சில தொடர்பதிவுகளுக்கு நம்மை அழைக்க மாட்டார்களா என்று காத்திருப்போம். அதை முதலில் படித்தவுடனே நாம் எழுதினால் இப்படி எழுத வேண்டும் என்று ஒரு கற்பனை செய்து வைப்போம். கிரிக்கெட் தொடர் பதிவு ஆரம்பிக்கப் பட்ட போது அப்படித்தான் நினைத்தேன். இந்தத் தொடர்பதிவையும்.
இப்படி நினைக்கும் போதுதான் நம்மை யாரும் அழைத்துத் தொலைய மாட்டார்கள். கடைசியில் நம்மை அழைக்கும் போது பலர் எழுதியிருப்பார்கள். நான் நினைத்து வைத்திருந்த அத்தனையையும் யாராவது எழுதியிருப்பார்கள். வடை போச்சே என்று உட்கார்ந்திருக்க வேண்டும். வேறு வழி?
இந்தத் தொடர்பதிவுக்கு என்னை அழைத்த சகோதரி சின்ன அம்மிணிக்கு நன்றி (இவர்தான் என்னை முதல் தொடர்பதிவுக்கு அழைத்தவர்)
1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
முகிலன்.
2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
இல்லை.
எனக்கு என் பெற்றோர் வைத்த பெயர் வடமொழிப் பெயரான காரணத்தால், ஒரு நல்ல தமிழ்ப் பெயர் வைத்துக்கொள்ளவேண்டும் என்று நினைத்தேன். அப்போது, என் மகனுக்கு அவன் தந்தை வைத்த நல்ல தமிழ்ப் பெயரான முகிலன் எனக்குப் பிடித்துப் போகவே அதையே வைத்துக் கொண்டேன்.
3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
வில்லு படம் வெளிவந்த நேரம். வலையுலகில் வில்லு பட விமர்சனங்களை வேட்டையாடிக் கொண்டிருக்கும்போது குடுகுடுப்பை அவர்கள் எழுதிய விமர்சனத்தைப் பார்க்க நேர்ந்தது. அவரது நகைச்சுவை இழையோடிய எழுத்தைப் படித்ததும் அவருக்கு வாசகனாகிப் போனேன். அப்போது எனக்கு தமிழ்மணம் தமிழிஷ் என்பதெல்லாம் என்ன என்றே தெரியாது. அவரது வலைப்பூவை மட்டும் என் உலவியில் விருப்பமானவைகளில் சேமித்துக் கொண்டு அவர் புதிய பதிவு போடப் போட போய் படிப்பேன். பின்னர், அவருக்குப் பின்னூட்டங்கள் போடத் துவங்கினேன். ஒரு முறை டாக்டர்.சுரேஷுடன் ஒரு விவாதம் கூட செய்தேன். அதன் பின்னர் ப்ளாக்கர் இலவசமாகக் கிடைக்கிறது என்றதும், நானும் ஒரு வலைப்பூவை ஆரம்பித்து அதற்கு பிதற்றல்கள் என்ற பெயரையும் வைத்து பிதற்றி வந்தேன். குடுகுடுப்பை அவர்களின் ஆலோசனைப் படி தமிழிஷ் மற்றும் தமிழ்மணத்தின் என் வலைப்பதிவைச் சேர்த்தேன்.
4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
இதுவரை ஒன்றுமே செய்யவில்லை. யாரையும் ஓட்டுப் போடச் சொல்லிக் கூட கேட்டதில்லை
5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
சிலவற்றைப் பகிர்ந்திருக்கிறேன். சிலவற்றை புனைவு போல எழுதியிருக்கிறேன். விளைவு சிலமுறை வீட்டில் திட்டு வாங்கி போட்ட பதிவுகளை அழித்தும் இருக்கிறேன்.
6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு முகிலன் என்ற ஒரு உயிரி இருந்தது என்பதைச் சொல்லிப் போவதே என் வலைப்பூவின் நோக்கம்.
7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
இரண்டு. எனக்கிருந்த கிரிக்கெட் ஆர்வக்கோளாறால் இந்தப் பதிவில் பல கிரிக்கெட் இடுகைகளை இட்டு வந்தேன். கிரிக்கெட் பிடிக்காத சில நண்பர்கள் எரிச்சல் அடைவதைக் கண்டு கிரிக்கெட்டுக்கு என்று ஒரு வலைப்பூ துவங்கினேன்.
8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
நகோபம் பல முறை பட்டிருக்கிறேன். அப்படிக் கோபம் வரும்போது அவர்களின் இடுகையில் பின்னூட்டங்கள் மூலமாகவோ இல்லை நெகட்டிவ் ஓட்டுக்கள் மூலமாகவோ என் கோபத்தை/எதிர்ப்பைப் பதிவு செய்துவிட்டு வந்திருக்கிறேன். சில நேரங்களில் பின்னூட்டங்களில் விவாதமும் நிகழ்த்தியிருக்கிறேன். எப்போதாவது எதிர்வினையும்.
இந்த இடத்தில் பொறாமை என்பதை விட ஏக்கப் பெருமூச்சு என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். இவர்களைப் போல எழுத முடியவில்லையே என்று நான் ஏங்கும் பதிவர்கள் பலர். நான் பின் தொடரும் அனைவரையும் பார்த்து நான் ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். ஓரிருவரைச் சொல்லி மற்றவர்களைச் சொல்லாமல் விட நான் விரும்பவில்லை.
9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
பின்னூட்டம் எனக்கு முதல் முதலில் இட்டது (நான் தமிழ்மணத்தில் இணைக்கும் முன்பே) குடுகுடுப்பை. அவரே என்னை வலைச்சரத்திலும் அறிமுகப் படுத்தினார். என்னுடன் முதன் முதலில் தொலைபேசியில் உரையாடியதும் அவரே.
10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
விருப்பம் இல்லை.
இத் தொடரைத் தொடர நான் அழைக்கும் ஆட்கள்
1. சகோதரி கலகலப்ரியா
2. நண்பர் அதுசரி
3. சேட்டைக்காரன்
4. மதுரை நண்பர் கார்த்திகைப் பாண்டியன்.
5. பட்டா பட்டி