Saturday, February 6, 2010

பம்பரம் - கிரிக்கெட்டுக்கு எதிரா?? குடுகுடுப்பையின் எதிர்வினை

என் எழுத்துக்களை மிக விரும்பிப் படிக்கும் வாசகர்களில் 99 சதவிகிதம் பேர் குடுகுடுப்பையின் தீவிர விசிறிகள் என்று எனக்குத் தெரியும். தெரிந்தும்தான் அவ்வப்போது குடுகுடுப்பை பற்றி என் விமர்சனங்களை எழுதி வருகிறேன். என் வாசகர்களை குஷிப்படுத்துவதற்காக எழுதுபவன் அல்ல நான் என்று அவர்களுக்கே தெரியும். ஆனால் அவர்கள் மனதில் ஒரு குழப்பம் உண்டாகிறது. ’ தினம் நடமாடும் ரசிகக் குயிலகள் ’ என்ற அற்புதமான எதிர் கவுஜையை உருவாக்கிய ஒரு கவிஞனை, கவிதையை வெகுவாக சிலாகிக்கக் கூடிய முகிலன் ஏன் விமர்சிக்கிறார் என்ற குழப்பமே அது. குடுகுடுப்பை பற்றி நான் அவ்வப்போது எழுதி வரும் கட்டுரைகளைப் படித்தாலே இதற்கான விளக்கம் கிடைக்கும். நான் எப்போதும் இவ்விஷயத்தில் ஒற்றை வரி விமர்சனங்களை எழுதியதில்லை.


சமீபத்தில் பம்பரம் விடுவதைப் பற்றி கு.ஜ.மு.க தளத்தில் குடுகுடுப்பை எழுதிய ஒரு கட்டுரையைப் படித்த பம்பர ரசிகர் ஒருவர் நான் பம்பரத்துக்கு எதிராக எழுதுவதாகவும் அதைக் கண்டித்தே குடுகுடுப்பை எழுதியிருப்பதாகவும் நினைத்துக் கொண்டு என்னை அடிக்க கக்கூஸில் தேடிக் கொண்டிருந்ததாகக் கேள்விப்பட்டு இரண்டு நாட்களாக அந்தப் பக்கம் போகாமலே இருந்தேன். ஜெ.வைப் போல வேனுக்குள்ளேயே கக்கூஸ் வைத்துக்கொள்ள இந்த ஏழைப் பதிவனால் முடியுமா?






இப்போது குடுகுடுப்பையின் கட்டுரை. ‘பம்பரம் என்பது சோழர்களின் விளையாட்டு. அதை மட்டம் தட்டுமாறு கிரிக்கெட் பற்றி முகிலன் என்ற பாண்டியர் எழுதி வருகிறார்’ என்பதே அந்தக் கட்டுரையின் சாரம். இதன் முதல் வாக்கியத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. சோழர்கள் விளையாடினார்கள் என்றால் அது படுக்கை அறையில் மட்டும் தான். எல்லா விளையாட்டுகளிலும் மன்னர்களாக இருந்த பாண்டியர்களைப் பற்றி மட்டும் நாம் ஏன் எப்போதுமே மௌனம் சாதிக்கிறோம் என்பதே என்னுடைய கேள்வி. இதை நான் குடுகுடுப்பையிடம் கேட்கவில்லை. அவர் தொடர்ந்து பல மொக்கைப் பதிவுகளை எழுதி வருகிறார். பம்பர விளையாட்டின் ரசிகர்களைக் கேட்கிறேன். பம்பரம் மட்டுமே விளையாட்டு, மற்றதெல்லாம் வெறும் கூட்டு, என்ற unique-ஆன இடத்தை பம்பரத்துக்கும் அதை எழுதிய குடுகுடுப்பைக்கும் வழங்குவதை மட்டுமே எதிர்க்கிறேன். முந்தைய காலத்தில் விளையாடிய விளையாட்டுக்கள் - கில்லி தாண்டு, கிட்டிப்புல், கபடி, நொண்டி, பாண்டி, அன்னக்கல் - இந்த வரிசையில் வந்ததே பம்பரம் என்பது என் வாதம். துரதிருஷ்டவசமாக அந்த வரிசையில் வந்த பம்பரம் எனக்குப் பிடிக்கவில்லை, அதைப் பற்றி எழுதிய குடுகுடுப்பையையும் எனக்குப் பிடிக்கவில்லை. ஏன்?


