Friday, March 12, 2010

பிதற்றல்கள் - 03/12/2010

கடந்த ஒரு வாரமாக நித்தியானந்தரும், மகளிர் தினமும் 33% இடஒதுக்கீடு மசோதாவும் பத்திகளை நிரப்பிக் கொண்டிருக்க, தினமணி நாளிதழின் தலையங்கத்தில் நான் பார்த்த அந்த தலையங்கம் என்னை அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியது.

இன்னும் எத்தனை நாளைக்கு அமெரிக்காவுக்கு ஜால்ரா தட்டிக் கொண்டு புதிய பொருளாதாரக் கொள்கை, அந்நிய நாட்டு முதலீடு, இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் என்று சொல்லிக் கொண்டு அப்பாவி மக்களின் உயிருக்கு உத்தரவாதமில்லாத செயலைச் செய்வார்கள் இந்த மன்மோகன்சிங்குகள் என்று தெரியவில்லை. இதே அந்நிய நாட்டு முதலாளிகள் அமெரிக்க/ஐரோப்பிய/ஆஸ்திரேலிய நாடுகளில் இப்படி ஒரு சட்டத்தை எதிர்பார்க்க முடியுமா?

*****************************************************************

சமீபத்தில் நான் எழுதிய பூ-வலி கதையில் பலர் நியாபகம் வைத்துக் கேட்ட கேள்வி, ஏன் உறவுகளை இன்னும் தொடரவில்லை என்று.

நான் உறவுகள் என்ற அந்தக் கதையைத் தொடங்கியது, கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணுக்கு அந்தக் காலகட்டத்தில் என்ன எதிர்பார்ப்பு இருக்கும், அதை மாமியார் என்ற ஒருவரால் 100% நிறைவேற்ற முடியுமா? அப்படி முடியாத பட்சத்தின் என்ன மாதிரி பிரச்சனைகள் வரும் என்பதைப் பற்றி சொல்லவே. இதில் வரும் பிரச்சனைகள் பல உணவு சம்மந்தமாகவே இருப்பதாக பலர் கடிந்து/சலித்துக் கொண்டனர். ஆனால் என்ன செய்வது, உணவுக்காகத் தானே வாழ்கிறோம்?

அதோடு கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கு நாக்குக்கு ருசியாக சாப்பிடவேண்டும் என்பது தானே (குழந்தைக்கும் சேர்த்து) பிரதானமாக இருக்கும்?

ஆனாலும் வேறு பிரச்சனை எதையாவது யோசித்து விட்டே கதையைத் தொடர வேண்டும் என்பதால் தான் இந்த நீஈஈஈஈஈஈண்ட இடைவெளி. விரைவில் தொடர்வேன்.

*******************************************************************

விண்ணைத் தாண்டி வருவாயா நான் பார்க்கவில்லை. மச்சான்ஸ் என்ற இந்த வலைப்பூவில் நான் பார்த்த இந்த வீடியோவில் அருமையாக பண்டோராவையும், வி.தா.வ வையும் மிக்ஸியிருக்கிறார்கள். நீங்களும் பார்த்து ரசியுங்கள்.********************************************************************
நூறாவது மகளிர் தினத்தன்று முதன்முதலாக சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதைத் தட்டிச் சென்ற கேத்தரின் பிகலோவுக்கு வாழ்த்துகள்.

சினிமாத்துறையில் நடிப்பு, பின்னணி பாடகர் போன்ற துறைகளில் பெண்கள் பெருமளவில் இருந்தாலும், திரைக்குப் பின்னால் அவர்களின் பங்களிப்பு கோலிவுட்டோ ஹாலிவுட்டோ மிகவும் சொற்பமாகவே இருந்து வந்திருக்கிறது. சினிமாத்துறை ஆணாதிக்கத் துறையாக இருந்து வருவது அதற்குக் காரணமாக இருக்கலாம். இந்த ஆஸ்கர் வெற்றி அந்தக் குறையைப் போக்கி பல பெண் இயக்குநர்களையும், மற்ற behind-the-screen கலைகளில் ஈடுபடுபவர்களையும் கொண்டு வரும் என்று நம்புவோம்.

