Saturday, August 28, 2010

கிரைம் டெஸ்ட் - கடைசி பாகம்

வாசலில் யாரோ பெல் அடித்தார்கள். போய்ப் பார்த்த செல்வா திரும்பி வந்து, “அருண் அந்த டிரிங்க் ஸ்பெசிமென் கொஞ்சம் குடுக்குறீங்களா? லேப்ல இருந்து ஆள் வந்திருக்காங்க”

அருண் எடுத்துக் கொடுக்க அதை வாங்கிக்கொண்டு போய்த் திரும்பினான் செல்வா. “இப்ப சொல்லுங்க அருண். இது சூசைடாவும் இருக்கலாம் இல்லையா?”

“இருக்காது செல்வா”

“இல்லை அருண். கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. நீத்தாவுக்கு ஏற்கனவே டிப்ரஷன் இருக்கு. இப்போ சர்வேஷ் வேற கல்யாணம் செஞ்சிக்கப் போறான்னு மனசுடைஞ்சி சூசைட் செஞ்சிருக்கலாமே? லாஜிக் இருக்கே?”

“சரி செல்வா. நான் உங்க போக்குலயே கேக்குறேன். அப்பிடின்னா எதுக்கு கேஸைத் திறந்து விட்டு சாகணும்? விஷம், தூக்கு, துப்பாக்கினு பல ஆப்ஷன் இருக்கும்போது?”

“இன்ஷுரன்ஸ்?”

“இன்ஷூரன்ஸா? இன்ஷூரன்ஸ் பணம் வந்து நீத்தாவே அதை அனுபவிக்கப் போறாங்களா? இந்த லாஜிக் எல்லாம் வீட்டைக் கொளுத்திட்டு ஆக்ஸிடெண்டுன்னு சொல்ற இடத்துல தான் வொர்க் அவுட் ஆகும் செல்வா. அதோட உங்க போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் டிப்ரஷனுக்கு எடுத்துக்கிற டேப்ளட் ஓவர் டோஸானதாலும், ஆல்கஹால் மிக்ஸ் ஆனதாலும் அதிகப்படியான தூக்கத்துக்கு ஆழ்த்தப்பட்டிருக்கிறதா சொல்லுது. அப்போ 11 மணிக்கு அவங்களே எழுந்து அந்த பைப்பத் திறந்து விட்டுட்டு மறுபடி தூங்கிட்டாங்களா?”

செல்வா தோல்வியை ஒத்துக் கொண்டது அவன் தலையைத் தொங்கப் போட்டதில் தெரிந்தது. “அப்போ என்னதான் சொல்ல வர்றீங்க அருண்?”

“ஓக்கே. என்னோட கெஸ்ஸைச் சொல்லிடறேன்”

சோஃபாவில் சம்மணம் போட்டு உக்கார்ந்து கொண்டு, “சர்வேஷை முந்தின நாள் ஈவினிங் கிரவுண்ட்ல போய் நீத்தா மீட் செஞ்சிருக்கணும். அங்க சர்வேஷோட சண்டை போட்டிருக்கணும். பயந்து போன சர்வேஷ் நீத்தாவைத் தீத்துட முடிவு செஞ்சி அவகிட்ட நைச்சியமாப் பேசி அவ வீட்டுக்கு வந்திருக்கணும். வந்த எடத்துல அவனோட ஸ்பெஷல் காக்டெயிலை மிக்ஸ் செஞ்சி அதுல அவளோட தூக்க மாத்திரையை கலந்து கொடுத்துருக்கணும். அடுத்த நாள் அவன் பேட்டிங் செஞ்சிக்கிட்டு இருக்கிற நேரத்துல யாரையோ வச்சி எப்பிடியோ இந்த பைப்பைத் திறந்து விட ஏற்பாடு செஞ்சிருக்கணும். அந்த யாரோ எப்பிடியோ தான் இங்க நாம சால்வ் பண்ணனும். செஞ்சிட்டா சர்வேஷை வளைச்சிடலாம்”

“ம்ம்.. நீங்க சொல்ற லாஜிக் நல்லாத்தான் இருக்கு. ஆனா ஆதாரம் எதுவுமே இல்லாம.. இப்ப சர்வேஷ் ஈவிங்க் வந்து இங்க ட்ரிங்க் குடிச்சிட்டுப் போயிருந்ததை நிரூபிச்சாக் கூட அவன்தான் இந்தக் கொலையை செஞ்சான்னு நாம ப்ரூவ் பண்ண முடியாதே?”

“கரெக்ட் செல்வா. கண்ணு முன்னாடி கொலைகாரன் இருக்கான். ஆனா அவனை அரெஸ்ட் செய்ய முடியலை”

“ஸீ அருண். ஐ யம் நாட் கோயிங் டு க்ளெய்ம் நீத்தாஸ் பாடி அண்டில் யு சால்வ் த கேஸ்” ப்ரீத்தா ஆணித்தரமாகச் சொன்னாள்.

அருண் பரிதாபமாக அவளைப் பார்த்து, “ஐ வில் ட்ரை மை பெஸ்ட்” என்று சொன்னான்.

“இப்போ நாம வெளிய போய் ஏதாவது சாப்டுட்டு வருவோம். அதுக்குள்ள லேப் ரிசல்ட்ஸ் வந்துடும்.” செல்வா சொன்ன யோசனை சரியாகப் படவே மற்ற இருவரும் கிளம்பினர்.

**************************************

டிவியில் இன்னமும் நீத்தாவின் மரணச் செய்தி ஓடிக்கொண்டிருந்தது. மாடலிங் உலகின் முக்கியப் புள்ளிகள் அனைவரையும் ஓடிப் பிடித்து இரங்கல் செய்தி வாங்கிக் கொண்டிருந்தார்கள் மைக் ஏந்திய நிருபர்கள். அதில் சர்வேஷையும் கேட்டுக் கொண்டிருந்தார் ஒரு வட இந்திய நிருபர்.

“இந்தச் செய்தி உண்மையிலேயே ஒரு பெரும் அதிர்ச்சிச் செய்தி. நல்ல நண்பர் அவர். அவரது பிரிவு மாடலிங் உலகத்துக்கு ஒரு பெரும் இழப்பு” என்று சம்பிரதாயமாகப் பேசிக்கொண்டிருந்தான் சர்வேஷ்.

“நீங்கள் அவரை கடைசியாகப் பார்த்தது எப்போது?”

“ம்ம்.. ஒரு மாதமிருக்கும். ஒரு ப்ராடக்ட் லாஞ்சின் போது அவர் ரேம்ப் வாக்கிங்கிற்காக வந்திருந்தார். அப்போது சந்தித்தோம்”

அருண் டிவியிலிருந்து பார்வையைத் திருப்பி “மீன் வலையில் சிக்குகிறது. இப்போது டி.வியில் அவனே சொல்லியிருக்கிறான். பார்த்து ஒரு மாதமாகிறது என்று. ஆனால் நேற்று முன் தினம் இங்கே வந்ததற்கு அந்த ட்ரிங்க் ஆதாரம் இருக்கிறது”. ப்ரீத்தாவும் செல்வாவும் ஆமோதித்தார்கள்.

மூவரும் இப்போது நீத்தாவின் படுக்கையறையில் இருந்த 60 இன்ச் எல்.சி.டி டிவியில் என்.டி.டி.வி சேனலைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ப்ரீத்தா நீத்தா இறந்து கிடந்த அந்த பெட்டில் அமர்ந்து கால் மடக்கி கைகளால் சுற்றிக் கட்டிக் கொண்டு முழங்கால்களின் மேல் முகவாயைப் பதித்து அமர்ந்திருந்தாள். அருண் அந்தக் கட்டிலுக்கு அருகில் தரையில் அமர்ந்து கட்டிலில் முதுகு சாய்த்திருந்தான். செல்வா கட்டிலின் இன்னொரு பக்கம் ஓரமாக அமர்ந்து பக்கவாட்டில் டிவியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

செல்வாவின் செல்பேசி ஒலித்தது. எடுத்து பேசினான். அவன் முகம் மலர்ந்தது. அருணுக்கு எதோ நல்ல சேதி என்று புரிந்தது. செல்வாவே சொல்லட்டும் என்று அமைதியாயிருந்தான்.

“அருண். குட் நியூஸ். லேப் ரிசல்ட்ஸ் வந்துடுச்சி. நீங்க கெஸ் பண்ணினது சரி. நீத்தா குடிச்ச டிரிங்க்ல தான் அந்த டிப்ரஷன் டேப்லெட்ஸ் மிக்ஸ் ஆகியிருக்கு. அதே மாதிரி அது மார்ட்டினி, மார்கரிட்டா மிக்ஸ்ட் காக்டெயில் தான்”

அருண் எதிர்பார்த்த செய்திதான் என்பதால் அவன் முகம் பெரிதாக சந்தோசத்தைப் பிரதிபலிக்கவில்லை. ப்ரீத்தா அரைகுறையாகப் புரிந்தாலும் கட்டிலில் இருந்து துள்ளிக் குதித்து இறங்கி செல்வாவைக் கட்டிப் பிடித்து அவன் கன்னத்தில் ஒரு முத்தத்தைப் பதித்தாள்.

“கூல் கூல்” என்று அவளை விலக்கிச் சிரித்தான் செல்வா. “த கேஸ் இஸ்ண்ட் சால்வ்ட் யெட்”

அப்போது தரையில் இருந்த அந்த ரோபோ பொம்மை இயங்கத் தொடங்கியது. மெதுவாக கால்களையும் கைகளையும் அசைத்து முன்னேறியது. மூன்றடி நடந்ததும் சட்டென்று நின்றது.

அதிர்ச்சியில் துள்ளி எழுந்தான் அருண். மூவரும் அந்த பொம்மையையே பார்த்துக் கொண்டு பேச்சு வராமல் நின்றிருந்தார்கள். வாசல் மணி ஒலித்தது.

“ஐ ல் கெட் இட்” என்று ஓடினான் செல்வா.

அருண் அந்த பொம்மையின் அருகில் மண்டியிட்டு அதைத் தொடாமல் ஆராய்ந்தான். அது ஒரு ரிமோட் கண்ட்ரோல்ட் பொம்மை என்பதை அதன் முதுகுப்புறத்தில் இருந்த ஏரியல் காட்டிக் கொடுத்தது. அது ஒரு புத்தம் புதிய பொம்மை. அதன் விலைப்பட்டியல் கூட அப்படியே இருந்தது. அதைத் தவிர அதில் வேறு விவரம் இல்லை.

வாசலுக்குப் போன செல்வா திரும்ப உள்ளே வந்தான். “FEDEX டெலிவரி பாய். அந்தப் பார்சலைத் திரும்ப கொண்டு வந்தான். நீத்தா இறந்ததைச் சொன்னதும் திரும்பிப் போய்விட்டான். அனுப்பியவருக்கே அந்த பார்சல் திரும்பி விடும்”

“செல்வா. கெட் தட் டெலிவரி பாய். ஹி இஸ் த கய்” அருண் உச்சக் குரலில் கத்தினான். செல்வா அடுத்த நொடி வாசலை நோக்கி ஓடினான்.

ப்ரீத்தா ஒன்றும் புரியாமல் கையை நீட்டி கத்திக் கொண்டிருக்கும் அருணையும் ஓடிக் கொண்டிருக்கும் செல்வாவையும் மாறி மாறி பார்த்தாள். அருணும் செல்வாவின் பின்னாலேயே நிதானமாக அதே சமயம் வேகமாக நடையை எட்டிப் போட்டான். ப்ரீத்தா அவனைத் தொடர்ந்தாள்.

இருவரும் வாசலை நெருங்குவதற்கும் அருண் அந்த டெலிவரி பாயோடு வருவதற்கும் சரியாக இருந்தது. வாசலில் இருந்த செக்யூரிட்டிகளும் தபதப வென ஓடி வந்து கொண்டிருந்தார்கள்.

செல்வா அந்த டெலிவரி பாயின் சட்டைக் காலரை கொத்தாகப் பிடித்து கிட்டத்தட்ட இழுத்து வந்து கொண்டிருந்தான். அந்த ஆளின் கண்ணில் பயமும், அதிர்ச்சியும் அறியாமையும் சடுகுடு ஆடிக்கொண்டிருந்தன. “க்யோன் சாப்.. சோட்தோ முஜே சாப்” என்று கத்திக் கொண்டே இருந்தான்.

“செல்வா. அவனை விடுங்க. அவன் மேல தப்பு இல்லை. அவன் கைல இருக்கிற பார்சல் தான் தப்பு”

“என்ன சொல்றீங்க அருண்” செல்வாவின் கை அந்த ஆளின் காலரை தன்னிச்சையாக ரிலீஸ் செய்தது.

“யெஸ். ஐ வில் ப்ரூவ் இட்” என்று சொல்லிக் கொண்டே அந்த பார்சலை எடுத்து ப்ரீத்தாவிடம் கொடுத்தான்.

“ப்ரீத்தா. வெயிட் ஹியர். மீ அண்ட் செல்வா வில் கோ இன்சைட் அண்ட் ஐ வில் கிவ் யூ எ சிக்னல். சிக்னல் கிடைத்ததும் நீங்கள் நீத்தாவின் படுக்கையறையின் ஜன்னலுக்கு அருகில் இந்தப் பார்சலோடு வாருங்கள். ஓக்கே” என்று சொல்லிவிட்டு செல்வாவை இழுத்துக் கொண்டு நீத்தாவின் படுக்கையறைக்குள் நுழைந்தான்.

ப்ரீத்தா ஒன்றும் புரியாமல் அந்தப் பார்சலோடு நின்றிருந்தாள்.

உள்ளே போன அருண், செல்வாவைப் பார்த்து, “செல்வா, அந்த ரோபோ பொம்மையையே பாருங்க” என்று சொல்லிவிட்டு இரண்டு விரல்களை வாய்க்குள் நுழைத்து ஒரு விசிலைப் பிறப்பித்தான்.

ஜன்னல் பக்கம் ப்ரீத்தா வரவும் அந்த ரோபோ பொம்மை நகர ஆரம்பித்தது. மறுபடி ஒரு விசில் கொடுக்கவும் ப்ரீத்தா வாசலுக்குத் திரும்பினாள். ரோபோ நின்று போனது.

