Sunday, December 6, 2009

ப்ளாக் மெயில் - தொடர் இறுதி பாகம்

அத்தியாயம் - 5

அத்தியாயம் - 4

அத்தியாயம் - 3

அத்தியாயம் - 2

அத்தியாயம் - 1அருண் சிவாவின் கையில் இருந்த பில்லை வாங்கிப் பார்த்தான். ஆறு மாதங்களுக்கு முன் யுனிவர்செல் கடையில் ஒரு நோக்கியா செல்ஃபோனும் அதில் பொருந்தக் கூடிய 2 ஜி.பி அளவு கொண்ட மெமரி கார்டும் வாங்கிய பில் இருந்தது. 


அருண் சிவாவைப் பார்த்து “சிவா, பக்கத்து ஸ்டேஷனுக்கு ஃபோன் பண்ணி சுஷ்மாவோட ஸ்கூட்டிய கஸ்டடிக்கு எடுத்துட்டுப் போக சொல்லிடுங்க. நீங்க இங்க இருந்து என் காரை எடுத்துக்கிட்டு சுஷ்மாவோட அப்பார்ட்மெண்ட் போய், அங்க இந்த மிஸ்ஸிங் மெமரி கார்ட் இருக்கான்னு தேடிட்டு எனக்கு ஃபோன் பண்ணுங்க. நான் இங்க இருந்து ஒரு ஆட்டோ பிடிச்சி ஆஃபிஸ் போயிடுரேன். அங்க எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு


இல்ல சார். நீங்க கார் எடுத்துட்டுப் போயிருங்க. எங்க அக்கா வீடு இங்க பக்கம் தான். நா, அங்க போயி எங்க மாமா வண்டி எடுத்துட்டுப் போயிடுவேன்


ஓக்கே சிவா. மெமரி கார்டு கிடைச்சாலும் கிடைக்கலைன்னாலும் எனக்கு ஃபோன் பண்ணுங்க.”


ஓக்கே சார்


சரி மணி, அப்புறமா எதாவது விசாரணைன்னா கூப்பிட்டு விடுவோம், ஸ்டேஷனுக்கு வர வேண்டியதிருக்கும். சரியா?” 


சரி சார்


அருண் காரில் ஏறி ஸ்டார்ட் செய்து சேவாக்கின் பேட்டில் பட்ட பந்து போல பறந்தான். கேஸில் ஒரு பெரிய ப்ரேக்த்ரூ கிடைத்திருக்கிறது என்பதை அவன் மனம் நொடிக்கொரு முறை முரசறைந்துகொண்டிருந்தது.


கமிஷனர் அலுவலகத்தில் வந்து காரை நிறுத்திய வேகத்தில் உள்ளே நுழைந்த அருண், சிவாவின் டேபிளுக்குப் போய் அமர்ந்தான். அங்கேயிருந்த தொலைபேசியை அள்ளி எடுத்து ஏர்டெல் கஸ்டமர் சர்வீஸை அழைத்து சுஷ்மாவின் நம்பருக்கு சம்பவத்தண்று மதியம் 12 மணியிலிருந்து இரவு 12 மணி வரை வந்த அழைப்புகளையும் அவள் அழைத்த எண்களின் விவரத்தை ஃபேக்ஸச் சொன்னான்.


தொலைபேசியை வைத்த அருண் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான். ‘எந்த லூப் ஹோலையாவது மிஸ்ஸிவிட்டோமா?’ சட்டென அந்த ஃபாலோயர் நினைவுக்கு வந்தான். பைக்குள் கை விட்டு வைஷ்ணவி கொடுத்த அந்தப் பேப்பர் துண்டை எடுத்தான். 


சுவாமிநாதன்
9004563747


சுவாமிநாதனுக்கு ஃபோன் போட்டான் அருண்.


மிஸ்டர் சுவாமிநாதன்.


