Sunday, January 17, 2010

ஒரு கொலை, ஒரு புதிர் - அருணின் அடுத்த கேஸ்

அருண் வழக்கமான காலை உடற்பயிற்சியை முடித்துக் கொண்டு தன் ஸ்விஃப்டில் வீட்டிற்கு விரைந்து கொண்டிருந்தான். அவன் பையில் இருந்த செல்ஃபோன் சிணுங்கியது. காரை சாலையின் ஓரத்தில் நிறுத்தி செல்லை எடுத்து காதுக்குக் கொடுத்தான்.

“ஹலோ அருண் ஹியர்”

“அருண் நான் கார்த்தி பேசுறேண்டா.”

“சொல்டா. என்ன காலங்காத்தால?”

“ஒரு கேஸ் விஷயமா உன் ஹெல்ப் தேவைப் படுது. கொஞ்சம் வர முடியுமா?”

“ஷ்யூர் டா. எங்க வரணும்?”

“நீ வீட்டுக்கு வா. அங்க டிபார்ட்மெண்ட் வெஹிக்கிள் வெயிட் பண்ணுது.”

“ஓ. ஓக்கேடா. ஒரு பாத் எடுத்துட்டு வரலாமா?”

“நோ ப்ராப்ளம்டா”

செல்லை அணைத்துவிட்டு காரை வீட்டிற்கு விரட்டினான். வாசலில் நின்றிருந்த க்வாலிஸின் ட்ரைவர் இவன் காரைப் பார்த்ததும் விரைப்பாக ஒரு சல்யூட் வைத்தார்.

சட்டையின் பேட்ஜில் பேரைப் பார்த்த அருண் “மாணிக்கம். ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க. நான் குளிச்சிட்டு வந்திடுறேன்”

“சரி சார்”

“உள்ள வந்து வெயிட் பண்ணுங்க”

சரியாக ஒன்பதரையாவது நிமிடம் கோடு போட்ட இளம்பச்சை டி-ஷர்ட் ஜீன்ஸில் அருண் வெளியே வரும்போது ஹாலில் மாணிக்கத்துடன் சிவாவும் உட்கார்ந்திருந்தான். அருணைப் பார்த்ததும் இருவரும் எழுந்தனர்.

“வாங்க சிவா. நீங்க எப்ப வந்திங்க?”

“நீங்க உள்ள போனதும் வந்துட்டேன் சர்”

“வாங்க போலாம். போகும் போது இந்தக் கேஸ் பத்தி சொல்லிட்டே வாங்க”

க்வாலிஸ் பிரதான சாலையில் சேர்ந்து காலை நேர ட்ராஃபிக்கில் கிட்டத்தட்ட ஊர்ந்தது.

“மாணிக்கம், சைரன் யூஸ் பண்ணுங்க. சீக்கிரமா போகணும்”

“சிவா. கேஸ் பத்தி சொல்லுங்க”

“சர். இறந்தது ஃபேமஸ் ஜட்ஜ் ராமாமிர்தத்தோட விடோ சாந்தினி சார். ஷி இஸ் 57. அவங்க வீட்டு ட்ராயிங் ரூம்லயே தலைல பலமா தாக்கப்பட்டு ஸ்பாட்லயே இறந்திருக்காங்க. மூணு பேர் மேல சந்தேகம் இருக்கு சர். மூணு பேருக்குமே மோட்டிவ் இருக்கு. அதான் உங்க எக்ஸ்பெர்ட் அட்வைஸ் கேக்கலாம்னு கமிஷனர் கூட்டிட்டு வர சொன்னாரு சர்”

“ஓக்கே. இப்ப நாம எங்க போறோம்?”

“க்ரைம் சைட்டுக்கு தான் சர்”

“ஓக்கே”

க்வாலிஸ் அந்த பெரிய காம்பவுண்ட் கேட்டைத்தாண்டி கட்டப்பட்டிருந்த ப்ரம்மாண்டமான பங்களாவின் போர்ட்டிகோவில் நின்றது. கதவைத் திறந்து இறங்கிய அருணை வரவேற்க அங்கே கார்த்திகைப் பாண்டியன் நின்றிருந்தார்.

