Wednesday, March 31, 2010

விழா

“ஏய் இந்தாப்பா. மேடை போட்டாச்சா?”

“போட்டாச்சிண்ணே”

“மைக் செட்டு, சோடா?”

“சொல்லியாச்சிண்ணே”

“மாலை?”

“பெங்களூர்லருந்து ஆள் வந்து கட்டிக்கிட்டே இருக்காய்ங்கண்ணே”

“பேச்சாளர்களை டேசன்லருந்து கூட்டியார வண்டி போயிருக்கா?”

“அப்பவே போயிருச்சிண்ணே. நம்ம தங்கராசுதான் ஓட்டிக்கிட்டு போயிருக்கான்”

“சரி கூட்டத்துக்கு ஆளு?”

“நாலு லாரி அனுப்பியிருக்குண்ணே... ஆளுக்கு அம்பது ரூவாயும் கோழி பிரியாணியும் குடுக்கச் சொல்லியிருக்கேன்”

“எலேய் என்னலே அம்பது ரூவாங்குற? எங்கிட்டா எழுவத்தஞ்சின்னு சொன்னான்”

“யாருண்ணே சொன்னது?...”

“சரி விடு. அவன நாம்பாத்துக்குறேன். எந்தக் கொறையும் இருக்கப்படாதுலே.. அப்புறந் தலவருக்கு கோவம் வந்துரும்”

“அதெல்லாம் பிரச்சனையிருக்காதுண்ணே. நான் கூட இருந்து பாத்துக்கறேன்”

“சரி தலவரக் கூப்புட ஏர்ப்போர்ட்டுக்கு நானே போயிருதேன். என் வண்டிக்கிப் பெட்ரோல் போட்டுட்டு வந்துரு”

“சரிண்ணே”

“இங்க பாருப்பா. சும்மா இல்ல. நம்ம தலைவருக்கு விருது கிடைச்சிருக்கு. அதைக் கொண்டாடனும்னா தடபுடலா இருக்கணும் விழா சரியா?”

“சரிண்ணே”

...

...

...

எதற்கு இந்த தடபுடல் விழா? எல்லாம் இதற்குத்தான்..


விருதை வழங்கிய திவ்யா ஹரிக்கு நன்றி..

இந்த விருதை நான் என் நண்பர்கள் சிலரோடு பகிர்ந்து கொள்கிறேன்.

1. சிங்கை சிங்கம் பிரபாகர் - லவ்வுல ஏப்ரல் ஃபூல் ஆனதுக்கு இது ஆறுதல்
2. தன் உயிரையும் துச்சமென மதித்து தமிழ்ப் பதிவர்களைக் காக்கும் ஜெட்லீ
3. பதிவர் சங்கமத்துக்கு விளக்கெண்ணெய் லாரியில் வர இருக்கும் பட்டா பட்டி
4. கிரிக்கெட் பிதற்றல்கள் என்ற வலைப்பூவில் அந்த விளையாட்டைப் பற்றிய அரிய பல தகவல்களை அள்ளி வழங்கும் அந்த வலைப்பதிவருக்கு (கலைஞர் மட்டும் தான் அண்ணா விருது வாங்கிக்குவாரா?)

22 comments:

Prathap Kumar S. said...

அய்யோ... இதுக்கா இவ்ளோ அலப்பறை....முடில.... அடுத்த கவுஜையை போட்டுற வேண்டியதுதான்...எலே பசுபதி எட்றா வண்டியை.....

ஜெய்லானி said...

கொசுக்கடி தாங்க முடியலப்பா !!!!!!

நாடோடி said...

விருது பெற்ற‌த‌ற்கு வாழ்த்துக்க‌ள்...

சங்கர் said...

இதுவே கடைசியா இருக்கட்டும், விருதுகள் இனிமேல் சங்கத்தின் மூலமாகத்தான் வழங்கப்பட வேண்டும் :)))))

vasu balaji said...

