Sunday, September 26, 2010

போராளிகளா? பூச்சாண்டிகளா?

முதலில்:
நான் விளக்கங்கள் வைத்திருப்பது இது வரை என் பக்க நியாயங்களை வினவு தளத்தின் பின்னூட்டத்தைத் தவிர வேறு எங்கும் வைக்காத காரணத்தாலும், “நீ ரொம்ப ஒழுங்கா?” என்ற வாதங்களைத் தவிர்ப்பதற்காகவும். அவற்றைப் படிக்க விரும்பாதவர்கள் நேராக “இப்போது ஏன் இதையெல்லாம் சொல்லவேண்டும்” என்ற பத்திக்குப் போய்விடலாம். 

எனக்கும் கம்யூனிசத்துக்கும் என்ன தொடர்பு?


SFI - Student Federation of India - இந்திய மாணவர் சங்கம். இது CPI(M) கட்சியைச் சார்ந்த ஒரு மாணவர் அமைப்பு (வெளியில் கட்சி சார்பற்றது என்றுதான் சொல்வார்கள்). சாதாரணமாக SFIல் தீவிரமாக ஈடுபடுபவர்கள் ஒன்று சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருந்து வந்தவர்களாக இருப்பார்கள். அல்லது தொழிற்சங்கத்தில்/கட்சியில் களப்பணியாற்றுபவர்களின் வாரிசுகளாக இருப்பார்கள். நான் நடுத்தர வர்க்கத்தில் தீவிர தி.மு.க ஆதரவாளரின் மகனாகப் பிறந்திருந்தும் அருப்புக்கோட்டையில் ஒரு கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு படிக்கின்ற காலத்தில் SFIல் தீவிர களப்பணி ஆற்றி வந்திருக்கிறேன். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில் கலந்து கொண்டிருந்திருக்கிறேன். விருதுநகரில் நடைபெற்ற மாநில மாநாட்டில் முக்கியமான பங்காற்றியிருக்கிறேன் (என் பங்கு என்ன என்பது அப்போதைய மாவட்ட செயலாளர் தேவா அவர்களுக்கும், மாநிலத் தலைவர் ராம்கி அவர்களுக்கும் தெரியும்).

அருப்புக்கோட்டை நகரப் பேருந்து நிலையத்தில் நிற்கும் பேருந்துகளில் ஏறி பேசி உண்டியல் குலுக்கி இருக்கிறேன். கடை கடையாக ஏறி வசூல் செய்திருக்கிறேன். நகரத் தெருக்களில் சகோதர இயக்கங்கள் நடத்திய ஆர்ப்பாட்டம், தர்ணாக்களில் கலந்து கொண்டிருந்திருக்கிறேன். சிலவற்றில் உரையாற்றியும் இருக்கிறேன். மற்ற ஊர்களில் நடைபெறும் பேரணிகளிலும் (அது தொழிற்சங்கத்தின் மாநாடோ, இல்லை DYFI மாநாடோ) கலந்துகொண்டு வந்திருக்கிறேன்.

தெரு நாடகங்களில் நடித்திருக்கிறேன். த.மு.எ.ச மேடைகளில் நாடகங்கள் போட்டிருக்கிறேன். இதையெல்லாம் ஏன் சொல்கிறேன்? சாதரணமாக நடுத்தர வர்க்கத்தினர் செய்ய வெட்கப்படும் விடயங்கள் இவை. இவற்றைச் செய்ய நான் எப்போதும் தயங்கியது இல்லை.

SFI எனக்கு கம்யூனிசம் தவிர வேறு பல நல்ல பாடங்களையும் கற்றுத் தந்திருக்கிறது. Leadership, Personal Skills, Team Work, Planning, People Management - இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

சில சொந்தக் காரணங்களாலும் கொள்கை ரீதியாலும் SFIஐ விட்டு விலகியிருக்க வேண்டிய சூழ்நிலை. அதை இங்கே விளக்க விரும்பவில்லை.

பதிவர் சாந்தியுடன் எனக்கு என்ன பிரச்சனை?

பதிவர் சாந்தி தன் தளத்தில் புனைவுக்கு முற்றுப் புள்ளி வைப்போம் வாருங்கள் என்று பதிவெழுதிய போதே நான் அவருக்கு ஒரு பின்னூட்டம் வைத்தேன். அவர் அதை வெளியிடவில்லை. அந்தப் பதிவை பாலபாரதி கூகிள் பஸ்ஸில் பகிர்ந்த போது நான் அங்கே பதிவர் சென்ஷி மற்றும் தோழர் ஏழர அவர்களுடனான விவாதத்தில் என் பக்கத்தை எடுத்து வைத்தேன். பாலபாரதி பஸ்ஸைத் தூக்கிவிட்டார். பின்னர் வினவு அவர்களின் தளத்தில் பதிவர் சாந்தியின் கட்டுரையை வெளியிட்ட போது அதில் என் பக்க விளக்கத்தை பின்னூட்டினேன். அதை வினவு ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. அதோடு எனக்கும் அரவிந்துக்கும் ஆதரவாக பதிவெழுதிய பெண் பதிவரை ஆணாதிக்க அடிமை என்று அடுத்தொரு கட்டுரை எழுதி வெளியிட்டது வினவு.

அதனால் நான் அதைப் பற்றி எழுதாமல் அமைதி காத்து வந்தேன். என் நண்பர்கள் சிலரையும் தேவையில்லாமல் இழுத்து விட்டு அவர்களின் தளத்தில் பின்னூட்ட விவாதத்தை வைத்தும் அவர்களைத் திட்டி பதிவெழுதியும் சிலர் வம்பிழுத்த போதும் நான் அமைதி காத்தேன். உச்ச கட்டமாக செந்தழல் ரவி என்னை, என் குடும்பத்தாரை தரக்குறைவாக எழுதி, அதிலும் வானம்பாடிகள் அய்யா அவர்களை தேவையில்லாமல் தாக்கி எழுதிய போதும் நான் அமைதியாக இருந்தேன். என் நண்பர்கள் சிலருக்கு இதனால் என் மீது கோபம் வந்திருக்கலாம். இருந்தும் நான் என் தளத்தில் இதைப் பற்றி எதுவும் எழுதவில்லை. இப்போது என் பக்கத்தை எடுத்து வைக்க ஒரு சந்தர்ப்பமாக இந்த இடுகையை உபயோகப் படுத்திக் கொள்கிறேன்.

ஜூலை 27 - பலா பட்டறை ஷங்கர், கலஹாரி இலக்கியம் என்று ஒரு மொக்கைப் பதிவெழுதி என்னைத் தொடர அழைத்தார். குழுமத்தில் அடிக்கும் கும்மியையும், மற்ற பதிவர்கள் அவர்கள் பதிவுகளில் எழுதியதையும் வைத்து புனையப்படும் மொக்கைதான் கலஹாரி இலக்கியம்.

ஆகஸ்டு 1 - நான் ஷங்கரைத் தொடர்ந்து அவர் உபயோகப் படுத்திய கதாபாத்திரங்களுடன் இன்னும் சிலரைச் சேர்த்து எனது இடுகையை வெளியிட்டேன். இதில் நான் ஜான்சி அக்கா என்று சொல்லியிருந்தது - ஷங்கர் தனது பதிவில் எழுதியிருந்தது போல - பதிவர் சாந்தியைத்தான். இதை ஒத்துக் கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் வருத்தமும் இல்லை. இன்னொரு தாய்லாந்துப் பெண்ணாகவும் தன்னையே சுட்டுவதாக அவர் கோரியிருப்பதில் 0.000000001% கூட உண்மையில்லை.

இதைப் படித்துவிட்டு அரவிந்த் இதே கலஹாரி இலக்கியத்தைத் தொடர்ந்தார். அவரும் என் இடுகையில் இருந்த கதாபாத்திரங்களோடு இன்னும் சில பாத்திரங்களைச் சேர்த்துக் கொண்டார்.

என் இடுகையில் ஜானகிராமன் “தல, இப்படி போட்டு உடச்சிட்டீங்களே. உங்க புனைவுக்கு எதிர்புனைவு நாலாபக்கமும் ரெடியாயிட்டிருக்கு. சூதானமா இருந்துக்குங்க.” இப்படி ஒரு பின்னூட்டம் போட்டிருந்தார். அதற்குப் பதிலாக “நாங்க தடால்னு கால்ல விழுந்து மாப்பு கேட்ருவோம்ல என்று எழுதியிருந்தேன். ஆனால் அந்த இடுகையின் பின்னூட்டத்திலோ, குழுமத்திலோ, இல்லை தனிமடலிலோ தன் பெயரை எழுதியதற்கான எதிர்ப்பை பதிவர் சாந்தி வெளிப்படுத்தவில்லை. வெளிப்படுத்தியிருந்தால் அவரிடம் மன்னிப்பைத் தெரிவித்து இடுகையிலிருந்த அவர் பெயரையும் நீக்கியிருப்பேன். அப்படி நீக்க மறுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அவரிடம் இருந்து எதிர்ப்பு வராதபோது அவரும் இதை ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொண்டுள்ளார் என்று தானே அர்த்தம்?

ஆகஸ்டு 11 - செந்தழல் ரவி மிஷனரிகள் பற்றிய ஒரு இடுகையை அவர் பதிவில் போட்டார். அதை நான் படித்த போது அங்கே பின்னூட்டங்கள் எதுவும் இல்லை. படித்துவிட்டு வந்துவிட்டேன். பின்னர் அந்த இடுகை குழுமத்தில் பகிரப்பட்டது. அதற்கு காட்டமாக பதிலுரைத்திருந்தார் பதிவர் சாந்தி. நான் மீண்டும் ரவியின் இடுகைக்குப் போய் சாந்தி அங்கே இட்டிருந்த பின்னூட்டங்களையும், அவர் ரவிக்கு வைத்திருந்த கேள்விகளையும் படித்தேன்.
அவர் ரவிக்குக் கேட்டிருந்த கேள்விகளுக்கு என் பதில்களை அளித்துவிட்டு, விவாதிக்க அழைத்திருந்த சாந்தியை விவாதம் தொடங்க அழைத்தேன். அவர் ரவிக்கு பின்னூட்டியாயிற்று. அதைப் பற்றி என்னிடம் பேச முடியாது என்று மறுத்துவிட்டார். நானும் கிரேட் எஸ்கேப் என்று சொல்லிவிட்டு அந்தப் பிரச்சனையை முடித்துக் கொண்டேன். (இங்குதான் என் மீது அவருக்கு கோபம் வந்திருக்கிறது. இதை அவர் மற்ற பதிவர்களிடம் சாட்டில் சொல்லியிருக்கிறார் என்பது எனக்குத் தெரிய வந்தது)

ஆகஸ்டு 13- நான் ஆகஸ்டு 11 அன்று என் மகனது வீடியோ ஒன்றை என் தளத்தில் பகிர்ந்திருந்தேன். அதற்கு ஆகஸ்டு 13ம் தேதி பதிவர் சாந்தி (ரவியின் பதிவு பற்றிய என் கமெண்டுக்குப் பிறகு) ஒரு பின்னூட்டம் போட்டிருந்தார் -
குழந்தை படம் துணிவா போட்டிருக்கீங்க...

