Wednesday, January 27, 2010

துபாயில எங்க? ஜார்ஜாவா? அபிதாபியா? துபாயா?

டண்டட்டாய்ங்க்..

அது கி.பி.2002ம் வருசம். செப்டம்பர் மாசம்.

ஒரு வருசமா நாம என்ன டார்ச்சர் குடுத்தாலும் சிரிச்சிக்கிட்டே வேலை பாக்குறாண்டா இவன் ரொம்ப நல்லவன்டா அப்பிடின்னு என் டேமேஜர் நினைச்சிட்டு அமெரிக்கால இருக்குற அவர் கூட்டாளிக்கு ஃபோனப் போட்டாரு. போட்டு,  “டேய் இங்க ஒரு இளிச்சவாயன் மாட்டி இருக்கான். நீ இங்க வா அவன நல்லா டார்ச்சர் பண்ணலாம்”னு கூப்பிட்டாரு. அவனோ, “இல்லடா எனக்கு நெறய வேல இருக்கு, அதுனால அவன இங்க அனுப்பி வையி”ன்னு சொன்னான்.

எங்க டேமேஜரும் என்னைக் கூப்பிட்டு “தம்பி இத்தன நாளு இங்க எனக்கு முதுகு சொறிஞ்சது போதும். அமெரிக்காவுல நம்ம நண்பன் ஒருத்தன் இருக்கான். அவனுக்கு ஒரு ரெண்டு மாசம் சொறிஞ்சிட்டு வா” அப்பிடின்னு சொல்லி, விசா (அட கதை எழுதுற பதிவர் இல்லங்க) எடுக்க என் பாஸ்போர்ட்டை சென்னைக்கு அனுப்பி வச்சாரு.

நானும் ரொம்ப சந்தோசப்பட்டு ஊரெல்லாம் தண்டோரா (இங்கயும் பதிவர் இல்ல) போட்டு சொல்லிட்டேன். எங்கப்பாவும் மவன் வெளிநாடு போகப் போறான்னு ஊர்முழுக்க சொல்லிட்டு என்ன வழியனுப்புறதுக்காக பெங்களூரு வந்துட்டாரு. ஆனா சென்னைக்கு அனுப்பி வச்ச பாஸ்போர்ட் மட்டும் வரவே இல்லை.

கடைசியில அந்த வாரம் போக முடியாம என்னை வழியனுப்ப வந்த எங்கப்பாவ நான் வழியனுப்பிட்டு பாஸ்போர்ட்டுக்காகக் காத்திருந்தேன். ஒரு வழியா வந்து சேந்து ஃப்ளைட் டிக்கெட் எடுத்து குடுத்துட்டாங்க. அப்பல்லாம் பெங்களூர்ல இருந்து நேரடி ஃப்ளைட் கிடையாது (அப்பிடியே இருந்தாலும் அதிலெல்லாம் எங்க கம்பெனி டிக்கெட் எடுத்துக் குடுக்க மாட்டாய்ங்க) அதுனால முதல்ல பாம்பேக்கு ஜெட் ஏர்வேஸ்ல பயணம்.

அப்பத்தான் முதல் முதலா ஃப்ளைட் ஏறுரேன். அதுனால எல்லா சாமியையும் கும்பிட்டுக்கிட்டு ஜன்னல் ஓர சீட் கேட்டு வாங்கி உள்ள போனேன். நமக்கு இந்தப்பக்கம் சன்னலு அந்தப்பக்கம் ரெண்டு பேரு. எனக்கும் முன் சீட்டுக்கும் இடையில மூணு இன்சு இடைவெளி. பாத்ரூம் போகணும்னா கூட இந்தப் பக்கம் உக்காந்து இருக்குற ரெண்டு தடிப்பசங்களும் எந்திரிச்சாத்தேன் நான் போக முடியும். கஷ்டம்ங்கறது நமக்கு தெரியுது. நம்ம உடம்புக்குத் தெரியலையே. ஃப்ளைட்ல குளிரா இருக்கவும் முட்டிக்கிட்டு வந்திரிச்சி. நமக்கு சும்மாவே கூச்ச சுபாவங்கிறதால கேக்கக்கூட கூச்சப்பட்டுக்கிட்டு அடக்கிக்கிட்டே பாம்பே வரைக்கும் வந்துட்டேன்.

