Thursday, December 17, 2009

குளிர் காலமும் குழாய் வெடிப்பும்

பன் பிக்சர்ஸ் பலாநிதி சாரன் வழங்கும்,
மையத் தளபதி முகிலன் நடிக்கும்
குழாய் ரிப்பேர்.


ஒப்பன் பண்ணா ஏரியல் வியூவுல பூமியக்காட்டுறோம். அப்பிடியே ஜூம் பண்ணி நார்த் அமெரிக்கா, யூ.எஸ், நியூ யார்க், ராச்செஸ்டர்னு வந்து அந்த வீட்டுக்கு மேல கேமராவ நிறுத்துறோம். வீட்டுக் கூரை, ரோடு எல்லாம் ஸ்நோ. ஸ்லோவா ஒரு கார் ரோட்டுல போகுது. அந்தக் கார் க்ராஸ் பண்ண உடனே கேமரா கீழ வந்து வீட்டோட முன் பக்கத்த வைடு ஆங்கிள்ல காட்டுறோம். அப்பிடியே ஜூம் போயி கதவோடக் கைப்பிடில நிறுத்துறோம். கைப்பிடி திரும்புது. கதவு மெதுவா திறக்குது. 


ஜூம் அவுட் ஆகுறோம். கதவு திறந்து - கில்லில தேவை இல்லாம மெட்றாஸோட மொட்ட வெயிலுல டாக்டர் விஜய் போட்டுட்டு வர்றா மாதிரி - ஒரு ஜெர்க்கின் போட்டுட்டு ஒரு உருவம் வருது. அது கையில என்னவோ ஒரு பொருள வச்சிருக்கு. 


வீட்டுக்கு முன்பக்கத்துல ஒரு குழாய்ல ஒரு ஹோஸ் பைப்பு மாட்டி சுத்தி வச்சிருக்கு. அந்த ஹோஸ் பைப்போட இன்னொரு முனைல ஒரு வாட்டரிங்க் நாஸ்ஸில் இருக்கு. வெளிய வந்த அந்த உருவம் தன் தலைல இருக்குற ஹூட எடுத்ததும் தியேட்டர்ல க்ளாப்ஸ் பறக்குது. அவர்தான் நம்ம ஹீரோ. கேமராவப் பாத்து - செஞ்சிடலாமா? - அப்பிடின்னு கேட்டுட்டு, குழாய திறக்குறாரு. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்னு சத்தம். தண்ணி வர்ற சத்தம். அந்த நாஸ்ஸில கைல எடுத்து ஸ்க்ரீன நோக்கி அழுத்துறாரு. எல்லாரும் ஸ்க்ரீன்ல தண்ணி தெறிக்குனு நினப்பாங்க அதுதான் இல்ல. தண்ணியே வரல. என்னான்னு பாத்துட்டு - ஓ ஹோஸுக்குள்ள முந்தி இருந்த தண்ணி ஃப்ரீஸ் ஆயிடுச்சி போல. ஆனா நான் ஒரு முடிவு எடுத்துட்டா என் பேச்சை நானே கேக்க மாட்டேன்னு ஸ்கிரீனப் பாத்து சொல்லிட்டு, பின்னாடி இருக்குற பைப்புல போயி அந்தப் பொருள கழுவப்போயிடுறாரு.


அவரு போறத ஸ்டேஷனரியா கேமராவ வச்சி அவரு முதுக மட்டும் காட்டுறோம். அவரு போகவும் முன்னாடி இருக்குற பைப்ப ஜூம் பண்ணிட்டு கட் பண்றோம்.


இப்போ வீட்டுக்குள்ள ஷாட். ஃபாஸ்ட் ஃபார்வர்ட்ல, ஹீரோ ஹீரோயின் குழந்தை மூணு பேரும் கிளம்பி கார்ல ஏறி மாலுக்கு போற வரைக்கும் காட்டுறோம். இப்போ மாலுக்குள்ள ஒரு சாங். மால் எம்ப்ளாயீஸா இருக்குற வெள்ளக்காரங்களையும் வேட்டி சேல கட்டி ஆட வுடுறோம். பாட்டு முடிஞ்சதும் கட் பண்றோம்.