இதைப் புரிந்து கொள்ள கும்மாங்குத்து போன்ற சிறப்பான விளையாட்டு வீரர்கள் ஏன் பம்பரத்தை கொண்டாடினார்கள் என்று பார்க்க வேண்டும். அவர்கள் எந்தக் காரணத்துக்காக பம்பரத்தைக் கொண்டாடினார்களோ அதே காரணத்தினால்தான் எனக்கு பம்பரத்தைப் பிடிக்கவில்லை. குறிப்பாக சோழர்களுக்கு பம்பரத்தைப் பிடிக்கும். காரணம், பம்பரம் விளையாட்டு கிரிக்கெட்டின் பந்துவீச்சை பந்து இல்லாமல் கிராமப்புரங்களுக்கு எடுத்துச் சென்றது. அதனால்தான் கும்மாங்குத்துவின் கல்லறையில் உள்ள ஒரே சிலை பம்பரத்துனடையதாக இருந்தது. ஆனால் எனக்கு பம்பரம் விடுவது பம்பரம் விடுவதாக மட்டுமே இருக்க வேண்டும். அதாவது,  ‘பம்பரக்குத்து’ வெளிவந்து சோழநாட்டையே ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருந்த போது நான் இவ்வாறு குறிப்பிட்டேன்: “இந்த விளையாட்டைத்தான் இனிமேல் சோழ நாடு கொண்டாடப் போகிறது; ஆனால் எனக்கு இந்த விளையாட்டு பிடிக்கவில்லை. “பம்பர விளையாட்டு என்றால் இழுப்பு, சாட்டை போன்ற முறைகளில் இடம் பெற்றதைப் போல் சுத்தமான பம்பர விளையாட்டாக இருக்க வேண்டும். நகர்ப்புற ஒப்பனைகளால் அது அலங்கரிக்கப்பட்டிருக்கக் கூடாது. அதேதான் கிரிக்கெட் பந்து வீச்சுக்கும். ஏற்கனவே பம்பர விளையாட்டு கெட்டியான கோந்து மரக் குத்துகளால் உருவாக்கப்பட்டது. அதில் கொண்டு போய் கிரிக்கெட் பந்து வீச்சைக் கலந்தால் சாராயத்தில் பினாயிலைக் கலந்தது போலத்தான் இருக்கும். 2008-இல், டாஸ்மாக் பாரிலிருந்து வெளியில் டீக்கடைக்கு வந்த நான், ‘ஸ்விங் பவுலிங்’ என்ற கிரிக்கெட்டின் அருமையான வித்தை ‘பம்பரக் குத்து ’ என்ற கொடூர ரசாபாசமாக பட்டிதொட்டியெங்கும் பரவியிருப்பதைக் கண்டு மிரண்டு, ஆர்டர் செய்த டீயை ரத்து செய்து விட்டு டாஸ்மாக்குக்கே திரும்பி விட்டேன்.





இந்த இடத்தில் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்து கொள்கிறேன். நான் விளையாடிய விளையாட்டுக்களில் கிரிக்கெட்டை விட பம்பரம் அதிகம். பம்பரத்தை விட ஐஸ்பாய் அதிகம். இதன் பொருள் பம்பரத்தை விட ஐஸ்பாய் பெரிய விளையாட்டு என்பதல்ல. பம்பரம் வாங்க என்னிடம் காசு இல்லை என்பதே.
கும்மாங்குத்து போன்ற சோழர்கள் பம்பரத்தைக் கொண்டாடுவதற்கு மற்றொரு காரணம், பம்பரம் பற்றி எழுதிய குடுகுடுப்பை தானே ஒரு சோழனாக மாறியது.



குடுகுடுப்பைக்கு அவர் கற்ற பம்பர விளையாட்டு, கிரிக்கெட், கில்லி தாண்டு ஆகியவற்றைத் தவிர சமகாலத்து உலக விளையாட்டுடன் எந்தப் பரிச்சயமும் கிடையாது ; மேலும் அவருக்கு உலக விளையாட்டும் தெரியாது. சமகால விளையாட்டும், உலக விளையாட்டும் தெரியாமல் பம்பரம் பற்றி பதிவெழுதினால் இப்படித்தான் ஆகும்.