செல்வா புரியாமல் அருணின் முகத்தைப் பார்த்தான். அருண் அவனது குழப்பத்தை சில விநாடிகள் ரசித்துவிட்டு, “செல்வா. சர்வேஷ் இஸ் இண்டலிஜெண்ட்”

“இருக்கட்டும் அருண். எனக்கு ஒண்ணும் புரியலை. கொஞ்சம் எக்ஸ்பிளெயின் பண்ணுங்க”

“ஓக்கே” தரையில் ஒரு இடத்தைக் காட்டினான். “ரோபோ முதல்ல இந்த இடத்துல தான் இருந்தது. அது இருக்கிற இடத்துல இருந்து அந்த கேஸ் பைபோட குழாய்க்கு எவ்வளவு தூரம்னு பாருங்க. ஒரு மூணு அடி இருக்குமா?”

“இருக்கும்” செல்வாவுக்கு இன்னும் குழப்பம் தீரவில்லை.

“இப்போ நாம வெளிய போகலாம்” அருணை குழப்பத்துடனே பின் தொடர்ந்தான் செல்வா.

வெளியே வந்து ப்ரீத்தாவின் கையில் இருந்த அந்தப் பார்சலை வாங்கிப் பிரித்துக் கொண்டே, “இப்போ என்னோட கெஸ் ரைட்னா. உள்ள அந்த ரோபோவோட ரிமோட் கண்ட்ரோல் இருக்கும் பாருங்க”. பிரித்து முடிக்க அந்த ரோபோவின் ரிமோட் கண்ட்ரோல் முன்னால் நகர்த்தும் ஜாய் ஸ்டிக்கின் மேல் ஒரு பேக்கிங் டேப் சுற்றப்பட்டு அது அழுந்திய நிலையிலேயே வைக்கப்பட்டு இருந்தது.

செல்வா ஆச்சரியம் நிரம்பிய கண்களோடு அருணைப் பார்த்தான்.

அருண் பைக்குள் இருந்து ஒரு ஜிப்லாக் பை எடுத்து அந்த ரிமோட்டை அதற்குள் வைத்து பத்திரப் படுத்தினான். அதை ஹாலில் வைத்து விட்டு, மறுபடியும் பெட்ரூமுக்குள் நுழைந்தான். இருவரும் அவனைப் பின் தொடர்ந்தனர்.

கையில் ஒரு மெல்லிய க்ளவுஸை மாட்டிய அருண், அந்த ரோபோ பொம்மையைக் கையில் எடுத்து தரையில் இருந்த அந்த கேஸ் குழாயின் திறப்பானில் முட்டி நிற்குமாறு வைத்தான்.

பின் வெளியே போய் அந்த ரிமோட்டை எடுத்துக் கொண்டு உள்ளே நுழையவும் அந்த ரோபோ குழாயின் திறப்பானை தள்ளிக் கொண்டு முன்னால் நகர்ந்தது. கேஸ் திறக்கப்படவும் எல்.பி.ஜியின் வாசம் நாசியைத் துளைத்தது. செல்வா ஓடிச் சென்று அந்தக் குழாயை மூடினான்.

செல்வாவுக்கும் தெளிவானது.

“இப்போ அந்த A-7ல இருக்கிற பார்சலைப் பற்றியும் விசாரியுங்க. அதையும் சர்வேஷ் தான் அனுப்பி இருக்கணும். அது அவங்க எதிர்பார்க்காத பார்சலா இருக்கும்”

வெளியே வரவும் அந்த FEDEX டெலிவரி பாயே அந்தத் தகவலையும் உறுதி செய்தான். A-7ல் இருந்து அவர்களின் அலுவலகத்துக்குத் தொடர்பு கொண்டு அந்த பார்சல் யார் அனுப்பியது என்றே தெரியாததால் பிரிக்காமல் வைத்திருப்பதாகவும் அதை திரும்பி வாங்கிக் கொள்ளும்படியும் சொன்னதாகச் சொன்னான்.

அனுப்பியவர் அட்ரஸ் யார் என்று பார்த்ததில் யாரோ ஒருவருடைய பெயர் போட்டிருந்தது. “இது போலி அட்ரஸாகத்தான் இருக்கும்” அருண் ஆணித்தரமாகச் சொன்னான். பேமெண்ட் மோட் பார்க்க கிரெடிட் கார்டால் பணம் செலுத்தப்பட்டிருக்கிறது என்று தெரிந்ததும் அருண் செல்வாவைப் பார்க்க, செல்வா, கேஸ் க்ளோஸ்ட் என்று பெரிதாகச் சிரித்தான்.

ப்ரீத்தா மறுபடி அருணைக் கட்டிப் பிடித்து இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி முத்தம் கொடுத்தாள்.

அருண் அவளை விலக்கி செல்வாவைப் பார்த்துச் சொன்னான், “என்ன எனக்கு ஒரே வருத்தம், இந்தியாவின் ஒரு சிறந்த பேட்ஸ்மெனை இனி மைதானத்தில் பார்க்க முடியாது என்பதுதான்” என்று சொல்ல செல்வாவும் ப்ரீத்தாவும் சிரித்தார்கள்.

(அப்பாடா.. ஒரு வழியா முடிஞ்சது)

கிரைம் டெஸ்ட் - 3

அந்த டைனிங் டேபிளில் இருந்த இரண்டு கோப்பைகளையும் நோக்கி கைகாட்டிக்கொண்டே அருண் சொன்னான் - “இட் லுக்ஸ் லைக் ஷி ஹேட் எ கெஸ்ட் த டே பிஃபோர்”

செல்வாவும் ப்ரீத்தாவும் டேபிளிலிருந்து அருணுக்கு பார்வையை பேன் செய்தார்கள். அருண் தொடர்ந்தான், “அண்ட் ஐ நோ ஹூ ஹி குட் பி”

இருவரும் பேசாமல் ஒரு கேள்விக்குறியோடு அருணின் முகத்தை ஏறிட்டார்கள். “நான் யூகிப்பது சரியாயிருந்தால் அது சர்வேஷ்”.

ப்ரீத்தா உடனே சந்தோசமாக, “ஐ நியூ இட்” என்று கத்தினாள்.

செல்வா - “எப்பிடி அருண் சொல்றீங்க?”

“நான் இந்த ட்ரிங் குடிச்சிருக்கேன் செல்வா. நேத்துத்தான் ப்ளேயர்ஸ் பார்ட்டியில. இது சர்வேஷ் இன்வெண்ட் செஞ்ச ட்ரிங்க். மார்ட்டினியையும் மார்கரெட்டாவையும் மிக்ஸடிச்சது. லேப்ல குடுங்க. கன்ஃபர்ம் பண்ணிடலாம்”

“ஆனா அருண், இதை மட்டும் வச்சி சர்வேஷ் தான் கொலை செஞ்சார்னு சொல்ல முடியாதே? அவர் வந்ததாவே வச்சிக்கிட்டாலும் அவர் வந்தது ஈவினிங் தானே? ஆனா நீத்தா இறந்து போனது மதியம் பன்னெண்டு மணிக்கில்லையா?”

“கரெக்ட் தான் செல்வா. நான் இன்னும் சர்வேஷ்தான் கொலைகாரன்னு சொல்லலையே?”

“அப்ப இது கொலைங்கிற முடிவுக்கு வந்துட்டீங்களா?”

“இன்னும் இல்லை செல்வா. அதுக்கு முன்னாடி, ஒரு கேள்வி. அதைக் கேக்குறதுக்கு முன்னாடி நீத்தா இறந்து கிடந்த பெட்ரூமுக்குள்ள போவோம்”

அருண் பையிலிருந்து இரண்டு சின்ன பாட்டில்களை எடுத்து இரண்டு கோப்பைகளிலும் இருந்த திரவத்தை நிரப்பினான். அந்த பாட்டில்களை பத்திரமாக சீல் செய்து தன் பேண்ட் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டான்.

“செல்வா உங்க ஆஃபிஸ் போனதும் இதை லேப்ல குடுத்து அனலைஸ் செய்ய சொல்லணும்”

“ஓக்கே அருண்” அருணைப் பின் தொடர்ந்து இருவரும் அந்த பெட்ரூமுக்குள் நுழைந்தனர்.

தலையை ஒரு ரேடாரைப் போல இடம் வலதாய் திருப்பி கண்களால் அந்த அறையை மீண்டும் துழாவினான். அருணின் பார்வை ஃபயர் ப்ளேஸுக்கு அருகில் தரையில் இருந்த குழாயின் கைப்பிடியில் நிலை கொண்டது.

“செல்வா நேத்து நீங்க இந்த அறைக்குள்ள வரும்போது இந்த குழாய் திறந்திருச்சா இல்லை மூடியிருந்துச்சா?”

“எதுக்குக் கேக்குறீங்க?”

“இல்லை. இது வழியாத்தான் கேஸ் லீக் ஆனதா இல்லை வேற எங்கயாவது லீக் இருந்ததாங்கிறதுக்காகத்தான்”

“திறந்துதான் இருந்தது அருண். வேற லீக்கேஜ் எதுவுமில்லை. உள்ள போட்டிருக்கிற மரம் எல்லாம் எரிஞ்சி வேற எதுவும் எரிக்க இல்லாததால தீ அணைஞ்சிருக்கணும். கேஸ் லீக் ஆகியிருக்கணும்”

“நோ செல்வா. தட் டஸ்ண்ட் சீம் லைக் எ பாஸிபிளிட்டி. இந்த ஃபயர் ப்ளேஸை நல்லா பாருங்க. உள்ள இருக்கிறது மரம் மாதிரி ஒரு செட்டப்தான். அது எரியாது. கேஸ்தான் எரியும். அந்த மரம் மாதிரி இருக்கிறது தீயில செவப்பு கலரா மாறி மரம் எரியிற மாதிரி ஒரு ஃபீல் குடுக்கும். ஒரு நிமிசம்”

அருண் சுற்றும் முற்றும் பார்த்து அந்த ஃபயர் ப்ளேஸின் மேல் இருந்த தடுப்பில்  ஒரு லைட்டரை எடுத்து, கேஸ் குழாயைத் திறந்து பற்ற வைத்தான். குப்பென்று பற்றிய தீயில் அந்த மரம் மாதிரியான செட்டப் உண்மையான மரம் எரிவதைப் போல தோற்றமளித்தது.

“ஸீ. நான் சொன்னேனே. இந்த தீ அணைய வாய்ப்பே இல்லைன்னு நினைக்கிறேன்”

“ம்ஹ்ம்... லுக்ஸ் லைக் தட்” செல்வா முகவாய்க்கட்டையை சொறிந்தான்.

“உங்க ஆஃபீஸ்க்கு ஃபோன் செஞ்சி யாரையாவது விட்டு இந்த ஃப்யர் ப்ளேஸ் மேனுஃபாக்ச்சரர்கிட்ட எரியிற தீ தானா அணைஞ்சி போக வழி எதுவும் இருக்கான்னு கன்ஃபர்ம் பண்ண சொல்லுங்க”

“ஓக்கே அருண்” என்ற செல்வா செல்ஃபோனை எடுத்து நம்பரை ஒத்தி மராத்தி கலந்த இந்தியில் ஆணைகளைப் பிறப்பித்தான்.

மூவரும் மீண்டும் ஹாலுக்குச் சென்றனர். அங்கே இருந்த சோஃபாவில் உட்கார்ந்த அருண், சிகரெட் பாக்கெட் எடுத்து நீத்தாவிடம் நீட்டினான். செல்வா ஜாக்கிரதையாக, “இங்க வேணாம் அருண். இன்னும் காத்துல கேஸ் வாசம் இருக்கு. வெளிய போயிடலாம்”

மூவரும் எழுந்து வெளியே வந்தனர். ஆளுக்கு ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து நுரையீரலை நிரப்பி நிக்கோட்டினால் கோட்டிங் கொடுத்தனர். அப்போது வீட்டு வாசலின் அருகில் ஒரு பச்சை எழுத்துகள் நிரம்பின காகிதம் ஒன்று கீழே கிடந்ததைப் பார்த்தான் அருண்.

சிகரெட்டை வாயில் வைத்துக் கொண்டே வாசலை நோக்கி நடந்து அந்த காகிதத்தை கையில் எடுத்துப் பார்த்தான். செல்வா அருண் எதையோ பார்ப்பதைப் பார்த்துவிட்டு  “என்ன அருண் அது?” என்று கேட்ட வண்ணம் வாசலுக்கு நடந்தான்.

“FEDEX டோர் டேக். நேத்து பதினோரு மணிக்கு வந்திருக்கான். இது எப்பிடி விசாரணையில விட்டுப் போச்சி?”

செல்வா பதட்டமானான். “இந்த டேக் நேத்து எங்க கண்ணுல படவே இல்லை. அதோட இதை ஒரு விபத்துங்கிற கண்ணோட்டத்துலயே இருந்ததால நாங்க யாரும் வேற எதையும் யோசிக்கலை. இது கண்ணுல பட்டிருந்தா கண்டிப்பா நான் யோசிச்சிருப்பேன்” செல்வாவின் குரலில் குற்ற உணர்ச்சி மேலோங்கியிருந்தது.

“எனி வே. லெட்ஸ் நாட் வேஸ்ட் திஸ் லீட் நவ். பெட்டர் லேட் தேன் நெவர்” என்றவாறு அந்த டேக்கோடு வாசலில் இருந்த செக்யூரிட்டியை நோக்கி நடந்தான்.

*****************************
“நமஸ்தே சாப்” வாசலில் இருந்த செக்யூரிட்டி செல்வாவின் யூனிஃபார்மைப் பார்த்ததும் எழுந்து நின்று சல்யூட் ஒன்றைப் பிரயோகித்தான். ஹிந்தி அவ்வளவாகப் பரிச்சயமில்லாததால் செக்யூரிட்டியிடம் விசாரிப்பதை செல்வாவிடம் விட்டு விட்டான் அருண்.

“அருண், FEDEX காரன் நேத்து வந்தானாம். லெட்டர்ஸ் எல்லாம் குடுத்துட்டு ரெண்டு பார்சல் மட்டும் ஹேண்ட் ஓவர் டு அட்ரஸீன்னு இருந்ததால அப்பார்ட்மெண்டுக்கே போய் குடுக்கப் போயிட்டானாம். இது சகஜமா நடக்கிறது தானாம். அப்பிடி வாங்க யாருமில்லைன்னா இந்த மாதிரி டோர் டேக் விட்டுட்டுப் போவாங்களாம். மூணு அட்டெம்ப்டுக்கு அப்புறம் அந்த பார்சலை அனுப்பினவங்களுக்கே திருப்பி அனுப்பிருவாங்களாம்”

“இன்னைக்கி FEDEX டெலிவரி வந்தாங்களான்னு கேளுங்க?”

