Wednesday, March 31, 2010

பிதற்றல்கள் - 03/31/2010

சர்வதேசப் பதிவர் சங்கமம்

நடக்காத/நடக்கப்போகாத ஒன்றை வைத்து நான் இதுவரை இரண்டு மொக்கைப் பதிவுகள் தேற்றிவிட்டேன். இனி இதை உங்கள் கைவசம் விட்டுவிடுகிறேன். இந்தக் கற்பனை சங்கமத்துக்கு வருகை தரும், நிகழ்ச்சியில் பங்கு பெறும் அனைத்துப் பதிவர்களும் நிகழ்வைச் சிலாகித்தோ, திட்டியோ குட்டியோ சில பல பதிவுகளை எழுதுங்கள். பிட் அடிக்க ஈரோடு பதிவர் சங்கமம் பற்றி எழுதிய பதிவுகளை உபயோகப் படுத்திக் கொள்ளுங்கள். (சென்னை வேண்டாம்... நல்லால்ல)

கலக்குங்கள் தோழர்களே..

தமிழ்த்திரையுலக ரசிகர்கள்

இவர்களின் தலைவிதி இப்படியா இருக்கும்.விஜய், உதயநிதி ஸ்டாலின், ஜீவா இவர்களுடன் இணைந்து த்ரீ இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீ-மேக்கில் நடிப்பது உறுதியாகிவிட்டதாம். இனி நாம் வித்தியாசமான விஜயைப் பார்க்கலாமாம்.

அய்யோ சாமி! நினைச்சிப் பாக்கக்கூட முடியலப்பா..

_____ பிதற்றல்கள்

என்னுடைய அந்த இன்னொரு வலைப்பூவில் சமீபத்தில் நடக்கும் அந்தப் போட்டித் தொடரைப் பற்றி இனி எழுத மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். ஆனாலும் ரசிகக் கண்மணிகள் என்னைத் தொடர்ந்து எழுதச் சொல்கிறார்கள். சிலர் வீட்டுக்குமுன் தீக்குளிப்போம் என்று எச்சரிக்கை விடுக்கிறார்கள். பலா பட்டறை ஷங்கர் ஒரு படி மேலே போய் எனக்குக் கொலை மிரட்டல் எல்லாம் விடுக்கிறார். அடுத்த வாரத்திலிருந்து திரும்பவும் என் பிதற்றலைத் தொடரலாம் என்றிருக்கிறேன்.

அங்காடித் தெரு

திரைப்படத்தைப் பற்றி கலவையாக விமர்சனங்கள் வந்து விழுகின்றன. எனக்கு வசந்த பாலனின் இரண்டாவது படம் மிகவும் பிடித்திருந்தது. எங்கள் ஊர்க்காரர் என்ற பாசம் வேறு. நான் வசிக்கும் பாழாய்ப்போன இந்த ஊரில் தியேட்டரில் சென்று பார்க்கும் அதிர்ஷ்டம் கிடைக்காது. ஆகவே டி.வி.டி வரும் வரை காத்திருக்க வேண்டியதுதான். (மே மாதம் இந்தியா வரும் வரை ஓடிக்கொண்டிருந்தால் அங்கேயும் பார்க்கலாம்).

பாஸ்டன்

பழமை பேசியண்ணன் பாணியில் பாசுடன் நகரத்துக்கு நாளை விஜயம். இங்கிருந்து 6 1/2 மணி நேரம் கார் பயணம். இதுவரைக்கும் சுற்றிப் பார்ப்பதற்காகப் போனதேயில்லை. இதுவே முதல் முறை. டக் டூர்ஸ் சிறப்பாக இருக்கும் என்று கேள்வி. அதோடு அக்வேரியமும் நன்றாக இருக்குமாம். போய்ப் பார்த்துவிட்டு வந்து விரிவாக ஒரு பதிவு போட்டுவிடலாம்.
பாஸ்டன் நகரில் என் பதிவர்கள் யாரும் - பாஸ்டன் ஸ்ரீராம் இருக்கிறார் ஆனால் அவருடன் பரிச்சயம் இல்லை - இருந்தால் ஒரு மாலை வேளை காஃபி வித் முகிலன் போடலாம்.

பதிவு

எண்ணிக்கை குறைந்து போனதற்குக் காரணம் நான் அந்தப் வலைப்பூவில் எழுதி வந்ததே. அதை எழுத வேண்டாம் என்று முடிவெடுக்கும் போது அலுவலகத்தில் ஆணி அதிகமாகிவிட்டது. இன்னும் சில நாட்களில் சரியாகிவிடும். மீண்டும் மிரட்டலைத் தொடர்வோம்.

