Friday, July 9, 2010

புறக்கணிப்பு - பகுதி 2

நேற்றைய இடுகைக்கு வந்த பின்னூட்டங்களுக்கான பதிலாக இந்தப் பதிவு.

பெரும்பாலான நபர்களின் கருத்து என்னவென்றால், இலங்கையில் முள்வேலிக்குப் பின்னே வாடும் தமிழருக்கு இப்போதைய தேவை தனி நாடோ, சுயாட்சியோ, சம உரிமையோ இல்லை. உண்ண உணவு, உடுக்க உடை, வசிக்க இருப்பிடம் ஆகியவைதான். ஏற்கனவே போரில் நலிந்து போயிருக்கும் பொருளாதாரத்தை இலங்கையை பொருளாதார ரீதியில் தனிமைப் படுத்துகிறோம் என்று இன்னும் கஷ்டப்படுத்தி இப்போது கிடைக்கும் ஒரு வேளை உணவு கூட இல்லாமல் செய்துவிடாதீர்கள். வெளியே இருந்து கிறுக்குத் தனமான போராட்டங்களை நடத்துவதை விட உள்ளே வந்து உதவிகள் செய்யுங்கள். அல்லது செய்ய முன்வரும் விவேக் ஓபராய் போன்ற நடிகர்களையாவது போராட்டம் என்ற பெயரில் கஷ்டப்படுத்தாதீர்கள்.

மேலோட்டமாக இந்தக் கருத்தைப் பார்த்தோமென்றால், அட ஆமாம். இவர்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கிறதே. கஷ்டப்படுபவர்களுக்கு இப்போதைய தேவையைப் பூர்த்தி செய்து விட்டு அதன்பிறகு நிரந்தரத் தீர்வுக்கு வழி செய்யலாமே என்று தோன்றும். ஆனால் உணமை நிலை என்ன?

முள்வேலியில் வாழும் எங்கள் சகோதரர்களுக்கு உணவும் உடையும் கொடுக்க நாங்கள் தயாராயில்லையா? போர் நடந்து கொண்டிருந்த காலத்திலேயே உணவும் மருந்தும் ஒரு கப்பல் நிறைய அனுப்பி வைத்தோமே? என்ன செய்தார்கள் சிங்களப் பேரினவாத அரசும் ராஜபக்‌ஷே சகோதரர்களும்? அந்தக் கப்பலை அங்கேயும் இங்கேயும் அலைக்கழித்து கடைசியில் திருப்பி அனுப்பிவிட்டார்களே.

இப்போதும் அங்கே நலப்பணிகளைச் செய்ய அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் பல முன்வருகின்றனவே? ஆனால் இலங்கை அரசு என்ன செய்கிறது? பணம் கொடுங்கள். நாங்களே அவர்களுக்கு எல்லாம் செய்வோம் என்று சொல்கிறது. நாங்கள் பணம் கொடுத்தால் அது எம்மக்களுக்கு உதவியாகவா போகும்? ஆயுதங்களாகவும் ராஜபக்சே குடும்பச் சொத்துக்களாகவும் மாறிவிடாதா?

வரிசைகட்டி நிற்கும் தொண்டு நிறுவனங்களை உள்ளே விடாமல் விவேக் ஓபராயை பாடசாலை கட்டித்தரச் சொல்லும் செயலின் பின்னால் என்ன அரசியல் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? நடிகனை அழைத்து வந்து நான்கு பேருடன் பேசச் செய்து சிங்கள அரசு தமிழர்களை மிகவும் நன்றாக நடத்துகிறது என்று உலகுக்குப் பொய் பிரச்சாரம் செய்யத்தானே முயல்கிறது? அசினையும் சல்மான் கானையும் படப்பிடிப்பு நடத்த விட்டு இலங்கையில் மனித உரிமை மீறலே இல்லை என்று சொல்லி விளம்பரம் செய்துகொள்ளத்தானே ஆசைப்படுகிறது.

ஐ.எஃப்.எஃப்.ஏ விழாவை சிறப்பாக நடத்தி ஏற்கனவே சினிமா மோகம் பிடித்து அலையும் தமிழனை ஈழத்தைப் பற்றி யோசிக்க விடாமல் செய்யத்தானே முயற்சி எடுக்கிறது. இந்தியக் கிரிக்கெட் அணியுடன் அடுத்தடுத்து போட்டிகள் நடத்துவதன் மூலம் கிரிக்கெட் போதையில் வெறியேற்றி இலங்கைத் தமிழனையும் இந்தியத் தமிழனையும் மனித உரிமை மீறலை மறக்கடிச்செய்ய சிங்கள அரசு செய்யும் சூழ்ச்சி என்று தெரியவில்லையா?

உலகம் முள்வேலிக்குப் பின்னால் கஷ்டப்படும் தமிழ்ச் சகோதரர்களுக்கு செய்ய நினைக்கும் உதவி அவர்களுக்குப் போய்ச் சேர வேண்டுமென்றால் இப்போதைக்கு இலங்கையை ஆளும் சிங்களப் பேரினவாத அரசை தலையில் குட்டி அமைதியாக ஒரு ஓரத்தில் இருக்க வைக்க வேண்டுமல்லவா? இல்லையென்றால் நாங்கள் கஷ்டப்பட்டு அனுப்பி வைக்கும் பணமெல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிவிடாதா?

இப்போது இலங்கை வாழ் தமிழ்ச் சகோதரர்களை ஒன்று கேட்கிறேன். ஒரு அரசு சாரா தொண்டு நிறுவனத்தை உருவாக்கி, நிதி திரட்டி, வன்னிக்கு வந்து அங்கே வாடும் என் இன மக்களுக்கு வாழ வீடுகளும், படிக்க பாடசாலைகளும் கட்டித் தர நான் தயாராய் இருக்கிறேன். என்னையும் என் குழுவையும் உள்ளே விட உங்கள் அரசு தயாராக உள்ளதா? அப்படி எமக்கு அனுமதி மறுக்கும் பட்சத்தில் எம்மை உள்ளே விடக்கோரி போராட்டம் நடத்த நீங்கள் தயாரா? விமல் வீரவன்ஸ ஐ.நா குழுவை உள்ளே நுழையக் கூடாதென்று சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பது போல் எங்கள் குழுவை உள்ளே விடக்கோரி நீங்கள் உண்ணாவிரதம் இருப்பீர்களா?

பதில் சொல்லுங்கள்.

(முதல் வெற்றி: பிரிட்டனைச் சேர்ந்த நெக்ஸ்ட் நிறுவனம் இலங்கையில் மனித உரிமை பாதுகாக்கப்படும் வரை அங்கே தயாராகும் ஆடைகளை இறக்குமதி செய்யப்போவதில்லை என்று அறிவித்துள்ளது. இது நமக்குக் கிடைத்த முதல் வெற்றி. இனி எல்லா நாட்டு நிறுவனங்களும் இப்படி அறிவிக்க வேண்டும். நம் போராட்டத்தை தொடர்வோம்).

பல நல்ல கருத்துக்களைச் சொல்லிச் சென்ற சகோதரி அனாமிகா துவாரகன் உணர்ச்சி வசத்தால் பேசிவிட்ட அந்த வார்த்தை(கள்) உங்கள் யாரையாவது காயப்படுத்தியிருப்பின் அந்தச் சகோதரியின் சார்பிலும் அந்த வார்த்தையை மட்டும் நீக்க முடியாததாலும் மற்ற கருத்துகள் விடுபட்டுப் போய்விடும் என்பதால் அவரது பின்னூட்டத்தை விட்டுவைத்திருப்பதற்காகவும் இலங்கைப் பதிவர்/வாசக சகோதரர்களிடம் சிரம் தாழ்த்தி மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். 

111 comments:

Unknown said...

முந்தைய பதிவில் நெகட்டிவ் ஓட்டுப் போட்ட சந்திரனுக்கும், கன்கொன் கோபிக்கும் நன்றிகள்.

Bavan said...

//உண்ணாவிரதம் இருப்பது போல் எங்கள் குழுவை உள்ளே விடக்கோரி நீங்கள் உண்ணாவிரதம் இருப்பீர்களா?//

இங்கே பலர் அப்படிதான் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்
உண்ணாவிரதம் என்ற பெயர் மட்டும்தான் வைக்கப்படவில்லை..

vasu balaji said...

/ என்னையும் என் குழுவையும் உள்ளே விட உங்கள் அரசு தயாராக உள்ளதா?/

நாங்கள் காட்டும் இடத்தைத்தான் பார்க்கவேண்டும். சொல்லிக் கொடுப்பதைத்தான் சொல்லவேண்டும். எதுவானாலும் காசை மட்டும் கொடுக்கவேண்டும். இதற்குத் தயாரா என்று கேட்பான். ஐ.நா. போக முடியாது. மனித உரிமைக் கழகம் போக முடியாது. ரவி சங்கர் போகமுடியும். விவேக் ஓபராய் போக முடியும்.

vasu balaji said...

/ என்னையும் என் குழுவையும் உள்ளே விட உங்கள் அரசு தயாராக உள்ளதா?/

நாங்கள் காட்டும் இடத்தைத்தான் பார்க்கவேண்டும். சொல்லிக் கொடுப்பதைத்தான் சொல்லவேண்டும். எதுவானாலும் காசை மட்டும் கொடுக்கவேண்டும். இதற்குத் தயாரா என்று கேட்பான். ஐ.நா. போக முடியாது. மனித உரிமைக் கழகம் போக முடியாது. ரவி சங்கர் போகமுடியும். விவேக் ஓபராய் போக முடியும்.

vasu balaji said...

/விமல் வீரவன்ஸ ஐ.நா குழுவை உள்ளே நுழையக் கூடாதென்று சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பது போல் எங்கள் குழுவை உள்ளே விடக்கோரி நீங்கள் உண்ணாவிரதம் இருப்பீர்களா?//

வீரவன்ஸ உண்ணாவிரதம் இருந்தால் அதற்கு மரியாதை தனி. தமிழன் உண்ணாவிரதம் இருந்தால் சாகட்டும் என்று விடுவான்கள்.

கன்கொன் || Kangon said...

// முகிலன் said...

முந்தைய பதிவில் நெகட்டிவ் ஓட்டுப் போட்ட சந்திரனுக்கும், கன்கொன் கோபிக்கும் நன்றிகள். //

எனது விருப்பத்தெரிவை மேற்கொண்டமைக்கு உங்களது நன்றிகள் எனக்குத் தேவையில்லை.
தனிப்பட்ட நபர்களுக்கு எதிரான நான் மறைவாக்களிப்பதில்லை, பதிவுகள் என் பார்வையில் மோசமாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே மறைவாக்களிப்பேன்.

vasu balaji said...

/இந்தியக் கிரிக்கெட் அணியுடன் அடுத்தடுத்து போட்டிகள் நடத்துவதன் மூலம் கிரிக்கெட் போதையில் வெறியேற்றி இலங்கைத் தமிழனையும் இந்தியத் தமிழனையும் மனித உரிமை மீறலை மறக்கடிச்செய்ய சிங்கள அரசு செய்யும் சூழ்ச்சி என்று தெரியவில்லையா?/

கோடியக்கரையில் மீனவர் கொல்லப் பட்டிருக்கிறார். கச்சத்தீவு அருகில் மீன் பிடித்தவர்களை அடித்திருக்கிறார்கள். இந்தியக் கிரிக்கட் அணி இலங்கைக்கு பயணம் செய்வதை தடுக்கக்கூட நாதியில்லை. தலைவர் கண்டிக்கத்தக்க ஒன்று என்பதற்கு மேல் எதுவும் செய்யத் தயாரில்லை.

போராடமுடியாத சூழல் இருக்கலாம். ஆனால் நட்சத்திர நிகழ்ச்சியோ, விளையாட்டுப் போட்டியோ நாங்கள் பார்க்கமாட்டோம் என்று பகிஷ்கரிக்கலாம்.தமிழ்த் திரைப்படங்களைப் பார்க்கமாட்டோம் என்று உள்ளிருந்து கவிழ்க்கலாம்.

vasu balaji said...

//இல்லையென்றால் நாங்கள் கஷ்டப்பட்டு அனுப்பி வைக்கும் பணமெல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிவிடாதா?//

இது விழலில்லை முகிலன். விஷ விதைக்கு செழிக்கப் பாய்ச்சிய நீராகும்.

எந்தத் தடை வந்தாலும், ஏதோ ஒரு வழியில் உதவி என்று சேனலைஸ் செய்ய இதர நாடுகள் இருக்கும்போது இவன் அடங்கப் போவதில்லை.

கன்கொன் || Kangon said...

// போர் நடந்து கொண்டிருந்த காலத்திலேயே உணவும் மருந்தும் ஒரு கப்பல் நிறைய அனுப்பி வைத்தோமே? என்ன செய்தார்கள் சிங்களப் பேரினவாத அரசும் ராஜபக்‌ஷே சகோதரர்களும்? அந்தக் கப்பலை அங்கேயும் இங்கேயும் அலைக்கழித்து கடைசியில் திருப்பி அனுப்பிவிட்டார்களே. //

அதை அனுப்பியது யார்?
அதை எந்தக் கோஷத்தோடு அனுப்பினீர்கள்?
நான் இங்கு ராஜபக்ஷவையோ அல்லது அரசாங்கத்தையோ வால்பிடிக்க வரவில்லை.

ஆனால் மக்களுக்காக அனுப்பப்பட்ட பொருட்களில் அரசியல் சாயம் பூசியது யார்?
அதை மக்களுக்கு கொஞ்சமாவது செல்ல வேண்டுமென நினைத்திருந்தால் ஏதும் அரசசார்பற்ற நிறுவனங்கள் மூலமாக அனுப்பியிருக்கலாமே?
எதுவுமே முடியாதென்றால் அரசாங்கத்திடம் கொடுத்திருக்கலாமே?
அரசாங்கம் ஊழல் செய்யும், செய்யாது வேறு விடயம், கொஞ்ச உதவிகளாவது மக்களை சென்றடைந்திருக்குமே?

// ஆனால் இலங்கை அரசு என்ன செய்கிறது? பணம் கொடுங்கள். நாங்களே அவர்களுக்கு எல்லாம் செய்வோம் என்று சொல்கிறது. //

பணம் கொடுங்கள் என்று சொன்னதாக நான் அறியேன்.
அவர்கள் உதவிகளைத் தங்கள் மூலமாகச் செய்யச் சொல்கிறார்கள்.


// அசினையும் சல்மான் கானையும் படப்பிடிப்பு நடத்த விட்டு இலங்கையில் மனித உரிமை மீறலே இல்லை என்று சொல்லி விளம்பரம் செய்துகொள்ளத்தானே ஆசைப்படுகிறது. //

அசின் ஒருபோதும் இலங்கையில் மனித உரிமை மீறல் நடக்கவேயில்லை என்று அறிக்கை விடப் போவதில்லை.
எல்லாவற்றையும் நிறக் கண்ணாடிகள் மூலமாகப் பார்ப்பதைத் தயவுசெய்து தவிருங்கள்.
அவர்கள் அரசியல் பற்றிக் கதைக்கப் போவது கிடையாது.
அவர்கள் வேண்டுமானால் 'மக்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள்' என்று சொல்ல முடியும், அதைத் தாண்டி அவர்கள் எதுவும் சொல்லப் போவதில்லை, சொன்னாலும் கணக்கெடுக்கப்படப் போவதில்லை.

vasu balaji said...

Bavan said...
//உண்ணாவிரதம் இருப்பது போல் எங்கள் குழுவை உள்ளே விடக்கோரி நீங்கள் உண்ணாவிரதம் இருப்பீர்களா?//

இங்கே பலர் அப்படிதான் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்
உண்ணாவிரதம் என்ற பெயர் மட்டும்தான் வைக்கப்படவில்லை..//

Sorry பவன். உண்ண இருக்கும்போது உண்ணாமல் இருப்பதுதான் உண்ணாவிரதம் என்பது நீங்கள் அறியாததல்ல. முடிகிறதா இல்லையா என்பது அப்பாற்பட்ட விடயம். ஒரு தனிமனிதனாக, தன்னினத்துக்கு என்னால் இது செய்ய முயல முடியும் என்பவருக்கு குறைந்த பட்சம், உங்களால் முடியும் முடியாது என்ற பதிலே நேர்மையாக இருக்க முடியும். உங்கள் பதிலுக்கும், தனி ஈழம் கிடைத்திருக்கும் என்றால் பதவியைத் துறந்திருப்பேன் என்று கிழவன் பகடி செய்ததற்கும் வித்தியாசமில்லை.

கன்கொன் || Kangon said...

// ஐ.எஃப்.எஃப்.ஏ விழாவை சிறப்பாக நடத்தி ஏற்கனவே சினிமா மோகம் பிடித்து அலையும் தமிழனை ஈழத்தைப் பற்றி யோசிக்க விடாமல் செய்யத்தானே முயற்சி எடுக்கிறது. //

IIFA விழாவை இங்கு சாமானியன் எவனுமே கலந்து கொள்ளவில்லை.
அது மேல்தட்டு மக்களுக்காக மட்டுமே நடைபெற்றது.
மீண்டும் சொல்கிறேன், உங்களுக்கு கிடைக்கும் ஊடக செய்திகளையும், நிறக் கண்ணாடிகளையும் போட்டுக் கொண்டு பிரச்சினைகளை அணுகாதீர்கள்.


// இந்தியக் கிரிக்கெட் அணியுடன் அடுத்தடுத்து போட்டிகள் நடத்துவதன் மூலம் கிரிக்கெட் போதையில் வெறியேற்றி இலங்கைத் தமிழனையும் இந்தியத் தமிழனையும் மனித உரிமை மீறலை மறக்கடிச்செய்ய சிங்கள அரசு செய்யும் சூழ்ச்சி என்று தெரியவில்லையா? //

இதென்னது புதுக்கதை?
யாரும் இங்கு கிறிக்கற் போட்டி பார்த்து யதார்த்தங்களை மறக்கும் நிலையில் இல்லை.

