Saturday, March 13, 2010

கௌரவக் கொலைகள் - சுஷ்மா திவாரி

முதலில் நண்பர் வெண்ணிற இரவுகள் கார்த்திக்குக்கு என் நன்றி.

இந்தச் செய்தியை எனக்குத் தெரியப் படுத்தியதற்காக.

சுஷ்மா திவாரி - மும்பையைச் சேர்ந்த பிராமண வகுப்பில் பிறந்த பெண். இவர் கேரள ஈழவா சமூகத்தைச் சேர்ந்த பிரபு நோச்சில் என்பவரைக் காதலித்து மணம்புரிந்திருக்கிறார்.

இதைப் பொறுக்காத இவரது அண்ணன் திலிப் திவாரி தன் அடியாட்களுடன் பிரபு நொச்சிலின் வீட்டுக்குச் சென்று பிரபு உட்பட நான்கு பேரை வெறித்தனமாகக் கொன்று தீர்த்திருக்கிறார். இன்னும் இருவருக்கு பலத்தக் காயம். கர்ப்பிணியான சுஷ்மா அப்போது வீட்டில் இல்லாத காரணத்தால் தப்பித்துவிட்டிருக்கிறார். இது நடந்தது 2004ல்.

மும்பை செசன்ஸ் நீதிமன்றமும், மகாராஷ்டிர உயர்நீதிமன்றமும் அந்தக் கொடூரன் திலிப் திவாரிக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறது. கடந்த வருடம் உச்ச நீதிமன்றம் அந்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

குற்றவாளி திருந்த வாய்ப்பளிப்பதற்காகத்தான் தண்டனை. அங்கே மரணம் என்பது அவனுக்குத் திருந்த ஒரு வாய்ப்பே இல்லாமல் செய்து விடும் என்பதால் யாருக்கும் மரணம் தண்டனையாக விதிக்கப்படக் கூடாது என்பது என் கட்சியாக இருந்த போதிலும், உச்ச நீதி மன்றம் இந்த தண்டனைக் குறைப்புக்கு சொல்லியிருக்கும் காரணம் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதான் அந்தக் காரணம் - “It is a common experience that when the younger sister commits something unusual and in this case it was an inter-caste, intercommunity marriage out of [a] secret love affair, then in society it is the elder brother who justifiably or otherwise is held responsible for not stopping such [an] affair.”


“தன் இளைய சகோதரி இயல்புக்கு மாறாக - ரகசியக் காதல் காரணமாக நடந்த கலப்புத் திருமணம் - நடந்து கொள்ளும்போது, இந்தச் சமூகத்தில் தன் தங்கையை இந்தச் செயலைச் செய்ய தடுத்து நிறுத்தும் பொறுப்பு மூத்த சகோதரனுக்கே உள்ளது. ”