“இன்னைக்கி இன்னும் வரலியாம்”

“ஓ.. நேத்து எந்த எந்த வீட்டுக்கு டெலிவரி குடுக்க போனாங்கன்னு எதுவும் இவங்க லாக் பண்ணியிருக்காங்களா?”

“இல்லை. ஆனா சிசிடிவியில ரெகார்ட் செய்வாங்களாம்”

“குட் சிசிடிவி இருக்கா? அப்பிடின்னா முந்தின நாள் சர்வேஷ் வந்திருந்தா அதுவும் சிசிடிவியில ரெக்கார்ட் ஆகியிருக்குமே?”

“இல்லை அருண். இவங்க எல்லா நேரமும் ரெக்கார்ட்/மானிட்டர் செய்யறதில்லை. நைட்ல மட்டும்தான். இந்த மாதிரி கொரியர், பிட்ஸா மாதிரி டெலிவரி பாய்ஸ் வரும்போது சிசிடிவி ஆன் செஞ்சி மானிட்டர் செய்வாங்களாம். முன்னது ப்ரைவசிக்காக. பின்னது செக்யூரிட்டிக்காக”

“ஓ.. எனி வே. அந்த கொரியர் டெலிவரி பாய் என்ன செஞ்சான்னு பாப்போமே”

மூவரும் ரெக்கார்ட் ஆகியிருந்த கேசட்டை ரீவைண்ட் செய்து பார்த்தனர்.

முதலில் A-7க்குப் போய் வாசலில் பெல் அடித்து திறந்து எட்டிப் பார்த்த பெரியவரிடம் அந்தப் பார்சலைக் கொடுத்து கையெழுத்து வாங்கிக்கொண்டு, நீத்தாவின் B-4க்கு நடந்து வந்தவன் வாசலில் நின்று பெல்லடித்தான். மூன்று முறை முயற்சித்துவிட்டு பையில் இருந்து டோர் டேக் எடுத்து எழுதி கைப்பிடியில் மாட்டிவிட்டு திரும்பி நடந்தான். வேறு எதுவும் நடக்கவில்லை.

பார்த்து முடித்த மூவரின் முகத்திலும் ஏமாற்றம் அப்பட்டமாகத் தெரிந்தது.

அருண் செக்யூரிட்டியிடம், விசிட்டர் லாக் என்று எதாவது இருக்கிறதா என்று கேட்டான். செக்யூரிட்டி எடுத்துக் கொடுக்க, அதில் இன் டைம் மட்டும் இருந்தது. அவுட் டைம் இல்லை. என்ன விவரம் என்று விசாரிக்க, விசிட்டர் யாராவது வந்தால் அப்பார்மெண்டுக்குத் தகவல் தருவோம் என்றும், அங்கிருந்து யாராவது வந்துதான் விசிட்டரை அழைத்துப் போகவேண்டுமென்றும் சொன்னான். அதனால் திரும்பிப் போவோரை கணக்கெடுப்பதில்லை என்றும் சொன்னான். நீத்தாவின் அப்பார்மெண்டுக்கு முந்தின நாள் யாரும் வந்ததாக எதுவும் லாக் இல்லை. அப்பார்மெண்ட் ரெசிடெண்டே யாராவது கெஸ்டை காரில் அழைத்து வந்தால் அவர்களை லாக் செய்வதில்லை என்றும் சொன்னான்.

இந்த சந்தும் முட்டுச் சந்தாகப் போய் விடவே ஏமாற்றத்தோடு அப்பார்மெண்டை நோக்கி நடை போட்டனர்.

ஹாலில் இருந்த சோஃபாவில் அயர்ச்சியாக விழுந்த அருணின் முகத்தில் கவலைக் கோடுகள். “எல்லாம் டெட் எண்டாவே இருக்கே”

“அதான் சொன்னே அருண். இது ஆக்சிடெண்ட் தான்”

“ஆனாலும் எனக்குள்ள ஒரு இண்ட்யூஷன் இது கொலையா இருக்கலாமோன்னு சொல்லுது”

பேசிக்கொண்டேயிருக்கையில் செல்வாவின் செல்ஃபோன் ஒலித்தது. எடுத்துப் பேசிய செல்வா அருணிடம், “அருண் யுவர் கெஸ் இஸ் கரெக்ட். அந்த ஃப்யர் ப்ளேஸ் ஃப்யர் அணைஞ்சி போக வாய்ப்பே இல்லையாம். கேஸ் கட் ஆனாத்தான் அணையுமாம்”

“ஐ கெஸ்ட் சோ. அப்ப இது முதல் நாள் ராத்திரி திறந்து விட்ட பைப் இல்லை. சம்பவத்தன்னிக்கு 11:00 மணிக்கு மேலதான் யாராவது திறந்து விட்டிருக்கணும். இல்லையா?”

“அப்பிடித்தான் தெரியுது”

“ஆனா பூட்டியிருக்கிற வீட்டில யாரு வந்து திறந்து விட்டிருக்க முடியும்?”

“ஒரு வேளை இப்பிடியிருக்குமோ அருண்?”

“எப்படி?”

“நீத்தாவே திறந்து விட்டுட்டுப் படுத்திருந்தா? சூசைட்?”


(அடுத்த பாகத்தில் முடியும்)

Thursday, August 26, 2010

கிரைம் டெஸ்ட் - 2

வாசலில் நின்றவளைப் பார்த்ததும் அதிர்ச்சியில் மூச்சடைத்துவிட்டது அருணுக்கு.

அந்தக் காலை வேளையிலும் லேசான மேக்கப் அவள் கன்னத்தில் தெரிந்தது. உதடுகளிலும் மெல்லிய லிப்ஸ்டிக் பூச்சு. கண்கள் அழுததினால் வீங்கியிருந்ததை கன்சீலர் போட்டு மறைக்க முயற்சி செய்திருந்தாள். லிஃப்டில் ஏறிவரும் போது போட்ட அவசர மேக்கப் என்றாலும் அதில் ஒரு ஒழுங்கு இருந்தது.

“நீ.. நீ.. நீத்தா...” அருண் அவளைப் பார்த்து இழுத்தான்.

“மே ஐ கம் இன்?” குரல் லேசாக உடைந்திருந்தது.

அருணின் உடல் அனிச்சையாகத் திரும்பி அவளுக்கு வழி விட்டது. உள்ளே வந்தவள் அருணைப் பார்த்து லேசாகப் புன்னகைக்க முயற்சித்தாள். அந்த முயற்சி தோல்வியடைந்ததை அவள் வாயே கோணிக் கேலி செய்தது.

“ஐ அம் நாட் நீத்தா. ஐ அம் ஹர் சிஸ்டர் ப்ரீத்தா. ப்ரீத்தா ஷர்மா” என்று வலது கையை முன்னால் நீட்டினாள்.

அருண் ஒரு பெருமூச்சோடு அந்தக் கையைப் பற்றி குலுக்கினான்.

“நான் நேற்று தூங்கப் போகுமுன் பார்த்த கடைசிச் செய்தி நீத்தாவின் மரணம். இன்று காலை நீத்தாவைப் போலவே நீங்கள் வந்து வாசலில் நின்றதும் அதிர்ந்துவிட்டேன்”

“யா. நிறையப் பேர் எங்கள் இருவரையும் தவறாகப் புரிந்திருக்கிறார்கள். அதனால் தான் நான் ஊரிலே இருந்து கொண்டு அப்பாவின் பிசினஸை கவனித்து வருகிறேன்”

“ஓ.. சரி என்னைப் பார்க்க வந்த விசயம்?”

“என் அக்காவின் மரணம். அது விபத்து என்று போலீஸ் சொல்கிறது”

“ம்.. இஃப் யு டோண்ட் மைண்ட்” என்று ஒரு சிகரெட்டை எடுத்து அவள் அனுமதி கேட்பது போலத் தயங்கினான். அவள் எழுந்து ஒரு சிகரெட்டை எடுத்துக் கொண்டாள். லைட்டரைக் கிளிக்கி இரண்டு சிகரெட்டுகளையும் பற்ற வைத்தான்.

“மேலே சொல்லுங்கள்” புகையை விட்டத்தை நோக்கி விட்டு விட்டு அருண் அவள் முகத்தையே பார்த்தான்.

“எனக்கு அக்காவின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. அது விபத்தாய் இருக்காது. கொலையாய் இருக்க வேண்டும்”

“அவ்வளவு ஆணித்தரமாய் எப்படிச் சொல்கிறீர்கள்?”

“அவளுக்கும் சர்வேஷுக்கும் காதல் இருந்தது தெரியுமா உங்களுக்கு?”

“கிசு கிசு படித்திருக்கிறேன். இருவரும் மறுத்திருக்கிறார்கள். மாடல் கிரிக்கெட் பிளேயர் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் என்று கடந்து போயிருக்கிறேன்”

“ஆனால் அது உண்மை. 100% உண்மை. இந்த விவரம் எனக்கு மட்டுமே தெரியும். இருவரும் திருமணம் செய்து கொள்வதாகக் கூட இருந்தார்கள்”

“அப்படியா? ம்ஹ்ம்.. அதற்கும் கொலைக்கும்...”

“நான் இன்னும் முடிக்கவில்லை. திடீரென்று சர்வேஷ் அந்த லண்டன் தொழிலதிபரின் மகளைத் திருமணம் செய்யப் போகிறான்”

“ஆம் நான் கூட செய்திகளில் வாசித்தேன். அவர்களுக்குள் பிரச்சனையா?”

“பிரச்சனை ஒன்றும் இல்லை. காசைப் பார்த்ததும் வாலாட்டிக் கொண்டு போய் விட்டது அந்த நாய்”

“மீதியை நான் சொல்கிறேன். தன்னைத் திருமணம் செய்துகொள்ளச் சொல்லி வற்புறுத்தியிருக்கிறார் நீத்தா. மறுக்கும் பட்சத்தில் உறவுக்கான ஆதாரங்களை வெளியில் சொல்வதாக மிரட்டியிருப்பார். அதனால் சர்வேஷ் அவளைத் தீர்த்துக் கட்டியிருக்கலாம் என்று நீங்கள் சந்தேகப்படுகிறீர்கள்”

“எக்ஸாக்ட்லி”

“ஹ்ம்ம். இந்த சந்தேகம் உங்களுக்கு வராமலிருந்திருந்தால் தான் ஆச்சரியம். அதற்கு நான் என்ன செய்ய முடியும்?”

“நீங்கள் ஒரு எக்ஸ் போலிஸ் மேன். உங்களின் துப்பறியும் திறனைப் பற்றி என் சென்னை நண்பன் சிலாகிக்கக் கேட்டிருக்கிறேன். அவனைத் தொடர்பு கொண்டே நீங்கள் இங்கே இருப்பதை அறிந்து கொண்டேன்.”

“ம்ஹ்ம்.. நான் பிரைவேட் டிடெக்டிவ் இல்லை. ஏதோ தமிழ்நாடு போலிஸ் எப்போதாவது என் உதவியைக் கேட்டால் அவர்களுக்காக செய்வேன். அங்கே நான் போலீஸுக்கு உதவி செய்வதால் கிரைம் சீனுக்குப் போவது, விசாரணை செய்வது என்று எனக்கு சுதந்திரம் அதிகம் இருக்கும். இது வேறு இடம். இங்கே எனக்கு அதே அளவு உதவிகள் இருக்குமா தெரியவில்லை. அதனால் தயக்கமாக இருக்கிறது”

“தயவு செய்து எனக்கு நீங்கள் உதவ வேண்டும். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன்”

“எனக்குப் பணம் பொருட்டல்ல. சேலஞ்சுக்காகவே இதை செய்கிறேன். முதலில் போலீஸைப் போய் பார்ப்போம். அவர்களிடம் பேசிய பின் என்ன செய்யலாம் என்று முடிவு செய்யலாம். ஓக்கே?” என்றவாரு சோஃபாவில் இருந்து எழுந்தான்.

“தேங்க் யூ, தேங்க் யூ வெரி மச்” என்று எழுந்து அவனைக் கட்டிப் பிடித்து கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தாள்.

“கிவ் மீ டென் மினிட்ஸ்” என்று பாத் ரூமை நோக்கி நடந்தான்.

**********************************************************
டெல்லி கமிஷனர் செல்வாவின் முன்னால் அருணும் ப்ரீத்தாவும் அமர்ந்திருந்தனர். அருண் சென்னைக்குத் தொலைபேசி டெல்லியில் கமிஷனராக இருக்கும் தமிழன் செல்வாவைப் பற்றி அறிந்து கொண்டான். செல்வாவின் பேட்ச் மேட்டான சென்னை கமிஷனர் செல்வாவுக்கு அருணைப் பற்றி எல்லாமும் சொல்லிவிட்டதால் இந்தக் கேஸில் மூக்கை நுழைப்பதில் அருணுக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது என்ற நம்பிக்கையுடன் அருண் கமிஷனரின் முகத்தை ஏறிட்டான்.

“மிஸ்டர் அருண்”

“ஜஸ்ட் அருண்”

“ஓக்கே அருண். இந்தக் கேஸ் ஹோப்லெஸ். ப்யூர் ஆக்ஸிடெண்ட். தேவையில்லாம நீங்க மூக்கை நுழைச்சி உடைபடப் போறீங்க”

இது அருணின் ஈகோவைத் தொட்டுப் பார்த்தது.

“கேஸ் டீட்டெயில்ஸ் சொல்லுங்க செல்வா. அப்புறமா பாப்போம்”

“ஓக்கே. நீத்தாவுக்கு டிப்ரெஸ்ஸன் இருக்கிறதால அதுக்கு டேப்லட் எடுத்துக்கிறது வழக்கம். அது மாதிரி முந்தின நாள் நைட் கொஞ்சம் ஓவர்டோஸா எடுத்திருக்காங்க. ஆல்கஹாலும் எடுத்திருக்காங்க. அதுனால அதிகப்படியா தூங்கிட்டாங்க. அந்த அப்பார்ட்மெண்ட்ல பெட்ரூம்ல குளிருக்காக ஃபயர் ப்ளேஸ் இருக்கு - கேஸ் ஃபயர் ப்ளேஸ். அது முதல் நாள் போட்டது அணைஞ்சிருக்கு. பட் கேஸ் க்ளோஸ் பண்ணாததால கேஸ் ரூம் முழுக்க பரவி - ஏசி ரூம்ங்கிறதால வெளியேறாம தூக்கத்துலயே மூச்சுத்திணறி இறந்துட்டாங்க”

“எப்போ உயிர் போச்சின்னு தெரியுமா?”