சுத்தி போடுங்க.. 

(குழந்தை விஷயம் சுய சொறிதலில் சேர்க்க மாட்டேன் பயப்படாதீங்க..:) )

இதில் அவர் வீடியோவை பாராட்டுவது போல எழுதியிருந்தாலும் சுயசொறிதல் என்ற பதத்தை உபயோகப்படுத்தியிருப்பதைப் பாருங்கள். (நான் உடனே எதாவது வம்பிழுக்க வேண்டும் என்பது அவரது நோக்கம்).

ஆகஸ்டு 18 - புலவன் புலிகேசி தனது தளத்தில் எழுதியிருந்த எந்திரன் - ஏழைப் பங்காளன் என்ற கவிதைக்கு எதிர் வினை ஒன்றை என் தளத்தில் வைத்தேன். அதற்கு பதிவர் சாந்தி ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார்.
இதுவே ஒரு நல்ல செயல்தான் .. சில சுய சொறிதல்களை ஒப்பீடு செய்யும்போது..

எழுத்தினால் சமூகத்தில் மாற்றம் கண்டிப்பாக கொண்டு வரமுடியும்... 

நல்லது நம்மால் செய்ய முடியாவிட்டாலும் எள்ளாமல் இருப்பது சிறப்பு..
இதிலும் அவர் அந்த சுய சொறிதல் என்ற பதத்தை உபயோகப் படுத்துவதைப் பாருங்கள்.

நான் இந்தப் பின்னூட்டத்தை குழுமத்துக்கு எடுத்துச் சென்று எந்திரன் பற்றிய விவாதம் ஒன்றை துவங்கும் எண்ணத்தில் ஒரு திரியைத் துவக்கினேன். ஆனால் சாந்தி அவர்கள் அதை திசை மாற்றி சுயசொறிதல் என்ற பதத்தைப் பிடித்துக் கொண்டு அதைப் பற்றியே விவாதித்து வந்தார். திரி 100ஐத் தொட்டும் அவர் எந்திரன் பற்றிப் பேச வராமல் விவாதத்தை முடித்துக் கொண்டார். அந்த விவாதத்தில் அவர் ஆகஸ்டு ஒன்றாம் தேதி வெளியான என் இடுகையைப் பற்றி பேசினார். அதன் பிறகு புலவன் புலிகேசி அவர்களது தளத்திலும் அவரைப் பற்றி நான் எழுதிய புனைவு என்று என் இடுகையைப் பற்றிப் பேசினார். பின்னர் தனி மடலிலும் அதைப் பற்றி என்னிடம் பேசினார். நான் அந்த இடுகை பகடியாக எழுதப்பட்டது மட்டுமே என்ற என் கருத்தில் உறுதியாக இருந்தேன். (உங்கள் மகனின் வீடியோவில் தெரியும் உங்கள் மனைவியின் உடையைப் பற்றி யாராவது எழுதினால் உங்களுக்கு எப்படி இருக்கும் என்று ஒரு கேள்வியும் எழுப்பினார்).

இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு நான் அவரைப் பற்றி என் தளத்திலோ இல்லை குழுமத்திலோ இல்லை மற்ற தளங்களிலோ நான் தரக்குறைவாகப் பேசியதில்லை.

ஆகஸ்டு 25 - அவரது தளத்தில் புனைவுக்கு முற்றுப் புள்ளி வைப்போம் வாருங்கள் என்று மூன்று பாகங்களாக ஒரு பதிவை வெளியிட்டார். அதில் என் மற்றும் அரவிந்தின் இடுகைகளில் இருந்து அவர் சம்மந்தப்பட்ட (ஜான்சி அக்கா) பகுதியை மட்டும் வெட்டி ஒட்டிப் போட்டதோடு அல்லாமல், யாரோ ஒரு ஆண் பதிவர் யாரோ ஒரு பெண் பதிவரை “படுக்க வர்றியா” என்று அழைத்த ஒரு சம்பவத்தையும் சேர்த்தெழுதி அதற்கும் எங்களுக்கும் எதோ சம்மந்தம் இருப்பது போன்ற ஒரு அவதூறை எழுப்பினார். நான் அவருக்குப் போட்ட பின்னூட்டத்தை அவர் வெளியிடவில்லை. மாறாக தனி மடலில் வழக்குப் போடப்போவதாக மிரட்டினார். நானும் வழக்குப் போடுங்கள் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்று சொன்னேன்.

அதன் பின்னர் அவர் மாதவராஜையோ வினவையோ நாடுவார் என்பது நான் எதிர்பார்த்ததுதான். ஆனால் வினவும் மாதவராஜும் என்ன நடந்தது என்பதை விசாரித்துப் பதிவெழுதுவார்கள் என்று நான் எதிர்பார்த்தது என் முட்டாள்தனம்.

நான் ஏன் மன்னிப்புக் கேட்கவில்லை? அல்லது சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட இடுகையை நீக்கவில்லை? 

என் இடுகை வெளிவந்தவுடன் அவர் என்னிடம் அது அவரைப் புண்படுத்துவதாக இருப்பதாகத் தெரிவித்திருந்தால், கண்டிப்பாக மன்னிப்புக் கேட்டுவிட்டு இடுகையில் இருந்து அவர் சம்மந்தப்பட்ட பகுதியை நீக்க நான் தயங்கியிருக்க மாட்டேன். ஆனால் அவர் காலம் தாழ்த்திச் செய்வது என் மீதான வன்மத்தைத் தீர்த்துக் கொள்ளவே என்பதால் அவருக்கு அடிபணிந்து போக நான் தயாராயில்லை.

மேலும் நான் எழுதிய இடுகையை வினவு வன்மத்துடன் புனையப்பட்ட வக்கிரத் துகிலுரிவு - என்ற அடைமொழியுடன் அழைத்தது. நான் அந்த இடுகையை எழுதிய போது எனக்கு சாந்தி அவர்களின் மீது வன்மமோ, என் மனதில் வக்கிரமோ, அவரைத் துகிலுரிய வேண்டும் என்ற எண்ணமோ இல்லாத போது நான் அந்த இடுகையை இப்போது நீக்கினால் வினவின் குற்றச்சாட்டை நான் ஏற்றுக் கொள்வது போலாகிவிடும் என்பதாலும் நீக்கவில்லை. இனிமேலும் நீக்க மாட்டேன்.

வினவு
வினவு சமூகப் பொறுப்புடன் பல கட்டுரைகளை எழுதி வருவது நான் பதிவுலகத்துக்கு வந்தது எனக்கு அறிமுகமானது. நான் சில கட்டுரைகளையும் வாசித்து இருக்கிறேன். ஆனால் அவர்கள் ம.க.இ.கவின் ஆதரவுத் தளம் என்ற உண்மை எனக்குத் தெரிய வந்ததும் நான் அவர்களின் தளத்துக்குப் போவதைத் தவிர்க்க ஆரம்பித்தேன். (அதற்குக் காரணம் எனக்கும் ம.க.இ.கவுக்கும் ஒரு கொடுக்கல் வாங்கல் பிரச்சனை).

ஆனால் அவர்களிடம் இருக்கும் ஒரு பெரிய குறை, சமூகக் கட்டுரைகளை எழுதும்போது கட்டுரையின் சாரம்சத்தை விட்டு சற்றே விலகி யாரையாவது அல்லது எந்த நிகழ்வையாவது தேவையில்லாமல் தாக்கிச் செல்வார்கள். இது அந்த நபரின் அல்லது அந்த நிகழ்வின் ரசிகர்/ஆதரவாளர்களுக்குக் கசப்பை உண்டாக்குவதுடன் கட்டுரையின் சாராம்சத்தை விட்டு விலகவோ புறக்கணிக்கவோ செய்துவிடும். அதே போல அவர்களின் தளத்திலேயே ஒரு கட்டுரையின் கருத்தில் விவாதம் வைத்தால் அதைப் பற்றி விவாதிக்காமல் அதைச் சுற்றி சல்லியடித்தே ஓட்டிவிடுவார்கள் அவர்களின் ஆதரவாளர்கள்.

மொத்தத்தில் சமூகப் போராளிகளாக தங்களைக் காட்டிக்கொள்ளும் வினவு, சமீப காலமாக பெண்ணியக் காவலர்களாகவும் தங்களைக் காட்டிக் கொள்கிறார்கள். நல்லதுதான். ஆனால் காவலர்களாகக் காட்டிக் கொள்பவர்கள் முழு விபரங்களையும் விசாரித்து ஆதரவு தெரிவிப்பதில்லை. அதோடு குற்றம் சாட்டப்படுபவர்கள் அவர்களின் தோழர்களாக இருக்கும்பட்சத்தில் அதைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பதும் நடுநிலைப் பெண்ணியக் காவலர்களாக தங்களைக் காட்டிக்கொள்பவர்கள் செய்யும் செயல் இல்லையே?

இப்போது நான் ஏன் இதையெல்லாம் சொல்ல வேண்டும்? 


சமீபத்தில் பதிவர் மதார் எழுதிய ஒரு பதிவைப் படிக்க நேர்ந்தது. அதில் பதிவர் சாந்தி ஒரு சக ஆண் பதிவரிடம் பேசிய சாட்டின் விபரம் பகிரப்பட்டிருந்தது. அதில் அவர், அந்த ஆண் பதிவரிடம் -


தம்பி உனக்கு வேணுமா ? பணம் எல்லாம் தர வேணாம் சும்மாவே தரேன் . நீ பார்த்திருக்கியா அவள் போட்டோ . நீ பார்க்கணுமா ? இரு இப்பவே அனுப்பி வைக்கிறேன் .எப்படி ...............இருக்கா பார்த்தியா ? இவளுக்கு போய் யாராவது சப்போர்ட் பண்ணி பேசுவாங்களா ?

இப்படிப் பேசியிருக்கிறார். என்ன வன்மம் & வக்கிரம் என்று பாருங்கள். ஒருவரின் புறத்தோற்றத்தைப் பார்த்துத்தான் அவருக்கு ஆதரவாக மற்றவர்கள் வருவார்கள் என்றால் உலகத்தில் யாருக்குமே ஆதரவாளர்கள் கிடைத்திருக்க மாட்டார்கள். பதிவர் சாந்தியின் புகைப்படத்தை பார்த்துவிட்டா வினவும் மாதவராஜும் அவருக்கு ஆதரவு தெரிவித்தார்கள்? இல்லை மதாரின் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு அவருக்கு யாரும் ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் தான் இவர் மதாரின் புகைப்படத்தை அனைவருக்கும் அனுப்பி வைத்தாரா?