சரி,
உங்கள் பார்வையில் வைத்துக் கொண்டாலும்,
அப்படி இலங்கையும், இந்தியாவும் சேர்ந்து (இரண்டு அணிகளின் ஒப்புதலும் வேண்டும் போட்டிகளுக்கு) நடத்துகின்ற போட்டிகளில் பங்குபற்றுகிற இந்திய அணியைப் புறக்கணிக்க நீங்கள் தயாரா?
தினேஷ் கார்த்திக், முரளி விஜய், அஸ்வின் போன்ற தமிழக வீரர்கள் சச்சின், ஹம்பீர், நெக்ரா போன்ற வீரர்களோ சேர்ந்து விளையாட வேண்டாம் என்று அழைப்பு விடுக்க நீங்கள் தயாரா?
(சச்சின், நெக்ரா, ஹம்பீர் மூவரும் இலங்கை ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வந்து ஜனாதிபதியின் தனிப்பட் உடற்கூற்று நிபுணரால் சிகிச்சை பெற்றவர்கள்.)
தயாரா நீங்கள்?

எங்கே உங்கள் தூய தமிழுணர்வைக் காட்டுங்கள் பார்க்கலாம்?

கன்கொன் || Kangon said...

//
போராடமுடியாத சூழல் இருக்கலாம். ஆனால் நட்சத்திர நிகழ்ச்சியோ, விளையாட்டுப் போட்டியோ நாங்கள் பார்க்கமாட்டோம் என்று பகிஷ்கரிக்கலாம்.தமிழ்த் திரைப்படங்களைப் பார்க்கமாட்டோம் என்று உள்ளிருந்து கவிழ்க்கலாம். //

அதென்ன நாங்கள் மட்டும்?
எங்களுக்காக போராடுகின்ற தமிழினமே திரைப்படங்களைப் புறக்கணிக்க வேண்டாமா?
கிறிக்கற் போட்டிகளைப் புறக்கணிக்க வேண்டாமா?

vasu balaji said...

ஆனால் மக்களுக்காக அனுப்பப்பட்ட பொருட்களில் அரசியல் சாயம் பூசியது யார்?
அதை மக்களுக்கு கொஞ்சமாவது செல்ல வேண்டுமென நினைத்திருந்தால் ஏதும் அரசசார்பற்ற நிறுவனங்கள் மூலமாக அனுப்பியிருக்கலாமே?
எதுவுமே முடியாதென்றால் அரசாங்கத்திடம் கொடுத்திருக்கலாமே?
அரசாங்கம் ஊழல் செய்யும், செய்யாது வேறு விடயம், கொஞ்ச உதவிகளாவது மக்களை சென்றடைந்திருக்குமே?//

அப்படியா? எங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. பத்திரிகைகளில் வந்ததுதான். உலகம் முழுதும் திரட்டி அனுப்பப்பட்ட மருந்தும், உணவுப் பொருட்களும் நாட்கணக்கில் அலக்கழிக்கப்பட்டு நாசமாய்ப்போனது எப்படி?

உங்கள் பதிவர் ஒருவரின் பதிவில், தற்காலிக வீடமைப்பதற்காக வந்த கட்டுமானங்கள் செல்லரித்துப் போவதைப் படம் போட்டிருந்தாரே. அரசு என்னதான் செய்தது?

வணங்காமண் எந்த அரசியல் சாயத்தோடு வந்தது?

Subankan said...

/விமல் வீரவன்ஸ ஐ.நா குழுவை உள்ளே நுழையக் கூடாதென்று சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பது போல் எங்கள் குழுவை உள்ளே விடக்கோரி நீங்கள் உண்ணாவிரதம் இருப்பீர்களா?//

உங்கள் அக்கறைக்கு நன்றிகள் முகிலன். ஒரு அரசாங்கத்தின் (முன்னாள்)அமைச்சருக்கும், சாதாரண சிறுபான்மைத் தமிழனுக்கும் உண்ணாவிரதம் இருந்தால் இங்கே ஒரே மரியாதைதான் என்றால் நீங்கள் இப்படிப் பதிவெழுதிக்கொண்டிருக்கவும் போவதில்லை. நான் அதற்கு பின்னூட்டமிட்டுக்கொண்டிருக்கவும் போவதில்லை. அதுதான் சொல்லிவிட்டேனே இங்குள்ள பிரச்சினைகள் உங்களுக்குத் தெரியவும் போவதில்லை, சொன்னாலும் புரிந்துகொள்ளும் நிலையிலும் உங்கள் மனப்பாண்மை இல்லை. அதற்கு உங்களது இந்த வரியே சிறந்த உதாரணம


// போர் நடந்து கொண்டிருந்த காலத்திலேயே உணவும் மருந்தும் ஒரு கப்பல் நிறைய அனுப்பி வைத்தோமே? என்ன செய்தார்கள் சிங்களப் பேரினவாத அரசும் ராஜபக்‌ஷே சகோதரர்களும்? அந்தக் கப்பலை அங்கேயும் இங்கேயும் அலைக்கழித்து கடைசியில் திருப்பி அனுப்பிவிட்டார்களே. //

அதன்பின்னால் இருந்த அரசியல் பற்றியும் நாம் அறிவோம். தமிழ் மக்கள் கஸ்டப்படுகிறார்கள் என்று காட்டி அதன்மூலம் கொஞ்சம் அரசியல் அனுதாபம் தேடுவதேயன்றி உண்மையில் உதவி செய்யும் மனப்பாண்மை இருந்தால் உதவியை அனுப்ப எத்தனையோ வழிகள் இருக்கின்றனவே.

கன்கொன் || Kangon said...

// முதல் வெற்றி: பிரிட்டனைச் சேர்ந்த நெக்ஸ்ட் நிறுவனம் இலங்கையில் மனித உரிமை பாதுகாக்கப்படும் வரை அங்கே தயாராகும் ஆடைகளை இறக்குமதி செய்யப்போவதில்லை என்று அறிவித்துள்ளது. இது நமக்குக் கிடைத்த முதல் வெற்றி. இனி எல்லா நாட்டு நிறுவனங்களும் இப்படி அறிவிக்க வேண்டும். நம் போராட்டத்தை தொடர்வோம் //

இலங்கையின் கைத்தொழிற் பேட்டைகளில் பணிபுரிகின்ற ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கப்பட்டிருக்கின்றது என்பதைக் கொண்டாடுவோம் வாருங்கள்....
பலகாரங்களைப் பரிமாறுவோம்.
அந்த ஏழைகளுக்குள் தமிழர்களுமா?
அப்படியானால் அதைப் பெரிதாக விழா எடுத்துக் கொண்டாடுவோம் வாருங்கள்....

வாருங்கள் தோழர்களே....

கன்கொன் || Kangon said...

ஒரு தாய் தமிழகத்து வருவதைத் தடுத்ததும் இதே தமிழ் இனவாதிகள் அல்லது உங்கள் பார்வையில் உணர்வாளர்கள் தானே?
ஒரு தாயை வரவேற்க அத்தனை பேர் ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொள்ளாமல் விமான நிலையத்துக்குச் சென்று அங்கு யார் அவரைப் பொறுப்பேற்பது என்று முரண்பட்டதும், அந்தத் தாயை வைத்து அரசியல் செய்வார்கள் என்ற காரணம் தான் அந்தத் தாயை இந்தியா திருப்பி அனுப்ப முக்கியமான காரணம் என்பதை மறுக்க முடியுமா?

vasu balaji said...

/அதென்ன நாங்கள் மட்டும்?
எங்களுக்காக போராடுகின்ற தமிழினமே திரைப்படங்களைப் புறக்கணிக்க வேண்டாமா?
கிறிக்கற் போட்டிகளைப் புறக்கணிக்க வேண்டாமா?//

இங்கு கிரிக்கட் போட்டி நடத்தி, திரைப்படங்கள் வெளியிட்டு கிடைக்கும் காசு இலங்கை அரசுக்குப் போகுமென்றால் கண்டிப்பாக வேண்டும். திரைப்படம் பகிஷ்கரிக்கப்பட்டால் பல ஆயிரம் குடும்பங்கள் இங்கு வேலையின்றி சாகும். கிரிக்கட் போட்டி தமிழகத்தில் நடக்கவில்லையெனில் வேறு மாநிலத்தில் நடத்தி கல்லாக்கட்டுவாங்கள். அதற்கு மேல்?

பதிலுக்கு பதில் கேள்வி எளிது கன்கொன். பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதற்கான கேள்வி இது.

கன்கொன் || Kangon said...

@வானம்பாடிகள்

இல்லை, இதென்ன...
இலங்கை அரசும், இந்தியாவும் சதிசெய்து தான் இலங்கை - இந்திய கிறிக்கற் போட்டிகளை ஏற்படுத்தி மக்களை போர் குற்றங்கை மறைக்கப் பார்க்கிறது என்கிறாதே முகிலன்?
அப்படியானால் இந்தியாவும் குற்றவாளி தானே?
அப்படியானால் முழுமையாகப் புறக்கணிக்க வேண்டாமா?


// பதிலுக்கு பதில் கேள்வி எளிது கன்கொன். பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதற்கான கேள்வி இது. //

அதேபோல் தான்,
அறிக்கைகள் விடுவுது இலகு,
செயற்படுவது கடினம்.

கன்கொன் || Kangon said...

// திரைப்படம் பகிஷ்கரிக்கப்பட்டால் பல ஆயிரம் குடும்பங்கள் இங்கு வேலையின்றி சாகும். //

ஹா ஹா ஹா...
தமிழ்நாட்டில் பொரளாதாரம் கெட்டால் பிரச்சினை, இங்கு தமிழர்கள் பொருளாதாரம் பாதிக்கப்பட்டால் தாங்கிக் கொள்ள வேண்டுமா?

முகிலன் தெளிவாகச் சொல்கிறாதே?
இன்று பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் இறப்பது முக்கியமல்ல, நாளை பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் மகிழ்ச்சியாக வாழ்வது தான் முக்கியம் என்று?

//
இது கொஞ்சம் மெதுவான ப்ராசஸ் தான். இன்று கர்ப்பமாகி நாளைக் காலையே குழந்தை பெற்றுவிட முடியாது. அதே போல இன்றைய கர்ப்பத்தின் பக்க விளைவுகளுக்குப் பயந்து கர்ப்பத்தைக் கலைத்துவிட்டால் குழந்தை கிடைக்காமலே போய்விடும். //

Thenammai Lakshmanan said...

ஒரு அரசு சாரா தொண்டு நிறுவனத்தை உருவாக்கி, நிதி திரட்டி, வன்னிக்கு வந்து அங்கே வாடும் என் இன மக்களுக்கு வாழ வீடுகளும், படிக்க பாடசாலைகளும் கட்டித் தர நான் தயாராய் இருக்கிறேன். என்னையும் என் குழுவையும் உள்ளே விட உங்கள் அரசு தயாராக உள்ளதா? அப்படி எமக்கு அனுமதி மறுக்கும் பட்சத்தில் எம்மை உள்ளே விடக்கோரி போராட்டம் நடத்த நீங்கள் தயாரா?//

சரியான கேள்வி்தான் முகிலன்..

Thenammai Lakshmanan said...

ஒரு அரசு சாரா தொண்டு நிறுவனத்தை உருவாக்கி, நிதி திரட்டி, வன்னிக்கு வந்து அங்கே வாடும் என் இன மக்களுக்கு வாழ வீடுகளும், படிக்க பாடசாலைகளும் கட்டித் தர நான் தயாராய் இருக்கிறேன். என்னையும் என் குழுவையும் உள்ளே விட உங்கள் அரசு தயாராக உள்ளதா? அப்படி எமக்கு அனுமதி மறுக்கும் பட்சத்தில் எம்மை உள்ளே விடக்கோரி போராட்டம் நடத்த நீங்கள் தயாரா?//

சரியான கேள்வி்தான் முகிலன்..

vasu balaji said...

கன்கொன் || Kangon said...
@வானம்பாடிகள்

இல்லை, இதென்ன...
இலங்கை அரசும், இந்தியாவும் சதிசெய்து தான் இலங்கை - இந்திய கிறிக்கற் போட்டிகளை ஏற்படுத்தி மக்களை போர் குற்றங்கை மறைக்கப் பார்க்கிறது என்கிறாதே முகிலன்?
அப்படியானால் இந்தியாவும் குற்றவாளி தானே?
அப்படியானால் முழுமையாகப் புறக்கணிக்க வேண்டாமா?//


இன்னொரு முறை படியுங்கள். வேண்டும். அங்கு நீங்கள் புறக்கணித்தால் ஏற்படும் தாக்கம் இங்குள்ளவர்கள் புறக்கணித்தாலும் ஏற்படாது என்பதுதான்.

/அதேபோல் தான்,
அறிக்கைகள் விடுவுது இலகு,
செயற்படுவது கடினம்.//

முகிலன் இது தெரியாமலா சொல்லியிருப்பார் என நினைக்கிறீர்கள்?

/ஹா ஹா ஹா...
தமிழ்நாட்டில் பொரளாதாரம் கெட்டால் பிரச்சினை, இங்கு தமிழர்கள் பொருளாதாரம் பாதிக்கப்பட்டால் தாங்கிக் கொள்ள வேண்டுமா?//

புரிந்துதானா கேட்கிறீர்கள்? இங்கு பொருளாதாரம் கெட்டால் பாதிக்கப்படுவது தமிழன் மட்டுமே. மேலதிகமாக சிங்களத்தில் இதன் தாக்கம் ஒன்றுமே இருக்கப் போவதில்லை.

இலங்கைக்குப் பொருளாதாரத் தடை வருமானால் சிங்களனும் பாதிக்கப் படுவான். தமிழனைப் பட்டினி போட்டு கொல்வது போல் சிங்களனைக் கொல்லமுடியாது.

நெக்ஸ்டின் முடிவால் பாதிக்கப் படப்போவது தமிழர் மட்டுமா? சிங்களவனும்கூடத்தானே.

vasu balaji said...

//இன்று பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் இறப்பது முக்கியமல்ல, நாளை பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் மகிழ்ச்சியாக வாழ்வது தான் முக்கியம் என்று?//

இப்படி முகிலன் சொன்னதாக கண்ணில் படவில்லை.

Subankan said...

@ வானம்பாடிகள்

உங்களுடன் வாக்குவாதப்படுவது என் மனதுக்கு சரியாகப் படவில்லை ஐயா. ஆனால் எனக்குத் தெரிந்த ஒன்றை மட்டும் சொல்லிவிட்டுப் போகிறேன்.

ஆடைத்தொழில் பாதிக்கப்பட்டால் முதலில் வேலையை விட்டுத் தூக்கப்படப்போவது யார்?

மகிந்தவே சொல்கிறார், எமது பிரதான உணவு சோறு. அதை உண்ணுங்கள். கோதுமை விலை அதிகரிப்பைப்பற்றி தான் அலட்டிக்கொள்ளப்போவதில்லை என்று. பெரும்பாலான சிங்களவரின் மூன்றுநேரப் பிரதான உணவு அதுதான். பொருளாதாரத் தடையால் கிராம்ப몮உறத்திலிருக்கும் சிங்களருக்கு நேரடிப் பாதிப்பு ஏற்படாது. அவர்களது வாழ்க்கைமுறை அப்படி. நேரடித் தாக்கம் பெறப் போவது நகர்ப்புறத்திலிருக்கும் சிங்களவரும், தமிழரும்தான்.

இனிமேல் இது தொடர்பாக பேசுவதாக இல்லை.

கன்கொன் || Kangon said...

// இன்னொரு முறை படியுங்கள். வேண்டும். அங்கு நீங்கள் புறக்கணித்தால் ஏற்படும் தாக்கம் இங்குள்ளவர்கள் புறக்கணித்தாலும் ஏற்படாது என்பதுதான். //

இலங்கையில் உள்ள தமிழர்கள் வெறுமனே 17.8 வீதத்தினர்.
இலங்கையின் சனத்தொகை வெறுமனே 2 கோடி என்று நினைக்கிறேன்.
(50 ஆயிரம் தமிழர்கள் இறந்ததாக தலைவர் சீமான் சொன்னார். அதையும் கழித்துக் கொள்ளவும்)

ஆனால் தமிழகச் சனத்தொகை?


// முகிலன் இது தெரியாமலா சொல்லியிருப்பார் என நினைக்கிறீர்கள்? //

அப்படி அவருக்கு தெரிந்திருப்பதாக என்னால் உணரமுடியவில்லை.


// புரிந்துதானா கேட்கிறீர்கள்? இங்கு பொருளாதாரம் கெட்டால் பாதிக்கப்படுவது தமிழன் மட்டுமே. மேலதிகமாக சிங்களத்தில் இதன் தாக்கம் ஒன்றுமே இருக்கப் போவதில்லை. //

அதாவது பக்கத்து வீட்டுக்காரனுக்கு இரண்டு கண் போகவேண்டுமென்பதற்காக ஒரு கண்ணை இழக்கும் பழைய கதை?
அந்தக் கதையின் நீதியில் ஏதோ சொல்லுவார்களே?


// நெக்ஸ்டின் முடிவால் பாதிக்கப் படப்போவது தமிழர் மட்டுமா? சிங்களவனும்கூடத்தானே. //

இதென்ன சிறிதும் உணர்ச்சிகளற்றவர்களைப் போல் கதைக்கிறீர்கள்?
சிங்களவன் பாதிக்கப்படுவதால் உங்களுக்கென்ன நன்மை?
சரி,
அதை விடுங்கள், பாதிக்கப்படும் தமிழர்கள் பாடு?
சிங்களவன் பாதிக்கப்படுவதற்காக உன்னை நீயே மாய்த்துக் கொள் என்று அவர்களுக்குச் சொல்வதா?
ஏன் இப்படி ஒரு கொடூர புத்தி?


//இன்று பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் இறப்பது முக்கியமல்ல, நாளை பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் மகிழ்ச்சியாக வாழ்வது தான் முக்கியம் என்று?//

அது தான் சொல்கிறாரே நாளைய மகிழ்ச்சிக்காக இன்று துன்பப்படு என்று?

vasu balaji said...

Subankan said...
@ வானம்பாடிகள்

உங்களுடன் வாக்குவாதப்படுவது என் மனதுக்கு சரியாகப் படவில்லை ஐயா. ஆனால் எனக்குத் தெரிந்த ஒன்றை மட்டும் சொல்லிவிட்டுப் போகிறேன்.

ஆடைத்தொழில் பாதிக்கப்பட்டால் முதலில் வேலையை விட்டுத் தூக்கப்படப்போவது யார்?

