Saturday, December 26, 2009

கலகலப்ரியாவின் கவிதைகள் - விளக்கம் - செகண்ட் அட்டெம்ப்ட்

என்னோட கடந்த முயற்சியை திருத்துன எக்ஸாமினர் (வானம்பாடிகள் சார்) நான் பெயில்னு சொல்லிட்டாரு. ஆனா அவருக்கு நல்ல மனசு. அதுனால செகண்ட் அட்டெம்ப்ட் செய்யலாம்னு அனுமதி குடுத்துட்டாரு. அதோட டீச்சரம்மாவும் (கலகலப்ரியா) பிட் பாஸ் பண்ணதால ஒரு உத்வேகத்தோட ஆரம்பிச்சிட்டேன்.


போன பதிவப் பாக்காதவங்க பாத்துட்டு வந்திடுங்க. ஏன்னா நான் அதுல கடைசி பாராவ மட்டும் தான் மாத்தப் போறேன்.


படர்ந்திருந்த..
பாசியுடன்..
அச்சம் விலக்கி..
அடி வரை சென்று..
சிப்பியுடன் சிப்பியாக..
முத்தொன்று..
மேலெழுந்து..
சிலந்தி விழியில்..
விழுந்து தெறித்து..
மேலே மேலே..
மேலே சென்றது..அந்தப் பாறை மேல படர்ந்திருந்த பாசியோட பயத்தையும் விலக்கி எல்லாத்துக்கும் அடியில போயி சிப்பியோட சிப்பியா செட்டில் ஆகினதும், உள்மன நம்பிக்கை மட்டும் ஒரு முத்து மாதிரி மேல எழுந்து அந்த ஆக்டபஸ்ஸோட கண்ணுல விழுந்து தெரிச்சி மேல மேல போச்சு.


(வானம்பாடி சார் பாத்து திருத்துங்க)


கவிதை - 2:


இந்தக்கவிதைக்கு அவங்க பின்னூட்டத்துல நான் போட்ட விளக்கத்தை இங்க திரும்பப் போட்டிருக்கேன். அதையும் பாத்துடுங்க.


//ஜடத்தின் உயிரோட்டம்
சிலாகிக்கும் மனம்
//
ஜடம்னு ஆனப்புறம் எங்க இருக்கு உயிரோட்டம். அப்படி இல்லாத உயிரோட்டத்தை சிலாகிக்கிற மனமும் அதாவது மொக்கைக் கவிதை எழுதினா கூட அருமை பிரமாதம் அப்பிடின்னு டெம்ப்ளேட் பின்னூட்டம் போடுறவங்களோட செயலும்,


//உயிரின் செயற்கைத்தனம்
வெறுக்கும் செயல்//
உயிர் அப்பிடின்னு சொன்னப்புறம் அது இருக்குறதா ஆகிடுது. அந்த உயிரில இல்லாத செயற்கையை இருக்குறதா எடுத்துக்கிட்டு அதை வெறுக்குற செயல் அதாவது நல்ல ஒரு இடுகைல கூட நுண்ணிய அரசியலை நோண்டிப் பாக்குறவங்களோட செயலும்

//இயற்கைக்கு விரோதம்//
இயற்கைக்கு விரோதமானவை.

//-ஆம்!//
இனிமே இதையெல்லாம் செய்யாதிங்க. இத்தோட நிறுத்திக்குங்க. ஆமா.

//ஞாபகம் தொலைத்த
தொன்மைகள்
இம்மையில் வரலாறு//
நாம எல்லாரும் மறந்து போன பழைய விசயங்கள் இன்னைக்கு வரலாற்றுப் புத்தகத்துல தூங்குது - அதாவது அனுபவத்த எழுதுற எல்லா இடுகைகளும் ஹிஸ்டரி புக் மாதிரி. நாய் கூட சீண்டாது.

//தன்மையறுத்தவர் இம்மை
மறுமையில் எவ்வாறு...?!//
தன்னலம் சிறிதும் இல்லாத (பதிவர் முகிலனைப் போன்றவர்கள்) ஆட்களின் இன்றைய தருணம் நாளை என்னவாகும்? அந்த மாதிரி பதிவர்களின் பதிவு தான் காலாகாலத்துக்கும் நிக்கும்.

இத்தால் நான் அறியத்தருவது யாதெனில் - அருஞ்சொற்பொருள் போடாம புரியாத கவிதை எழுதினா எனக்குப் புரியிறத வச்சி எதையாவது எழுதுவேன்அடுத்த விளக்கம் அப்புறமா..

19 comments:

குடுகுடுப்பை said...

உம்மோட விளக்கத்துக்கு பயந்துதான் இன்னிக்கு கவிதை புரியிற மாதிரி மட்டுமல்ல அறையிற மாதிரி எழுதிருக்காங்க.

கலகலப்ரியா said...