இப்போ ஸ்க்ரீன் இருட்டா இருக்கு. பேக்க்ரவுண்ட்ல எதோ மோட்டார் ஓடுற மாதிரி ஒரு இரைச்சல். கதவு திறக்குற சத்தம் (ரசூல் பூக்குட்டி புண்ணியத்துல இதெல்லாம் தெளிவா கேக்கும்).  ஸ்விட்ச் போடுற சத்தம். ரூமே வெளிச்சம் ஆகுது. கதவத் திறந்துட்டு ஹீரோ உள்ள வர்றாரு. பின்னாடியே ஹீரோயின் குழந்தையோட.


என்ன சத்தம் அப்பிடின்னு கேட்டுட்டு ஹீரோ அலர்ட் ஆகுறாரு. தட தடன்னு வீடு முழுக்க ஓடுறாரு. பேஸ்மெண்ட்ல போய் பாத்தா பைப் ஒடஞ்சி தண்ணி கொட்டுது. பேஸ்மெண்ட் எல்லாம் தண்ணி. “ஆஆஆஆஆஆஆ”ன்னு அங்கயே மண்டி போட்டு சத்தமா கதறி அழுவுறாரு. பின்னாடியே வந்த ஹீரோயின் அவரு தோள ஆறுதலா தட்டுறாங்க. 


அப்பிடியே ஒரு சோகப் பாட்டு. யாருமே இல்லாதக் காட்டுக்குள்ள ஹீரோ நிலாவையும் ஏரியையும் பாத்துக்கிட்டே சால்வைய சுத்திக்கிட்டு பாடுறாரு.


பாட்டு முடிஞ்சதும் ஹீரோயின் ஹீரோவப் பாத்து - “எதாவது பண்ணு. உன்னால கண்டிப்பா முடியும். உன்னால முடியாதுன்னா எந்தத் தலயாலும் முடியாது” அப்பிடிங்கிறாங்க. கேட்டதும் நம்ம ஹீரோ வீரமா எந்திரிக்கிறாரு. இப்போ ஹீரோவ ஃப்ரீஸ் பண்ணிட்டு குழாயத்திறந்தது, நாஸ்ஸில அழுத்துனது, குழாய மூடாமப் போனது இதையெல்லாம் ஸ்லைட் ஷோவா ஹீரோ மேல ஓட்டுறோம். ஸ்லைட் ஷோ முடிஞ்சதும் ஹீரோ வேகமா மாடிக்கு ஏறிப்போறாரு. சும்மா பறந்து பறந்து அந்தக் குழாயோட சண்ட போட்டு ஒரு வழியா அத மூடிடுறாரு. இப்போ தண்ணி கொட்டுறது நின்னுடுச்சி. ஹீரோ கீழ வந்து ஹீரோயின்கிட்ட எப்பிடி வெளிய இருக்குற குழாயோட ஷட் ஆஃப் வால்வ் ஒடஞ்ச பைப்புக்கு இந்தப் பக்கம் இருக்கு. அத மூடினதும் எப்பிடி தண்ணி நின்னுடுச்சின்னு எக்ஸ்ப்ளெயின் பண்றாரு. கேட்டுட்டு ஹீரோயின் ஹீரோவ பெருமையா பாக்குறாங்க.


அப்பிடியே கட் பண்ணி ரெண்டு பேரும் சஹாரால போய் ஒரு டூயட் பாடுறாங்க.


டூயட் முடியப்போற நேரம் அதாவது பல்லவி மறுபடி வர்றப்போ ரெண்டு பேரும் வீட்டுக்கே வந்து பேஸ்மெண்ட்லயே ஆடுறாங்க. அப்பிடியே பாடிட்டே மேல ஏறி போறாங்க. அப்போ கேமரா அப்பிடியே அந்த பைப்ல ஏற்பட்டு இருக்குற க்ராக்ல போய் நிக்குது. அந்த க்ராக்குக்கு உள்ள இருந்து இடைவேளைன்னு எழுத்து வந்து இண்ட்டர்வல் விட்டிடுறோம்,


காலைல எழுந்ததும் நம்ம ஹீரோவுக்கு தலைக்கு ரைட்ல சிஜில ஒரு க்ளௌட் போட்டு அதுல க்ராக் விட்ட பைப்பக் காட்டுறோம். சட்டுன்னு எந்திரிச்சி ஹீரோ பல இடங்களுக்கும் போறாரு. அந்த வில்லன எப்பிடி ஒழிக்கிறதுன்னு தெரிஞ்சிக்க. கடைசியில ஒரு குங்ஃபூ மாஸ்டர்கிட்ட அந்த வித்தைய கத்துக்கிறாரு. 


