Sunday, December 20, 2009

பிதற்றல்கள் - 12/20/2009

கேள்வி: இப்போது இப்படி ஒரு கேள்வி-பதில் பதிவுக்கு என்ன அவசியம்?
பதில்: எத்தனை நாளைக்குத்தான் கலைஞரின் கேள்வி பதில் அறிக்கையையே தமிழ் மக்கள் படித்துக் கொண்டிருப்பார்கள்? ஒரு மாறுதலுக்கு.

கேள்வி: தெலுங்கானா பிரச்சனைக்கு என்ன தீர்வு?
பதில்: இந்தக் கேள்வி மிகவும் சுலபம். தெலுங்கானாவைத் தனி மாநிலமாக்கி அதில் ஆந்திராவையும் ராயலசீமாவையும் சேர்த்துவிட்டால் போச்சு. அப்புறம் யாரும் தனித் தெலுங்கானா கேட்க மாட்டார்கள்.

கேள்வி: தோனி இரண்டு ஒரு நாள் போட்டிகள் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளாரே, இது இந்திய அணியின் வெற்றியை எந்த விதத்தில் பாதிக்கும்?
பதில்: இந்திய அணியின் வெற்றியை எந்த விதத்தில் பாதிக்கும் என்று தெரியவில்லை. ஆனால் இலங்கை அணியின் தோல்வியை இது கடுமையாக பாதிக்கப் போவது உண்மை

கேள்வி: தில்ஷன் இந்திய அணிக்குப் பெரும் சவாலாக இருக்கிறாரே, அவரை எப்படி அவுட்டாக்குவது?
பதில்: பந்து வீசித்தான், மற்ற முறையில் அவரை அவுட்டாக்க நினைப்பது ஆட்ட விதிகளின் படி குற்றம்.

கேள்வி: இடைத்தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?
பதில்: முடிவுகள் எப்படி இருந்தாலும் திருச்செந்தூர் வந்தவாசி தொகுதி மக்களுக்கு நல்ல யோகம். காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும். மற்ற தொகுதி வாக்காளர்களும் தங்கள் எம்.எல்.ஏ ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்று வருத்தப்படுகின்றனராம்.

கேள்வி: வேட்டைக்காரன் வெற்றிப் படமா?
பதில்: என்னைப் பொருத்தவரை அது வெற்றுப் படம். ஆனால் சன் டிவி அதை வெற்றிப் படமாக்கியே தீருவார்கள். சன் நியூஸ் தயாரிப்பாளருக்கு தினமும் ஒரு செய்தியிலாவது வேட்டைக்காரன் பற்றி சொல்லவேண்டும் என்று அசைன்மெண்ட் கொடுத்திருப்பார்கள் போல. இன்றைய செய்தியில் - கண்டேன் காதலை, வேட்டைக்காரன் போன்ற வெற்றிப் படங்களின் திருட்டு விசிடி அச்சடித்தவர் கைது. நாளை இப்படி செய்தி வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை - வேட்டைக்காரன் திரையிடப்பட்டுள்ள ஜெயந்தி தியேட்டருக்கருகே பூ விற்கும் பொன்னம்மா கணவரிடம் விவாகரத்துக் கேட்டு கோர்ட்டில் மனு.

கேள்வி: புராணங்கள் வெறும் கதையா?
பதில்: அப்படி இருக்கலாம். ஆனால் சில புராணங்களுக்கும் உண்மைக்கும் பல ஒற்றுமைகள் வந்து தொலைத்து விடுகின்றன. உதாரணத்திற்கு - வட இந்திய ராஜா, சில குரங்குகள் துணையோடு தமிழ் மன்னன் ஒருவனை எதிர்த்துப் ப்டை எடுக்கிறார். இதில் ஈடுபடுவது முழுக்க முழுக்க குரங்குகள் படையே. தமிழ் மன்னனின் தம்பிகளில் ஒருவன் எதிரிகளிடம் சரணைடைவதுடன் தமிழ் மன்னனின் ரகசியங்களையும் சொல்லிவிடுகிறான். கடைசியில் நயவஞ்சகமாக தமிழ் மன்னனின் தம்பிகளையும் மகனையும் கொன்று பின் தமிழ் மன்னனையும் கொன்று விடுகிறான். புராணத்தில் தமிழ் மன்னன் செய்த தவறாகக் கூறப்படுவது - அந்த வட இந்திய ராஜாவின் மனைவியைக் கவர்ந்தது. இதில் வட இந்திய ராணியின் கணவனைக் கொன்றது. புராணத்தில் தமிழ் மன்னன் அடுத்தவன் மனைவியைக் கவர்ந்தது தன் தங்கையை மானபங்கப் படுத்தியமைக்காக. நிஜத்தில் கணவனைக் கொன்றது ஆயிரக்கணக்கான தங்கையரை மானபங்கப் படுத்தியதற்காக.