மதார் என்ன பாவம் செய்தார்? எனக்கும் அரவிந்துக்கும் ஆதரவாக ஒரு இடுகை எழுதினார் என்பதைத் தவிர? அதற்குத்தான் வினவுத் தளமே இன்னொரு இடுகையையும் போட்டு மதாரை வம்பிழுத்து விட்டதே? ஏன் இன்னும் வன்மம் கொண்டுத் திரிகிறார்? இப்படி ஒரு பெண்ணைப் பற்றி அவதூறு பரப்பித் திரிவது எந்த ஆதிக்கத்தில் வரும்?

தோழர் மாதவராஜ் : இப்போது இந்தப் பதிவரசியலைப் பார்த்து எச்சில் துப்பப் போகிறீர்களா இல்லை வெட்கித் தலை குனியப் போகிறீர்களா?

பதிவர் சந்தனமுல்லை: நான் போலி முற்போக்காளனாக இருந்து விட்டுப் போகிறேன். ஒரு பெண்ணின் மீது ஏவப்படும் அவதூறு வன்முறையை நீங்கள் ஒரு முற்போக்கு சக பெண் பதிவராக என்ன செய்யப் போகிறீர்கள்?

வினவு: நீங்கள் முன்வைத்த கேள்வியையே உங்கள் முன் வைக்கிறேன் - கொள்கைக்காக நட்பா? நட்புக்காக கொள்கையா? என்ன செய்யப் போகிறீர்கள்? இப்போது நீங்கள் அமைதி காத்தால் என்றாவது ஒரு நாள் உண்மையிலேயே நீங்கள் யாருக்காவது நிகழ்ந்த ஆணாதிக்கச் செயலை எடுத்துக் கொண்டு வந்தால் இந்தப் பதிவுலகம் அப்போது உங்கள் பக்கம் நிற்காமல் போய்விடும் என்ற எச்சரிக்கையை உங்களுக்கு சொல்லிச் செல்ல ஆசைப்படுகிறேன். இணையப் போராளிகள் என்ற பெயர் போய் உங்களை பயமுறுத்தப் பயன்படும் ஒரு பூச்சாண்டியாக மாறிப் போய்விடாதீர்கள்.

எனக்கு ஆதரவாகப் பதிவெழுதிய ஒரு பெண்ணுக்கு அந்த ஒரே காரணத்துக்காக அநீதி நடக்கும்போதும் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தால் நான் மனிதனே இல்லை. 


பதிவர் சாந்தியின் இந்தச் சாக்கடைச் செயலுக்கு என் வன்மையான கண்டனங்களை இங்கே பதிவு செய்து கொள்கிறேன். 

66 comments:

எல் கே said...

விடை கிடைக்குமா ?>?

பிரபாகர் said...

மிகவும் சரியாய் உங்களின் தரப்பு கருத்துக்களை சொல்லியிருக்கிறீகள், தாமதமாக என்றாலும்.

பிரபாகர்...

Dr.Rudhran said...

எனக்கு ஆதரவாகப் பதிவெழுதிய ஒரு பெண்ணுக்கு அந்த ஒரே காரணத்துக்காக அநீதி நடக்கும்போதும் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தால் நான் மனிதனே இல்லை.

என்ன அநீதி நடக்கிறது? தெரிந்தால் தோள் கொடுக்கத் தயார். அந்தப் பெண்ணின் புகைப்படம் வினாவில் வந்த மாதிரி தெரியவில்லை, ஆனால் அதைச் சுற்றி இப்போது ஒரு பிரச்சினை வருகிறது போலத் தெரிகிறது.
முன்னாள் தோழர் என்று எவரும் இல்லை, முன்னாள் எழுத்தாளர் என்பது போல. தோழமை குறித்து சமீபத்திய பதிவுகளின் கேலியும் எகத்தாளமும் கவனிக்கிறீர்களா.?
தெளிவாக எழுதியதற்கும் நாகரீகமாகவே வினவுவதற்கும் வாழ்த்துகள்.

Unknown said...

டாக்டர் ருத்ரன்,

வினவை அநியாயம் செய்வதாக நான் சொல்லவில்லை.

ஆனால் பதிவர் சாந்தி மதாரின் புகைப்படத்தை பலருக்கும் விநியோகிப்பதோடு அவரையும் அரவிந்தையும் சேர்த்து கேவலமாகப் பேசி வருகிறார். இதைப் பற்றி மதார் எழுதிய பதிவு http://mathar-itsallaboutmine.blogspot.com/2010/09/blog-post_24.html

பொதுவில் - அதாவது ஒரு பதிவில் - ஒருவரைப் பற்றி அவதூறாக எழுதுவது மட்டும் அநீதியன்று. முதுகுக்குப் பின்னால் இப்படி அவதூறு பேசித் திரிவதும் அநீதியே..

எல் கே said...

//பெண்ணின் புகைப்படம் வினாவில் வந்த மாதிரி தெரியவில்லை///

வினாவில் வரவில்லை. பலருக்கு மெயிலில் அனுப்பப் பட்டு இருக்கிறது

☀நான் ஆதவன்☀ said...

//தம்பி உனக்கு வேணுமா ? பணம் எல்லாம் தர வேணாம் சும்மாவே தரேன் . நீ பார்த்திருக்கியா அவள் போட்டோ . நீ பார்க்கணுமா ? இரு இப்பவே அனுப்பி வைக்கிறேன் .எப்படி ...............இருக்கா பார்த்தியா ? இவளுக்கு போய் யாராவது சப்போர்ட் பண்ணி பேசுவாங்களா ?//

இது உண்மையா? டூ பேட் :(

Unknown said...

@Dr.Rudhran,

எனக்குச் சுட்டுப் போட்டாலும் அநாகரீகமான வார்த்தைகளை எழுத வராது..

எம்.எம்.அப்துல்லா said...

// பொதுவில் - அதாவது ஒரு பதிவில் - ஒருவரைப் பற்றி அவதூறாக எழுதுவது மட்டும் அநீதியன்று. முதுகுக்குப் பின்னால் இப்படி அவதூறு பேசித் திரிவதும் அநீதியே..

//

எனக்கு ஒரு டவுட்டு??? இந்த மாதிரி குணம் இருக்குறவங்களாப் பார்த்து வினவில் தோழியாக்கிகுவாங்களா?? இல்லை வினவு குழுவினரின் தோழியானா இந்த மாதிரி குணம் வந்திருமா??

நாடோடி said...

//ஆனால் அவர் காலம் தாழ்த்திச் செய்வது என் மீதான வன்மத்தைத் தீர்த்துக் கொள்ளவே என்பதால் அவருக்கு அடிபணிந்து போக நான் தயாராயில்லை.//

இதுதான் முகில‌ன் டாப்பு.. வெற்றி ந‌ம‌தே.. :)

நாடோடி said...

//ஆனால் அவர் காலம் தாழ்த்திச் செய்வது என் மீதான வன்மத்தைத் தீர்த்துக் கொள்ளவே என்பதால் அவருக்கு அடிபணிந்து போக நான் தயாராயில்லை.//


ச‌ங்க‌ கால‌ இல‌க்கிய‌ம், கால‌ஹாரி இல‌க்கிய‌ம், ச‌ம‌கால‌ இல‌க்கிய‌ம், ச‌மாதான‌ கால‌ இல‌க்கிய‌ம் என்று சொல்லி ஒருவ‌ரை தாக்கி ந‌ல்ல‌ ஒரு புனைவை த‌ட்டி விட‌னும்..

அவ‌ர் அமைதியா போயிட்டா பிர‌ச்ச‌னையில்லை...

ஆனா ஒரு வார‌ம் க‌ழிச்சி வ‌ந்துகேட்டா அன்னைக்கே நீங்க‌ கேக்க‌லைனு இப்ப‌ ம‌ட்டும் என்ன‌ பிர‌ச்ச‌னைனு கேள்வியை அவ‌ங்க‌ளுக்கே திருப்ப‌னும்... ச‌பாஷ்... இந்த‌ விளையாட்டு ந‌ல்லா இருக்கு..

Unknown said...

வாங்க நாடோடி..

1. அவரைத் தாக்கி எழுதவில்லைங்கிறத நான் பலதடவை சொல்லியிருக்கேன். பகடிக்காக எழுதினதுங்கிறதையும் சொல்லியிருக்கேன். என்னோட பழைய பதிவுகள் சிலதுல கலகலப்ரியா, சின்ன அம்மிணி போன்ற பெண் பதிவர்களையும் பகடி செஞ்சி எழுதியிருக்கேன். அதைப் போல எழுதினதுதான் இது.
2. அவரைத் தாக்கி எழுதியிருக்கிறதா அவர் ஃபீல் பண்ணியிருந்தா என்கிட்ட அவர் கேட்டிருக்கலாம். என் பதிவை நான் குழுமத்தில விளம்பரம் போடத்தான் செஞ்சேன்.
3. அப்போவே கேட்காம, காலம் தாழ்த்தி வேற எண்ணத்தை அந்த இடுகையில புகுத்திக் கேட்டா அது வன்மம் இல்லாம என்ன?

Dr.Rudhran said...

thanks for the link, i would not have read it otherwise.
i agree that such cheap actions should be condemned.

ஜானகிராமன் said...

முகிலன், இந்த நிகழ்வை ஆரம்பித்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தவன் என்கிற முறையில் நிகழ்வுப் போக்கின் அரசியலை என்னால் ஊகிக்கமுடிந்தது. இப்போது, உங்கள் இடுகையும் நேர்மையாக தொகுத்தளித்திருக்கிறது.

உண்மையில் அந்த கலஅரி இலக்கிய மேட்டர் வெறும் மொக்கைக்காக தான் எழுதப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். அதற்கு முன் குழுமத்தில் நடைபெற்ற சாந்தி அவர்களுடைய கார் ஓட்டும் செயல், அருடைய சாகசங்கள் போன்றவற்றுக்கு நீங்கள் அளித்த கிண்டல் பின்னுட்டங்களைக் ஒரு எளிய நட்பின் உரிமையில் செய்ததாகவே கருதினேன். அவர்களும் அப்போது அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. என்னுடைய பின்னுட்டமும் சும்மா, மொக்கைக்காக எழுதப்பட்டதே தவிர சத்தியமாக இந்த அளவுக்கு மேட்டர் பெருசாகும்ன்னு நினைச்சுக்கூட பார்க்கவில்லை.

ஜானகிராமன் said...