*********************************************************************
வானம்பாடிகள் சார் இங்க சொன்ன மாதிரி புது வருசத்துல இருந்து யார் கவிதைக்கும் உரை எழுதுறத செய்யக்கூடாதுன்னு தீர்மானம் எடுத்திருந்தேன். ஆனாலும் ரசிகப் பெருமக்கள் விரும்பி வேண்டி கேட்டுக்கிட்டதால....

(மன்னிச்சிருங்க யக்காவ்)


பன்னாட.. வெண்பா...

தம்மனத்தை வாங்கும் தடந்தோளான் 
இது தூது போன அன்னப் பறவை தமயந்தியிடம் நளனைப் பற்றி சொன்னது. மங்கையர்கள் தம்மனத்தை வாங்கும் தடந்தோளன்
நளனிடம்
நாற்குணமும் நாற்படையா
ஐம்புலனும் நல்லமைச்சா 

இது அதே அன்னம் தமயந்தியோட குணங்களா நளனிடம் சொன்னது (அச்சம், மடம், பயிர்ப்பு, நாணம் ஆகிய நான்கு குணங்களும் நான்கு படைகளாகவும், பார்த்தல், கேட்டல், சுவைத்தல், நுகர்தல், தொடுதல் ஆகிய ஐந்து புலன்களை ஐந்து அமைச்சர்களாகவும் பெற்றிருக்கும் பேரரசி தமயந்தி)
தரகர் வேலைக்கே ஆகிப்போச்சா... இப்பிடி நளனுக்கும் தமயந்திக்கும் தூது(தரகர்) வேலைக்குச் சென்றே உன் புத்தியெல்லாம் தீர்ந்து போச்சா?
வேலை மெனக்கெட்டு பாலைப் பிரிச்சு..
தண்ணியைக் குடிச்சே வீங்கி போச்சு... 
அன்னம் பாலையும் தண்ணீரையும் பிரித்து உண்ணும் என்று சங்ககாலத்தில் ஒரு நம்பிக்கை இருக்கிறது. இந்தக் கவிதையில் சொல்லப்படும் அன்னப் பறவை, வேலை மெனக்கெட்டு பாலைப் பிரிச்சி தண்ணிய மட்டும் குடிச்சிக் குடிச்சி வீங்கி போச்சு
அங்க பாரு... 
குப்பையோட சேர்ந்து...
தன்னையும் எரிச்சு...
சுண்டக் காய்ச்சுது பால.. 

சேரக் கூடாதவுங்களோட சேந்து தன்னையும் எரிச்சி பிரிச்ச பால சுண்டக்காச்சுது.
பன்னாட... பன்னாட...
இது அந்த பறவையைத் திட்டும் வார்த்தை.. அன்னம் ஒரு விசயத்தில் உள்ள நல்லதை எடுத்துக் கொண்டு கெட்டதை விடும் செயலுக்கு உதாரணம்/உருவகம். பன்னாடை என்னும் சல்லடையோ நல்ல விசயங்களை விட்டு விட்டு கசடுகளை மட்டுமே தன்னகத்தே கொள்ளும் செயலுக்கு உ.தா. தன்னியல்பை செய்யாமல் எதிர்மறையாக செய்கிறது.


இந்தக் கவிதை ஒரு அப்ஸ்ட்ராக்ட். படிக்கும் ஒவ்வொருவருக்கும் அவர் மனநிலையைப் பொறுத்து அர்த்தம் தோன்றுகிறது. நான் நான்கு மனநிலையில் இருந்து இதைப் பார்த்தேன்.


1. ஈழத்தமிழர் - நம்மை வேட்டையாடிய கூட்டத்தைச் சேர்ந்தவன் அவன் கூட்டத்தாரோடு பிரச்சனை என்று வந்ததும் அவன் பின்னால் போய் அணி சேர்ந்து நிற்கிறார்களே? என்ற ஆதங்கம்.


2. நித்யானந்தத்தின் பக்தர் - சினிமா நடிகைகளையும் பார்ட்டிகளில் சுற்றித் திரியும் நடிகைகளுடன் சேர்ந்து ஆன்மிகத்தை விட்டு விட்டு இப்படி அசிங்கத்தில் இறங்கிவிட்டாயே நித்யானந்தம்? அந்த நடிகைக்கு இதெல்லாம் சாதாரணமாய் இருக்கலாம். ஆனால் உலகம் உன்னையல்லவா ஏளனம் செய்கிறது? 