அங்க உள்நாட்டு விமான நிலையத்துல இருந்து ஒரு ஆம்னி பஸ்ல பன்னாட்டு விமான நிலையத்துக்குக் கூட்டிட்டுப் போனாங்க. அங்க போய் இறங்கி, நம்ம பெட்டிய எல்லாம் செக்-இன் பண்ணிட்டு போர்டிங் பாஸ் வாங்கி எமிக்ரேசனுக்குப் போனேன்.

“கிவ் மி யுவர் பாஸ்போர்ட்”னு கேட்ட அந்த ஆபிசரு, என் பாஸ்போர்ட்டைப் பாத்ததும் ஏதோ இந்தில கேட்டான். நான் மேலயும் கீழயும் மண்டைய ஆட்டுனேன். மறுபடி அதையே கேட்ட மாதிரி இருந்தது. அதுல கஹாங் அப்பிடிங்கிற வார்த்தை மட்டும் புரிஞ்சதும் “USA" அப்பிடின்னு சொன்னேன். மறுபடி என்னவோ கேட்டான். அதுல கப் அப்பிடிங்கிற வார்த்தக் கேட்டதும் “டுடே” அப்பிடின்னு சொன்னேன். என்ன ஒரு முறை முறைச்சான். “ஆஹா தப்பு பண்ணிட்டோம் போலடா” அப்பிடின்னு நினைச்சிக்கிட்டு “குட் யூ ப்ளீஸ் ரிப்பீட் யுர் கொஸ்டின்?” அப்பிடின்னு கேட்டேன். அவன் நீளமா ஹிந்தில ஏதோ சொல்லிட்டு (மதராஸி அப்பிடிங்கிறது மட்டும் தான் புரிஞ்சது) “வென் வில் யூ பி பேக்” அப்பிடின்னு கேட்டான். ‘இத மொதல்லயே கேட்டுத் தொலையறதுக்கு என்ன?’ அப்பிடின்னு நினைக்க மட்டும் செஞ்சிட்டு “2 மன்த்ஸ்”னு சொன்னேன். மறுபடியும் முறைச்சிக்கிட்டே போனா போவுதுன்னு சீல் குத்தி பாஸ்போர்ட்டைக் கையில குடுத்துட்டான்.

நேரா டைனர்ஸ் க்ளப் லவுஞ்ச்க்குப் போய் உக்காந்தேன். நம்ம பய புள்ளைக முதல்லயே சொல்லிவிட்டு இருந்ததால அங்க குடுத்த ஃப்ரீ பீர் ஒண்ணையும் ஒரு அண்டா ஸ்னாக்சையும் காலி பண்ணி அதோட என் டின்னரை முடிச்சிக்கிட்டேன். அங்க இருந்த சோஃபால லேசா கண்ணசந்தேன்.  காலங்காத்தால 2:00 மணிக்குத்தான் ஃப்ளைட்டு. போர்டிங் அனவுன்ஸ் பண்ணதும் என்ன வந்து எழுப்பி விட்டான் அங்க இருந்த ஆளு.

போர்டிங்குக்குக் கூப்பிட்டதும் போய் முதல் ஆளா நின்னா, “தம்பி, டீ இன்னும் வரல” அப்பிடின்னு சொன்னான். நான் போர்டிங் கார்ட நீட்டவும் “நாங்க கூப்பிடும்போது வந்தாப் போதும்”னு சொல்லி அனுப்பிட்டான். சீட்டு நம்பர் சொல்லி சொல்லிக் கூப்பிட்டாய்ங்க. நம்ம முறை வந்ததும் அந்த ஆளை ஒரு முறை முறைச்சிட்டு போர்டிங் கார்டைக் காட்டினேன். வாங்கி அதுல பாதிய பிச்சி வச்சிக்கிட்டு ஃப்ளைட்டுக்கு அனுப்பிட்டான்.

அந்த ஃப்ளைட்டோ ஜெட் ஏர்வேஸே பரவாயில்லங்கற மாதிரி இருந்தது. நானே கஷ்டப்பட்டுத்தான் என் சீட்டுக்குப் போகணும். (ஏன் ஃப்ளைட்ல கே.பி.என் மாதிரி லெக் ஸ்பேஸ் இல்ல?) நல்ல வேளையா எனக்கு இந்தப் பக்கம் யாருமே இல்லை. அஞ்சி சீட்டுக்கு ஒரு டிவி வச்சி படம் போட்டாய்ங்க. நம்ம பய புள்ளைக இண்டர்நேசனல் ஃப்ளைட்ல சரக்கு எல்லாம் ஃப்ரீ மச்சின்னு சொன்னதுனால எப்ப எப்பன்னு உக்காந்து இருந்தேன்.

