Monday, May 3, 2010

பொன்மொழிகள்





பெண்ணை அடிமைப்படுத்த ஆண் குயுக்தியா கொண்டு வந்த அமைப்புதான் திருமணம்கிறது சிலரோட வாதம். ஆதி நாள்ல அப்படி இருக்கலாம். ஆனா, ஆணை அடிமைப்படுத்துற அமைப்பாதான் இன்னிக்குத் திருமணம் இருக்கு. கல்யாணம் ஆகுற வரைக்கும் ஜாலியா, சந்தோஷமா லைஃபை எஞ்ஜாய் பண்ற இளைஞர்கள் கல்யாணம் ஆன பிறகு முன்னைப் போல ஃப்ரெண்ட்ஸ்களோடு ஊர் சுத்த முடியாம, தன் விருப்பப்படி காசை செலவழிக்க முடியாம, சம்பளத்தை அப்படியே கொண்டு வந்து பெண்டாட்டி கிட்ட கொடுக்குறவங்கதான் அதிகம்.




இங்கே இன்னொரு விஷயத்தையும் சொல்றேன். தன் மனைவியைத் தவிர, வேறு பெண்ணோடு தொடர்பு வெச்சிருந்தாலும், பெரும்பாலான ஆண்கள் தங்கள் குடும்பத்தை நிர்க்கதியா விட்டுட்டுப் போயிடறதில்லே. பெண்டாட்டி மேலயும் பிரியமாதான் இருக்காங்க. கணவனின் கள்ள உறவு தெரிஞ்சு, பெண்டாட்டி அவனை டார்ச்சர் பண்றப்போதான் சண்டையே வருது. அதுக்காக, கணவனின் கள்ளத் தொடர்பு சரின்னு நான் இங்கே சொல்ல வரலை. அந்த நிலையிலயும் கணவன் தன் மனைவி மேலயும், பிள்ளைங்க மேலயும் பாசமாதான் இருக்கான்னு சொல்றேன்.


ஆணுக்கு வேறு ஒரு பொண்ணு மேல ஏற்படறது ‘வீக்னஸ்’! பொண்ணுக்கு வேற ஒரு ஆண் மேல ஏற்படறது ‘ஸ்ட்ரெங்த்’


அதுவே, ஒரு பெண்ணுக்கு வேறு ஆம்பிளையோடு தொடர்பு ஏற்பட்டுச்சுன்னு வைங்க, அவ தன் புருஷனையும், ஏன், மணி மணியான பிள்ளைங்களையும்கூட கொன்னு போடத் தயங்க மாட்டா. நான் சொல்றது தப்பா சரியான்னு சமீப கால பேப்பர்களை எடுத்துப் பாருங்க. கள்ளக் காதல் காரணமா, காதலனோடு கூட்டு சேர்ந்து கணவனையும் பிள்ளைங்களையும் கொன்ன பொண்ணுங்க லிஸ்ட்தான் அதிகம்




மேலே உள்ள பொன்மொழிகளைச் சொன்ன மாதர் குல மாணிக்கத்துக்கு திருமணம் ஆன, திருமணம் ஆகாத, மனைவிக்குத் துரோகம் செய்கிற, செய்ய நினைக்கிற, செய்ய முடியாத, செய்ய நினைக்காத இளைஞர்கள் அனைவரும் ஒன்று திரண்டு கடற்கரை சாலையில் கண்ணகி சிலைக்கு அருகில் சிலை ஒன்று வைப்போம் வாருங்கள்.


அதோடு பதிபக்தியப் பற்றி பாடம் எடுத்த தமிழினக்காவலர், மூன்று மனைவி கட்டியும் ஒருத்தருக்குக் கூட துரோகம் செய்யாத கலைஞரின் தலைமையில் பாராட்டு விழா ஒன்றும் ஏற்பாடு செய்வோம் வாருங்கள்...

23 comments:

settaikkaran said...

உம்! இப்படியும் சில மாதர்குல திலகங்கள் உளறிட்டுத் திரியறாங்களா? நடக்கட்டும், நடக்கட்டும்! வாழ்க கருத்து சுதந்திரம்!

சாந்தி மாரியப்பன் said...

நீங்க சொன்னமாதிரியே சிலை வெச்சிடவேண்டியதுதான்.வாழ்க.

நாஸியா said...

அடப்பாவமே!!

நாடோடி said...

எவ்வ‌ள‌வு சுட்டிகளை மேற்கோள் காட்டி அவ‌ங்க‌ எழுதியிருக்காங்க‌.... நீங்க‌ கிண்ட‌ல் ப‌ண்ணுறீங்க‌..(அங்க‌ உங்க‌ பின்னுட்ட‌ம் சூப்ப‌ர்)

Anonymous said...

அவங்க எவ்வளவு சீரியஸா சொல்லியிருக்காங்க. நீங்க காமெடி பீஸ் ஆக்கிட்டீங்களே :)

செந்தழல் ரவியும் நீங்களும் என்ன முயற்சி பண்ணினாலும் ஒண்ணும் நடக்காது :)

Anonymous said...

