Thursday, December 24, 2009

கலகலப்ரியாவின் கவிதைகள் - விளக்கம்

கலகலப்ரியா எனக்கு ஒரு அசைன்மெண்ட் குடுத்தாங்க. அவங்க கவிதைக்கு விளக்கம் எழுதச் சொல்லி. அதை ஒரு பதிவாத் தட்டி விட்டுடலாம்னு தொடங்கிட்டேன். பின் விளைவுகளுக்கு ப்ரியாவே பொறுப்பு 


பிக்காஸோ ஒரு மாடர்ன் ஆர்ட்டிஸ்ட். அவரது அப்ஸ்ட்ராக்டான ஓவியங்கள் அதை ரசிப்பவர்களுக்கு அவரவர் மனநிலைக்கேற்ப புரியும் ஒரு முறை பிக்காஸோவின் ஓவியம் ஒன்றை சுற்றி ஒரு கூட்டம் நின்று கொண்டு அந்த ஓவியம் எதைச் சுட்டுகிறது என்று வாதம் செய்து கொண்டிருந்தது. அங்கே வந்த பிக்காஸோவிடமே விளக்கம் கேட்டார்களாம். அந்த ஓவியத்தை உற்றுப் பார்த்த பிக்காஸோ ஓவியம் தலை கீழாக இருக்கிறது என்று திருப்பி மாட்டினாராம்.


கலகலப்ரியாவோட கவிதைகள் பிக்காஸோ ஓவியங்கள் மாதிரி - நீங்கள் என்ன மனநிலையில் இருந்து அந்தக் கவிதையை வாசிக்கிறீர்களோ அந்த மனநிலைக்கேற்ற படி ஒரு பொருள் விளங்கும்.(சத்தியமா இது பாராட்டுதாங்கோ)


கவிதை - 1
//
சாதாரண விட்டத்தில்..
பாதியே கொண்ட..
மூக்குத் துவாரம் வழியே..
உட்கொண்ட பிராணவாயு..
நுரையீரலில்..
சொற்ப அளவிலேயே..
சேமிக்கப் பட்டிருக்க..

//
நல்லா மூச்சை இழுத்துப் பிடிக்காம கொஞ்சமே கொஞ்சூண்டு மட்டும் நுரையீரல்ல சேத்துக்கிட்டு
//
சமுத்திரத்தின்..
ஆழம் அறியாது..
கால் விட்டு..
முன்னேற்பாடு ஏதுமற்று..
சுழி ஓட ஆரம்பித்து..
//

கடல்னு தெரியாம கம்மான்னு நினச்சி காலவிட்டு ஆக்ஸிஜன் சிலிண்டரோ டைவிங் சூட்டோ இல்லாம் உள்ள போயி
//
முத்துக் குளிப்பதோ..
முரல்கள் பிடிப்பதோ..
குறிக்கோள் ஏதுமின்றி..
நீரின் மூல தாதில்..
மூச்சுக் காற்றை..
மட்டும் பிரித்து உறிஞ்சி..
மேலும் கீழும்..
அளைந்து துழாவி..
//

முத்து எடுக்கவோ மீன் பிடிக்கவோ குறிக்கோள் இல்லாம, H2Oல ஆக்ஸிஜன் மட்டும் பிரிச்சி மேலையும் கீழையும் போய் வந்து
//
பாசிகள் படர்ந்த..
பாறையின் மீது..
கூழாய்க் கிடந்த..
கடற் சிலந்தி கண்களில்..
கருணையே உருவான..
யோகியைக் கண்டு..
கடற்பாசி விலக்கி..
நீந்தி நெருங்கி...
நிமிர்ந்து பார்க்க..
//

பாசி படர்ந்த ஒரு பாறை மேல கூழ் மாதிரி கிடந்த ஆக்டபஸ்ஸோட கண்ணுல கருணையே உருவான யோகி (அமீர் நடிச்ச படம் இல்ல) யப் பாத்து கடல் பாசிய விலக்கி பக்கத்துல நெருஙிப் போய் நிமுந்து பாத்தா
//
அசைந்த கூழில்..
ஆயிரம் கைகள்..
நீண்டு நெளிந்து..
சுருண்டு வளைந்து..
விரிந்து சுருங்கி..
விழுங்க விரைய..
//