“வா அருண். சிவா கேஸ் பத்தி உன்கிட்ட சொல்லியிருப்பார்னு நினைக்கிறேன்”

“ஆமா கார்த்தி. க்ரைம் சீன் பாக்கலாமா?”

“ஷ்யூர். வா”

உள்ளே நுழைந்ததும் அவர்களை வரவேற்றது ஒரு பெரிய ஹால். ஜட்ஜ் ராமாமிர்தம் வக்கீலாக இருக்கும் போது நிறைய சம்பாதித்து இருப்பார் போல. வீட்டின் ஒவ்வொரு செண்டிமீட்டரிலும் வேலைப்பாடு இழைந்திருந்தது. சுவர்களில் ராஜா ரவிவர்மனின் ஓவியங்கள். ஆங்காங்கே சிறிய மேஜைகள் வைத்து அவற்றின் மேல் சிறிய சிறிய சிற்பங்கள். ராமாமிர்தம் பெரிய கலா ரசிகராக இருக்கவேண்டும்.

வீட்டின் வரவேற்பரைக்கு சென்றார்கள். அங்கே அறையின் மத்தியில் ஒரு சிறிய டீப்பாய். அதன் மேல் வீட்டின் வழக்கத்தைப் போல கையில்லாத ஒரு அரை நிர்வாணப் பெண்ணின் சிலை. டீப்பாயின் எதிரில் ஒரு சோஃபா. ஒரு பத்து பதினைந்து அடி தூரத்தில் டிவியின் அருகில் ஒரு கோல்ஃப் பை.

“சம்பவத்தன்னிக்கு அதாவது முந்தா நாள் ராத்திரி பத்து மணி போல சாந்தினிக்கும் கொலைகாரனுக்கும் இந்த இடத்துல” - டீப்பாய்க்கும் சோஃபாவுக்கும் இடையில் உள்ள இடத்தைக் காட்டுகிறார் - “வாக்குவாதம் நடந்திருக்கு. வாக்குவாதத்தின் உச்சக்கட்டமா கோபம் வந்த கொலைகாரன் அந்த கோல்ஃப் பேக்ல இருந்து ஒரு கோல்ஃப் ஸ்டிக் எடுத்து அவங்க தலைல அடிச்சிட்டு ஓடியிருக்கான். அடிச்ச வேகத்துல அவங்க மயங்கி பின்னாடி ரத்தம் நிறைய வெளியேறினதால் இறந்தும் போயிருக்காங்க”

“வீட்டுல வேற யாரும் வேலக்காரங்க இல்லையா?”

“இல்ல. ராமாமிர்தம் இறந்ததுல இருந்து சாந்தினி தனியா இருந்துவர்றதத்தான் விரும்பியிருக்காங்க. ஒரு வேலைக்காரி மட்டும் காலைல வந்துட்டு சாப்பாடு சமைச்சி எடுத்து வச்சிட்டு போயிருவா. வாட்ச்மேன் ஒருத்தன் இருந்திருக்கான். அவன ரீசண்டா டிசிப்ளினரி கன்செர்ன்ல வேலைய விட்டு நிறுத்தியிருக்காங்க. மத்தபடி இவங்க தனியா தான் இருந்திருக்கிறாங்க.”

அந்த மேஜை மேல் இருந்த சிலையை கையில் எடுத்துப் பார்த்தான் அருண்.

“இது வீனஸ் டி மிலோ. ஹென்றி மூர் அவர் கையால கார்வ் பண்ணினது” சொன்ன இளைஞனை அப்போதுதான் பார்த்தான் அருண்.

அவன் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட கார்த்தி - “ஓ, இவரை இண்ட்ரட்யூஸ் பண்ண மறந்துட்டேன். இவர் மதிவாணன். சாந்தினியோட நெஃப்யூ. குழந்தையில்லாத ராமாமிர்தம்-சாந்தினி வீட்டுல தான் வளர்ந்திருக்காரு. ஆனாலும் என்ன காரணத்தினாலேயோ ராமாமிர்தம் இவரை அஃபிஷியலா தத்தெடுத்துக்கலை. ராமாமிர்தத்தோட கலை ஆர்வம் இவருக்கும் இருக்கு”

“நீங்க என்ன பண்றீங்க மிஸ்டர் மதிவாணன்?”