It added: “If he became the victim of his wrong but genuine caste considerations, it would not justify the death sentence... The vicious grip of the caste, community, religion, though totally unjustified, is a stark reality.”
மேலும், “அவர் அப்படிப்பட்ட முற்றிலும் தவறான அதே சமயத்தில் இயல்பான சாதிச் சூழலுக்கு பலியாகியிருப்பதால், இந்தக் குற்றத்துக்கு மரண தண்டனை நீதியாகாது. சாதி, சமூகம், மதம் ஆகியவற்றின் கொடுமையான பிடி, சரியானதில்லை என்ற போதிலும், மறுக்க முடியாத ஒன்று.”
ஆக உச்ச நீதி மன்றம் இந்தத் தீர்ப்பால் என்ன சொல்ல வருகிறது என்றால் குடும்பத்தில் ஒருவர், குடும்பத்தின் மரியாதையைக் குலைக்கும் வண்ணம் கலப்புத் திருமணம் செய்து விட்டால், அதன் காரணமாக நடைபெறும் கொலைகள் “கௌரவக் கொலைகள்”, அந்தக் குற்றத்திற்கு உச்ச பட்ச தண்டனை அளிக்க வேண்டியதில்லை.
சுஷ்மா திவாரி இந்தத் தீர்ப்பு Prevention of Atrocities - 1989 சட்டப்படி சாதிய ரீதியிலான வன்முறைக்கு அதே சாதிய ரீதியிலான வெறுப்பு / கோபத்தைக் காரணம் காட்டி தண்டனையைக் குறைத்தது அநீதி என்று வழக்குப் போட்டு போராடி வருகிறார். இந்தத் தீர்ப்பு கலப்புத் திருமணம் செய்ய முனையும் பலரை யோசிக்க வைக்கும் என்பது மட்டும் உண்மை.
நம் நாட்டில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிப்பது என்பது நீதி மன்றத்தை அவமதிப்பு செய்ததற்கு சமம். அதனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிக்காது சுஷ்மாவுக்கு நமது ஆதரவை, இதைப் பற்றி எழுதுவதன் மூலம் தெரிவிப்போம்..
பதிவர்களாகிய நமக்குத் தெரியவந்தால் எந்த அநீதியையும் சாடுவோம், அதை எதிர்த்துப் போராடுபவர்களுக்குத் துணை நிற்போம் என்று இந்த உலகுக்கு நிரூபிப்போம்.
நண்பர்களே, நாம் அஜித் மேடையில் பேசியதையும், சச்சின் 200 அடித்ததையும், நித்யானந்தா-ரஞ்சிதா படுக்கையைப் பகிர்ந்து கொண்டதையும் மட்டுமல்ல, இப்படிப் பட்ட விசயங்களையும் தமிழிஷில் ஹாட் பக்கத்துக்கு கொண்டு வருவோம்.
இந்தப் பதிவைப் படிக்கும் என் சக பதிவர்களுக்கு என் வேண்டுகோள்:
நீங்களும் இதைப் பற்றி எழுதுங்கள். உங்கள் நண்பர்களையும் எழுதச் சொல்லுங்கள். எத்தனை பேருக்கு இந்த விசயத்தைக் கொண்டு செல்ல முடியுமோ அத்தனை பேருக்குக் கொண்டு செல்வோம். 

9 comments:

கலகலப்ரியா said...

//“தன் இளைய சகோதரி இயல்புக்கு மாறாக - ரகசியக் காதல் காரணமாக நடந்த கலப்புத் திருமணம் - நடந்து கொள்ளும்போது, இந்தச் சமூகத்தில் தன் தங்கையை இந்தச் செயலைச் செய்ய தடுத்து நிறுத்தும் பொறுப்பு மூத்த சகோதரனுக்கே உள்ளது. ”
//

நாசமா போச்சு...

Prathap Kumar S. said...

நம் நாட்டு சட்டங்கள் யாருக்குவேண்டுமானாலும் சாதகமாக மாறக்கூடியது. சுஷ்மாவுக்கு நீதிகிடைக்கவேண்டும்.

கவி அழகன் said...

உண்மை உண்மை இலங்கையில் இருந்து எனது ஆதரவு உங்களுக்கு

vasu balaji said...

இத வெச்சே வளைச்சி, நெளிச்சி, பிச்சி, பீராய்ஞ்சி காசுடு, கம்மனாட்டி எல்லா பிரச்சனைக்கும் தீர்ப்பீடுவானுங்க. நல்லா வருது வாய்ல. கேரளா லாபி ஈஸ் ஸ்ட்ராங். விடமாட்டாங்கன்னு நினைக்கிறேன். ஃபுல் பெஞ்ச் கு ரெஃபர் பண்ண சொல்லுவாங்க. பார்க்கலாம்.

காமராஜ் said...

அன்புத்தோழா
இப்போதுதான் படித்தேன்.
மிக நுட்பமான கொடூரம் இது.
இந்த உங்கலின் எதிர்ப்பைப் பரவலாக்க வேண்டும்.
அது அத்தியாவசியம்.
எங்கள் அன்புத்தோழர் தமிழ்செல்வனும்
இது குறித்து எழுதியிருக்கிறார்.

Unknown said...

நன்றி நண்பர்களே.. உங்கள் வலைப்பூக்களில் நீங்களும் எழுதுங்கள். இது பலரைப் போய்ச் சேர வேண்டும்.

க.பாலாசி said...

இதுக்கு அரசமர பஞ்சாயத்தே தேவல....

Anonymous said...

நீதிபதிகளைக்கூட இனி நம்பமுடியாது போலிருக்கு :(

பின்னோக்கி said...

என்ன கொடுமைங்க இது