Tuesday, December 15, 2009

பிதற்றல்கள் - 12/15/2009

உண்மைக்கதை 
================


அந்த ஊரிலேயே அவன் தான் பெரிய ரவுடி. முரடன். அடுத்தவர்களைக் காயப்படுத்துவதைப்பற்றி அவன் கவலைப்பட்டதே இல்லை. அவன் ஆரம்பித்தான் என்றால் ரணகளம் தான். அவன் வருவதைப் பார்த்தாலே ஓடி ஒளிபவர்கள்தான் அதிகம். 


அப்படி ஓடி ஒளிந்துகொண்டிருந்தவர்களில் ஒருவன் தான் இவன். ஒருநாள் இவனது அழகான மனைவி அந்த முரடனின் கண்களில் பட்டு விட்டாள். அவ்வளவுதான் அந்த முரடன் அவளைச் சின்னாபின்னமாக்கிவிட்டான். அந்த வேதனையிலேயே உயிரையும் விட்டுவிட்டாள். 


அதுவரை சாதுவாக இருந்த இவன் தன் மனைவிக்கு ஏற்பட்ட முடிவை பார்த்ததும் சும்மா இருக்க முடியவில்லை. அந்த முரடனைப் பழி வாங்க முடிவு செய்தான். அவன் வழக்கமாக வரும் பாதையிலிருந்த ஒரு பாறைக்குப் பின்னால் பதுங்கிக் கொண்டான். பாறையின் நிறமும் இவன் சட்டையில்லாத மேனியின் நிறமும் ஒன்றாக இருக்கவே இவன் பதுங்கியிருப்பதை யாரும் அந்த முரடன் உட்படப் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை.


பதுங்கியிருந்தவன் அந்த முரடன் அருகே வரவும் அவனே எதிர்பார்க்காத வண்ணம் அவன் மீது பாய்ந்தான். தனது கைகளால் அந்த முரடனை வளைத்து அவனது ஆயுதத்தை உபயோகிக்க விடாமல் செய்தான். அதன் பிறகு என்ன நடந்தது என்பதை இங்கே பாருங்கள்.


இந்தியா - ஸ்ரீலங்கா முதல் ஒருநாள் போட்டி
===========================================
இந்த இடுகையை நான் தட்டிக் கொண்டிருக்கும்போது இன்னொரு சன்னலில் இந்தியா ஸ்ரீலங்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சேவாக்கும் தோனியும் இலங்கை பந்து வீச்சாளர்களை பொளந்துகட்டிக் கொண்டிருந்தார்கள். தில்ஷனின் பந்தை சேவாக் விரட்டி விரட்டி அடிக்க அப்போது சங்கக்கராவையும் தில்சனையும் மாறி மாறிக் காட்டினார்கள். அவர்கள் இதைத்தான் பேசியிருக்க வேண்டும்


சங்கக்கரா: ஆஃப்சைட்ல போடாதடா அடிக்கிறான்னு தெரியுதில்ல.
தில்ஷன்  : எப்பிடிப் போட்டாலும் அடிக்கிறாண்டா


(இதை தட்டி முடிப்பதற்குள் சேவாக்கும் தோனியும் அடுத்தடுத்து அவுட்டாகி பெவிலியன் திரும்பி விட்டனர் :-( கருநாக்கு(விரல்?) துக்கிரி)


தொடரும் கதைப் பதிவு
=======================
என்னுடைய முந்தைய இடுகை எழுத்தாளர் விசா அவர்கள் எழுதிய ஒரு கதையின் தொடர்ச்சி என்பதை தமிழ் கூறும் நல்லுலகம் அறியும். அந்த இடுகைக்கு பின்னூட்டம் போட்ட விசா, கதை எழுதும் ஆர்வம் உள்ள பத்து பதிவர்கள் ஆளுக்கு ஒரு அத்தியாயமாக  ஒரு கதை எழுதலாமே என்ற யோசனை தெரிவித்தார். நல்ல யோசனைதான். விருப்பமுள்ளவர்கள் கை தூக்குங்கள் (அட பின்னூட்டம் போடுங்கய்யா)


குளிர்காலமும் குழாய் வெடிப்பும்
================================
இதோ அதோ என்று இழுத்துக் கொண்டிருந்த குளிர் காலம் வந்தே விட்டது. மூன்று நாட்களாகப் பனிப்பொழிவு. அதனால் வெளியே கடும் குளிர். இந்தக் குளிரில் எங்கள் வீட்டிலிருந்த குழாய் ஒன்று வெடித்து வீட்டின் நிலவறையில் தண்ணீர். ஒரு இரவு முழுக்க வீட்டில் தண்ணீர் இல்லாமல் (தண்ணீர்க் குழாயை மூடி விட்டதால்). இதைப் பற்றியும் அதை சரி செய்த வீர தீரத்தைப் பற்றியும் விரைவில் தனி இடுகையாக (சன் பிக்சர்ஸ் பேனரில்) வெளியிடப்படும் என்று எச்சரித்துக் கொள்கிறேன்.


அப்புறம் பாக்கலாம்.

16 comments:

Anonymous said...

எங்களுக்கு எப்ப வரும் குளிர்காலம்னு இருக்கு. நாளைக்கு 39 டிகிரியாம்.

VISA said...

//எழுத்தாளர் விசா //என்னை எழுத்தாளர் என்று சொல்லியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன் :)
மற்றவர்கள் கண்டிப்பதற்கு முன்.

தொடர் பதிவுக்கு நான் ரெடி. கை தூக்கிட்டேன்.

vasu balaji said...