தமிழ் தெரியாத ப்ரீத்தா இருவர் முகத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அரவுண்ட் 12:30. அந்த ரூம் அளவை வச்சிப் பாக்கும்ப்போது 11:00 போல  கேஸ் லீக் ஆரம்பிச்சிருக்கணும். இதோ போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்”

கையில் எடுத்துப் புரட்டிப் பார்த்தான். ப்ரீத்தாவிடம், “ஸீ ப்ரீத்தா. இட் லுக்ஸ் லைக் த கேஸ் இஸ் அன் ஆக்சிடண்ட்”

“நோ நோ அருண். ப்ளீஸ். இன்வெஸ்டிகேட் ஃபர்தர் அண்ட் டிசைட்”

செல்வாவிடம் திரும்பிய அருண் “செல்வா, யாராவது சந்தேகப்படும்படியா அந்த அப்பார்மெண்ட் காம்ப்ளெக்ஸ்க்குள்ள நடமாடினாங்களா?”

“இல்லை அருண். அது ரொம்ப செக்யூர்ட் அப்பார்ட்மெண்ட். வெளியாள் யாரும் அவ்வளவு சுலபமா உள்ள போக முடியாது. வெஹிக்கிள்ஸ்க்கு டேக் இருக்கு. டோர்ஸ் ஆட்டோமேட்டிக்கா அதை ரீட் செஞ்சி திறந்துக்கும். வேலைக்காரங்களுக்கும் செக்யூரிட்டீஸ்க்கும் உள்ளயே குவார்ட்டர்ஸ் இருக்கு. அப்பிடி யாரும் உள்ள போய் ஈஸியா கொலை செஞ்சிர முடியாது. அதோட வீடு வேற பூட்டியிருக்கு. கீ இல்லாம அந்த டோர்ஸைத் திறக்கவே முடியாது”

“ப்ரீத்தா. நீத்தா தவிர வேறு யாராவது சாவியை வைத்திருக்கிறார்களா?”

“ஹூ எல்ஸ். சர்வேஷ் ஹேஸ் எ கீ”

“பட் சர்வேஷ் அந்த நேரத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்தாரே? ஐ ஃபீல் திஸ் கேஸ் இஸ் ஹோப்லெஸ்”

“நோ டோன்ட் ஸே சோ. ப்ளீஸ் டூ சம்திங்” கெஞ்சுவது போலப் பார்த்தாள்.

“ஓக்கே. செல்வா நான் அந்த கிரைம் சீன் பாக்க முடியுமா?”

“ஷ்யூர் அருண். ஐ’ல் மேக் அரேஞ்ச்மெண்ட்ஸ்”

******************************************

வெளியே இருந்த லக்சுரிக்கு கொஞ்சமும் குறையாமல் உள்ளேயும் செழிப்பாய் இருந்தது அந்த வீடு. எங்கெங்கு காணினும் ரோஸ் வுட்டடா என்பதாகத்தான் இருந்தது. நடு ஹாலில் ஒரு பெரிய டீப்பாயின் மேல் நிஜ யானையின் மினியேச்சர் போல ரோஸ்வுட்டாலான யானை. சோஃபாக்களும், திரைச்சீலைகளும் செல்வச் செழிப்பை முரசு கொட்டிக்கொண்டிருந்தன. பெரிய வீடானதால் பெரும்பாலான இடங்கள் வெற்றிடமாக இருந்தது. ஹாலில் இருந்து இடது புறம் போனால் பெட்ரூம். உள்ளே ஒரு பெரிய கிங் சைஸ் மெத்தை நடு அறையில் போடப்பட்டிருந்தது. பெரிய அப்பார்மெண்ட் காம்ப்ளெக்ஸ் ஆனதால் கேஸ் மொத்தமாக வாங்கி குழாயில் வினியோகம் செய்தார்கள். அதனால் இரண்டு பெட்ரூம்களிலும், ஹாலிலும் ஒரு ஃபயர் ப்ளேஸ் இருந்தது.

ஃபயர் ப்ளேஸில் மரம் போடப்பட்டிருப்பதைப் போன்ற ஒரு செட்டப் இருந்தாலும் எரிவதென்னவோ கேஸில் தான். அந்த ஃபயர் ப்ளேஸுக்கு இடது புறம் தரையில் ஒரு சிறு குழாயின் கைப்பிடி இருந்தது. கேஸைக் கண்ட்ரோல் பண்ணும் லிவர். காற்றில் இன்னமும் எல்.பி.ஜி வாயுவின் மணம் வீசுவது போல அருணுக்குத் தோன்றியது.

வீடு சுத்தமாக இருந்தது. தரையில் ஒரே ஒரு ரோபோ பொம்மை குப்புற விழுந்து கிடந்தது. மெத்தை நீட்டாக இருந்தது. நீத்தா படுத்திருந்த இடம் லேசாகக் குழிவாக இருந்தது. அந்த அறையின் இரண்டு ஜன்னல்களும் உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தன. அதன் வழியாகவோ இல்லை வேறு வழியாகவோ யாரும் உள்ளே நுழைய முடியாது. ஜன்னலுக்குப் பக்கத்தில் போய் நின்று வெளியே பார்த்தான். தூரத்தில் இருந்த A-4 வாசலை ஒரு வேலைக்காரி கூட்டிக்கொண்டிருந்தாள்.

ஜன்னலை சுற்றி விரலை ஓட்டிப் பார்த்த அருணுக்கு எதுவும் தட்டுப் படவில்லை. ஒரு தோல்வி உணர்ச்சியோடு மீண்டும் ஒரு முறை அறை முழுக்கக் கண்களால் கழுவி விட்டு வெளியே வந்தான். இருவரும் அவன் பின்னாலேயே.

இவ்வளவு பெரிய வீட்டுக்குக் கிச்சன் கொஞ்சம் அளவில் சிறியதாகவே இருந்தது. கிச்சனில் இருந்த சாமான்கள் கூட கழுவப்பட்டு சுத்தமாக அடுக்கி வைக்கப்படிருந்தன. அதிகப் படி சாமான்கள் இருப்பது போலவும் தெரியவில்லை. ஆமாம் மாடல்கள் சாப்பிடுவதற்கு அதிகப் பாத்திரம் தேவைப்படாது என்று நினைத்துக் கொண்டான் அருண்.

“ப்ரீத்தா வாட் டு யு சே”

“எனக்கு முதல் சந்தேகம் நீத்தா படுத்திருந்ததுதான். அவள் உடை அணிந்து படுத்ததே இல்லை. நிர்வாணமாகப் படுத்துத்தான் பழக்கம். ஆனால் அவள் உடை அணிந்து படுத்திருந்தாள்”

அருண் திரும்பி செல்வாவைப் பார்த்தான். “ஆம் அருண். ஷி வாஸ்ண்ட் நேக்கட்”

ஸீ என்பது போல அருணை அர்த்தத்துடன் பார்த்தாள். “லுக் ப்ரீத்தா. அதை மட்டும் வைத்து இது கொலை என்று முடிவு கட்டிவிட முடியாது. இன்று மட்டும் அவள் உடையோடு உறங்கியிருக்கலாம் அல்லவா?”

பேசிக்கொண்டே கிச்சனில் இருந்து சரியாக கிச்சனுக்கு எதிரில் அமைந்திருந்த டைனிங் ஹாலுக்குள் வந்தான். ஒரு பெரிய டைனிங் டேபிள் 8 சேர்களுடன் அமைந்திருந்தது. அதில் நடுவில் ஒரு லேஸி சூசனும் அதன் மேல் பழங்களும் அலங்கரித்துக்கொண்டிருந்தன.

கிச்சனை ஒட்டியவாறு ஒரு சிறிய வட்ட வடிவ காஃபி டேபிளும் அதைச் சுற்றி இரண்டு நாற்காலிகளும் கிடந்தன. ஹாலில் இருந்தும், டைனிங் ஹாலில் இருந்தும் டிவியைப் பார்க்க ஏதுவாக அந்த 50 இன்ச் எல்.சி.டி டீவி சுவற்றில் மவுண்ட் செய்யப்பட்டிருந்தது.

அந்த காஃபி டேபிளின் மேல் இரண்டு கோப்பைகள் இருந்தன. ஒரு கோப்பை நீத்தா அருந்தியிருப்பாள் என்பதை அதன் மேல் படிந்திருந்த லிப்ஸ்டிக் கறை காட்டியது. அந்த இரு கோப்பைகளிலும் ஒரு விரற்கடை அளவுக்கு நீலத் திரவம் நிரம்பியிருந்தது.

(தொடரும்)

Tuesday, August 24, 2010

கிரைம் டெஸ்ட்

சிங்கை சிங்கம் பிரபா கேட்டுக்கொண்டதற்கிணங்க.



காலை மணி 11:00

மேலே விமானம் சத்தமாகப் பறந்தது. சர்வேஷ் தலையைத் தூக்கி விமானத்தைப் பார்த்தான். ஜெட் ஏர்வேஸ். முகத்தை மீண்டும் அழுத்தமாகத் துண்டால் துடைத்துவிட்டு பக்கத்தில் நின்றிருந்தவன் தோளில் போட்டான். கீழே இருந்த கிளவுஸை எடுத்து கையில் மாட்டிக் கொண்டு ஹெல்மெட்டை தலையில் போட்டுக் கொண்டான். வி.வி.எஸ் லக்‌ஷ்மணின் பேட்டை தன் பேட்டால் ஒரு முறை செல்லமாகத் தட்டி விட்டு பேட்டிங் கீரீஸை நோக்கி நடந்தான்.

டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானம். இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி. ஐந்தாவது நாள். இந்தியா 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு முந்தய நாள் மாலை தனது இரண்டாவது இன்னிங்க்ஸைத் துவக்கியது. நேற்றே கவுதம் கம்பீரை இழந்த இந்தியா இன்று காலை நைட் வாட்ச்மேன் இஷாந்தையும், சொற்ப ரன்னில் ட்ராவிட்டையும், சற்று முன் சேவாக்கையும் இழந்து 75 ரன்களுடன் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

காயம் காரணமாக சச்சின் ஆட வராததால் அவருக்கும் சேர்த்து சர்வேஷ் ஆட வேண்டிய கட்டாயம். வி.வி.எஸ் லக்‌ஷ்மன் இப்போது தான் கிரீஸுக்கு வந்ததால் அவரும் இன்னும் வழக்கமான ஆட்டத்தை ஆட ஆரம்பிக்கவில்லை. ஏனோ தெரியவில்லை சர்வேஷ் வழக்கத்தை விட சற்று தடுமாற்றமாகவே ஆடுகிறான்.

பேட்டிங் கிரீஸில் நின்று கை கிளவுஸை விலக்கி வாட்ச்சில் மணி பார்த்தான். 11:00. அவன் முகத்தில் ஒரு நிம்மதிக் கீற்று தெரிய அம்பயரைப் பார்த்து இடது காலை தொட்டுக் காட்டினான். அம்பயர் லெக் ஸ்டம்புக்கு கார்ட் கொடுத்ததும் பெயில்ஸை எடுத்து அந்த இடத்தில் வைத்து பேட்டால் அடித்து அடையாளம் செய்தான்.

மறு முனையிலிருந்து ஓடி வர ஆரம்பித்தார் ஜான்சன். ஓடி வந்து அவர் வீசிய பந்து இடது புறம் ஹாஃப் வாலியாக சந்தர்ப்பத்தை சிறிதும் தவற விடாமல் அந்தப் பந்தை கிளான்ஸ் செய்தான் சர்வேஷ். பந்து பவுண்டரியில் இருந்த விளம்பரப் பலகையில் பட்டு நின்றது. ஸ்டேடியம் ஆர்ப்பரித்தது.

ப்ரெஸ் பாக்ஸில் உட்கார்ந்திருந்த அருணும் கூட்டத்தோடு சேர்ந்து கைத்தட்டினான்.

காலை மணி 11:30

அது தலைநகரின் புறநகரில் உள்ள பெரிய லக்சுரி அப்பார்மெண்ட் என்பதை பெரிய காம்பவுண்ட் சுவரும் அதன் வாயிலில் இருந்த பெரிய இரும்புக் கதவுகளும் பறை சாற்றின. FEDEX என்று எழுதப்பட்ட அந்த வேனை நிறுத்தி இறங்கினான் அந்த பழுப்பு நிற சீருடை அணிந்தவன். கேட்டின் ஒரு பக்கம் இருந்த செக்யூரிட்டி டெஸ்கில் இருந்து வேன் வந்து நிற்பதைப் பார்த்துக் கொண்டிருந்த செக்யூரிட்டி தன் முன்னால் இருந்த பொத்தான்களில் பச்சை நிறமாயிருந்ததை அழுத்த பெரிய கதவுகளில் ஒன்று ஒரு ஆள் நுழையும் அளவுக்கு உள்பக்கமாகத் திறந்தது.

கைகள் நிறைய கடிதங்களையும் பார்சல்களையும் ஏந்திய அவன் உள்ளே நுழைந்து செக்யூரிட்டிக்கு செல்லமாக ஒரு சல்யூட் வைத்தான். சில கடிதங்களை செக்யூரிட்டியிடம் கொடுத்து விட்டு இரண்டு பார்சல்களைக் காட்டி - “HAND OVER ONLY TO ADDRESSEE" என்று எழுதியிருந்ததக் காட்டிவிட்டு உள்பக்கமாக நடந்தான்.

முதல் பார்சலை A-4ல் கொடுத்து விட்டு அடுத்த பார்சலைக் கொடுக்க பி-7 நோக்கி நடந்தான். பி-7 வாசலில் இருந்த காலிங் பெல்லை அடித்தான். மூன்று முறை அடித்தும் யாரும் திறக்காததால் ஒரு டோர் டேக்கை கதவில் ஒட்டி விட்டு அந்த இடத்தை விட்டு அகன்றான்.

மாலை 4:30 மணி

இந்தியா ஏழு விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் சர்வேஷின் நிதானமான அதே சமயம் சீரான ரன் குவிப்பினால் இன்னும் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலபமான இலக்கை அடைந்திருந்தது. இன்னும் நான்கு ரன் எடுத்தால் சர்வேஷின் 13 வது டெஸ்ட் சதம் பூர்த்தியாகும்.

