Wednesday, February 3, 2010

உறவுகள் - 07

06 05 04 03 02 01


இதுவரை கதையின் ஒவ்வொரு பாகத்தையும் மஞ்சு, ரமேஷ் மற்றும் சுசிலாவின் பார்வையில் நகர்த்தினேன். அந்தக் காரணத்தால் சில காட்சிகள் திரும்ப திரும்ப வருவதாக அமைய வேண்டியதாயிற்று. இனி நாம் அனைவரும் அந்த வீட்டுக்குள் உட்கார்ந்து நம் பார்வையில் பார்ப்போம் (வேற ஒண்ணுமில்லைங்க. கதை இழுக்குது. வேகமா முடின்னு சில பல எடங்கள்ல இருந்து வார்னிங் வந்திருச்சி. அதான்).
*******************************************************************
அன்று ரமேஷ் வீட்டிலிருந்தே அலுவலக வேலையை செய்தான் (work from homeஐ இதை விட எப்படி சொல்வது?). சரியாக மூன்று மணிக்கு ரமேஷும் மஞ்சுவும் வெளியே செல்ல தயாராகினர். சன் டிவியில் மதிய நாடகம் பார்த்துக் கொண்டிருந்த சுசிலாவும் ராகவனும் முகத்தில் கேள்வி தொக்கி நிற்க அவர்களைப் பார்த்தனர்.


“அப்பா, நாங்க டாக்டர் கிட்ட செக்கப் போயிட்டு வந்துடறோம்”


“சரிப்பா”


“அப்பிடியே ஷாப்பிங் போயிட்டு வெளிய சாப்டுட்டு வந்துடறோம். எங்களுக்காக வெயிட் பண்ண வேண்டாம். நீங்க சாப்டுட்டு தூங்கப் போயிருங்க”


“சரிப்பா. பாத்து மெதுவா காரை ஓட்டு”


“சரிங்கப்பா. வரோம்”


“போயிட்டு வரோம் மாமா. போயிட்டு வரோம் அத்தை” இருவரும் விடை பெற்றுக் கொண்டு காரில் ஏறி புறப்பட்டனர்.


“என்ன சுசிலா, ராத்திரிக்கி என்ன சாப்பாடு?”


“கொழம்பு காலியாயிருச்சிங்க. உப்புமா செஞ்சிக்கலாம்”


“சரிம்மா”
**************************************************************************************
ரமேஷும், மஞ்சுவும் டாக்டரின் அலுவலக வரவேற்பறையில் உட்கார்ந்திருந்தார்கள். டிவியில் ஓபரா வின்ஃப்ரே யாருடனோ பேசிக் கொண்டிருந்தாள். ரமேஷ் அந்த டிவியை சுவாரசியமின்றி வெறித்துக் கொண்டிருந்தான். மஞ்சு நர்ஸ் கொடுத்த ஸ்ட்ரெஸ் கொஸ்டினரை பூர்த்தி செய்து கொண்டிருந்தாள். 


“டாக்டர் வாண்ட்ஸ் டு சீ யூ நவ்” என்ற நர்ஸின் குரல் கேட்டு கலைந்தான் ரமேஷ். 


மஞ்சு எழுந்து உள்ளே சென்றாள். ரமேஷின் செல் அழைத்தது. ஆஃபிஸிலிருந்து. மஞ்சுவை உள்ளே அனுப்பி விட்டு பேசினான். பேசி முடிந்ததும் உள்ளே சென்றான். 


டாக்டர் அல்ட்ரா சவுண்ட் ரிப்போர்ட்டை கையில் வைத்து மஞ்சுவிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். இவன் உள்ளே நுழந்ததும் அவர் அவனை பார்வையிலேயே எரித்தார். 


“என்ன ரமேஷ், மஞ்சுவை சரியா கவனிக்கிறதில்லையா?”


“வொய் டாக்டர். நல்லாத்தான் கவனிக்கிறேன்”


“அவளோட ஸ்ட்ரெஸ் லெவல் இந்தத் தடவை அதிகமாயிருக்கு. ந்யூட்ரிஷன் வேற சரியில்ல போல இருக்கு. பேபி குரோத் எக்ஸ்பெக்டட் லெவல் இல்லை. நத்திங் டு வொர்ரி. பட் இட் ஷுட் நாட் கண்ட்டினியூ”


“ஓக்கே டாக்டர். ஐ வில் டேக் கேர் ஆஃப் மஞ்சு” ரமேஷ் மஞ்சுவை ஓரக் கண்ணால் பார்த்தான். எப்போது வேண்டுமானாலும் அழுதுவிடுவாள் போல இருந்தது.


“ப்ளீஸ் டேக் கேர் ஆஃப் ஹர். இவ்வளவு தூரம் வந்தாச்சி. இன்னும் த்ரீ மந்த்ஸ் தான்”


“ஓக்கே டாக்டர்”


அதன் பிறகு அவர்கள் செய்ய வேண்டியதையெல்லாம் பட்டியலிட்டுக் கொடுத்தார் டாக்டர்.