அந்த மாஸ்டர் சொன்னபடி ஹோம் டிப்போ போயி சில பல சாமான்களை வாங்கிக்கிறாரு. வீட்டுக்கு வந்து தண்ணி வர்ற இன்லெட்ட ஆஃப் பண்ணிட்டு அந்த க்ராக் விழுந்த பைப்புல க்ராக்குக்கு ரெண்டு பக்கமும் அறுக்குறாரு.


இப்போ பேக்ரவுண்டுல ஒரு தன்னம்பிக்கை சாங் - சிங்கம் ஒன்று புறப்பட்டதே மாதிரி - போடுறோம். அந்த சாங் முடியிறதுக்கும் அந்தப் பைப்பு கட் ஆகுறதுக்கும் சரியா இருக்கு. நெத்தில வழியிற வேர்வைய துடச்சிக்கிறாரு. ஜெயிச்சிட்டோம்னு நினைக்கும்போது இன்னொரு சிக்கல்.


வெளியில இருக்குற குழாயில இருந்து உள்ள இருக்குற ஷட் ஆஃப் வால்வுக்கு ஒரு ராட் வருது. அது ஹீரோ அறுத்த அந்த பைப் துண்ட வெளிய எடுக்க விடாம தடுக்குது. என்ன பண்றதுன்னு ஹீரோவுக்குத் தெரியல. மாஸ்டருக்கு ஃபோன் போடுறாரு. அவர் சொன்ன அறிவுரையக் கேட்டுட்டு அத செய்ய வீட்டுக்கு வெளிய போறாரு. ஹால்ல உக்காந்து டி.வி பாக்குற ஹீரோயின் வெளிய எங்க போறன்னு கேக்குறாங்க. போயிட்டு வந்து சொல்றேன்னு சொல்லிட்டு நிக்காமப் போறாரு. ஹீரோயின் ஹீரோவோட முதுகையே பாக்குறாங்க. கேமராவ ஹீரோ முதுகுல இருந்து pan பண்ணி ஹீரோயின் முகத்துல க்ளோஸ் அப் பண்ணி நிறுத்துறோம். மெல்ல ஒரு நாலு வரி சாங்க பேக் க்ரவுண்ட்ல போடுறோம்.


கட் பண்ணி ஹீரோ என்ன பண்ராருன்னு காட்டுறோம். கஷ்டப்பட்டு அந்த ராடக் கழட்டிடுறாரு. இப்போ மறுபடி பேஸ்மெண்ட் போயி கட் பண்ண பைப்ப எடுத்துட்டு ஷார்க் பைட் ஸ்டாப் எண்ட் - அந்த பைப்பையே மொத்தமா க்ளோஸ் பண்ண - மாட்டுறாரு. ஆனா மறுபடியும் ஒரு சிக்கல். வாக்கிட்டு வந்த ஸ்டாப் எண்ட் பைப்ப விட பெருசா இருக்கு. மாட்டுனா லூஸா இருக்கு. ஹீரோ தலைல கைய வச்சிட்டு உக்கந்துடுறாரு. அவரோட ஃபேஸ் க்ளொஸ்-அப்ல ஒரு மூணு வரி சாங் பேக் க்ரவுண்ட்ல ஓடுது.