நாதன் ஹாரிட்ஸ் தனது 23வது ஓவரின் நான்காவது பந்தை சர்வேஷுக்கு வீசினார். டாப் ஸ்பின்னராக வந்த அந்தப் பந்தை ஹாரிட்ஸின் கையிலிருந்து விடுபடுமுன்னரே கணித்தது போல தயாராக நின்ற சர்வேஷ், ஒரு அடி இறங்கி ஆள் இல்லாத லாங் ஆன் திசையை நோக்கி தூக்கி அடித்தான். பந்து ஒன் பவுன்ஸ் ஃபோராக முடிய ஸ்டேடியம் எழுந்து நின்று பாராட்டியது. பேட்டை தலைக்கு மேல் தூக்கி பெவிலியனை நோக்கிக் காட்டி தன் சந்தோசத்தைப் பகிர்ந்து கொண்டான். மறுமுனையில் நின்ற தோனி கட்டிப்பிடித்து பாராட்டைத் தெரிவித்தார்.

அடுத்த இரண்டு பந்துகளில் இரண்டு ஃபோர்களை பறக்கவிட்ட சர்வேஷ் இந்தியாவுக்கு தொடர்ந்த 17வது டெஸ்ட் வெற்றியைத் தேடித்தந்தான். ஃபெரோஸ் ஷா கோட்லா வழக்கம்போல வெற்றிக்களிப்பை வெளிப்படுத்தியது.

ப்ரஸ் பாக்ஸில் இருந்த அருண் எழுந்து தன் பத்திரிக்கை நண்பனை நோக்கி நகர்ந்தான்.

“தேங்க்ஸ்டா.. இப்பிடி ஒரு மேட்சை ப்ரஸ் பாக்ஸ்ல உக்காந்து பாக்க வாய்ப்புக்குடுத்ததுக்கு”

“இதுல என்னடா இருக்கு. நீ எனக்கு அந்தக் கேஸை சால்வ் பண்ணிக் குடுத்தியே. அதுக்கு இதெல்லாம் ஜூஜூபி. சரி மேட்ச் முடிஞ்சிருச்சின்னு போயிராத. ஈவினிங் ப்ளேயர்ஸ் பார்ட்டி இருக்கும். அதிலயும் கலந்துட்டுப் போ”

கரும்பு தின்னக் கசக்குமா. அருணும் சரி என்று சொல்லிவிட்டு வெளியே வந்து ஸ்மோக்கிங் ஜோனில் நின்று ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான்.

வெளியே ப்ரஸண்டேஷன் நடந்து கொண்டிருந்தது. மேன் ஆஃப் த மேட்ச் கோஸ் டு சர்வேஷ் என்று அடித்தொண்டையிலிருந்து கத்திக் கொண்டிருந்தார் ரவி சாஸ்திரி.

இரவு 6:30 மணி

அந்த அப்பார்மெண்ட் காம்பவுண்டுக்குள் ஒரு போலிஸ் ஜீப்பும் ஒரு தீயணைப்பு வண்டியும் ஆம்புலன்ஸும் நின்று கொண்டிருந்தன. வாட்ச்மேன்களில் ஒருவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரித்துக் கொண்டிருந்தார். காற்றில் எல்.பி.ஜி வாயுவின் மணம் கனமாகப் பரவிக் கிடந்தது. மற்ற இரண்டு வாட்ச்மேன்கள் அந்தப் பக்கம் நின்று ‘மேடம் தூங்கிட்டு இருந்திருப்பாங்க போல. கேஸ் லீக்காகி மூச்சுத் திணறி இறந்து போயிட்டாங்க’ என்று பேசிக்கொண்டிருந்தார்கள்

ஆம்புலன்ஸில் அவளை ஏற்றிக் கொண்டிருந்தார்கள். முகம் எல்லாம் நீலம்பாரித்திருந்தது. அவள் (அது?) அணிந்திருந்த இரவு உடை அங்கங்கே கலைந்திருந்தது. இன்னொரு ஊழியர் ஒரு வெள்ளைத்துணி எடுத்து தலை முதல் கால் வரை மூடினார்.

இவ்வளவு களேபரம் நடந்தும் பக்கத்து வீடுகளிலிருந்து யாரும் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. பணக்காரர்கள் என்றால் இப்படித்தான் போல. ஆம்புலன்ஸ் கிளம்பி திறந்திருந்த கேட் வழியாக வெளியேறி சாலையில் சேர்ந்து சடுதியில் காணாமல் போனது.

இரவு 8:00 மணி

அந்த ஹோட்டலின் டான்ஸ் ஹால் முழுக்க இந்தியக் கிரிக்கெட் வீரர்கள், அவர்களின் குடும்பத்தார் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் நிரம்பி இருந்தார்கள். பெரும்பாலானோர் கைகளில் கண்ணாடிக் கோப்பை. அதில் நிரம்பியிருந்தது நீல நிறத்திரவம்.

அருணின் கையிலும் அது போல ஒரு கோப்பை. ஒரு சிப் எடுத்தவன் அந்த பானத்தின் சுவையை  ம்ம்ம் என்று சிலாகித்தான்.

“என்ன ட்ரிங்க்டா இது. இதுவரைக்கும் இப்பிடி குடிச்சதில்லை?” தன் நண்பனைப் பார்த்துக் கேட்டான்.

“இது மார்கரிட்டாவையும் மார்ட்டினியையும் மிக்ஸ் அடிச்சது. நம்ம சர்வேஷ் இல்லை. அவன் கண்டுபிடிச்ச டிரிங்க்”

“ஓ அவர் கிரிக்கெட் தான் நல்லா ஆடுவார்னு நினைச்சேன். காக்டெயில் கூட மிக்ஸ் பண்ணுவாரா? அப்ப கிரிக்கெட்ல ஃபார்ம் போச்சின்னா கைவசம் ஒரு தொழில் இருக்கு”

“ஃபன்னி ஃபன்னி” என்று அவன் தோளில் தட்டியவாறு சிரித்த உருவத்தைத் திரும்பிப் பார்த்தான் அருண். சர்வேஷ்.

பரஸ்பர அறிமுகங்கள், கைகுலுக்கல்கள்.நடந்தன.

இரவு உணவையும் அருந்திய பின் அங்கிருந்து தன் அறைக்குக்கிளம்பினான். பார்ட்டி தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது.

அறைக்கு வந்த அருண், டிவியைப் போட்டான். என்.டி.டி.வியில் பரபரப்புச் செய்தி ஒன்றைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். சைடில் ஒரு அழகு முகம். எங்கோ பார்த்திருக்கிறோமே என்று மூளையை சுரண்டினான் அருண்.

டிவியிலேயே சொல்லிவிட்டார்கள்.

“பிரபல மாடல் நீத்தா ஷர்மா தனது அப்பார்ட்மெண்டில் இன்று மர்மமான முறையில் மரணமடைந்தார். பூட்டப்பட்ட படுக்கை அறைக்குள் எல்.பி.ஜி வாயு கசிந்தததால் மூச்சுத்திணறி மரணமடைந்திருக்கிறார் என்று போலிஸ் தரப்பு சொல்கிறது. இவர் பிரபல கிரிக்கெட் வீரர் சர்வேஷுடன் கிசுகிசுக்கப்பட்டவர்”

செய்தியை சிரத்தையில்லாமல் பார்த்துவிட்டு டி.வியை அணைத்தான். களைப்பில் படுக்கையில் விழுந்ததும் தூங்கிப் போனான்.

**********************

மண்டைக்குள் யாரோ மணியடித்தது போல இருந்தது. எழுந்து பார்த்தான். காலிங் பெல். அருண் கலைந்திருந்த தலையை கைகளால் ஒழுங்கு படுத்திக் கொண்டே வாசலை நோக்கி நடந்தான். கையில் கட்டியிருந்த வாட்சில் மணி 5:30.

‘இந்நேரத்துக்கு யார்’ என்ற யோசனையுடன் கதவைத் திறந்தவன் வாசலில் நின்றிருந்தவளைப் பார்த்ததும் அதிர்ந்து போனான்.

வாசலில் நின்றிருந்தது நீத்தா ஷர்மா.

(தொடரும்)

Sunday, August 22, 2010

பிதற்றல்கள் 08 / 22 / 2010

மெகா சீரியல் பாக்கிற ஆட்களை கிண்டல் செய்வது என் வழக்கம். இப்போது நானே நாதஸ்வரம் சீரியல் பார்க்க ஆரம்பித்து விட்டேன். வழக்கமான சீரியல் அழுகை/செண்டிமெண்ட் இதில் கொஞ்சம் குறைவாகவே இருக்கிறது.  அதனால் பார்க்க முடிகிறது. கோபியும் மலரும் அந்த அறைக்குள் பேசிக் கொண்டு இருப்பதைப் பார்க்கும் மகா என்ன பேயாட்டம் ஆடப் போகிறார் என்று கவலையாக இருக்கிறது.

இதில் வரும மகா போலவே ஒரு பாத்திரம் என் வாழ்விலும் வந்து போயுள்ளது. மகாவின் செயல்கள் ஒவ்வொன்றும் எனக்கு அந்த நபரையே நினைவு படுத்துகிறது. ஒரு வேளை நான் இந்தத் தொடரைப் பார்ப்பதற்கும் அது ஒரு காரணமா தெரியவில்லை.

போன வாரம் முழுக்க புரச்சி செய்து ஓய்ந்து போய் விட்டேன். அதற்கு ஒரு புரச்சி நண்பர் தன் பாணியில் எதிர் வினை ஆற்றி இருக்கிறார். அதற்காக நான் வருத்தப் படவில்லை. அவருக்குத் தெரிந்த முறை இதுதான். என்ன செய்ய பாவம்.

முகிலன் இப்போதெல்லாம் பேப்பர் எடுத்து எதையாவது கிறுக்க ஆசைப் படுறார். சும்மா இல்லாமல் ஒருநாள் அவங்கம்மா என்ன தம்பி வரையிற என்று கேட்டதற்கு அவர் பதில் - ஏப்பேன்(ஏரோ ப்ளேன்) இன்னொரு கிறுக்கலைக் காட்டி டாக்கி(doggy) என்று சொல்லி இருக்கிறார். இன்று வெளியே சாப்பிடப் போனோம். அந்த இந்தியன் ரெஸ்டாரண்டில் முதலில் அப்பளம் வைப்பார்கள். அதைப் பிய்த்து என்னிடம் காட்டி கீகீ என்றார். அந்தத் துண்டு எங்கள் வீட்டில் இருக்கும் ஒரு puzzle-ன் கிளித் துண்டு போலவே இருந்தது. அதை கொஞ்சம் வாயில் போட்டு விட்டு கையில் மிச்சம் இருந்த சின்னத் துண்டைக் காட்டி பொட்டு என்றார்.

அவர் இரவில் தூங்க அடம் பிடித்தால் அவங்கம்மா உபயோகப் படுத்தும் வித்தை பூச்சாண்டி. பூச்சாண்டி வந்துடுவான் என்றால் சகலமும் அடங்கி படுக்கையில் படுத்துக் கொள்கிறார். கார் சீட்டில் உக்கார மாட்டேன் என்று அடம் பிடித்து டிரைவர் சீட்டுக்குப் போனவரை பூச்சாண்டி வந்துடுவான் என்று சொன்னதும் தாவி வந்து கார் சீட்டில் உக்கார்ந்து கொண்டார்.

இந்த இரண்டு விசயங்களையும் வைத்துப் பார்க்கும் போது பூச்சாண்டி என்று சொல்லி பயமுறுத்துவது தவறோ என்று படுகிறது. அவர் பாட்டுக்கு பூச்சாண்டி என்று யாரையாவது கற்பனை செய்து பயந்து போய் விடுவாரோ என்று எனக்கு பயமாய் இருக்கிறது. யாராவது இது சரியா தவற என்று சொன்னால் நல்லது.

எபிக் பிரவுசர் உபயோகிக்கத் துவங்கி உள்ளேன். நன்றாகத் தான் உள்ளது. என்ன என்.எச்.எம் இதில் வேலை செய்ய மாட்டேன் என்கிறது. firefox க்கான தமிழ் தட்டச்சு add -on சேர்த்த பின் அதிலே தட்டச்சியதே இது. தீம்ஸ் மாற்றுவது எப்படி என்பதைப் பார்க்க வேண்டும்.

Thursday, August 19, 2010

புரட்சியாளன் ஆவது எப்படி? - ஒரு சிறு கையேடு

உங்களுக்கு இரண்டு கையேடுகள்.

அ. புரட்சி செய்வது எப்படி - அதை இங்கே பாருங்கள்.


ஆ. புரட்சியாளன் ஆவது எப்படி

1. தினமும் காலையில் செய்தித்தாளைப் பாருங்கள். 

2. அதில் சூடான செய்தி என்ன என்று பார்த்துக் கொள்ளுங்கள் 

3. அந்தச் செய்தியின் நாயகன் என்ன சாதி என்று போட்டிருக்கிறதா பாருங்கள் 

4. போடவில்லையென்றால் யாரையாவது வினவுங்கள் 

5. கணினியைத் திறந்து, இணையத்தை தொடர்பு கொண்டு, ஓசி ப்ளாக்கருக்குள் செல்லுங்கள் 

6. சூடான செய்தியை தலைப்பாகக் கொடுத்து, உங்களுக்குத் தோன்றியதை எழுதுங்கள். 

7. நடு நடுவே மானே தேனே பொன்மானே சேர்க்க மறக்க வேண்டாம். 

8. அந்த செய்தி நாயகனின் சாதியைப் பற்றியும் அந்த சாதித் தனத்தைப் பற்றியும் கடும் கண்டனம் வைக்க மறக்க வேண்டாம். 

9. மற்ற பதிவர்கள் இந்த விசயத்தைப் பற்றி ஏன் எழுதவில்லை என்று அவர்கள் பெயரைச் சேர்த்து கண்டியுங்கள் 

10. மறக்காமல் தமிழ்மணம்/இண்ட்லியில் உங்கள் இடுகையைச் சேர்த்து ஓட்டுப் போடுங்கள்.


11. மெய்ம்மறந்து எழுதிவிட்டு அடுத்த ஆளைக் கைகாட்டி விட்டுவிட வேண்டும்


12. நன்றாக காறி துப்பப் பழகிக்கொள்ள வேண்டும். அங்கிங்கெனாதபடி வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம் துப்ப வேண்டும்.

புரட்சி

புரட்சி - ஒரு நாட்டின் அல்லது அமைப்பின் கட்டமைப்பில் குறைந்த காலத்தில் ஏற்படும் அடிப்படை மாற்றம் புரட்சி என்றழைக்கப்படும்.

நாம் பல புரட்சிகளை கடந்த நூற்றாண்டில் சந்தித்திருக்கிறோம்.