மகிந்தவே சொல்கிறார், எமது பிரதான உணவு சோறு. அதை உண்ணுங்கள். கோதுமை விலை அதிகரிப்பைப்பற்றி தான் அலட்டிக்கொள்ளப்போவதில்லை என்று. பெரும்பாலான சிங்களவரின் மூன்றுநேரப் பிரதான உணவு அதுதான். பொருளாதாரத் தடையால் கிராம்ப몮உறத்திலிருக்கும் சிங்களருக்கு நேரடிப் பாதிப்பு ஏற்படாது. அவர்களது வாழ்க்கைமுறை அப்படி. நேரடித் தாக்கம் பெறப் போவது நகர்ப்புறத்திலிருக்கும் சிங்களவரும், தமிழரும்தான்.

இனிமேல் இது தொடர்பாக பேசுவதாக இல்லை.//

இதை ஏன் வாக்குவாதமாக நினைக்கிறீர்கள். நான் விவாதமாகத்தான் நினைக்கிறேன். போகட்டும். மகிந்த சொல்வதும், மற்ற அரசியல்வாதிகள் சொல்வதும் பதவியில் ஸ்திரமாக இருக்கையில் ஒன்றாகவும், ஆட்டம் காண்கையில் வேறாகவும்தான் இருக்கும். நீங்கள் சொன்ன நகர்ப்புர சிங்களத் தமிழரின் தாக்கம்தான் அரசியலில் மாற்றம் ஏற்படுத்துவது என நினைக்கிறேன்.

Unknown said...

இலங்கையைப் பொருளாதார ரீதியில் ஏன் தனிமைப் படுத்த வேண்டும் என்பதை பலர் பல பதிவுகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இன்னும் விளக்க வேண்டுமென்றால், எம்மவர்களுக்கு உதவக் கூட இந்த அரசு இருக்கும் வரை நடக்காது. இந்த அரசை பதவியிலிருந்து இறக்கி போர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனையும் பெற்றுத் தந்தால்தான் நாங்கள் செய்யும் சிறு உதவி கூட அவர்களைச் சென்று சேரும்.

மற்றபடி, இலங்கை சென்று விளையாடும் இந்தியக் கிரிக்கெட் அணிக்கு எதிராகவும் போராட்டங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இலங்கைக் கிரிக்கெட் வீரர்களை ஏலத்தில் எடுத்ததற்காக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியைக் கண்டித்துக் கூட போராட்டங்கள் நடந்தன. (முரளியை எடுத்ததற்காக அல்ல).

இலங்கை அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டதற்காக ஏர்டெல்லுக்கு எதிராகக் கூட ஏர்டெல் இணைப்பைத் திருப்பித் தரும் போராட்டத்தை நாம் தமிழர் துவக்கியுள்ளார்கள்.

இலங்கைக்கு படபிடிப்புக்குச் செல்லும் சினிமா நடிகர்களின் திரைப்படத்தைப் பார்க்க மாட்டோம் என்றும் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்/நடத்துவார்கள். அந்தப் போராட்டத்தால் மொத்த சினிமா உலகமும் பாதிக்கப் படக்கூடாது என்பதற்காகத்தான் நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் அந்தத் திரைப்பட நடிகர்களுக்கு ரெட் கார்ட் போடுகிறது.

மற்றபடி இன்னும் என் கேள்விக்கு யாரும் பதில் சொல்லவில்லை.

@கன்கொன் கோபி - உங்கள் வாதம் உதவி செய்ய நினைப்பவர்களைக் கொச்சைப்படுத்துகிறது. இதற்கு பவனின் பதிவே பரவாயில்லை.

vasu balaji said...

//இலங்கையில் உள்ள தமிழர்கள் வெறுமனே 17.8 வீதத்தினர்.
இலங்கையின் சனத்தொகை வெறுமனே 2 கோடி என்று நினைக்கிறேன்.
(50 ஆயிரம் தமிழர்கள் இறந்ததாக தலைவர் சீமான் சொன்னார். அதையும் கழித்துக் கொள்ளவும்)

ஆனால் தமிழகச் சனத்தொகை?//

இதில் சனத்தொகை என்ன மாற்றம் கொண்டுவரும் கன்கொன்? இங்கு 10000 பேர் ஒரு ஊரில் புறக்கணிப்பதால் அந்தப்படம் அந்த ஊரில் தோல்வி என்றால், ஈழத்தில் 100 பேர் பார்க்கும் ஒரு ஊரில் அவர்கள் பார்க்காததால் அந்தப்படம் தோல்வி அடையும். ஆக, முடிவு படத்தை அங்கு திரையிடுவதற்கான செலவு நட்டமாகும். தொடர்ந்து நட்டமெனில் வாங்கப் போவதில்லை. அது ஒருலட்சம் பேருக்கோ, 1000 பேருக்கோ திரைப்படம் விற்பனையாகாது என்பதுதான் பலன்.

/அதாவது பக்கத்து வீட்டுக்காரனுக்கு இரண்டு கண் போகவேண்டுமென்பதற்காக ஒரு கண்ணை இழக்கும் பழைய கதை?
அந்தக் கதையின் நீதியில் ஏதோ சொல்லுவார்களே?/

நாசமாப்போக, இங்கே இருக்கிறவனுக்கு ஒரு கண்போனாலுமே இதை நினைப்பதில்லையே கன்கொன். எங்கள் நாட்டு மீனவனை சாக்காட்டுறான் என்று போராடக்கூட நேரமில்லை எம்மவர்க்கு. இதில் ஈழத்தமிழனுக்கு இரண்டுகண் போகுதா என்றா கவலைப்படப் போகிறார்கள்.

/இதென்ன சிறிதும் உணர்ச்சிகளற்றவர்களைப் போல் கதைக்கிறீர்கள்?
சிங்களவன் பாதிக்கப்படுவதால் உங்களுக்கென்ன நன்மை?
சரி,
அதை விடுங்கள், பாதிக்கப்படும் தமிழர்கள் பாடு?
சிங்களவன் பாதிக்கப்படுவதற்காக உன்னை நீயே மாய்த்துக் கொள் என்று அவர்களுக்குச் சொல்வதா?
ஏன் இப்படி ஒரு கொடூர புத்தி?//

இதில் நாங்கள் நீங்கள் என்ற பாகுபாடு ஏனோ தெரியவில்லை. ஒரு வேளை புரியாவிடின், 10 தமிழன் பட்டினியில் இறந்தால் பக்ஸே பதில் சொல்ல வேண்டாம். 2 சிங்களவன் இறந்தால் பதில் சொல்லியாக வேண்டும். ஒரு தமிழனின் நிறுவனம் முழுகிப் போனால் அவனுக்கு அக்கறையில்லை. ஒரு சிங்களவனின் நிறுவனம் படுத்தால் வேலையில்லாத் திண்டாட்டம், பசி, பட்டினி போராட்டம். தமிழனை அடக்க இராணுவம் அனுப்பினாற்போல் சிங்களவர் திரண்டால் அனுப்ப முடியுமா? துப்பாக்கி நீளுமா திரும்புமா?

Unknown said...

@கோபி - நீங்கள் இந்தியத் தமிழர் மீது துவேசத்துடன் வாதாடுவது போலத் தெரிகிறது. ஒரு வேளை இந்தப் பதிவை நான் எழுதியதாலா?

ஒரு புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் எழுதியிருந்தாலும் இப்படித்தான் பேசுவீர்களா?

இலங்கையின் கண் போக வேண்டுமென்று இந்தியத் தமிழர் ஆசைப்பட்டார்களா? அவர்களுக்கு இலங்கையின்மீது என்ன பொறாமை? ஏன் அவர்கள் அப்படி நினைக்க வேண்டும்?

இதைப் பற்றி விளக்கமாகச் சொல்வீர்களா?

Subankan said...

// நீங்கள் சொன்ன நகர்ப்புர சிங்களத் தமிழரின் தாக்கம்தான் அரசியலில் மாற்றம் ஏற்படுத்துவது என நினைக்கிறேன்//

இலங்கையின் முக்கியமான வாக்கு வங்கி அந்தக் கிராம்ப몮உறத்திலிருக்கும் சிங்களவர்கள்தான்.

உலகநாடுகளின் உதவியுடன் தந்திரமாகக் காய்நகர்த்தி போரையே முடித்துவிட்ட ஒருவரால் இந்த விடயத்தில் உங்களையும் என்னையும்விட நன்றாகவே யோசிக்கவும் ஊகிக்கவும் முடியும் என நம்புகிறேன்.

கலகலப்ரியா said...

அடப்பாவிங்களா.. இப்போதான் அங்க வேண்டுகோள் வச்சேன்.. க்ரிக்கெட் பத்தி எழுதுங்கன்னு... அதுக்குள்ள இப்டியா...

அவ்வ்வ்வ்...

விதி யார விட்டது...

ஹேமா said...

இப்பிடியே நினைக்கிறதெல்லாம் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருப்பம்.அங்க சிங்களவன் எங்கட இடங்களுக்கெல்லாம் சிங்களப் பெயர் வச்சு குடியேறிக்கொண்டிருக்கிறான்.
எல்லாரும் வேடிக்கை மட்டும் பாக்கினம்.தட்டிக் கேக்க ஆளுமில்லை.கேட்டாலும் ஒண்டும் ஒருத்தரும் அசையிறதாயுமில்ல.
எதைச் செய்யவேணுமோ அதைச் செய்ய முயற்சிப்போமே !

கன்கொன் || Kangon said...

// @கன்கொன் கோபி - உங்கள் வாதம் உதவி செய்ய நினைப்பவர்களைக் கொச்சைப்படுத்துகிறது. இதற்கு பவனின் பதிவே பரவாயில்லை. //

நான் உங்கள் பதிவிற்கு விடையளிக்கிறேன் அவ்வளவே.
நான் தமிழக மக்களுக்கு எதிராகவோ அல்லது புலம்பெயர் மக்களுக்கு எதிராகவே எதையுமே கதைக்கவில்லை.
நான் அரசியல் மயப்படுத்தப்பட்ட போராட்டங்களுக்கு எதிராகவே கதைக்கிறேன்.


// ஒரு புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் எழுதியிருந்தாலும் இப்படித்தான் பேசுவீர்களா? //

எழுதிய கருத்துப் பிழையென்றால் புலம்பெயர் தமிழரென்ன, இலங்கைத் தமிழரென்றாலும் இப்படித்தான் கதைப்பேன்.


// இலங்கையின் கண் போக வேண்டுமென்று இந்தியத் தமிழர் ஆசைப்பட்டார்களா? அவர்களுக்கு இலங்கையின்மீது என்ன பொறாமை? ஏன் அவர்கள் அப்படி நினைக்க வேண்டும்? //

திரும்பவும் என் கருத்தை திரித்துப் பார்க்கிறீர்கள்.
வானம்பாடிகள் ஐயா கைத்தொழிற்பேட்டைகளில் தமிழர்கள் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை, பெரும்பான்மை சிங்களவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் தானே என்றார்.
வாசியுங்கள் அதை.
அதற்காகத்தான் அந்தக் கருத்தைத் தெரிவித்தேன்.

கன்கொன் || Kangon said...

//
இதில் சனத்தொகை என்ன மாற்றம் கொண்டுவரும் கன்கொன்? இங்கு 10000 பேர் ஒரு ஊரில் புறக்கணிப்பதால் அந்தப்படம் அந்த ஊரில் தோல்வி என்றால், ஈழத்தில் 100 பேர் பார்க்கும் ஒரு ஊரில் அவர்கள் பார்க்காததால் அந்தப்படம் தோல்வி அடையும். ஆக, முடிவு படத்தை அங்கு திரையிடுவதற்கான செலவு நட்டமாகும். தொடர்ந்து நட்டமெனில் வாங்கப் போவதில்லை. அது ஒருலட்சம் பேருக்கோ, 1000 பேருக்கோ திரைப்படம் விற்பனையாகாது என்பதுதான் பலன். //

முழு உலகமே எங்களைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்று ஏன் நினைத்தோம்?
எதிர்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் அது பலமானமாக இருக்கும் என்று தானே?
ஒரு விடயத்தை 100 பேர் புறக்கணிப்பதை விட 100000 பேர் புறக்கணித்தால் பெரியளவிற்கு நன்மை கிடைக்குமல்லவா?

கன்கொன் || Kangon said...

// இதில் நாங்கள் நீங்கள் என்ற பாகுபாடு ஏனோ தெரியவில்லை. ஒரு வேளை புரியாவிடின், 10 தமிழன் பட்டினியில் இறந்தால் பக்ஸே பதில் சொல்ல வேண்டாம். 2 சிங்களவன் இறந்தால் பதில் சொல்லியாக வேண்டும். ஒரு தமிழனின் நிறுவனம் முழுகிப் போனால் அவனுக்கு அக்கறையில்லை. ஒரு சிங்களவனின் நிறுவனம் படுத்தால் வேலையில்லாத் திண்டாட்டம், பசி, பட்டினி போராட்டம். தமிழனை அடக்க இராணுவம் அனுப்பினாற்போல் சிங்களவர் திரண்டால் அனுப்ப முடியுமா? துப்பாக்கி நீளுமா திரும்புமா? //

எங்கே இருக்கிறீர்கள்?
இலங்கையில் திறந்த பொருளாதாரம் பாதிக்கப்படின் முதலாவதாகப் பாதிக்கப்படப் போவது தமிழர்கள் தான்.
சிங்களவர்களில் பெரும்பான்மையினர் கிராமப் புறங்களைச் சேர்ந்தவர்கள்.
அவர்களது பிரதான உணவு அரிசி மட்டுமே.
தமிழர்களின் வாழ்க்கை முறை முழுவதும் எதிரானது.
அவர்கள் சமாளித்துக் கொள்வார்கள், ஆனால் தமிழர்கள்?

கன்கொன் || Kangon said...

// மற்றபடி, இலங்கை சென்று விளையாடும் இந்தியக் கிரிக்கெட் அணிக்கு எதிராகவும் போராட்டங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இலங்கைக் கிரிக்கெட் வீரர்களை ஏலத்தில் எடுத்ததற்காக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியைக் கண்டித்துக் கூட போராட்டங்கள் நடந்தன. (முரளியை எடுத்ததற்காக அல்ல). //

உந்த ஆர்ப்பாட்ட புலுடாக்கள் வேண்டாம்.
சல்மான் கானுடன் இலங்கை சென்றமைக்காக அசினுக்கு தடை உடனடியாக விதித்தமையைப் போன்று சச்சின், நெஹ்ரா, ஹம்பீருடன் சேர்ந்து விளையாடியமைக்காக தினேஷ் கார்த்திக், அஸ்வின், முரளி விஜய் ஆகியோருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?

இதுவரை சச்சின், நெஹ்ரா, ஹம்பீர் விளையாடும் போட்டிகளைப் புறக்கணிக்கிறோம் என்ற அறிவிப்பு வராமை ஏன்?

Unknown said...

ஒட்டு மொத்த இந்திய அணியையே புறக்கணித்துவிட்டோம் இதில் சச்சின் என்ன கம்பீர் என்ன?

விடியல் said...

இங்கே வந்து வாய் வீரம் காட்டும் பவனும், கங்கொனும், சுபாங்கனும் இலங்கையில் இருக்கும் அகதி முகாம்களில் ஏதாவது ஒன்றிற்குப் போய் போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு ஏதாவது செய்திருக்கிறார்களா?
அட்லீஸ் மன நல வழியில் அவர்களை மீண்டும் பழைய வாழ்விற்குள் கொண்டு வரும் அறிவுரைகளை வழங்கியிருக்கிறார்களா?
பிறகு என்ன முட்டையிலை மயிரா பிடுங்குகிறார்கள்? முதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது செய்ய முயலுங்கள். பிறகு உங்களின் நியாயத்தை கூறுங்கள்.

Subankan said...

//Bbottle Opener said...
இங்கே வந்து வாய் வீரம் காட்டும் பவனும், கங்கொனும், சுபாங்கனும் இலங்கையில் இருக்கும் அகதி முகாம்களில் ஏதாவது ஒன்றிற்குப் போய் போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு ஏதாவது செய்திருக்கிறார்களா? //

அதுதான் சொல்லிவிட்டோமே, இங்குள்ள நிலைமைகள் உங்களுக்குத் தெரியாது, சொன்னாலும் புரிந்துகொள்ள முடியாது என்று. முகாம்களுக்குள் எதிர்க்கட்சிக்கே அனுமதியில்லாதபோது தனிநபர்கள் செல்வது எப்படி?

//முதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது செய்ய முயலுங்கள். பிறகு உங்களின் நியாயத்தை கூறுங்கள்//

அதையேதானே நாங்களும் இங்கே கூறிக்கொண்டிருக்கிறோம்.

Bavan said...

/// Bbottle Opener said...
இங்கே வந்து வாய் வீரம் காட்டும் பவனும், கங்கொனும், சுபாங்கனும் இலங்கையில் இருக்கும் அகதி முகாம்களில் ஏதாவது ஒன்றிற்குப் போய் போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு ஏதாவது செய்திருக்கிறார்களா? ///

இலங்கையில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனும் ஏதோ ஒரு வகையில் ஒரு உதவியைச் செய்திருப்போம், செய்திருக்கிறோம். செய்தோம்.

ஆனால் அதையெல்லாம் சொல்லிக்காட்டி நாங்களும் இந்திய அரசியல்வாதிகள் போல ஆக விரும்பவில்லை. வெளிநாடுகளில் இன்டர்நெட்டில் செய்தியைப்படித்து பரிதாபம் மட்டும் படத்தெரிந்தவர்களைக்காட்டிலும் நாங்கள் ஒரு வேளை உணவையாவது அவர்களுக்குக் கொடுத்தோம் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்வோம்.

விடியல் said...

Subankan said...

விடியல் said...

Bavan said...
/// Bbottle Opener said...
இங்கே வந்து வாய் வீரம் காட்டும் பவனும், கங்கொனும், சுபாங்கனும் இலங்கையில் இருக்கும் அகதி முகாம்களில் ஏதாவது ஒன்றிற்குப் போய் போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு ஏதாவது செய்திருக்கிறார்களா? ///

இலங்கையில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனும் ஏதோ ஒரு வகையில் ஒரு உதவியைச் செய்திருப்போம், செய்திருக்கிறோம். செய்தோம்.