காரில் ஏறி உட்கார்ந்தனர். வரும்போது அவர்களிடம் இருந்த குதூகலமும் சந்தோசமும் சுத்தமாக வடிந்திருந்தது. மஞ்சு அழத் தொடங்கினாள்.


“ரமேஷ் என்னை ஏன் இப்பிடி கொடும பண்ற?”


“என்னம்மா சொல்ற? நான் என்னக் கொடுமை பண்ணிட்டேன்?”


“உங்கப்பா அம்மாவ எதுக்கு இந்த சிச்சுவேசன்ல கூட்டிட்டு வந்த?”


“உங்கப்பாம்மாவல வர முடியலைலம்மா?”


“அதுனால என்ன. நீயே என்னைப் பாத்திருந்திருக்கலாமே?”


“என்னால மட்டும் முடியலைல மஞ்சு. அதனால தான எங்கம்மா அப்பாவ வரச் சொன்னேன்?”


“நீ என்னை ஏமாத்திட்ட?”


“என்னடா ஏமாத்திட்டேன்?”


“உங்கம்மா என்னை நல்லா கவனிச்சிக்குவாங்கன்னு சொன்ன. ஆனா அவங்க உன்னைக் கூட கவனிக்கிறது இல்லை”


“என்னை எதுக்கு கவனிக்கனும். உன்னைத்தான் கவனிக்கனும்”


கார் கோவிலுக்குள் நுழைந்தது. கோவிலில் சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்து விட்டு மனம் சாந்தமடைந்ததும் கிளம்பினர்.


“ரமேஷ், நாம இன்னிக்கி வெளிய சாப்புட வேண்டாம். வீட்டுக்குப் போயிடலாம்.”


“சரி டா”


“இங்க பாரு ரமேஷ், நீ உங்கம்மாவை எப்பிடி தாங்குன? அவங்க நடக்க முடியலைன்னதும் நயகரா முழுக்க வீல் சேர்ல வச்சித் தள்ளிக்கிட்டே போன. அதை எங்கயாவது அப்ரிசியேட் பண்ணாங்களா? இதுவே எங்கம்மாவ வச்சி என் தம்பி மட்டும் தள்ளிட்டுப் போயிருக்கட்டும், அவ்வளவு தான் எங்கம்மா ஊரெல்லாம் பெருமையா சொல்லிருவாங்க?”


“எங்கம்மா அப்பிடியில்லப்பா. அவங்க நான் செய்ய வேண்டியது கடமைன்னு நினைக்கிறவங்க”


“என்ன கடமை? சரி அதை விடு. நீ நயகராவுக்குக் கூட்டிட்டு வந்திருக்க. அந்த இடத்தையாவது அப்ரிசியேட் பண்ணலாம்ல? உலகத்துல எத்தனை பேருக்கு நயகராவப் பாக்கக் குடுத்து வச்சிருக்கு சொல்லு?”


“அவங்க அப்பிடியெல்லாம் போய் பழக்கப் பட்டவங்க இல்லம்மா. அதுனால அந்த சிறப்பெல்லாம் அவங்களுக்குத் தெரியாது”


“நீ நல்லா உங்கம்மாவுக்கு சப்போர்ட் பண்ணு. எனக்குத் தான் இங்க யாருமே இல்லை” மறுபடியும் கண்ணைக் கசக்கினாள்.


“சரி மஞ்சு அழாத. டாக்டர் உன் கிட்ட என்ன சொன்னாங்க? நீ எதுக்கு இதுக்கெல்லாம் ஸ்ட்ரெஸ் பண்ணிக்கிற?”


“இங்க பாரு ரமேஷ். இப்ப உன் ஒருத்தன் சம்பளம் தான் நம்ம வீட்டுல. உங்கம்மா அப்பாவுக்கு 3000 டாலர் செலவு பண்ணி கூப்பிட்டு வந்தது எதுக்காக? நீ டெய்லி ராத்திரி எனக்கு சமையல் செய்யவா? உங்கம்மாவால அது கூடவா செய்ய முடியாது?”


“செய்ய முடியாதுன்னு சொல்லிட்டாங்கள்ல, அதுக்கு மேல அவங்களை கட்டாயப்படுத்தச் சொல்றியா?”


“அப்பிடி சொல்லல ரமேஷ். அட் லீஸ்ட் உனக்காவது அவங்க சேத்து செய்யலாந்தான?”


“சரி விடு மஞ்சு. இதைப் பத்தியெல்லாம் நாம் இப்ப பேசவேண்டாம்” 


வீடு வந்துவிட்டது. கராஜில் காரை நிறுத்திவிட்டு கதவைத் திறந்து உள்ளே நுழைந்தனர்.