என்னாங்க முகிலன். முக்கியமான பஞ்ச் லைனை விட்டுட்டீங்க

//ஆணுக்கு வேறு ஒரு பொண்ணு மேல ஏற்படறது ‘வீக்னஸ்’! பொண்ணுக்கு வேற ஒரு ஆண் மேல ஏற்படறது ‘ஸ்ட்ரெங்த்’//

எல் கே said...

eppadi ippadi ellam. nadatunga

vasu balaji said...

இப்படி மேம்போக்கா யாரு சரி யாரு தப்புன்னு சொல்ற மேட்டரா இது. அடிப்படை காரணம் வேற இல்லையா? அத உடுங்க ரெண்டு டவுட்டு. அங்கால குச்சி வெச்சிகிட்டு போறவரு பென்குவினா? ரெண்டாவது தமிழிஷ்ல ஓட்டு போட்ட ஓட்டு உங்களுக்கு போற பதிவு esalathan.blogspot.com.எப்புடீ:))

Unknown said...

@சேட்டைக்காரன் - வாழ்க கருத்து சுதந்திரம்

@அமைதிச்சாரல் - :)

@நாஸியா - :(

@நாடோடி - அது..

@சின்ன அம்மிணி - சரிதான்..

@சின்ன அம்மிணி - சேத்துட்டேன்..

@எல்.கே - நடத்திருவோம்..

@வானம்பாடிகள் - கரெக்டு சார்..ஆமா குச்சி வச்சிட்டுப் போறது அவரே தான்..ஏன் தமிழிஷ் இப்பிடிச் சொதப்புதுன்னு தெரியலை.. :((

அது சரி(18185106603874041862) said...

உங்களுக்கு ஓட்டு போட்டா அது வேற யாருக்கோ போவுது...தமிழிஷ் வோட்டு மெஷினை அஞ்சா நெஞ்சன் கோஷ்டி கைப்பற்றிட்டாங்களா??

Chitra said...

அட. இப்படி ஒண்ணு இருக்கோ? சுத்தம்!

நசரேயன் said...

//திரண்டு கடற்கரை சாலையில் கண்ணகி சிலைக்கு அருகில் சிலை ஒன்று வைப்போம் வாருங்கள்.//

கோழி பிரியாணியும் குவாட்டரும் கிடைக்குமா?

க.பாலாசி said...

அடடா... நமக்கு இப்டி ஒண்ணு வாச்சிதுன்னா பரவாயில்ல.... மெரினா பீச்சு என்ன, பூம்புகார்ல இருக்குற கண்ணகி செலய்க்கு பதிலாவே வச்சிடுவேன்....

க.பாலாசி said...

‘பொன்மொழிகள்’னு போட்டிட்டு கருத்து சொல்லுவீங்கன்னு வந்தேன்.... ஏமாத்திட்டீங்க....

நசரேயன் said...

//‘பொன்மொழிகள்’னு போட்டிட்டு கருத்து சொல்லுவீங்கன்னு வந்தேன்.... ஏமாத்திட்டீங்க..//

நானும் அப்படித்தான் ஏமாந்து போயிட்டேன் பாலாஜி

கலகலப்ரியா said...

எச்சுச்மீ... நான் எங்க இருக்கேன்... ப்ளீஸ் யாராவது யெல்ப் பண்ணுங்க... எங்க திரும்பினாலும் சுவத்தில முட்டிக்கற மாதிரியே கீதுபா...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சார்.. கண்ணக்கட்டுது..
என்ன நடக்குது சார் நாட்டுல?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஆஹா.., இதையே இமயமலை அடிவாரத்தில் சிலையாக வெட்டி வைத்தால் பிற்கால சந்ததிகள் படித்து தங்கள் விலாசமான பார்வையை வளர்த்துக் கொள்வார்கள்

புலவன் புலிகேசி said...

ஆமாம் யாருப்பா அந்த மாணிக்கம்....???

ஈரோடு கதிர் said...

உங்க நேரத்த வீணாக்குறீங்க முகிலன்

INDIA 2121 said...

OK.NICE
visit my blog
www.vaalpaiyyan.blogspot.com
JUNIOR VAAL PAIYYAN

பனித்துளி சங்கர் said...

ஆஹா இங்குமா ? இங்கே என் மவுனம் போதும் . சேட்டைக்காரன் சொன்னதுபோல் வாழ்க கருத்து சுதந்திரம் !

கிருபாநந்தினி said...

சூப்பருங்ணா! நான் எழுதினது உளறல்கள்னு சொல்ல வந்த நீங்க ஆரம்பத்துலேயே, ‘பிதற்றியது முகிலன்’னு போட்டிருக்கீங்களேண்ணா! அத்தச் சொன்னேங்ணா! :)