ஆனால் அதையெல்லாம் சொல்லிக்காட்டி நாங்களும் இந்திய அரசியல்வாதிகள் போல ஆக விரும்பவில்லை. வெளிநாடுகளில் இன்டர்நெட்டில் செய்தியைப்படித்து பரிதாபம் மட்டும் படத்தெரிந்தவர்களைக்காட்டிலும் நாங்கள் ஒரு வேளை உணவையாவது அவர்களுக்குக் கொடுத்தோம் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்வோம்.//


இலங்கையில் இருக்கும் ஒவ்வோர் குடிமகனும் நல்ல முறையில் உதவிகளைச் செய்திருந்தால் தமிழனுக்கு இந்த நிலமை வந்திருக்காது.

உங்களிடம் கேட்கிறேன். போரினால் பாதிக்கப்பட்டு, முகாமிலிருந்து மீண்டு வந்த ஒரு குடும்பத்திற்காவது உதவியிருக்கிறீர்களா?
போரினால் பாதிக்கப்பட்டு, அவையங்களை இழந்து வாழும், மக்க்ளில் யாராவது ஒருவரை எடுத்து நீங்கள் அவரிற்கு அவையங்களை பொருத்தி விடும் பணியினைச் செய்யலாமே?

விடியல் said...
This comment has been removed by the author.
விடியல் said...

Bbottle Opener said...
Subankan said...
அதுதான் சொல்லிவிட்டோமே, இங்குள்ள நிலைமைகள் உங்களுக்குத் தெரியாது, சொன்னாலும் புரிந்துகொள்ள முடியாது என்று. முகாம்களுக்குள் எதிர்க்கட்சிக்கே அனுமதியில்லாதபோது தனிநபர்கள் செல்வது எப்படி?//
இறுதி வரை முள்ளி வாய்காலில் நின்று மெனிக் பாமிற்கு வந்த பல்லாயிரக்கணக்கானவர்களுள் நானும் ஒருவன். நான் வலைப் பதிவிற்கு புதியவன். வலை பதிவ்சில் அமைப்புக்கள் இல்லையென்று நினைக்கிறேன். நாங்கள் இணைந்து ஒரு அமைப்பை அமைத்து அந்த அமைப்பினூடாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திந்து உளவள பயிற்க்சிகள் வழங்க முயறிச் செய்யலாமே?
நீங்கள் கூறுவது போல முகாமிற்கு செல்வது இயலாத காரியம். திங்கள், வெள்ளி, புதன் நாட்களில் பாதி அவித்த முட்டை, சோறு, ஒரு வகை நாற்றமடிக்கும் மீன் கறி, இது தான் உணவாக வழங்குவார்கள்.
ஏனைய நாட்களில் பருப்பு கறியும், இலைக்கறியும் இலைகறி இல்லாத பட்சத்தில் மரக்கறி ஒன்று உணவுடன் சேர்த்து வழங்கப்பஃப்ட்டும். இந்த உணவில் ஊட்டச் சத்து இருக்கிறதா யோசித்து பாருங்கள். முகாமில்ள்ளவர்க்கள் கியூவில் நின்று தான் உணவினை பெற்று கொள்ள வேண்டும். உடல் உறுப்புக்களை இழந்தவர்கள், விழுப்புண் அடைந்த வடுக்களுடன் உள்ளவர்கள் வரிசையில் நிற்பதற்கு முண்டியடித்தால் அவர்களின் நிலை எப்படி என்று ஊகித்து பாருங்கள்.நான் கூட கடந்த தை மாதம்மறுவாழ்வு முகாமிலிருந்து வெளியேறினேன்.
முகாமிலிருந்து வெளியேறிய மக்களை யாரும் சந்திப்பதாக தெரியவில்லை.

நட்டாங்கண்டல் மகாவித்தியாலத்தில் ஆசிரியராகப் பணியாறிய போது பலவந்தமாக ஆட்சேர்ப்பு என்ற கொள்கையின் கீழ் வலுக் கட்டாயமாக என்னையும் சேர்த்தார்கள். இன்று ஒரு காலை இழந்த நிலையில் இருக்கிறேன்.

விடியல் said...

உங்களிடம் கேட்கிறேன். உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் தயார். நீங்கள் தயரா? சொத்திழப்புக்கள், கண்முன்னே இடம் பெற்ற அவலச் சாவுகள், நிறைவேறாத எண்ணங்கள், ஆசைகள், எதிர்காலம் பற்றியதான கேள்வி குறி இது தான் இற்றவரை முகாமிலிருப்பவர்களதும், முகாமை விட்டு வெளியேறியவர்களினதும் பிரதான பிரச்சினை. இவர்களுக்கு வேண்டியது உளவியல் ரீதியான ஆலோசனைகள் தான்.
இந்தப் போரினால் பாதிக்கப்பட்டவர்களையும், முகாம்களை விட்டு வெளியே வந்துள்ளோர்களின் வீடுகளிற்கு சென்று நாம் ஏன் உளவியல் ஆலோசனைகளை வழங்க கூடாது. கதைப்பதற்கு எல்லாம் நல்லாகத் தான் இருக்கும். செயற்படுத்த எத்தனை பேர் தயார்? நாங்களே ஒரு வலை அமைப்பை அமைத்து அதனூட்டாக ஏன் செய்ய முடியாது? எங்களை வைத்து யாரும் ரும் இங்கே அரசியல் பண்ண வேண்டாம்.

விடியல் said...

Bavan said.
இலங்கையில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனும் ஏதோ ஒரு வகையில் ஒரு உதவியைச் செய்திருப்போம், செய்திருக்கிறோம். செய்தோம்.

ஆனால் அதையெல்லாம் சொல்லிக்காட்டி நாங்களும் இந்திய அரசியல்வாதிகள் போல ஆக விரும்பவில்லை. வெளிநாடுகளில் இன்டர்நெட்டில் செய்தியைப்படித்து பரிதாபம் மட்டும் படத்தெரிந்தவர்களைக்காட்டிலும் நாங்கள் ஒரு வேளை உணவையாவது அவர்களுக்குக் கொடுத்தோம் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்வோம்.//

இலங்கையில் உள்ள அனைத்து தமிழ் குடிமக்களும் ஒன்று சேர்ந்து செய்திருந்தால் தமிழனுக்கு இந்த நில்மை வந்திருக்காது. ஒரு வேளை உணவை நீங்கள் எத்தனை பேருக்கு வழங்கியிருக்கிறீர்கள்? போரினால் பாதிக்கப்பட்ட மக்களில் எத்தனை பேரை சந்தித்து கலந்துரையாடியுள்ளீர்கள். உங்கள் மனச் சாட்சியைத் தொட்டு கேளுங்கள். தமிழர்கள் எல்லோரும் சுயநலவாதிகளாகி தங்கள் வேலையை பார்த்தபடி ஓடியதால் தான் தமிழனுக்கு இன்று இந்த நிலமை வந்தது.
இன்றும் கைகால்களை இழந்து அவற்றை சத்திரசிகிச்சை மூலம் மீளமைக்க பணமின்றி பல பேர் அவலபடுகின்றார்கள். முடிந்தால் அவர்களை சந்தித்து அவர்களில் ஒருவருக்காவது உங்களால் இயன்ற உதவியினை செய்யப் பாருங்கள். அந்த உதவியினை செய்து விட்டு இங்கே வந்து நியாயப்படுத்துங்கள் ஏற்று கொள்கிறேன்.

இலங்கையில் உதவி செய்ததாக சொல்லும் உங்களின் கருத்து, இறந்த புனிதர்களின் மீது மண் அள்ளி திட்டி அவர்களது குழியை மூடுவதற்கு சமமான சமனானதாகும்.
புலம் பெயர் தமிழர்கள் பண உதவி செய்தார்கள். போராட்டங்கள் செய்தார்கள். ஜெயசிக்குறு போரின் போது ஏவப்பட்ட எறிகணைகள் யாவும் புலம் பெயர் தமிழர்களின் வியர்வையின் பலன்கள் என்று அண்ணை ஒரு தடவை சொல்லியிருந்தார். புலம் பெயர் தமிழர்களின் பணிகள் பல வெளித் தெரியாதவை. அவர்களை பற்றி நன்றாக அறியாமல் நீங்கள் கூறும் கருத்துக்களில் எனக்கு உடன் பாடில்லை.

புலம் பெயர் தமிழர்கள் 1996ஆம் ஆண்டு கப்பல் வசதிகள் ஏதுமின்றி பாலா அண்ணா மீன்பிடி ரோலர் மூலம் தாய்லாந்து சென்று பிரித்தானியா போக உதவி செய்தவர்கள்.
போராட்டத்தின் போது நிதி, ஆயுத பங்களிப்பு செய்தவர்கள். தமிழர்களின் போராட்டத்தை உலகறியச் செய்தவர்கள். யோகி அண்ணா கூட நான் வன்னியில் இருந்த போது, 2008ம் ஆண்டின் இறுதியில் ஒரு விடயத்தை சொல்லியிருந்தார்.
புலம் பெயர் தமிழர்கள் வீதிகளில் இறங்கி இப்போது போராடுவது போன்று நாங்கள் தமிழீழத்தின் பெரும்பான்மையான பகுதிகளை தக்க வைத்திருந்த போது(2002ம்) ஆண்டில் தனியரசு போராட்டத்தை நடாத்தியிருந்தால் இன்றைக்கு ஏதோ ஒரு பலாபலன் கிடைத்திருக்கும் என்று.
ஆகவே உங்களின் கூற்று அரசியல் தெரியாத சிறுபிள்ளை தனமான கூற்று. இலங்கை அரசியலை ஆழமாக அறியுங்கள். அதன் பின்னர் உங்களின் பணிகளை செய்யுங்கள்.

நான் இப்போது வவுனியாவில் வேப்பங்குளத்தில் தான் இருக்கிறேன். நான் உங்களுடன் பணியாற்றத் தயார். நீங்கள் என்னோடு பணியாற்றத் தயார? சும்மா ஆளுக்கு ஆள் தேவையற்ற விதத்தில் எழுதுவதை விடுத்து செயலில் இறங்குங்கள். போரினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆலோசனை வழங்குங்கள். வாருங்கள் தோழர்களே.

விடியல் said...

Bavan said.
இலங்கையில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனும் ஏதோ ஒரு வகையில் ஒரு உதவியைச் செய்திருப்போம், செய்திருக்கிறோம். செய்தோம்.

ஆனால் அதையெல்லாம் சொல்லிக்காட்டி நாங்களும் இந்திய அரசியல்வாதிகள் போல ஆக விரும்பவில்லை. வெளிநாடுகளில் இன்டர்நெட்டில் செய்தியைப்படித்து பரிதாபம் மட்டும் படத்தெரிந்தவர்களைக்காட்டிலும் நாங்கள் ஒரு வேளை உணவையாவது அவர்களுக்குக் கொடுத்தோம் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்வோம்.//

இலங்கையில் உள்ள அனைத்து தமிழ் குடிமக்களும் ஒன்று சேர்ந்து செய்திருந்தால் தமிழனுக்கு இந்த நில்மை வந்திருக்காது. ஒரு வேளை உணவை நீங்கள் எத்தனை பேருக்கு வழங்கியிருக்கிறீர்கள்? போரினால் பாதிக்கப்பட்ட மக்களில் எத்தனை பேரை சந்தித்து கலந்துரையாடியுள்ளீர்கள். உங்கள் மனச் சாட்சியைத் தொட்டு கேளுங்கள். தமிழர்கள் எல்லோரும் சுயநலவாதிகளாகி தங்கள் வேலையை பார்த்தபடி ஓடியதால் தான் தமிழனுக்கு இன்று இந்த நிலமை வந்தது.
இன்றும் கைகால்களை இழந்து அவற்றை சத்திரசிகிச்சை மூலம் மீளமைக்க பணமின்றி பல பேர் அவலபடுகின்றார்கள். முடிந்தால் அவர்களை சந்தித்து அவர்களில் ஒருவருக்காவது உங்களால் இயன்ற உதவியினை செய்யப் பாருங்கள். அந்த உதவியினை செய்து விட்டு இங்கே வந்து நியாயப்படுத்துங்கள் ஏற்று கொள்கிறேன்.

இலங்கையில் உதவி செய்ததாக சொல்லும் உங்களின் கருத்து, இறந்த புனிதர்களின் மீது மண் அள்ளி திட்டி அவர்களது குழியை மூடுவதற்கு சமமான சமனானதாகும்.
புலம் பெயர் தமிழர்கள் பண உதவி செய்தார்கள். போராட்டங்கள் செய்தார்கள். ஜெயசிக்குறு போரின் போது ஏவப்பட்ட எறிகணைகள் யாவும் புலம் பெயர் தமிழர்களின் வியர்வையின் பலன்கள் என்று அண்ணை ஒரு தடவை சொல்லியிருந்தார். புலம் பெயர் தமிழர்களின் பணிகள் பல வெளித் தெரியாதவை. அவர்களை பற்றி நன்றாக அறியாமல் நீங்கள் கூறும் கருத்துக்களில் எனக்கு உடன் பாடில்லை.

புலம் பெயர் தமிழர்கள் 1996ஆம் ஆண்டு கப்பல் வசதிகள் ஏதுமின்றி பாலா அண்ணா மீன்பிடி ரோலர் மூலம் தாய்லாந்து சென்று பிரித்தானியா போக உதவி செய்தவர்கள்.
போராட்டத்தின் போது நிதி, ஆயுத பங்களிப்பு செய்தவர்கள். தமிழர்களின் போராட்டத்தை உலகறியச் செய்தவர்கள். யோகி அண்ணா கூட நான் வன்னியில் இருந்த போது, 2008ம் ஆண்டின் இறுதியில் ஒரு விடயத்தை சொல்லியிருந்தார்.
புலம் பெயர் தமிழர்கள் வீதிகளில் இறங்கி இப்போது போராடுவது போன்று நாங்கள் தமிழீழத்தின் பெரும்பான்மையான பகுதிகளை தக்க வைத்திருந்த போது(2002ம்) ஆண்டில் தனியரசு போராட்டத்தை நடாத்தியிருந்தால் இன்றைக்கு ஏதோ ஒரு பலாபலன் கிடைத்திருக்கும் என்று.
ஆகவே உங்களின் கூற்று அரசியல் தெரியாத சிறுபிள்ளை தனமான கூற்று. இலங்கை அரசியலை ஆழமாக அறியுங்கள். அதன் பின்னர் உங்களின் பணிகளை செய்யுங்கள்.

நான் இப்போது வவுனியாவில் வேப்பங்குளத்தில் தான் இருக்கிறேன். நான் உங்களுடன் பணியாற்றத் தயார். நீங்கள் என்னோடு பணியாற்றத் தயார? சும்மா ஆளுக்கு ஆள் தேவையற்ற விதத்தில் எழுதுவதை விடுத்து செயலில் இறங்குங்கள். போரினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆலோசனை வழங்குங்கள். வாருங்கள் தோழர்களே.

விடியல் said...

இலங்கையில் நாங்கள் முகாம்களில் அழுந்தும் போது நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை உங்களை நோக்கி நீங்களே கேளுங்கள். பதில் புரியும்.
ஏதோ வகையில் உதவிகள் செய்கிறீர்கள் என்று வாய் வீரம் காட்ட வேண்டாம். உங்களை பற்றி எனக்கு ஏதும் தெரியாது. ஆதலால் இது பற்றி கதைக்க அருகதையற்றவன் நான். எனினும் நான் இங்கே ஒரு போரினால் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை தருகிறேன். பிறர் மூலம் உதவ வேண்டாமே. நீங்களே நேரடியாகவே உதவலாமே? இதோ அவர்களின் விபரங்கள்.

விடியல் said...

எல்லாவற்றையும் இழந்து தங்கள் உயிர்களையும் மிஞ்சிய கல்வியையும் நம்பி புனர்வாழ்வு முகாம்களிலிருந்து வெளிவந்து கற்கைக்குச் சென்றுள்ள 30 மாணவர்களுக்கான உதவிகளை நேசக்கரம் உலகத்தமிழர்களிடம் கோருகிறது. இந்த மாணவர்கள் உடலாலும் மனதாலும் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இவர்களது குறிப்பிட்ட காலக்கற்கைக்கான உதவிகளை வழங்குமிடத்து அவர்களது எதிர்காலத்தை ஒளிபெறச் செய்யலாம்.

ஒரு மாணவருக்கு இலங்கைரூபாய் ஐயாயிரம் மாதாந்தம் தேவைப்படுகிறது.

உதவி செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ளுங்கள். மாணவர்களுடைய விபரங்களைத் தந்துதவுவோம். நீங்கள் நேரடியாகவே மாணவர்களுடன் தொடர்புகளைப் பேணி உதவிகளை வழங்கலாம்.

உதவிகோரும் 30 மாணவர்களின் விபரங்கள்

1) நிசாந்தினி கனகரத்தினம்
கலைப்பிரிவு

2)கந்தையா பரமேஸ்வரன்
முகாமைத்துவம் 1ம் வருடம்

3) தனபாலசிங்கம் பிரதீப்
பெளதீக விஞ்ஞானம்

4)ஆறுமுகம் அமலன்
மீன்பிடியியல் விஞ்ஞானம்

5) கணேசலிங்கம் வினோ
சமூகவியல் 1ம் வருடம்

6) சீவரத்தினம் தாரகன்
கலைப்பீடம் 1ம் வருடம்

7) நடராசா கிரிநாத்
மருத்துவம் 1ம் வருடம்

8) செல்வராசா கயோதீபன்
கலைப்பிரிவு 1ம் வருடம்

9) அன்ரன் பெனடிக்ற் யூட்குமார்
முகாமைத்துவம் 2ம் வருடம்

10) கந்தசாமி சாரங்கன்
விவசாயம் 1ம் வருடம்

11)கனகலிங்கம் விக்னா
கலைப்பிரிவு 1ம் வருடம்
12) கந்தையா சிறீகாந்
கலைப்பிரிவு 1ம் வருடம்

13) செல்லன் கீரன் (ஜனாதிபதியிடம் பரிசு பெற்றவர் 4ஏ கிடைத்தது)
முகாமைத்துவம் 2ம் வருடம்

14) நவரத்தினம் தருசன்
கலைப்பீடம் 2ம் வருடம்

15) கந்தையா பரமேஸ்வரன்
முகாமைத்துவம் 1ம் வருடம்

16) சுகுமாரன் கயிலாயபிள்ளை
2ம் வருடம் முகாமைத்துவம்.