ரஷ்யப் புரட்சி, சீனப் புரட்சி, கியூபப்புரட்சி, தொழில் புரட்சி, பசுமைப் புரட்சி என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

புரட்சி வருவதற்கு முக்கிய காரணங்களாவன - வர்க்கப் பேதம், வர்க்கச் சிந்தனை, வர்க்க மூலம் (ஒரு ஃப்ளோல வந்துருச்சி விடுங்க)

டிஸ்கி: புரட்சி பற்றி எழுதினால் ஹிட் கிடைக்காது என்று வெண்ணிற இரவுகள் கார்த்தி சொன்னதால் எழுதப்படும் ஒரு சோதனை முயற்சி. இதற்கு ஹிட் கிடைக்காவிட்டல் ஹிட் கிடைக்கும் வரை தொடர்ந்து எழுதிக்கொண்டே இருப்பேன் என்ற எச்சரிக்கையுடன் முடித்துக் கொள்கிறேன்.

Tuesday, August 17, 2010

புலவன் - புரட்சி எழுத்தாளன்

அருமையான ப்ளாக் டெம்ப்ளேட்தான்
அதனால் நாட்டுக்கு என்ன பயன்?

அடடா போட வைக்கும் எழுத்து நடைதான்
அதனால் ஏழைகளுக்கு என்ன பயன்?

இடுகை படித்து பின்னூட்டமிட்டு
தமிழ்மணத்தில் ஓட்டையும் போட்டு
இண்டர்நெட் லிமிட்டை எக்சீட் செய்து

அடுத்த வேளை ரீசார்ஜ் செய்ய நண்பனின்
பாக்கெட்டைத் தடவ வேண்டிய நிலை

ஒவ்வொரு இடுகை வெளியீட்டின் போதும்
இது இயல்புதான்

அதற்காக புலவர் வந்து உனக்கு
ரீசார்ஜ் செய்தாரா?

நாட்டின் வறுமையை இடுகையில்
விளக்கும் புலவன்

உண்மையில் அதை ஒழிக்க
கெண்டைக்கால் மயிரேனும் பிடுங்கியிருப்பாரா?

ஓசி ப்ளாக்கரில் அவர்கள்
ஓதுவது புரட்சியை
நிஜத்தில் வேண்டுவது புகழை.

Sunday, August 15, 2010

ஆனந்த சுதந்திரம்?!?!?

என் தலித் சகோதரன் சுதந்திரமாக தேர்தலில் போட்டியிட முடியவில்லை.

அப்படிப் போட்டியிட்டு ஜெயித்தாலும், சுதந்திரமாக பஞ்சாயத்துத் தலைவராகப் பணியாற்ற முடியவில்லை.

கிழக்கு மாநில சகோதரர்கள் சுதந்திரமாகப் போராடக் கூட முடியாமல் நாட்டுக்குள்ளேயே ராணுவ ஆட்சிக் கொடுமை அனுபவித்து வருகிறார்கள்.

மேற்கு வங்க பழங்குடிச் சகோதரர்கள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு அரசு தாரை வார்க்கத் துடிக்கும் தங்களின் சொந்த நிலங்களில் சுதந்திரமாகக் குடியிருக்க முடியவில்லை

போபால் சகோதரர்கள் தங்களுக்கு நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைக்கு தக்க நட்ட ஈட்டைக் கூட சுதந்திரமாகப் பெற முடியவில்லை.

என் தமிழக மீனவச் சகோதரர்கள் சுதந்திரமாக மீன் பிடிக்க கடலில் இறங்க முடியவில்லை

சுதந்திரமாம்.. தினமாம்... விழாவாம்

Friday, August 13, 2010

பிதற்றல்கள் - 08/12/2010

“இலங்கைக் கடற்படைக்குள் எல்லை மீறிப் போகும் தமிழக மீனவர்களைப் பாதுகாக்க முடியாது” என்று அறிக்கை விட்டிருக்கிறார் இலங்கை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா. ஒரு நாட்டுக்குப் போய் அங்க குடிமகன்களாகவே ஆகிப் போன சீக்கியர்கள் டர்பன் கட்டுவதற்கு ஃப்ரான்ஸ் நாடு போட்ட சட்டம் தடை போட்டுவிடுமோ என்று இந்தியப் பிரதமரே போய் ஃப்ரான்ஸ் பிரதமரைப் பார்த்து பேசி விட்டு வருவாராம். இங்கே கண்மண் தெரியாமல் சுட்டுக் கொன்றுகொண்டிருக்கிறான் சிங்களன். அவனைக் கேள்வி இல்லை, ஒரு கோரிக்கை கூட விடுக்காமல் கை கழுவி விடுவதுதான் வெளியுறவுத்துறை அமைச்சரின் பணியா? இவரெல்லாம் பதவியிலிருப்பதற்கு அழகிரி சும்மா இருப்பதே பரவாயில்லை போல.

இவருக்கு மேல் ஒருவர், இந்திய உள்துறை அமைச்சர். இவ்வளவு நாள் ரூம் போட்டு யோசித்திருப்பார் போல. இன்று பேசியிருக்கிறார், யூனியன் கார்பைடு சேர்மன் ஆண்டர்சன் தப்பிப் போனதற்கு அப்போதைய உள்துறை அமைச்சர் நரசிம்மராவ்தான் காரணமாம். யாரெல்லாம் அப்போது அமைச்சர்களாக இருந்தார்கள், அதில் யாரெல்லாம் இப்போது உயிரோடு இல்லை என்று உளவுத்துறையிடம் (இதுக்குத்தான இருக்கு) கணக்குக் கேட்டிருப்பார்கள் போல. ராஜீவ் காந்தி, நரசிம்மராவ் என்று பதில் வந்திருக்கும். ராஜீவின் மீது புகார் சொல்ல முடியுமா (அதிலும் சிதம்பரம் தமிழர்)? அதனால் நரசிம்மராவின் மீது விடிந்து விட்டது.

இதில் பெரிய காமெடி அப்போதைய பிரதமருக்கே தெரியாதாம், ஆண்டர்சன் வெளியேறியது. முழுப் பொறுப்பும் நரசிம்மராவினுடையதாம்.

மேலும் போபால் வழக்கு தீவிரப்படுத்தப் படாததற்கு 1984-இல் இருந்து மத்தியில் ஆட்சியில் இருந்த அரசுகளின் மெத்தனமே காரணமாம். 26 வருடங்களில் காங்கிரஸ் மட்டும் 16 வருடங்களுக்கும் மேலாக ஆட்சியில் இருந்திருக்கிறது என்பதை மறந்து விட்டார் போல. சரி மற்றவர்கள் செய்திருக்க வேண்டாம், இவர் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக உள்துறை அமைச்சராக இருந்திருக்கிறாரே. இவர் என்ன கிழித்து விட்டார். பேசாமல் இவர் கலைஞரிடம் முழுசாக ட்ரெயினிங் எடுத்திருக்கலாம். செர்னோபில்லில் விபத்து நடந்த போது இத்தனை பேர் உயிரிழந்தார்கள், கைஷ்டிமில் இத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்றெல்லாம் புள்ளிவிபரம் கொடுத்திருக்கலாம்.

பேசுவது என்றதும் நேற்றைய வீடியோவில் என் குரலைக் கேட்டுவிட்டு நண்பர் பின்னோக்கி எனக்கு கமாண்டிங் வாய்ஸ் என்று பின்னூட்டம் போட்டது நினைவுக்கு வருகிறது (நாங்க மட்டும் வாசகர் கடிதம் மாதிரி சொல்ல மாட்டோமா?). எனக்கு மேடையில் பேசுவது என்றாலே மிகவும் பிடிக்கும். ஒருமுறை எங்கள் கல்லூரியில் ஜூனியர்களுக்குக் கொடுத்த வரவேற்பு விழாவில் “மதங்கள் -  தோற்றமும் மூடநம்பிக்கைகளும்” என்ற தலைப்பில் பேசினேன். பல புத்தகங்களையும் செய்திகளையும் படித்து தகவல்தொகுத்து வழங்கினேன். மூட நம்பிக்கைகளில் சாமியார்களை அல்லது கடவுள் பேரைச் சொல்லி ஏமாற்றுபவர்களைப் பற்றிப் பேசும்போது இந்து மத சாமியார்கள் இருவரையும், கிறிஸ்தவ மதப் பிரசாரகர் ஒருவரையும் உதாரணம் காட்டிப் பேசினேன்.

நான் பேசி முடித்து கீழே இறங்கியதும் என்னுடைய தோழிகளில் இருவர் என்னிடம் கடுமையாகச் சண்டை போட்டார்கள் - “உனக்கு பைபிளையும் கிறிஸ்டியானிட்டியையும் பற்றி என்ன தெரியும்? நீ எப்படி அவரை பற்றி அப்படியெல்லாம் பேசலாம்”. நான் சொன்னேன். “என் தலையெழுத்து பிறப்பால் இந்துவாகிப் போனேன். என் அப்பா அம்மா மட்டும் கிறிஸ்தவர்களாக இருந்திருந்தால் நீங்கள் என்னிடம் இந்தக் கேள்விகளைக் கேட்டிருக்க மாட்டீர்கள்.”

நல்ல வேளை பெரியார் பிறந்த தமிழகத்தில் நானும் பிறந்தேன். இல்லையென்றால் அன்றைக்கு நான் மேடையிலிருந்து இறங்கியிருக்கவே முடியாது.

மேடைப் பேச்சு என்றது நினைவுக்கு வரும் இன்னொரு விசயம். நான் எஸ்.எஃப்.ஐயில் தீவிரமாகப் பங்கு கொண்டிருந்த போது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், சி.ஐ.டி.யூ போன்ற அமைப்புகளுடன் ஆர்ப்பாட்டம், தர்ணா போன்ற போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறேன். அப்போது அருப்புக்கோட்டை கோமதி தியேட்டர் முன்பு நான் வீர உரை(ம்க்கும்)யாற்றிக் கொண்டிருந்ததைக் கேட்ட என் தந்தையின் நண்பர் அவரிடம் போய் “உங்க பையன் நல்லா பேசறான் சார்” என்று சொல்லிவிட்டார். அதிலிருந்து என் தந்தைக்கு பெருமை பிடிபடவில்லை. நல்ல அப்பா.

இரண்டு நாட்களுக்கு முன்பு நான் எழுதிய செட்டிநாடு ஓட்டலும் ஆயாக்கடை இட்டிலியும், பொதுவாகப் பார்த்தால் பொதுவுடமைக் கொள்கைகளுக்கு எதிரானதாகத் தெரிந்திருக்கும். ரஜினி/ஷங்கரின் ரசிகர்களுக்கு வேறு மாதிரி தெரிந்திருக்கும். நான் இரண்டாவதான ஒரு பார்வையிலிருந்தே எழுதினேன். எழுதி வாசித்ததும் என்னுள் இருந்த முதலாமவன் விழித்துக்கொண்டான். தவறாகப் பட்டுவிடுமே என்று அந்த இடுகையை நீக்கிவிட்டேன். வானம்பாடி பாலா சார் சும்மா போடுங்க என்று சொன்னதால் போட்டேன். நான் பயந்த மாதிரியே ராஜசுந்தரராஜன் ஐயாவும், கார்த்திகைப் பாண்டியனும் இன்னும் பலரும் உங்கள் கருத்தோடு ஒத்துப் போகவில்லை என்று சொல்லியிருந்தார்கள்.

நான் சொல்ல வந்தது இதுதான் - ஷங்கர் படம் - செட்டிநாடு ஓட்டலின் மட்டன் பிரியாணி. சத்யஜித் ரேயின் படம் ஆயா கடை இட்டிலி. எல்லோராலும் ஆயா கடை இட்டிலியைச் சாப்பிட்டு விட முடியாது. எல்லோருக்கும் மட்டன் பிரியாணி செரித்து விடாது. அதே போல செட்டி நாட்டு ஓட்டல் குக்கிற்கு ஆயாவைப்போல் மல்லிகைப்பூ இட்டிலி சுடத் தெரியாது. ஆயாவுக்கு செட்டிநாட்டு ஸ்டைலில் மட்டன் பிரியாணி செய்யத் தெரியாது. ஒவ்வொன்றும் ஒவ்வொருவருடைய பாணி. அதில் இதைச் செய்யாதவன் முட்டாள் அதைச் செய்பவன் மேதை என்று சொல்வது ஹி ஹி ஹி..

அதே போல சேட்டு வீட்டில் வந்து பிறந்ததைத் தவிர அந்த குதிரை மீது வரும் மாப்பிள்ளை செய்த தவறென்ன? இல்லை அந்த நாய் குலைத்ததால் தான் அவன் குதிரையிலிருந்து கீழே விழுந்துவிடப் போகிறானா? இது யாரைச் சொல்கிறேன் என்று புரியாவிட்டால் நீங்கள் இதுவரை என்னைப் புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம்.

ஒரு க்ளூ வேண்டுமானால் கொடுக்கிறேன். முதல் எழுத்து ர கடைசி எழுத்து னி. என்னது நடு எழுத்தா? என்னஜி இதுக்கு மேலயும் க்ளூ கேக்குறீங்க?

என்னவோ போடா மாதவா (நன்றி விதூஷ்).

Wednesday, August 11, 2010

தமிழ் ப்ளாக் வாசகர்களுக்கு ஒரு எச்சரிக்கை

நான் ஏற்கனவே உங்க எல்லாரையும் எச்சரிச்சிருந்தேன். நடந்துரும் நடந்துரும்னு சொன்னேன். சொன்னா கேட்டீங்களா? இதோ நடந்துருச்சி பாருங்க.


Tuesday, August 10, 2010

செட்டி நாட்டு ஓட்டலும் ஆயா கடை இட்டிலியும்

அது இந்த ஊரிலேயே மிகப்பெரிய செட்டி நாட்டு அசைவ உணவகம். மொத்த உணவகமும் ஏசிக்குளிரோடும். கொடுத்த காசுக்கு முழு திருப்தியான உணவும் கிடைக்கும். ஒரு முழு மட்டன் பிரியாணியையும் சிக்கன் சிக்ஸ்டிஃபைவையும் உள்ளே தள்ளிவிட்டு ஏறிப்போன வயிற்றைத் தடவிக்கொண்டே வெளியே வந்தேன். பில் ரூ.150/-. 