=)).. முகிலன்... இதுக்கு முடிவே இல்லையா... சரி.. செகண்ட் அட்டெம்ப்ட்டும் பாஸ்....! (உஷ்... ஒரு ரகசியம்... வானம்பாடிக்கும் கவிதை சுத்தமா புரியல... அவங்க பேச்ச நம்பி.. நீங்க கஷ்டப்படாதீங்க... =))

குடுகுடுப்பை... =))))... என்னால இதுதான் முடிஞ்சது.. வேறென்ன...

பின்னோக்கி said...

இன்னொரு “முகிலன் நோட்ஸ்” பார்சல்.

Anonymous said...

//குடுகுடுப்பை said...

உம்மோட விளக்கத்துக்கு பயந்துதான் இன்னிக்கு கவிதை புரியிற மாதிரி மட்டுமல்ல அறையிற மாதிரி எழுதிருக்காங்க/

பழமைபேசியண்ணன் பாணியில சிரிச்சுக்கறேன்.
இஃகி, இஃகி

vasu balaji said...

இப்போ டிஸ்டிங்ஷன்ல பாஸ். பட் மொத்தமா படிச்சா இன்னும் தெளிவா நோட்ஸ் போட முடியும்.:))

கலகலப்ரியா சொல்றத நம்பாதீங்க. எனக்கு புரிஞ்சுடிச்சுன்னு செர்டிஃபிகேட் வாங்கி மாட்டி வெச்சிருக்கேன்.
(ப்ரியா இல்லன்னு டபாய்க்காதம்மா..அவ்வ்வ்)

கலகலப்ரியா said...

முகிலன் சட்டுபுட்டுன்னு வேற தீம் சேன்ஜ் பண்ணுங்க... இல்லைனா... ப்ரியாவுக்கு உரை ஆசிரியர்னு பட்டப் பேரு கொடுத்துடுவாங்க... ப்ளாக் மக்கள்... =))

கலகலப்ரியா said...

paarunga vayitherichal yaaro.. minus kooda poattaanga... =))

ப்ரியமுடன் வசந்த் said...

ரொம்ப நன்றி முகிலன்...!
இன்னிக்காச்சும் புரிஞ்சுச்சே...!

சமுதாயத்து மேல இருக்குற கோபம்ன்னுதான் நான் புரிஞ்சுட்டேன்...!

முதல்வாட்டி படிக்குறப்போ அமீபான்னுதாம்பா நினைச்சேன் அவ்வ்வ்வ்வ்

ஏதோ இங்கேயாச்சும் கமெண்ட் போட பெர்மிசன் இருக்கே...!

உங்களோட ஒரு போஸ்ட் வீடியோக்கும் இந்த கவிதைக்கும் கூட சம்பந்தமிருக்குப்பா...!

திருப்பரங்குன்றமா முகிலன் நீங்க?

jothi said...

நீங்க பாஸ் அப்படின்னு அவுங்க சொல்ல வர்ர ரகசியம் என்னன்னா நீங்க அவுங்க ஹிட்டாகாத கவிதைக்கு கூட அருஞ்சொற்பொருள் சொல்லி பேமஸ் ஆகிவிடுவீங்கனுதான்,. இதுக்கெல்லாம் ஏமாந்திராதீங்க. உங்கள் அரும்பணியை தொடர்ந்து செய்யுங்க,..(அவர்களின் பாடல்களுக்கு அருஞ்சொற்பொருள் சொல்கிற உங்க கஷ்டம் எங்களுக்கு தெரியும், உங்கள் சேவை இமாலய சேவை).

முடிஞ்சா ரெண்டு மூணு தப்பா எழுதுங்க, அப்பவாச்சும் அவுங்க பொழிப்புரை தர்ராங்களான்னு பார்க்கலாம்,.. (இது வரை எழுதினதுல எத்தனை தப்புன்னு தெரியல, அதை பாட்டை எழுதின ப்ரியாவிற்கே வெளிச்சம்).

அது சரி(18185106603874041862) said...

//
இத்தால் நான் அறியத்தருவது யாதெனில் - அருஞ்சொற்பொருள் போடாம புரியாத கவிதை எழுதினா எனக்குப் புரியிறத வச்சி எதையாவது எழுதுவேன்
//

:0)))

Unknown said...

// குடுகுடுப்பை said...
உம்மோட விளக்கத்துக்கு பயந்துதான் இன்னிக்கு கவிதை புரியிற மாதிரி மட்டுமல்ல அறையிற மாதிரி எழுதிருக்காங்க.
//

அப்பிடி திருந்திட்ட நல்லதுதான?

Unknown said...

கலகலப்ரியா said...
//=)).. முகிலன்... இதுக்கு முடிவே இல்லையா... சரி.. செகண்ட் அட்டெம்ப்ட்டும் பாஸ்....!
//

நான் ஃபெயிலாயிட்டென்னு நினைச்சிக்கிட்டிருக்கேன் கடைசில இம்ப்ரூவ்மெண்ட்தான் எழுதியிருக்கேனா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
(உஷ்... ஒரு ரகசியம்... வானம்பாடிக்கும் கவிதை சுத்தமா புரியல... அவங்க பேச்ச நம்பி.. நீங்க கஷ்டப்படாதீங்க... =))

அதப்பிடியா?

Unknown said...

