Sunday, December 13, 2009

ஐயா ஒரு பதிவு எழுத வழி கிடைச்சிருச்சி - விசாவின் கதைக்கு முடிவு

நண்பர் விசா ஒரு ரோலர் கோஸ்டர் கதை எழுதிட்டு அவர் அதுக்குக் குடுத்த முடிவு அவருக்கே பிடிக்கலை, நீங்க யாராவது நல்ல முடிவு இருந்தா சொல்லுங்கன்னு கேட்டிருந்தார்.

முடிவா எழுதுறதுக்குப் பதிலா அடுத்த பாகம் மாதிரி கதைய தொடரலாம்னு கீழ எழுதிட்டேன் 

(ரெண்டு நாளா என்ன பதிவெழுதலாம்னு யோசிச்சு யோசிச்சு மூளையை (இருந்தாத்தானன்னு கலகலப்ரியா நறநறக்குறது கேக்குது) கசக்கிக்கிட்டே இருந்தேன். ஆபத்பாந்தவன் அனாதரட்சகனா விசா ஹெல்ப்பிட்டாரு)
*******************************************************************  
விழித்துப் பார்த்தபோது மருத்துவமனையில் இருந்தேன். என்னைச் சுற்றி சில நண்பர்கள். என் மனைவியைத்தேடினேன். என்னால் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அனைவரையும் சுற்றிய என் கண்கள் அங்கே நின்றிருந்த என் வக்கீலிடம் நின்றது.

“என்ன சார் ஆச்சு? நந்தினி எங்க?”

“நீங்க முதல்ல நல்லா ரெஸ்ட் எடுங்க. டிஸ்சார்ஜ் ஆனதும் எல்லா பேசலாம்”

“இல்ல சார். நான் இப்போவே அவளப் பாக்கணும்.”

“சும்மா படுத்துக்குங்க ஆனந்த். அந்தக் கூட்டம் அடிச்சதுல படாத இடத்துல பட்டு கோமா ஸ்டேஜ் வரைக்கும் போய் ஒரு மாசம் கழிச்சு இன்னிக்குதான் எழுந்திருக்கிங்க. நாளைக்கிக் காலைல டிஸ்சார்ஜ் ஆயிரலாம்”

என் நந்தினி எங்கே போயிருப்பாள்? என் மீது அப்படியென்ன அவளுக்குக் கோபம். அடுத்த ஆட்களிடம் அடி வாங்கிக் கொடுக்கும் அளவுக்கு? என் துரோகம் அவளை அவ்வளவு பாதித்து விட்டதா? கோமாவில் இருக்கும் என்னை வந்து பார்க்கக் கூட மனம் வராத அளவுக்குக் கல் நெஞ்சமாகி விட்டதா என்ன? யோசித்துக் கொண்டே தூங்கிப் போனேன்.

************************************************************************

காம்பவுண்ட் கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்த என்னை வரவேற்றது வாசல் கதவில் தொங்கிய பூட்டு. உடன் வந்த வக்கீல் தனது கையில் இருந்த சாவியால் கதவைத் திறந்தார்.

“ஏன் வீடு பூட்டியிருக்கு? நந்தினி எங்க?”

“உள்ள வாங்க எல்லாத்தையும் விவரமா சொல்றேன்”

ஹாலில் ஒரு மேஜை போடப்பட்டு அதில் நந்தினியின் பெரிய புகைப்படம் ஃப்ரேம் போட்டு வைக்கப்பட்டிருந்தது. அதில் போடப்பட்டிருந்த வாடிப்போன மாலை நந்தினி உயிரோடில்லை என்பதை சத்தம் போட்டு அறிவித்துக் கொண்டிருந்தது.

என் தொண்டை முள்ளில் வார்த்தை மீன்கள் சிக்கிக் கொண்டன. கண்களில் கண்ணீர் தன்னிச்சையாக வழிந்தது. பேச முடியாமல் வக்கிலைப் பார்த்தேன்.

