Wednesday, January 6, 2010

கு.ஜ.மு.க உடையுமா?

கு.ஜ.மு.க பொதுச் செயலாளர் குடுகுடுப்பை அவர்களுக்கும் தளபதி நசரேயனுக்கும் நடக்கும் அறிக்கைப் போர் அனைவரும் அறிந்ததே. இதில் கட்சியின் மூன்றாவது உறுப்பினரான அது சரி நசரேயன் பின்னால் கொடி பிடிக்கிறார். இதனால் குடுகுடுப்பையின் தலைமைக்கு ஆப்பு என்று எதிர்கட்சியினர் எள்ளல் செய்து வருகின்றனர்.

இதற்கு முன்னதாக கட்சியின் மூத்த உறுப்பினர் பழமை பேசியை குடுகுடுப்பை வம்புக்கு இழுத்தது நினைவிருக்கலாம். இப்போது அவரும் நசரேயனின் பின்னால் அணி சேர்ந்தால் குடுகுடுப்பை கட்சியை விட்டு நீக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும். இதைப் பற்றி பிரபலங்களின் கருத்தை அறிய முற்பட்டோம்.

பழமை பேசி: ஏனுங். நாம்பாட்டுக்கு இந்தியாவுல சுத்திப் பாத்துட்டு இருக்கேனுங். நம்மள எதுக்குங் அவரு வம்புக்கு இழுக்கனுங். கவுண்டமணி அண்ணன் மாரி நானு தொப்பி போட் மறைச்சிக்குட்டிருக்கேன்னு சொல்லாம சொல்லிட்டாருங். இத நா சும்மா விடமாட்டேங்.

வானம்பாடிகள்: அடங்கொய்யால. இலங்கைலதான் பிச்சயும் சரத்தும் பன்னாட மாதிரி அடிச்சிக்கிறாங்கன்னா, இவங்களும் எதுக்குய்யா அடிச்சிக்கிறாங்க. பேசாம நாம கட்சியில சேந்து அதக் கைப்பத்திர வேண்டியதுதான்.

கலகலப்ரியா:
எடுத்த அம்பு
எய்யும் முன்
எதிர் பாய்ந்தது

ஏளனம் செய்ததும்
எள்ளி நகையாடியதும்
எதிர்வினையாய்

கூடி நின்று
கைதட்டியவர்
இன்று
பின்னிருந்து
பதம் பார்க்கிறார்

செய்தவினை
மறுமையிலன்று
இம்மையில்
இப்போதே..

(எல் போர்டு: என்ன சொல்றாங்கன்னே புரியலையே?)

சின்ன அம்மிணி: நாங்க என்னிக்கும் தளபதி பக்கம்தான். தளபதி தனிக்கட்சி ஆரம்பிச்சா குஜமுக ஆஸி-நியூஸி கிளையைக் கலைச்சிட்டு சேந்திருவோம்.

சந்தன முல்லை: அவ்வ்வ்வ்வ்... இலக்கியவாதி சண்டை இப்பிடி உட்கட்சி பூசலா வெடிக்கும்னு நான் எதிர்பார்க்கலை

முகிலன்: கட்சியின் உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு இருப்பதென்பது என்னவோ உண்மைதான். ஆனால் அது உட்கட்சிப் பூசல் இல்லை. கட்சி உடையப் போகிறது என்பதெல்லாம் எதிர்க்கட்சிகள் பரப்பும் புரளி. கு.ஜ.மு.க கட்சிக்குப் பெருகி வரும் மக்கள் ஆதரவை விரும்பாத ஆளுங்கட்சியும் மற்ற எதிர்கட்சிகளும் கூட்டுச் சேர்ந்து செய்யும் சதி. இந்தப் பரபரப்பையே நாங்கள் எங்கள் கட்சியின் வளர்ச்சிக்கு சாதகமாக்கி 2011ல் ஆட்சியைக் கைப்பற்றுவோம்.

இறுதியாக வந்த தகவலின் படி, குடுகுடுப்பையையும் நசரேயனையும் சமாதானம் செய்வதற்காக முகிலனின் தலைமையில் ஒரு குழு முயற்சி செய்து வருகிறது. கூடிய விரைவில் குடுகுடுப்பையும் நசரேயனும் கைகோர்த்து காட்சி தருவார்கள் என்று தெரிகிறது.