ஸ்பீக்கிங்க்”


”நாங்க கமிஷனர் ஆஃபிஸ்ல இருந்து பேசுறோம். சுஷ்மா மர்டர் சம்மந்தமா உங்க கிட்ட கொஞ்சம் விசாரிக்கணும். நீங்க கமிஷனர் ஆஃபிஸ் வரைக்கும் வர முடியுமா?”


“எ..எ... என்ன விசாரணை சர்?”


“பயப்பட வேண்டாம். சும்மா ஜஸ்ட் இன்கொயரி தான்”


“எப்ப வரணும் சார்?”


“இப்போவே வந்தாக்கூட நல்லதுதான். பட் இன்னிக்கு ஈவினிங் உள்ள வந்துடுங்க. வந்து அருண் ஆர் சிவானு கேளுங்க.”


“ஓக்கே சார். நான் எப்போ பெர்மிசன் கிடைக்குதோ அப்ப வந்துடுரேன் சார்”


“ஓக்கே” என்று ஃபோனை வைக்கும்முன் அருணின் செல்ஃபோன் அடித்தது. எடுத்து ஆன்ஸர் பொத்தானை அழுத்தி காதில் வைத்து “ஹலோ” என்றான்.


“நான் சிவா பேசுறேன் சர்”


“என்ன சிவா மெமரி கார்ட் கிடைக்கலயா?”


“சர், எப்பிடி அவ்வளவு கரெக்டா சொல்றீங்க.”


“கிடைக்காது அப்பிடின்னு தெரிஞ்சி தான் உங்கள அனுப்பினேன். கிடைக்குனு இருந்திருந்தா நானே வந்திருப்பேன்”


“வீட்டுல எல்லா எடத்துலயும் தேடியாச்சி சர். சுஷ்மாவோட ஆஃபிஸ்ல இருந்து வந்த பாக்ஸஸ்லயும் தேடிப் பாத்துட்டேன் சர். கிடைக்கல”


”ஓக்கே சிவா. நீங்க கிளம்பி வாங்க. வர்ற போது ஃபாரன்ஸிக் லேப்ல சுஷ்மாவோட செல்ஃபோனை குடுத்து அதுல இருக்குற ஃபிங்கர் ப்ரிண்ட்ஸ் எல்லாம் எடுக்க சொல்லுங்க”


“ஓக்கே சர்”

செல்ஃபோனை அணைத்துவிட்டு அடுத்த சிகரெட்டைப் பற்ற வைத்தான்.


ஃபேக்ஸ் மெசின் பரபர என்ற சத்ததோடு ஏர்டெல் அலுவலகத்தின் அறிக்கையை உமிழ்ந்தது. அதை எடுத்த அருண், அதிலிருந்த எண்களை நோட்டமிட்டான். 9:30  மணிக்கு ஒரு எண்ணுக்கு பேசப்பட்டிருந்தது. எதிரில் இருந்த கணினியில் டெலிஃபோன் டைரக்டரியை அடைந்து அந்த எண்ணை இட்டான். காவேரி கால்டாக்ஸி என்று வந்தது. 9:35க்கு அதே எண்ணிலிருந்து ஒரு கால் வந்திருந்தது. அடுத்த கால் சுவாமிநாதனின் செல்லுக்கு. அதற்குப் பிறகு எந்தக் காலும் போகவும் இல்லை வரவும் இல்லை.


சிவா உள்ளே வந்து அருணுக்கு எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.


வாங்க சிவா. இதோ என் கைல இருக்குறது சுஷ்மாவோட ஃபோன் கால் ஹிஸ்டரி. சுஷ்மா 9:30 மணிக்கு காவேரி கால் டாக்ஸிக்கு கால் பண்ணியிருக்கா. நீங்க காவேரி டாக்ஸிக்கு கூப்பிட்டு விசாரிங்க.”


“ஓக்கே சார்” என்று எழுந்து சென்றான் சிவா.


சிவா மேலும் சில தொலை பேசி அழைப்புகளைச் செய்தான்.