ஃப்ளைட் டேக் ஆஃப் ஆகி அரை மணி நேரம் கழிச்சி ஏர் ஹோஸ்டஸ் வந்தா. குடிக்க என்ன வேணும்னு கேட்டா.

“என்ன இருக்கு?”

“கோக், பெப்ஸி, ஆரஞ்ச் ஜூஸ், லெமனேட்”

“சரக்கு எதுவும் இல்லையா?”

“இருக்கு. உனக்கு என்ன வேணும்?”

“இந்தக் காச்சுனது இருக்கா?”

“இருக்கு. அஞ்சு டாலர் குடு?”

பகீர்னு ஆயிடுச்சி. என்னடா, நம்ம பய புள்ளைக வேற மாதிரி சொன்னாய்ங்களே? அப்பிடின்னு யோசிச்சிட்டு, “எதுக்குக்கா காசு கேக்குற” அப்பிடின்னு கேட்டேன்.

“எங்க ஃப்ளைட்டுல காசு குடுத்தாத்தான் சரக்கு”னு சொல்லிட்டா. ஏமாத்தத்த அடக்கிக்கிட்டு ஒரு அஞ்சு டாலர் குடுத்தேன். நம்ம ஊரு கட்டிங் குவாட்டர (இப்பயும் இருக்கா?) விட சின்னதா ஒரு பாட்டில் குடுத்தா. “இதுவா அஞ்சி டாலரு?” அப்பிடின்னு அவள ஒரு லுக்கு விட்டேன். அவ திருப்பி என்ன விட்ட லுக்குல “அவனா நீயி”ன்னு கேட்ட மாதிரி இருந்தது. அதோட இந்தப் பக்கம் திரும்பிக்கிட்டேன். என்னோட நிலைமைய எண்ணி நொந்துக்கிட்டே அந்த ஸ்காட்சைக் குடிச்சேன். போதை ஏறுச்சோ இல்லையோ வயித்தெரிச்சல் வந்திரிச்சி.

ஒரு வழியா சார்ல்ஸ்-டி-கால் ஏர்போர்ட்ல கொண்டு போய் சேத்தாய்ங்க. அங்க இருந்து சின்சினாட்டிக்கு ஃப்ளைட்டு. இந்த ஃப்ளைட்டுல இருந்த ஒரே ஒரு இந்தியன் நான் தான். எனக்கு வழக்கம்போல ஜன்னல் சீட்டு. எனக்கு எடது பக்கம் ஒரு வெள்ளக்காரக்கா வந்து உக்காந்தாங்க. அவங்களுக்கு எப்பிடி எக்ஸ்ட்ரா லக்கேஜ் போடாம டிக்கெட் மட்டும் போட்டாய்ங்கன்னு நெனக்கிற அளவுக்கு என் சீட்டுல பாதிக்கும் சேத்து உக்காந்தாங்க. அவங்கள மீறி நான் எங்க எந்திரிச்சி வெளிய போறது. மறுபடியும் சீட்டுலயே கிடந்தேன்.

ஒருவழியா சின்சினாட்டி வந்து அமெரிக்கன் இமிக்ரேசன் (இதப் பத்தி தனிப் பதிவே போடலாம்), கஸ்டம்ஸ் (ஜீன்ஸ் படத்துல காட்டுற மாதிரி என் ஊறுகா பாட்டில எல்லாம் கீழ போடல) கிளியர் பண்ணி வெளிய வந்து என் அடுத்த ஃப்ளைட் பிடிக்க கேட்டுக்குப் போனேன்.