// வானம்பாடிகள் said...
இப்போ டிஸ்டிங்ஷன்ல பாஸ். பட் மொத்தமா படிச்சா இன்னும் தெளிவா நோட்ஸ் போட முடியும்.:))
//

யிப்பீ

//கலகலப்ரியா சொல்றத நம்பாதீங்க. எனக்கு புரிஞ்சுடிச்சுன்னு செர்டிஃபிகேட் வாங்கி மாட்டி வெச்சிருக்கேன்.
(ப்ரியா இல்லன்னு டபாய்க்காதம்மா..அவ்வ்வ்)
//

ஆமான்னு சொல்லிடுங்க ப்ரியா

Unknown said...

// பின்னோக்கி said...
இன்னொரு “முகிலன் நோட்ஸ்” பார்சல்.
//
வருகைக்கு நன்றி

// சின்ன அம்மிணி said...
//குடுகுடுப்பை said...

உம்மோட விளக்கத்துக்கு பயந்துதான் இன்னிக்கு கவிதை புரியிற மாதிரி மட்டுமல்ல அறையிற மாதிரி எழுதிருக்காங்க/

பழமைபேசியண்ணன் பாணியில சிரிச்சுக்கறேன்.
இஃகி, இஃகி//

வருகைக்கு நன்றி

Unknown said...

//கலகலப்ரியா said...
முகிலன் சட்டுபுட்டுன்னு வேற தீம் சேன்ஜ் பண்ணுங்க... இல்லைனா... ப்ரியாவுக்கு உரை ஆசிரியர்னு பட்டப் பேரு கொடுத்துடுவாங்க... ப்ளாக் மக்கள்... =))
//

உடனே மாத்திருவோம்ல

Unknown said...

// கலகலப்ரியா said...
paarunga vayitherichal yaaro.. minus kooda poattaanga... =))//

அன்னிக்கே ஃபேமஸ் ஆயாச்சு.. மறுபடியும்னு சொன்னா நல்லாருக்காது.

Unknown said...

// பிரியமுடன்...வசந்த் said...
ரொம்ப நன்றி முகிலன்...!
இன்னிக்காச்சும் புரிஞ்சுச்சே...!

சமுதாயத்து மேல இருக்குற கோபம்ன்னுதான் நான் புரிஞ்சுட்டேன்...!

முதல்வாட்டி படிக்குறப்போ அமீபான்னுதாம்பா நினைச்சேன் அவ்வ்வ்வ்வ்

ஏதோ இங்கேயாச்சும் கமெண்ட் போட பெர்மிசன் இருக்கே...!

உங்களோட ஒரு போஸ்ட் வீடியோக்கும் இந்த கவிதைக்கும் கூட சம்பந்தமிருக்குப்பா...!

திருப்பரங்குன்றமா முகிலன் நீங்க?
//

இல்ல வசந்த் நான் விருதுநகர் பக்கத்துல ஒரு சிட்டி (வில்லேஜ்னா நம்பவா போறிங்க?)

தங்கமணிதான் திருப்பரங்குன்றம். அதுனால இந்தியா வந்தா அங்க தான் டேரா

Unknown said...

// jothi said...
நீங்க பாஸ் அப்படின்னு அவுங்க சொல்ல வர்ர ரகசியம் என்னன்னா நீங்க அவுங்க ஹிட்டாகாத கவிதைக்கு கூட அருஞ்சொற்பொருள் சொல்லி பேமஸ் ஆகிவிடுவீங்கனுதான்,. இதுக்கெல்லாம் ஏமாந்திராதீங்க. உங்கள் அரும்பணியை தொடர்ந்து செய்யுங்க,..//

இன்னுமா இந்த ஊரு நம்மள நம்பிக்கிட்டு இருக்கு?

(அவர்களின் பாடல்களுக்கு அருஞ்சொற்பொருள் சொல்கிற உங்க கஷ்டம் எங்களுக்கு தெரியும், உங்கள் சேவை இமாலய சேவை).

//
இப்பிடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளமாக்குறாய்ங்களே

//
முடிஞ்சா ரெண்டு மூணு தப்பா எழுதுங்க, அப்பவாச்சும் அவுங்க பொழிப்புரை தர்ராங்களான்னு பார்க்கலாம்,.. //
இதுவரைக்கும் எழுதுனது மட்டும் சரியாக்கும்.

//
(இது வரை எழுதினதுல எத்தனை தப்புன்னு தெரியல, அதை பாட்டை எழுதின ப்ரியாவிற்கே வெளிச்சம்).
//

எதோ இதுக்கப்புறமாவது புரியிற மாதிரி எழுதுனா நல்லதுதான

Unknown said...

// அது சரி said...
//
இத்தால் நான் அறியத்தருவது யாதெனில் - அருஞ்சொற்பொருள் போடாம புரியாத கவிதை எழுதினா எனக்குப் புரியிறத வச்சி எதையாவது எழுதுவேன்
//

:0)))
//

வாங்க அதுசரி. நான் விடுத்த அழைப்புக்கு பதிலே இல்ல?