கேள்வி: கடைசிக் கேள்வி. சமீபத்தில் ரசித்த நகைச்சுவைத் துணுக்கு?
பதில்: வேட்டைக்காரனைப் பற்றி வந்த்து: நான் அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட.
அடிக்கிறதெல்லாம் இருக்கட்டும் நீ நடிச்சாத்தான் தாங்கவும் முடியல தூங்கவும் முடியல.

15 comments:

Chitra said...

////
கேள்வி: தெலுங்கானா பிரச்சனைக்கு என்ன தீர்வு?
பதில்: இந்தக் கேள்வி மிகவும் சுலபம். தெலுங்கானாவைத் தனி மாநிலமாக்கி அதில் ஆந்திராவையும் ராயலசீமாவையும் சேர்த்துவிட்டால் போச்சு. அப்புறம் யாரும் தனித் தெலுங்கானா கேட்க மாட்டார்கள்./////////
...........முகிலன் காரு, இது சால பாக உந்தி.

Anonymous said...

//நீ நடிச்சாத்தான் தாங்கவும் முடியல தூங்கவும் முடியல.//

:)

பூங்குன்றன்.வே said...

//மற்ற தொகுதி வாக்காளர்களும் தங்கள் எம்.எல்.ஏ ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்று வருத்தப்படுகின்றனராம்.//

சரியா சொன்னீங்க பாஸ்.

VISA said...

ஏய் சூப்பரப்பு....

தர்ஷன் said...

எங்கள் ஜனாதிபதி, மற்றும் எதிர்காலத்தில் ஜனாதிபதியாய் வர வாய்ப்புள்ளவர் மற்றும் அவர்தம் உறவினர் அனைவரையும் குரங்குகள் எனச் சொன்னதை வன்மையாகக் கண்டிக்கிறேன். சும்மா
அடுத்து உங்கள் நேற்றைய பதிவு கலக்கல் அதற்குமான பாராட்டு இங்கேயே

நசரேயன் said...

பிதற்றல்கள் பின்னி எடுக்குது

Unknown said...

Chitra

சின்ன அம்மிணி

பூங்குன்றன்

விசா

தர்ஷன்

வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி

Unknown said...

நசரேயன் said...
பிதற்றல்கள் பின்னி எடுக்குது

நன்றி நசரேயன்

vasu balaji said...

யேயப்பா. இது எப்ப? கலைஞர் ஆள் தேடுறாராம். இனிமே இப்புடிதான் எழுதணும்னு=))

Unknown said...

//வானம்பாடிகள் said...
யேயப்பா. இது எப்ப? கலைஞர் ஆள் தேடுறாராம். இனிமே இப்புடிதான் எழுதணும்னு=))
//

அவர்கிட்டச் சேந்தா செயலலிதாவத் திட்டி மட்டுந்தான கேள்வி பதில் எழுதனும்?

அது சரி(18185106603874041862) said...

//
கேள்வி: வேட்டைக்காரன் வெற்றிப் படமா?
பதில்: என்னைப் பொருத்தவரை அது வெற்றுப் படம். ஆனால் சன் டிவி அதை வெற்றிப் படமாக்கியே தீருவார்கள். சன் நியூஸ் தயாரிப்பாளருக்கு தினமும் ஒரு செய்தியிலாவது வேட்டைக்காரன் பற்றி சொல்லவேண்டும் என்று அசைன்மெண்ட் கொடுத்திருப்பார்கள் போல. இன்றைய செய்தியில் - கண்டேன் காதலை, வேட்டைக்காரன் போன்ற வெற்றிப் படங்களின் திருட்டு விசிடி அச்சடித்தவர் கைது. நாளை இப்படி செய்தி வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை - வேட்டைக்காரன் திரையிடப்பட்டுள்ள ஜெயந்தி தியேட்டருக்கருகே பூ விற்கும் பொன்னம்மா கணவரிடம் விவாகரத்துக் கேட்டு கோர்ட்டில் மனு.
//

என்னது..பொன்னம்மாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?? :0)))

அது சரி(18185106603874041862) said...

//
தமிழ் மன்னனின் தம்பிகளில் ஒருவன் எதிரிகளிடம் சரணைடைவதுடன் தமிழ் மன்னனின் ரகசியங்களையும் சொல்லிவிடுகிறான்.
//

கதையில் தம்பி...நிஜத்தில் அண்ணன்....

Unknown said...

//என்னது..பொன்னம்மாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?? :0)))
//
அதே ஜெயந்தி தியேட்டர்ல அயன் படம் ரிலீசானப்ப பொன்னம்மா கல்யாண விசயத்த அதே சன் நியூஸ்ல சொன்னாங்களே நீங்க கேக்கலையா?

ரோஸ்விக் said...

ஆத்தாடி இப்புடியும் ஆரம்பிச்சுட்டாய்ங்களா? :-))

தெலுங்கானா தீர்வு மிக அருமை. அடுத்த பிரதமர் நீங்க தான். என் ஒட்டு கண்டிப்பா உண்டு. :-)

குடுகுடுப்பை said...

பின்னி பெடல் எடுக்கறீர்