Sunday, January 17, 2010

பிதற்றல்கள் 01/17/2010

சமீபத்தில் 3 இடியட்ஸ் படம் பார்த்தேன். அமீர் கலக்கியிருக்கிறார். மார்ச் மாதம் 45 வயதை கடக்கப் போகிறவர் மாதிரியே இல்லை. ஒரு கல்லூரி மாணவனின் உடல்மொழி அனாயாசமாய் வருகிறது. ஒரு சில காட்சிகளில் கரீனா கபூர் அமீர்கானை விட வயதானவராகத் தெரியும் அளவுக்கு அநியாயத்துக்கு இளமையாயிருக்கிறார். 

மூன்று இளைஞர்களின் கல்லூரி வாழ்வை சொல்வதன் மூலம் இந்திய கல்வி முறையில் இருக்கும் ஓட்டைகளை சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.  பல லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் மனதாரப் பாராட்டலாம்.

படத்தின் உள்குத்து தென்னிந்தியர்களைக் கிண்டல் அடித்திருப்பது. இன்னொரு - ஃபர்ஹான், சதுர், ராஜூ மூவரும் சிம்லாவுக்குள் நுழையும் - காட்சியில் ஒரு 5 முஸ்லிம் பெண்கள் கண்கள் மட்டும் தெரியும் அளவுக்கு பர்தா அணிந்து கொண்டு ஒரு டூரிஸ்ட் அட்ராக்‌ஷன் முன் புகைப்படம் எடுத்துக்கொள்வது போல வருகிறது. இது உள்குத்தா தெரியவில்லை.

இந்தப் படத்தை தமிழில் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். எடுத்தால் நடிகர்களுக்கு என் சாய்ஸ் - சூர்யா (அமிர்), மாதவன் (மாதவன்), பாய்ஸ்-சித்தார்த் (ராஜூ).

இந்தியா-பங்களாதேஷ் இடையே முதல் டெஸ்ட் போட்டி துவங்கிவிட்டது. போட்டிக்கு முந்தைய நாள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சேவாக் பங்களாதேஷின் பந்து வீச்சு சாதாரணமானது. அவர்களால் இந்திய அணியின் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்ற முடியாது என்று சொன்னார். அதற்கு பதிலடி தருவது போல ஒரே நாளில் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி விட்டது பங்களாதேஷ், வெறும் 218 ரன்கள் மட்டும் கொடுத்து.

கிரிக்கெட் கடவுள் சச்சின் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார். இன்று அவர் சதமடிக்கக் கூடும். அப்படி அடித்தால் அவரது விமர்சகர்கள் பங்களாதேஷுக்கு எதிராகத்தான் சச்சினால் சதம் அடிக்க முடியும் என்று பே(ஏ)சுவார்கள். எப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த சதம் என்பதை வசதியாக மறந்து விடுவார்கள்.

வேட்டைக்காரன் நியூஸ் போடாமல் நான் இந்தப் பிதற்றல்களை முடித்தால் உம்மாச்சி கண்ணைக் குத்திவிடுமாதலால், இந்த இரண்டு படங்களை (நோ ஜிம்மிக்ஸ், எல்லாம் ஒரிஜினல்) மட்டும் போட்டுவிடுகிறேன்.படம் வெளியானது டிசம்பர் 18, இன்று ஜனவரி 18, ஆனால் இவர்களுக்கு மட்டும் 40 நாள் ஆகிவிட்டதாம்?!!!

கீழே உள்ள படம் அதை விட கொடுமை. இப்படியெல்லாம் படத்தை ஓட்டவேண்டுமென்று என்ன கட்டாயம்?
நேற்று எழுதிய கதைப்புதிருக்கு நான் எதிர்பார்த்த அளவு பதில்கள் வரவில்லை. பல மக்கள் அலுவலகத்தில் தான் ப்ளாக்குகளைப் படிப்பதாலும் நேற்று ஞாயிறு என்பதாலும் இன்னொரு நாள் விட்டுப் பார்க்கலாம் என்று இருக்கிறேன். முடிவை நான் ஏற்கனவே எழுதிவிட்டேன். நாளை கண்டிப்பாக வெளியிடுவேன்.

இதுவரை பதில் பின்னூட்டமிட்டவர்களில் பலர் சரியான பதிலை சொல்லியிருந்தாலும் அவர்கள் ஏன் அந்த நபர் கொலை செய்திருக்கலாம் என்று தான் நினைப்பதற்கான காரணத்தை எழுதவில்லை. யாராவது சொல்வார்கள் என்று நினைக்கிறேன். அப்படி யாரும் சொல்லவில்லை என்றால் யார் கிட்டத்தட்ட சொல்கிறார்களோ அவர்களுக்கு புத்தகம் நிச்சயம்.