24 comments:

குடுகுடுப்பை said...

கு.ஜ.மு.க வில் குடுகுடுப்பை மட்டுமே உறுப்பினர். மற்றபடி அரசியலையும், இலக்கியத்தையும் ஒன்று சேர்த்து குழப்பிக்கொள்ளவேண்டாம் முகிலன்.

கட்சியின் கொள்கைப்படி வேறு உறுப்பினர்கள் கு.ஜ.மு.க வில் இருக்கமுடியாது.

Unknown said...

// குடுகுடுப்பை said...
கு.ஜ.மு.க வில் குடுகுடுப்பை மட்டுமே உறுப்பினர். மற்றபடி அரசியலையும், இலக்கியத்தையும் ஒன்று சேர்த்து குழப்பிக்கொள்ளவேண்டாம் முகிலன்.

கட்சியின் கொள்கைப்படி வேறு உறுப்பினர்கள் கு.ஜ.மு.க வில் இருக்கமுடியாது.
//

அதெல்லாம் இருக்கட்டும். கால் பண்ணா எடுக்க மாட்டிங்களா?

கோவி.கண்ணன் said...

//கு.ஜ.மு.க வில் குடுகுடுப்பை மட்டுமே உறுப்பினர். மற்றபடி அரசியலையும், இலக்கியத்தையும் ஒன்று சேர்த்து குழப்பிக்கொள்ளவேண்டாம் முகிலன்.//

கு.ஜ.மு.க வில் எலக்கிய அணி வேற இருக்கிறதா ? கிளிஞ்சுது !

Anonymous said...

தளபதி ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம எழுதறதா வாக்குறுதி குடுக்கறவரைக்கும் அவர் கட்சில சேரமாட்டோம். :)

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ப்ரியா - வித்தவுட் யுவர் பர்மிஷன் :)

புரிஞ்சிடுச்சு :) இந்த ரெண்டு வார்த்த மட்டுந்தான் புரியல.. டிக்ஸ் தட்டி பாத்துட்டேன்..

இம்மை - the life in this world, this life, the present birth, இப்பிறப்பு.

மறு - another, other, மற்ற.

சோ, இம்மை x மறுமை.

அதாவது – இந்தப் பிறவியில ப்ரியாவ ஓட்டினா, ஓட்டினவங்க மேல அம்பு பாஞ்சுடுமாம்.. யாராலன்னா - இதயெல்லாம் வேடிக்க பாக்கறாங்கல்ல - அவங்க உங்க பின்னாடி வந்து அடிப்பாங்களாம்.. அவங்க அம்ப கையில எடுத்தவுடனேயே அது உங்க முதுகுல ஆட்டோமேட்டிக்கா பாஞ்சுடுமாம்.. அடுத்த பிறவில கூட இல்லயாம்.. இந்தப் பிறவியிலேயே இதெல்லாம் நடந்துடுமாம்..

அனேகமா உங்க கு ஜ மு க உடஞ்சதுக்கும் இந்த கவித ல வர்ற அர்த்தத்துக்கும் - ஏதோ லின்க் இருக்குற மாதிரி இருக்கு.. இன்வெஸ்டிகேட் பண்ணிக்கோங்க..:)

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
This comment has been removed by the author.
கண்ணகி said...

கு.ஜ.மு.கழ்க அறிக்கை.

இதுஎங்கள் கழகத்தை பிரிக்க முயற்சிக்கும் எதிர்கட்சிக்காரர்களின் சதி...குஞ்சு மிதித்து கோழி சாகாது. இது குடுகுடுப்பைஆரின் தனிப்பட்ட கருத்து....இதைச் சாக்கிட்டு மாற்றுக்கட்சியினர் சந்திலே சிந்து பாடவேண்டாம் என்று கேட்டுக்கொள்ள்ப்படுகிறார்கள்.பழமைப்பேசியார் என்றும் எங்கள் கட்சியின் நிரந்தர உறுப்பினர்..ப்கல் கனவு காணவேண்டாம் எதிர்கட்சி நண்பர்களே...வணக்கம்...

இங்ங்னம்.....மகளிர் அணி செயலாளர்..

பித்தனின் வாக்கு said...