%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%


அந்த விசாரணை அறையில் இருந்த ஒற்றை நாற்காலியில் அமர்ந்திருந்த சுவாமிநாதன் தன் முன்னால் இருந்த மேஜையில் கைகளை வைத்திருந்தான். அவன் கைகளில் மெலிதான நடுக்கம் இருந்ததை அருணால் கவனிக்காமல் இருக்க முடியவில்லை. அருணும் சிவாவும் ஆளுக்கு ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தனர். சிவா கையில் ஒரு கனமானப் புத்தகதை விரித்து எதுவோ படித்துக் கொண்டு அல்லது பாவலாப் பண்ணிக்கொண்டிருந்தான்.


“மிஸ்டர் சுவாமிநாதன், உங்களுக்கும் சுஷ்மாவுக்கும் எப்படிப் பழக்கம்?”


“நான் அவ ப்ளாக் விடாமப் படிப்பேன் சர். ஒன் ஆஃப் த வெரி ஃபர்ஸ்ட் ஃபாலோயர்ஸ் நான். அவளோட நோக்கமும் குறிக்கோளும் என்னோடது போலவே இருந்ததால அவளோட ஃபோன்ல பேச ஆரம்பிச்சி, அப்பிடியே நல்ல ஃப்ரெண்ட்ஷிப் ஆயிடுச்சி”


”வெறும் ஃப்ரெண்ட்ஷிப் மட்டும் தானா இல்ல அதுக்கு மேல எதாவதா?”


“ஃப்ரெண்ட்ஷிப் மட்டும்தான் சார்”


சிவா கையிலிருந்த புத்தகத்தை ஓங்கி, “மவனே பொய் சொன்ன மண்டயப் பேத்துடுவேன்” என்றான். பயந்து போன சுவாமிநாதன் அருணைப் பார்த்தான்.


“சுவாமி, எங்களுக்கு எல்லாம் தெரியும். உண்மைய சொல்லுங்க. சிவா உங்கள அடிக்காமப் பாத்துக்க வேண்டியது என் பொறுப்பு


ரெண்டு மூணு தடவ செக்ஸ் வச்சிருக்கோம். ஆனா கமிட்மெண்ட் எல்லாம் எதுவும் கிடையாது


“அப்படி ஒரு தடவை தான் ரமேஷ் பாத்துட்டார் இல்லயா?”


“யெஸ் சார். பட் அதுக்கப்புறம் நாங்க எதுவும் செய்யல சார்”


“ஓக்கே சுவாமி. ஆறு மாசத்துக்கு முன்னாடி, நீங்க வண்டலூர் கிட்ட ஆறு செண்ட் நிலம் வாங்கிப் போட்டு இருக்கிங்களே - உங்க வொய்ஃப் பேருல, அதுக்குப் பணம் எப்பிடி வந்தது?”


“நான் கொஞ்சம் கொஞ்சமா சேத்து வச்சது சார்”


“எந்த பேங்க்ல? அதுக்கு அக்கவுண்ட் இருக்கா?  ங்கொய்யால உன்னால கணக்குக் காட்ட முடியுமா?” சிவா


“அது அது வந்து”


“நான் சொல்றேன் சுவாமி. சுஷ்மா யாரோ எதுவோ பெரிய தப்பு பண்றத வீடியோ எடுத்திருக்கா. அந்த வீடியோவ வச்சு சம்மந்தப்பட்ட ஆள ப்ளாக்மெயில் பண்ணி பணம் கறந்திருக்கிங்க. அதுல ஒரு பெரிய அமவுண்ட்ட நீங்க ஒதுக்கிக்கிட்டு சின்ன அமவுண்ட்ட சுஷ்மாவுக்குக் குடுத்திட்டிங்க. விஷயம் தெரிஞ்ச சுஷ்மா உங்க கிட்ட சண்ட போட்டிருக்கா. அதுனால அவளத் தீத்துட்டிங்க. சரியா?”