ஹீரோயின் வந்து என்ன ஆச்சின்னு கேக்குறாங்க. விசயத்த சொல்றாரு. இத ஃபுல்லா கட் ஷாட்லயே காட்டுறோம். மணி ஏழு ஆயிடுச்சி. இனிமே போனா கடை பூட்டி யிருப்பாங்க. சின்ன சைஸ் ஸ்டாப் எண்டும் கிடைக்காது. என்ன பண்றதுன்னு தெரியல. மறுபடி மாஸ்டரக் கூப்பிடுறாரு. மாஸ்டர் அந்த ராடை மறுபடி மாட்டிடு. காலைல சின்ன சைஸ் ஸ்டாப் எண்ட் வாங்கிக்கலாம்னு சொல்றாரு. ஆனா அந்தோ பரிதாபம் ஆர்வக் கோளாறுல அந்த மெக்கானிசத்த உடச்சிட்டாரு ஹீரோ. 



இப்ப எல்லாரும் கைல ஒரு கொசுவத்திய எடுத்து கண்ணு முன்னாடி வச்சி சுத்திக்கிங்க. (கொசுவத்தி இல்லாதவங்க என்ன பண்றதுன்னு எல்லாம் கேக்கப்படாது ப்ரியா. கொசுவத்தின்னு நினச்சிக்கிட்டு எதயாவது சுத்திக்குங்க)

2004ம் வருஷம். அப்போ இந்தியாவுல பெங்களூர்ல இருக்கோம். கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகுது. ஊர்ல எங்கப்பா ஒரு வீடு கட்டுறதுக்காக பூமி பூஜை போடுறாரு. நானும் தங்கமணியும் ஊருக்குப் போயிருந்தோம். பூமி பூஜை போட வந்த ஒரு சாமியாரு - EBல வேலை பாத்துட்டு இருந்துட்டு ரிட்டயர் ஆன உடனே ஃபுல் டைம் சாமியாராகிட்டாரு. வழக்கம்போல குறி சொல்றது, ஜோசியம் பாக்குறது, பரிகாரம் பண்றதுன்னு பொழப்ப ஓட்டிட்டு இருக்காரு. அவர் கிட்ட என்னையும் தங்கமணியையும் கையக் காட்டச் சொன்னாரு எங்கப்பா. அமெரிக்காவுக்கு கிளம்புறதுக்கான முயற்சிகள் இருந்ததனால ஜோசியம் பாத்துடணும்னு எங்கப்பா ஆசை. சரி அவர் ஆசையைக் கெடுப்பானேன்னு கைய நீட்டுனோம்.

முதல்ல என் கைய பாத்தவரு “இவருக்கு பணம் பல வழியிலயும் தங்கு தடையில்லாம வரும். ஆனா வந்த வேகத்துல போயிடும் [இதுக்கு எதுக்கு வரணும்]. வேலைல பெரிய பெரிய பதவிக்குப் போவாரு [இதத்தான எல்லாருக்கும் சொல்றீங்க. எல்லாரும் பெரிய பதவிக்குப்போயிட்டா சின்ன வேலையெல்லாம் யாரு பாக்குறது]” அப்பிடின்னு சொன்னாரு.

சும்மாவே தங்கமணி நம்மள செலவு பண்றதுக்காக பர்ஸ்னு நினக்கும்போதெல்லாம் திட்டுற ஆளு. இதுல இந்த சாமியாரு வேற பெட்ரோல் டேன்க்குக்குள்ள சீனிய அள்ளிப் போட்டுட்டாரு. 

அப்புறம் தங்கமணி கையப் பாத்தாரு. பாத்தவரு தங்கமணிக்கு சொல்லவேண்டியது தான. அத விட்டுட்டு என்னயப் பாத்து - “நீங்க நல்லா இருக்கணும்னா இவங்க பேச்ச கேட்டு நடங்க. சக்தி பேச்ச மீறி நடந்தா எதுவுமே உருப்படியா இருக்காது.” அப்பிடின்னு என் தலையில ஒரு லிட்டில் பாயை இறக்கிட்டுப் போயிட்டாரு. 

மினி குறிப்பு: நீளம் கருதி இந்த ஃப்ளாஷ் பேக்க படத்துல வெட்டிட்டாங்க. அதான் வேற ஸ்டைல்ல இருக்கு.
இப்போ கொசுவத்திய மறுபடி சுத்திக்குங்க.