அனைவரும் இப்படி அளவுக்கதிகமாக சாப்பிட்டுவிட்டு மலைப்பாம்பைப் போல் சீரணமாகமல் தவிப்பார்கள் என்பதை எதிர்பார்த்தோ என்னவோ அங்கே ஒரு பீடாக் கடையும் இருந்தது. பீடா ஒன்றை வாங்கி வாயில் உதப்பியபடி அங்கேயே நின்று ஒரு சிகரெட்டையும் பற்ற வைத்தேன். 

தூரத்தில் யாரோ ஒருவனை கூடி நின்று கும்மிக் கொண்டிருந்தார்கள். திருடினானா இல்லை திருட முயற்சித்தானா தெரியவில்லை. அந்தக் கூட்டத்திலிருந்து இருவர் நான் நின்றிருந்த மர நிழலுக்கு இடம்பெயர்ந்தார்கள். கொஞ்சம் வழுக்கையுடன் இருந்தவரை இன்னொருவர் அண்ணே என்று விளித்தார். 

“ஏண்ணே இந்த அடி அடிச்சீங்க” காதுக்குப் பின்னால் இருந்து ஒரு பீடியை எடுத்து பற்ற வைத்துக்கொண்டே அவரைப் பார்த்துக் கேட்டார். 

“அப்புறம் இப்பிடி ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமாடா அவனை மாத்த? எத்தினி நாளு காத்துக்கினு இருந்திருப்பேன்?” லேசாகக் கலைந்திருந்த சட்டையையும் மேல் துண்டையும் நீவி விட்டுக்கொண்டு சொன்னார்.

“அப்பிடி என்னண்ணே அவன் மேல உங்களுக்கு காண்டு?”

“சும்மாவாடா. அந்த ஏரியாவுல நாந்தா இம்புட்டு நாளா பெரியாளா இருந்தேன். நேத்து வந்த பய, என்னவோ செஞ்சிட்டான்னு ஏரியாக்காரனுக எல்லாம் தலையில தூக்கி வச்சிகினு ஆடினானுக. இப்பப் பாரு பய யாரோ ஒரு பிள்ளைக்கிட்ட தப்பா நடந்துக்கிட்டான்னு பஸ்ஸுல ஒருத்தன் கைய வச்சான். கிடைச்சது சாக்குனு நானும் மாத்திட்டேன்ல” பெருமையாக மீசையைத் தடவி விட்டுக்கொண்டார். 

கேட்டுக்கொண்டு நின்றிருந்த நான் கடைசி பஃபை இழுத்துவிட்டு சிகரெட்டைக் கீழே போட்டு மிதித்தேன். 

சட்டென்று என்னை திரும்பிப்பார்த்த வழுக்கை, “தம்பி ஒரு சிகரெட் குடேன்” என்றார். நானும் சிகரெட் பாக்கெட்டை எடுத்து அவருக்கு ஒன்று கொடுத்து விட்டு இன்னொன்றைப் பற்ற வைத்துக் கொண்டேன். முதல் பஃபை இழுத்துவிட்டு வெளியே விடும்போது புகையோடு சேர்ந்து ஒரு பெரிய ஏப்பமும் வந்தது. 

“என்ன தம்பி நல்ல சாப்பாடா?” வழுக்கை.

“ஆமாங்க” என்று அசடு வழிந்தேன். 

“இந்த ஓட்டல்லயா?”

“ஆமாங்க”

“பில் எம்புட்டு ஆச்சி”

‘என்னடா இதையெல்லாம் கேட்கிறார்’ என்று யோசித்துக்கொண்டே “அதை எதுக்குன்னே கேக்குறீங்க?”

“சும்மா சொல்லுங்க தம்பி”

“150 ரூவா ஆச்சி”

“ஹ்ம்ம்.. அங்க பாருங்க அந்த மரத்தடியில ஒரு ஆயா இட்லி சுட்டுக்கிட்டு இருக்குது. ஒரு இட்லி ஒரு ரூவா தான். அங்க போய் சாப்புட மாட்டீங்களோ?”

“சாப்புடுவேங்க. இன்னைக்கி எனக்கு பிரியாணி சாப்புடனும் போல இருந்திச்சி. அதுனால சாப்டேன்.”

“இந்த ஓட்டல் கட்ட ஒரு ரெண்டு மூணு கோடி செலவாயிருக்குமா?”

“இருக்கலாங்க”

“தினத்துக்கும் ஏசிக்கி கரண்டு பில்லு மட்டும் பத்தாயிரம் ரூவா கட்டுவானுக போலருக்கு”

“இருக்கலாங்க”

ஏந்தம்பி கொஞ்சம் யோசிச்சிப் பாத்தீங்களா? நம்ம நாட்டுல எத்தனை தொழிலாளர்கள் ஒரு வேளை கஞ்சிக்குக் கூட வழியில்லாம கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்காங்க. எத்தனை மாணவர்கள் படிக்க வழியில்லாம இருக்காங்க. அப்பிடியிருக்கும்போது, இப்பிடி மூணு கோடி ரூவா செலவு பண்ணி ஒரு ஹோட்டலு, அங்க ஏசியப் போட்டு கரண்டு பில்லு பத்தாயிர ரூவா கட்டணுமா? அதுக்கு அங்கன இருக்கிற ஆயாக்கடையிலயே எல்லாரும் சாப்டுட்டுப் போலாம்ல? அதை விட்டுட்டு இந்த பணக்காரப் பரதேசி கடையில சாப்புடுறது நம்ம வாந்திய நாமளே காசு குடுத்துத் திங்கிறது மாதிரி”

“ஒவ்வொருத்தர் டேஸ்டுங்க அது. உங்களுக்கு ஆயா கடையில சாப்புடப் பிடிக்கிது. எனக்கு இந்தக் கடையில சாப்புடப் பிடிக்கிது. அதுக்காக உங்க டேஸ்ட் பெட்டர். என் டேஸ்டு பெட்டர்னு சொல்லமுடியுமா?”

“சொல்லணுந்தம்பி. ஆயாக்கடை இட்லிதான் டேஸ்டு. மத்ததெல்லாம் வேஸ்டு” 

“சரிங்க அப்பிடியே இருக்கட்டும். ஆனா அதுக்காக சொந்தக்காச போட்டு ஓட்டல் கட்டி வியாபரம் பண்றவங்களையும், கைக்காசக் குடுத்து சாப்டுட்டு வர்றவங்களையும் இப்பிடிப் பேசலாமா?”

“அப்பிடித்தான் தம்பி பேசணும். அப்பத்தான் இந்த வர்க்க பேதம் போய் எல்லாரும் ஒண்ணாக முடியும்”

“எல்லாரும் சமமா ஆகணும்னா, எல்லாரும் முன்னேற என்ன வழின்னு பாக்கணும். அதை விட்டுட்டு பணக்காரனை எல்லாம் ஏழையாக்கிட்டா எல்லாரும் சமமாயிருவோமுன்னு சொன்னா எப்பிடி?”

“நீங்க முதலாளித்துவ மனப்பான்மையோட பேசுறீங்க. எதுவும் சொந்தமா தொழில் செய்றீங்களா?”

“இல்லைங்க. நான் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில வேலை பாக்குறேன்”

“அதான். முதலாளிகளோட அடிவருடியா மாறீட்டீங்க”

‘இவருடன் பேசி பிரயோசனமில்லை என்று தோன்றியது’ சிகரெட்டை இழுத்து அந்தப்பக்கம் விடுவது போல முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.

சாலையின் மறுபுறம் ஒரு திருமண ஊர்வலம் போய்க்கொண்டிருந்தது. வட இந்தியத் திருமணம். பணக்காரர்களாக இருக்க வேண்டும் என்பது அந்த ஊர்வலத்தில் வந்தவர்களின் உடையிலும், நகையிலும் பகட்டிலும் தெளிவாகத் தெரிந்தது. விலை உயர்ந்த உடையணிந்த மாப்பிள்ளை ஒரு வெள்ளைக் குதிரையில் மேல் பவனி வந்து கொண்டிருந்தார்.

அப்போது ஒரு நாய் எங்கிருந்தோ ஓடி வந்தது. அந்த ஊர்வலத்தைப் பார்த்து தூரமாக நின்று குலைத்தது. ஊர்வலத்தில் போனவர்கள் யாரும் அதைக் கண்டுகொண்டதைப் போலவே தெரியவில்லை. ஆனாலும் விடாமல் குரைத்துக் கொண்டே இருந்தது. அடித்தொண்டையிலிருந்து கத்திக் கத்திக் குரைத்தது. 

நான் அந்த நிகழ்வைப் பார்த்து ஒரு புன்னகையைச் சிந்திவிட்டு சிகரெட்டைக் கீழே போட்டுவிட்டு விலகி நடந்தேன். .

Sunday, August 8, 2010

எந்திரன் ஆடியோ ரிலீஸ் - காணொளிகள்

இந்த இரண்டு வீடியோக்களும் ஐ-ஃபோனில் எடுக்கப்பட்டு அதிலிருந்தே யு-ட்யூபில் ஏற்றப்பட்டவை. அதனால் படப்பதிவு கொஞ்சம் மட்டமாக இருக்கும். முதல் வீடியோவின் ஆரம்பத்தில் கொஞ்சம் அவுட் ஆஃப் ஃபோகஸாகவும் இருக்கும் (ஐ போன் ஆட்டோமேட்டிக்காக வேறு ஒரு பொருளை ஃபோகஸ் செய்தபடியால்). பொறுத்துக்கொண்டு பார்த்து மகிழவும். நன்றி.

எந்திரன் ஆடியோ ரிலீஸ் - பாகம் 1



எந்திரன் ஆடியோ ரிலீஸ் - பாகம் 2

Friday, August 6, 2010

பிதற்றல்கள் - 08/06/2010

எந்திரன் படப் பாடல்கள் வெளியாகிவிட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு வரும் தலைவர் படமாததால், ஓசி டவுன்லோடு செய்யாமல், ஐ-ட்யூன்ஸில் வரும் வரைக் காத்திருந்து வாங்கி, ஐ-ஃபோனில் கேட்டேன். எல்லாப் பாட்டுகளுமே எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

ஷங்கரின் திரைப்படங்களில் பாடல்கள் எப்போதுமே ஸ்பெஷல் தான். அவர் ஒரு பேட்டர்ன் வைத்திருப்பார். அந்தப் பேட்டர்னிலேயே இந்தப் பாடல்களும் இருப்பதால் பலருக்கு எங்கோ கேட்டதைப் போல இருக்கிறது. மூன்று பாடல்கள் கண்டிப்பாக இந்த வருடத்தின் ஹிட்டாகப் போவது உறுதி.

படம் செப்டம்பர் மூன்றாம் தேதி ரிலீசாம். நான்காம் தேதி அல்லது ஐந்தாம் தேதி ராச்சஸ்டரில் போடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். கண்டிப்பாக டிக்கெட் $15க்குக் குறையாமல் இருக்கும். க்ரோசரி ஸ்டோர் போகும்போது முன்பதிவு செய்து வைக்க வேண்டும்.

ரஜினிக்கு ஒரு அசாத்திய கவர்ச்சி இருக்கிறது. ஐந்து வயது சிறுவர்கள் முதல் ஐம்பது வயது இளைஞர்கள் (பாலா சார் சந்தோசமா?) வரை கவர்ந்து இழுத்துவிடுகிறார். பாட்சா வந்த புதிதில் நான் ஒரு தடவை சொன்னா என்று சொல்லித்திரியாத சிறுவர்களையே பார்த்திருக்க முடியாது. அப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்திவிடுவார்.

என் நண்பரின் (மலையாளி) மகள், சிவாஜி வந்த போது அவளுக்கு 4 வயது, அது வரை தமிழ்ப்படங்கள் பார்த்து பழக்கப் படாதவள். ரஜினியை யாரென்றே தெரியாது. சிவாஜி படம் (தியேட்டரில்) பார்த்ததில் இருந்து அவள் ரஜினியை சிவாஜி என்றே அழைக்க ஆரம்பித்து விட்டாள்.

நாங்கள் சிவாஜி படம் ராச்சஸ்டரில் பார்த்த போது ஒரு தமிழ்க்குடும்பம் - கணவன், மனைவி, ஒரு 2 அல்லது 3 வயதுப் பெண் குழந்தை - படம் போட்டு சில நிமிடங்கள் கழித்து உள்ளே வந்தார்கள். இருட்டைப் பார்த்ததும் அந்தக் குழந்தை வீரிட்டு அழ ஆரம்பித்துவிட்டது. அவர்கள் தட்டுத்தடுமாறி அவர்களின் நண்பர்கள் அமர்ந்திருந்த எங்கள் பின்வரிசையில் அமர்ந்தனர். கொஞ்ச நேரத்திலேயே குழந்தை அழுகையை நிறுத்திவிட்டது (ரஜினியைப் பார்த்ததும் பயந்து நிறுத்திவிட்டது என்று யாராவது கமெண்ட் போட்டால் மாடரேட் செய்யப்படும், சொல்லிப்புட்டேன்). பாருங்கள் ரஜினி படத்தை ஒரு 3 வயது குழந்தை கூட அழுகையை நிறுத்தி ரசிக்கிறது என்று சொல்ல வரவில்லை. வெளிச்சமும் பெரும் திரையில் ஓடும் கலர்ஃபுல் காட்சிகளும் அந்தக்குழந்தையின் அழுகையை நிறுத்தியிருக்கலாம்.

ஆனால் இண்டர்வெல்லில் அந்தக் குழந்தை அவள் தந்தையைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டாள் பாருங்கள் “நீ ஏம்பா விசிலே அடிக்க மாட்டேங்குற?”. இது காட்டும் அந்தப் பெண் சினிமாவில் ஆழ்ந்துதான் அழுகையை நிறுத்தியிருக்கிறாள் என்று. இதுதான் ரஜினியின் பவர்.

ஏனோ வலையுலகில் ரஜினியை ரசிக்கும் சிலர் கூட தாங்கள் ரஜினியை ரசிக்கிறோம் என்று சொல்ல பயப்படுகிறார்கள். எனக்கு அந்த பயமெல்லாம் இல்லை. நான் ரஜினி ரசிகன் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு பெருமையே.