உதாரணமாக, கபடி விளையாட்டின் கடவுள் என்று சொல்லத்தக்க மாப்பு சொடலையை குப்பை என்று குறிப்பிட்டார் குடுகுடுப்பை. காரணம், தனக்குத் தெரிந்த விளையாட்டைத் தவிர வேறு எல்லாமே குப்பை என்ற அவரது அறியாமையும், ஆணவமும்தான். 

இவரால் குப்பை என்று சொல்லப்பட்ட சொடலையைப் பின்பற்றி அவர் வாழ்ந்த ஆஸ்திரேலியாவில் 40000 பேர் தினமும் பியர் குடிக்கின்றனர். ஆஸ்திரேலிய மக்கள் தொகை - அங்கு வாழும் இந்தியர்கள் மற்றும் இன்ன பிற வெளிநாட்டினரைக் கழித்து விட்டால் - 32000 என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட மனித நேயம் கொண்டவர்களால் தான் நன்றாக பம்பரம் விளையாட முடியும் என்பது என் கருத்து.

கடைசியாக தன் பெயருக்குப் பின்னால் சோழன் என்று பெருமையாகப் போட்டுக் கொள்ளும் இந்த்க் குடுகுடுப்பை, சோழனா? வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் இவர் வாழ்ந்த ஊர், புதுக்கோட்டை சமஸ்தானத்தைச் சேர்ந்தது. பின்னாளில் புதுக்கோட்டை சமஸ்தானம் இந்தியாவுடன் இணைந்து தமிழ்நாடு பல மாவட்டங்களாகப் பிரிக்கப் பட்டபோது தஞ்சாவூர் மாவட்டத்தில் சேர்ந்து விட்டது. அப்படி பின்னால் சேர்ந்ததால் இவர் சோழனாகி விட முடியுமா? (அகநானூறையும் புறநானூரையும் புரட்டி இந்தத் தகவல்களைப் திரட்டித்தந்த பழமைபேசி அண்ணனுக்கும், புதுக்கோட்டை சமஸ்தானத்தைப் பற்றி எழுதிய எம்.எம்.அப்துல்லாவுக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன்) 


புதுக்கோட்டை நாடு பாண்டிய நாட்டிலும் சேராமல் சோழ நாட்டிலும் சேராமல் குறுநிலமாக இருந்தது என்பதற்கு இந்த சங்ககாலப் பாடலே சான்று.


“தென்பாண்டிக்குட்டம் குடங்கற்கா வேண்பூழி பன்றியருவா வதன் வடக்கு நன்றாய சீதமலாடு புனநாடு செந்தமிழ்ச்சேர் ஏதமில் பன்னிரு நாடென்"
என்ற பழம்பாடலில் கூறப்பட்டுள்ள பன்றிநாடே சங்ககாலத்தில் புதுக்கோட்டைப் பகுதிக்கு பெயராக இருந்தது. தமிழ்நாட்டின் பன்னிரு பகுதிகளில் இதுவும் ஒன்று. பாண்டி நாட்டிற்கு வடக்குப் பகுதியாகவும், புனல் நாடு எனப்பட்ட சோழநாட்டிற்குத் தெற்குப் பகுதியாகவும் பன்றிநாடு அமைந்திருந்தது. "ராஜராஜ வள்நாட்டு பன்றியூர் அழும்பில்" என்னும் பிற்காலச் சோழர் காலக்கல்வெட்டு இதனன உறுதிப்படுத்துகிறது.

ஆக, சோழனாகப் பிறக்காத ஒருவர் ரசிகர்களை இழுப்பதற்காக சோழன் என்று தன் பெயருக்குப் பின்னால் போட்டுக்கொள்ளலாமா? இதில் உண்மையான சோழன் “அது சரி” வேறு அவருக்கு டெக்ஸாஸ் கொண்ட சோழன் என்ற பட்டத்தை கொடுத்துள்ளார். இப்போதெல்லாம் பட்டம் கொடுக்கப்படுவதில்லை - வாங்கப் படுகிறது என்பதை இந்த சம்பவமே காட்டுகிறது.