சுசிலா அடுப்பில் உப்புமாவை கிண்டிக் கொண்டிருந்தாள். ராகவன் டைனிங் டேபிளில் தட்டோடு உட்கார்ந்திருந்தார்.


“அம்மா சாப்புட என்ன இருக்கு?”


“என்ன சாப்புட? நீங்க வெளிய சாப்டுட்டு வந்திடுவோம்னு சொன்னிங்க?”


“ஆமாம்மா, சொன்னோம். இப்ப வெளிய சாப்புடலை. என்ன இருக்கு?”


சுசிலா ஒரு கையால் இருக்கமாக உப்புமா செய்த சட்டியின் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு “ஒண்ணும் செய்யலைப்பா. நாங்களே உப்புமாதான் சாப்புடுறோம்”


“அதையே எங்களுக்கும்...” ரமேஷ் முடிப்பதற்குள் இடைமறித்த சுசிலா “ரெண்டு பேருக்குத்தான் செஞ்சிருக்கேன்” என்று வேகமாக டைனிங் டேபிளில் இருந்த இரண்டு தட்டுகளில் சரிபாதியாகப் போட்டு சாப்பிட உட்கார்ந்தாள்.


மஞ்சு அழுகையை அடக்கிக் கொண்டு மேலே படுக்கை அறையை நோக்கி கிட்டத்தட்ட ஓடினாள்.


(தொடரும்)

10 comments:

Unknown said...

இந்த எபிசோட் விறுவிறுப்பா மெட்டி ஒலி பாத்த மாதிரி இருக்கு...

டெம்ப்ளேட் கமெண்ட்டுக்கு.. :))

vasu balaji said...

டெம்ப்ளேட்ல போட்டது போடாட்டியும் அந்த எஃபெக்ட் இருக்கு. :)

அன்புடன் அருணா said...

ம்ம்...அப்புறம்?

Anonymous said...

இந்த எபிசோட் விறுவிறுப்பா இருக்கு.
ஆனா மெட்டி ஒலி மாதிரியான்னு தெரியாது. ஏன்னா அதை நான் பாத்ததில்லை. (நல்லவேளையா அப்ப இந்தியாவை விட்டே கிளம்பிட்டேன் :))

நசரேயன் said...

//இந்த எபிசோட் விறுவிறுப்பா மெட்டி ஒலி பாத்த மாதிரி இருக்கு...

டெம்ப்ளேட் கமெண்ட்டுக்கு..//

ஆமா .. ஆமா

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

வீட்டுக்குள்ள உட்காந்து பாக்கறதா? இந்த விளையாட்டுக்கு நான் வரல :)

ஆமா.. சுசீலா நடக்க முடியாத காலோட இவ்வளவு தூரம் கெளம்பி வந்து சமைச்சுப் போட்டு வீட்டோடயே கெடக்கறது மஞ்சு கண்ணுக்கு தெரியலயா? ரமேஷ் நயகராக்கு தள்ளிட்டு போனது மட்டுந்தெரியுது..அவங்க வைக்கற குழம்புக்கு ரமேஷ் நாலு சப்பாத்தி பண்ணிக்கொடுக்கறது பெரிய வேலையா?

சுசீலா சரியான அட்டென்ஷன் சீக்கிங் பெர்சனாலிட்டியாத் தெரியறாங்க.. அவங்க எதிர்பாக்கறது மருமக கூட உட்காந்து சீரியல் பாக்கனும், மருமக இவங்களுக்கு பரிமாறனும், ஊர் நாயம் பேசனும்.. இதெல்லாந்தான்.. இதல்லாம் விட்டுட்டு நயகராக்கு தூக்கிட்டே போனாக்கூட சந்தோசப்படமாட்டாங்க :) கையில ஏதாவது புக்க வச்சிட்டு சீரியல் அப்ப கொஞ்ச நேரம் அங்க உக்கார மாட்டாங்காளா மஞ்சு?

மறுபடியும் சாப்பாட்டுச் சண்டையா? வேற எதுக்காவது சண்ட போடச்சொல்லுங்க.. :)))))))

சந்தனமுல்லை said...

/அலுவலக வேலையை செய்தான் (work from homeஐ இதை விட எப்படி சொல்வது?)./

அதானே...வீட்டிலிருந்து வேலைன்னா - வீட்டு வேலையை வீட்டிலிருந்துதானே செய்ய முடியும்..ஹிஹி..

சந்தனமுல்லை said...

எந்த சீரியலையும் மிஸ் பண்றது இல்ல...போல!! லொகேஷன் நல்லா இருந்தாலும் கதை ஸ்ட்ராங்கா இல்லையேப்பா...(என் பங்குக்கு கொஞ்சம் விமர்சனம்!)

angel said...

mudiyalaya
hehehe

Anonymous said...

Quarrel over food? That is so cheap