17) பாலசிங்கம் பாலகுமாரன்
கற்கும் வருடம் – முதலாம் வருடம் (இன்னும் 3வருடங்கள் கற்க வேண்டும்)
முகாமைத்துவம்.

18)பெயர் - மாயன் சுகந்தன்
கற்கும் வருடம் – இரண்டாம் வருடம்
விளையாட்டு விஞ்ஞானம்.

19)பெயர் - கனகரத்தினம் மயூரன்
கற்கும் வருடம் – 2ம் வருடம்.
விளையாட்டு விஞ்ஞானம்.

20)பெயர் - குமாரசாமி குகன்
கற்கும் வருடம் – முதலாம் வருடம் (இன்னும் 3வருடம் கற்க வேண்டும்)
வணிகத்துறை.

21) சுலக்ஸன் தயாபரன்
முதலாம் வருடம் , உயிரியல் விஞ்ஞானம்

22) நிசாந்தன் கமலநாதன்
கலைப்பிரிவு 1ம் வருடம்

23) கமலேஸ்வரன் பஞ்சநாதன்
கலைப்பிரிவு 1ம் வருடம்

24) நவரத்தினம் நவநந்தன்
முகாமைத்துவம் முதலாம் வருடம்

25) றாயேஸ் துரைச்சாமி
2ம் வருடம் கலைப்பிரிவு

26) சுரேந்திரன் சுந்தரலிங்கம்
1ம் வருடம் விஞ்ஞானம்

27) உதயகுமார் பழனியாண்டி
1ம் வருடம் முகாமைத்துவம்

28) ரமேஷ்குமார் காளிமுத்து
கலைப்பீடம் 2ம் வருடம்

29) சிவராசா வேலுச்சாமி
கலைப்பீடம் 1ம் வருடம்

30) மகேந்திரம் சுப்பிரமணியம்
கலைப்பிரிவு 2ம் வருடம்

விடியல் said...

11வயதில் புலியாகியவன் 17வயதில் தன்னிரு கண்களையும் ஒரு கையையும் இழந்து போனான். இன்று 31 வயது இவனுக்கு. வெற்றிகள் தந்து எங்களை வீரத்தின் அடையாளங்களாக்கிய இவர்கள் இன்று ஒரு நேர உணவுக்கே அல்லாடுகி்றார்கள். இரு கண்களையும் ஒரு கையையும் இழந்து இன்று உதவிகள் எதுவுமற்ற நிலையிலும் தன்னம்பிக்கையுடன் விவாசயம் செய்ய ஒரு தண்ணீர் இயந்திரத்தைக் கேட்கிறான். இவனது குரலைக் கேளுங்கள்.....யாராவது கருணை மனம் படைத்தோர் இவனுக்குக் கைகொடுங்கள்.

விடியல் said...

http://tamilnews24.com/joomla/tamilnews24/parthipan/nesakkaram/nesakkaram/index.php?lang=ta



இத்தகைய அமைப்புக்கள் ஊடாக உதவினால் உங்களின் பணத்தினை வசூலித்துவிடுவார்கள், சுருட்டி விடுவார்கல் என்று பயமிருந்தால் நேரடியாக உதவுகள்.

விடியல் said...

http://tamilnews24.com/joomla/tamilnews24/parthipan/nesakkaram/nesakkaram/index.php?lang=ta



இத்தகைய அமைப்புக்கள் ஊடாக உதவினால் உங்களின் பணத்தினை வசூலித்துவிடுவார்கள், சுருட்டி விடுவார்கல் என்று பயமிருந்தால் நேரடியாக உதவுகள்.

Subankan said...

@ Bbottle Opener

என்னை மின்ன‍ஞ்சலூடாகத் தொடர்புகொள்ளுங்கள்

Anonymous said...

முகிலன் அண்ணா, தினவெடுத்து திரியும் ஒரு சிலரின் பின்னூட்டங்களை நீங்கள் அனுமதித்ததே தவறு. தாங்கள் மட்டும் தான் இலங்கையில் இருப்பது போல இவர்கள் பினாத்துகிறார்கள். இவர்களது கருத்துக்களின் மூலம் தாங்கள் மேதாவிகள் என்று காட்ட நினைக்கிறார்கள்.

தினவெடுத்த இவர்களின் ஒரே தொழில் இலங்கை தமிழ்ர்களிடையேயும் இந்திய தமிழ்ர்களிற்கும் இடையே சண்டையை மூட்டுவதுவே. இரண்டு மூன்று நாட்களாக அநேக இலங்கைப் பதிவர்களுடைய வலைத் தளங்களையும் வாசித்து விட்டே வருகிறேன். இவர்களுக்குள் கொழும்பான், வெளி நாட்டான் என்று சண்டை மூட்டியவர்களில் ஒருவர் இங்கும் சாமியாடுகிறார். இவர்களை எல்லாம் உள்ளே விடாதீர்கள். இலங்கையில் இருக்கும் ஒரே காரணத்துக்காக தமிழ் மக்களுக்காக பாடுபடுவது போல காட்டும் போலிகளை உள்ளே விடாதீர்கள்.

எனது உறவினர்களும் வன்னியில் இருந்து முகாம்களில் இருந்து வெளியே வந்திருக்கிறார்கள் சிலர். சிலர் இன்னும் அங்கேயே இருக்கிறார்கள். எங்களுக்கும் வன்னி நிலைமை தெரியும். ஏன் உறவுகளை இன்னும் தேடிக்கொண்டிருக்கும் எங்களுக்குத் தான் இந்த போலிகளை விட வலி அதிகம்.

உள்ளே புகுந்து அசிங்கம் செய்யும் நாய்களை விரட்டுவீர்களா இல்லை இன்னும் உள்ளே விட்டு அசிங்கம் செய்ய விடுவீர்களா. அடித்து துரத்துங்கள்.

வெறி நாய்களைக் கொல்வது சமூகத்திற்கு நல்லது.

Anonymous said...

இந்திய தமிழர்களை குறை சொல்ல எந்த தெரு நாய்களுக்கும் அருகதை இல்லை. எங்களுக்காக நெருப்பில் எரிந்து செத்தவர்கள் அவர்களைச் சேர்ந்தவர்கள். அவர்களை தூக்கி தலையில் வைத்து ஆட வேண்டாம். அவமதிக்காதீர்கள். இவர்கள் மாதிரியானவர்கள் இருப்பதால் தான் தமிழனுக்கு என்றுமே விடிவில்லை.

Unknown said...

//அதுதான் சொல்லிவிட்டோமே, இங்குள்ள நிலைமைகள் உங்களுக்குத் தெரியாது, சொன்னாலும் புரிந்துகொள்ள முடியாது என்று. முகாம்களுக்குள் எதிர்க்கட்சிக்கே அனுமதியில்லாதபோது தனிநபர்கள் செல்வது எப்படி?//

இந்த நிலையை மாற்றத்தான் சுபாங்கன், பொருளாத ரீதியாக இலங்கையைத் தனிமைப் படுத்தும் போராட்டத்தை துவக்கியிருக்கிறார்கள். உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்கள் கூட அருகில் நெருங்க முடியாத இந்த அவலத்தை இலங்கை அரசுக்குப் பொருளாதார நெருக்கடி தருவதன் மூலமே மாற்ற முடியும். சிங்கள அரசை சிங்களர்களையே எதிர்க்க வைக்க வேண்டுமென்றால் அவர்களுக்குப் பொருளாதர சிக்கல் வர வேண்டும். தமிழர்கள் பசியால் சாவதைப் பற்றி அவன் கவலைப் படாமல் இருக்கிறான். ஆனால் சிங்களவன் செத்தால் கண்டிப்பாக அவன் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள் இந்தப் போராட்டத்தில் இருக்கும் நியாயத்தை.

நான் சில நாட்களுக்கு முன்னால் எழுதிய ஒரு கிரிக்கெட் பதிவில் இலங்கைப் பதிவர்கள் என்ற பொதுப் பதத்தை உபயோகித்ததற்காக என் மீது அத்தனை பேரும் பாய்ந்தனர். அவர்கள் சொன்னது நியாயமாக இருந்தததனால் அந்தப் பதத்தை மாற்றினேன். பவனின் பதிவும் போராடும் எல்லோரையும் அசிங்கப் படுத்தியது. நான் அதைச் சொல்லும்போது ஒரு மன்னிப்பு கேட்டுவிட்டு பொதுவாக அனைவரையும் எதிர்க்கவில்லை என்று அந்தப் பதிவிலேயே சேர்த்திருந்தால் இந்த இரு பதிவுகளுக்கும் வேலையில்லாமல் இருந்திருக்கும். ஆனால் இதுவும் நன்மைக்கே.

Unknown said...

அனாமிகா துவாரகன்..

வார்த்தைகளில் நிதானம் வேண்டும், உங்கள் கருத்துக்களைச் சொல்லும்போது. இந்தியத் தமிழ் உறவுகளைக் குறை சொல்ல ஒவ்வொரு இலங்கைத் தமிழனுக்கும் உரிமை இருக்கிறது. அதற்குப் பதில் சொல்கிற கடமை அவர்களுக்கு இருக்கிறது. அதை விடுத்து தெருநாய் சொறிநாய் வார்த்தைப் பிரயோகங்கள் வேண்டாம். பவன், கனககோபி, சுபாங்கன் போன்றோரின் கருத்துக்களில் இருக்கிற குறைகளைச் சுட்டிக்காட்டுங்கள். அதற்காக இப்படியான திட்டுக்கள் வேண்டாமே!! எரிந்து செத்த முத்துக்குமாரன் இருந்த அதே தமிழ்நாட்டில்தான் அவன் உடலை வைத்து கேவலமான அரசியல் பண்ணியவர்களும் இருக்கிறார்கள். முடியுமானால் இயக்குனர் ராம் இதுபற்றிக் கொடுத்த வாக்குமூலம் (காட்சி என்கிற வலைப்பதிவில்) இருக்கிறது. படியுங்கள். அவர்கள்தான் தங்களைத் தமிழுணர்வாளர்களாகக் காட்டிக்கொள்கிறார்கள் என்பதுதான் என்னுடைய குற்றச்சாட்டாக இருக்கமுடியும். முக்கியமாக வை.கோ, சீமான் போன்றவர்கள் கொள்கைப்பிடிப்பு எதுவும் இல்லாமல் தமிழ் உணர்வை முன்னிறுத்தி செய்யும் அரசியலைக் கண்டிக்கிறேன்.

முகிலன், வானம்பாடிகள் பாலாவிடம் ஒரு சின்னக் கேள்வி:
எங்களிடம் தமிழகப் படம் ஒன்றைப் புறக்கணிக்கிற அளவில் யாருக்கும் தமிழ் உணர்வு இல்லை. காரணங்கள் அடக்கி ஒடுக்கித் தமிழ் உணர்வு ஊட்டப்பட்டதே ஒழிய, உண்மையாக ஊட்டப்படவில்லை. இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் மெல்ல மெல்ல அந்த உணர்வு அழிக்கப்பட்டது. போரின் பின்னர் எந்தவிதமான போராட்டமும் வேண்டாம் எங்களை வாழவிடுங்கள் என்கிற நிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள். படத்தைப் புறக்கணிச்சு என்ன செய்வது என்கிற மனநிலை வந்துவிட்டது. இந்த மனநிலையை நான் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறேன். அதே சமயம் எங்களைப் புறக்கணிக்கச் சொல்லாமல், தமிழனைக் கொன்று குவித்த இலங்கை, தமிழ்ப்படங்களைப் புறக்கணிக்கத் தெரியாத புலத்து, புலம்பெயர் ஈழத்தமிழர்கள் இவர்களுக்கு எல்லாம் பாடம் புகட்டும்விதமாக, ஈழத்தோடு தொடர்புபட்ட மக்கள் வாழ்கிற எந்த இடத்திலும் ‘தமிழக சினிமாப்’ படங்களைத் திரையிடக்கூடாது, திரையிட மாட்டோம் என்று இந்த உணர்வாளர்கள் போராடுவார்களா? அசினுக்குத் தடை, பிசினுக்குத் தடை, நாளைக்கே பிரபாகரன் படையோடு வருவார், ஆய்தக்கிடங்கை நாங்களே எரித்தோம் என்றெல்லாம் கத்துவதைவிடுத்து சீமான் & கோ இப்படி ஏதாவது உருப்படியாகச் செய்யலாமே???? செய்ய மாட்டார்கள்தானே. காரணம், இந்தியா சிங்கப்பூர் மலேஷியா தவிர்ந்த நாடுகளில் எங்களை நம்பித்தான் அவர்களின் வியாபாரம். IPL போட்டியும், IIFA விழாவும்தான் இலங்கைப் பிரச்சினையில் தீர்வு விஷயத்தில் முன்னிலை வகிப்பதுபோல் வாதாடிக்கொண்டிருக்கிற அத்துணை பேருக்கும் என்னுடைய கண்டனங்கள்.

Anonymous said...

@ கிருத்திகன்,
அவன் இதைச் செய்தான் இவன் இதைச் செய்தான் என்று ஆளுக்காள் குறை சொல்வதை விடுங்கள். செத்துப் போனது முத்துக்குமரன். அதை அரசியலாக்கிய அரசியல்வாதியைப் பற்றி பேசுவதை நிறுத்துங்கள். செத்தவன் தேசத்து மக்களை அவமானப்படுத்தாதீர்கள். தெருவில் இறங்கி போராடியவர்களை அவமானப்படுத்தாதீர்கள். தமிழன் என்ற உணர்வில் கலந்தவர்களை மூடிக்கொண்டு போ என்று சொல்ல நீங்கள் யார். இலங்கையில் பிறந்த ஒரே காரணத்துக்காக நீங்கள் சொல்வது தான் சரி என்றில்லை.

இங்கு பேசிய சோ கோல்ட் இலங்கை மைந்தர்களில் எத்தனை பேரின் உறவினர்கள் முகாம்களில் இருக்கிறார்கள் என்று முதலில் சொல்லுங்கள். புத்திசாலிகள் என்று அணில் காட்டுகிறீர்களா? வேலையற்று விதண்டாவதம் கதைத்து உதவி செய்ய நினைக்கும் நாலு பேரையும் துரத்தாதீர்கள்.

மக்களை வாழ விடுங்கள் என்று முழங்குகிறீர்களே. அந்த மக்களில் எத்தனை பேரின் கண்ணீரைத் துடைக்க நீங்க முதலில் ரெடியாக இருக்கிறீர்கள். சொல்லுங்கள். லிஸ்ட்டை எடுத்து நானே தருகிறேன்.

ஜோ என்ற பதிவர் தன் நண்பர்களுடம் அகதி முகாமிற்குப் போய் உதவுகிறார். இந்தியனுக்கு என்ன தலை எழுத்து. அவனுக்கே சொந்த வீடு இல்லை. சகோதரிகளின் திருமணம் என்று எத்தனையோ பொறுப்புகள் இருக்க தன்னால் முடிந்ததைச் செய்கிறான். தமிழன் என்ற ஒரே காரணத்துக்காக எதற்காக இந்தியாவில் இருக்கும் அகதிகளுக்கு உதவ வேண்டும்.

இலங்கைப் பதிவர்களாக இருந்து கொண்டு, என் மக்கள் என் தேசம் என் புடலங்காய் என்று முழங்கும் உங்களில் எத்தனை பேர் ஒரு பிடி சோற்றை அள்ளி அந்த மக்களுக்கு கொடுத்தீர்கள். யாழ்ப்பாணத்துக்குப் போய் படம் எடுத்து போட்டது மட்டும் தான் நீங்கள் செய்தது.

கதைக்க எந்த நாயுக்கும் அருகதை இல்லைத் தான். கதைக்க வந்திட்டார். தன் மக்கள், தன் தேசம் தன் புடலங்காய். மண்ணாங்கட்டி.

முகிலன் அண்ணா. எல்லாவற்றையும் டிலீட் பண்ணுங்கள். இந்த புடலங்காய்களுக்கு இரண்டு தேச மக்களுக்கும் பிரச்சினை அதிகம் ஆவதை நான் விரும்பவில்லை.

Unknown said...

அனாமிகா துவாரகன்...
இங்கு எங்கேயும் நான் சொல்வது சரி என்றோ, யாரையும் மூடிக்கொண்டு போ என்றோ சொல்லவில்லை என்பது முதல்விடயம். அகதி முகாம்களுக்குப் போய் படமெடுத்துப் போட்ட யாரோ ஒருவர்மீது உங்களுக்கு இருக்கிற கோபம் காரணமாக, ஒரு பிடிக்கு மேல் சோறு போட்ட பலரையும் சேர்த்து அருகதை இல்லை என்று திட்டுவது தவறு. முத்துக்குமாரன் தேசத்து மக்களை யாரும் அவமானப்படுத்தவில்லை. இன்றைக்கும் அவர்கள் எங்களுக்கு ஏதாவது செய்வார்கள் என்று நம்பித்தான். இங்கு பேசியவர்களில் எத்தனை பேரின் உறவினர்கள் முகாம்களில் இருக்கிறார்கள் என்று தெரியாது. ஆனால் முகாம்களில் சிக்கியிருந்த என்னுடைய உறவுக்குடும்பங்களில் 9வதும் இறுதியுமான குடும்பம் சென்ற மே மாதம் கிளிநொச்சி திரும்பும்வரை எனக்கும் முகாம்களில் உறவுகள் இருந்தார்கள். நான் தூக்கிக் கொஞ்சிய என் பெறாமகன் குண்டுபட்டு செத்தபோது கிடைத்த நேரத்தில் குழிதோண்டிப் புதைத்தது பற்றி என்னுடைய பதினைந்து வயதேயான பெறாமகள் முகாமிலிருந்து எழுதிய கடிதத்தை என்னுடைய தகப்பனார் எனக்கு வாசித்துக் காட்டியிருக்கிறார். ஆகவே முகாம்களில் அல்லல்பட்ட உறவுகள் பற்றி ஒரு துளியாவது எனக்கும் தெரியும். அந்த உறவுகளைக் கடந்தும் நான் உதவி செய்திருக்கிறேன், வெளிநாட்டில் பிச்சை எடுக்கிற நிலையிலும். ஆகவே இங்கே நான் விதண்டாவாதம் செய்துகொண்டிருக்கவில்லை.