அதெல்லாம் இருக்கட்டும். நான் ஒரு ஏழைப் பொட்டி தட்டி. என் பொட்டி தட்டலுக்கு மாதம் 2500 ரூபாய்தான் சம்பளமாகக் கிடைக்கிறது. இதில் நான் குளிக்கும்போது (மட்டும்) கட்டும் கோவணத்துக்கு 1750 ரூபாய் செலவாகிறது. பின் குளித்துவிட்டு நான் துவட்டும் துண்டுக்கு 500 ரூபாய் ஆகிறது. மீதி இருக்கும் 250 ரூபாயில் நானும் என்னுடன் இருக்கும் இரண்டு எலிக்குட்டிகளும் உண்டு உறங்க வேண்டும். ஆகையால், இனி இந்த சோழ-பாண்டிய/கிரிக்கெட்-பம்பரம் போன்ற கேள்விகளுக்கும்/கட்டுரைகளுக்கும் என் பதிலையும்/எதிர் வினைகளையும் எதிர்பார்ப்பவர்கள் எனக்கு 500 ரூபாயை மணி ஆர்டரிலோ, செக்காகவோ அனுப்பி விட்டு எதிர்பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இதற்கு மேல் இதைப் பற்றி இலவசமாக பேசுவதாக இல்லை. 

22 comments:

Anonymous said...

அடுத்த ரவுண்டு ஆரம்பிச்சாச்சா? சரி எங்களுக்கும் பொழுது போவணுமில்லை.

குடுகுடுப்பை சோழன் பெயர்க்காரணம் இப்பல்ல விளங்குது.

Paleo God said...

எங்க ஒரு ரெண்டு நாள் லீவு போட்டு சேர தேசம் பொய் வரதுக்குள்ள..

அல்லாரும் டைம் மெசின்ல ஏறி எங்கனயோ போயிட்டீங்களே!!!!

Prathap Kumar S. said...

பஞ்சத்துல அடிப்பட்டது சோழர்கள்தானே மன்னா... பாண்டியரான நீங்களும் பஞ்சத்திலா இருக்கிறீர்? ஐயகோ கடவுளே என்ன இது மதுரைக்கு வந்த சோதனை...

சந்தனமுல்லை said...

ஸ்..ப்ப்பா...தமிழ்மணம் பத்தி எரிய அடுத்த டாபிக் ரெடி..ஆனா, பம்பரம் போஸ்டை விட டவுள் எஃபெக்ட் போட்டிருக்கீங்க போல! என்ன இருந்தாலும் கள்ளிக்காட்டு இதிகாசம் எழுதும் எங்கள் குடுகுடுப்பையார் ஒரு சோழர் என்பதில் எங்களுக்கு எந்தவித சந்தேகமும் இல்லை..ஹிஹி

க.பாலாசி said...

ஆகா.. கௌம்பிட்டாங்கய்யா....

ஆரம்பத்துல படிக்கும்போது ரொம்ப சீரியசா படிச்சிட்டேன்... பட் இப்ப ஃபீல் பண்றேன்...

vasu balaji said...

பணம் குடுத்தா என்ன பதவி தருவீங்க? என்னமோ போங்க. ரெண்டு பேரும் அரைகுறை. சாட்டை நூலை சப்பிட்டு சுத்துறது, குத்தறதுக்கு முன்னாடி பம்பரத்து கொண்டையில நாக்கு நுனியால தடவுறது போன்ற டெக்னிகல் விஷயம் தமிழன் கிட்ட இருந்து தான் கிரிக்கட்டுக்கு போச்சிங்கற விஷயம் சொல்லாம சோழன் பாண்டியன் சண்டை நல்லால்ல:))

எல் கே said...

chozha pandiya mannargal tayaraga irungal cheranin padai edupu nigala pogirathu viraivil

அது சரி(18185106603874041862) said...

குடுகுடுப்பையையும் என்னையும் யூஸ் பண்ணி சாரு நிவேதிதா மூக்குல பம்பரம் விட்ட மாதிரி இருக்கே....:0))))

Sanjai Gandhi said...

சாரு சாரு.. ச்ச... சரி சரி விடுங்க... நம்ம கு.கு.ப்பை தானே.. பொழைச்சிப் போகட்டும்.. :)

பழமைபேசி said...

இஃகிஃகி!

குடுகுடுப்பை said...

புதுக்கோட்டை சமஸ்தானமெல்லாம் சோழர்களுக்கு பின்னால் வந்தது. அதுவும் சோழநாடுதான்.

