Tuesday, January 26, 2010

’என்’.சி.சி - குடியரசு தின சிறப்புப் பதிவு

ஸ்கூல் என்.சி.சில சேர எனக்கு ரொம்ப ஆசை. அந்த காக்கி ட்ரவுசரும் காலுல போட்டுட்டு இருக்குற கருப்பு பூட்டும் காரணமான்னு தெரியலை. ஆனா ஸ்கூல் முடிஞ்சி கிரவுண்ட்ல வெளையாடிக்கிட்டு இருக்கும்போது பரேட் பண்ற அந்த க்ரூப்பை வேடிக்கை பாத்துட்டு இருப்பேன்.

எட்டாவது படிக்கும் போது செலக்‌ஷனுக்குப் போனேன். சும்மா மிலிட்டரி செலக்சன் மாதிரி இருந்தது. கடைசியில உயரம் பத்தாது தம்பின்னு வீட்டுக்குப் போகச் சொல்லிட்டாங்க. அப்புறம் அவங்க பரேட் முடிஞ்சதும் சாப்புடுற பரோட்டாவ ஏக்கத்தோட பாக்குறதோட ஸ்கூல் வாழ்க்கை முடிஞ்சி போச்சி.

அப்புறம் காலேஜ் வந்ததும் இங்க உயரம் குறையில்லாம இருந்ததால என்.சி.சில சேத்துக் கிட்டாங்க. அப்புறம் தான் தெரிஞ்சது பரோட்டாவுக்கு ஆசப்பட்டு தந்தூரி அடுப்புல விழுந்துட்டேன்னு.

சாதாரணமா சீனியர் ஆஃபிசர் கிட்டயோ இல்ல வாத்தியார் கிட்டயோ இல்ல தங்கமணிக்கிட்டயோ வாங்கிக் கட்டிக்கிட்டு வரவங்களப் பாத்து, “என்ன செம பரேடா?” அப்பிடின்னு எதுக்குக் கேக்குறாங்கன்னு தெரியவச்சாங்க.

முதல் நாள் ஸ்டோர் ரூம்ல போய் கிட்டத் தட்ட பொருத்தமா இருக்குற சட்டை பேண்ட் எடுத்துக்க சொன்னாங்க. நல்லா இருக்குற ஷூவ எல்லாம் சீனியர் எடுத்துக்குவாங்க. நமக்கு பிஞ்சி போன ஷூவக் குடுத்து தச்சிக்கச் சொல்லுவாங்க. நாமளும் போய் தச்சி லாடம் எல்லாம் அடிச்சிக்கிட்டு அடுத்த நாள் பரேடுக்கு மிடுக்கா வந்து நின்னோம்.

சீனியர் ஒருத்தன் எல்லாரையும் வரிசையா நிக்க வச்சி ஒவ்வொருத்தர் முன்னாடியும் தலையக் குனிஞ்சிக்கிட்டே வந்தான். எதுக்குடா இப்பிடி வர்றான்னு பாத்தேன். என் கிட்ட வந்ததும் விசயம் தெரிஞ்சிரிச்சி. “ஷூவுக்கு ஏண்டா பாலீஷ் போடலை” அப்பிடின்னு கேட்டான். “நீங்க பாலீஷ் குடுக்கலையே?” அப்பிடின்னு நியாயமா பதில் சொன்னதுக்கு கிரவுண்ட அஞ்சி தடவை சுத்தி வரச் சொல்லிட்டான். சரின்னு நானும் சுத்திட்டு பரோட்டா திங்க வந்தேன்.

அங்க பாத்தா எல்லாரும் ஷூவக் கழட்டிப் போட்டு வச்சிருந்தாங்க. சரின்னு நானும் அங்க என் ஷூவக் கழட்டிப் போட்டுட்டு சாப்பாட்டு வரிசைல போய் உக்காந்தேன். முதல்ல ஷூ பாலீஷ செக் பண்ணின சீனியர் வந்தான். “என்ன வந்து முதல் ஆளா உக்காந்துட்ட? போய் அந்த ஷூவ எல்லாம் பாலீஷ் போடு” அப்பிடின்னு சொன்னான். நான் என்.சி.சி மாஸ்டரைப் பரிதாபமா பாத்தேன். அவரு “சீனியர் சொல்றதக் கேளு” அப்பிடின்னு சொல்லிட்டுப் போயிட்டாரு. இப்பிடிச் சொல்றதுக்குத் தானா அவரு எனக்கு சொந்தக்காரரா இருக்காரு?