12 comments:

குடுகுடுப்பை said...

3 இடியட்ஸ் நானும் பார்த்திட்டேன், இப்பதான் என்னோட கருத்தை எழுதலாம்னு இருந்தேன். ரொம்ப சோம்பலா இருக்கு.

கரீனா கபூர் எல்லா இடத்திலும் வயசனவராகவே தெரிகிறார்.

Anonymous said...

3 இடியட்ஸ் பாக்க இன்னும் நேரம் வரலை. நிறைய பேர் நல்லா இருக்குன்னு சொல்ராங்க.

Chitra said...

இவ்வளவு சின்ன எழுத்துக்களை கண்ணாடி, லென்சு இல்லமா படிச்சவங்களுக்கு என்ன பரிசு சார்? வேட்டைக்காரன் படத்துக்கு டிக்கெட் என்று மட்டும் சொல்லாதீங்க. :-)

ரோஸ்விக் said...

//இவ்வளவு சின்ன எழுத்துக்களை கண்ணாடி, லென்சு இல்லமா படிச்சவங்களுக்கு என்ன பரிசு சார்? வேட்டைக்காரன் படத்துக்கு டிக்கெட் என்று மட்டும் சொல்லாதீங்க.//

இன்னொரு முறை சொல்லுங்க... :-))


படத்துல நீங்க சொன்ன அந்த தென் இந்தியாவை பற்றிய உள்குத்த நினைச்சேன்.

vasu balaji said...

சினிமா காலண்டர் தனியோ என்னமோ?

Unknown said...

//குடுகுடுப்பை said...
3 இடியட்ஸ் நானும் பார்த்திட்டேன், இப்பதான் என்னோட கருத்தை எழுதலாம்னு இருந்தேன். ரொம்ப சோம்பலா இருக்கு.

கரீனா கபூர் எல்லா இடத்திலும் வயசனவராகவே தெரிகிறார்
//

ஆமா..

Unknown said...

//சின்ன அம்மிணி said...
3 இடியட்ஸ் பாக்க இன்னும் நேரம் வரலை. நிறைய பேர் நல்லா இருக்குன்னு சொல்ராங்க
//

ஆமா சான்ஸ் கிடைச்சா பாருங்க.. டவுன்லோட் பண்ணி பாப்பிங்கன்னா சொல்லுங்க..லின்க் அனுப்புறேன்.

Unknown said...

//Chitra said...
இவ்வளவு சின்ன எழுத்துக்களை கண்ணாடி, லென்சு இல்லமா படிச்சவங்களுக்கு என்ன பரிசு சார்? வேட்டைக்காரன் படத்துக்கு டிக்கெட் என்று மட்டும் சொல்லாதீங்க. :-)
//

இன்னும் விஷன் டெஸ்ட் பண்ணலன்னு சொல்லுங்க :))

Unknown said...

// ரோஸ்விக் said...
//இவ்வளவு சின்ன எழுத்துக்களை கண்ணாடி, லென்சு இல்லமா படிச்சவங்களுக்கு என்ன பரிசு சார்? வேட்டைக்காரன் படத்துக்கு டிக்கெட் என்று மட்டும் சொல்லாதீங்க.//

இன்னொரு முறை சொல்லுங்க... :-))


படத்துல நீங்க சொன்ன அந்த தென் இந்தியாவை பற்றிய உள்குத்த நினைச்சேன்
//

தேங்க்ஸ்.

Unknown said...

// வானம்பாடிகள் said...
சினிமா காலண்டர் தனியோ என்னமோ?
//

இருக்கலாம் போலயே..

கலகலப்ரியா said...

samee... flu saamee... konjam wt pannunga.. unga previous post um padichu mudivu solren.. =))

அது சரி(18185106603874041862) said...

//
கீழே உள்ள படம் அதை விட கொடுமை. இப்படியெல்லாம் படத்தை ஓட்டவேண்டுமென்று என்ன கட்டாயம்?
//

தொடர்ந்து மூணு ஹேட்ரிக் டப்பா...இதையாவது எப்பிடியாவது ஒரு அம்பது நாள் ஓஓஓஓட்ட்ட்ட்ட்ணூம்னு கட்டாயம்....

ம்ம்ம்...அவய்ங்க கஷ்டம் யாருக்கு தெரியுது...