Monday, January 18, 2010

ஒரு கொலை, ஒரு புதிர் - முடிவு

முன்கதை இங்கே

இப்போ மூணு பேருதான் சந்தேக லிஸ்ட்ல இருக்காங்க. இதுல மூணு பேருக்குமே மோட்டிவும் இருக்கு அலிபியும் இருக்கு. யாரு பண்ணியிருப்பாங்கன்னு நீ நினைக்கிற?”

கேட்ட கார்த்தி அருணை தீர்க்கமாகப் பார்த்தார்.

அடுத்த சிகரெட்டைப் பற்ற வைத்த அருண் எழுந்து மெல்ல தன் நடையால் அந்த அறையை அளந்தான்.

“இந்தக் கொலை கண்டிப்பாக திட்டமிட்டக் கொலை கிடையாது. திட்டம் போட்டவன் வெப்பனோட தான் வருவான்.  கூலிக்கு கொலை செய்றவனும் வெப்பன் இல்லாம வர மாட்டான். சோ, பழைய பார்ட்னரை இந்த லிஸ்ட்ல இருந்து எடுத்துடலாம்”

“ஓக்கே. அப்போ வாட்ச் மேனா, மதியா?”

“கொஞ்சம் வெயிட் பண்ணுடா. சொல்லிட்டுதான வர்றேன்?”

“சரி சரி. நான் குறுக்க பேசல, சொல்லு”

“வந்தவன் கண்டிப்பா சாந்தினிக்கு தெரிஞ்சவன். அதுனால தான் அவங்க அவன ட்ராயிங் ரூம் வரைக்கும் விட்டுருக்காங்க. இந்த கேட்டகரில வாட்ச்மேன், மதி ரெண்டு பேரும் வர்றாங்க”

“ஆமா”

“வந்த எடத்துல அவங்க ரெண்டு பேருக்கும் ஏதோ வாக்குவாதம் நடந்திருக்கு. ஆத்திரத்துல அடிச்சிருக்கான். அவங்க கீழ விழுந்ததும் செத்துட்டாங்கன்னு பயந்து ஓடியிருக்கான்”

“ஆமா”

“வாட்ச்மேன் பீச்சுல தண்ணியடிச்சிட்டு கிடந்திருக்கான். அவன் கொலை பண்ணிட்டுக் கூட தண்ணியடிச்சிட்டு விழுந்திருக்கலாம். ஆனா வாட்ச்மேன் மாதிரி ஆளுங்க, கொலை பண்ணிட்டோம்னு பயந்தா ஊர விட்டு ஓடியிருப்பாங்க. இப்பிடி தண்ணியடிச்சிட்டு பீச்சுல கிடக்க மாட்டான்”

“ஆனா அதை மட்டும் வச்சிக்கிட்டு..”

“சரிதான். அதை மட்டும் வச்சி அவன லிஸ்ட்ல இருந்து எடுத்துட முடியாது. அவங்க செத்துக் கிடந்தது அந்த டீப்பாய் பக்கத்துல. அந்த சிலை கைக்கு அடக்கமா எடுத்து அடிக்கிற மாதிரி இருக்குது. ஆனா அதை எடுத்து அடிக்காம தூரத்துல இருந்த கோல்ஃப் க்ளப் எடுத்து அடிச்சிருக்கான். வாட்ச்மேனா இருந்தா அந்த சிலையத்தான் எடுத்து அடிச்சிருப்பான். அந்த சிலையோட வேல்யூ தெரிஞ்சவன் தான் அத யூஸ் பண்ணாம இருந்திருக்கனும். வாட்ச்மேனுக்கு அது தெரிஞ்சிருக்க வாய்ப்பு இல்லை”

“கரெக்டு”

“இதுதான் நடந்திருக்கு. மதி சம்பவத்தன்னிக்கு அத்தை வீட்டுக்கு எதுக்கோ வந்திருக்கான். அவனுக்கும் சாந்தினிக்கும் ஏதோ ஒரு விசயத்துல - மே பி சொத்து விவகாரத்துல சண்டை வந்திருக்கு. கோவம் வந்த அவன் சிலைய எடுக்காம கோல்ஃப் க்ளப் எடுத்து அவங்களை அடிச்சிருக்கான். செத்துட்டாங்கன்னு தெரிஞ்சதும் வீட்ட விட்டு ஓடிப்போய் தியேட்டர்ல வேட்டைக்காரன் - அந்தப் படத்துக்குதான் கூட்டம் இருந்திருக்காது, சோ லேட்டாப்போனாலும் டிக்கெட் கிடைச்சிருக்கும் - படம் பாத்துட்டு டிக்கெட்டைப் பத்திரப் படுத்தி வச்சிருக்கான், போலிஸ் விசாரணை வந்தா அலிபியா உபயோகப்படும்னு.”

