Wednesday, December 2, 2009

2 ஜி பி மெமரி கார்ட் - தொடர் பாகம் ஐந்து

அத்தியாயம் - 4
அத்தியாயம் - 3
அத்தியாயம் - 2

அத்தியாயம் - 1காரை நிறுத்தி இறங்கிய அருண் ரமேஷையும் மாயாவையும் பார்த்து புன்னகைத்தான். 


அருண், நீங்க சொன்ன லாயர் இஸ் எக்ஸலண்ட். அவரோட அஸிஸ்டண்ட் வசந்த்தத்தான் அனுப்பினார். அவர் ரொம்ப ஈஸியா வெளிய கொண்டு வந்துட்டார். அண்ட் ஹி வாஸ் வெரி ஃபன்னி


ஆமா சார். விட்டா இவ அவர் கூடயே போயிருப்பா அத்தன ஜொள்ளு


ஓ அவர் எப்பயுமே அப்படித்தான். ஓக்கே ரமேஷ். நீங்க ஜாமீன்ல தான் வந்திருக்கிங்க. யூ ஆர் ஸ்டில் அன் அக்யூஸ்ட் இன் திஸ் கேஸ்


ஐ நோ இட் சர். உங்களுக்கு தாங்க் பண்ணிட்டுப் போலாம்னு தான் வந்தோம். இந்த கேஸ் சம்பந்தமா எப்ப என்ன ஹெல்ப் வேணும்னாலும் கேளுங்க. நான் செய்ய தயாரா இருக்கேன்


ஷ்யூர் ரமேஷ். ஐ வில் காண்ட்டாக்ட் யூ வென் நீடெட்.”


இருவரும் விடை பெற்று சென்றனர். மாயா ரமேஷின் இடுப்பைக் கட்டிய இறுக்கத்தில் அவளது சந்தோசம் தெரிந்தது.


சூரியன் தொலைந்து போய் நிலவு தைரியமாக உலா வரத் தொடங்கியிருந்தது. கம்ப்யூட்டரின் எலெக்ட்ரானிக் ஒளி அருணின் முகத்தில் வெள்ளை அடித்துக் கொண்டிருக்க அவன் கை விரல்கள் கீ போர்டில் நர்த்தனம் ஆடிக் கொண்டிருந்தன.


சுஷ்மாவின் ப்ளாக்கை மேய்ந்து கொண்டிருந்தான். அவள் ப்ளாக் முழுவதும் அவள் வழியில் பார்க்கும் சட்ட விரோத அல்லது சட்டத்துக்குப் புறம்பான செயல்களை அவள் செல்ஃபோனில் புகைப்படமாக எடுத்து இறைத்திருந்தாள். ஆனால் அவை அனைத்தும் ஹார்ம்லெஸ் குற்றங்கள். 


சாலையோரக் கடைகளில் லஞ்சம் வாங்கும் போலீஸ்காரர், திறந்து கிடக்கும் மேன்ஹோல், ரோடு போடக் கொட்டி வைத்திருக்கும் சல்லிக் கற்களை கூடையில் அள்ளிச் செல்லும் பெண், மஞ்சள் கோட்டைத் தாண்டி நிற்கும் ஆர்.ட்டி.ஓ வின் ஜீப் இப்படி.


அவளது பதிவுகளின் பின்னூட்டங்களில் அனானிமஸாக யாராவது எதுவும் மிரட்டல் விடுத்துள்ளனரா என்று பார்த்தான். அப்படி எதுவும் சிக்கவில்லை. காலையில் முதல் வேலையாக அந்த ஃபாலோயரைப் பார்த்து விசாரிக்க வேண்டும் அன்று முடிவெடுத்துக் கொண்டு படுக்கையில் விழுந்தான்.


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


ஷேவிங் செய்து கொண்டு இருக்கும்போது காலிங் பெல் அடித்தது. முகத்தைத் துடைத்துக் கொண்டு போய் கதவைத் திறந்தான். வாசலில் சிவா.


என்ன சிவா இவ்வளவு எர்லியா


காலைல எனக்கு வேற வேலை எதுவும் இல்ல. நீங்க குடுத்த அசைன்மெண்ட் ரெண்டையும் நேத்தே முடிச்சிட்டேன். உங்களுக்கு எதுவும் வேலை இருக்கா சர். நான் வேணும்னா போயிட்டு லெவன்க்கு வரேனே?


இல்ல சிவா. நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, நான் குளிச்சிட்டு வந்துடுறேன்


ஓக்கே சர்


குளித்து உடை மாற்றிக் கொண்டு வெளியே வந்த அருணைப் பார்த்ததும் புரட்டிக் கொண்டிருந்த புத்தகத்தை மேஜை மீது வைத்துவிட்டு எழுந்தான் சிவா.


போற வழியில ப்ரேக் ஃபாஸ்ட் முடிச்சிக்கலாம்” கார் சாவியை எடுத்துக் கொண்டு கதவைப் பூட்டிக்கொண்டு கிளம்பினார்கள்.