அண்ணன் அஞ்சா நெஞ்சன், வீரத்தலைவர் குடுகுடுப்பையாருக்கு எதிராக நடக்கும் சதிகள் கண்டிக்த் தக்கது. இவை தொடருமானல் இது குறித்து ஜ நா வின் தலையீடு தேவை என்று வற்புறுத்தி நான் சந்திர மண்டலத்தில் அண்ணனுக்காத் தீக்குளிப்பேன் என்று சூளுரைக்கின்றேன்.

vasu balaji said...

இது மிகப் பெரிய அரசியல் சதியா இருக்கே:))

VISA said...

Template Super

கலகலப்ரியா said...

ஆ....!!!! .. என்னை கவுஜ எழுத வைக்காம இருக்க மாட்டங்க போலருக்கே...! ஆனா இடுகை சூப்பரு...! எப்டியோ மேட்டர் தேத்திடுறீங்க... =)))...!! இப்போ கொஞ்சம் உடம்பு செரியில்ல... வந்து வச்சுக்கறேன் கச்சேரிய...

Unknown said...

// கோவி.கண்ணன் said...
//கு.ஜ.மு.க வில் குடுகுடுப்பை மட்டுமே உறுப்பினர். மற்றபடி அரசியலையும், இலக்கியத்தையும் ஒன்று சேர்த்து குழப்பிக்கொள்ளவேண்டாம் முகிலன்.//

கு.ஜ.மு.க வில் எலக்கிய அணி வேற இருக்கிறதா ? கிளிஞ்சுது !//

என்ன இப்பிடி சொல்லிப்புட்டிங்க. எல்லா அணியும் இருக்கு.. ஆனா கோஷ்டி சண்ட இல்ல.

Henry J said...

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. http://simplygetit.blogspot.com/2009/12/make-money-online-100-orginal-ptc-site.html

Unknown said...

//சின்ன அம்மிணி said...
தளபதி ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம எழுதறதா வாக்குறுதி குடுக்கறவரைக்கும் அவர் கட்சில சேரமாட்டோம். :)
//

ஐயோ.. நசரேயன் கேட்டிங்களா??

Unknown said...

// எல் போர்ட் said...
ப்ரியா - வித்தவுட் யுவர் பர்மிஷன் :)

புரிஞ்சிடுச்சு :) இந்த ரெண்டு வார்த்த மட்டுந்தான் புரியல.. டிக்ஸ் தட்டி பாத்துட்டேன்..

இம்மை - the life in this world, this life, the present birth, இப்பிறப்பு.

மறு - another, other, மற்ற.

சோ, இம்மை x மறுமை.

அதாவது – இந்தப் பிறவியில ப்ரியாவ ஓட்டினா, ஓட்டினவங்க மேல அம்பு பாஞ்சுடுமாம்.. யாராலன்னா - இதயெல்லாம் வேடிக்க பாக்கறாங்கல்ல - அவங்க உங்க பின்னாடி வந்து அடிப்பாங்களாம்.. அவங்க அம்ப கையில எடுத்தவுடனேயே அது உங்க முதுகுல ஆட்டோமேட்டிக்கா பாஞ்சுடுமாம்.. அடுத்த பிறவில கூட இல்லயாம்.. இந்தப் பிறவியிலேயே இதெல்லாம் நடந்துடுமாம்..

//

குட் ட்ரை. நோட்ஸ் கம்பெனிக்கு ஆள் எடுக்கும்போது கூப்பிட்டு விடுறேன்.
//
அனேகமா உங்க கு ஜ மு க உடஞ்சதுக்கும் இந்த கவித ல வர்ற அர்த்தத்துக்கும் - ஏதோ லின்க் இருக்குற மாதிரி இருக்கு.. இன்வெஸ்டிகேட் பண்ணிக்கோங்க..:)
//
அப்பிடித்தான் கலகலப்ரியா சொல்லி இருக்காங்க போல.

Unknown said...

// எல் போர்ட் said...
அது ஊர் சுத்த வந்தப்ப எடுத்தது.. சும்மா உங்கள பயங்காட்டறதுக்காக சொன்னது.. மத்தபடிக்கு கொஞ்சம் தொலைவு தான்..
//

ஆஹா.. நம்ம ஊருக்குப் பக்கத்திலயும் ஒரு தெரிஞ்ச பதிவர் இருக்காங்க போலன்னு சந்தோசப்பட்டேனே. பரவாயில்ல. அடுத்த முறை இங்கிட்டு வந்தா வீட்டுக்கு வந்துட்டுப் போங்க.