“நீங்க ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆகி பத்து நாள்ல உங்க வொயிஃப் சூசைட் பண்ணிக்கிட்டாங்க. என்ன எதுக்குன்னு எதுவுமே எழுதி வக்கல. நீங்க எப்ப ரெகவர் ஆவீங்கன்னு தெரியாததால எல்லா சடங்குகளையும் நாங்களே முடிச்சிட்டோம். கண் முழிச்ச உடனே உங்கக் கிட்ட சொல்லவேணாமின்னு தான் நேத்தே சொல்லல”

என் உள்ளுக்குள் ஏதோ உடைந்தது. மண்டி போட்டு அழத் தொடங்கினேன். இதை விட எனக்கு நந்தினியால் பெரிய தண்டனை கொடுக்க முடியாது. வக்கீல் போய் பல மணி நேரம் ஆன பின்னும் அப்படியே உட்கார்ந்திருந்தேன்

********************************************************

மூலையில் தூசு படிந்து கிடந்த கணினியைத் தூசு தட்டினேன். நந்தினி இல்லாமல் எப்படி வாழப்போகிறேன். ஆனால் வாழ்ந்துதான் ஆக வேண்டும். கணினியை உயிர்ப்பித்து என் ஜிமெயில் அக்கவுண்டில் நுழைந்து பார்த்தேன். தேவையில்லாத மெயில்களைக் கழித்துக் கொண்டே வந்தேன். நந்தினி ஆனந்த் என்ற அந்த அனுப்புநரைக் கண்டதும் என் கைகள் நின்றன. எலியை முடுக்கி அந்த மெயிலைத் திறந்தேன்.

“டியர் ஆனந்த்,
இந்த மெயில நீங்க படிக்கும்போது நான் உயிரோட இருக்க மாட்டேன். நீங்க இப்பவும் கோமால தான் இருக்கிங்க. எழுந்து வருவிங்களான்னு எனக்குத் தெரியாது. எழுந்து ஒரு வேளை வந்தா என் சாவுக்கான காரணம் உங்களுக்குக் கண்டிப்பாத் தெரியணும். அதுக்கு தான் இந்த மெயில்.

அன்னைக்கு நீங்க என் கிட்ட அந்த சம்பவத்த சொன்ன உடனே எனக்கு முதல்ல அவ மேல கோவம் வந்தது. அப்புறம் உங்களையே மயக்கற அளவுக்கு அப்பிடி என்ன அவகிட்ட இருக்குனு தெரிஞ்சிக்கிட ஆவல் வந்தது. அவள ட்ராக் பண்ணி அவ ஒரு கால் கேர்ள்னு தெரிஞ்சி அவளப் பாக்குறதுக்காக ஹைதராபாத் போனேன். ஆனா நான் போறதுக்கு முன்னாடியே அவ செத்துக் கிடந்தா. போலீஸ் என்னக் குற்றவாளி ஆக்கிடுச்சி. அவ அப்பிடி ஒன்னும் அடிக்கிற அழகா எனக்குத் தெரியல. வக்கீல் என்ன பெயில்ல எடுத்துட்டு வரும்போது உங்க மேல எனக்குக் கோவம் வந்தது. அந்தக் கோவத்தோட வெளிப்பாட்டாததான் உங்களுக்கு அடி வாங்கிக் கொடுத்துட்டேன். ஆனா அது உங்கள கோமா வரைக்கும் கொண்டு போகும்னு எதிர் பார்க்கலை.