26 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

//
இதுவே முதல் முறை. டக் டூர்ஸ் சிறப்பாக இருக்கும் என்று கேள்வி. அதோடு அக்வேரியமும் நன்றாக இருக்குமாம். போய்ப் பார்த்துவிட்டு வந்து விரிவாக ஒரு பதிவு போட்டுவிடலாம்.
//

கோல்டன் பிஸ் பிரை நல்லாயிருக்கும் சார்.. ட்ரை பண்ணிப்பாருங்க...

Prathap Kumar S. said...

த்ரீ இடியட்ஸ் - தமிழ்ல வருதா??? வெளங்கிரும்....நல்லவேளை தமிழ்நாட்டுல நான் இல்ல தப்பிச்சேன்...

துபாய் ராஜா said...

மே மாதம் ஊருக்கு வரும்போது சந்திப்போம். குழுமத்தில் மட்டும் அறிவிப்பு போட்டுறாதீங்க. கூடி கும்மி அடிச்சிடுவாய்ங்க...

VISA said...

ஐ.ஐ.எம். ல படிச்சவரு எழுதின நாவல ஹிந்தியில படமா எடுத்தாங்க. அத தமிழில எடுக்கணுமுன்னு தோணிச்சே பெரிய விஷயம் தான். இல்லாட்டி விஜய் பேரரசோட அசிஸ்டன்ட் கிட்ட தான் கத கேக்கணும்.

நாடோடி said...

//இனி நாம் வித்தியாசமான விஜயைப் பார்க்கலாமாம்.//
நீங்க‌ சொன்னா க‌ரெக்டா தான் இருக்கும்

Chitra said...

good ones!

vasu balaji said...

/இந்தக் கற்பனை சங்கமத்துக்கு வருகை தரும், நிகழ்ச்சியில் பங்கு பெறும் அனைத்துப் பதிவர்களும் நிகழ்வைச் சிலாகித்தோ, திட்டியோ குட்டியோ சில பல பதிவுகளை எழுதுங்கள். //

தோடா! ஊருக்கெல்லாம் போய்ட்டு வந்து எழுதுங்கப்பு:)

க.பாலாசி said...

//ஆனாலும் ரசிகக் கண்மணிகள் என்னைத் தொடர்ந்து எழுதச் சொல்கிறார்கள்//

அந்தளவுக்காங்க நாடு மோசமாயிடுச்சு... நல்லதுக்கே காலமில்லைங்க தலைவரே...

Anonymous said...

நிஜமாவே இங்கேயும் ஆணி தொல்லை அதிகமாயிடுச்சுங்க. பதிவுலகம் பக்கம் வரவே முடியலை. முடிந்த வரை நண்பர்கள் பதிவு மட்டுமாவது படிக்க முயற்சி செய்யறேன்.

வரதராஜலு .பூ said...

//விஜய், உதயநிதி ஸ்டாலின், ஜீவா இவர்களுடன் இணைந்து த்ரீ இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீ-மேக்கில் நடிப்பது உறுதியாகிவிட்டதாம். //

என்னாங்க இவ்வளவு பெரிய குண்டு போடறிங்க? அணுகுண்ட விட பயங்கரமா இருக்குமே எஃப்பெக்ட்?

அவ்வ்வ்வ்வ்வ்

சின்னப் பையன் said...

நீங்க எங்கே இருக்கீங்க? முடிஞ்சா மெயிலுங்க.
நான் இருப்பது Danbury, CT 06810

Unknown said...

ச்சின்னப் பையன் - நான் இருப்பது ராச்செஸ்டர், நியூ யார்க்.

உங்கள் மெயில் ஐடி என்னிடம் இல்லை. நீங்கள் எனக்கு அனுப்புங்கள் - maildhinesh@gmail.com

நசரேயன் said...

// நான் அந்தப் வலைப்பூவில் எழுதி வந்ததே. //

பலான வலைப்பூ ???

Paleo God said...

பலா பட்டறை ஷங்கர் ஒரு படி மேலே போய் எனக்குக் கொலை மிரட்டல் எல்லாம் விடுக்கிறார். //

ஐய்யய்யோ நான் ரவுடி இல்லீங்கோவ்வ்வ்வ்வ்வ்..:))

ய்யேஏய்யப்பாஅ..மொதல்ல என் பேர போடறதுக்கு காப்பிரைட்ஸ் வாங்கணும்போல..:))

--
3இ பற்றி முதன் முதலில் தங்களுக்கு தங்களுக்கு தகவல் தெரிவித்தது அடியேன்தான் என்பதி நினைவு கூறக்கடமைப்பட்டுள்ளேன்..:))

Unknown said...

//கோல்டன் பிஸ் பிரை நல்லாயிருக்கும் சார்.. ட்ரை பண்ணிப்பாருங்க//

அது கூட சுறா புட்டு குடுத்தாலும் நல்லாத்தான் இருக்கும்..