/விருப்பமுள்ளவர்கள் கை தூக்குங்கள் (அட பின்னூட்டம் போடுங்கய்யா)/

எல்லாரும் பல்லக்குல போவேன்னா தூக்குறது யாரு. நான் கைய தூக்கிட்டேன். பின்னூட்டம் போடத்தான்.

கலையரசன் said...

பிதற்றல்கள், பிளிரள்கள் போல இருக்கு...
நான் கையை தூக்கல.. கை மட்டும் தட்டுறேன் பாஸ்!!

Unknown said...

//சின்ன அம்மிணி said...
எங்களுக்கு எப்ப வரும் குளிர்காலம்னு இருக்கு. நாளைக்கு 39 டிகிரியாம்.
//

இங்கயும் 39 டிகிரி தான். ஆனா ஃபாரன்ஹீட்டுல.. ஹிஹி

Unknown said...

VISA said...
//எழுத்தாளர் விசா //என்னை எழுத்தாளர் என்று சொல்லியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன் :)
//

இவரே writervisa ன்னு பேர் வச்சிக்குவாராம். அப்புறம் எழுத்தாளர்னு கூப்பிட்டா கண்டனம் சொல்லுவாராம். என்ன கொடும சரவணன்

Unknown said...

//எல்லாரும் பல்லக்குல போவேன்னா தூக்குறது யாரு. நான் கைய தூக்கிட்டேன். பின்னூட்டம் போடத்தான்.
//

தொடர் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே வாசகர் சேத்தாச்சி. இதுதான் ஆரக்கிளோட மார்க்கட்டிங் டெக்னிக்

VISA said...

//
இவரே writervisa ன்னு பேர் வச்சிக்குவாராம். அப்புறம் எழுத்தாளர்னு கூப்பிட்டா கண்டனம் சொல்லுவாராம். என்ன கொடும சரவணன்//
அது அப்போ ஒரு ஆர்வத்துல கிரியேட் பண்ணினது. மத்தவங்க யாராச்சும் நம்ம எழுத்த படிச்சிட்டு இவன் எல்லாம் என்ன எழுத்தாளன்னு சொல்லிடக்கூடாதில்ல அதான் நானே முந்திகிட்டு கண்டனத்த தெரிவிச்சிட்டேன். ஹீ ஹீ ஹீ.

VISA said...

சரி நம்ம தொடர் பதிவ எப்போ ஆரம்பிக்கிறது.

ப்ரியமுடன் வசந்த் said...

முதல் பகுதி கதையின் ரசனை வீடியோ பார்த்ததும் ரொம்ப பிடிச்சது ரொம்ப நல்ல சிந்தனை உங்களுக்கு முகிலன் சத்தமான கைதட்டல்கள்....!

குடுகுடுப்பை said...

வளரும் எழுத்தாளர் முகிலனின் அப்பாவிற்கு "ஈ" யின் வாழ்த்துகள்.

Unknown said...

//முதல் பகுதி கதையின் ரசனை வீடியோ பார்த்ததும் ரொம்ப பிடிச்சது ரொம்ப நல்ல சிந்தனை உங்களுக்கு முகிலன் சத்தமான கைதட்டல்கள்....!
//

எல்லாம் உங்கக்கிட்ட இருந்து கத்துக்கிட்டதுதான் வசந்த்.

Unknown said...

//அது அப்போ ஒரு ஆர்வத்துல கிரியேட் பண்ணினது. மத்தவங்க யாராச்சும் நம்ம எழுத்த படிச்சிட்டு இவன் எல்லாம் என்ன எழுத்தாளன்னு சொல்லிடக்கூடாதில்ல அதான் நானே முந்திகிட்டு கண்டனத்த தெரிவிச்சிட்டேன். ஹீ ஹீ ஹீ.
//

ஓரளவுக்கு எழுதுறவங்க எல்லாம் எழுத்தாளர் தான். ஞாநி சொன்ன மாதிரி முழுநேர எழுத்தாளராவோ இல்ல எழுத்த மட்டுமே நம்பி பொழப்ப ஓட்டுறரவராவோ இருக்க வேண்டியது இல்லை.

Unknown said...

//VISA said...
சரி நம்ம தொடர் பதிவ எப்போ ஆரம்பிக்கிறது.
//

இப்பொதைக்கு மூணு பேர்தான் கை தூக்கி இருக்காங்க. நாமளே ரெக்ரூட்மெண்ட் ஆரம்பிச்சுற வேண்டியதுதான். கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்னு போட்டுத் தாக்கிருவோம்.

Unknown said...

குடுகுடுப்பை said...
வளரும் எழுத்தாளர் முகிலனின் அப்பாவிற்கு "ஈ" யின் வாழ்த்துகள்.

அதென்னா"ஈ"

கலகலப்ரியா said...

//என்பதை இங்கே பாருங்கள்//
வாவ்... யப்ப்பா சாமீ... எனக்கு என்னோட கவிதை கவனம் வருது... =))... பார்க்கலைனா பார்த்துக்கோங்க.. =))..

//ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்//

இந்த ஆட்டத்துக்கு நான் வரலை... (இதில என்னோட அறிவு பூஜ்யம்.. அல்லது சில மைனஸ்..)

//விருப்பமுள்ளவர்கள் கை தூக்குங்கள்//

எவ்ளோ நேரம்தான் கைய தூக்கிக்கிட்டே நிக்கிறது... :-|

//வெளியிடப்படும் என்று எச்சரித்துக் கொள்கிறேன்//

இந்த இடுகை போடுறப்போ நான் ஆன்லைன்ல இல்லைப்பா...