நம்ம ஊரு பாம்பே ஏர்போர்ட் மாதிரி இல்லை. இங்க இருந்து நெறய ஃப்ளைட் போகுது. அதுனால கையில இருந்த போர்டிங் பாஸையும் அங்க இருந்த டிவியில ஃப்ளைட் டிப்பார்ச்சர் ஸ்கெட்யூலையும் பாத்துக்கிட்டே இருந்தேன். மொத மொத நம்ம நாட்ட விட்டு வெளிய வந்த புரியாத அந்த உணர்ச்சியில திருவிழால காணாமப் போன சின்னப்பையன் மாதிரி உக்காந்திருந்தேன். அப்ப ஒரு பொம்பளப் போலீசு என் கிட்ட வந்து “தம்பி என் கூட வா” அப்பிடின்னு கூட்டிட்டுப் போனா. போயி ஒரு துணி மறைவுல வச்சி ஒரு ஆளு என் உடம்பெல்லாம் தடவித தடவிப் பாத்தான். ஷூவை பெல்ட்டை எல்லாம் கழட்டி (ட்ரெஸ்ஸக் கழட்ட சொல்லலைன்னா நீங்க நம்பவாப் போறீங்க) செக் பண்ணிப் பாத்துட்டு “தேங்க்ஸ் ஃபர் கோ-ஆப்பரேட்டிங்க்” அப்பிடின்னு சொல்லி அனுப்பிட்டான்.

ஏர்ப்போர்ட்ல அத்தன பேரு இருக்கும்போது நம்மள எதுக்குக் கூப்பிட்டு செக்கப் பண்ணான்னு நான் இன்னும் யோசிச்சிக்கிட்டு தான் இருக்கேன். ஆனா ஒண்ணு அதுக்கப்புறம் ஃப்ளைட்டுல ஜன்னல் சீட்டு கேக்குறதே இல்ல.

பின் குறிப்பு: மே மாசம் இந்தியா போறது உறுதியாயிடுச்சி. இதிஹாட் ஏர்வேய்ஸ்ல தான் வரலாம்னு இருக்கோம். அபுதாபில ரெண்டு நாள் தங்கி ஷாப்பிங் பண்ணிட்டுப் போலாம்னு ப்ளான்.

அபுதாபில ஹோட்டல் எல்லாம் எப்பிடி ரேட்? அங்க சுத்திப் பாக்குறதுக்கு என்ன இடமெல்லாம் இருக்கு (ரெண்டு நாளைக்குள்ள), தங்கம் எல்லாம் சுத்தமா கிடைக்கும்னு சொல்றாங்களே? தங்கம் வாங்க சேல்ஸ் டேக்ஸ் இருக்கா? யாராவது கொஞ்சம் சொல்லுங்கப்பு....(ஆதவன் பேச்சைக் கேட்டு கொஞ்சம் மாத்திட்டேன்).

38 comments:

Anonymous said...

மே மாசம் இந்தியா போறதுக்கு இப்பவே இந்த ப்ளானிங்கா. சந்தோசமா போயிட்டு வாங்க :)

Prathap Kumar S. said...

ஹஹஹ. பின்னிட்ங்கப்பு...செம காமெடி...

அபுதாபில ஷாப்பிங்கா... துபாயா இருந்தா நிறைய சொல்லியிருப்பேன் சொல்லிருப்பேன்...
விலை அப்படின்னு பார்த்தா ரொம்ப வித்தியாசம் ஒண்ணும் இல்லங்க... இப்ப இந்தியாவுல கிடைக்காதது என்ன இருக்கு... வால்மார்ட் கூட வரப்போகுது... அமீரகத்துல ஷாப்பிங்க பண்றதுங்கற கிரேஸ் அவுட் டேட்டட் ஆயிருச்சுங்க...
என்னைக்கேட்டா இந்தியாவே பெஸ்ட்...

☀நான் ஆதவன்☀ said...

:))))

அபுதாபியில சுத்தி பாக்குறதுக்கு ஷாப்பிங் மால் மட்டும் தான் இருக்கு. அங்கிருந்து இரண்டு மணி நேர பயணத்துல துபாய் போகலாம். ஆனா அங்கேயும் ஷாப்பிங் மால்’ஸ் தான் இருக்கு :))

தங்கம் எல்லாம் விலை குறைவு கிடையாதுங்க.(யாருங்க இதெல்லாம் கிளப்பி விடுறது?) :)) உலகம் முழுசும் ஒரே ரேட்டு தான்.

வடுவூர் குமார் said...