சொல்லுங்க சிவா. செல்ஃபோன் ஸ்கூட்டி ரெண்டயும் ட்ராக் பண்ணீங்களா?


யெஸ் சர். ஏர்டெல்ல காண்டாக்ட் பண்ணி சுஷ்மாவோட ஐ.எம்.இ.ஐ நம்பர வாங்கி, எல்லா செல்ஃபோன் ப்ரவைடர்ஸ்கிட்டயும் லொக் பண்ணி வச்சேன் சர். ஈவினிங்கே பல்லாவரத்துல யாரோ வோடோஃபோன் சிம்ம போட்டு யூஸ் பண்றதா தெரிஞ்சது. நானே அந்த அட்ரஸ் வாங்கி அவனப் போயி விசாரிச்சேன் சர். கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்ல யார் கிட்டயோ வாங்கி இருக்கான் சர். யார் கிட்ட வாங்குனான்னு தெரியல. அந்த செல்ஃபோன நான் வாங்கிட்டு வந்துட்டேன் சர்


அத ஸ்விட்ச் ஆன் பண்ணி எதாவது ஃபோட்டோ இல்ல வீடியோ இருக்கான்னு பாருங்க


சர் ஃபோன் மெமரில நத்திங் இண்ட்ரெஸ்டிங்க். அடிஷனல் மெமரி கார்டு எதுவும் இருக்குறதா தெரியல


இருவரும் சரவணபவனில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து ஆளுக்கொரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டனர்.


ஸ்கூட்டி?


ஸ்கூட்டி கண்டிப்பா திருடப்படலை சர். ஏன்னா எந்த வண்டி ஊருக்குள்ள திருட்டுப் போனாலும் புதுப்பேட்டை சர்க்கிள் இன்ஸ்பெக்டருக்கு ஒரு மால் போயிடுமாம் சர். அவரை விசாரிச்சதுல அவரோட லின்க்ஸ் எல்லாம் கற்பூரம் அடிக்காத குறையா சத்தியம் பண்றாங்களாம். அவங்கள மீறி வண்டி காணாமப் போகாது சர்


அருண் தலையில் அடித்துக் கொண்டான்.


இருவரும் காரில் ஏறியதும் சிவாவின் செல் கூப்பிட்டது.


ஹலோ!
.....
ஓ க்ரேட்
....
ஓக்கே
....
அட்ரஸ்
...
சொல்லச் சொல்ல பேனாவால் தனது மினி நோட்டில் எழுதிக்கொண்டான்


சர் வி காட் எ ப்ரேக் த்ரு


என்ன?


சுஷ்மாவோட ஸ்கூட்டி கிடச்சிடுச்சி சர்


எங்க இருக்கு?


வேளச்சேரி டு தாம்பரம் ரூட்டுல ஒரு ஒர்க் ஷாப்ல இருக்காம் சர். வைஷ்ணவிய கூப்பிட்டுருக்கான் . அவங்க நம்ம ஆஃபிஸ்ஸுக்கு கூப்பிட்டிருக்கங்க சர்


குட். நாம உடனே அங்க போலாம்


%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%


அது ஒரு சிறிய கடை. மூன்று டி.வி.எஸ் ஃபிஃப்டிகளும் ஒரு லாம்பி ஸ்கூட்டரும் நின்றிருந்தன. சுஷ்மாவின் ஸ்கூட்டி ஒரு ஒரமாக நின்றிருந்தது.


சிவாவின் யூனிஃபார்மைப் பார்த்ததும் டி,வி.எஸ் ஃபிஃப்டியின் சக்கரத்தைக் கீழே வைத்துவிட்டு எழுந்தான்.


வணக்கம் சார்


உம்பேரென்ன?


மணி சார்


எப்பிடி இந்த வண்டி உனக்குக் கிடச்சது?


அஞ்சி நாளைக்கு முன்னாடி கட மூடுற நேரத்துல ஒரு பொண்ணு வண்டியத் தள்ளிக்கிட்டு வந்திச்சி சார். அந்நேரத்துல நம்ம கட மட்டுந்தான். நான் அப்போவே ட்ர்ய் பண்ணி பாத்தேன். ஒடனே முடியிறா மாரி தெர்ல. வுட்டுட்டுப் போ நாளிக்கி வந்து வாங்கிக்கினு போன்னு சொன்னேன். சரின்னு என் செல்ஃபோன் நம்பர் வாங்கிகிட்டு போயிடுச்சி. மறுநா நம்ம மாமியாரு ஊர்ல செத்துப்போச்சின்னு பொண்டாட்டியோட போயிட்டேன். இன்னிக்குக் காத்தால தான் வந்தேன். இன்னாடா இந்தப் பொண்ணு நமக்கு ஃபோன் பண்ணக்காணுமேன்னு ரோசனயா இருந்திச்சி. சரி அத்தோட நம்பர் எதுனாக்கீதான்னு பாக்கலாம்னு பாக்ஸ் தொரந்து பாத்தேன். அதுல அந்தப் பொண்ணோட ட்ரைவிங் லைசென்சு இருந்திச்சி. அதுல இருந்த நம்பருக்கு ஃபோன் பண்ணப்போ தான் தெரிஞிச்சி அத்த யாரோ மர்டர் பண்ணிட்டாங்கோன்னு


வண்டியில வேற எதாவது க்ளூ இருக்கான்னு பாருங்க சிவா


ஆமா மணி. அந்தப் பொண்ணு வரும்போது எத்தன மணி இருக்கும்?