ப்ரியமுடன் வசந்த் said...

முத்துடைத்த நாட்டுல பிறந்துட்டு இப்பிடி காசு கேக்கலாமோ ஓய்...

அது சரி(18185106603874041862) said...

//
புதுக்கோட்டை நாடு பாண்டிய நாட்டிலும் சேராமல் சோழ நாட்டிலும் சேராமல் குறுநிலமாக இருந்தது என்பதற்கு இந்த சங்ககாலப் பாடலே சான்று.
//

ஒத்துக்கிற மாதிரி இல்ல...முதல்ல சங்க காலம்னா எந்த காலம்?? முற்கால சோழர்களா இல்லை விஜயாதித்த சோழர், ஆதித்த சோழர், சுந்தர சோழர், ராஜராஜ சோழர், ராஜேந்திர சோழர் என்று வரும் பிற்கால சோழர்களா???

கவனிக்க வேண்டியது, கரிகாலன் ஆரம்பித்த முற்கால சோழ வம்சம் கிட்டத்தட்ட முற்றிலும் அழிக்கப்பட்டு சோழ நாடு என்பது உறையூர் என்று குறுகிப் போயிருந்த காலம் ஒன்றுண்டு...இடைப்பட்ட காலத்தில் பல்லவர்களும், மதுரை பாண்டியர்களும், களப்பிரர்களும் ஆண்ட காலம் போக, வலுவான அரசமைப்பு இல்லாது பல சிறு நாடுகளும் இருந்த காலங்களும் உண்டு...

ஆக, நீங்கள் சொல்லும் பாடல் (நீங்களே எழுதலியே??) எந்த காலம்? வைரமுத்து காலமாக இருந்தால் கருணாநாடும் அழகிரி தேசமும் தான் உண்டே தவிர சோழ நாடோ பாண்டிய நாடோ இல்லை...

Unknown said...

@சின்ன அம்மிணி - பிறரை மகிழ்வித்திருப்பதன்றி வேறொன்றரியேன் பராபரமே... :))

@ஷங்கர் - அப்பிடித்தான்.. லீவுல போனா சொல்லிட்டுப் போவணும்

@நாஞ்சில் பிரதாப் - என்ன செய்யறது?

@சந்தனமுல்லை - உங்களை மாதிரி ஆளுகளால தான் அவர் சோழன்னு சொல்லிக்கிட்டு திரியுறாரு.. :))

@வானம்பாடிகள் - நீங்க சொல்றது எதுவுமே எனக்குப் பிரியல..

@LK - சேரர்களை எல்லாம் நாங்க ஆட்டைக்கே சேத்துக்கிறது இல்லை..

@அதுசரி - சாதா பம்பரம் இல்லை, பம்பரக்குத்து.. :)

@சஞ்சய்காந்தி - அப்பிடி விட்டுட முடியுமா??

@பழமைபேசி - :)

@குடுகுடுப்பை சோழன் இல்லை தொண்டைமான் - முதல்ல, நீங்க புதுக்கோட்டை சமஸ்தானம்னு ஒத்துக்கிட்டதுக்கு நன்றி. புதுக்கோட்டை என்றைக்குமே சோழ நாட்டின் பகுதி இல்லைன்னு என்னால சாட்சியங்களோட நிரூபிக்க முடியும்.. :))

@பிரியமுடன் வசந்த் - முத்துக்களை எல்லாம் சோழர்கள் களவாடிக்கிட்டுப் போயிட்டாங்களே வசந்து.. :(((

Unknown said...

//அது சரி said...
//
புதுக்கோட்டை நாடு பாண்டிய நாட்டிலும் சேராமல் சோழ நாட்டிலும் சேராமல் குறுநிலமாக இருந்தது என்பதற்கு இந்த சங்ககாலப் பாடலே சான்று.
//

ஒத்துக்கிற மாதிரி இல்ல...முதல்ல சங்க காலம்னா எந்த காலம்?? முற்கால சோழர்களா இல்லை விஜயாதித்த சோழர், ஆதித்த சோழர், சுந்தர சோழர், ராஜராஜ சோழர், ராஜேந்திர சோழர் என்று வரும் பிற்கால சோழர்களா???