அபுதாபில் இருந்து 2 மணி நேரம் துபாய் அங்கிருந்து காரில் 5 மணி நேரத்தில் மஸ்கட் அதன் பிறகு இங்கிருந்து போகலாம்,ஊரும் கிட்டக்க.அபுதாபி,துபாயில் எல்லாம் Mall தான்.பிளேனில் வரும் போதே அந்த உயர கட்டிடத்தையும் பார்த்துவிடலாம்,பிறகு என்ன இருக்கு அங்க....தெரியலை.
தங்கம்- குவாலிட்டி தான் ஊருக்கும் இங்கைக்கும் வித்தியாசம் என்று சொல்கிறார்கள்.சுங்கத்துறை விதிப்படி 31 கிராம் இலவசமாக எடுத்துச்செல்லமாம் மற்றவைக்கு வரி கட்டனும்.

vasu balaji said...

வய் ப்ளாட்(டர்)? சாஆஆஆம் ப்ளாட்(டர்):)). அப்ப சின்சினாட்டி இம்மிக்கிரேஷன் கதை, அபுதாபி போன கதை, தங்கமணிக்கு தங்கம் வாங்கின கதை எல்லாம் பிரவு மாதிரி எதிர்பார்க்கலாம்:))

Jawahar said...

படு சுவாரஸ்யம். அது சரி, சரக்குக்கு காசு கேட்கிற பன்னாட்டு விமான சர்வீசுகள் கூட உள்ளனவா! அப்ப டிக்கட் காசு முப்பத்தி ரெண்டாயிரத்துக்கும் கீழே இருந்திருக்குமே?


http://kgjawarlal.wordpress.com

Unknown said...

//சின்ன அம்மிணி said...
மே மாசம் இந்தியா போறதுக்கு இப்பவே இந்த ப்ளானிங்கா. சந்தோசமா போயிட்டு வாங்க :)//

அம்மிணி எந்த ஒரு விசயத்தயும் செய்யறதுக்கு முன்னாடி ப்ளான் பண்ணனும். ப்ளான் பண்ணாமப் பண்ணா நல்லா இருக்காது.

இப்ப டிக்கெட் எடுத்தாத்தான் சீப்பாக் கிடைக்கும். சும்மாவா ஒரு தடவை போயிட்டு வரதுக்கு கிட்டத்தட்ட $7000/- பழுத்துரும்.(டிக்கெட் மற்றும் இன்ன பிற செலவுகள்)

கண்ணா.. said...

அமீரகத்திற்கு வரவேற்கிறோம்..

இங்க வேர்ல்ட் டாலஸ்ட் டவர் பாக்கலாம். அப்புறம் டிஸர் ஃசபாரி ரொம்ப நல்லா இருக்கும். இங்க கீரிக்ல் ஃபுளோட்டிங் ரெஸ்டாரண்ட் சூப்பரா இருக்கும்.


துபாய்ல் உள்ள இடங்கள் குறித்து நண்பர் பதிவர் பிரதீப் நிறைய பதிவிட்டுள்ளார். லிங்க் தேடி தருகிறேன்.

தங்கம் மற்றும் எலக்டிரானிக்ஸ் குட்ஸ் நல்லா இருக்கும் வாங்கலாம்.

மேலதிக தகவலுக்கு மெயில் பண்ணவும்: mk1venki@gmail.com

Unknown said...

நாஞ்சில் பிரதாப் said...
ஹஹஹ. பின்னிட்ங்கப்பு...செம காமெடி...

அபுதாபில ஷாப்பிங்கா... துபாயா இருந்தா நிறைய சொல்லியிருப்பேன் சொல்லிருப்பேன்...
விலை அப்படின்னு பார்த்தா ரொம்ப வித்தியாசம் ஒண்ணும் இல்லங்க... இப்ப இந்தியாவுல கிடைக்காதது என்ன இருக்கு... வால்மார்ட் கூட வரப்போகுது... அமீரகத்துல ஷாப்பிங்க பண்றதுங்கற கிரேஸ் அவுட் டேட்டட் ஆயிருச்சுங்க...
என்னைக்கேட்டா இந்தியாவே பெஸ்ட்..//

கரெக்ட் தான் பிரதாப். ஆனா தங்கம் வாங்கனுமின்னு தங்கமணி (சரியாத்தான்யா பேரு வச்சிருக்காய்ங்க) ஆசப்படுறாங்க. துபாய்/அபுதாபில நல்ல க்வாலிட்டியாக் கிடைக்கும்னு கேள்விப் பட்டேன்.

Unknown said...

