Physically Challenged ஐத் தமிழ்ப்படுத்தி இருக்கிறார்களாமாம்.//

இப்படியெல்லாம் செய்தால் தமிழை விட்டு தலைதெரிக்க ஒடும் வாய்ப்பு அதிகம்

vasu balaji said...

/வர்ணனையாளர் ஒருவர் கேட்டர்/

/பத்திரிகைகளின் மீதான்/

நசரேயன் அண்ணாச்சி எளக்கியம் சிக்கிரிச்சேய். ஸ்டார்ட் த மீஜிக்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அல்லோவ்! நெற்றிக்கண். குற்றம் குற்றமே!:)) முதல்ல Home கு வாசல்னு போட்டத மாத்துங்க இ.அ.த.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
/ஜாக்பாட் நிகழ்ச்சியில் இனி குஷ்புவின் ஜாக்கெட்டைப் பார்க்க முடியாது./

மனுசனுக்கு என்னல்லாம் கவலை பாரு.

க.பாலாசி said...

//எது எப்படியோ? ஜாக்பாட் நிகழ்ச்சியில் இனி குஷ்புவின் ஜாக்கெட்டைப் பார்க்க முடியாது.//

ஆமங்க...ஒருவாரமா இந்த கவலையாவே இருக்குங்க... இன்னைக்கு நியூஸ்லையும் ஜாக்பாட் இனிமே ‘கடையாது’ன்னு கன்பார்ம் பண்ணிட்டாங்க...

Chitra said...

தனித் தமிழ் என்று சொன்னதால் சிறிது பயமாக இருந்தது. “டெயிட் கால் திசையில் எறிந்த ஊஞ்சல் பந்தை குட்டைக்கால் திசையில் அடிக்க முற்பட்ட கெவின் பீட்ட்ர்சனின் துடுப்பின் தலைமை ஓரத்தில் பட்டு பந்து மூன்றாம் மனிதனின் திசையில் பிடிக்குச் செல்வது போல பறந்தது. ஆழப் புள்ளி நிலையில் நின்று கொண்டிருந்த டேவிட் ஹஸ்ஸி ஓடிச் சென்று அந்தப் பந்தை பிடிக்கக் கரணம் அடித்தார் ஆனால் பந்து அவருக்குப் பிடிபடாமல் எல்லைக் கோட்டை எட்டிப் பிடித்தது” - இப்படி வர்ணனை செய்து விடுவார்களோ என்று பயமாக இருந்தது.


....ha,ha,ha,ha,ha.....

kushboo matter: ho,ho,ho,ho,,......

Anonymous said...

//இதையெல்லாம் பார்க்கும் போது முண்டக்கூவி என்று Trunk Call - ஐ யாரோ மொழிபெயர்த்தது நினைவுக்கு வந்து தொலைக்கிறது//

எ.கொ இது :)

Rettaival's Blog said...

மெய்ப்புல அறைகூவலர் ஒப்பனை அறை என்று போட்டிருப்பார்கள். Physically Challenged ஐத் தமிழ்ப்படுத்தி இருக்கிறார்களாமாம்.

************************************

இவர்களைப் போல ஆசாமிகள் ப்டுத்தாமல் இருந்தாலே போதும்..தமிழ் தன்னால் வார்த்தைகளை கண்டுபிடித்துக் கொள்ளும். ஆர்குட்டுக்கும் ட்விட்டருக்கும் தமிழில் என்னவென கேளுங்கள்.... சொல்ல மாட்டார்கள்.?

ARV Loshan said...

ஆகா.. நன்றி நண்பா..
நீங்கள் கேட்டது அறிந்து மிக மகிழ்ச்சி.. :)]
உங்கள் ஊக்கம் மேலும் உற்சாகம் தருகிறது..

நீங்கள் குறிப்பிட விமர்சனந்த்தையும் ஏற்கிறேன்..
நான் தனிப்பட்ட விருப்பங்களை வானலையில் சொல்வதில் விருப்பமற்றவன்.. எனினும் சக நண்பர்கள் சுவாரஸ்யத்துக்காக நான் ஆஸ்திரேலிய ஆதரவாளன் என்று சொல்லி விட்டார்கள்.. :)

தனித் தமிழ்ப் 'படுத்துகை'யின் கொடுமை பற்றி எனக்கும் நன்கு தெரியும்.. :)


//மெய்ப்புல அறைகூவலர் ஒப்பனை அறை என்று போட்டிருப்பார்கள். Physically Challenged ஐத் தமிழ்ப்படுத்தி இருக்கிறார்களாமாம்.//

hahahaha

முத்துலெட்சுமி/muthuletchumi said...