“அய்யோ அப்படியெல்லாம் இல்ல சார். ரெண்டு பேரும் சரி பாதியாத்தான் பிரிச்சிருக்கோம். அந்த லேண்டுக்குப் பக்கத்துல இருக்குறது அவளோட லேண்ட் தான் சார்”


“வெரி குட். ப்ளாக் மெயில் பண்ணிங்கன்னு ஒத்துக்கிட்டதுக்கு தாங்க்ஸ். யார் என்னக் குற்றம் பண்ணாங்க? சொல்லுங்க?”


“ரியால்ட்டர் தவமணி அவரு க்ரூப்போட ஒருத்தர மிரட்டிக்கிட்டு இருக்குறத வீடியோ எடுத்திருந்தா”


“எப்பிடி எடுத்தாளாம்?”


“ரமேஷப் பாக்க வேளச்சேரி தாம்பரம் மெயின் ரோட்ல அவங்க வழக்கமா மீட் பண்ற எடத்துக்குப் போயிட்டு வரும்போது பாத்திருக்கா. உடனே எடுத்திட்டா. அன்னிக்கி நைட் நாங்க மீட் பண்ணும்போது வீடியோவ எனக்குக் காட்டினா. ப்ளாக்ல போடப் போறாதா சொன்னா. அப்போதான் நான் ப்ளாக் மெயில் ஐடியா குடுத்தேன். நான் தான் தவமணிகிட்ட பேசி 10 லட்சம் வாங்கினேன்”


“அந்த வீடியோ உங்கக்கிட்ட இருக்கா?”


“இல்ல. தவமணிக்கிட்ட காச வாங்கிட்டு குடுத்துட்டேன்”


“ஓக்கே. ஐ பிலீவ் யூ”


“சம்பவத்தன்னிக்கு சுஷ்மா உங்களுக்கு ஃபோன் பேசி இருக்காளே என்ன பேசினா?”


“ஸ்கூட்டி ரிப்பேர் ஆயி நடு ரோட்டுல நிக்கிறதாவும், பிக்கப் பண்ணிக்க வரணும்னும் சொன்னா. சரின்னு நானும் போனேன். ஆனா அவ அங்க இல்ல. அதுனால நான் திரும்ப வீட்டுக்குப் போயிட்டேன். 2 ஆர் 3 டைம்ஸ் கூப்பிட்டுப் பார்த்தேன் அவ ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருந்தது. பேப்பர்ல அவ செத்துப் போனதா ந்யூஸ் படிச்சதும் பதறிப் போயிட்டேன். வைஷ் வரவும் அவளுக்கு ஃபோன் பண்ணி விசயத்தச் சொல்லிட்டப்புறம் தான் நிம்மதி”


“அப்போ நீங்க அவளப் பாக்கவே இல்ல. இத நான் எப்பிடி நம்புறது?”


“மவனே நீ இப்போ உண்மையச் சொல்லல, நான் உன்னய அடிக்கிற அடியில ஒண்ணு இந்த புக்கு கிழியும் அல்லது உன் மண்ட ஒடயும்” இது சிவா.


“அய்யோ சத்தியமா சொல்றேன். நான் அவளப் பாக்கவே இல்லை”


“அங்கிருந்து எங்க போன?”


“அங்கிருந்து நேரா வீட்டுக்குத்தான் போனேன்”


“போற வழியில எதாவது சம்பவம்?”


“ஹாங்க் நந்தனம் சிக்னல்கிட்ட ஒரு ட்ராஃபிக் சார்ஜண்ட் ஹெல்மட் போடாம வந்ததுக்காக என்ன புடிச்சி கேஸ் எழுதினாரு. லஞ்சம் குடுத்தும் வாங்கல. அப்புறம் ஃபைன் கட்டினப்புறம் தான் விட்டாரு”


“சிவா இத க்ராஸ் வெரிஃபை பண்ணுங்க”


“சுவாமிநாதன், சிவா இத வெரிஃபை பண்ற வரைக்கும் நீங்க லாக்கப்ல தான் இருக்கணும்.”