பிறகு, எந்திரன் விஷயத்தில், எனக்குக் கூட உங்களுடைய கருத்தில் உடன்பாடு இல்லை. ஆனாலும் அதை வெவ்வேறு மனநிலை சார்ந்த விருப்பு வெறுப்பு விஷயங்கள் என்ற அளவில் தனிப்பட்டவகையில் நான் பார்க்கவில்லை. ஆனால், புலிகேசியை விமர்சித்து நீங்கள் எழுதிய பதிவு அதன் கருத்தைத் தாண்டி தனிநபரை வருத்தம் கொள்ளச் செய்வதாக அமைந்திருந்ததை நீங்கள் தவிர்த்திருக்கலாம்.

செந்தழல் ரவி விஷயம் மிகக் கேவலமானது. அவருடைய மிஷனரி பதிவும் உங்களைப்பற்றிய சமீபத்திய பதிவும் குறைந்தபட்ச கண்ணியமும், நேர்மையும் அற்ற அரைவேக்காட்டுப் பதிவுகள்.

மொத்தத்தில் அவர்கள் பொங்கும் அளவுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. இப்ப, மதார் விஷயத்தில் அவர்களுடைய ஆளுகை அவர்களுடைய மரியாதையை குறைக்கத்தான் செய்கிறது.

ஜானகிராமன் said...

கவலை வேண்டாம் தோழர். உண்மை என்பது ஒன்றே ஒன்று தான். உங்களுக்கு ஒரு உண்மையும் எனக்கு ஒரு உண்மையும் என வேறுவேறு நிலைகள் இருக்கவாய்ப்பில்லை. அது நிச்சயம் வெளிவரும்.

நாடோடி said...

உங்க‌ளுக்கு அவ‌ர்க‌ளுக்கும் உள்ள‌ வாய்க்கா த‌க‌றாறு என்ன‌ முகில‌ன்.. இடைப்ப‌ட்ட‌ ப‌த்து நாளில் அப்ப‌டி என்ன‌ பிர‌ச்ச‌னை ந‌ட‌ந்த‌து..

ப‌க‌டி என்ப‌து ஷ‌ங்க‌ர் எழுதியிருப்ப‌து முகில‌ன்.. அவ‌ர்க‌ள் ஏன் ஷ‌ங்க‌ரை இந்த‌ பிர‌ச்ச‌னையில் இழுக்க‌வில்லை. அவ‌ர் வ‌ன்மாக‌ இழுக்க‌ வேண்டும் என்று நினைத்திருந்தால் ஷ‌ங்க‌ரையும் சேர்த்து அல்ல‌வா எழுதியிருப்பார். அந்த‌ ப‌க‌டி அவ‌ருக்கு த‌ப்பாக‌ தெரிய‌வில்லை.. ஆனால் உங்க‌ள் ப‌க‌டி?..

முகில‌ன் இந்த‌ விச‌ய‌த்தில் நீங்க‌ள் உங்க‌ள் ம‌ரியாதையை குறைத்து கொள்கிறீர்க‌ள்.. அவ்வ‌ள‌வு தான் சொல்வேன்...

இப்போது எழுதியிருக்கும் நீங்க‌ள், சாந்தி அவ‌ர்க‌ள் அவ‌ர்க‌ள் ப‌திவில் எழுதிய‌வுட‌னே நீங்க‌ள் என்ன‌ செய்திருக்க‌ வேண்டும். உங்க‌ளுடைய‌ ப‌திவில் அத‌ற்கான‌ விள‌க்க‌த்தை கொடுத்துவிட்டு அந்த‌ ப‌திவை நீக்கியிருக்க‌ வேண்டும்.. கால‌ம் தாழ்த்தி நீங்க‌ள் செய்வ‌து ச‌ரியா முகில‌ன்?...

குளிகன் said...

###
தம்பி உனக்கு வேணுமா ? பணம் எல்லாம் தர வேணாம் சும்மாவே தரேன் . நீ பார்த்திருக்கியா அவள் போட்டோ . நீ பார்க்கணுமா ? இரு இப்பவே அனுப்பி வைக்கிறேன் .எப்படி ...............இருக்கா பார்த்தியா ? இவளுக்கு போய் யாராவது சப்போர்ட் பண்ணி பேசுவாங்களா###


நிச்சயமாய் ஒரு பெண்ணியப் போராளியாக முல்லையும், ஒரு பெண்ணுக்கெதிராக ஒரு வார்த்தை படித்தாலே அதன் காரணகாரியங்கள் யாவையென்ற எந்த ஒரு ஆராய்ச்சியும் தேவைப்படாத மாதவராஜும் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

முகமூடி போட்டுக்கொண்டு புரட்சி செய்யும் வினவு தன்னை யாரென்று காட்டிக்கொண்டு தைரியமாய் பதவெழுதுபவர்களை வீட்டிற்கு ஆளனுப்புவேன். போலீஸில் புகார் செய்வேன் என்று பூச்சாண்டி காட்டுவது கோழைத்தனம். வினவைப் புறக்கணியுங்கள். அல்லது முகமூடியுடனே வினவை எதிர்க்கவோ ஆதரிக்கவோ செய்யுங்கள். அதுவே வினவின் உண்மையான முகத்தை ஊற் அறிய செய்யும் வழி. அவர்களுக்கு இருக்கும் ஒரே ஆயுதம் அவர்களின் முகமூடியும் உங்களின் உண்மையான முகமும்தான். ஏழரைப் போல எட்டரை என்று யாராவது புனைவு எழுதினாள் வினவு என்ன செய்யும்? போலீஸுக்குப் போய் போலீஸ்கார் போலீஸ்கார் நான் தான் வினவு சமூகப் போராளி தமிழக முதல்வரையே சகட்டுமேனிக்கு கிழித்தவர்கள் இங்கே ஒரு பெண்ணீற்கு அனீதி ந்டந்திருக்கிறது கேஸ் எழுதுங்கள் என்பார்களா? தைரியமிருக்கிறதா? கி கிக் கி முகமூடி அணிந்து கேலி பேச இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? மதாரும் சரி முகிலனும் சரி வினவைப் பார்த்து கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா? அல்லது நேரடியாகவே பதிவில் துகிலுரியும் வக்கிரக்காரிகள் என்று பதிவு எழுதுவார்களா?

சவால் விடுகிறேன். இந்தப் பதிவிற்கு நேரடியாக உங்களுக்கு எந்த பதிலும் வராது. பதிவுலக சகோதர சகோதரிகளே பிரச்சனைகள் மனிதருக்குள் சகஜம். அதை உங்களுக்குள் அல்லது உங்களின் பொதுவான முகமறிந்த நண்பர்களுக்குள் பேசித் தீர்த்துக் கோள்ளுங்கள். வீணே வெத்து வேட்டுகளுக்கு அவலாகவேண்டாம்.

thiagu1973 said...

//தம்பி உனக்கு வேணுமா ? பணம் எல்லாம் தர வேணாம் சும்மாவே தரேன் . நீ பார்த்திருக்கியா அவள் போட்டோ . நீ பார்க்கணுமா ? இரு இப்பவே அனுப்பி வைக்கிறேன் .எப்படி ...............இருக்கா பார்த்தியா ? இவளுக்கு போய் யாராவது சப்போர்ட் பண்ணி பேசுவாங்களா ?//
//

பதிவர் சாந்தி இப்படி பேசி இருந்தால் மகா மட்டமான செயல் வன்மையாக கண்டிக்கதக்கது

நாடோடி said...

யாரை ப‌ற்றியும் யாருக்கும் ப‌க‌டி செய்ய‌ உரிமை கிடையாது. அப்ப‌டி செய்ய‌ வேன்டுமானால் அவ‌ர்க‌ளின் முறையான‌ அனும‌தி பெற்று தான் செய்ய‌ வேண்டும் முகில‌ன்... நீங்க‌ள் அந்த‌ ப‌க‌டி எழுதுவ‌த‌ற்கு முன்னால் சாந்தி அவ‌ர்க‌ளிட‌ம் அனும‌தி கேட்டீர்க‌ளா?

ஆனால் நீங்க‌ள் சொன்ன‌ ப‌லாப‌ட்ட‌ரை ஷ‌ங்க‌ர் அவ‌ரிட‌ம் அனும‌தி வாங்கி தான் எழுதியிருந்தார்.

Unknown said...

அன்பின் நாடோடி,

இந்தப் பதிவின் காரணம், மதாருக்கு நிகழ்த்தப்படும் அநீதியைக் கண்டிப்பதே..

ஆனால் அதை மட்டும் எழுதியிருந்தால் உங்களின் முதல் பின்னூட்டம், “நீ மட்டும் ஒழுங்கா” என்றிருக்கும். அதற்குத்தான் அத்தனைப் பெரிய விளக்கம்..

ஷங்கர் எதாவது ஒரு காரணத்திற்காக பதிவர் சாந்தியுடன் வாக்குவாதம் செய்திருந்தால் அவரையும் இழுத்திருப்பார்கள்.

சரி என் மீதும் அரவிந்த் மீதும் குற்றம் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். மதார் மீது இப்படி அநீதியாகப் புறம் சொல்லும் அவர் செயல் சரியானதா? அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

Unknown said...

நாடோடி:

எனக்கும் அவருக்கும் வாய்க்கா தகராறு என்ன என்பதை நான் தெளிவாக இதில் விளக்கியுள்ளேன். குழுமத்தில் இருக்கும் நீங்களும் இதைக் கவனித்து இருப்பீர்கள் என்றும் நம்புகிறேன்.

உங்கள் கேள்வியையே திருப்பிக் கேட்கிறேன்..

எனக்கும் அவருக்கும் ஆகஸ்டு 1ம் தேதிக்கு முன்னால் என்ன வாய்க்கா தகராறு இருந்தது? நான் அவரைப் பற்றிப் புனைவு எழுதுமளவுக்கு?

இதில் என் மரியாதை குறையாது.. அப்படி குறைவதாக நினைப்பவர்களைப் பற்றிய கவலையும் எனக்கில்லை.

நாடோடி said...

//இந்தப் பதிவின் காரணம், மதாருக்கு நிகழ்த்தப்படும் அநீதியைக் கண்டிப்பதே..//


சூப்ப‌ர் முகில‌ன்.. அப்ப‌டியான‌ல் இத‌ற்கு தூப‌ம் போட்ட‌ பிர‌ச்ச‌னைக‌ளை பேசாதீர்க‌ள்.. கொழுந்து விட்டு எரிவ‌தை பாருங்க‌ள் என்று சொல்லுகிறீர்க‌ள்...


