Saturday, February 6, 2010

மன்னிப்பு

செங்கல்பட்டு ஏதிலிகள் முகாமில் கோரத்தாண்டவம் நடத்தியிருக்கிறது தமிழக காவல்துறை.

அந்தச் சம்பவத்தின் போது தமிழகக் காவல்துறை அதிகாரிகளின் வார்த்தைகள் அவர்கள் கொடுத்த அடிகளை விட அந்த அப்பாவி ஈழத்தமிழர்களுக்கு அதிகமான வலியைக் கொடுத்திருக்கும்.

என்னடா விடுதலை வேண்டிக் கிடக்குது உங்களுக்கு அனாதப் பயலுகளா? நாடு இல்லாத அகதி நாய்களுக்கு பாவம்னு இடம் குடுத்தா விடுதலையாம்ல வேணும்? கிடைக்குற சோரத் தின்னுபுட்டு கிடங்கடா அகதிப் பயலுகளா”


இப்படி அமில வார்த்தைகளை உமிழ்ந்ததற்கு அவர்கள் மேல் அமிலத்தையே ஊற்றி இருக்கலாம். 






தாக்கப்பட்டு உடற்காயத்தால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களிடமும், இதைப் படித்து மனதால் காயப்பட்ட ஈழத்தமிழர்களிடமும், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.


இந்தியத் தமிழனாய் பிறந்த என்னால் இதை மட்டுமே செய்ய முடியும். என்ன செய்ய? ஓட்டுப்பிச்சை கேட்பவர்கள் என்று இத்தனை நாள் அரசியல்வாதிகளை ஏளனம் செய்து கொண்டிருந்த நாங்கள் இப்போது அவர்களிடம் பிச்சை வாங்கி ஓட்டுப் போடும் நிலைக்கு முன்னேறி விட்டோமே? 


இனி எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவர்களிடம் நாங்கள் நியாயம் கேட்க முடியும்? இனியும் இந்தியத் தமிழன் தொப்புள் கொடி உறவு, எங்கள் கண்ணில் நீர் வழிந்தால் அவன் கண்ணில் உதிரம் கொட்டும் என்றெல்லாம் எதிர்பார்த்து ஏமாந்து போகாமல் உங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். நாங்கள் கொலைகாரர்களுடன் கூட்டுச் சேர்ந்து காலம் பலவாகிவிட்டது..


அதோடு அடுத்த வாரம் தென்னாப்பிரிக்கா இந்தியா டெஸ்ட் போட்டிகள் வேறு துவங்குகிறது. அடுத்தடுத்த மாதங்களில் ஐ.பி.எல் போட்டிகளும் துவங்குகின்றன. இடையில் பெண்ணாகரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு காசு வாங்கி பிரியாணி திங்க வேண்டும். இத்தனைக்கும் இடையில் உங்களைப் பற்றி யோசிக்க எங்களுக்கு நேரமும் இல்லை, எங்கள் இதயத்தில் மனிதமும் இல்லை.


வேதனையுடன்
ஒரு வக்கற்ற இந்தியத் தமிழன்.

15 comments:

பழமைபேசி said...

ச்சே....வருத்தமா இருக்கு...

Paleo God said...

இனி எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவர்களிடம் நாங்கள் நியாயம் கேட்க முடியும்? இனியும் இந்தியத் தமிழன் தொப்புள் கொடி உறவு, எங்கள் கண்ணில் நீர் வழிந்தால் அவன் கண்ணில் உதிரம் கொட்டும் என்றெல்லாம் எதிர்பார்த்து ஏமாந்து போகாமல் உங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். நாங்கள் கொலைகாரர்களுடன் கூட்டுச் சேர்ந்து காலம் பலவாகிவிட்டது.///

இத நான் போன வருடம் நேர்லயே அங்கிருந்து வந்த சில நண்பர்களிடம் சொல்லிட்டேங்க..

வேதனையுடன்
ஒரு வக்கற்ற இந்தியத் தமிழன்.
+ ஒன்று.

Prathap Kumar S. said...

இப்படியுமா பண்ணுவானுங்க... பணவெறிப்புடிச்சவனுங்க...

புலவன் புலிகேசி said...

//Blogger நாஞ்சில் பிரதாப் said...

இப்படியுமா பண்ணுவானுங்க... பணவெறிப்புடிச்சவனுங்க...//

இதுக்கு மேலயும் பன்னுவானுங்க அதிகார வர்க்கத்து வக்கிர புத்து காரனுங்க

vasu balaji said...

வெளிய போக வர அனுமதி இருக்கிறவங்கன்னா காசு தேறும். இவங்க பாவம். அந்தக் கடுப்பு வேற. இதுக்கும் நமக்கு சுரணையில்லாம தானே ஜெயராம் வீட்டைக் கொளுத்துறோம்.

Anonymous said...

என்னத்தை சொல்லி என்ன ஆகப்போகுது.

துபாய் ராஜா said...

:((

க.பாலாசி said...

கொடுமைங்க இதெல்லாம்...

ப்ரியமுடன் வசந்த் said...

ப்ச் :(

Unknown said...

வேதனையைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி..

தேவன் மாயம் said...

மிக்க வேதனை அடைகிறேன்! தமிழனுக்கு தமிழனே எதிரிதான்!!

பித்தனின் வாக்கு said...

மிக்க வேதனை அடைகின்றேன்.உங்களுடன் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கலகலப்ரியா said...

psst..

கண்ணா.. said...

போன பாராளுமன்ற தேர்தல் சமயத்துலயே என் ஈழநண்பனிடம் ”இந்தியனா பொறந்ததை நினைச்சா நாக்க புடுங்கிட்டு சாகலாம் போல இருக்கு”ன்னு சொன்னேன்...

:((

குடுகுடுப்பை said...

ஈழத்தவர் புதிய நண்பர்களை தங்களின் புத்திசாலித்தனத்தால் உருவாக்கிக்கொள்ளவேண்டும்.