அருண் சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்தவாறு வெளியே வந்தான். கையில் ஒரு பிரவுன் நிற கவரோடு பாண்டியன் உள்ளே வந்தார்.


“பாண்டியன் என்ன இந்தப் பக்கம்?”


“லேப்ல எதோ செல்ஃபோன் குடுத்திருந்திங்களாமே சார். ரிசல்ட் வந்திருக்குன்னு எங்க ஸ்டேஷனுக்கு கூப்பிட்டிருந்தாங்க. நானே போய் வாங்கிட்டு வந்தேன் சார்”


“நல்லது பாண்டியன். உங்க கிட்ட நான் கேக்கணும்னு இருந்தேன். உங்க சரகத்துல தவமணின்னு ஒரு ரியால்ட்டர் இருக்காராம்மே அவரப் பத்தி கொஞ்சம் சொல்லுங்க”


“ஆமா சார். அந்தாளு அராஜகமா ஆளுங்கள வச்சி மிரட்டி நெலத்த கொறஞ்ச வெலைக்கி வாங்குறது, நெலத்த ஆக்கிரமிப்பு பண்றதுன்னு நெறய அட்டூளியம் பண்றான் சார். ரெண்டு மூணு கொலை கூட நடந்திருக்கலாம்னு நெனைக்கிறேன். நம்ம இன்ஸ்பெக்டரையும் நல்லா கவனிக்கிறான் சார். அதுனால அவரும் கண்டுக்கிறதே இல்லை.”


“சரி. தேங்க்ஸ் பாண்டியன். எதாவதுன்னா நான் கூப்பிடுறேன்.”


“சரி சார். நான் வர்றேன்”


பாண்டியன் கொடுத்துப்போன கவருக்குள் இருந்த ரிப்போர்ட்டைப் பார்த்தான். அவன் எதிர் பார்த்தது போல பெரிதாய் எதுவும் மேட்ச் கிடைக்கவில்லை. யோசித்துக் கொண்டிருந்த போது சிவா வந்தான்.


“சர் அந்த சுவாமி சொன்னது உண்மை தான் சர். கேஸ் ரெஜிஸ்டெர் ஆகியிருக்கு. இதென்ன ஃபோரென்ஸிக் ரிப்போர்ட்டா சர்?”


“ஆமா சிவா”


சிவா அந்த ரிப்போர்ட்டை எடுத்துப் பார்த்தான். “இதுலயும் ஒண்ணும் இல்லியே சர். ஐ தின்க் வி ஹிட் த வால் அகைன்”


“நோ சிவா. வீ அல்மோஸ்ட் கிராக்ட் தி கேஸ்”


“எப்பிடி சர்?”


“இந்த லாஜிக் எப்பிடி இருக்குன்னு பாருங்க. தவமணிக்கிட்ட ஏற்கனவே ஒரு தடவ வீடியோ வச்சி மிரட்டி காசு வாங்கி இருக்காங்க சுவாமியும் சுஷ்மாவும். அப்போ கண்டிப்பா இவங்களோட ஐடெண்டிட்டிய காட்டிட்டு இருந்திருக்க மாட்டாங்க. காட்டி இருந்தா அவன் இவங்களக் காட்டி இருந்திருப்பான். இப்போ அன்னிக்கு நைட் சுவாமிக்காக சுஷ்மா வெயிட் பண்ணப்போ எதாவது சுவாரஸ்யமா தவமணி ஷெட்டுக்குள்ள பாத்திருக்கா. ருசி கண்ட பூனை சும்மாவா இருக்கும். அத செல்ஃபோன்ல ஷூட் பண்ண ட்ரை பண்ணியிருக்கா. ஏற்கனவே ஒரு தடவ ஓட்ட விட்டுட்டதால தவமணி கொஞ்சம் உஷாராவே இருந்திருக்கான். இவ அவங்க கிட்ட  மாட்டிக்கிட்டா. அவன் ஆளுங்கள அவளத் தீத்துட்டு வழக்கமா அவங்க டம்ப் பண்ற மாதிரி இவளயும் டம்ப் பண்ணியிருந்திருக்காங்க. காக்கா உக்கார பனம்பழம் விழுந்த மாதிரி, ரமேஷ் இதுல மாட்டிக்கிட்டான். ரமேஷ்க்கு மோட்டிவ் இருந்ததுனால கருப்பையா இந்தக் கேசையும் மத்த கேஸ் மாதிரி சால்வ் பண்ணாம மூட வேணாம்னு அவனையே வளைச்சிப்போட முடிவெடுத்திட்டாரு.”