நான் எதுக்கு பாராட்டுறது. விருது வாங்கினதுக்கா நமக்கு நாமேக்கா:))

குடுகுடுப்பை said...

விருந்துக்கு நான் ரெடி.

VISA said...

//கலைஞர் மட்டும் தான் அண்ணா விருது வாங்கிக்குவாரா?//

Heii super :)

Unknown said...

நாஞ்சிலு.. போதும்பா உன் கவிதையைப் படிச்சிட்டி புள்ளக்குட்டியெல்லாம் தூங்காம அழுவுது..

Unknown said...

//ஜெய்லானி said...
கொசுக்கடி தாங்க முடியலப்பா !!!!!//

புது கறுப்பு ஹிட் யூஸ் பண்ணலையா நீங்க?

Unknown said...

//நாடோடி said...
விருது பெற்ற‌த‌ற்கு வாழ்த்துக்க‌ள்.//

நன்றி நாடோடி .. வீடியோ நாலும் சூப்பரா இருந்தது

(ஹேய் எந்தப் பதிவுக்கு எங்க பின்னூட்டம் போடுற?)

Unknown said...

//சங்கர் said...
இதுவே கடைசியா இருக்கட்டும், விருதுகள் இனிமேல் சங்கத்தின் மூலமாகத்தான் வழங்கப்பட வேண்டும் :))))//

சரிங் தல

Unknown said...

//வானம்பாடிகள் said...
நான் எதுக்கு பாராட்டுறது. விருது வாங்கினதுக்கா நமக்கு நாமேக்கா:))//

இதுக்கொரு தடவை, அதுக்கொரு தடவை பாராட்டு விழா வச்சிக்கலாமே?

Unknown said...

//குடுகுடுப்பை said...
விருந்துக்கு நான் ரெடி..//

பொதுச் செயலாளரே நல்லாப் பாரும்.. விருது.. விருந்துலயே இருந்தா எப்பிடி

Unknown said...

//VISA said...
//கலைஞர் மட்டும் தான் அண்ணா விருது வாங்கிக்குவாரா?//

Heii super :).//

நன்றி விசா..

அப்புறம் உங்க கேப்ஸ்யூல் கதைகள் நல்லாருந்திச்சி..

(மறுபடியும் பார்றா?)

Chitra said...

விருது பெற்ற‌த‌ற்கு வாழ்த்துக்க‌ள். Congratulations!


உங்களிடம் இருந்து விருது பெறும் பாக்கியம் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
:-)

சாந்தி மாரியப்பன் said...

விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

கலை நிகழ்ச்சிகளுக்கு யாரையும் மிரட்டி, சீ.. திரட்டிக்கொண்டு வரலையா?.. :-))

க.பாலாசி said...

அட இதுக்குத்தானுங்களா இந்த பில்டப்பு... சரிதான்...

வாழ்த்துக்களுங்க...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அய்.. எனக்கு ரெண்டு விருது..
( ஜெய்லானி , பிரியாணி குடுக்காம, விருது மட்டும் கொடுத்துட்டாரு..அவர அப்புறம் பார்த்துக்கிறேன்..)

நன்றிணே..

S Maharajan said...

விருது பெற்ற‌த‌ற்கு வாழ்த்துக்க‌ள்.

பழமைபேசி said...

அஃகஃகா...வாழ்த்துகள்!

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

அடேங்கப்பா :))

//கிரிக்கெட் பிதற்றல்கள் என்ற வலைப்பூவில் அந்த விளையாட்டைப் பற்றிய அரிய பல தகவல்களை அள்ளி வழங்கும் அந்த வலைப்பதிவருக்கு (கலைஞர் மட்டும் தான் அண்ணா விருது வாங்கிக்குவாரா?)//

இது நல்லாயிருக்கே..

கலகலப்ரியா said...

இந்த விழாவ மிஸ் பண்ணிட்டேன்பா.. இனிமே ஒரு இன்விட்டேஷன் அனுப்புங்கப்பா... இப்டி விழாவுக்கெல்லாம்..