//☀நான் ஆதவன்☀ said...
:))))

அபுதாபியில சுத்தி பாக்குறதுக்கு ஷாப்பிங் மால் மட்டும் தான் இருக்கு. அங்கிருந்து இரண்டு மணி நேர பயணத்துல துபாய் போகலாம். ஆனா அங்கேயும் ஷாப்பிங் மால்’ஸ் தான் இருக்கு :))

தங்கம் எல்லாம் விலை குறைவு கிடையாதுங்க.(யாருங்க இதெல்லாம் கிளப்பி விடுறது?) :)) உலகம் முழுசும் ஒரே ரேட்டு தான்.
//

சீப்புனா, டேக்ஸ் கிடையாதுன்னு கேள்விப்பட்டேன். இந்த செய்கூலி சேதாரமெல்லாம் எப்பிடி?

Unknown said...

//வடுவூர் குமார் said...
அபுதாபில் இருந்து 2 மணி நேரம் துபாய் அங்கிருந்து காரில் 5 மணி நேரத்தில் மஸ்கட் அதன் பிறகு இங்கிருந்து போகலாம்,ஊரும் கிட்டக்க.அபுதாபி,துபாயில் எல்லாம் Mall தான்.பிளேனில் வரும் போதே அந்த உயர கட்டிடத்தையும் பார்த்துவிடலாம்,பிறகு என்ன இருக்கு அங்க....தெரியலை.
தங்கம்- குவாலிட்டி தான் ஊருக்கும் இங்கைக்கும் வித்தியாசம் என்று சொல்கிறார்கள்.சுங்கத்துறை விதிப்படி 31 கிராம் இலவசமாக எடுத்துச்செல்லமாம் மற்றவைக்கு வரி கட்டனும்.//

10 கிலோ வரைக்கும் கொண்டு போகலாம்னு கேள்விப் பட்டேனே? நீங்க இலங்கையா? இந்தியாவா?

Chitra said...

முதல் flight அனுபவம் பத்தி சொல்லி கலக்கல் பதிவு கொடுத்து இருக்கீங்க. இப்போ வந்திட்டு அதுக்குள்ளே மே மாதம் இந்தியா ட்ரிப் ஆ? என்ஜாய், மக்கா.

Unknown said...

//Jawahar said...
படு சுவாரஸ்யம். அது சரி, சரக்குக்கு காசு கேட்கிற பன்னாட்டு விமான சர்வீசுகள் கூட உள்ளனவா! அப்ப டிக்கட் காசு முப்பத்தி ரெண்டாயிரத்துக்கும் கீழே இருந்திருக்குமே?
//

இன்னிக்கும் இருக்குங்கண்ணா.. அதுக்குப் பேரு டெல்டா ஏர்லைன்ஸ். காசெல்லாம் அப்பிடி சீப் எல்லாம் இல்லை.

Unknown said...

//கண்ணா.. said...
அமீரகத்திற்கு வரவேற்கிறோம்..

இங்க வேர்ல்ட் டாலஸ்ட் டவர் பாக்கலாம். அப்புறம் டிஸர் ஃசபாரி ரொம்ப நல்லா இருக்கும். இங்க கீரிக்ல் ஃபுளோட்டிங் ரெஸ்டாரண்ட் சூப்பரா இருக்கும்.


துபாய்ல் உள்ள இடங்கள் குறித்து நண்பர் பதிவர் பிரதீப் நிறைய பதிவிட்டுள்ளார். லிங்க் தேடி தருகிறேன்.

தங்கம் மற்றும் எலக்டிரானிக்ஸ் குட்ஸ் நல்லா இருக்கும் வாங்கலாம்.

மேலதிக தகவலுக்கு மெயில் பண்ணவும்: mk1venki@gmail.com
//

மெயில் அனுப்புறேன் நண்பா..

Unknown said...

//Chitra said...
முதல் flight அனுபவம் பத்தி சொல்லி கலக்கல் பதிவு கொடுத்து இருக்கீங்க. இப்போ வந்திட்டு அதுக்குள்ளே மே மாதம் இந்தியா ட்ரிப் ஆ? என்ஜாய், மக்கா//

யக்கா மேல வருசத்தப் பாருங்க. முதல் முதல்ல வந்தது 2002ல. ஆனா வருசத்துக்கு ஒரு தடவ இந்தியா போகலைன்னா வீட்டுல சாப்புடத் தூங்க முடியாது..

Unknown said...