தப்பு பண்ணிட்டமேங்குற குற்ற உணர்ச்சி என்ன சிறுக சிறுக கொன்னுட்டிருந்திச்சி. இதை யெல்லாம் வக்கீல்கிட்ட சொல்லி வடிகால் தேடிக்கலாம்னு ஒரு நாள் வரச் சொன்னேன். எல்லாத்தையும் அவர் கிட்ட சொன்னேன். என் சுயபச்சாதாபம் என்னைக் கொன்னுடாம இருக்கக் கொஞ்சம் ட்ரிங்க்ஸ் எடுத்துக்கச் சொன்னதுனால நானும் கொஞ்சமா சாப்பிட்டேன். என் சுய இரக்கமும் குற்றமனப்பான்மையையும் பயன்படுதிக்கிட்ட வக்கீல் என்ன அதிகமா குடிக்க வச்சி என்னை நீங்க பண்ண அதே தப்ப செய்ய வச்சுட்டான். அந்த செக்ஸ் எனக்கு அப்போ தேவையான வடிகாலா இருந்தது. ரெண்டு மூணு தடவ அதுக்கப்புறமும் அந்தத் தப்ப செஞ்சிட்டேன். என் சுயத்துக்கு வந்தது உங்கள மறுபடி ஆஸ்பிட்டல்ல பாத்ததுக்கு அப்புறம் தான்.

நீங்க குடி போதைல செஞ்ச தப்பை, சுய நினைவுல இல்லாதப்ப செஞ்ச தப்பை, என் கிட்ட சொல்லாம மறச்சிருந்திருக்கலாம். ஆனா நீங்க என் மேல வச்சிருந்த அளவிட முடியாத அன்பினால சொன்னிங்க. உங்க மன்னிப்ப ஏத்திக்கிட்டு இருக்க வேண்டிய நானே உங்களுக்கு பெரிய தண்டனை கொடுத்துட்டேன். இப்போ அதே தப்பை நானே செய்திருக்கும் போது அதே மாதிரி தண்டனையை எனக்கும் கொடுத்துக்கிறது தானே நியாயம். அதுனால என் மரணத்துக்கு நான் மட்டுமே காரணம்

அன்பு மனைவி
நந்தினி.

படித்து முடித்ததும் என் கண்கள் குளமாயின. கணினியை அணைத்து விட்டு, என் அறைக்குள் இருந்த ரகசிய லாக்கரைத் திறந்தேன். உள்ளே இருந்த பதிவு செய்யப்பட்ட என் பிஸ்டலை எடுத்தேன்.

டிஸ்கி: முடிவு நல்லா இருந்தா இங்க பாராட்டுங்க. நல்லா இல்லைன்னா விசாவத் திட்டுங்க இப்பிடி ஒரு மோசமான முடிவு எழுதுற மாதிரி கதையப் படச்சதுக்காக.

19 comments:

Anonymous said...

பேருக்கேத்தமாதிரி ரோலர்கோஸ்டராதான்போகுது. ஆனாலும் இவ்வளவோ ட்ராஜெடியா இருந்திருக்க வேண்டாம்

கலகலப்ரியா said...

//மூளையை (இருந்தாத்தானன்னு கலகலப்ரியா நறநறக்குறது கேக்குது)//

என்னை மிகச் சரியா புரிஞ்சு வச்சிருக்கிற ஜீவன்கள்ள நீங்களும் ஒன்று...

கலகலப்ரியா said...

//விழித்துப் பார்த்தபோது மருத்துவமனையில் இருந்தேன். //

maththa roller coaster padikkaama mudiyaathu polaye... padichittu varen..

கலகலப்ரியா said...

ஆ... ஆள் ஆளுக்கு... எப்டி எல்லாம் கதை சொல்லுறீங்க ஐயா... சாமிங்களா... நல்லா இருக்குப்பா கதை..! கதைங்கிறதால உங்கள... விசாவ எல்லாம் மன்னிச்சு விட்டுடலாம்..! உங்க கதைப்படி நந்தினி கொஞ்சம் தெளிவா இருந்திருந்தா.. (அதுக்குதான் சான்ஸ் இல்லையே.. ட்ரிங்க்ஸ் வேற இழுத்து விட்டுட்டீங்க..) முடிவு ரொம்ப சுவாரஸ்யமா இருந்திருக்கலாம்.