“ப்ளீஸ் கால் மீ மதி. நான் antique dealer ஆ இருக்கேன்”

”எங்க ஸ்டே பண்ணியிருக்கிங்க?”

“நான் அடையார்ல ஒரு ஃப்ளாட்ல தங்கியிருக்கேன்”

“ஹென்றி மூர் அப்ஸ்ட்ராக் ஸ்டேச்சுஸ் தான டிஸைன் பண்ணுவாரு? அவரு எப்பிடி வீனஸ் டி மிலோவை ரெப்ளிக்கேட் பண்ணார்?”

“ஓ ஹென்றி எங்க அங்கிளோட குட் ஃப்ரண்ட். எங்க அங்கிள் ரெக்வெஸ்ட் பண்ணிக் கேட்டதனால அவர் செஞ்சிக் குடுத்தார். இது ஒண்ணுதான் அவர் செஞ்ச ஒரே நான் அப்ஸ்ட்ராக்ட் ஸ்டேச்சு. இப்போ இதை வித்தாலும் லட்சக் கணக்குல போகும்”

“ஐ சீ. கார்த்தி, ஐ யம் டன். நாம உன் ஆஃபிஸ்க்கு போய் மேல பேசலாம்”

“ஓக்கே. பை மதி.”

***********************************************************************************

அருண் சிகரெட்டை கார்த்தியின் மேஜை மேல் இருந்த ஆஷ்ட்ரேயில் தட்டினான்.

“சொல்லு கார்த்தி. யாரெல்லாம் அக்யூஸ்டு? என்ன மோட்டிவ்?”

“முதல்ல அந்த வாட்ச்மேன். அவன் குடிச்சிட்டு ட்யூட்டி பாத்ததுனால அவன ரெண்டு நாளைக்கி முன்னால வேலைய விட்டு விலக்கியிருக்காங்க. அவன் அப்போவே கோவத்துல கத்திட்டுப் போயிருக்கான். அவன் மறுபடி வந்து சண்டை போட்டிருந்திருக்கலாம். அப்போ ஆத்திரம் வந்து அவன் இவங்களை அடிச்சிட்டு ஓடிப் போயிருக்கலாம்.”

“ஓக்கே. அவனக் கொண்டு வந்து விசாரிக்கலையா?”

“அவன் இப்போ லாக்க்ப்ல தான் இருக்கான். அவன் சம்பவத்தன்னிக்கு மூக்கு முட்ட குடிச்சிட்டு பீச்சுல கிடந்தேன்னு சொல்றான். அவன பதினோறு மணி போல ரோந்து போன கான்ஸ்டபிள்தான் வெரட்டி விட்டிருந்திருக்கார். அவரும் அவன் நல்ல போதைல இருந்ததா க்ன்ஃபர்ம் பண்றார். ஆனா கொலை பண்ணிட்டு வந்து கூட படுத்திருந்திருக்கலாம்.”

“அடுத்த சந்தேகம் யார் மேல?”

“ராமாமிர்தத்தோட பழைய பிசினஸ் பார்ட்னர் ஒருத்தர். அவர் கம்பெனி பிரச்சனைல சாந்தினி தலையிட்டது பிடிக்காம கோல்ஃப் கோர்ஸ்ல பாத்து சாந்த்தினிக்கிட்ட கத்தியிருக்கார். உயிரோட இருக்கமுடியாதுன்னு மிரட்டலா பேசியிருக்கார். அவர் சம்பவத்தன்னிக்கு பிசினஸ் விசயமா பெங்களூர் போயிருக்கார். ஆனா அவர் ஆள் வச்சி செஞ்சிருக்கலாம்”

“சரி மூணாவது ஆள்?”