//சரி என் மீதும் அரவிந்த் மீதும் குற்றம் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். மதார் மீது இப்படி அநீதியாகப் புறம் சொல்லும் அவர் செயல் சரியானதா? அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?//

ச‌ரி முகில‌ன் உங்க‌ த‌வ‌றுக்கு தீர்வு என்ன‌வென்று சொல்லுங்க‌ள். அடுத்த‌ பிர‌ச்ச‌னைக்கு நான் உட‌னே என்னுடைய‌ தீர்வு சொல்லுகிறேன்..

கலகலப்ரியா said...

தலைப்பு மட்டும் போட்டுக் கேட்டிருந்தாலே மக்கள் ஈஸியா பதில் சொல்லி இருப்பாங்களே முகிலன்...

Unknown said...

@நாடோடி: நான் தப்பே செய்யலைங்கிறேன். அப்புறம் என்ன தீர்வு???

கலகலப்ரியா said...

||Dr.Rudhran said...||

unbiased முயற்சிக்கு வாழ்த்துகள்...

வினவு எதை எழுதினாலும் ஆமோதிப்பவர் என்ற முறையில்.. இது பாராட்ட வேண்டிய ஒன்றுதான்...

நாடோடி said...

//முகிலன் said...
@நாடோடி: நான் தப்பே செய்யலைங்கிறேன். அப்புறம் என்ன தீர்வு???//

ந‌ன்றி முகில‌ன் சூப்ப‌ர் ப‌தில்...

மேலே ப‌திவில் சொன்ன‌தும் பின்னூட்ட‌த்தில் சொன்ன‌தும் இந்த‌ ஒரு ப‌திலில் சிரிக்கிற‌து.. ப‌டிப்ப‌வ‌ர்க‌ள் புரிந்து கொள்வார்க‌ள்..

புரித‌லுக்கு ந‌ன்றி... வ‌ருகிறேன்..

Unknown said...

மதாரின் சார்பாக..

Thanks for ur post Dinesh .unga mela enaku kovam niraiyave irunthathu
ungal amaithi parthu . Kandavargalum thappt solla nam onrum . . . .
Alla.sila neram sila visayangal nam pesamal pirar ariya mudiyathu .
@DOCTOR en photo vinavu la vanthal mattum than nambuveergala ?

கலகலப்ரியா said...

||முகிலன் has left a new comment on the post "போராளிகளா? பூச்சாண்டிகளா?":

மதாரின் சார்பாக..

Thanks for ur post Dinesh .unga mela enaku kovam niraiyave irunthathu
ungal amaithi parthu . Kandavargalum thappt solla nam onrum . . . .
Alla.sila neram sila visayangal nam pesamal pirar ariya mudiyathu .
@DOCTOR en photo vinavu la vanthal mattum than nambuveergala ? ||

ஓ... சாந்தி அக்கா Dr.Rudhran sir-கு அந்த ஃபோட்டோ அனுப்பாம விட்டுட்டாங்களா... அனுப்பச் சொல்லுங்க...

(ரைட்டு... அப்பீட்டு... எனக்கு கன்னாபின்னான்னு வாயில வருது..)

கிருஷ்ண மூர்த்தி S said...

தினேஷ்!

உங்களுடைய உறுதியான நிலைபாட்டுக்கு எனது ஆதரவும், வாழ்த்துக்களும்!

சாந்தி -மதார்-அரவிந்த்-நீங்கள் என்று மட்டுமில்லை, வினவு தளம் சமீப காலமாகத் தனி நபர்களை மட்டுமே தனது தாக்குதல்களுக்குத் தொடர்ந்து எடுத்துக் கொள்கிறது. கண்டிக்கப் படவேண்டியது ஒருமனிதர் செய்கிற தவறான செயலையா, அல்லது அந்த மனிதரையேவா என்பதில் ஒரு சரியான நிலை எடுக்க முடியாமல் தடுமாறுகிறபோது இந்தக் குழப்பங்கள் இடதுசாரி சிந்தனையுடைய இயக்கங்களில் வெகு சாதாரணமாகக் காணப்படும் போக்கு தான்.. ஒரு தனிநபர் செய்வது ஒட்டு மொத்த சமுதாயத்தையே பாதிக்கும் சந்தர்ப்பங்களில் கண்டிப்பதில் தவறில்லை தான். ஆனால் ஒரு தனிநபரை மட்டுமே குறித்துத் தாக்கும்போது, அங்கே தனிப்பட்ட வஞ்சம் தெரிகிறதா, அல்லது சமுதாயத்தை அந்தத் தனிபர் தொற்றில் இருந்து காப்பாற்றும் எண்ணம் மேலோங்கி இருக்கிறதா என்பதை கவனித்து சரிசெய்து கொள்ளும் தன்மை நியாயவுணர்வுடைய தோழர்களிடமிருந்து எதிர்பார்க்கக் கூடியதே. லீனா மணிமேகலை விவகாரம் தொடங்கி, நரசிம்-சந்தனமுல்லை, இப்போது சாந்தி ஈறாக, தோழர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளவில்லை என்பதும், சுயபரிசோதனை செய்துகொள்ளத் தயாராக இல்லை என்பதும் அம்பலப் பட்டு நிற்கிறது.

முதலாளித்துவம் என்று பேசும்போது, பெட்டிக் கடை வைத்திருப்பவனையும் முதலாளி என்று வைத்துக் கொண்டு வெறுப்பைக் கக்கி, ஜனங்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போன அனுபவத்திற்குப் பிறகும், ஒன்றாயிருந்த இயக்கம், இந்த மாதிரி அற்பமான பிரச்சினைகளைக் கூட சரியாக அனுமானிக்கத் தெரியாமல் பலப்பல குழுக்களாகச் சிதறிப் போன பிறகும் கூட சரியான பாடத்தைக் கற்றுக் கொள்ள இன்னமும் தவறிக் கொண்டே இருக்கிறார்கள் என்பது உண்மையிலேயே வருத்தமளிப்பதாக இருக்கிறது.

அதைவிட மிகவும் வருத்தம் அளிப்பது என்னவென்றால், சாந்தி மாதிரி நேரத்துக்கொரு பேச்சுப் பேசுகிறவர்களிடம் கூட, தத்துவார்த்த நிலை பேசுகிற தோழர்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டிருப்பது தான்!

ஹல்லேலூயா என்று உரக்கக் கூவி, தோழர்களை அந்தப் பரம பிதாவே காப்பாற்றட்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டியது தான்! ஆமென்!

அப்புறம் இந்தப் பதிவின் தலைப்புக்கு.....?

பூச்சாண்டி எல்லாம் இல்லை! ஐயோ பாவம் என்று தான் தோன்றுகிறது!

கலகலப்ரியா said...

||முகிலன் said...
@Dr.Rudhran,

எனக்குச் சுட்டுப் போட்டாலும் அநாகரீகமான வார்த்தைகளை எழுத வராது..||

Sorry முகிலன்... i just can't resist this...

Dr. Rudhran.. இங்க நாகரிகமா எழுதினதுக்குப் பாராட்டு தெரிவிக்கிற நீங்க... வினவுல... பொறுக்கி, வன்புணர்வு-ல இருந்து.... எல்லாஆஆஆ வார்த்தையும் பிரயோகித்து... எழுதுறப்போ... அதுக்கு ஒரு சிறு கண்டனம் கூடத் தெரிவிக்க மாட்டீங்க... அது ஏனோ...

அது மட்டுமில்லாம... மசிர் மட்டைனு பேசினா நாகரீகம் இல்ல... மத்தபடி நாகரீகமா... யாரை எவங்க எப்டி கன்னாபின்னான்னு... உண்மை இல்லாதது எல்லாம் எழுதி... இவன் இந்த ஜாதி... அவன் அந்த ஜாதின்னு எழுதறதெல்லாம் உங்களுக்கு ரொம்ப நாகரீகமோ...

ஏன் சார் இப்டி... வினவு க்ரூப்ல இருந்தாலே... இப்டித்தான் ஆயிடுவாங்களோ மக்கள்.....

பிரபாகர் said...

சரியாய் கேட்டீர்கள் சகோதரி... மாமியார் உடைத்தால் மண்சட்டி, மருமகள் உடைத்தால் பொன்சட்டி எனும் போக்கில் தான் இருக்கிறார்கள்.

பிரபாகர்...

கலகலப்ரியா said...

அண்ணா... :))... அதகளம்...சூப்பர் சொலவட..

Dr.Rudhran said...

i quit- not because you win, because i hate filth.

குளிகன் said...

என்னிடம் ஒரு கேஸ் வந்தது. என் நண்பன் வேலை செய்யும் அலுவலகத்தில் அவனுடன் வேலை செய்த ஒரு பெண் காசு விஷயங்களில் மோசடி செய்தார். அவருடைய காதலனுடன் வேலை நேரத்தில் ஆப்பீஸிலேயே லவ்விக் கொண்டிருந்தார். இது தவறு அலுவலகம் முடிந்து வெளியே நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் மேலும் ஆப்பீஸ் பணத்தை கையாடுவது தவறு இதனால் நானும் பாதிக்கப் படுவேன் என்று என் நண்பன் எடுத்துச்சொல்லியும் அந்தப் பெண் திருந்துவதாயில்லை மேலும் தனது காதலனிடம் புகார் சொல்லி அவன் நண்பர்களுடன் வந்து மிரட்ட ஆரம்பித்தான். அந்தப் பெண்ணின் காதலனின் புத்திசாலித்தனமான் அறிவுரைப்படி அந்தப் பெண் மகளிர் காவல் நிலையத்தில் தன்னை மானபங்கப் படுத்த முயற்சித்தான் என்று புகார் அளித்தது. போலீஸ் வந்ததும் என் நண்பன் பயந்துபோனான். நான் சொன்னேன் பயப்படாமல் வா போலீஸ் ஸ்டேஷன் போகலாம் என்று போனேன். எஸ் ஐ கேட்டார் என்னாப்பா இந்தப் பெண் சொல்லவது உண்மையா? நான் சொன்னேன் சார் நீங்கள் முதலில் எப் ஐ ஆர் போடுங்கள். கோர்ட்டில் பார்த்துககறோம். எங்களிடம் ஆதாரம் இருக்கு. . போலீஸ் இப்பொழுது அந்தப் பெண்ணை பார்த்து கேட்டது என்னம்மா கேஸ் போட்டுடலாமா அப்புறம் பொய் கேஸ் போட்டிருந்தா உன்னைத்தான் உள்ள வைப்பாங்க. அவ்ளோதான் அந்தப் பெண் கதறி அழுது சார் மன்னிச்சிடுங்க தெரியாமப் பண்ணிட்டேன் என்று காலில் விழுந்து மன்னிப்பு கேட்டது. ஒரு பெண் போலீஸ் ஏம்மா உன் லவ்வர் முன்னாடியே என்னை இவன் கெடுத்தான்னு கூசாம சொல்றியே நாளைக்கு இவன் கல்யாணம் பண்ணி இத வெச்சி எதுனா கேள்வி கேட்டா உன் வாழ்க்கை என்னாகறது? எதுக்கு இவ்ளோ பெரிய கதைன்னா ஒரு ஹேபியஸ்கார்ப்பியஸ் மனு போட்டு வினவ பதிவுலகமே பதாகைகளுடன் போய் வினவிடலாமான்னுதான்..கி கி..