ஒம்பது இருக்கும் சார்


அந்தப் பொண்ணு எதுவும் பயந்த மாதிரியோ இல்ல கோவத்துல இருக்குற மாதிரியோ இருந்திச்சா?


அப்பிடியெல்லாம் இல்ல சார். கைல இருந்த போனுல யாருக்கோ கால் போட்டுட்டே இருந்திச்சி ஆனா கிடைக்கல போல


வேற எதுவும் கேட்டாளா?


ஆட்டோ எங்க கிடைக்கும்னு கேட்டுச்சி. நான் ஆட்டோ ஸ்டாண்டுக்கு ரொம்ப தூரம் போவணும். இந்தப் பக்கமா ஆட்டோ எதும் போனாத்தான் உண்டுன்னு சொன்னேன். அப்புறம் அது நம்ம தவமணியண்ணனோட ஷெட்டாண்ட நின்னுட்டு இருந்துச்சி. என் கூட சைக்கிள்ல வர்றியான்னு கெட்டேன். அது இல்ல டாக்ஸி கூப்பிட்டிருக்கேன். நான் போயிக்குவேன்னு சொல்லிச்சி. நானும் சரின்னு போயிட்டேன்


தவமணி ஷெட்டா? யாரு தவமணி?


இன்னா சார் இப்புடிக் கேட்டுப்புட்ட? தவமணியண்ணன் இந்த ஏரியா பெரும்புள்ளியில்ல?


அரசியல்வாதியா?


அய்ய அதெல்லாமில்ல. ரியல் எஸ்டேட்டு புரோக்கரு. ஆனா நல்ல காசு சார். ஆள் அம்புன்னு செல்வாக்கான ஆளு


ஐ சீ. என்ன சிவா எதாவது கிடச்சதா?


சர் செல்ஃபோன் வாங்கின பில் இருக்கு சர். கூடவே 2 ஜி.பி மெமரி கார்டும் வாங்கி இருக்காங்க சார்


(இன்னும் ஒரே ஒரு பாகம்தான்)


பி.கு - 1: இந்த அத்தியாயத்தில் பல க்ளூக்கள் உள்ளன. கொலையாளி யாராய் இருக்கும் என்று யூகித்து பின்னூட்டத்தில் போடுங்கள்


பி.கு - 2: இன்னும் வேறு மாதிரி கொண்டு போக வேண்டும் என்று தான் நினைத்தேன். கலகலப்ரியா போரடிப்பதாகச் சொன்னதால் கதையின் போக்கை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு விட்டேன். ஆகவே கதை உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் அதற்கு முழுப்பொறுப்பும் கலகலப்ரியா தான் (எப்பூடி?).

7 comments:

Unknown said...

மைக் டெஸ்ட்டிங் 1 2 3

கலகலப்ரியா said...

//இன்னும் வேறு மாதிரி கொண்டு போக வேண்டும் என்று தான் நினைத்தேன். கலகலப்ரியா போரடிப்பதாகச் சொன்னதால் கதையின் போக்கை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு விட்டேன். ஆகவே கதை உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் அதற்கு முழுப்பொறுப்பும் கலகலப்ரியா தான் (எப்பூடி?).//

திஸ் இஸ் டூ டூ டூ மச்...! த்ரீ மச்..! உங்களுக்கு போர் அடிச்சு சட்டு புட்டுன்னு முடிக்கலாமின்னு முடிவு பண்ணிப்புட்டு... இப்பூடியா...அவ்வ்வ்வ்..! (நிறைய clue இருக்கா... எதுக்கும் வீக்கெண்ட்ல ஒரு வாட்டி திரும்பப் படிச்சுப் பார்த்துட்டு சொல்றேன்..=))

அது சரி(18185106603874041862) said...

நல்ல வலைப்பின்னல் முகிலன்....

அது சரி(18185106603874041862) said...

//இன்னும் வேறு மாதிரி கொண்டு போக வேண்டும் என்று தான் நினைத்தேன். கலகலப்ரியா போரடிப்பதாகச் சொன்னதால் கதையின் போக்கை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு விட்டேன். ஆகவே கதை உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் அதற்கு முழுப்பொறுப்பும் கலகலப்ரியா தான் (எப்பூடி?).//

இது சூப்பரு :0))))

Unknown said...

@கலகலப்ரியா

ஹி ஹி ஹி

Unknown said...

@அதுசரி

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

கலகலப்ரியா said...

:((... next part poattaa.. parthu solliduvomla..!

'athu sari' profile la gun kooda irukkira eminem kolai panna chance illa... kaluththa aruththilla konnirkkaanga.. :>