//வானம்பாடிகள் said...
வய் ப்ளாட்(டர்)? சாஆஆஆம் ப்ளாட்(டர்):)). அப்ப சின்சினாட்டி இம்மிக்கிரேஷன் கதை, அபுதாபி போன கதை, தங்கமணிக்கு தங்கம் வாங்கின கதை எல்லாம் பிரவு மாதிரி எதிர்பார்க்கலாம்:))
//

சுவாரசியமாக் கிடைச்சா பதியாம விட்டுறவாப் போறோம்.. :))

Busy said...

y Ethihad, U come thru Emirates Airlines, Now DSF (Dubai Shopping Festival) Going on, So u can get offer, they will arrange the tour pack.

சந்தனமுல்லை said...

:-))))

சந்தோஷம் இடுகையிலே தெரியுது...Safe journey!

கண்ணா.. said...

நண்பர் பதிவர் பிரதீபின் என் பக்கங்களில் நான் ரசித்த துபாய் என ஆறு பதிவு எழுதியுள்ளார். பாருங்கள் கொஞ்சம் ஐடியா கிடைக்கும்

http://oviya-thamarai.blogspot.com/2009/10/dubai-metro-6.html

நாஸியா said...

என்னைக்கேட்டா இங்க தங்கம் வாங்கலாம். நம்ம ஊருல தங்கம் வாங்கனும்டா 15 ல இருந்து 20% வரைக்கும் சேதாரம் போடுவாங்க. அதாவது நீங்க ஒரு சவரன் வாங்குறீங்கன்டா அதுக்கு கூடுதலா 20% குடுக்கனும். செய்கூலி கிடையாது.

துபாய்ல‌ சேதாரம் கிடையாது, ஆனா செய்கூலி இருக்கும். பர்சென்டேஜ் கணக்குல இல்லை. ஒரு க்ராம் 130 திர்ஹம்னா அதுல பத்தோ பதினைஞ்சு திர்ஹம் செய்கூலி இருக்கும். 10%ன்னு வெச்சுக்கோங்களேன். எப்படியும் ஓரளவுக்கு சேமிக்கலாம், தரமும் நல்லா இருக்கும்..

ஆனா பழைய நகைய இங்க ரொம்ப குறைச்சலா தான் எடுப்பாங்க.

அபுதாபில எப்படின்னு தெரியல..

Paleo God said...

முகிலன் தங்கம் நகைக்கா, அல்லது முதலீட்டுக்கா? நகை எப்போதும் இழப்புதான், முதலீடுன்னா Gold ETF ட்ரை பண்ணுங்க, பாதுகாப்பு + லிக்குடிடி, செண்டிமெண்ட் இல்லாம டக்குனு வித்துடலாம். அன்னனிக்கி ரேட்ல கிடைக்கும்.

Paleo God said...

மவனே வயிறு புண்ணாயிரிச்சி.. ஆமா ஹக்கீஸ் ட்ரை பண்ணியிருக்கலாமெ..:))

சங்கர் said...

தேதி சொன்னீங்கன்னா பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு பண்ணிடலாம்

பின்னோக்கி said...

கடைசி வரை உச்சா எங்க போனீங்கன்னு சொல்லவே இல்லை :).

உங்களுடன் பயணம் செய்த மாதிரி. முதல் விமானப் பயணம் வித்தியாசமான அனுபவங்களைத் தரும்.

சிங்கப்பூர் பிளைட்டில் எல்லாம் ப்ரீ தான். நான் தான் ஆரஞ்சு சூசு குடிச்சேன்.

Prathap Kumar S. said...

தங்கம் வாங்கனும்னா ஓகே... அமீகரத்தில் தங்கத்தின் தரம் அரசாங்கத்தால் நிர்ணயம் செய்யப்படுவதால் கண்டிப்பாக இந்தியாவை விட நல்ல தரமான தங்கம் வாங்கலாம். தங்கத்தின் விலையில் எந்தமாற்றம் இருக்காது.

//இங்க வேர்ல்ட் டாலஸ்ட் டவர் பாக்கலாம். //

ஆமாங்க நம்ம கண்ணா அங்கதான் கொத்தனாரா வேலை பார்க்காரு..அதான் இவ்ளோ பாசம்...
வே...கண்ணா அமீரகத்துல ஒரு போஸ்ட்டர் அடிச்சு ஒட்டவேண்டியதுதானவே...