ஜூனியர் முகிலன் வளர்ந்துவிட்டான். ஒரிரு வார்த்தைகளில் நம்மோடு உரையாடவும் விரும்புகிறான். நல்ல நினைவாற்றலும் இருக்கிறது. என்னையும் தங்கமணியையும் அப்பா அம்மா என்றழைப்பதை விட பெயர் சொல்லி அழைப்பதையே விரும்புகிறான் (நானும் தங்கமணியும் ஒருவரை ஒருவர் பெயர் சொல்லி அழைப்பதால் இருக்கலாம்). திஸ் என்று எனக்குப் பெயர் வைத்துள்ளான். மனைவிக்கு கயிதா. அவனுக்குப் பிடித்த ஒரு பொழுதுபோக்கு ஃபேமிலி ஆல்பத்தை எடுத்து அதில் இருக்கும் ஒவ்வொருவரையும் ஆச்சி, தாத்தா, மாமா(இது மட்டும் பெரிய சத்தமாக இருக்கும்), மாயினி (மாலினி), ஹஷ் (ஹாஷினி), ஜாவு(மன்னர் ஜவஹர்), பாட்டி, நிஷ்(நிஷாந்த்), பிதுபிதுபிது(பிரதீப்), பீபா(தீபா), கும்மா(குமார்), ராஜ் (ராஜன்), சீன்னூ(செங்குட்டுவன்) என்று அடையாளம் காட்டுவது.

சன் டிவியின் புண்ணியத்தில் சன் பிக்சர்ஸார் வெளியிடும் திரைப்படங்கள் அனைத்தின் அலுக்கச்செய்யும் விளம்பரங்கள் எல்லாம் பார்த்து விடுகிறான். இதுவரை வந்த விளம்பரங்களில் அவனை மிகவும் கவர்ந்தது வேட்டைக்காரன் விளம்பரம் தான். எங்கே விளையாடிக் கொண்டிருந்தாலும் வேட்டைக்காரன் விளம்பரம் கேட்டதும் ஓடி வந்து டிவியில் அதை பார்த்துவிட்டு விளம்பரம் முடிந்ததும் திரும்ப தன் விளையாட்டைத் தொடரச் சென்று விடுவான் (சுறா, சிங்கம் எல்லாம் அவனை இழுக்கவில்லை). இப்போது சனி மற்றும் ஞாயிறு அன்று, மலேசியாவில் நடைபெற்ற எந்திரன் பாடல் வெளியீடு ஒளிபரப்பு விளம்பரம் அவனை கவர்கிறது. அதிலும் கடைசியில் ரோபோ ரஜினி நிற்க எந்திரன் என்று போடும் காட்சியில் ரஜினியைச் சுட்டிச் சுட்டிக் காட்டுகிறான் (என் ஐபோனில் எந்திரன் பாட்டு ஓடும்போதும் அதே போஸ்டர் தெரிவதால் என்று நினைக்கிறேன்). ரஜினி என்று சொல்லிக் கொடுத்திருக்கிறேன். கூடிய சீக்கிரம் சொல்லிவிடுவான் என்று எதிர்பார்க்கிறேன். சொன்னதும் வீடியோ எடுத்துப் போடுகிறேன். பார்த்துத் தொலைய வேண்டிய தலையெழுத்து உங்களுக்கு.

ஹமாம் விளம்பரத்தில் ஆட்டோல போகும்போது என்று வரும் வரியை தூசி கீசி ஒட்டியிருக்கும் என்று மாற்றியிருக்கிறார்கள். வரவேற்கத்தக்கது. ஆனால் இப்போது டிவியில் சிகப்பழகு தரும் க்ரீம்களின் விளம்பரம் அதிக எண்ணிக்கையில் வருவது போல உள்ளது. எல்லா விளம்பரங்களிலும் கறுப்பாக இருப்பவர்களுக்கு கான்ஃபிடன்ஸ் இருக்காது. சிகப்பாக இருந்தால் தான் வெற்றியடைய முடியும் என்பதே மையக்கருவாக இருக்கிறது. ஏன் இப்படி ஒரு எண்ணத்தை புகுத்தி கறுப்பாக இருப்பவர்களுக்கு ஒரு தாழ்வுமனப்பான்மையை உருவாக்கும் விளம்பரங்களுக்கு எதிராக யாரும் தடை வாங்காமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ரஜினியைப் பார்த்த பிறகுமா தமிழர்கள் சிவப்பாக இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று எண்ணுகிறார்கள்?

(ஒருவழியா இன்னைக்கி எல்லா செய்தியிலயும் ரஜினி பேரை நுழைச்சாச்சி)

Monday, August 2, 2010

செஷல்ஸ் தீவில் பல்பு

பலா பட்டறை ஷங்கர் நானும் அவரும் படிச்ச கலஹாரி இலக்கியத்துல ஒண்ணை அவுத்துவுட கூப்பிட்டுருந்தாரு. சரி நாங்க அந்த இலக்கியத்தப் படிச்ச காலத்துல நடந்த ஒரு சம்பவத்தையே இங்க பகிர்ந்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டு அதையே ஒரு புனைவு மாதிரி (புனைவு பிடிக்காதவுக சொற்சித்திரம்னு வாசிச்சுக்குங்க) எழுதிருவோம்னு முடிவு பண்ணிட்டேன்.

நானும் ஷங்கரும் செஷல்ஸ்ல ஆறு மாசம் தங்கியிருந்து கலஹாரி இலக்கியம் படிச்சோம். அப்பல்லாம் நாங்க வாரக் கடைசியானா பீச்ல உக்காந்து பீஃப் ஃப்ரை சாப்டுக்கிட்டே பியர் சப்புறது வழக்கம். எப்பயாவது நம்ம பிரபா எங்கக்கூட சேந்துக்குவாரு. அவர் பியரு குடிக்க மாட்டாரு. ஆனா நாங்க சாப்புடுறதுல ரெண்டு பங்கு பீஃப் ஃப்ரை மட்டும் சாப்புடுவாரு.

அவரு அங்கதான் கவிதை இலக்கியம் படிச்சிக்கிட்டு இருந்தாரு. நாங்க மூணு பேரும் உக்காந்து உலகக் கதை பேசுவோம். பிரபா பேசும்போதே கவிதையாத்தான் பேசுவாப்ல. ஒரு நாளு நாங்க அப்பிடி உக்காந்து பேசிட்டு இருக்கும்போது சரசரன்னு ஒரு சத்தம். என்னடான்னு பாத்தா ஒரு அனகோண்டா எங்கருந்தோ தப்பிச்சி பீச் பக்கம் வந்திருச்சு. எனக்குன்னா ஒரே பயம். தடாருன்னு கையில இருந்த பீர் பாட்டிலைக் கீழ போட்டுட்டு அது மேல ஏறி நின்னுக்கிட்டு ஷங்கரைப் பாத்தேன். ஷங்கரைக் காணோம். பாத்தா மனுசன் என் மேல ஏறி நின்னுட்டு இருக்காரு.

ஆனா நம்ம பிரபா அந்த அனகோண்டா வாலைப் பிடிச்சித் தூக்கு தலைக்கு மேல நாலு சுத்து சுத்தி வீசுனாரு பாருங்க, அனகோண்டா கன்னா பின்னான்னு கதறிக்கிட்டு ஓடிருச்சி. அப்பல்லருந்து நாங்க அவர ஸ்நேக் பிரபா ஸ்நேக் பிரபான்னு கூப்புடுவோம்.

நாங்க மூணு பேரும் சேந்து செஞ்ச இன்னோரு விசயம் அங்க வர்ற பொண்ணுகளை பாக்குறது. சில நேரம் அரவிந்தும் எங்க கூட சேந்துக்குவாப்ல. அரவிந்தைத் தெரியுமா உங்களுக்கு. அரவிந்து ஒரு இரும்புக்கடை வச்சிருக்காப்ல. திருநெல்வேலி, சென்னை, பாம்பே, மலேசியால எல்லாம் அதுக்கு பிராஞ்ச் இருக்கு. அரவிந்துக்கும் சிவப்புச் சட்டைக்காரங்களுக்கும் ஆகவே ஆவாது. டெய்லி அவிங்கள எதாவது கிண்டல் பண்ணி கடை வாசல்ல போர்டு வச்சிருப்பாப்ல. அவிங்களும் கூட்டமா வந்து அவரு கடை வாசல்ல நின்னு கோஷம் போட்டுட்டுப் போயிருவாய்ங்க.

அரவிந்துக்கும் பொண்ணுகளுக்கும் ராசியே இல்லை. இப்பிடித்தான் பாருங்க ஒரு தாய்லாந்து பொண்ணை ரொம்ப நாள் ரூட்டு விட்டுக்கிட்டு இருந்தாப்ல. அந்தப் பொண்ணு போறப்ப வர்றப்ப எல்லாம் எதாவது கவிதை எழுதி அவ மேல் தூக்கி எறிவாப்ல. அதுவும் பொறுக்கிக்கிட்டு போயிரும். ஆனா ஒரு பதிலும் சொல்லாது.

ஒரு நா அந்தப்பொண்ணு ஜான்சி அக்காவைக் கூட்டிக்கிட்டு வந்திருச்சி. எனக்கும் ஷங்கருக்கும் அல்லு விட்டிருச்சி. ஏன்னா ஜான்சி அக்கா பயங்கரமான ஆளு. ஜான்சி அக்கா கையில அரவிந்து இது வரைக்கும் எழுதுன கவிதைத் துண்டு எல்லாம் இருக்கு. வந்தவுக அரவிந்த விட்டு லெஃப்டு ரைட்டு வாங்கிட்டாங்க. நான் என்.சி.சியில இருந்தவ. துப்பாக்கி சுடுறதுல ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்கியிருக்கேன். அது மட்டுமில்ல எனக்கு காவல்துறையிலயும் நீதித் துறையிலயும் ஆளுங்க நிறைய இருக்காங்கன்னு சொல்லி அரவிந்தை உண்டு இல்லைன்னு ஆக்கிட்டாங்க.

நான் இதை கேட்டுட்டு சும்மா இருந்திருக்கலாம். ஜான்சி அக்காவுக்கு சாரு ஜெ.மோவை விட சுய சொறிதல் ஜாஸ்தியா இருக்கும் போலன்னு பின்னூட்டம் போட்டுட்டேன்.

உடனே என்னை ஒரு மொற மொறச்சிட்டு அக்கா போயிட்டாங்க. நாங்க எங்க சைட் அடிக்கிறதைக் கண்டினியூ பண்ணோம்.

எனக்கு அங்க வர்ற பிலிப்பைன்ஸ் பொண்ணு மேல ஒரு கண்ணு. ஆனா அரவிந்து மாதிரி கவிதை எழுதி எறியிற அளவுக்கு எனக்கு தெகிரியம் இல்லை. கவிதை எழுதவும் வராது. சும்மா பாத்துக்கிட்டே இருப்பேன். அது என்னை பாக்குதா இல்லைன்னே தெரியாது. ஏன்னா அது எப்பவும் ஒரு கூலிங்க்ளாஸ் போட்டுட்டேத்தான் திரியும்.

நானும் பதிலுக்கு ஒரு கூலிங்க்ளாஸ் வாங்கி மாட்டுனேன். அப்ப அங்க நம்ம தம்பி பிரதாப் வந்தாப்ல. “என்னண்ணே என்னைக்கும் இல்லாத திருநாளா கூலிங் கிளாஸ் எல்லாம் போட்டுட்டு இருக்கீங்கன்னு கேட்டாப்ல.

நானும் இந்த மாதிரி இந்த மாதிரின்னு பிலிப்பைன்ஸ் மேட்டரைச் சொன்னேன். அவரு உடனே அண்ணே பிலிப்பினோவை நம்பாதிங்கண்ணே. கவுத்திருவாளுகன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு.

அவரு யோசனையக் கேட்டிருக்கணும். கேக்காமப் போயிட்டேன். அப்பத்தான் நம்ம எழுத்தாளர் அந்தப் பக்கம் வந்தாரு. எழுத்தாளர்னா தெரியும் தான? நம்ம விசா. அவருக்குத்தான் பெண் தோழிகள் அதிகமாச்சே. அவர்கிட்ட எதுனா யோசனை கேட்டு அந்த பிலிப்பினோவை மடக்கலாம்னு அவர்கிட்ட மெதுவா பேச்சக் குடுத்தேன். அவரு கைல ஒரு நைட்டி பார்சல் வச்சிருந்தாரு. “என்ன தலைவா? நைட்டி வச்சிருக்கிங்க. பப்ளிக் ப்ளேஸ்ல நைட்டில வரலாமான்னு கேட்டேன்.

அதுக்கு அவரு, நைட்டியில பப்ளிக்ல வர்றது தப்பான்னு கேட்டு ஒரு மூணு பக்கக்கதை சொன்னாரு. இவருக்கிட்ட கேட்டது தப்பாப் போச்சேன்னு. சரி பாஸு நைட்டியை விடுங்க, நாம எங்கயாவது போய் சாப்புடலாம்னு, அந்த பிலிப்பினோ சாப்புடுற ஸுஷி பாருக்குக் கூட்டிட்டுப் போனேன். என் கெட்ட நேரம் அந்தப் புள்ள அங்க வரலை. அதப் பாக்காத ஏக்கத்துல எனக்கும் சாப்பாடு எறங்கலை. மீதிய அப்பிடியே வச்சிட்டு வர வேணாமின்னு, சர்வர்கிட்ட அதக் கட்டிக் குடுக்கச் சொன்னேன். விசாவுக்கு ஒடனே கோவம் வந்திருச்சி. நம் சமூகத்தில் நம்மை விட மெலியவர்களிடம் நம் பணத்திமிரையோ உடல் வலிமையையோ அவசியமில்லாமல் பிரயோகிப்பது கொடுமையானதுன்னு சொல்லிட்டு கோவிச்சிட்டு எந்திரிச்சிப் போயிட்டார். இந்த ஓட்டல்ல இது வழக்கம்தாண்ணேன்னு நான் கத்திக்கிட்டே பின்னாடி ஓடுனேன். ஆனா பாருங்க அவரு பஸ் ஏறிப் போயிட்டாரு.

என்னடா பண்ணலாம்னு நான் ஷேவ் பண்ணி ரெண்டு நாளான என் தாடியைச் சொறிஞ்சிக்கிட்டே நின்னேன். அப்போ வேகமா ஒரு கார் என் முன்னால் வந்து சட்டுன்னு பிரேக் போட்டு - “இது கூட சுயசொறிதல் தானப்பா”ன்னு சொல்லிட்டு அடுத்த செகண்ட் வேகமாப் போயிருச்சி. பறந்து வந்து என் காலடியில விழுந்த ஆரஞ்சுப் பழத்தோலைப் பாத்ததும்தான் வந்துட்டுப் போனது ஜான்சி அக்கான்னு தெரிஞ்சிக்கிட்டேன்.

அவ்வளவு நேரம் பளீர்னு எரிஞ்சிக்கிட்டு இருந்த பல்பு பட்டுனு ஃபீஸ் போயிருச்சி.