3. ரஞ்சிதாவின் ரசிகர் - கட்டிய கணவனை விட்டுப் பிரிந்த துக்கத்தை மறக்க ஆன்மிகம் தான் வழியென்றால் அதற்கு இந்த நித்தியானந்தத்திடம் போய் உறவு கொள்ளும் அளவுக்கா ஆன்மிகத்தில் ஈடுபடுவது? அந்த ஆளின் சாயத்தை வெளுக்க உன் அந்தரங்கத்தை அல்லவா நாறடிக்கிறார்கள்?


4. சாருவின் விசிறி - எத்தனையோ நல்ல விசயங்கள் உலகத்தில் இருக்கும் போது இந்த சாமியாருடன் சேர்ந்து அவருக்குப் போய் சொம்பு தூக்கினீரே? இப்போது அதே சாமியாருடன் சேர்ந்து உன்னையும் தானே இந்த உலகம் கும்முகிறது? 


இதுதான் ஒரு கவிதையின் பலம். எழுதியவர் மேலே உள்ள எந்த நிகழ்வையும், இல்லை வேறு ஏதாவது ஒரு நிகழ்வைக்கூட மனதில் வைத்து எழுதியிருக்கலாம். ஆனால் ஊற்றப்படும் பாத்திரத்துக்கு ஏற்ப வடிவம் மாறும் நீரைப் போல படிப்பவரின் மனநிலைக்கேற்ப அர்த்தம் விளங்கும் இது மாதிரி கவிதைகள் எனக்கு எழுத வரவில்லையே என்ற வருத்தத்தை எனக்குள் தோற்றுவிக்கிறது இக்கவிதை.


சாலையில் ஒரு மரத்துண்டு கிடக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.அதைப் பார்க்கும் 


ஒரு சிற்பிக்கு அந்த மரத்தில் ஒரு நல்ல சிற்பம் வடிக்கத் தோன்றும்.
ஒரு தச்சனுக்கு முக்காலி ஒன்று செய்யத் தோன்றும்
ஒரு விறகு வியாபாரிக்கு உடைத்து அதை விறகாக்கி விற்கத் தோன்றும்
ஒரு கிரிக்கெட் வீரனுக்கு அந்த மரத்தில் மட்டையும் ஸ்டம்புகளும் செய்து விளையாடத் தோன்றும்
ஒரு சுற்றுச் சூழல் பாதுகாவலனுக்கு, ஐயோ எந்த மரத்தை துண்டாக்கினாரோ என்ற வருத்தம் தோன்றும்


ஒரு சிலருக்கு கீழே குப்பை கிடக்கிறது என்றும் தோன்றும். 

15 comments:

Chitra said...

ஒரு பதிவில் இத்தனை விஷயங்களா......... கிர்ர்ர்.......!

Anonymous said...

கர்ப்பமா இருக்கும் பொண்ணுக்கு சாப்பாடு முக்கியம்-இந்த வாதம் சரியாதான் தோணுது.

ப்ரியா கவுஜைக்கு நான் நித்தியானந்தர் பக்தர் விளக்கம்தான் தொணுச்சு. இவ்வளவு இருக்கா :)

Paleo God said...

ரைட்டு..:)

ஈரோடு கதிர் said...

கடைசி பன்ச்... ஓங்கி மூக்குல குத்துன மாதிரியே இருக்கும்... இருக்கனும்

Prathap Kumar S. said...

//ஒரு சிலருக்கு கீழே குப்பை கிடக்கிறது என்றும் தோன்றும். ஒரு சிலருக்கு கீழே குப்பை கிடக்கிறது என்றும் தோன்றும். //
சூப்பர் தல... நச்...

அவதார், வி.தா.வ. மிக்சிங் கலக்கல்... அவ்ளோ ப்ரில்லியன்ட் மிக்சிங்....

எல் கே said...

fine
http://vezham.co.cc

திவ்யாஹரி said...