அப்புறம், விருதுநகர்ல இருந்து ஒரு வட நாட்டு ஆஃபிசர் பரேடுக்கு வந்தான். செம பரேட். அவன் தமிழ் தப்புத்தப்பா பேசினாலும், தமிழ் கெட்ட வார்த்தையெல்லாம் தப்பில்லாம தெரிஞ்சி வச்சிருந்தான். அதுனால அவன் பேசுற 10 வார்த்தைல 11 வார்த்தை கெட்ட வார்த்தை தான் வரும். காலேஜ் படிக்கிற பசங்கன்னு பாக்காம கைல வச்சிருக்கிற குச்சியால அடிச்சிட்டே இருந்தான். நான் நேரா போய் எங்க ஒன்னு விட்ட சித்தப்பா (அதாங்க என்.சி.சி மாஸ்டர்) க்கிட்ட போய் சொல்லிட்டேன். அவரும் சரின்னு சொல்லிட்டாரு. (என்ன சொல்லிட்டேனா? இனிமே என்.சி.சிக்கு வரலைன்னு தான்).

அதோட என் என்.சி.சி கனவு முடிஞ்சிருச்சி.

ஆனா எங்க செட்டுல ஒருத்தன் இருந்தான் ஆனைப்பட்டிக்காரன். அவன் என்.சி.சில சேந்து சீனியர் ஆகிட்டான். அவன் ஹாஸ்டல்ல ரொம்ப ஃபேமஸ். வேற எதுல சாப்புடுறதுலதான். அவன என்.சி.சில இருந்து உத்தரப்ரதேசத்துல எங்கயோ ஒரு கேம்புக்கு அனுப்புனாங்க. அதுல செலக்ட் ஆனா ஜனவரி 26 குடியரசு தின விழாப் பேரணில கலந்துக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும்னு (அப்பா தலைப்பு வந்திரிச்சி) சொல்லிக்கிட்டே போனான்.

போயிட்டு ஒரு மாசம் கழிச்சி திரும்பி வந்தான். வந்தவன் போனப்ப இருந்தத விட பாதியாகி இருந்தான்.

“என்னடா மச்சி? என்னாச்சி? ஏன் இப்பிடி இளைச்சிப் போயிட்ட?”

“அத ஏண்டா கேக்குறீங்க. காலைல 4 மணிக்கு எழுப்பி விடுவானுங்க. 10 கி.மீ தூரம் ஓடணும். அப்புறம் பரேட் முடிச்சி காலைச் சாப்பாடு 2 சப்பாத்தி. அப்புறம் மறுபடி பரேடு. அப்புறம் மதியச்சாப்பாடு 3 சப்பாத்தி. அப்புறம் காடு சுத்தம் பண்றது முள்ளு வெட்டுறதுன்னு இடுப்பொடிய வேலை, அப்புறம் சாயந்தரம் பரேடு. நைட் சாப்பாடுக்கு 2 சப்பாத்தி. எப்பிடிடா நமக்கு தாங்கும்?”

“சரி சரி. இன்னிக்கு ஹாஸ்டல்ல மட்டன் போடுறாங்க. போய் சாப்புடு”

மெஸ் திறந்ததும் உள்ள போனவன், எல்லாரும் சாப்டுட்டு (மெஸ்ல வேல பாக்குறவங்க உட்பட) சாப்டுட்டுப் போனப்பறம் தான் வெளிய வந்தான். நாங்க எல்லாம் அவன் உக்காந்து சாப்புட்ட இடத்தப் பாத்தோம். அது சாதாரண மனுசன் சாப்புட்ட இடமே இல்லை. நாடி, நரம்பு, ரத்தம், சதை, புத்தி எல்லாத்துலயும் பசி வெறி ஊறி இருக்கிறவன் சாப்புட்ட இடம். அந்த இடத்தப் பாத்ததுக்கே என்னால ரெண்டு நாளைக்கி எதுவுமே சாப்பிட முடியலை.

இன்னிக்கி குடியரசு தினம் (இந்தியால இதப் படிக்கும் போது அடுத்த நாள் ஆகியிருக்கும். ஆனா என்ன பண்றது 11:30 மணி நேரம் பின்னாடி இருந்தா இதுதான் நடக்கும்). அதுனால எல்லாருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்.

30 comments:

நசரேயன் said...

//இந்தியால இதப் படிக்கும் போது அடுத்த நாள் ஆகியிருக்கும். ஆனா என்ன பண்றது 11:30 மணி நேரம் பின்னாடி இருந்தா இதுதான் நடக்கும்//

சீக்கிரம் 12.30௦ மணி ஆகிடும்

கலகலப்ரியா said...

=))... நல்லாருக்கு பரோட்டா... ஐ மீன்.. பதிவு.. =))

Unknown said...