கவனிக்க வேண்டியது, கரிகாலன் ஆரம்பித்த முற்கால சோழ வம்சம் கிட்டத்தட்ட முற்றிலும் அழிக்கப்பட்டு சோழ நாடு என்பது உறையூர் என்று குறுகிப் போயிருந்த காலம் ஒன்றுண்டு...இடைப்பட்ட காலத்தில் பல்லவர்களும், மதுரை பாண்டியர்களும், களப்பிரர்களும் ஆண்ட காலம் போக, வலுவான அரசமைப்பு இல்லாது பல சிறு நாடுகளும் இருந்த காலங்களும் உண்டு...

ஆக, நீங்கள் சொல்லும் பாடல் (நீங்களே எழுதலியே??) எந்த காலம்? வைரமுத்து காலமாக இருந்தால் கருணாநாடும் அழகிரி தேசமும் தான் உண்டே தவிர சோழ நாடோ பாண்டிய நாடோ இல்லை.//

சங்ககாலம் அப்பிடிங்கிறது கி.மு 2ம் நூற்றாண்டுல இருந்து கி.பி. 2ம் நூற்றாண்டு வரையில் இருக்கிற காலம். இது திருச்சியை(உறையூரை)த் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த முக்காலச் சோழர் காலம். அப்போதே புதுக்கோட்டை - பன்றி நாடு - தனி நாடாக இருந்து வந்துள்ளது.

பின்னர், தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த பிற்காலச் சோழர் ஆட்சிக்காலத்திலும் புதுகை தனி நாடு என்பதை ராஜராஜன் காலக் கல்வெட்டு உறுதிப் படுத்துகிறது. பின்னர் சோழர்களை தோற்கடித்த பாண்டியர் ஆட்சிக் காலத்திலும் அது தனி நாடே. அதன் பின்னர் வந்த விஜயநகரப் பேரரசாகாட்டும், முகலாயர்கள் ஆட்சிக் காலமாகட்டும் (சரபோஜி), ஆங்கிலேயரின் ஆட்சிக் காலமாகட்டும், புதுகை தொடர்ந்து தனி நாடாகவே இருந்து வந்திருக்கிறது - 1948 மார்ச் 2ம் தேதி வரை.

இத்தனை நாள் புதுகையின் மண்ணில் வசித்து வந்துவிட்டு, இப்போது சோழன் என்ற பெயரைச் சூட்டிக் கொள்வது சரியா அது சரி? நீங்களும் அவருக்கு டெக்ஸாஸ் கொண்ட சோழன் என்ற பெயர் வேறு கொடுத்திருக்கிறீர்கள்... :((

புலவன் புலிகேசி said...

ம் நடத்துங்க

குடுகுடுப்பை said...

புதுக்கோட்டை மண்ணின் வழியே நான் கல்லூரிக்குதான் போயிருக்கிறேன். கரிகாலன் கட்டிய கல்லனை நீர்ப்பாசனப்பகுதியில் வாழ்ந்து, தஞ்சையில் தவழ்ந்த நான் சோழனே சோழனே.

குடுகுடுப்பை said...

பட்டுக்கோட்டையில் பிறந்து மிஸ் ஆயிடுச்சு. (சோழனுக்கும் அடி சறுக்கும்)

vasu balaji said...

பாண்டியன் என்று கட்சி மாறி கூட்டணி அமைத்து கட்சியை குடும்பக்கட்சியாக மாற்றும் முயற்சியை கைவிடக்கோரி மாணவர் போராட்டம் நடைபெறும். சட்டத்துறைச் சோழனின் நடவடிக்கை என்ன?

kudukudupai said...

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88

பித்தனின் வாக்கு said...

// பம்பரத்தை விட ஐஸ்பாய் அதிகம் //
எங்கள் அதிவீர மகா ராஜ, அரிகேசரி பராக்கிரம,தானைத்தலை குடுகுடுப்பையாருக்கு பயந்து ஒளிந்தை ஜஸ்பாய் விளையாட்டு என்று சொன்னால் நாங்கள் நம்புவது எங்கணம். பவுன்சர் என்ற பெயரில் தலையைப் பதம் பார்க்கும் விளையாட்டை வீட எங்களின் குத்து விளையாட்டு மிகவும் அருமை. நன்றி.

கலகலப்ரியா said...

pinnureenga mukilan... kudukuduppai out.. =))