அந்த ஆக்டபஸ் அசஞ்சி அதோட கைய நீட்டி நெளிச்சு, சுருண்டு வளஞ்சி, விரிஞ்சி சுருங்கி, என்ன விழுங்க வர,
//
நனவா கனவா..
நம்ப முடியாது..
கீழே பார்க்க..
கடலினடியில்..
இராட்சத பிம்பம்..
//

நடக்குறது கனவா இல்ல நனவான்னு நம்ப முடியாம கீழ பாக்க கடலுக்கடியில பெரிய உருவம்
//
தன்னிச்சையாய்..
உதறி விலகி..
பாறை தொற்றி..
பாசி போர்த்தி..
அருகே நோக்க..
சிலந்தி கையில்..
சர்ப்பமொன்று..
சக்கையாகி..
மாயமானது..
//

தன்னிச்சையா உதறி விலகி பாசிக்குள்ள போய் ஒளிஞ்சிக்கிட்டு பக்கத்துல பாத்தா ஆக்டோபஸ் கைல பாம்பு ஒண்ணு சக்கையாகி மாயமாப் போச்சி.
//
ஆழ் கடலின்..
மணல் மேட்டில்..
இராட்சத நிழற்குடை..
அங்கும் இங்கும்..
கடற் தாவரம்...
சிண்டு நண்டு..
சிப்பி முத்துடன்..
பவளப் பாறைகளும்..
//

கடலோட ஆழத்துல மணல் மேட்டுல அந்த ஆக்டொபஸ் ஒரு ராட்சத நிழல்குடை மாதிரி நிக்க, அங்கயும் இங்கயும் கடல் தாவரம், நண்டு, சிப்பி, பவளப் பாறை இதெல்லாம் இருக்க
//
நாளத்தின் குருதி..
நாடியை நாட..
இதயம் தவித்து..
இறைஞ்சி நிற்க..
சுவாசப் பை..
கையை விரித்தது..
//

ரொம்ப நேரம் தண்ணியிலயே (கடலுக்குள்ளங்க டாஸ்மாக்ல இல்ல) இருந்ததுனால ரத்தத்துல ஆக்ஸிஜன் இல்லாம இதயம் கஷ்டப்பட, நுரையீரல் அம்புட்டுத்தான் என் கிட்ட காத்துன்னு கை விரிச்சிடுச்சி
//

படர்ந்திருந்த..
பாசியுடன்..
அச்சம் விலக்கி..
அடி வரை சென்று..
சிப்பியுடன் சிப்பியாக..
முத்தொன்று..
மேலெழுந்து..
சிலந்தி விழியில்..
விழுந்து தெறித்து..
மேலே மேலே..
மேலே சென்றது..

//
மேல மூடியிருந்த பாசியோட பயத்தையும் விலக்கிட்டு அடி வரைக்கும் போய் சிப்பியோட சிப்பியா செட்டில் ஆகிட (அதாம் மூச்சுத் திணறிடுச்சே) உடம்புல இருந்த உயிர் சிப்பில இருந்து கிளம்புன முத்து மாதிரி மேல மேல போயிடுச்சு.


இவ்வளவு நேரம் வெளிப்படையான அர்த்தம் மட்டும் பார்த்தோம். இப்போ உள்குத்து என்னான்னு பாப்போம்.
டிஸ்கி: பிக்காஸா ஓவியத்துக்கு பாக்குறவங்க அர்த்தம் கண்டு பிடிக்கிற மாதிரி இது. முழுக்க முழுக்க என் பெர்செப்ஷன். கலகலப்ரியா இதைத்தான் சொல்லவந்தாங்களான்னு எனக்குத் தெரியாது.