//நசரேயன் said...
//இந்தியால இதப் படிக்கும் போது அடுத்த நாள் ஆகியிருக்கும். ஆனா என்ன பண்றது 11:30 மணி நேரம் பின்னாடி இருந்தா இதுதான் நடக்கும்//

சீக்கிரம் 12.30௦ மணி ஆகிடும்//

10:30 இல்லை?

Unknown said...

// கலகலப்ரியா said...
=))... நல்லாருக்கு பரோட்டா... ஐ மீன்.. பதிவு.. =))//

ஹி ஹி.. நன்றி..

ப்ரியமுடன் வசந்த் said...

// அது சாதாரண மனுசன் சாப்புட்ட இடமே இல்லை. நாடி, நரம்பு, ரத்தம், சதை, புத்தி எல்லாத்துலயும் பசி வெறி ஊறி இருக்கிறவன் சாப்புட்ட இடம்.//

இந்த இடத்துல சிரிப்ப அடக்க முடில முகிலன்...

போன போஸ்ட்ல உணர்ச்சிவசப்பாட்டுட்டேனோ ஏன்னா என்னோடது குரோம்ல சைட் ஸ்க்ரோல் பார் வரல நானும் அஞ்சுதடவ பாத்திட்டு பாத்திட்டு போய்ட்டேன் எதும் தப்பா சொல்லிட்டேனா முகிலன்?

Unknown said...

//
போன போஸ்ட்ல உணர்ச்சிவசப்பாட்டுட்டேனோ ஏன்னா என்னோடது குரோம்ல சைட் ஸ்க்ரோல் பார் வரல நானும் அஞ்சுதடவ பாத்திட்டு பாத்திட்டு போய்ட்டேன் எதும் தப்பா சொல்லிட்டேனா முகிலன்?//

அய்யோ அப்பிடியெல்லாம் நான் நெனக்கல வசந்த். நானும் க்ரோம் தான் யூஸ் பண்றது. முதல்ல உங்கள மாதிரியே நானும் ஸ்க்ரோல் பார் இல்லாம திணறித்தான் போய்ட்டேன்.

அது சரி(18185106603874041862) said...

mate,

This template is giving a bit of trouble. its not loading correctly, uses only 30% of the screen, forces scrolling...

Chitra said...

அவரும் சரின்னு சொல்லிட்டாரு. (என்ன சொல்லிட்டேனா? இனிமே என்.சி.சிக்கு வரலைன்னு தான்).
...........ha,ha,ha,ha...... very funny!

Unknown said...

// அது சரி said...
mate,

This template is giving a bit of trouble. its not loading correctly, uses only 30% of the screen, forces scrolling...

//

Changed the template buddy.. now tell me if this looks okay.. :)

Unknown said...

//Chitra said...
அவரும் சரின்னு சொல்லிட்டாரு. (என்ன சொல்லிட்டேனா? இனிமே என்.சி.சிக்கு வரலைன்னு தான்).
...........ha,ha,ha,ha...... very funny!

//

வருகைக்கு நன்றி..

nivaz said...

same as like me????


what are the camps you attended??

campla yethavathu comedy allathu kastapata visayam iruntha yelluthunga....

வெற்றி said...

நீங்க எந்த கல்லூரியில் படிச்சீங்க?

Unknown said...

//nivaz said...
same as like me????


what are the camps you attended??

campla yethavathu comedy allathu kastapata visayam iruntha yelluthunga....
//

Nivaz,

sorry buddy, i attended only a few months of NCC. And no camp was arranged during this period. :(

Unknown said...

//வெற்றி said...
நீங்க எந்த கல்லூரியில் படிச்சீங்க?
//

நான் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில படிச்சேன். நீங்க?

வெற்றி said...

இல்ல..நான் உங்க ஏரியா தெரிஞ்சுக்குரதுக்காக அப்படி கேட்டேன்..நான் மதுரை..உங்க ஊர் அ.கோ. யா? அங்க நமக்கு தெரிஞ்சவங்க நிறைய பேரு இருக்காங்க..எங்க ஆச்சியோட ஊர் அ.கோ. தான்.. :))

Unknown said...

வெற்றி,

எனக்கு சொந்த ஊர் விருதுநகர் பக்கத்துல ஒரு கிராமம். அருப்புக்கோட்டைல தான் வளர்ந்தது எல்லாம். நான் 3வது வருசம் பி.எஸ்.சி படிக்கும் போது வீட்ட விருதுநகருக்கு ஷிஃப்ட் பண்ணிட்டாங்க.

நீங்க மதுரையா? நான் M.K.Ula தான் எம்.சி.ஏ படிச்சேன். நம்ம தங்கமணி மதுரைதான் - திருப்பரங்குன்றம்.