“கடைசி ஆள். மதிவாணன். மோட்டிவ் வழக்கமானதுதான். சாந்தினியும் இறந்துட்டா அந்த சொத்தையெல்லாம் அனுபவிக்கலாம்னு அவனே செஞ்சிருக்கலாம். ஆனா அவன் சம்பவத்தன்னிக்கு நைட் ஷோ வேட்டைக்காரன் படத்துக்கு போயிருக்கான். டிக்கெட் கூட பத்திரமா வச்சிருக்கான். அதுனால அவன் லிஸ்ட்ல கடைசிதான்”

“ஹ்ம்ம்..”

“இன்னொரு கோணம் என்னான்னா, யாராவது திருடன் செஞ்சிருக்கலாம். ஆனா எதுவும் திருடு போகவும் இல்லை”

“இப்போ மூணு பேருதான் ஃபைனல் சந்தேக லிஸ்ட்ல இருக்காங்க. இதுல மூணு பேருக்குமே மோட்டிவும் இருக்கு, அலிபியும் இருக்கு. யாரு பண்ணியிருப்பாங்கன்னு நீ நினைக்கிற?”

அருண் அதற்கு பதில் சொல்வது இருக்கட்டும் நண்பர்களே. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். பின்னூட்டங்களில் சரியான பதில் அளியுங்கள். குற்றவாளியும், காரணமும் சரியாக சொல்லும் முதல் நபருக்கு  ஒரு புத்தகம் பரிசாக வீடு தேடி வரும்.

சுவாரசியத்திற்காக, பின்னூட்டங்கள் மட்டுறுத்தப் படுகின்றன.

நாளை பின்னூட்டங்களையும் கதையின் முடிவும் வெளியிடப்படும்

9 comments:

பின்னோக்கி said...

//ராமாமிர்தத்தோட பழைய பிசினஸ் பார்ட்னர்

இவர் தான் கொலையாளி என நினைக்கிறேன். காரணம், கோல்ப் ஸ்டிக்கை வைத்து, தலையில் அடிக்கப்பட்டு அந்த பெண் இறந்திருக்கிறார். மற்ற விளையாட்டு பொருட்கள் போல் இல்லாமல், கோல்ப் ஸ்டிக்கில், சரியாக குறி பார்த்து அடிப்பது, ஒரு கோல்ப் பிளேயரால் மட்டுமே முடியும். அதனால் அந்த தொழில் அதிபர் தான் கொலையாளி என நினைக்கிறேன்.

Chitra said...

madhivaanan. ha,ha,ha.......

vasu balaji said...

வேட்டைக்காரன் பார்த்ததால கொல வெறிக்கு சான்ஸ் இருக்கு. அந்த டிக்கட் அலிபின்னு ஏத்துக்க முடியாது. ஃபுல் படமும் பார்க்க எந்த கட்டாயமும் இல்லை.அந்த ஸ்டேச்சூக்கு ஏதோ உள்குத்து இருக்கு.

angel said...

mathi?

Anonymous said...

Madhi is the acuste.

He murders the santhini.

Minimus said...

கொலை பண்ணுனது மதிவாணன் தான்.... ஏன்னா வேட்டைக்காரன் படம் பாதியே பாக்க முடியாது.. பாதிலயே வெளிய வந்து கொலை பண்ணிருக்கான்..

Anonymous said...

மதிவாணன் தான் குற்றவாளின்னு மனசு சொல்லுது. வேட்டைக்காரன் படம் பாக்கபோனதா சொன்னது இடிக்குது.

vasu balaji said...

மதிவாணன் பழம்கலைப்பொருள் வியாபாரி. இந்த சிலை அபூர்வம் மற்றும் பல லட்சம் தேறும். இது மோடிவாக இருக்க உறுதியான காரணங்கள் இருக்கு. மற்ற இரண்டும் அவ்வளவு ஸ்ட்ராங்கா தெரியல.

பாலராஜன்கீதா said...

//படத்துக்கு போயிருக்கான். டிக்கெட் கூட பத்திரமா வச்சிருக்கான்.//
அந்த படத்தைப் பார்த்தால் அவ்வளவு கொலைவெறி வருமா என்ன ?
:-)))