ஒரு விசயத்தை செய்ய தேவையான அளவு சக்தியைத் திரட்டிக்காம இருந்துட்டு, எதிரியோட பலத்த குறைச்சி மதிப்பிட்டு, ஆழம் தெரியாமக் கால விட்டுட்டு, ஒரு விஷமமான ஆளப் பாத்து அவரு ஒரு யோகி(இனத்தலைவரு), நம்ம காப்பாத்துவாருன்னு நெனச்சி கடைசியில அது ஒரு கசுமாலம்னு தெரிஞ்சி சுதாரிக்கறதுக்குள்ள உயிர் போயிடுச்சி. 

29 comments:

Unknown said...

பாராட்டுக்களும், (குறிப்பாக) திட்டுக்களும் கலகலப்ரியாவையே சாரும்..

பின்னோக்கி said...

நீங்க இப்ப பண்ணியிருக்கிற விஷயம் என்னனு உங்களுக்கு தெரியுமா ? எவ்வளவு பெரிய இலக்கிய சேவைன்னு உங்களுக்கு புரியுதா ?.

நான் கலகலப்ரியா அவர்கள் எழுதும் கவிதை படிச்சுட்டு, சைலண்டா வந்துடுவேன். பின்னூட்டம் போடனும்னா புரியனும் இல்லையா. அவங்க வேற ரேஞ்சுக்கு கவிதை எழுதுவாங்க. என் கவிதை அறிவு எண்டர் கவிதைகளோட நிக்குது.

கோனார் நோட்ஸ் மாதிரி, முகிலன் நோட்ஸ்னு விடுங்க. நான் 1 காப்பிக்கு இப்பவே அட்வான்ஸ் கொடுத்திட்டேன்.

குடுகுடுப்பை said...

இதுவும் ஈழப்போராட்டத்தை நிறுத்தி எழுதியதாகவே எனக்குப்படுகிறது

நட்புடன் ஜமால் said...

இப்படியெல்லாம் கிளம்பிட்டீங்களா


பல பதிவர்கள் இருக்காங்கங்க

விளக்கம் எழுதுங்களேன் ...

vasu balaji said...

30% mark. செகண்ட் அட்டெம்ப்ட் அலவ்ட். ஒரு கணேஷ் போய் இப்படி சொதப்பலாமா?
/உடம்புல இருந்த உயிர் சிப்பில இருந்து கிளம்புன முத்து மாதிரி மேல மேல போயிடுச்சு./

உயிர் போனா உடலும் மேலதான் வரும். சிப்பியோட சிப்பியா போகாதே:))

கலகலப்ரியா said...

சமர்த்து... =))... ஒரு வழியா அசைன்மென்ட் முடிச்சாச்சு போலயே... அருமையான விளக்கம்... ஆபீஸ்ல இருக்கேன்... அப்புறம் வந்து விளக்கமா பின்னூட்டம் போடுறேன்...

Anonymous said...

எப்ப இருந்து இப்படி எல்லாம். :)

divyahari said...

nanum oru notes ku koduthuten.. thank you sir..

Unknown said...

//பின்னோக்கி said...
நீங்க இப்ப பண்ணியிருக்கிற விஷயம் என்னனு உங்களுக்கு தெரியுமா ? எவ்வளவு பெரிய இலக்கிய சேவைன்னு உங்களுக்கு புரியுதா ?.

நான் கலகலப்ரியா அவர்கள் எழுதும் கவிதை படிச்சுட்டு, சைலண்டா வந்துடுவேன். பின்னூட்டம் போடனும்னா புரியனும் இல்லையா. அவங்க வேற ரேஞ்சுக்கு கவிதை எழுதுவாங்க. என் கவிதை அறிவு எண்டர் கவிதைகளோட நிக்குது.

கோனார் நோட்ஸ் மாதிரி, முகிலன் நோட்ஸ்னு விடுங்க. நான் 1 காப்பிக்கு இப்பவே அட்வான்ஸ் கொடுத்திட்டேன்.
//

நானும் அப்பிடித்தான் போயிட்டு இருந்தேன். எனக்கு எண்ட்டர் கவிதை கூட எழுத வராது. இது சும்மா பொழுது போகாம..