Dr.Rudhran said...

வினவில் வந்தால் மட்டுமல்ல, எங்கே வந்தாலும் நம்புவேன். ஆனால் என் கேள்வி- இங்கே வினவு செய்த அநீதி என்ன என்பதே.
வீனவே அநீதி என்றால் நான் விடை தேட மாட்டேன்.

Unknown said...

//வினவில் வந்தால் மட்டுமல்ல, எங்கே வந்தாலும் நம்புவேன். ஆனால் என் கேள்வி- இங்கே வினவு செய்த அநீதி என்ன என்பதே.
வீனவே அநீதி என்றால் நான் விடை தேட மாட்டேன்//

தங்களிடம் புகார் வந்தால்தான் தட்டிக் கேட்பார்களா?

தங்கள் நண்பர்கள் மீது ஒருவர் புகார் வைத்தால் நண்பரைத் தட்டிக் கேட்கமாட்டார்களா?

தட்டிக் கேட்க மாட்டார்கள் என்றால் அது அவர்களின் கொள்கைக்குச் செய்யும் அநீதி..

vasu balaji said...

//Dr.Rudhran said...

வினவில் வந்தால் மட்டுமல்ல, எங்கே வந்தாலும் நம்புவேன். ஆனால் என் கேள்வி- இங்கே வினவு செய்த அநீதி என்ன என்பதே.
வீனவே அநீதி என்றால் நான் விடை தேட மாட்டேன்.//

சம்பந்தப்பாடாதவங்கள இழுத்து பேசுறதும், அவங்க கண்டனம் தெரிவிச்சும் நீக்காம இருக்கறதும், கேட்கிற கேள்விக்கு பதில் தர அவசியமில்லைன்னு இருக்கறதும் உங்களுக்கு அநீதி இல்லையா?

கலகலப்ரியா said...

||Dr.Rudhran said...
i quit- not because you win, because i hate filth.||

Dr. Rudhran... i dun think.. nebody is competing here with you... omg.. why are you being so kiddish... r ya really a psychiatrist... poor patients..!!!!!!!!!

and... wot is filth...?!!! CHECK IT OUT... AND AGAIN... WHEN ANYBODY ASKS ANYTHING REASONABLE... YOU PPL DIVERT IT LIKE THIS...

YOU'RE TALKING ABOUT A COMPETITION NOW... I REALLY FEEL DUMB... THAT I RESPECTED YOU AND EXPECTED A REASONABLE ANSWER... COZ... I THINK YOU'RE THE ONLY PERSON WHO DOESN'T WEAR A MASK THERE.. (AT LEAST PHYSICALLY..)

ALAS.... IT'S MY FAULT AGAIN...

HAVE A NICE JOURNEY WITH YOUR VINAVU GROUP...

I QUIT.. NOT COZ I LOSE / WIN... BUT... THERE'S NO USE IN ARGUING WITH YOU...!!!!!!!!! YOU'RE FAR FAR AWAY FROM ME... I MEAN... MENTALLY..!!!!

வால்பையன் said...

//தம்பி உனக்கு வேணுமா ? பணம் எல்லாம் தர வேணாம் சும்மாவே தரேன் . //

இது ரொம்ப கேவலமா இருக்கு, இதை பத்தி ஏழரையின் பஸ்ஸில் கேட்டதற்கு ஏழர பஸ்ஸை இழுத்து மூடிட்டு போயிட்டார், இதுக்கு முன்னால் ஒரு பஸ்ஸை அழித்து விட்டு எப்படி அழிஞ்சதுன்னு தெரியாதுங்கிறார்!

சின்ன சாருவா இருப்பாரோ!?

settaikkaran said...

பல விஷயங்கள் பலருக்குப் புரியும் வகையில் எழுதியிருக்கிறீர்கள் முகிலன். இதற்கு அப்புறமும் எவராவது பெண்ணியம், ஆணாதிக்கம் என்று திசைதிருப்ப முயன்றால், அவர்களுக்காக பரிதாபப்படுவதில் கூட அர்த்தமில்லை.

Unknown said...

\\தட்டிக் கேட்க மாட்டார்கள் என்றால் அது அவர்களின் கொள்கைக்குச் செய்யும் அநீதி..\\
என் தலை அல்ல, தலை முடி கூட வினவின் பக்கம் திரும்பாது என்று வீர வசனம் பேசியது உங்கள் தோழிதான். தட்டிக் கேட்க வில்லை என கூப்பாடு போடுவது வியப்பாயிருக்கிறது.

settaikkaran said...

//Dr.Rudhran said...

i quit- not because you win, because i hate filth.//

In all humility, let me reframe the question posed by some friends earlier.

1. Do you believe that the VINAVU posting had a balanced view, considering the facts provided by the so called 'victim'?

2. How would you justify the undue exaggeration done by some people including VINAVU as though the fiction in question was nothing short of sexual humiliation? I have found remarks in VINAVU which inflicted more damage than what was alleged to have been done by the so called culpirts. Have you felt the same?

I daresay I haven't garnished any filth in my above questions. With due respect, I request you to clarify my questions Sir.

Unknown said...

///கண்டிக்கப் படவேண்டியது ஒருமனிதர் செய்கிற தவறான செயலையா, அல்லது அந்த மனிதரையேவா என்பதில் ஒரு சரியான நிலை எடுக்க முடியாமல் தடுமாறுகிறபோது இந்தக் குழப்பங்கள் இடதுசாரி சிந்தனையுடைய இயக்கங்களில் வெகு சாதாரணமாகக் காணப்படும் போக்கு தான்.. ஒரு தனிநபர் செய்வது ஒட்டு மொத்த சமுதாயத்தையே பாதிக்கும் சந்தர்ப்பங்களில் கண்டிப்பதில் தவறில்லை தான். ஆனால் ஒரு தனிநபரை மட்டுமே குறித்துத் தாக்கும்போது, அங்கே தனிப்பட்ட வஞ்சம் தெரிகிறதா, அல்லது சமுதாயத்தை அந்தத் தனிபர் தொற்றில் இருந்து காப்பாற்றும் எண்ணம் மேலோங்கி இருக்கிறதா என்பதை கவனித்து சரிசெய்து கொள்ளும் தன்மை நியாயவுணர்வுடைய தோழர்களிடமிருந்து எதிர்பார்க்கக் கூடியதே. லீனா மணிமேகலை விவகாரம் தொடங்கி, நரசிம்-சந்தனமுல்லை, இப்போது சாந்தி ஈறாக, தோழர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளவில்லை என்பதும், சுயபரிசோதனை செய்துகொள்ளத் தயாராக இல்லை என்பதும் அம்பலப் பட்டு நிற்கிறது.

முதலாளித்துவம் என்று பேசும்போது, பெட்டிக் கடை வைத்திருப்பவனையும் முதலாளி என்று வைத்துக் கொண்டு வெறுப்பைக் கக்கி, ஜனங்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போன அனுபவத்திற்குப் பிறகும், ஒன்றாயிருந்த இயக்கம், இந்த மாதிரி அற்பமான பிரச்சினைகளைக் கூட சரியாக அனுமானிக்கத் தெரியாமல் பலப்பல குழுக்களாகச் சிதறிப் போன பிறகும் கூட சரியான பாடத்தைக் கற்றுக் கொள்ள இன்னமும் தவறிக் கொண்டே இருக்கிறார்கள் என்பது உண்மையிலேயே வருத்தமளிப்பதாக இருக்கிறது.///

மக்கள் எழுச்சி மூலம் நிறைய சாதித்த ஒரு கோட்பாடு நாறிப்போன ஒரு வரலாற்றை சில வார்த்தைகளில் சொல்லியிருக்கிறீர்கள் எஸ். கிருஷ்ணமூர்த்தி... நன்று

ராவணன் said...

//வினவில் வந்தால் மட்டுமல்ல, எங்கே வந்தாலும் நம்புவேன். ஆனால் என் கேள்வி- இங்கே வினவு செய்த அநீதி என்ன என்பதே.
வீனவே அநீதி என்றால் நான் விடை தேட மாட்டேன்.//

வினவு என்ற கும்பலே அநீதி கும்பல் என்று தெரியாதா டாக்க்குடர்ரு

CNC Job Offers said...

"எழுதும்போது கட்டுரையின் சாரம்சத்தை விட்டு சற்றே விலகி யாரையாவது அல்லது எந்த நிகழ்வையாவது தேவையில்லாமல் தாக்கிச் செல்வார்கள்"

நீங்கள் சுட்டிக்காட்டிய இந்த விடயத்தை முற்றுமுழுதாகவே நான் ஆமோதிக்கிறேன். இதன் காரணமாகவே? என்னவோ தெரியவில்லை வினவு எந்த விடயத்தை சொல்ல வந்தாலும் அவரது வாதங்களை ஏற்றுக்கொள்ள எனது மனம் இடங்கொடுப்பதில்லை.

ராவணன் said...

//வினவு
வினவு சமூகப் பொறுப்புடன் பல கட்டுரைகளை எழுதி வருவது நான் பதிவுலகத்துக்கு வந்தது எனக்கு அறிமுகமானது. நான் சில கட்டுரைகளையும் வாசித்து இருக்கிறேன். ஆனால் அவர்கள் ம.க.இ.கவின் ஆதரவுத் தளம் என்ற உண்மை எனக்குத் தெரிய வந்ததும் நான் அவர்களின் தளத்துக்குப் போவதைத் தவிர்க்க ஆரம்பித்தேன். (அதற்குக் காரணம் எனக்கும் ம.க.இ.கவுக்கும் ஒரு கொடுக்கல் வாங்கல் பிரச்சனை).//

ஆஹா.....உங்களுக்கும் தெரிந்துவிட்டதா?
''மருதய்யன் கம்நாட்டி இருக்கும் கழகம்'' மகஇக.

ராவணன் said...

i am sure you are from devangkar collage.

Unknown said...

//என் தலை அல்ல, தலை முடி கூட வினவின் பக்கம் திரும்பாது என்று வீர வசனம் பேசியது உங்கள் தோழிதான். தட்டிக் கேட்க வில்லை என கூப்பாடு போடுவது வியப்பாயிருக்கிறது//

இப்போதும் அவர் உங்களிடம் கோரிக்கை வைத்து கெஞ்சிக் கொண்டு இருக்கவில்லை கலை(காளை?). பெண்ணியப் போராளிகளாக தங்களைக் காட்டிக் கொள்ளும் வினவு இங்கே என்ன செய்யப் போகிறது என்பது என் கேள்வி.