கார்த்தி எழுந்து வந்து அருணைக் கட்டிக்கொண்டார். “சூப்பர்டா. லாஜிக் ஒர்க் ஆவுது”

“போ. போய் அவன கஸ்டடிக்கு கொண்டு வந்து ரெண்டு தட்டு தட்டு, எல்லாத்தையும் கக்கிடுவான்” சிகரெட்டை ஆஷ்ட்ரேயில் நசுக்கிவிட்டு “என்னை மறுபடி வீட்டுல விடச் சொல்லுடா” தன் கூலரை எடுத்து அணிந்து கொண்டான்.

(மீண்டும் அடுத்த சாகசத்தில் சந்திக்கிறேன்)

பின்னூட்டங்கள் எல்லாம் வெளியிட்டுவிட்டேன். மொத்தம் வந்த பின்னூட்டங்கள் 9, வானம்பாடிகள் சார் இரண்டு பின்னூட்டம் போட்டதால், குற்றவாளியை கண்டுபிடிக்க முயற்சி செய்தவர்கள் 8 பேர்தான். அதில் 7 பேர் மதிவாணன் தான் என்று சரியாகக் கண்டு பிடித்திருந்தனர். ஆனாலும் அவர்கள் மதிவாணனை குற்றம் சாட்டுவதற்கான காரணத்தை விளக்கமாக எழுதவில்லை. வானம்பாடிகள் சார் தான் மிக அருகில் வந்திருந்தார். ஆதலால், அவருக்கே பரிசு.

வாழ்த்துக்கள் பாலா (வானம்பாடிகள்) சார். ரூ. 200/- பட்ஜெட்டில் நீங்கள் வாங்க நினைத்த, இன்னும் வாங்காத புத்தகம் என்று ஏதாவது இருந்தால் அதை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

பி.கு: கவனமாகப் படிக்கவும் இரண்டுக்குப் பிறகு இரண்டு பூஜ்யங்கள் தான் போட்டிருக்கிறேன். :))))))

15 comments:

VISA said...

கதையின் முடிவை குறித்து நான் பின்னூட்டம் போடவில்லை. காரணம் எந்த ஒரு கதையின் முடிவும் அந்த கதாசிரியனுக்கே உரித்தானது. எனவே முடிவை கண்டு பிடிக்க மூளையை கசக்கவில்லை.
உங்கள் முதல் அத்தியாயத்தில் சுஜாதாவின் கிரைம் நாவல் நடை அப்பட்டமாய் தெரிந்தது. படிக்க படிக்க சுவாரஸ்யம். பிறகு இரண்டாம் பாதியில் ஒரு புத்திசாலித்தனமான முடிவை வைத்திருந்தீர்கள். என்னுடைய தாழ்மையான கருத்து என்னவென்றால்......என்னவென்றால்....அவன் தான் கொலைகாரன் என்றால் கொலைக்காரனை கண்டுபிடித்துக்கொடுக்கும் சாதனம் அந்த சிலை தான் என்றால்...நிச்சயமாக இதை இன்னும் சிறப்பாக எழுதியிருக்க முடியும் என்பது தான்.
அடுத்த கேஸ்ல மீட் பண்ணுவோம்.

Unknown said...

//உங்கள் முதல் அத்தியாயத்தில் சுஜாதாவின் கிரைம் நாவல் நடை அப்பட்டமாய் தெரிந்தது.
//

ரொம்பப் புகழாதீங்க.. ஹி ஹி ஹி

//என்னுடைய தாழ்மையான கருத்து என்னவென்றால்......என்னவென்றால்....அவன் தான் கொலைகாரன் என்றால் கொலைக்காரனை கண்டுபிடித்துக்கொடுக்கும் சாதனம் அந்த சிலை தான் என்றால்...நிச்சயமாக இதை இன்னும் சிறப்பாக எழுதியிருக்க முடியும் என்பது தான்
//

சரிதான், ஒத்துக்கொள்கிறேன். நான் முதலில் எழுத நினைத்தது கொஞ்சம் நீளமான, விரிவான, ஒரு அத்தியாயத்துக்கும் மேலான கதை. ஒரே அத்தியாயமாக எழுத முடிவெடுத்தது கதையின் நடுவில் தான். அதனால் தான் முதலில் விவரிக்க ஆரம்பித்த அளவு க்ரைம் சீனை விவரிக்கவில்லை. கண்டிப்பாக அடுத்த கேஸை நன்றாக எழுத முயற்சி செய்கிறேன். :))

Anonymous said...