உங்கள் விளக்கம் நல்லா இருக்கு முகிலன்.. எனக்கு உங்க எல்லா விளக்கமுமே பொருந்துவது மாதிரி தான் இருக்கு முகிலன்.. எப்போவும் நோட்ஸ் எழுதுங்க.. படிக்க நாங்க இருக்கோம்..

வி.தா.வ. மிக்சிங் superb..

திவ்யாஹரி said...

உங்கள் விளக்கம் நல்லா இருக்கு முகிலன்.. எனக்கு உங்க எல்லா விளக்கமுமே பொருந்துவது மாதிரி தான் இருக்கு முகிலன்.. எப்போவும் நோட்ஸ் எழுதுங்க.. படிக்க நாங்க இருக்கோம்..

வி.தா.வ. மிக்சிங் superb..

vasu balaji said...

superb superb superb. :)

vasu balaji said...

உலகத்துல எவ்வளவோ விஷயம் இருக்கு. அதை எல்லாம் தவிர்த்துவிட்டு இப்படியான விஷயம் மட்டும் புடிச்சிண்டிருக்கே அது தான் அன்னம் பால்ல இருந்து தண்ணிய பிரிச்சி தண்ணியப் போய் குடிச்சி வீங்கிண்டிருக்கு. ஆனா பன்னாடை வடிச்ச குப்பையோட சேர்ந்து அடுப்பில எரிஞ்சி பால் காய்ச்ச உதவரப்போ நீர் போய் பால் மட்டும் மிஞ்சும். இப்போல்லாம் அன்னத்துக்கு பதிலா பன்னாடைதான் அன்னத்தோட தொழிலை செய்யுது. மத்தவங்க தான் அன்னம்னு சொல்லிக்கிறாங்க. அவ்வளவுதான்.

கலகலப்ரியா said...

விண்ணைத்தாண்டி அவதார் நல்லாருக்கு... பூ-வலி இன்னும் படிக்கணும்...

||நூறாவது மகளிர் தினத்தன்று முதன்முதலாக சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதைத் தட்டிச் சென்ற கேத்தரின் பிகலோவுக்கு வாழ்த்துகள்||

படம் ரிலீஸ் ஆனதும் போகணும்... ஜேம்ஸ் காமரோனுக்கு கிடைக்குமென நினைத்துக் கொண்டிருந்த ஆஸ்கார் அவர்களின் எக்ஸ்-ற்கு கிடைத்ததே இன்னொரு படம் பார்த்த பரபரப்பை உண்டாக்குகிறது...

கவிதை விளக்கம் யப்பே... அன்னம் வரைக்கும்... சூப்பரு.. அப்புறம் பன்னாடைய கொஞ்சம் மெச்சிதான் சொன்னேன்... ஹிஹி... ரொம்ம்ம்ப நன்றி மக்கா... ஏதோ கொஞ்சம் நெகிழ்வா இருக்கு...

வானம்பாடி... நல்லாதான்பா புரிஞ்சுக்கிறீக...

சின்னம்மிணி இப்புடி எல்லாமா தோணுது... அவ்வ்வ்...

திவ்யா... டச் பண்ணிட்டாம்மா... அவ் அவ் அவ்வ்வ்...

கலகலப்ரியா said...

||
படம் ரிலீஸ் ஆனதும் போகணும்...||

இங்க ஜஸ்ட் 8000 பேருதான் அந்த ஃபில்ம் பார்த்தாங்களாம்.. இப்போ செகண்ட் டைம் ரிலீஸ் பண்ராய்ங்க... ஹையோ ஹையோ...

வினோத் கெளதம் said...

செம்ம கலக்கல்..அந்த கதை படிக்கனும்..
கடைசில வெண்பா கொலைவெறி தாக்குதல்..:)

ஜெட்லி... said...

:))

ப்ரியமுடன் வசந்த் said...

//இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் என்று சொல்லிக் கொண்டு அப்பாவி மக்களின் உயிருக்கு உத்தரவாதமில்லாத செயலைச் செய்வார்கள் இந்த மன்மோகன்சிங்குகள் என்று தெரியவில்லை.//

#$%^&*(^%$#@#.....