எங்களைப் பற்றி தவறாக எழுதிவருக்கு இப்படி நேரும் போது கை கட்டிப் பார்த்துக் கொண்டிருப்போம் என்று நீங்கள் சொல்வது இது ஒன்றும் முதல் முறை இல்லையே?

வினவின் நிறத்தைத் தோலுரித்துக் காட்டியதற்கு நன்றி

அது சரி(18185106603874041862) said...

//
Dr.Rudhran said...
i quit- not because you win, because i hate filth.
//

Surprise, Surprise, Surprise...you the great doctor who hates filth so much did not utter a word for that Vinavu post.

If you really want to know what is filth, kindly read that vinavu post once again.

Unknown said...

மீண்டும் மதார் சார்பாக (அவரால் என்ன காரணத்தாலோ என் இடுகையில் பின்னூட்ட முடியவில்லை)

"@kala , nan pesurathu ungaluku
koopada? Ippoluthum solren en thalaila irunthu vilura mudi kooda
vinavu kita poi kaiyenthathu . En pathivu onrum enaku niyayam kettu
vinavuku eluthala athai alnthu padicha therium . Ennai adimai enru
solla vinavu yaar? Ungalidam pathil iruka?

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நுனிப்புல் மேய்பவர்கள் தான் இங்க அதிகம் முகிலன். அட்லீஸ்ட் ஒருத்தர குற்றம் சாட்டறதுக்கு முன்னாடியாவது எல்லாத்தையும் டபுள் செக் பண்ணிக்கறது நல்லது.

சம்பந்தப்பட்ட ஒருவரைப் பற்றியும் ஒண்ணுமே தெரியாம, அவங்க போட்டிருக்கும் கட்டுரையை மட்டும் படிச்சிட்டு அந்த புனைவப் பார்த்தா கண்டிப்பா யாரும் குழம்பிப் போகத் தான் செய்வாங்க. இங்கு வந்து கேள்வி கேட்கும் எல்லாரும் அப்படித் தான். முழு விபரமும் யாருக்குமே தெரியாது. உங்களைப் பற்றி எதுவுமே தெரியாது. சுட்டப் பட்ட ஒருத்தன் மேல எல்லாரும் ஒரு முன் முடிவோட பாயறாங்க.

தீர ஆராயாமலே அவங்க ஒருவரை இவ்வளவு மோசமா பகிரங்கமா குற்றம் சாட்டி இருப்பது தவறு. இங்க எல்லாரும் நினைக்கறது - ஜான்சி அக்கா தவிர்த்து வர்ற இன்னொரு கேரக்டரும் அவங்களா இருக்குமோன்னு. இல்லன்னு நாங்க நம்பறோம். உங்களைப் பற்றி அறியாதவங்க இங்க சறுக்கிடறாங்க.

ஒரு இடத்துல அவரை அக்கான்னு அழைத்து நீங்க போட்டிருக்கற ஒரு விளக்கத்தைப் படித்தாலே உங்க கண்ணியம் தெரியும். யாருக்காக அதுல விளக்குனீங்களோ அவரே இப்போ உங்கள தவறா புரிஞ்சிட்டு கோபமா இருக்கறது ரொம்பவே வருத்தம் தருது!

மாதவராஜ் said...

அன்புள்ள முகிலன்!


தனிப்பட்ட பிரச்சினைகளுக்குள் செல்ல விரும்பாமல், பாதிக்கப்பட்டவரின் பக்கம் நின்று, இது போன்ற சர்ச்சைககளில் வெளிப்படும் பொதுவான விஷயங்களைத்தான் என் பதிவில் முன்வைத்திருந்தேன். தனிப்பட்டமுறையில் யாரையும் குற்றம் சுமத்தவில்லை. புரிதல்களில் இருக்கும் தவறுகளையும், சிக்கல்களையும் சுட்டிக்காட்டியிருந்தேன். வேண்டுமானால் அதனை இன்னொருமுறை நிதானமாகப் படித்துப் பாருங்கள்.

இப்போதும் பாதிக்கப்பட்டவரின் பக்கமே நிற்கிறேன். பதிவர் மதார் அவர்கள் மீது பிரயோகிக்கப்பட்டு இருக்கும் வக்கிரம் நிறைந்த வார்த்தைகளைக் கண்டிக்கிறேன்.

வலையுலகத்தை ஆரோக்கியமாக வளர்த்தெடுக்கும் பொறுப்பு எல்லோருக்கும் இருக்கிறது. அதற்கான வழிகளை ஆராய்வோம்.

நன்றி.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

இன்னும் ஒன்னு.. This is for you.. Just from my understanding and my personal opinion.. I am sorry if I am opining wrong..

அந்தம்மா எதோ வகைல மன உளைச்சல்ல இருக்காங்க.. இல்லாட்டி இவ்வளவு தூரம் இதை எடுத்துட்டுப் போயிருக்கமாட்டாங்கன்னு தோணுது.. தெரியாம ஒருத்தங்க மேல இடிச்சிட்டு விலகிப் போயிட்டாலும், பின்னால் ஒரு நாள் அவங்க வந்து, அன்னைக்கு நீ இடிச்சதால எனக்கு காயம் ஆகிடுச்சுன்னு சொன்னா - அது உண்மையோ இல்லையோ.. எதோ வகைல நாம இடிச்சிருக்கோம் அப்படின்றதால மன்னிப்பு கேட்டுடறது நல்லது, தப்பு நம்ம மேல இல்லைன்னாலும் கூட..

கிருஷ்ண மூர்த்தி S said...

த்தூ த்தூன்னு துப்பி இணைய வாசிப்பை அசிங்கப்படுத்தாமல் இருந்தாலே பெரிய உபகாரம், ஆதரவு!

இந்த ஆதரவெல்லாம் எந்த மூலைக்கு?

:-(((

VISA said...

முகிலன் ஓட்டு போட்டுவிட்டேன்.

இதை பற்றி மேலும் எழுத மனமில்லாததால்........

குடுகுடுப்பை said...

உங்கள் பக்கம் நியாயம் உள்ளது என்பது என்னைப்போன்ற நண்பர்களுக்கு மட்டுமல்ல,நியாயமாக இந்தப்பிரச்சினையை பார்த்தவர்கள் அனைவருக்கும் தெரியும்.

குடுகுடுப்பை said...

மாதவராஜ் said...
அன்புள்ள முகிலன்!


தனிப்பட்ட பிரச்சினைகளுக்குள் செல்ல விரும்பாமல், பாதிக்கப்பட்டவரின் பக்கம் நின்று, இது போன்ற சர்ச்சைககளில் வெளிப்படும் பொதுவான விஷயங்களைத்தான் என் பதிவில் முன்வைத்திருந்தேன். தனிப்பட்டமுறையில் யாரையும் குற்றம் சுமத்தவில்லை. புரிதல்களில் இருக்கும் தவறுகளையும், சிக்கல்களையும் சுட்டிக்காட்டியிருந்தேன். வேண்டுமானால் அதனை இன்னொருமுறை நிதானமாகப் படித்துப் பாருங்கள்.

இப்போதும் பாதிக்கப்பட்டவரின் பக்கமே நிற்கிறேன். பதிவர் மதார் அவர்கள் மீது பிரயோகிக்கப்பட்டு இருக்கும் வக்கிரம் நிறைந்த வார்த்தைகளைக் கண்டிக்கிறேன்.

வலையுலகத்தை ஆரோக்கியமாக வளர்த்தெடுக்கும் பொறுப்பு எல்லோருக்கும் இருக்கிறது. அதற்கான வழிகளை ஆராய்வோம்.
//

நீங்கள் ஆணாக வெட்கப்பட்டபோது உண்மையிலேயெ பாதிக்கப்பட்டவர் நண்பர் /பதிவர் முகிலன், அந்த உணமை புரிந்தும் ஒப்புக்கொள்ளும் துணிச்சல் உங்களுக்கு இல்லை என்பதே உங்கள் இந்த வழும்பல் பின்னூட்டம் தெரியப்படுத்துகிறது.

அது சரி(18185106603874041862) said...

//

மாதவராஜ் said...
அன்புள்ள முகிலன்!


தனிப்பட்ட பிரச்சினைகளுக்குள் செல்ல விரும்பாமல், பாதிக்கப்பட்டவரின் பக்கம் நின்று, இது போன்ற சர்ச்சைககளில் வெளிப்படும் பொதுவான விஷயங்களைத்தான் என் பதிவில் முன்வைத்திருந்தேன். தனிப்பட்டமுறையில் யாரையும் குற்றம் சுமத்தவில்லை. புரிதல்களில் இருக்கும் தவறுகளையும், சிக்கல்களையும் சுட்டிக்காட்டியிருந்தேன். வேண்டுமானால் அதனை இன்னொருமுறை நிதானமாகப் படித்துப் பாருங்கள்.

இப்போதும் பாதிக்கப்பட்டவரின் பக்கமே நிற்கிறேன். பதிவர் மதார் அவர்கள் மீது பிரயோகிக்கப்பட்டு இருக்கும் வக்கிரம் நிறைந்த வார்த்தைகளைக் கண்டிக்கிறேன்.
//

மாதவ்ராஜ்,
நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் இதை சொல்கிறேன்.

வன்புணர்வு போன்ற விஷயங்கள் மிகக் கொடூரமான குற்றங்கள். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அது ஏன் கொடூரமான, மனிதத்தன்மையற்ற குற்றம் என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். விளக்க வேண்டியதில்லை.

ஆனால், ஒருவர் அப்படி ஏதும் செய்யாத போது அத்தகைய குற்றம் செய்ததாக ஒருவர் மீது குற்றம் சாட்டினால் குற்றம் சாட்டப்பட்ட நபரை வன்புணர்வு செய்ததாகத் தான் அர்த்தம். இப்படி குற்றம் சாட்டுபவர்கள் நோக்கம் குறித்தும் சந்தேகம் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

Unknown said...

"வந்துட்டிங்க, தட்டவோ திட்டவோ முடிவும் பண்ணிட்டிங்க..

செய்யறத செஞ்சிட்டுப் போங்க.. வேற என்னத்த சொல்றது??"

No. Not with this intention.