Unknown said...

// பித்தனின் வாக்கு said...
அண்ணன் அஞ்சா நெஞ்சன், வீரத்தலைவர் குடுகுடுப்பையாருக்கு எதிராக நடக்கும் சதிகள் கண்டிக்த் தக்கது. இவை தொடருமானல் இது குறித்து ஜ நா வின் தலையீடு தேவை என்று வற்புறுத்தி நான் சந்திர மண்டலத்தில் அண்ணனுக்காத் தீக்குளிப்பேன் என்று சூளுரைக்கின்றேன்.
//

நன்றி பித்தன். சந்திரமண்டலத்தில் ஆக்ஸிஜன் இல்லாமலே எரியிற மாதிரி ஏதாவது கண்டுபிடிச்சிருவோம்

Unknown said...

// வானம்பாடிகள் said...
இது மிகப் பெரிய அரசியல் சதியா இருக்கே:))
//

கட்சிக்கு பரபரப்பா ஆதரவு தெரட்டனும்னு சொல்லிவச்சிக்கிட்டு செய்றாங்கன்னு யாரோ சொல்றாங்க.

Unknown said...

// VISA said...
Template Super//

இதத் தவிர இந்த மேட்டர்ல சொல்றதுக்கு ஒண்ணும் இல்லன்னு சொல்றிங்க. புரியிது.

Unknown said...

// கலகலப்ரியா said...
ஆ....!!!! .. என்னை கவுஜ எழுத வைக்காம இருக்க மாட்டங்க போலருக்கே...! ஆனா இடுகை சூப்பரு...! எப்டியோ மேட்டர் தேத்திடுறீங்க... =)))...!! இப்போ கொஞ்சம் உடம்பு செரியில்ல... வந்து வச்சுக்கறேன் கச்சேரிய...//

எழுதுறதுக்கு வேற மேட்டரு வச்சிருந்தேன். குடுகுடுப்பையோட இடுகை பாத்ததும் இதப் போட்டுட்டேன்.

உடம்பப் பாத்துக்குங்க. சீக்கிரமா வந்து ஆரம்பிங்க கச்சேரிய. ஆமா கவுஜ எப்பிடி இருக்குன்னு சொல்லவே இல்லயே.

நசரேயன் said...

//சின்ன அம்மிணி said...

தளபதி ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம எழுதறதா வாக்குறுதி குடுக்கறவரைக்கும் அவர் கட்சில சேரமாட்டோம். :)
//

ஒரு இலக்கிய வாதிக்கு வந்த சோதனை வேற என்ன சொல்ல

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

சொல்லீட்டீங்கல்ல.. அப்ப கண்டிப்பா வந்துடறோம் :)

ஆனா ஒரே ஒரு கண்டிஷன்.. ஹிந்தியில மட்டுந்தான் பேசுவோம்.. அப்புறம் எங்க இண்டர்னேஷனல் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ல ஒரு உறுப்பினர் ஆவனும்.. சரியா? :)))

அப்புறம் ஒரு சின்ன திருத்தம்.. ஹி ஹி.. வெறும் பதிவரல்ல.. பிரபல பதிவர் :)

அழைப்புக்கு நன்றிங்க..

Unknown said...

//எல் போர்ட் said...
சொல்லீட்டீங்கல்ல.. அப்ப கண்டிப்பா வந்துடறோம் :)

ஆனா ஒரே ஒரு கண்டிஷன்.. ஹிந்தியில மட்டுந்தான் பேசுவோம்.. அப்புறம் எங்க இண்டர்னேஷனல் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ல ஒரு உறுப்பினர் ஆவனும்.. சரியா? :)))
//

அய்யோ அதப்பத்தி ஏற்கனவே ஒரு பதிவு போட்டுட்டேனே. இன்னொரு பதிவு போட முடியாதே. சரி மீள்பதிவா போட்டுட வேண்டியதுதான் :))

//அப்புறம் ஒரு சின்ன திருத்தம்.. ஹி ஹி.. வெறும் பதிவரல்ல.. பிரபல பதிவர் :)

அழைப்புக்கு நன்றிங்க..
//
பதிவர்னாலே ப்ராபளம்தாங்க.. என்னது பிரபல பதிவர்னு சொன்னிங்களா? ஓக்கே ஓக்கே ;-)