“லாஜிக் நல்லா இருக்கு சார். ஆனா நம்ம கிட்ட எவிடென்ஸ் இல்லயே?”


“இருக்கு சிவா” என்று கையில் ஜிப்லாக் கவரில் போடப்பட்ட செல்ஃபோனைக் காட்டினான்.


“எப்பிடி சர். அதுல தான் ஃபோட்டோவோ வீடியோவா இல்ல கைரேகையோ கிடைக்கலயே?”


”இருக்கு சிவா” என்று அருண் அந்த எவிடென்சை சொன்னதும் நின்ற இடத்திலேயே துள்ளிக் குதித்தான் சிவா. அருணிடம் செல்ஃபோனைப் பெற்றுக் கொண்டு லேபுக்கு ஓடினான்.


அருண் வீட்டுக்கு சென்று ஒரு குட்டி மதியத் தூக்கம் போட்டு எழுந்தான். கைகளைத் தூக்கி நெட்டி முறித்தான். செல்ஃபோன் அழைத்தது. சிவா.


“சொல்லுங்க சிவா. எனி லக்?”


“யெஸ் சர். யூ கெஸ்ட் இட் ரைட். தவமணியக் கஸ்டடிக்கு கொண்டு வந்தாச்சி சர். வீ குட் நாட் ஹாவ் சால்வ்ட் திஸ் வித்தவுட் யுர் ஹெல்ப்”


“ஏதோ என்னால முடிஞ்சது. தேங்க்ஸ் ஃபர் அப்டேட்டிங்க் மீ சிவா”


ஃபோனை அணைத்துவிட்டு ஒரு ஆத்ம திருப்தியுடன் வெளியே வந்தான். மேற்கில் சூரியன் விடை பெற்றுக் கொண்டிருந்தது.

அருண் சொன்ன எவிடென்ஸ் என்ன? நாளை வெளியிடுவேன். அதுவரை உங்கள் யூகங்களைப் பின்னூட்டமிடுங்கள்.

 சுஷ்மாவின் நோக்கியா பேட்டரியைக் கழற்றி மெமரி கார்டு போடும் வகை. வழக்கமாக செல்ஃபோனின் மேல் பல கைகள் படும். ரேகைகள் தெளிவில்லாமல் போகக்கூடும். ஆனால் செல்ஃபோனுக்குள்ளே நிறையக் கைகள் படுவதில்லை. அதில் சுஷ்மாவின் மெமரி கார்டை அகற்றிய தவமணி அல்லது அவனது அடியாட்களில் யாராவது ஒருவருடையக் கைரேகை இருக்கும். அதை வைத்துப் பிடிக்கலாம் என்பதே அருணின் யோசனை. அதன் படி ஃபாரன்ஸிக் லேபில் செல்ஃபோனுக்கு உள்ளே இருந்த கை ரேகைகளை எடுத்து மேட்ச் செய்ததில் அதிர்ஷ்டவசமாக தவமணியின் கை ரேகையே சிக்கியது. கேஸும் சுலபமாக முடிந்தது.