ஹீரோயின் ஹீரோவப் பாக்குறாங்க. வெளிய போகும்போதே எதுக்குப் போறேன்னு கேட்டேனே. அப்போவே இந்த மாதிரின்னு விசயத்தச் சொல்லியிருந்தா நான் நிறுத்தியிருப்பேனே. எம்பேச்சக் கேட்டுருந்தா இது நடந்திருக்குமா? அப்பிடின்னு கேக்குறாங்க. ஹீரோயின் டயலாக் பேசும்போது கேமரா ஹீரோ முகத்துக்கும் ஹீரோயின் முகத்துக்கும் pan ஆகிட்டெ இருக்கு.

ஹீரோ அவரோட ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரக் கூப்பிட்டிட்டு வந்து என்னென்னவோ ட்ரை பண்றாரு. எதுவும் ஒர்க் அவுட் ஆகல. காலைல எழுந்து பாத்துக்கலாம்னு ஹீரோவும் ஹீரோயினும் நடந்து மேல போறாங்க. அப்போ இன்னொரு அஞ்சி வரி சோகப்பாட்டு. 

கனவுல ஹீரோவுக்கு ஒரு யோசனை வருது. காலைல எழுந்ததும் ஹீரோ கார எடுத்திட்டு நேரா ஹோம் டெப்போ போறாரு. போகும்போதே கட் பண்ண பைப் எடுத்துட்டு போய் அளவு பாத்து அதுக்கு சேர்ற மாதிரி ஸ்டாப் என்ட் தேடுறாரு. ஆனா கிடைக்கல. ஒண்ணு பெருசா இருக்கு இல்ல சின்னதா இருக்கு. அங்க வேல பாக்குற ஒரு ஆள் கிட்ட கேட்டதும் அவர் சொல்றாரு - இந்தப் பைப் எக்ஸ்பேண்ட் ஆயிடுச்சி. அதுனால நீ அதுக்குப் பின்னால எங்க பைப் நார்மல் சைஸ்ல இருக்கோ அங்க வெட்டுன்னு சொல்லிட்டாரு. உடனே ஹீரோ புத்துணர்ச்சியோட - மறுபடி அந்தத் தன்னம்பிக்கை சாங் பேக்ரவுண்ட்ல வீட்டுக்கு வர்றாரு. வந்தக் கையோட பைப்ப அறுத்து ஸ்டாப் எண்ட போட்டு அந்த க்ராக் வில்லனோட கதைய முடிச்சிடுறாரு. 

ஹீரோ ஹீரோயின் குழந்தையோட ஒரு சந்தோசமான பாட்டு பாடுறதோட படம் முடிஞது.

பி.கு-1: இந்தப் படத்துல இருந்த பல அனல் பறக்குற அரசியல் வசனங்களை பன் பிக்சர்ஸ் கட்டாயத்தின் பேர்ல எடுத்துட்டோம். அதுனால படம் உப்புச் சப்பில்லாம இருக்குன்னு தோணிச்சின்னா கையில கொஞ்சம் மிளகாய்ப் பொடியோட பாருங்க.

பி.கு-2: இந்தப் படத்தோட அடுத்த பாகம் - கார்டன் ஹோஸ திரும்ப மாட்டுறதப் பத்தி அடுத்த ஸ்ப்ரிங்ல வெளியாகும்னு மறுபடியும் எச்சரிக்கை.

12 comments:

மணிஜி said...

ம்ம்ம்ம்ம்ம்முடியலை

Anonymous said...

//(ரசூல் பூக்குட்டி புண்ணியத்துல இதெல்லாம் தெளிவா கேக்கும்).//

பெரிய பட்ஜெட் படம் போல இருக்கு. ஹீரோ முகிலன் சீனியர்னு நல்லாவே தெரியுது. :)

vasu balaji said...

இத்தன களேபரத்துல குட்டிப் பயல விட்டுட்டு லொகேஷன் மாத்தி மாத்தி டூயட்டாம்ல. ஆனாலும் சாங்க்ஸ் அதிகம். விஜய டி ராஜேந்தர் படமா? ஹூஊஊம். ஆயிரம் சங்கடமிருந்தாலும், நம்மூருன்னா முன்சாமிய கூப்டலாம். இங்க இப்புடித்தான்.:))

ப்ரியமுடன் வசந்த் said...