அதை விட... இந்த வக்கீல் கதைய விசா கதைக்கு முன்னாடி கொஞ்சம் போட்டிருந்தா... அதாவது நந்தினிக்கு முன்னாடியே லவர் இருந்த மாதிரிப் பண்ணி இருந்தா... இந்தாளு உண்மையை சொல்ல... அவங்க பிழியப் பிழிய அழுது... உங்க நேர்மை என்னைக் கொல்லுது... எனக்கும் ஒரு அனுபவம் என்று சொல்லி இருந்தால்... கதை வேறு மாதிரி நகர்ந்திருக்கும்...! ஹிஹி... மூளைய இன்னும் கொஞ்சம் கசக்கி இன்னொரு version ட்ரை பண்ணலாமே...! (என்ன... நாமதான் படிச்சுத் தொலைக்கணும்... வேற வழி..ஹும்)

கலகலப்ரியா said...

புது டெம்ப்ளேட்ல தமிழ்மணம் மிஸ் ஆய்டுத்து போலயே..! ஓட்டுக்கு வழில்லை..! (அப்பாடா ஓட்டுப் போடா வேணாம் அப்டிங்கிறது கொஞ்சம் நிம்மதியாதான் இருக்கு..) =))

VISA said...

உண்மையில் கலக்கல். எழுத்து சூப்பர். அதுவும் தொண்டையில் சிக்கிய முள் எலியை விரட்டி அதெல்லாம் சூப்பரா இருந்திச்சு. பட் முடிவு அவ்வளவு ஷார்ப்பா இல்ல. இருந்தாலும் என் கதையை படிச்சு அத இன்னும் ஒரு படி வளத்ததுக்கு ரொம்ப நன்றி. ஓட்டு போட்டாச்சு.

VISA said...

ஆனாலும் அந்த நந்தினி ரொம்ப பாவம். ஒரு கூர்மையான முடிவ உங்க கதை நெருங்கிச்சு...ஆனா அத தொடல....பட் என்னுடைய மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும். எனக்கு ஒரு ஐடியா இருக்கு....அதாவது கதை எழுதுவதில் ஆர்வமுள்ள பத்து பதிவர்கள் ஒன்று சேர்ந்து ஒருவர் ஒரு கதையை தொடங்கி அப்படியே பத்து பேரும் அதை தொடர்ந்து இறுதியாய் எழுதுபவர் சிறப்பான ஒரு கிளைமாக்ஸோடு முடிக்கலாம். அப்படி ஒரு தொடர் பதிவு எழுத விருப்பமுள்ளவர்கள் சொல்லுங்கள் தொடங்குவோம்.

Unknown said...

சின்ன அம்மிணி
ட்ராஜெடியும் காமெடியும் கலந்ததுதான வாழ்க்கை..

Unknown said...

//அதை விட... இந்த வக்கீல் கதைய விசா கதைக்கு முன்னாடி கொஞ்சம் போட்டிருந்தா... அதாவது நந்தினிக்கு முன்னாடியே லவர் இருந்த மாதிரிப் பண்ணி இருந்தா... இந்தாளு உண்மையை சொல்ல... அவங்க பிழியப் பிழிய அழுது... உங்க நேர்மை என்னைக் கொல்லுது... எனக்கும் ஒரு அனுபவம் என்று சொல்லி இருந்தால்... கதை வேறு மாதிரி நகர்ந்திருக்கும்...! ஹிஹி... மூளைய இன்னும் கொஞ்சம் கசக்கி இன்னொரு version ட்ரை பண்ணலாமே...! (என்ன... நாமதான் படிச்சுத் தொலைக்கணும்... வேற வழி..ஹும்)
//

விசா அதுக்கு இடம் கொடுக்கலயே?

அப்புறம் என்ன விசாவோட பதிவுல என்னைக் கொலை செய்யணுமுன்னு \சொல்லி இருக்கிங்க? சாக்கிரதை, ஒபாமாட்ட சொல்லி உள்ள போட்டுருவேன். ஏற்கனவே பயங்கரவாதின்னு முகப்புலயே போட்டுட்டுத் திரியிரீங்க ஞாபகம் இருக்கட்டும்

Unknown said...