முகிலன் நோட்ஸ் ஐடியா நல்லாத்தான் இருக்கு.

Unknown said...

//குடுகுடுப்பை said...
இதுவும் ஈழப்போராட்டத்தை நிறுத்தி எழுதியதாகவே எனக்குப்படுகிறது//

எனக்கும் அப்பிடித்தான் தோணுது. இந்த ஒரு கோணத்துல தான் நான் அவங்களோட பெரும்பாலான கவிதைகளை அட்டாக் பண்றது.

Unknown said...

// நட்புடன் ஜமால் said...
இப்படியெல்லாம் கிளம்பிட்டீங்களா


பல பதிவர்கள் இருக்காங்கங்க

விளக்கம் எழுதுங்களேன் ...//

அய்யய்யோ! இது எதோ கலகலப்ரியா குடுத்த உரிமைல ஆரம்பிச்சது. மத்தவங்களுக்கு இப்பிடி ஆரம்பிச்சா அடிக்க வந்திடுவாங்க.

Unknown said...

//வானம்பாடிகள் said...
30% mark. செகண்ட் அட்டெம்ப்ட் அலவ்ட். ஒரு கணேஷ் போய் இப்படி சொதப்பலாமா?
/உடம்புல இருந்த உயிர் சிப்பில இருந்து கிளம்புன முத்து மாதிரி மேல மேல போயிடுச்சு./

உயிர் போனா உடலும் மேலதான் வரும். சிப்பியோட சிப்பியா போகாதே:))//

ஜஸ்ட் பாஸ்தானா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
பாஸ் பண்ணிட்டதால செகண்ட் அட்டெம்ப்ட் போக மாட்டேன்.(ஏற்கனவே பாதி முடி கொட்டிப்போச்சி)

Unknown said...

// கலகலப்ரியா said...
சமர்த்து... =))... ஒரு வழியா அசைன்மென்ட் முடிச்சாச்சு போலயே... அருமையான விளக்கம்... ஆபீஸ்ல இருக்கேன்... அப்புறம் வந்து விளக்கமா பின்னூட்டம் போடுறேன்..//

இஃகி இஃகி இஃகி. நன்றி. விளக்கமான பின்னூட்டத்துக்காக காத்துட்டு இருக்கேன்

Unknown said...

// சின்ன அம்மிணி said...
எப்ப இருந்து இப்படி எல்லாம். :)//

இப்ப கொஞ்ச நாளாத்தான்.

Unknown said...

// divyahari said...
nanum oru notes ku koduthuten.. thank you sir.//

ரெண்டு நுகர்வோர் கிடச்சுட்டாங்களே எதுக்கும் முகிலன் கையேடுன்னு ஒரு பேரை பதிவு செய்துடலாமோ?

கலகலப்ரியா said...

//கலகலப்ரியாவோட கவிதைகள் பிக்காஸோ ஓவியங்கள் மாதிரி//

அம்மாடியோ... பிக்காசாவா... சாமி.. ஆனாலும்.. இப்டி ஒரு வார்த்தைக்கு யாம் என்ன தவம் செய்து விட்டோம்...

வாவ்.. மொத்தத்ல மிக மிக அருமையான விளக்கம்...! (மேலே மேலே மேலே சென்றது ரொம்ப பாசிடிவ்வா எழுதின விஷயம்..:).. மத்தபடி.. நிஜம்மாவே சூப்பர்..

நீங்க சொல்லியும் எனக்கு முப்பது மார்க்ஸ் தான் போட்டிருக்காங்க வானம்பாடி சார்... ஆனா உங்களுக்கு எழுபது மார்க்ஸ்.. =))..

குடுகுடுப்பை.. :).. என்னோட எல்லா கவிதையுமே ஈழம் சார்ந்ததில்லை... சில பல சமூகம் சார்ந்ததும்... :)...

ம்ம்.. ரொம்ப சந்தோஷமா இருக்கு முகிலன்... விசா கூட்டணி கதை எப்போ ஆரம்பம்.. ? =))

vasu balaji said...