செம்ம...

க்ராக்கிட்டீங்க...!

:))))))))))))

Unknown said...

//தண்டோரா ...... said...
ம்ம்ம்ம்ம்ம்முடியலை
//

வருகைக்கு நன்றி சார்.

Unknown said...

// சின்ன அம்மிணி said...
//(ரசூல் பூக்குட்டி புண்ணியத்துல இதெல்லாம் தெளிவா கேக்கும்).//

பெரிய பட்ஜெட் படம் போல இருக்கு. ஹீரோ முகிலன் சீனியர்னு நல்லாவே தெரியுது. :)
//

பெரிய பட்ஜெட் படத்துல போயி பொடிப்பயல யாராவது ஹீரோவா போட முடியுமா? அதான் முகிலன் சீனியர் ஹீரோ.

Unknown said...

//இத்தன களேபரத்துல குட்டிப் பயல விட்டுட்டு லொகேஷன் மாத்தி மாத்தி டூயட்டாம்ல. //
ப்ரொட்யூசர் சரியா சம்பளம் குடுக்கலைன்னு குட்டி முகிலன் பயங்கர கால்ஷீட் சொதப்பல். அதான் அவர் இல்லாம நெறைய சீன் ஷூட் பண்ண வேண்டியதாயிடுச்சி.

//ஆனாலும் சாங்க்ஸ் அதிகம். //
என்ன பண்றது இப்போ தியேட்டர்க்குள்ள ஸ்மோக் பண்ணக் கூடாதாம்மே. அதான் னிறைய பாட்டு போட்டு ஹெல்ப் பண்ணியிருக்கோம்.
//விஜய டி ராஜேந்தர் படமா?//
இந்தக் கேள்வி கேட்டதுக்கு நீங்க கை வச்சிக்கிட்டு இருக்குற சேரத் தூக்கி அடிச்சிருக்கலாம்.

//ஆயிரம் சங்கடமிருந்தாலும், நம்மூருன்னா முன்சாமிய கூப்டலாம். இங்க இப்புடித்தான்.:))//
அத சொல்லுங்க. எல்லாரும் என்னவோ அமெரிக்காவுல நாங்க எல்லாம் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்குறதா நினைக்கிறாங்க.

Unknown said...

// பிரியமுடன்...வசந்த் said...
செம்ம...

க்ராக்கிட்டீங்க...!

:))))))))))))
//

தேன்க்ஸ் வசந்த். உங்க ப்ரொஃபைல் ஃபோட்டொல நீங்க ஒரு ஹீரோ மாதிரி தான் இருக்கிங்க. நம்ம அடுத்த படத்துல நடிக்கிறீங்களா?

கலகலப்ரியா said...

//தண்டோரா ...... said...

ம்ம்ம்ம்ம்ம்முடியலை//

நான் சொல்ல வேண்டியது தண்டோரா சொன்னத வன்மையாகக் கண்டிக்கிறேன்...!

முடியல சாமியோ..! (இவ்ளோ நீஈஈஈஈஈஈஈஈஈஈஈளமா ஒரு சினிமாவா தாங்காது சாமியோ.... இடைவேளைலயே அப்பீட் ஆகும் அபாயம் உண்டு சாமியோ...)

Unknown said...

// கலகலப்ரியா said...
//தண்டோரா ...... said...

ம்ம்ம்ம்ம்ம்முடியலை//

நான் சொல்ல வேண்டியது தண்டோரா சொன்னத வன்மையாகக் கண்டிக்கிறேன்...!
//

லேட்டா வந்தா வட போயிரும்..


/முடியல சாமியோ..! (இவ்ளோ நீஈஈஈஈஈஈஈஈஈஈஈளமா ஒரு சினிமாவா தாங்காது சாமியோ.... இடைவேளைலயே அப்பீட் ஆகும் அபாயம் உண்டு சாமியோ...)
//
அதெல்லாம் தமிழ் மக்கள் பாப்பாங்க. அவங்க ரொம்ப நல்லவங்க

சுரபி said...

:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D

Unknown said...

சுரபி said...
:D:D:D:D:D:D:D:D

முதல் வருகைக்கு நன்றி