Sunday, January 3, 2010

புட்டி பழக்க-வழக்கம்

குவாட்டர்
சோடா
மிக்ஸிங்

கலந்தே வரும்
காக்டெயில்
இத்யாதி

இத்யாதி
பற்றியெல்லாம்
பாமரனுக்கு
பாடமெடுத்தாலும்

வெறும் வயித்துல குடிக்காத
காலைல ஹேங்கோவர் வரும்

கலக்காமக் குடிக்காத
வாந்தி வந்திரும்

பார்ட்டிகளின்
பலநூறு
பாடங்களைப்
பின்பற்றியபடி...

காக்டெயில் மட்டும்
விற்கும் கடையில்
போமிக்ரேனட் மார்ட்டினி
வாங்கிக் குடித்தாலும்
பை தடவி
பேனா தேடுவதே
பிரச்சனையாய் இருக்கிறது

தொட்டில் பழக்க-வழக்கம் இங்கே

19 comments:

Anonymous said...

புது வருஷ தீர்மானம் என்ன. பேனா தேடறதா :)

ஜிகர்தண்டா Karthik said...

சார்... என்னவோ சொல்றீங்க...
ஆனா இன்னான்னு புரிலயே....

அன்புடன் மலிக்கா said...

தாங்களீன் புரொபைலில் உள்ளவரிகள் உண்மையை வெளிப்படுத்தும் ஒரு தமிழனின் சாரம். நன்று. தொடர்ந்து தங்கலீன் பிதற்றல்களை வெளியிடுங்கள். சூப்பர்.


http://niroodai.blogspot.com/

குடுகுடுப்பை said...

ஒன்னுக்கு ரெண்டு இன்னிக்கு, உன் பாக்கெட்ல இருக்கிற பேனாவ எடுத்து நான் கவுஜ எழுதிட்டிருந்தேன். கோச்சிக்காத சார்.

பின்னோக்கி said...

//பாமரனுக்கு
பாடமெடுத்தாலும்

வானம்பாடி அவர்கள் மேல் உங்களுக்கு என்ன கோபம் ?

Unknown said...

// சின்ன அம்மிணி said...
புது வருஷ தீர்மானம் என்ன. பேனா தேடறதா :)//

கொல வெறியோட எதிர் கவுஜ போடுறது...

Unknown said...

//ஜிகர்தண்டா Karthik said...
சார்... என்னவோ சொல்றீங்க...
ஆனா இன்னான்னு புரிலயே....
//

நேரா டாஸ்மாக்குக்குப் போயி ஒரு குவாட்டரை வாங்கி மிக்ஸ் பண்ணாம அடிச்சுட்டு படிச்சுப் பாருங்க கார்த்திக்.

ஆமா நீங்க மதுரையா?

Unknown said...

//அன்புடன் மலிக்கா said...
தாங்களீன் புரொபைலில் உள்ளவரிகள் உண்மையை வெளிப்படுத்தும் ஒரு தமிழனின் சாரம். நன்று. தொடர்ந்து தங்கலீன் பிதற்றல்களை வெளியிடுங்கள். சூப்பர்.
//

மலிக்கா, தங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.

Unknown said...

// குடுகுடுப்பை said...
ஒன்னுக்கு ரெண்டு இன்னிக்கு, உன் பாக்கெட்ல இருக்கிற பேனாவ எடுத்து நான் கவுஜ எழுதிட்டிருந்தேன். கோச்சிக்காத சார்//

பேனாவ மட்டுமா எடுத்திங்க? சைட் டிஷ்சயும் சேத்துல்லா எடுத்திட்டிங்க?

Unknown said...

// பின்னோக்கி said...
//பாமரனுக்கு
பாடமெடுத்தாலும்

வானம்பாடி அவர்கள் மேல் உங்களுக்கு என்ன கோபம் ?//

அது வேற இது வேற

கண்ணகி said...

சிரிப்...சிரிப்பா வருது....

நசரேயன் said...

//பாமரனுக்கு
பாடமெடுத்தாலும்//
யாரு பாலா அண்ணனா ?

கலகலப்ரியா said...

ஆ...! இன்னும் எத்தன பேருய்யா கிளம்பி இருக்கீங்க...! அவ்வ்வ்வ்... இதுக்காகவாவது எதிர்க்கவுஜ போட முடியாதபடி ஒரு கவுஜ போடுறேன்...

vasu balaji said...

சப்பி
சாராயம்
ஆரெஸ் பவுடர்
கோக்ல ஆஸ்பிரின்
எல்லாம் தாத்தாக்கு
சொன்னாலும்

குடிச்சா
வெறும் வயிறு
குடல் புண்ணு
அல்பாயுசுல போவன்னு
பாட்டி தந்த
கருவாட்டு குழம்பு
சோத்துருண்டை
கவனம் வந்தாலும்

டாஸ்மாக்ல
சால்னாக்கு கதியில்லாம
பக்கத்துல இருக்குறவன்
உச்சி மண்ட வாசம்
கிடைக்கறதே
பெரும்பாடா போச்சி

ஹெ ஹெ. நமக்கே பாடமா.

Unknown said...

////பாமரனுக்கு
பாடமெடுத்தாலும்//
யாரு பாலா அண்ணனா ?
//

அவருக்கெல்லாம் பாடம் எடுக்க முடியுமா? அவரு யாரு?

Unknown said...

// கலகலப்ரியா said...
ஆ...! இன்னும் எத்தன பேருய்யா கிளம்பி இருக்கீங்க...! அவ்வ்வ்வ்... இதுக்காகவாவது எதிர்க்கவுஜ போட முடியாதபடி ஒரு கவுஜ போடுறேன்...
//

அப்பிடி ஒரு கவுஜ எழுதினா நாங்க அதுக்கு விளக்கம் போடுவோம்ல

Unknown said...

//சப்பி
சாராயம்
ஆரெஸ் பவுடர்
கோக்ல ஆஸ்பிரின்
எல்லாம் தாத்தாக்கு
சொன்னாலும்

குடிச்சா
வெறும் வயிறு
குடல் புண்ணு
அல்பாயுசுல போவன்னு
பாட்டி தந்த
கருவாட்டு குழம்பு
சோத்துருண்டை
கவனம் வந்தாலும்

டாஸ்மாக்ல
சால்னாக்கு கதியில்லாம
பக்கத்துல இருக்குறவன்
உச்சி மண்ட வாசம்
கிடைக்கறதே
பெரும்பாடா போச்சி

ஹெ ஹெ. நமக்கே பாடமா.
//

பாட்டனுக்குனு போட்டிருந்தாதான் உங்களுக்கு. இது வேற பாமரன்.

கலகலப்ரியா said...

http://kalakalapriya.blogspot.com/2010/01/blog-post_04.html

ithu ungalukku... =))

அது சரி(18185106603874041862) said...

//
கலந்தே வரும்
காக்டெயில்
இத்யாதி

இத்யாதி
பற்றியெல்லாம்
பாமரனுக்கு
பாடமெடுத்தாலும்
//

அடப்பாவிங்களா...வானம்பாடிகளை கெடுக்கறதே நீங்க தானா?? நல்லாருங்கப்பா...:0)))