"தயவு செய்து கேலிக்காகக்கூட பெண்களை கீழிறக்கி எழுத வேண்டாம்.
சிரிப்புத்தானே என்கிற மழுப்பல் கெட்டிப்பட்டுப்போகும். அதுவே நிஜமாகியும் திரியும்.
பட்டது...
உன்னிடம் வேறு எழுத்தை எதிர்பார்க்கிறேன். "

இது நான் பெரிதும் மதிக்கக் கூடிய ஒரு பதிவரின் பின்னூட்டம். எப்போதும் மனித நேயத்தையும் அன்பு ஒழுக்கத்தையும் தன்னுடைய பதிவு மற்றும் பின்னூட்டத்தில் பெரிதும் கடைபிடிப்பவர். இது நம்ம மண்ணின் கலாச்சாரம், பண்பாடு. ஒரு பெண் தவறே செய்திருந்தாலும், நமது பண்பாட்டின் படி அவர்களுக்கு முதலில் உதவுவதே மனித இயல்பு. இதை ஆதரித்து அல்லது எதிர்த்து ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த சொற்சித்திரன்களோட வாதாடலாம். அது அவரவர் விருப்பம்.

உங்கள் பிரச்சனையைப் பொறுத்தவரையில் எல்லோரும் ஒரு பெரு மனதடுன் இதை விட்டுவிட்டு மேற்கொண்டு செல்லுதல் மிக நலம். ஒவ்வொருத்தரும் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப் பட்டிருக்கலாம். அதை மறந்து விட்டு மேற்கொண்டு செல்லுதல் சாலச் சிறந்தது. இதை அங்கப் பொய் சொல்லுன்னும் சொல்லலாம். எங்கப் போய் சொன்னாலும், ஒன்றே. வீணா சண்டையிட்டு, யாரையும் நோகடிக்காமல், நம் மண்ணின் பாரம்பரியம் மனித நேயத்தை கடை பிடிப்போமாக.

Unknown said...

//Sethu said...

ஒரு பெண் தவறே செய்திருந்தாலும், நமது பண்பாட்டின் படி அவர்களுக்கு முதலில் உதவுவதே மனித இயல்பு. இதை ஆதரித்து அல்லது எதிர்த்து ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த சொற்சித்திரன்களோட வாதாடலாம். அது அவரவர் விருப்பம்.

உங்கள் பிரச்சனையைப் பொறுத்தவரையில் எல்லோரும் ஒரு பெரு மனதடுன் இதை விட்டுவிட்டு மேற்கொண்டு செல்லுதல் மிக நலம். ஒவ்வொருத்தரும் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப் பட்டிருக்கலாம். அதை மறந்து விட்டு மேற்கொண்டு செல்லுதல் சாலச் சிறந்தது. இதை அங்கப் பொய் சொல்லுன்னும் சொல்லலாம். எங்கப் போய் சொன்னாலும், ஒன்றே. வீணா சண்டையிட்டு, யாரையும் நோகடிக்காமல், நம் மண்ணின் பாரம்பரியம் மனித நேயத்தை கடை பிடிப்போமாக
//

சேது, உங்கள் மனிதாபிமானம் புல்லரிக்க வைக்கிறது. கலகலப்ரியா எனக்கெதிராக ஒரு அவதூறு பரப்பப்பட்ட போது எழுதிய பதிவில் நீங்கள் நான் சாணி எறிந்தேன், அது தெரித்து என் மேல் விழுகிறது என்று சொன்னீர்கள். சாந்தி அவர்களிடம் நான் விவாதித்தேனா இல்லையா என்று தெரியாமல் விவாதித்து தீர்த்துக் கொள்ளுங்கள் என்று தீர்ப்பு சொன்னீர்கள். நான் வசிக்கும் நாட்டில் என்ன தண்டனை கிடைக்கும் என்று தெரியுமா என்று எச்சரிக்கை கொடுத்தீர்கள்.

இங்கே நான் எனக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட அவதூறைக் கண்டித்துப் பதிவெழுதவில்லை. ஒரு பெண்ணால் இன்னொரு பெண்ணிற்கு நிகழ்த்தப்படும் அநீதிக்கெதிரான என் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறேன். ஆனால், இப்போது எனக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும் நீங்கள் சொல்லும் ஆலோசனை - மண்ணின் மனிதாபிமானத்தோடு மறந்துவிட்டு மேற்கொண்டு செல்லுதல்.. சபாஷ்..

இதை நீங்கள் புன்னகை தேசம் சாந்தியிடம் சொன்னீர்களா? அவர் புனைவுக்கு முடிவு கட்டுவோம் வாருங்கள் என்று அறைகூவல் விடுத்தபோதோ இல்லை மாதவராஜ் வெட்கப்பட்டு தலைகுனிந்த போதோ, இல்லை வினவு என்னை துகிலுரியும் வக்கிரக்காரன் என்று குற்றம் சாட்டிய போதோ அங்கே நீங்கள் சொல்லியிருந்தால் உங்கள் வார்த்தைகளுக்கு இன்றும் மரியாதை கிடைத்திருக்கும்.

ஒருவேளை அங்கே மனிதாபிமானம் இல்லை என்பதற்காக என்னிடம் சொல்கிறீர்களா?

இப்படி பின்னால் ஒரு பெண்ணை கேவலமாகப் பேசும் பதிவர் சாந்திக்கு உங்கள் கண்டனங்களைக் கூட தெரிவிக்க மாட்டீர்களா? தோழர் மாதவராஜே பரவாயில்லை போலிருக்கிறது

எல் கே said...

sethu solrathu congressoda secularisa koligai maathiri irukku

மதார் said...

யாரும் யாரையும் பிடிக்காமல் இங்கு நட்பு பாராட்ட முடியாது . ஒருவரை பிடித்து இருக்கிறது என்பதற்கு இப்படி ஒரு கேவலமான கிசுகிசு பரப்புவதுதான் நாகரீகமா ? வயதான பதிவர் என் தந்தை வயது உள்ளவர் கூட எனக்கு உன் எழுத்து எனக்கு பிடிக்கிறது அதனால் உன்னையும் பிடிக்கிறது அம்மா என்று மெயில் அனுப்பி இருந்தார் . இந்த பிடிப்புக்கு என்ன அர்த்தம் இவர்கள் பாணியில் ?

CNC Job Offers said...

இஸ்லாத்தைப் பற்றி நீங்கள் வைக்கின்ற அனைத்து குற்றச்சாட்டுக்களையும் பொது மக்கள் முன்னிலையில் வைத்து இஸ்லாமிய அறிஞர்களும் கம்யூனிஸ்ட்டுகளும் நேரடியாக விவாதிக்கலாம் என்று சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தன்னுடைய இணையதளத்தினில் பகிரங்க அறைகூவல் ஒன்றை கம்யூனிஸ்ட் வெறியர்களுக்கு விடுத்திருக்கின்றார். இதை சந்திக்க தைரியமில்லாத கோழைகளான ம.க.இ.க மற்றும் வினவு வகையறாக்கள் தங்களுடைய பதிலை பின்வருமாறு தெரிவித்திருக்கின்றனர். இதை படித்து விட்டு சிரிப்பதா அல்லது இவர்களுடைய அறிவின் வளர்ச்சி கண்டு சிரிப்பதா என்று தெரியவில்லை.

/* வினவு says:

April 19, 2010 at 5:28 pm
அறிவிப்பு:
இங்கு வரும் பல இசுலாமிய நண்பர்கள் எதற்கெடுத்தாலும் பகிரங்க விவாதத்திற்கு வரத்தயாரா என்று உதார் விடுவது வழக்கமாக இருக்கிறது. அது தொடர்பான விளக்கம்.
எங்களைப் பொறுத்தவரை மதவெறியர்களையும், மதவாதிகளையும் மக்களிடம் அம்பலப்படுத்துவதையே செய்வோம். மாறாக சரிக்கு சமமாக அவர்களுடன் விவாதம் செய்ய வேண்டிய தேவையில்லை.......... ஆர்.எஸ்.எஸ் முதலான இந்து மதவெறி அமைப்புக்களை பகிரங்க மேடையில் விவாதித்து முறியடிப்பது எப்படி சாத்தியமில்லையோ, முட்டாள்தனமானதோ அது போன்று முசுலீம் மதவாதிகளோடும் அப்படி விவாதிக்க முடியாது. */

உண்மையிலேயே வினவுக்கு பகுத்தறிவு என்ற ஒன்று இருக்கின்றதா என்ற சந்தேகம் இந்த பதிலை படித்தவுடன் அதிகமாகி விட்டது. நேரடி விவாதத்தில் கலந்து கொண்டு பேசினால் மக்களிடம் கருத்து போய் சேராதா? மத வெறியர்கள் தான் நேரடி விவாதத்தினில் தோற்றாலும் திருந்த மாட்டார்கள். ஆனால் அந்த விவாதத்தினை காணுகின்ற இலட்சக் கணக்கான மக்கள் உண்மையை அறிந்து கொள்வார்களே. ஏன் மக்கள் மன்றத்தில் உங்களுடைய கருத்தினை எடுத்து வைக்க பயப்படுகின்றீர்கள் கம்யூனிச வெறியர்களே? இந்த பதிலில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நல்ல நகைச்சுவையும் உண்டு. ஆர் எஸ் எஸ் போன்ற அமைப்புகள் என்னவோ இவர்களுடன் விவாதிக்க விரும்புவது போல நல்ல கற்பனைகளையும் இடையிடையே சேர்த்திருக்கின்றது வினவு. நேரடி விவாதத்தினில் கலந்து கொண்டு பேசினால் உண்மை மக்களிடம் அம்பலப்படாதா? உங்களிடம் உண்மை இருந்தால் மிக சுலபமாக நேரடி விவாதத்தின் மூலமாக மதவாதிகளை வீழ்த்தி விடலாமே . மக்கள் முன் அம்பலப்படுத்தியும் விடலாமே மதவாதிகளை. வினவே நேரடி விவாதத்திற்கு ஏன் பயப்படுகின்றாய்? நேரடி விவாதத்தில் காரல் மாக்ஸ் காலை வாரி விட்டு விடுவார் என்ற அச்சமா? இல்லை கம்யூனிசத்தை இன்னும் சரியாக படிக்கவில்லையா மருதய்யன் வகையறாக்கள்.

Unknown said...

You are all not in a mood accept any thing or ready to find a solution. Now you are finding fault with me. Yes you can, because I am also a human.

"நீங்கள் நான் சாணி எறிந்தேன், அது தெரித்து என் மேல் விழுகிறது என்று சொன்னீர்கள்"
This is about the word you were playing with, that someone thinks as sacred. Not about Punnagaidesam.

Again regarding Mathar, whether I mention her name or not, I don't like anyone humiliating a woman in public. It is highly condemnable. I respect Mathar's courage.

I don't want to post anything here beyond this. I leave it to you. Have a good day.

Anonymous said...

பலமான கருத்துக்கள்

Sukumar said...

வலைமனையில் போட்டோ கமென்ட்ஸ் கொடுத்தமைக்கு நன்றி... தங்களுக்கான பேனரை தங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியுள்ளேன். கிடைத்ததா என தெரியப்படுத்தவும். நன்றி...