/மெய்ப்புல அறைகூவலர் ஒப்பனை அறை என்று போட்டிருப்பார்கள். Physically Challenged ஐத் தமிழ்ப்படுத்தி இருக்கிறார்களாமாம்.//

எ.கொ இது :(

ராஜ நடராஜன் said...

//டெயிட் கால் திசையில் எறிந்த ஊஞ்சல் பந்தை குட்டைக்கால் திசையில் அடிக்க முற்பட்ட கெவின் பீட்ட்ர்சனின் துடுப்பின் தலைமை ஓரத்தில் பட்டு பந்து மூன்றாம் மனிதனின் திசையில் பிடிக்குச் செல்வது போல பறந்தது. ஆழப் புள்ளி நிலையில் நின்று கொண்டிருந்த டேவிட் ஹஸ்ஸி ஓடிச் சென்று அந்தப் பந்தை பிடிக்கக் கரணம் அடித்தார் ஆனால் பந்து அவருக்குப் பிடிபடாமல் எல்லைக் கோட்டை எட்டிப் பிடித்தது//

இந்த வர்ணனையும் நன்றாகத்தானே இருக்குது.மொழி என்பது கேட்டு கேட்டு மனதில் பதிவது.

ஆனாலும் மெய்ப்புல அறைகூவலர் ஒப்பனை அறை,முண்டக்கூவி கொஞ்சம் அதிகம்தான் இல்ல.

ராஜ நடராஜன் said...

WC ங்கிற மாதிரி PC ன்னோ PCR மாதிரியோ நாம வேணுமின்னா மெய்ப்புல அறைகூவலர் அறையை மாத்திட வேண்டியதுதான்.

கலகலப்ரியா said...

//
அதே போல பலர் பரவலாக ஃபேஸ்புக்கை மூஞ்சிப்புத்தகம் என்று அழைப்பதைப் பார்க்கிறேன். ஃபேஸ்புக் என்பது ஒரு பெயர்ச்சொல். அதைத் தமிழ்ப்படுத்துவது சரியா? விண்டோஸ்-7ஐ சன்னல்கள் என்று அழைப்பீர்களா? பில் கேட்ஸை விலைப்பட்டியல் வாசல்கள் என்று அழைப்பீர்களா?
//

கொடுமை..

Unknown said...

@சேட்டைக்காரன் - அப்பிடித்தான் தெரியுது

@கரிசல்காரன் - கரெக்டு

@ஷங்கர் - ஹாஹாஹாஹாஹா

@ஷங்கர் - ஆமாங்க இளைச்சுட்டான்

@நாடோடி - இங்க கலைஞர் டிவி தெரியாதே? நாங்க என்ன செய்யறது?

@சைவக்கொத்துபரோட்டா - அப்பிடித்தான் தெரியுது

@யாசவி - கரெக்டு பாஸ்

@வானம்பாடிகள் - கண்ணுல விளக்கெண்ணை ஊத்திக்கிட்டுப் பாக்குறீங்களே சார்.

ஹோம் - முதல் பக்கம்னு வேணும்னா போடுறேன். வீடுனு போடமாட்டேன்.

@க.பாலாசி - நம்ம கவலை இவங்களுக்கு எங்க புரியுது.

@சித்ரா - நன்றி டீச்சர்

@சின்ன அம்மிணி - அதே

@ரெட்டைவால்’ஸ் - சரியா சொன்னீங்க பாஸ். தமிழை அப்பிடியே ட்ரான்ஸ்லிட்டரேஷன் செய்யறதுக்கு பதிலா சமமான வார்த்தைகள் தேடுறதுதான்சரி

@லோஷன் - வருகைக்கு நன்றி லோஷன் அண்ணா. மறுபடியும் இதே மாதிரி வர்ணனை இருந்தா சொல்லுங்க கேக்கறேன்.

@முத்துலெட்சுமி - அதே

@ராஜ நடராஜன் - தனித்தமிழுக்கு எதிரானவன் இல்லை நான். ஆனால் வார்த்தைக்கு வார்த்தை தமிழ்ப்படுத்தினால் நன்றாக இல்லை. ஷார்ட் லெக் என்பதற்கு இணையான தமிழ்ப்பதத்தை யோசிக்க வேண்டுமே ஒழிய அதை குட்டைக்கால் என்று தமிழ்ப் “படுத்தக்” கூடாது.

@கலகலப்ரியா - அதே தாங்க.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

:)) இது ஊரிலேர்ந்து வர்ற பிதற்றல்களா? லிட்டில் சூப்பர் ஸ்டார் சூப்பராயிருக்கார்.. :))