//கவனமாகப் படிக்கவும் இரண்டுக்குப் பிறகு இரண்டு பூஜ்யங்கள் தான் போட்டிருக்கிறேன். //

எனக்கு ஐந்து பூஜ்யங்கள் தெரியுது.

நானும் கிட்டத்தட்ட சரியான காரணம்தான் சொன்னேனாக்கும்.

Unknown said...

//சின்ன அம்மிணி said...
//கவனமாகப் படிக்கவும் இரண்டுக்குப் பிறகு இரண்டு பூஜ்யங்கள் தான் போட்டிருக்கிறேன். //

எனக்கு ஐந்து பூஜ்யங்கள் தெரியுது.

நானும் கிட்டத்தட்ட சரியான காரணம்தான் சொன்னேனாக்கும்//


ஆமாங்க, அதுக்குத்தான் நான் உங்களுக்கு ஒரு பரிசு (3 Idiots) குடுத்துட்டேனே?

பின்னோக்கி said...

வாழ்த்துக்கள் வானம்பாடிகள் அவர்களுக்கு.

சே. என்னைத் தவிர எல்லாரும் சரியான விடை எழுதியிருக்கிறார்கள் :-(.

Chitra said...

ஐயா, நான் கரெக்ட். காரணம் ஊகிச்சேன். அதுவும் கரெக்ட். நீளமா பதில் எழுதுறதுக்குள்ள விடிஞ்சி பதில் வந்துருச்சு. அவ்வ்வ்வ்....

Congratulations to Bala sir!

vasu balaji said...

ஆஹா. சரி சரி நடக்கட்டு. நன்றி நன்றி. :))

நசரேயன் said...

இப்படியெல்லாம் நடக்குதா ?

கலகலப்ரியா said...

ஆ... வட போச்சே... எல்லாம் இந்த ஃப்ளுவால வந்தது... அவ்வ்வ்வ்... சரி நிதானமா படிப்போம்ல... =))

Unknown said...

//பின்னோக்கி said...
வாழ்த்துக்கள் வானம்பாடிகள் அவர்களுக்கு.

சே. என்னைத் தவிர எல்லாரும் சரியான விடை எழுதியிருக்கிறார்கள் :-(.
//

பரவாயில்ல விடுங்க.. ஆயிரத்தில் ஒருவன்.. :)))

Unknown said...

// Chitra said...
ஐயா, நான் கரெக்ட். காரணம் ஊகிச்சேன். அதுவும் கரெக்ட். நீளமா பதில் எழுதுறதுக்குள்ள விடிஞ்சி பதில் வந்துருச்சு. அவ்வ்வ்வ்....
//

எப்பிடி எல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு.. :))))

Unknown said...

// வானம்பாடிகள் said...
ஆஹா. சரி சரி நடக்கட்டு. நன்றி நன்றி. :))
//

விழா நாயகன் இப்பிடி மட்டும் சொல்லிட்டுப் போனா எப்பிடி?

Unknown said...

// நசரேயன் said...
இப்படியெல்லாம் நடக்குதா ?
//

அப்பப்ப கடைப்பக்கம் வாங்க சார்.. துண்டு போடுறதுலயே இருக்காதீங்க.. :)))

Unknown said...

// கலகலப்ரியா said...
ஆ... வட போச்சே... எல்லாம் இந்த ஃப்ளுவால வந்தது... அவ்வ்வ்வ்... சரி நிதானமா படிப்போம்ல... =))
//

நல்ல வேளை ஃப்ளூ காப்பாதிருச்சி. இல்லைன்னா ரூ.200/- புத்தகத்துக்கு கொரியருக்கு மட்டும் ரூ.1,000/- ஆகியிருக்கும்.. (இதுக்கு என்னை நீங்க பாராட்டியே ஆகணும்).

vasu balaji said...

முகிலன் said...

/ விழா நாயகன் இப்பிடி மட்டும் சொல்லிட்டுப் போனா எப்பிடி?//

ஆஹா. சொல்லுவோம்ல. :))