/ஜஸ்ட் பாஸ்தானா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
பாஸ் பண்ணிட்டதால செகண்ட் அட்டெம்ப்ட் போக மாட்டேன்.(ஏற்கனவே பாதி முடி கொட்டிப்போச்சி)/

ஐ. முப்பது பாஸ் எந்த ஊர்ல. இந்த கதையெல்லாம் வேணாம். சரியான ரூட்ல போய்ட்டு டைவர்ட் ஆய்டுத்து. அதான் செகண்ட் சான்ஸ்.

/நீங்க சொல்லியும் எனக்கு முப்பது மார்க்ஸ் தான் போட்டிருக்காங்க வானம்பாடி சார்... ஆனா உங்களுக்கு எழுபது மார்க்ஸ்.. =)).. /

இதென்னா வம்பு. எப்போல இருந்து கேள்வித்தாளுக்கு மார்க் போடுறது. அதெல்லாமில்லை. முகிலன் கேன் டூ இட்.:))

ப்ரியமுடன் வசந்த் said...

அவ்வ்வ்வ்......

நான் போயிட்டு நாளைக்கு வாரேனுங்க முகிலன்...!

கமலேஷ் said...

ரொம்ப நல்ல, ஆரோக்யமான, உபயோகமான விளையாட்டு...வாழ்த்துக்கள்...

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said... //

samaalipz..

துபாய் ராஜா said...

//கலகலப்ரியாவோட கவிதைகள் பிக்காஸோ ஓவியங்கள் மாதிரி - நீங்கள் என்ன மனநிலையில் இருந்து அந்தக் கவிதையை வாசிக்கிறீர்களோ அந்த மனநிலைக்கேற்ற படி ஒரு பொருள் விளங்கும்.(சத்தியமா இது பாராட்டுதாங்கோ)//

நிதர்சனமான உண்மை.எங்கள் எல்லோரையும் இணைத்த தமிழே, தாயே நீ என்றென்றும் வாழ்க...

நசரேயன் said...

உள்ளேன் போட்டுக்கிட்டு அப்புறமா வந்து கும்மி அடிக்கிறேன்

jothi said...

உங்கள் சேவை தொடர்ந்து எங்களுக்கு தேவை.

Unknown said...

//ஐ. முப்பது பாஸ் எந்த ஊர்ல. இந்த கதையெல்லாம் வேணாம். சரியான ரூட்ல போய்ட்டு டைவர்ட் ஆய்டுத்து. அதான் செகண்ட் சான்ஸ்.

//

அப்போ பெயிலா. சரி செகண்ட் அட்டெம்ப்ட் அடிக்கிறேன்

Unknown said...

//முகிலன்... விசா கூட்டணி கதை எப்போ ஆரம்பம்.. ? =))
//

மூணு பேரு தான் இருக்கோம். அதுசரிய பிடிச்சிப் போடுங்க. அவரையே துவங்கச் சொல்லலாம்.

Unknown said...

// பிரியமுடன்...வசந்த் said...
அவ்வ்வ்வ்......

நான் போயிட்டு நாளைக்கு வாரேனுங்க முகிலன்...//

கண்டிப்பா வாங்க.

Unknown said...

// kamalesh said...
ரொம்ப நல்ல, ஆரோக்யமான, உபயோகமான விளையாட்டு...வாழ்த்துக்கள்...
//

என்னது விளையாட்டா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கலகலப்ரியா said...

//
என்னது விளையாட்டா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

=))))

//மூணு பேரு தான் இருக்கோம். அதுசரிய பிடிச்சிப் போடுங்க. அவரையே துவங்கச் சொல்லலாம்.//

சொல்லுங்க... சொல்லுங்க... நல்ல ஐடியா... கழுவின தண்ணில நழுவின மீன்... =)).. கடைய மூட வேற ஐடியாவாம்... விடாதீங்கோ...

குடுகுடுப்பை said...

முகிலன் சார் மெயில் அனுப்புங்க.
kudukuduppai@gmail.com

விருதுப்பட்டி பற்றி எழுத.