Unknown said...

வெற்றி,

எனக்கு சொந்த ஊர் விருதுநகர் பக்கத்துல ஒரு கிராமம். அருப்புக்கோட்டைல தான் வளர்ந்தது எல்லாம். நான் 3வது வருசம் பி.எஸ்.சி படிக்கும் போது வீட்ட விருதுநகருக்கு ஷிஃப்ட் பண்ணிட்டாங்க.

நீங்க மதுரையா? நான் M.K.Ula தான் எம்.சி.ஏ படிச்சேன். நம்ம தங்கமணி மதுரைதான் - திருப்பரங்குன்றம்.

வெற்றி said...

ur mail id plz?

vasu balaji said...

இந்த டெம்ப்ளேட் நல்லாருக்கு.:). இடுகை இன்னும் நல்லாருக்கு...சிரிச்சி மாளலை..

குடுகுடுப்பை said...

சுவையான இழுவையில்லாத புரோட்டா.

நானும் என்னோட என் எஸ் எஸ் பதிவை இறக்கி விடுறேன்.

Paleo God said...

செம சிரிப்பு, எனக்கும் இதெல்லாம் நடந்திருக்கு.. ஆனா நான் சாப்ட்டது பூரி கிழங்கு..:))

ஆனாலும் அந்த உடையில் ஒரு மிடுக்கு வரும்...:))

எண்ணங்கள் 13189034291840215795 said...

[[[விருதுநகர்ல இருந்து ஒரு வட நாட்டு ஆஃபிசர் பரேடுக்கு வந்தான். செம பரேட். அவன் தமிழ் தப்புத்தப்பா பேசினாலும், தமிழ் கெட்ட வார்த்தையெல்லாம் தப்பில்லாம தெரிஞ்சி வச்சிருந்தான்.]]]

மரியாதை குறைவு மனதை நெருடியது...:((

Unknown said...

//வெற்றி said...
ur mail id plz? //

மெயில்ல அனுப்பியிருக்கேன்

Unknown said...

//வானம்பாடிகள் said...
இந்த டெம்ப்ளேட் நல்லாருக்கு.:). இடுகை இன்னும் நல்லாருக்கு...சிரிச்சி மாளலை..
//

நன்றி சார்.

Unknown said...

//குடுகுடுப்பை said...
சுவையான இழுவையில்லாத புரோட்டா.

நானும் என்னோட என் எஸ் எஸ் பதிவை இறக்கி விடுறேன்//

எறக்கி விடுங்க படிச்சி சிரிக்கிறோம்.

Unknown said...

//பலா பட்டறை said...
செம சிரிப்பு, எனக்கும் இதெல்லாம் நடந்திருக்கு.. ஆனா நான் சாப்ட்டது பூரி கிழங்கு..:))

ஆனாலும் அந்த உடையில் ஒரு மிடுக்கு வரும்...:))
//

பூரிக்கிழங்கும் சாப்டிருக்கேன். ஆனாலும் பரோட்டாவ அடிச்சிக்க முடியாது

Unknown said...

//புன்னகை தேசம். said...
[[[விருதுநகர்ல இருந்து ஒரு வட நாட்டு ஆஃபிசர் பரேடுக்கு வந்தான். செம பரேட். அவன் தமிழ் தப்புத்தப்பா பேசினாலும், தமிழ் கெட்ட வார்த்தையெல்லாம் தப்பில்லாம தெரிஞ்சி வச்சிருந்தான்.]]]

மரியாதை குறைவு மனதை நெருடியது...:((//

மன்னிச்சுக்குங்க. வார்த்தைக்கு ரெண்டு கெட்ட வார்த்த பேசுறவருக்கு மரியாதை குடுக்க மனசு வரலை.

க.பாலாசி said...

இந்த மாதிரி போட்டு தாளிச்சிருவாங்கன்னுதான் நான் அந்த பக்கமே போனதில்ல. அப்பாடி மனுசங்களா இவங்கேன்னு நெனைக்கத்தோனும்... சரி போகட்டும் விடுங்க...

ஆமா இப்ப அவரு சாப்பாட்டு கஷ்டம் இல்லாம இருக்காரா?

புலவன் புலிகேசி said...

நானும் காலேஜ்ல என்.சி.சி ல சேர்ந்து பாதில ஓடி வந்தவன் தான். என்ன பன்றது மிலிட்டரிக்கு கட்டுபாடு தேவை. அதனால் தான் இவ்வளவு கெடுபிடிகள்

அது சரி(18185106603874041862) said...

This template looks good and loads pretty fast. Thanks mate.