//கடைசி வரை உச்சா எங்க போனீங்கன்னு சொல்லவே இல்லை :).//
அட ஆமால்ல. மறந்தே போனேன்...லாஜீக் இல்லாம ஏன் பதிவை முடிச்சீங்க...
கடைசிவரைக்கும் எங்கப்போய் உச்சா வச்சீங்க சொல்லவே இல்லயே...? :-)

Menaga Sathia said...

செம காமெடி...

kudukuduppai said...

varumpothu konjam ottaka meat vaangittu vaanga

நசரேயன் said...

//மே மாசம் இந்தியா போறது உறுதியாயிடுச்சி.//

போங்க நான் பின்னாடி வாறன்

Unknown said...

//Busy said...
y Ethihad, U come thru Emirates Airlines, Now DSF (Dubai Shopping Festival) Going on, So u can get offer, they will arrange the tour pack.//

Etihad is at least $800/- cheaper than Emirates.. :)

Unknown said...

@சந்தனமுல்லை - நன்றிங்க.

@கண்ணா - சுட்டிக்கு நன்றி

@நாஸியா - தகவலுக்கும் முதல் வருகைக்கும் நன்றி

@பலா பட்டறை - நகைக்கு தான் சங்கர். முதலீடு பண்ற அளவுக்கு நான் இன்னும் சம்பாதிக்கலை.

@பலா பட்டறை - அப்ப ஹக்கீஸ் இருக்கிறதெல்லாம் தெரியாது :)

@சங்கர் - இன்னிக்கித்தான் ஆஃபீஸ்ல லீவு கேட்டிருக்கேன். முடிவானதும் அறிவிபோம்ல

@பின்னோக்கி - டெல்டால மட்டும் தான் காசு. அதுல இருந்து டெல்டால போறதே இல்லை

@நாஞ்சில் பிரதாப் - ஏர்போர்ட் பாத்ரூம்ல தான். ஒரே ஒரு தடவை துபாய் ஏர்போர்ட் வரைக்கும் வந்திருக்கேன். அந்தக் கதைய இன்னொரு முறை சொல்றேன்.

@மேனகாசாதியா - நன்றிங்க

@குடுகுடுப்பை - கண்டிப்பா வாங்கிட்டு வர்றேன். ஆமா டெக்ஸாஸ் பாதி டெசர்ட்தான அங்க எல்லாம் ஒட்டக இல்லையா?

@நசரேயன் - நான் பாண்டியப் பேரரசுக்குப் போறேன். நீங்க?

ப்ரியமுடன் வசந்த் said...

அப்பாடி.... உங்களுக்கு முன்னாடி வரவேற்புக்கு நான் போயி பிரமாண்ட வரவேற்பு கொடுத்துடுறேன்....

கலக்கல் பிரயாணம்...நல்லாவே சொல்லியிருக்கீங்க

அது சரி(18185106603874041862) said...

//
அவ திருப்பி என்ன விட்ட லுக்குல “அவனா நீயி”ன்னு கேட்ட மாதிரி இருந்தது. அதோட இந்தப் பக்கம் திரும்பிக்கிட்டேன்.
//

அந்த பொண்ணுக்கு தான் பதில் சொல்லல...சரி விடுங்க...இப்ப பதில் சொல்றது? :0)))

புலவன் புலிகேசி said...

அனுபவ விவரிப்பு சூப்பரு...

Anonymous said...

super mame

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நாமல்லாம் ரொம்ப விவரம்ல.. மொத வாட்டிக்கு வந்து கூட்டிட்டு போவச் சொல்லிட்டம் :))

ரேண்டமா யாரோ ஒருத்தர செக் பண்ணிருப்பாங்க..

போயிட்டு திரும்பி வரீங்க தான? :))

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
This comment has been removed by the author.
விக்னேஷ்வரி said...

வாங்கி அதுல பாதிய பிச்சி வச்சிக்கிட்டு ஃப்ளைட்டுக்கு அனுப்பிட்டான். //

ஏன் ஃப்ளைட்ல கே.பி.என் மாதிரி லெக் ஸ்பேஸ் இல்ல? //

ஹாஹாஹா... ரசிச்சு, சிரிச்சு படிச்சேன்.

பழமைபேசி said...

அஃகஃகா! ஊருக்கா? ச்சே... எனக்கு மறுபடியும் போகணும் போல இருக்கு!