ஜோ இந்திய அகதி முகாம் ஒன்றில் நேரடியாகப் போய் உதவுவதற்குத் தலை வணங்குகிறேன். என்னுடைய கோபம் ஜோ மீதோ, முகிலன் மீதோ அல்ல. ஏனென்றால் நானும், ஜோவும், முகிலனும் வெறும் சாமான்யர்கள். எங்கள் சக்திக்கு மீறியோ உட்பட்டோ உதவி செய்யத் தயாராய் இருக்கிறோம். நான் கண்டிப்பது இந்தப் பிரச்சினையை வைத்து அரசியல் பண்ணுபவர்களிடம் உண்மையான உணர்வு இல்லை என்பதுதான். அதைவிட இந்தியாவில் நேரடியாக அகதி முகாமில் உதவுவதையும், இலங்கையில் நேரடியாக அகதி முகாமில் உதவுவதையும் ஒன்றாகப் பார்க்கக்கூடாது.

என்னைப் போன்ற புடலங்காய்கள் காரணமாக இந்திய இலங்கை மக்களுக்கு இடையே பிரச்சினை வரப்போவதில்லை அனாமிகா. 1987ல் IPKF வந்த போது எங்கள் சகோதரர்கள் வருகிறார்கள், இனி எங்கள் பிரச்சினை தீர்ந்தது என்று கொண்டாடிய மக்களை, படுகொலைகள், காணாமல் போதல்கள், கற்பழிப்புகள் என்று சிதைத்த போது சிதையாத உறவு, அதற்குப் பதிலாக இராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது/ கொல்லப்பட்டதாகச் சொல்லப்பட்டபோது சிதையாத உறவு, இந்த அழுகின புடலங்காயால் சிதையாது அனாமிகா.

செத்துப்போன உறவுகளுக்காக எங்களால் முடிந்த ஒரு சொட்டுக் கண்ணீர், ஏதோ எங்களின் பிச்சைக்கார வாழ்க்கையில் மிச்சம் பிடித்து அமைப்பு ரீதியாகச் செய்யக்கூடிய உதவிகள் என்று நாங்களும் செய்கிறதற்கு நீங்கள் தந்த ‘நாய்கள்’ பட்டம் பொருத்தமாக இருக்கிறது. தலைவணங்குகிறேன்.

Unknown said...

இதெல்லாவற்றையும் விட இன்னொன்றையும் சொல்லிப்போக விரும்புகிறேன் அனாமிகா துவாரகன்...

முகிலனின் தளத்திலும், பவனின் தளத்திலும் முகிலன், பவன், கனககோபி மற்றும் இன்னபிற பதிவர்களுக்கிடையே தொடர்கிற இந்த வாதங்களுக்கு அவர்களே ஒப்புக்கொள்ளாவிட்டாலும் முகிலன் கிரிக்கெட் பற்றி எழுதிய ஒரு பதிவால் வந்த புகைச்சலும், அதன் காரணமாக மேலெழுந்திருக்கிற ஈகோவும் இந்தப் பதிவுகளில் இருக்கிற வாதப் பொருளைவிட ஒரு பெரிய காரணம் என்கிற வருத்தமான உண்மையையும் சொல்லிப்போகவேண்டியிருக்கிறது

Unknown said...

முகிலன் ஏலவே காரணம் சொல்லியிருக்கிறார். அந்தப் பின்னூட்டம் கண்ணில் படவில்லை. மன்னிக்க

Anonymous said...

ஐப்பாவின் தோல்வியால் தான் ஏதோ பொருளாதாரத் தடை மாதிரி இவர்கள் பேசும் போது எனக்கு அடி வயிறு பற்றி எறிகிறது. ஐப்பாவை கொண்டு வந்த ஒரே காரணம் போர்க் குற்றங்களை மறைப்பதற்கு. அதன் மூலம் கிடைக்கும் இலாபம் எல்லாம் ராஜபக்ஷே சகோதரகளுடைய பொக்கற்றுகளை நிரப்பப் பயன்படுமே தவிர எங்கள் பிரச்சினை தீரப்போவதில்லை.

பொருளாதாரத் தடை இருந்தாலோ இல்லையோ தமிழனுக்கு ஒரே பாதிப்புத் தான். சிங்களவனிற்கு ராஜபக்ஷ்வின் மீது வெறுப்பிருந்தாலும் அவனுக்கு பாதிப்படையாத வரை அவன் போராடப் போவதில்லை. இங்கு நான் குறிப்பிட்டது ஆயுத போராட்டம் அல்ல.

பொருளாதர தடை வந்தால் அரசாங்கம் ஒரு வழிக்கு வர வேண்டும். எங்களுக்கு அதிக பாதிப்பு என்று ஓலமிடுவது முட்டாள் தனம். இதை விட பாதிப்பு வரப்போவதுமில்லை. வந்த பாதிப்பு மாறப்போவதுமில்லை.

எனக்கு என் உறவுகள் முகாமில் இருக்கிறார்கள். நான் தூக்கி வளர்ந்த எனது மாமியின் 5 வயது சின்னப் பெடியனும் சாக அவனை புதைக்கக் கூட விடாமல் ஆமி இவர்களை துரத்தியதும் நடந்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமோசம் இல்லை. ஏதோ இந்தியர்களால் தான் ஐப்பா தோல்வி அதனால் தான் நாங்கள் இன்னும் கஷ்டப்படப்போகிறோம் என்று ஓலமிடுவதைக் கேட்கச் சகிக்கவில்லை.

ஐப்பா வெற்றி அடைந்திருந்தால் இலங்கையின் போர்க்குற்றம் மறைக்கப்பட்டும், இரண்டும் மஹிந்த சகோதரகளின் பொக்கற்றுகள் நிரம்பி வழிந்திருக்கும்.

கற்பழித்துக் கொள்ளப்பட்ட எனது பாடசாலை தோழியின் சாவு மறைக்கப்பட்டிருக்கும். சாக்கக் கூடாத வயதில் செத்த எனது உறவினர்களின் சாவு மறைக்கப்பட்டிருக்கும்.

ஐப்பா தோல்வியால் நாட்டிற்கு பொருளாதார நஷ்டம் என்று முழங்கும் இந்த தினவெடுத்தவர்களின் கதையைக் கேட்கச்சொல்கிறீர்களா?

ஒருத்தன் மேல் உள்ள கசப்புணர்வினால், ஐப்பா வெற்றி அடைந்திருந்தால் நாடு சுபீட்சமடைந்திருக்கும் என்று உளறுவதை பார்த்துக்கொண்டிருக்கச் சொல்கிறீர்களா?

இந்திய இராணுவத்தில் இருந்த தமிழர்களால் மானம் காக்கப்பட்ட பெண்கள் இருக்கிறார்கள். இந்திய இராணுவத்தில் ஒரு பிரிவு தமிழ்ர்கள். எங்கள் பெண்கள் மானத்தை காப்பாற்றியவர்கள். இந்தியா ஆயுதம் கொடுத்தது, அங்கு இருக்கும் சாமானிய மக்கள் எங்களுக்காக குரல் கொடுத்தார்கள். அவர்களை அவமதிப்பதை நான் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

அவர்கள் பார்வையில் ராஜீவைக் கொன்றது பிழை என்றாலும் தமிழ்ர்களுக்காக வீதியில் இறங்கி போராடியவர்கள். அரசியல்வாதியைப் பற்றி இங்கே கதைக்க வேண்டாம். ஏதோ ஒரு பதிவின் கசப்புணர்வை வைத்து ஒட்டு மொத்தமாக போர்க்குற்றங்களை அம்பலப்படுத்த முயலும் மக்களை வெறுப்பேற்றாதீர்கள். அவமதிக்காதீர்கள்.

அதில் நான் உங்களுக்கு எதிரானவன் அல்ல, உங்கள் கருத்துக்கு எதிரானவன் என்ற டய்லொக் வேற.

நாட்டிற்காக எனது இரண்டு அண்ணன்மார் இறந்தார்கள். இவர்கள் யாருக்குமே சாகும் வயதில்லை. இவர்கள் சாவில் குளிர்காந்தவர்களுக்கு என்ன புடலங்காய் தேசம் தேவைப்படுகிறது.

பொருளாதாரத்தடை வரவேண்டும். போர்க்குற்றங்கள் நிருபிக்கப்படவேண்டும். மக்களுக்கு நிரந்தர தீர்வை வெளி நாடுகள் பெற்றூக் கொடுக்க வேண்டும். போர்க்குற்றங்கள் நிரூபிக்கப் படாவிட்டால் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படாது. இன்னும் இன்னும் மக்கள் கொடுமைக்குள்ளாவார்கள்.

அதைப் புரிந்து கொண்டு விதண்டாவாதம் செய்வதை நிறுத்துங்கள். போயும் போயும் பழைய காழ்ப்புணர்ச்சியில் *silly reason for god sake) இரண்டு தேச மக்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தும் ஈனர்களை தெரு நாய் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது.

Anonymous said...
This comment has been removed by the author.
Unknown said...

அதேதான் அனாமிகா..
உங்கள் உறவுகளும் செத்தார்கள் எங்கள் உறவுகளும் செத்தார்கள். நீங்களும் ஏதோ ஒரு பதிவு தந்த காழ்ப்புணர்ச்சியில் எங்களையும் சேர்த்துத் தெருநாய்கள் என்று திட்டுகிறீர்கள். இந்தியாவில் இருந்து முகிலனும் அய்யா வானம்பாடிகள் என்கிற பாலாவும் மட்டும் பதிவெழுதவில்லை. செத்த முத்துக்குமாரன் தேசத்து மக்களை அவமானம் செய்யக்கூடாது என்று கத்துகிறீர்களே, செத்த உங்கள் அண்ணன்கள் தேசத்து மக்களான எங்களை நீங்கள் எப்படித் தெருநாய்கள் என்று விளிக்கலாம்??? மற்றது IIFA மூலம் அவர்கள் எப்படிக் கவிழ்ந்து நின்றாலும் போர்க்குற்றங்கள் மறைக்கப்பட முடியாதவையே. அதைப் பெரியவிடயமாகச் சொல்பவர்களைக் கண்டித்திருக்கிறேன் ஏலவே.

அனாமிகா...
அய்யா வானம்பாடிகள், முகிலன் தவிர்ந்த பதிவர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் படித்தால் முத்துக்குமாரன் தேசத்து மக்களை அவமதிப்பவர்களின் பக்க நியாயங்களும் புலப்படும். இத்தனைக்கும் அவமதிக்காமல் விவாதம் செய்ய வந்த எனக்கே தெருநாய் பட்டம்... வலிக்கிறது

Unknown said...

///அவன் இதைச் செய்தான் இவன் இதைச் செய்தான் என்று ஆளுக்காள் குறை சொல்வதை விடுங்கள். செத்துப் போனது முத்துக்குமரன்///

இதைச் சொன்னதும் நீங்கள்தான். யாரோ யாழ்ப்பாணம் போய்ப் படமெடுத்துப் போட்டதுக்காக ஒட்டுமொத்தமாக எங்களைத் தெருநாய்கள் என்பதும் நீங்கள்தான். என்ன செய்ய

Subankan said...

அனாமிகா துவாரகன், முகாமுக்குள் இருந்த மற்றும் இந்த இனப்பிரச்சையில் உயிரிழந்தவர்கள் எனக்கும் இருக்கிறார்கள். எனது இன்றய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதற்கு அவர்களும் ஒரு காரணம். ஆனால் அவர்களை முன்வைத்து இங்கே விவாதிப்பதைவிட நீங்கள் கொடுத்த தெருநாய்ப்பட்டம் எவ்வளவோ மேல். நன்றி

Anonymous said...

//அனாமிகா துவாரகன், முகாமுக்குள் இருந்த மற்றும் இந்த இனப்பிரச்சையில் உயிரிழந்தவர்கள் எனக்கும் இருக்கிறார்கள். எனது இன்றய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதற்கு அவர்களும் ஒரு காரணம். ஆனால் அவர்களை முன்வைத்து இங்கே விவாதிப்பதைவிட நீங்கள் கொடுத்த தெருநாய்ப்பட்டம் எவ்வளவோ மேல். நன்றி//

என்ன நிலைப்பாடு சுபாங்கன்? உதவ நினைப்பவனை முட்டாள் என்று கொச்சைப் படுத்துவதா? உங்கள் கதைகளைப் பார்க்கும் போது வலிகளை உணர்ந்தவர்களாகத் தெரியவே இல்லையே. தினவெடுத்தவர்களாகவே தோன்றுகிறீர்கள். நான் பார்த்த பதிவுகளும் பின்னூட்டங்களும் வேறு ஏதோ சொல்கிறதே.

ஒருத்தனுக்கு ஆற்றும் உதவி அவனுக்கு மன உளைச்சலைக் கொடுக்காமல் இருப்பதே. உங்கள் அரிப்புக்களுக்கு என் தேசம் என் மக்கள் என் புடலங்காய் என்று சாயம் பூசாதீர்கள்.

நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா? சந்தோசப்படுங்கள். பெண் போராளிகளின் உடல்களை நிர்வாணப்படுத்திப் போட்ட சிங்களவனுக்கும் உங்களுக்கும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை சுபாங்கன். உங்களுக்கு அது கசப்பாக இருக்கலாம். ஆனால் அது தன் உண்மை.

உங்கள் அரிப்புக்களை இங்கே காட்டாதீர்கள். தயவு செய்து. இழந்தவர்களின் இழப்புக்களுக்கு ஒரு விடை தெரிய வேண்டும். அதற்காக இலங்கையில் யாருமே ஆயுதம் எடுத்தோ தெருவில் இறங்கியோ போராடத்தேவையில்லை.

இலங்கை அரசின் பொய்முகத்தைக் காட்ட நடாத்தப்பட்ட ஐப்பாவை தடுத்த இந்த மனிதர்களை அவமதிக்காதீர்கள். ஐப்பாவின் ஒப்செக்டிவ் என்ன என்பதை மறந்து நடக்காதீர்கள்.

ஒரு தெரு நாயாவது அதை உணர்ந்தால் போது.

Anonymous said...

// ஏதோ ஒரு பதிவு தந்த காழ்ப்புணர்ச்சியில் எங்களையும் சேர்த்துத் தெருநாய்கள் என்று திட்டுகிறீர்கள்.//

இது தான் உங்கள் புரிந்துணர்வா கிருத்திகன். இந்த தெரு நாய்களைப் பற்றி முகிலனின் புறக்கணிப்பு 1 வந்த போது தான் தெரியும். அதுவும் லீவு நாட்கள் என்ற படியால் கூகிளில் இவர்கள் பெயரைத் தேடிய போதே மேதாவிகளாகக் காட்டிக்கொள்ள இந்த தினவெடுத்தவர்கள் கன காலமாக முயல்வது தெரிந்தது. அது வரை இவர்களைத் தெரியாது என்பது உண்மையே. சத்தியமான வார்த்தைகள்.

//இந்தியாவில் இருந்து முகிலனும் அய்யா வானம்பாடிகள் என்கிற பாலாவும் மட்டும் பதிவெழுதவில்லை.//
இது பதிவர்களைப் பற்றியது அல்ல. உதவும் மக்களை அவமதிக்காதீர்கள். இந்த முகிலனுக்கு தெருவில் இறங்கிப் போராடுவதால் எதுவும் கிடைக்கப்போவதில்லை. அதுவே தான் பாலா அங்கிளுக்கும். அவர்கள் போராடுவது போர்க்குற்றங்களை வெளிக்கொணர்வதன் மூலம் அரசின் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவது.

ஜோ உதவுவது வேறு என்று சொல்லாதீர்கள். நீங்கள் அகதி முகாமுக்குள் போக முடியாது. ஆனால் மீள்க்குடியேறத் தொடங்கிய மக்களுக்கு இந்த என் தேச Chorus ஆட்கள் ஒரு பக்கற் பால்மா ஆவது கொடுத்தார்களா? அது கூடவா முடியாது. In fact, I got to know most of those Sri Lankan Tamil bloggers are Engineers. Cant they afford a packet of milk powder?

அரசியல்வாதிகளை இந்த விவாதங்களில் இழுக்காதீர்கள். சாமானியர்களைப் பற்றி கதைக்கிறோம்.

// செத்த முத்துக்குமாரன் தேசத்து மக்களை அவமானம் செய்யக்கூடாது என்று கத்துகிறீர்களே, செத்த உங்கள் அண்ணன்கள் தேசத்து மக்களான எங்களை நீங்கள் எப்படித் தெருநாய்கள் என்று விளிக்கலாம்???//
நான் பிறந்த மண்ணில் பிறந்தவன் தானே மாத்தையாவும் கருணாவும்.

நான் சொல்வது ஒன்றே ஒன்று தான். என் தேசம் என் புடலங்காய் என்று கோசமிட்டு நீலிக்கண்ணீர் வடிப்பைதை நிறுத்தச் சொல்லுங்கள் இந்த தெரு நாய்களிடம்.

என் அண்ணன்கள் இப்போது உயிருடன் இருந்திருந்தால் ஒருத்தனுக்கு 26 வயது இருந்திருக்கும் ஒருத்தனுக்கு 24 வயது இருந்திருக்கும்.

இந்த தெரு நாய்களைகளை மேய விட்டுவிட்டு போய்விட்டீர்களே என்று அவர்களிடம் குறை பட்டுக்கொள்கிறேன்.

// மற்றது IIFA மூலம் அவர்கள் எப்படிக் கவிழ்ந்து நின்றாலும் போர்க்குற்றங்கள் மறைக்கப்பட முடியாதவையே. அதைப் பெரியவிடயமாகச் சொல்பவர்களைக் கண்டித்திருக்கிறேன் ஏலவே.//
ரியலீ? மகா உளறல் என்றால் இது தான் கிருத்திகன். இந்த 15 மாதங்களில் என்ன நடந்தது.

ஐப்பாவின் முக்கிய நோக்கம் போர்க்குற்றங்களை மறைப்பது. அதைத் தடுத்தது பிழையா? இரண்டாவது நோக்கம் மஹிந்தவின் குடும்பம் கொழுப்பது. அதை தடுத்தது பிழையா?