வைரஸ் ஆபத்துப் பற்றி சொல்லப்பட்டதால் பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படுகின்றன. சிரமத்திற்கு மன்னிக்கவும்.
(முற்றும்)

8 comments:

கலகலப்ரியா said...

excellent!... க்ரைம் நாவல் எழுதும் அனைத்துத் தகுதியும் உங்களுக்கு உண்டு..! (என்னது..? திரும்ப கெஸ் பண்ணணுமா... எனக்கும் செல் ஃபோனுக்கும் ரொம்ப தூரம்... அதிலயும் இந்த டெக்னிகல் சமாச்சாரம் எல்லாம் சொன்னாலே புரியாது... ஹிஹி... பதில் போட்டு வைங்க வந்து புரிஞ்சுக்கறேன்..) இத லாஸ்ட் பார்ட்ன்னு போட்டத கடுமையாகக் கண்டிக்கிறேன்..!

Unknown said...

//excellent!... க்ரைம் நாவல் எழுதும் அனைத்துத் தகுதியும் உங்களுக்கு உண்டு..! //

நன்றி நன்றி நன்றி

//என்னது..? திரும்ப கெஸ் பண்ணணுமா... எனக்கும் செல் ஃபோனுக்கும் ரொம்ப தூரம்... அதிலயும் இந்த டெக்னிகல் சமாச்சாரம் எல்லாம் சொன்னாலே புரியாது... ஹிஹி... பதில் போட்டு வைங்க வந்து புரிஞ்சுக்கறேன்..)//

இதுல செல்ஃபோன் டெக்னாலஜி எதுவும் இல்ல.

//இத லாஸ்ட் பார்ட்ன்னு போட்டத கடுமையாகக் கண்டிக்கிறேன்..!
//

ஒரு உத்வேகத்துல போட்டுட்டேன். கொஞ்சம் பெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிய பாகமாப் போச்சி. இஃகி இஃகி இஃகி

பின்னோக்கி said...

ரொம்ப நேரம் யோசிச்சும் தடயம் கிடைக்கலைங்க. நாளைக்கு வந்து பார்க்குறேன். நல்ல முயற்சி நல்லா வந்துருக்கு.

கலகலப்ரியா said...

//இதுல செல்ஃபோன் டெக்னாலஜி எதுவும் இல்ல.//

அப்டியா...? அப்டின்னா சுத்தம்... =))...

//இத லாஸ்ட் பார்ட்ன்னு போட்டத கடுமையாகக் கண்டிக்கிறேன்..!
//

ஒரு உத்வேகத்துல போட்டுட்டேன். கொஞ்சம் பெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிய பாகமாப் போச்சி. இஃகி இஃகி இஃகி//

அந்த உத்வேகம் இருந்தாதான் ஏதாவது சாதிக்க முடியும்... =))...

நசரேயன் said...

கடைசியா வந்தாலும் நல்ல சுவாரசியம்.. வாழ்த்துக்கள்

அது சரி(18185106603874041862) said...

நல்லாருக்கு முகிலன்...சின்ன வயசுல ராஜேஷ்குமார் படிச்ச ஞாபகம் வருது...

தொடரை ரொம்ப நீட்ட வேண்டாம்னு சுருக்கிட்டீங்கன்னு நினைக்கிறேன்...ஆனா உங்க பின்னல் ரொம்ப நல்லாருக்கு....

ராஜேஷ் குமார் கதையில பெரிய பிரச்சினை அவரோட ஸ்டைல்ல இருக்க ஒற்றைத் தன்மை....அதையே கொஞ்சம் வேற மாதிரி விரிவு செஞ்சா நீங்க ஃப்ரெட்ரிக் ஃபோர்சைத் மாதிரி எழுதலாம்....ட்ரை பண்ணுங்க....வாழ்த்துக்கள்...

Unknown said...

நசரேயன்

நன்றி

அதுசரி

இதுக்கு நீங்க நல்லா இல்லன்னே சொல்லியிருக்கலாம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கலகலப்ரியா said...

ஓஹோ.. அப்டியா சமாச்சாரம்..! நல்லாத்தான் work பண்ணுது அருணோட மூளை... =).. நன்றி முகிலன்..