//என்னுடைய மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்
//
நன்றி நன்றி நன்றி

//எனக்கு ஒரு ஐடியா இருக்கு....அதாவது கதை எழுதுவதில் ஆர்வமுள்ள பத்து பதிவர்கள் ஒன்று சேர்ந்து ஒருவர் ஒரு கதையை தொடங்கி அப்படியே பத்து பேரும் அதை தொடர்ந்து இறுதியாய் எழுதுபவர் சிறப்பான ஒரு கிளைமாக்ஸோடு முடிக்கலாம். அப்படி ஒரு தொடர் பதிவு எழுத விருப்பமுள்ளவர்கள் சொல்லுங்கள் தொடங்குவோம்//

நல்ல ஐடியாவா இருக்கு. நான் ரெடி.

Raju said...

Its Also Goob Mukil.

கலகலப்ரியா said...

//
அப்புறம் என்ன விசாவோட பதிவுல என்னைக் கொலை செய்யணுமுன்னு \சொல்லி இருக்கிங்க? சாக்கிரதை, ஒபாமாட்ட சொல்லி உள்ள போட்டுருவேன். ஏற்கனவே பயங்கரவாதின்னு முகப்புலயே போட்டுட்டுத் திரியிரீங்க ஞாபகம் இருக்கட்டும்//

ஒபாமாவா கூடத்தான் கொல்லணும்னு நினைச்சேன் ஒரு வாட்டி...! இதெல்லாம் நம்மளுக்கு சாதாரணமப்பா...!

கலகலப்ரியா said...

//நல்ல ஐடியாவா இருக்கு. நான் ரெடி//

படிச்ச கிரைம் நாவல் எல்லாம் வச்சு நாமளும் ட்ரை பண்ணலாம்.... ஆள் பத்தலைன்னா சொல்லுங்க... =))

VISA said...

//ஒபாமாவா கூடத்தான் கொல்லணும்னு நினைச்சேன் ஒரு வாட்டி...! //

இந்த விஷயம் ஒபாமாவுக்கு தெரியுமா?

கலகலப்ரியா said...

//VISA said...

//ஒபாமாவா கூடத்தான் கொல்லணும்னு நினைச்சேன் ஒரு வாட்டி...! //

இந்த விஷயம் ஒபாமாவுக்கு தெரியுமா?//

லாஸ்ட் பதிவர் மீட்டிங்ல மீட் பண்ணோம்... பட் நான் பிரபல ப்ளாக்கரிணி என்பதால்... ஒபாமாவுக்கு என்னுடன் பேசும் வாய்ப்புக் கிடைக்கவில்லை... பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம்... அப்போ சொல்லிடுறேன்... என்னோட நேர்மை ஒபாமாவுக்கு பிடிக்கும்...

Unknown said...

VISA said...
//ஒபாமாவா கூடத்தான் கொல்லணும்னு நினைச்சேன் ஒரு வாட்டி...! //

இந்த விஷயம் ஒபாமாவுக்கு தெரியுமா?
//

:))

Unknown said...

//லாஸ்ட் பதிவர் மீட்டிங்ல மீட் பண்ணோம்... பட் நான் பிரபல ப்ளாக்கரிணி என்பதால்... ஒபாமாவுக்கு என்னுடன் பேசும் வாய்ப்புக் கிடைக்கவில்லை... பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம்... அப்போ சொல்லிடுறேன்... என்னோட நேர்மை ஒபாமாவுக்கு பிடிக்கும்...
//

பாவம் ஒபாமா.

அப்புறம் அது என்ன ப்ளாக்கரிணி? அப்போ ப்ளாக்கர் ஆண்பாலா?

ச ம ர ன் said...

yappa....enna oru sinthanai...ivlo kodoorama think pannirukka venaam :(

Unknown said...

//ச ம ர ன் said...
yappa....enna oru sinthanai...ivlo kodoorama think pannirukka venaam :(
//

அப்பிடி என்னக் கொடூரமா தின்க் பண்ணிட்டேன்னு தெரியலயே. கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க.

அப்பிடியே ஒரு நெகடிவ் ஓட்டு போட்டுட்டுப் போயிருக்கலாமே? நானும் ரொம்ப நாளா பேமஸ் ஆகணுமுன்னு பாக்குறேன்.