இதில் என்ன வேடிக்கை என்றால் சில சிங்களவனுக்கு விளங்கியது கூட அந்த மண்ணில் பிறந்தவர்களுக்கு விளக்கவில்லை.

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

அய்யா வானம்பாடிகள், முகிலன் தவிர்ந்த பதிவர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் படித்தால் முத்துக்குமாரன் தேசத்து மக்களை அவமதிப்பவர்களின் பக்க நியாயங்களும் புலப்படும். இத்தனைக்கும் அவமதிக்காமல் விவாதம் செய்ய வந்த எனக்கே தெருநாய் பட்டம்... வலிக்கிறது//
ஒருத்தனை அவமதிப்பதற்கு கூட நியாயம் கற்பிப்பீர்களா? என்ன உளறல் இது. உங்களை தெரு நாய் என்று சொல்லவே இல்லை. இங்கே அசிங்கம் பண்ணும் மூன்று நாய்களையும் தான் தெரு நாய்கள் என்றேன்.

நீங்களாக ஏன் வந்து விழுகிறீர்கள் கிருத்திகன்.

// யாரோ யாழ்ப்பாணம் போய்ப் படமெடுத்துப் போட்டதுக்காக ஒட்டுமொத்தமாக எங்களைத் தெருநாய்கள் என்பதும் நீங்கள்தான். என்ன செய்ய//

இல்லை ஐயா இல்லை. இந்த என் தேச, என் மக்கள், என் புடலங்காய் பாட்டுக்காரர்கள் இலங்கையில் இருப்பவர்கள். இவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக பதிவு எழுத வேண்டும் என்று யாருமே கேட்கவில்லை.

கேட்பதெல்லாம், உங்களுக்காக போராடும் சாதாரண மக்களைக் கொச்சைப் படுத்தாதீர்கள். உன் நாட்டில் தானே கருணாநிதியும் பிறந்தான் என்று அவர்களைக் குறை சொல்வதை நிறுத்துங்கள். அப்படியான பிறப்புக்களை கட்டுப்படுத்தும் வித்தை எந்த மனிதனுக்கும் இல்லை.

இங்கு உள்வீட்டிற்குள் வந்து அசிங்கம் செய்யும் தெரு நாய்கள் பிறந்ததும் நான் பிறந்த மண்ணில் தான். அதே போலத் தான் அங்கும். ஆனால், உதவுபவர்களை அவமதிக்காதீர்கள். உங்களைச் செய்ய வேண்டும் என்று கூட அவர்கள் கேட்கவில்லை. ஆனால், அவர்களால் செய்ய முடிந்ததை செய்யும் போது கேவலப்படுத்தாதீர்கள் என்று சொல்கிறேன்.

தெருவில் இறங்கி போராடிய போது எங்கள் மீது கல்லெறிந்தான் இங்கே உள்ள சிங்களவன். பார்த்து சிரித்தவனில் (Stupid people என்று ) என்றவன் இலங்கைத் தமிழன். இந்த புறம்போக்குகளுக்காகவா இப்ப உயிருடன் இருந்தால் 26, 24 வயது இருந்திருக்கும் அண்ணன்களை நான் இழந்தேன்.

ஒரு லாபமும் கிடைக்காது. ஏன் கடமையும் இல்லை. ஆனாலும், எங்களுடன் தெருவில் இறங்கிப் போராடியவர்கள் இங்குள்ள சில இந்திய தமிழர்கள்.

பதிவில் மட்டும் தெருவில் இறங்கி போராடிய எங்களை எங்கள் மண்ணில் பிறந்த புறம்போக்குகள் அவமதிக்கவில்லை. பேஸ்புக், யாகூ, எம்.எஸ்.என், கூகிள் அரட்டை என்று எல்லாவற்றிலும் கூட எங்களை முட்டாள்கள் என்று எழுதி இருந்ததை நானும் படித்திருக்கிறேன். சேமித்தும் வைத்திருக்கிறேன்.

தானும் உதவி செய்ய மாட்டார்கள் .உதவ வந்தவனையும் அரசியல் செய்யாதே பொத்திக்கொண்டு போ என்கிறீர்கள். என்ன நியாயம் கிருத்திகன்.

இந்திய இராணுவ கொடுமைகளுக்கு ராஜீவைப் பழி வாங்கியது எங்கள் பக்க நியாயம். ஆனாலும், அவர்கள் தேசத்தில் அவர்கள் பிரதமரைக் கொன்றது அவர்களுக்கு அநியாயம். அதையும் மறந்து உதவும் தமிழ்க தமிழர்களைக் கொச்சைப்படுத்தாதீர்கள்.

திருப்ப திருப்ப திருமா, வைக்கோவை இழுக்க வேண்டாம். நான் கதைப்பது முகிலன், பாலா அங்கிள் போன்ற சாமானிய மக்களை.

இந்த இரண்டு மூன்று நாட்களில் நான் வாசித்த சில மேதாவிதனமான ஆக்கங்களில் ஒன்று, வேட்டைக்காரனைப் புறக்கணிக்கச் சொல்லி நடந்த போராட்டத்தைக் கொச்சைப் படுத்தியது, யாரோ ஒரு சிங்கள மொழிப் பாடகனைப் பற்றிய ஒன்று.

இந்த ஆக்கங்களால் என்ன சொல்ல வருகிறார்கள் இவர்கள்? தினவெடுத்து திரியும் இவர்களுக்கு அதை இறக்கி வைக்க வலைத்தளம் தான் கிடைத்ததா? Damn it.

Anonymous said...

முகிலன் அண்ணா, உங்கள் முகவரி வேணும். தெரு நாய்களை கதவிலேயே வைத்து விரட்டாமல் உள்ளே விட்டதற்கு உங்களுடம் பெரிய சண்டையே இருக்கு.

பதிவுலம் வந்ததும் தான் வந்தேன். என் அமைதியான சுபாவம் போயே விட்டது. சை என்று இருக்கிறது. மரியாதையா இந்த அட்ரசுக்கு மெயில் போடுங்கோ. அப்படியே அந்த கொம்ன்டை மட்டும் டிலீட் பண்ணுங்கோ.

Anonymous said...
This comment has been removed by the author.
Unknown said...

வாதாடிப் பிரயோசனமில்லை. உங்களுக்கு மெயில் அனுப்பியிருக்கிறேன் அனாமிகா. இங்கு என்னுடைய பின்னூட்டங்கள் எங்காவது முகிலனைத் தனிப்பட்ட முறையில் கொச்சைப்படுத்தியிருந்தால் சிரம்தாழ்த்தி மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்.

Unknown said...

//இதெல்லாவற்றையும் விட இன்னொன்றையும் சொல்லிப்போக விரும்புகிறேன் அனாமிகா துவாரகன்...

முகிலனின் தளத்திலும், பவனின் தளத்திலும் முகிலன், பவன், கனககோபி மற்றும் இன்னபிற பதிவர்களுக்கிடையே தொடர்கிற இந்த வாதங்களுக்கு அவர்களே ஒப்புக்கொள்ளாவிட்டாலும் முகிலன் கிரிக்கெட் பற்றி எழுதிய ஒரு பதிவால் வந்த புகைச்சலும், அதன் காரணமாக மேலெழுந்திருக்கிற ஈகோவும் இந்தப் பதிவுகளில் இருக்கிற வாதப் பொருளைவிட ஒரு பெரிய காரணம் என்கிற வருத்தமான உண்மையையும் சொல்லிப்போகவேண்டியிருக்கிறது//

கிருத்திகன்,

நான் பவனுடன் கிரிக்கெட் சம்மந்தமாக அவரது பதிவில் வாதம் செய்ததுண்டு. அதே சமயம் அவரது நல்ல பதிவுகளை நான் பாராட்டவும் தயங்கியதில்லை. இன்னமும் நான் அவரது பதிவை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறேன். கிரிக்கெட் விசயத்தில் எனக்கும் பவனுக்கும் வேறு வேறு டேஸ்ட் என்பதை நான் புரிந்து வைத்துள்ளேன். பவன் எழுதும் எல்லாப் பதிவுகளையும் அதை எழுதியது பவன் என்ற காரணத்துக்காக நான் என்றுமே எதிர்த்ததில்லை. அவர் சமீபத்தில் எழுதிய அந்தப் பதிவு இலங்கையைப் புறக்கணிக்கும் போராட்டத்தில் பங்கு கொண்டுள்ள என்னையும் சேர்த்து அவமானப்படுத்தியதால் என் ஆதங்கத்தை வெளிப்படுத்த இந்த இரு பதிவுகளை நான் வெளியிட நேர்ந்தது. ஆனால், சம்மந்தமில்லாத விசயத்தில் கருத்து வேற்றுமை இருப்பதற்காக, நான் பேசும் அத்தனை விசயங்களையும் எதிர்த்தே தீருவேன், என்று கங்கணம் கட்டிக் கொண்டு இங்கே இந்தியத் தமிழர்/இலங்கைத் தமிழருக்குள் பிரிவினை வரும் வண்ணம் பேசும் கங்கொன் கோபியையும் நீங்கள் கண்டித்திருக்கலாமே?

Unknown said...

கிருத்திகன்,

இலங்கையைத் தனிமைப் படுத்தினாலும் படுத்தாவிட்டாலும் தமிழனின் நிலை மாறப்போவதில்லை. மோசமாக இருக்கும் நிலை இன்னும் மோசமாகுமே ஒழிய பொருளாதாரத்தில் முன்னேற்றம் வந்தால் தமிழன் முன்னேறிவிடுவான் என்று பகற்கனவு காணாதீர்கள். தமிழனுக்கு நன்மை நேர வேண்டுமென்றால் இலங்கை பொருளாதார ரீதியில் அழுத்தம் கொடுக்கப்பட்டு உலக நாடுகள் சேர்ந்து கண்டித்தால் தான் உண்டு.

Unknown said...

அனாமிகா,

நன்றி சகோதரி - எங்கள் உணர்வுகளைப் புரிந்து கொண்டதற்கு.

ஆனாலும் உங்களுக்கு என் கண்டனங்கள். நீங்கள் உபயோகித்த தெருநாய் என்ற பதத்திற்காக.

நீங்கள் ஒரு நல்ல விசயம் சொல்ல வரும்போது தப்பான வார்த்தையைப் போட்டால் யாருக்கும் நீங்கள் சொன்ன நல்ல விசயம் மண்டையில் ஏறாது. நீங்கள் உபயோகப் படுத்திய அந்தத் தப்பான வார்த்தைதான் கண்ணை உறுத்தும். உங்கள் வார்த்தைகளில் தெறித்த நியாயத்தை உங்கள் நாய் என்ற வார்த்தையை வைத்தே கடந்து போய்க் கொண்டிருப்பார்கள்.

Unknown said...

அனாமிகா,

நான் கன்கொன் கோபியின் பின்னூட்டங்களை நீக்கப் போவதில்லை. ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் (கொன்றது புலிகள் என்ற ஒரு குழுவாக இருந்த போதிலும் மொத்த ஈழத்தமிழினத்தையே) என்று எங்களில் உள்ளவர்களே குறை சொல்லிக் கொண்டு தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்ட அன்று சாக்லேட் கொடுத்துக் கொண்டாடிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் முயற்சி செய்தும் மாறாத எங்கள் உணர்வு கன்கொன் போன்றோர் புத்தியில்லாமல் விவாதம் செய்வதால் மாறிவிடாது.

அட்லீஸ்ட் இந்த வாதங்களைப் படித்தாவது உண்மையான உணர்வுள்ள இலங்கைப் பதிவர்கள் (மறுபடியும் பொதுச்சொல்லா!!!) கன்கொன்னுக்குப் புரிய வைக்க முயற்சி செய்வார்கள் என்று நம்புகிறேன்.

Unknown said...

மூத்த பதிவர் லோஷன் எப்போதாவது என் பதிவுகளைப் படிக்கிறார் என்று எண்ணுகிறேன். அவர் கன்கொன்னின் பதில்களைப் பற்றி என்ன கருத்து வைத்திருக்கிறார் என்று அறிந்து கொள்ள ஆவல்.

Unknown said...

//இல்லை, இதென்ன...
இலங்கை அரசும், இந்தியாவும் சதிசெய்து தான் இலங்கை - இந்திய கிறிக்கற் போட்டிகளை ஏற்படுத்தி மக்களை போர் குற்றங்கை மறைக்கப் பார்க்கிறது என்கிறாதே முகிலன்?
//

இல்லை என்கிறீர்களா? இந்திய அணியும் இலங்கை அணியும் கடந்த இரு ஆண்டுகளில் எத்தனைப் போட்டிகளில் மோதிவிட்டார்கள்? ஏன் திடீரென்று இத்தனைப் போட்டிகள்? கிரிக் இன்ஃபோ தளமே ஓவர்கில் என்று சொல்லும் அளவுக்கு இரு நாடுகளும் அதிகப் படியான போட்டிகளில் விளையாடுகின்றனவே? இதன் பின்னால் அரசியல் இல்லை என்று கதைக்கிறீர்களா? சிரிப்பாய் வருகிறது உங்கள் அப்பாவித்தனத்தை நினைத்து.

//
அப்படியானால் இந்தியாவும் குற்றவாளி தானே?
அப்படியானால் முழுமையாகப் புறக்கணிக்க வேண்டாமா?//

இந்தியாவைப் புறக்கணிப்பதால் என்ன நேர்ந்துவிடப் போகிறது? ஒன்று புரிந்து கொள்ளுங்கள். இலங்கையில் தான் தமிழன் முள்வேலிக்குப் பின்னால் அவதிப்படுகிறான். அங்கே அவனுக்கு விடிவு வர வேண்டுமென்றால் அங்கே இருக்கும் பாசிச அரசு பதவியிறங்க வேண்டும். ஜனநாயக முறையில் அது நிகழாத பட்சத்தில் மக்களுக்கு அந்த அரசின் மீது கோபம் மூட்ட அந்த நாட்டை பொருளாத ரீதியில் தனிமைப் படுத்த வேண்டியது கட்டாயம். அதற்கு இந்தியாவை தனிமைப் படுத்தி/புறக்கணித்து என்ன நடக்கப் போகிறது?

கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள்.

மேலும் நான் சிங்களச் சொறிநாய்கள் என்று எழுதிய பதிவிலேயே சொல்லிவிட்டேன். இந்தியா-இலங்கை விளையாடும் போட்டிகளை நான் பார்க்கப் போவதில்லை அவற்றைப் பற்றி எழுதப் போவதில்லை என்று.

இதற்கு மேலும் கிரிக்கெட் பற்றியே நீங்கள் கதைத்துக் கொண்டிருப்பது இன்னொரு பதிவில் நம் இருவருக்கும் நிகழ்ந்த கருத்து மோதலை மனதில் வைத்துக் கொண்டு என்னை எதிர்த்தே தீர வேண்டும் என்பதற்காக விதண்டாவாதம் செய்துகொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. இதற்கு மேலும் உங்களுடன் விவாதம் செய்ய நான் தயாராய் இல்லை. தூங்குபவர்களை எழுப்பிவிடலாம். தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது.


நீங்கள் இன்னும் என் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை.

Unknown said...

நண்பர்களே!

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். நான் கிரிக்கெட் வெறியன் தான். சச்சினின் ரசிகன் தான். அதற்காக எனக்கு இலங்கை அணியின் மீதோ அந்த அணியை ரசிப்பவர்கள்/ஆதரவு தெரிவிப்பவர்கள் மீதோ எந்தக் காழ்ப்புணர்ச்சியும் இல்லை. இந்திய அணியையும் அதன் வீரர்களையும் மட்டும் குறை சொல்லும் பதிவர்களைத்தான் என் கிரிக்கெட் வலைப்பூவில் ஒரு பதிவில் நான் குத்திக் காட்ட நேர்ந்தது. அந்தப் பதிவிலேயே அது மொத்த இலங்கைப் பதிவர்களையும் வருத்தியிருந்ததற்கு மன்னிப்பையும் கேட்டுவிட்டேன்.

தயவு செய்து என் ஈழ உணர்வுக்கும் சிங்களப் பேரினவாத இலங்கை அரசைப் பொருளாதார ரீதியில் புறக்கணிக்கும் போராட்டத்தில் என் ஈடுபாட்டுக்கும், அந்தப் பதிவைக் காரணமாகக் காட்டி என்னை அசிங்கப் படுத்தாதீர்கள். அது என்னை மிகவும் காயப்படுத்துகிறது.
இதற்கு பதிலாக என்னை நீங்கள் சில அனானிகளைப் போல அசிங்கம் அசிங்கமாகத் திட்டிவிட்டுப் போகலாம்.

vasu balaji said...

I admire your maturity and the way you handled the misleading comments.Thank you din.

Unknown said...

முகிலன்

shokkuddy@gmail.com or keithkumm@gmail.com க்கு மெயில முடியுமா??

விடியல் said...

Subankan said...
@ Bbottle Opener

என்னை மின்ன‍ஞ்சலூடாகத் தொடர்புகொள்ளுங்கள்//

நீங்கள் எனக்கு தம்பியோ, அண்ணாவோ தெரியாது. உங்களை சகோதரன் என்றே அழைக்கிறேன். சகோதரா நீங்கள் ஒரே ஒருவன் தான் இவர்களுக்குள் என் கேள்விகளுக்கு பதிச் சொல்லியிருக்கிறீங்கள்.

உன் தாய்ப்பாலை வணங்குகிறேன்!
நீ குடித்த தமிழ் பாலை வாழ்த்துகிறேன். உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறேன். என்னிடம் இணைய வசதி இல்லை. வவுனியாவில் இன்ரநெட் சென்ரருக்கு வந்து தான் மெயில் பார்க்க வேண்டும்,
நாங்கள் அனைவரும் ஒன்றினைந்து ஒரு அமைப்பை உருவாக்கி அதனூடாக அகதிகளை சந்திப்போம்.

என்னுடைய முகவரி, என்னை சந்திக்க விரும்பினால் வவுனியாவிற்கு வாருங்கள். நாங்கள் அனைவரும் ஒரு பதிவர் அமைப்பை உருவாக்கி அதன் மூலமாக அகதிகள் அனைவரையும் சந்திப்போம். ்
முகாமை விட்டு வெளியேறியவர்களின் மனதை மகிழ்வித்து, அவர்களின் மனங்களில் உள்ள கடந்த கால சம்பவங்களைப் பற்றி எடுத்துக் கூறி, அந்த மக்களின் மனதினை உளவியல் ரீதியாக மாற்ற முயற்சி செய்வோம்.
இலங்கையில் உள்ள அனைத்துப் பதிவர்களையும் ஒன்று திரட்டுவோம் வாருங்கள்.
மனிதநேயப் பணி செய்ய தயராகும் இவ் அமைப்பிற்கு தேசப்பற்று உள்ளவர்கள் போல அது செய்தோம், இது செய்தோம் எனச் சொன்ன பவன், கங்கோனை தலமைப் பணியில் அமர்த்துவோம்.
ஏனைய பதிவர்களின் மின்னஞ்சல் முகவரியினையும் எனக்கு அனுப்புங்கள். நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இலங்கை வலைப் பதிவ்ர் அமைப்பை உருவாக்குவோம்.

Unknown said...

@Bbottle Opener

மன்னித்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் சந்தேகக் கண்ணோடே பார்க்க வேண்டிய சூழ்நிலையில் வசித்து வருகிறோம். உங்கள் உண்மையான பெயர் என்னவோ தெரியவில்லை. நீங்கள் தொடுப்பு கொடுத்த தளத்தின் நம்பகத் தனமையைப் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறேன். நேரடியாகவும் உங்களுக்கு உதவ நான் இலங்கையில் இல்லை.

இப்போதைக்கு பண உதவி தான் செய்ய முடியும். அதை நேர்மையான சேனலின் மூலம் எப்படி செய்வது? நான் வழங்கும் பணம் அவர்களுக்குப் போய் சேர்ந்துவிடுமா என்பதை இங்கே உள்ள என் நண்பர்கள் மூலமாக விசாரித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் இங்கே லிஸ்ட் கொடுத்த நபர்களுக்கு நேரடியாகப் போய்ச் சேர வழி இருக்கிறதென்றால் கண்டிப்பாகச் செய்வேன்.

என் மின்னஞ்சல் இதே தளத்தில் அஞ்சல் என்ற தொடுப்பில் இருக்கிறது. உங்கள் உண்மையான பெயர்/ப்ரொஃபைலோடு தொடர்பு கொள்ளுங்கள்.

Unknown said...

முகிலன் said...

மூத்த பதிவர் லோஷன் எப்போதாவது என் பதிவுகளைப் படிக்கிறார் என்று எண்ணுகிறேன். அவர் கன்கொன்னின் பதில்களைப் பற்றி என்ன கருத்து வைத்திருக்கிறார் என்று அறிந்து கொள்ள ஆவல்.//

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

இனி இலங்கை வலை பதிவர் குழுமத்தில் உங்களை என்ன கோணத்தில் பார்க்கிறார்கள் என்பதை படித்து பாருங்கள்.
இதற்கு பிறகும் லோசன் போன்ற தலையாட்டி பொம்மைகளிடம் நீங்கள் பதிவினை படிக்கச் சொல்லி கேட்பது காலில் விழுந்து கெஞ்சுவதற்கு சமமானது.


sathiamoorthy shathieshan View profile
More options Apr 6, 3:26 am

From: sathiamoorthy shathieshan
Date: Mon, 5 Apr 2010 22:56:34 +0530
Local: Tues, Apr 6 2010 3:26 am
Subject: எம்மில் குற்றமாம் பதிவர்களே.
Forward | Print | Individual message | Show original | Report this message | Find messages by this author
பதிவர்கள் எங்கள் மேல் குற்றம் சுமத்தப்பட்டு ஒரு நண்பர்
பதிவிட்டிருக்கின்றார். படித்தேன் பகிர்கின்றேன். உங்கள் கருத்துக்களை
பகிர்ந்து கொள்ளுங்கள்.


கௌதம் கம்பீரம்


http://cricketpithatralkal.blogspot.com/2010/04/blog-post.html?showCo...

Unknown said...

இனி இலங்கை வலை பதிவர் குழுமத்தில் உங்களை என்ன கோணத்தில் பார்க்கிறார்கள் என்பதை படித்து பாருங்கள்.
இதற்கு பிறகும் லோசன் போன்ற தலையாட்டி பொம்மைகளிடம் நீங்கள் பதிவினை படிக்கச் சொல்லி கேட்பது காலில் விழுந்து கெஞ்சுவதற்கு சமமானது.


sathiamoorthy shathieshan View profile
More options Apr 6, 3:26 am

From: sathiamoorthy shathieshan
Date: Mon, 5 Apr 2010 22:56:34 +0530
Local: Tues, Apr 6 2010 3:26 am
Subject: எம்மில் குற்றமாம் பதிவர்களே.
Forward | Print | Individual message | Show original | Report this message | Find messages by this author
பதிவர்கள் எங்கள் மேல் குற்றம் சுமத்தப்பட்டு ஒரு நண்பர்
பதிவிட்டிருக்கின்றார். படித்தேன் பகிர்கின்றேன். உங்கள் கருத்துக்களை
பகிர்ந்து கொள்ளுங்கள்.


கௌதம் கம்பீரம்


http://cricketpithatralkal.blogspot.com/2010/04/blog-post.html?showCo...

Unknown said...

எம்மில் குற்றமாம் பதிவர்களே. Options


வாசித்தேன். அவர் பல பதிவுகளில் இலங்கை பதிவர்கள் என குறிப்பிட்டு உள்ளார்.
அங்கு பின்னூட்டி எம்மை ஏன் நாமே தாழ்த்தி கொள்ள வேண்டும்


2010/4/5 sathiamoorthy shathieshan



- Hide quoted text -
- Show quoted text -

Unknown said...

எம்மில் குற்றமாம் பதிவர்களே. Options


வாசித்தேன். அவர் பல பதிவுகளில் இலங்கை பதிவர்கள் என குறிப்பிட்டு உள்ளார்.
அங்கு பின்னூட்டி எம்மை ஏன் நாமே தாழ்த்தி கொள்ள வேண்டும்


2010/4/5 sathiamoorthy shathieshan



- Hide quoted text -
- Show quoted text -

Unknown said...

நானும் வாசித்திருந்தேன். ஆனால் யோ சொன்ன மாதிரி அவருக்கு விளம்பரம் கொடுக்க
விரும்பியிருக்கவில்லை.இப்போது எம்மவரின் பின்னூட்டங்கள் கண்டபிறகு நானும் போய்
கும்மி இருக்கிறேன்.
திருந்தட்டும்..இல்லாவிடில் வருந்தட்டும்


LOSHAN
http://arvloshan.com/


2010/4/5 YOGA CHAN



- Hide quoted text -
- Show quoted text -

Unknown said...

இனிப் பின்னூட்டுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன்.
இலங்கைப் பதிவர்கள் என்ற பொதுப்பாவனைக்காகத்தான் போய்ப் பின்னூட்டினோம்.
இனித் தொடர்ந்தும் சாக்கடைகளுக்குள் விழத் தேவையில்லை என்று நம்புகிறேன்.

Unknown said...

நண்பர் முகிலன் அவர்களே, உங்களை இவன், அவன் என வர்ணித்த லோசனிடமா நீங்கள் கையேந்துகிறீர்கள்?


http://groups.google.com/group/srilankantamilbloggers/browse_thread/thread/eb9aabbae28a80cf#

இந்த முகவரியில் அனைத்தையும் வாசியுங்கள்.


ஆமாம்.. ஆனால் மவனே இன்னொரு தடவை எம்மைப் பற்றிப் பொதுவாகவாவது ஏதாவது இவன்
எழுதினால் ஏன் பதிவில் இவனுக்கு சங்காபிஷேகம் செய்வேன்.


LOSHAN

Unknown said...

BAVAN View profile
More options Apr 6, 1:41 pm

From: BAVAN
Date: Tue, 6 Apr 2010 09:11:41 +0530
Local: Tues, Apr 6 2010 1:41 pm
Subject: Re: [இ.த.ப:3806] எம்மில் குற்றமாம் பதிவர்களே.
Forward | Print | Individual message | Show original | Report this message | Find messages by this author
*ஆம் இரவு 1 மணிக்குத்தான் பார்த்தேன்..கன்கொனுடனும் என்னுடனும் அவர் ஒரு முறை
எம் இருவரின் பதிவுகளிலும் சண்டைபிடித்திருக்கிறார். அத்தடன் விட்டுவிடுவார்
என்று பார்த்தால் ம்ஹிம்.... அவரின் கிற்க்கற் தொடர்பதிவில்கூட
என்னைச்சாடியிருந்தார் நான் அதைப் பெரிதாக எடுக்கவில்லை இன்று ஒட்டுமொத்த
இலங்கைப்பதிவர்கள் மீதும் கைவைக்கப்பார்க்கிறார்.*


*நேற்று 4.45 வரை எமக்காக அவரது ப்ளாக்கை காவல் காத்த கன்கொன் வாழ்க..:p*
2010/4/6 Idleboy Kangon




- Hide quoted text -
- Show quoted text -//


லோசன், கங்கோன், பவன் பற்றிய உங்களின் மாயை இப்போது நீங்கியிருக்குமென நினைக்கிறேன்.

Unknown said...

நண்பர் முகிலனுக்கு, லோசனை சுபாஸ் எனும் அறிவிப்பாளர் மூலம் வால் பிடித்து, விமலின் உதவியோடு மூன்று இலட்சம் ரூபா கறுப்பு பணம் வழங்கி தான் லோசனின் அடிவருடியான சதீஸ் லோசனின் வெற்றி வானொலிக்குள் நுழைந்தவர்.
லோசனை பற்றிய, லோசன் எத்தனை பெண்களை அறிவிப்பாளராக்குகிறேன் எனும் ஆசை வார்த்தை கூறு மோசம் செய்தார் எனும் விடயங்கள் உள்ளடங்கிய ஒலிப் பதிவுகள், போட்டோக்கள் கமெரா போன் வீடியோ இணையத்தில் பதியப் போகிறோம். அவற்றையும் பொறுத்திருந்து பாருங்கள்.

Unknown said...

http://groups.google.com/group/srilankantamilbloggers/browse_thread/thread/eb9aabbae28a80cf#


உங்களை இலங்கைப் பதிவர்கள் என்ன நிலையில் வைத்திருக்கிறார்கல் என்பதை இங்கே பார்த்து தெளிவடையுங்கள்.

Unknown said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

http://nijem.blogspot.com/
லோசனின் திருமுகம் இங்கே தெரியும். இவற்றில் காலாதி காலமாக கூறப்பட்டுள்ள விடயங்களுக்கே லோசனினால் பதில் சொல்ல முடியவில்லை. பிறகு எப்படி உங்களின் கேள்விகள், உங்களின் பதிவுகளுக்கு பதில் சொல்ல முடியும் லோசனால்?

Unknown said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

சந்தியா சகோதரி - நீங்கள் சொல்வது உண்மையோ அவதூறோ அதை நீங்கள் உண்மையான முகத்துடன் வந்து சொல்வது நலம். இப்படி பொய் முகத்துடன் வந்து பேசுவதற்கும் அவர்கள் எனக்குப் பின்னால் கதைப்பதற்கும் பெரும் வித்தியாசம் இல்லை.

உங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை என் தளத்தைப் பயன் படுத்திக் காட்டாதீர்கள்.

உங்கள் பின்னூட்டங்களை நீக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். இப்போதைக்கு அலுவலகத்தில் இருப்பதால் நீக்க முடியாது. இரவு வீட்டுக்குச் சென்றதும் நீக்கி விடுவேன். புரிந்துகொள்ளுங்கள்.

Unknown said...

முகிலன் said...

மூத்த பதிவர் லோஷன் எப்போதாவது என் பதிவுகளைப் படிக்கிறார் என்று எண்ணுகிறேன். அவர் கன்கொன்னின் பதில்களைப் பற்றி என்ன கருத்து வைத்திருக்கிறார் என்று அறிந்து கொள்ள ஆவல். //

முகிலன் நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறிர்கள்? பதிவுலகத்தில் நடப்பது என்னவென்றே தெரியாதா உங்களுக்கு. தன்னைப் பற்றி விமர்சித்த பதிவர்களை ஓரம் கட்ட லோசன் தன் ஜால்ராக்களான கங்கோன், பவன் முதலியவர்களை வைத்து இலங்கையில் உள்ள ஒரு சில பதிவர்களைப் பற்றி அவதூறான வலைத் தளங்களை எழுதி வரும் போது இவர் எப்படி உங்களின் பதிவினைப் பார்த்து கருத்துச் சொல்லுவார்.
உங்களிற்கு இலங்கை பதிவுலகம் பற்றி தெரியா விட்டால் கொஞ்சமாவது விழிப்படையுங்கள்.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன் வைத்து ஏனைய தமிழ்ப் பதிவர்களை வலைப் பதிவை விட்டு ஓரம் கட்ட நினைத்துச் செயற்படும் இவர்களா உங்களின் பத்வினை படித்து கருத்துச் சொல்லுவார்கள்.

எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

இந்த நல் மனிதர்கள் செய்யும் விடயங்களை இந்த முகவரியில் கண்டு கொள்ளலாம்.

Bibiliobibuli said...

முகிலன்,

////Mukilan, a writer from Tamil Nadu living in USA, recently wrote on how he was pained during the height of the war to see some individuals among the Eezham Tamil diaspora arguing in favour of finishing the war to the end, to see the total elimination of the LTTE.///

http://www.tamilnet.com/art.html?catid=99&artid=32185

இந்த முகிலன் நீங்கள் தான் என்று நான் நம்புகிறேன். காரணம், நீங்கள் இப்படி எழுதிய கட்டுரை ஒன்றை உங்கள் தளத்தில் முன்பு படித்திருக்கிறேன். என் புரிதல் தவறென்றால் மன்னிக்கவும்.

புறக்கணிப்பு கட்டுரையில் கூறப்படுவதும், Tamil Net கட்டுரை குறிப்பிடுவதும் பொருந்தி வருவதால் அந்த கட்டுரையை முடிந்தால் மீள் பதிவு போடவும்.

புலம் பெயர்ந்த தமிழர்கள் இலங்கை அரசின் சதிவலையில் விழக்கூடாது என்பது தான் என் கருத்தும்.ஆனால், யாரிடம் எதை சொன்னாலும் அது boomerang போல் திரும்பி வந்து தாக்குகிறது.

Sinthu said...

பொறுப்பான பதிவராக மோசமான பின்னூட்டங்கள் யார் எழுதினாலும் அதை நீக்குங்கள். வேலையற்று வில்லங்கம் செய்யும் கோபி போன்றவர்களை காலம் தண்டிக்கும்.

நட்புடன்
விடியல்

Unknown said...

//முகிலன்,

////Mukilan, a writer from Tamil Nadu living in USA, recently wrote on how he was pained during the height of the war to see some individuals among the Eezham Tamil diaspora arguing in favour of finishing the war to the end, to see the total elimination of the LTTE.///

http://www.tamilnet.com/art.html?catid=99&artid=32185

இந்த முகிலன் நீங்கள் தான் என்று நான் நம்புகிறேன். காரணம், நீங்கள் இப்படி எழுதிய கட்டுரை ஒன்றை உங்கள் தளத்தில் முன்பு படித்திருக்கிறேன். என் புரிதல் தவறென்றால் மன்னிக்கவும்.

புறக்கணிப்பு கட்டுரையில் கூறப்படுவதும், Tamil Net கட்டுரை குறிப்பிடுவதும் பொருந்தி வருவதால் அந்த கட்டுரையை முடிந்தால் மீள் பதிவு போடவும்.//

ஆம் ரதி. நான் தான் அது. என் நண்பர் ஒருவரும் தொடுப்பு அனுப்பி இருந்தார். அவர்களின் தளத்திலேயே என் அந்தப் பதிவுக்கு தொடுப்பு கொடுத்திருக்கிறார்கள்.
http://pithatralkal.blogspot.com/2010/05/blog-post_17.html


//புலம் பெயர்ந்த தமிழர்கள் இலங்கை அரசின் சதிவலையில் விழக்கூடாது என்பது தான் என் கருத்தும்.ஆனால், யாரிடம் எதை சொன்னாலும் அது boomerang போல் திரும்பி வந்து தாக்குகிறது. //

புரிதலுக்கு நன்றி

Unknown said...

//விடியல் said...
பொறுப்பான பதிவராக மோசமான பின்னூட்டங்கள் யார் எழுதினாலும் அதை நீக்குங்கள். வேலையற்று வில்லங்கம் செய்யும் கோபி போன்றவர்களை காலம் தண்டிக்கும்.
நட்புடன்
விடியல்//

அன்பின் விடியல், சகோதரி சௌந்தர்யாவின் பின்னூட்டங்களை நான் நீக்க வேண்டியதற்குக் காரணம் அதில் தனி நபர் தாக்குதல் இருந்தது. கன்கொன் கோபியின் பின்னூட்டத்தை நான் விட்டு வைத்திருப்பதற்குக் காரணம் அதில் தெறித்த அறியாமை. உண்மையான ஈழ உணர்வுள்ள இந்தியத் தமிழர்கள் கன்கொன்னின் அறியாமையால் கோபம் கொள்ள மாட்டார்கள் என்பதுநிதர்சனம்.

தமிழ்நங்கை said...

செளந்தர்யா என்பவரின் விசமத்தனமனான பிரச்சாரம் சில பதிவர்களின் மேல் கொண்டிருக்கும் பொறாமையையே காட்டுகின்றது. சும்மா தலைப்புகளில் அடிப்பேன் உதைப்பேன் என பெயர் வைத்தால் மட்டும் போதாது நல்லதாக நாலு பேர் படிக்ககூடியதாக எழுதவேண்டும்.

வயிற்றெரிச்சலுக்கு நல்ல மருத்துவரை நாடுங்கள்.

முல்லை மயூரன் said...

kankon, and bavan speaking like they r the only representataive of sl tanil,,,it is like ducklass begging in europe for srilanka,, u keep it up..ignore these neusenses..... some body told they are not allowed to idp camp in vavuniya,,ha ha ha where r u living,,, if u like u can go to camp and help,(,not for foreigner)dont fool ndian bloggers ,,, thanks mugil