Unknown said...

//கோல்டன் பிஸ் பிரை நல்லாயிருக்கும் சார்.. ட்ரை பண்ணிப்பாருங்க//

நன்றிண்ணே

Unknown said...

//நாஞ்சில் பிரதாப் said...
த்ரீ இடியட்ஸ் - தமிழ்ல வருதா??? வெளங்கிரும்....நல்லவேளை தமிழ்நாட்டுல நான் இல்ல தப்பிச்சேன்...
//

தமிழ்நாட்டுல இல்லைன்னா என்ன, உலகத்துல எந்த மூலைல இருந்தாலும் வெரட்டிக்கிட்டு வரும்.

Unknown said...

//துபாய் ராஜா said...
மே மாதம் ஊருக்கு வரும்போது சந்திப்போம். குழுமத்தில் மட்டும் அறிவிப்பு போட்டுறாதீங்க. கூடி கும்மி அடிச்சிடுவாய்ங்க...
//

அதான் பாத்தேனே.. சின்னப்பையனை கும்மியடிக்கிறத..

Unknown said...

//VISA said...
ஐ.ஐ.எம். ல படிச்சவரு எழுதின நாவல ஹிந்தியில படமா எடுத்தாங்க. அத தமிழில எடுக்கணுமுன்னு தோணிச்சே பெரிய விஷயம் தான். இல்லாட்டி விஜய் பேரரசோட அசிஸ்டன்ட் கிட்ட தான் கத கேக்கணும்
//

இதுக்கு முன்னாடி நல்ல இந்திப் படங்களை எல்லாம் தமிழாக்கி கொலை பண்ணினது போதாதா? அதுலயும் விஜயை அந்த ரோல்ல நினைச்சிப் பாக்கக்கூட முடியலை.

Unknown said...

//நாடோடி said...
//இனி நாம் வித்தியாசமான விஜயைப் பார்க்கலாமாம்.//
நீங்க‌ சொன்னா க‌ரெக்டா தான் இருக்கும்
//

அந்தக் கொடுமைய ஏன் கேக்குறீங்க.

Unknown said...

//Chitra said...
good ones!
//

Thanks.

Unknown said...

//வானம்பாடிகள் said...
/இந்தக் கற்பனை சங்கமத்துக்கு வருகை தரும், நிகழ்ச்சியில் பங்கு பெறும் அனைத்துப் பதிவர்களும் நிகழ்வைச் சிலாகித்தோ, திட்டியோ குட்டியோ சில பல பதிவுகளை எழுதுங்கள். //

தோடா! ஊருக்கெல்லாம் போய்ட்டு வந்து எழுதுங்கப்பு:)
//

வந்து எழுதுவோம்..நீங்களும் எழுதுங்க..

அப்பிடி யாரும் எழுதலைன்னா தொடர்பதிவுக்குக் கூப்பிட்டிருவேன்.

Unknown said...

//க.பாலாசி said...
//ஆனாலும் ரசிகக் கண்மணிகள் என்னைத் தொடர்ந்து எழுதச் சொல்கிறார்கள்//

அந்தளவுக்காங்க நாடு மோசமாயிடுச்சு... நல்லதுக்கே காலமில்லைங்க தலைவரே...

//

சொன்னா யாருங்க கேக்கறா?

Unknown said...

//வரதராஜலு .பூ said...
//விஜய், உதயநிதி ஸ்டாலின், ஜீவா இவர்களுடன் இணைந்து த்ரீ இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீ-மேக்கில் நடிப்பது உறுதியாகிவிட்டதாம். //

என்னாங்க இவ்வளவு பெரிய குண்டு போடறிங்க? அணுகுண்ட விட பயங்கரமா இருக்குமே எஃப்பெக்ட்?

அவ்வ்வ்வ்வ்வ்

//

தமிழ்நாடு எதையெல்லாம் தாங்கிக்க வேண்டியிருக்கு?

Unknown said...

//நசரேயன் said...
// நான் அந்தப் வலைப்பூவில் எழுதி வந்ததே. //

பலான வலைப்பூ ???

//

யோவ் வாயில எதாவது வந்துரப்போவுது

Unknown said...

//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
பலா பட்டறை ஷங்கர் ஒரு படி மேலே போய் எனக்குக் கொலை மிரட்டல் எல்லாம் விடுக்கிறார். //

ஐய்யய்யோ நான் ரவுடி இல்லீங்கோவ்வ்வ்வ்வ்வ்..:))

ய்யேஏய்யப்பாஅ..மொதல்ல என் பேர போடறதுக்கு காப்பிரைட்ஸ் வாங்கணும்போல..:))
//

அதான் “பார்” கோடே வாங்கிட்டீங்க. “காப்பி” ரைட் வாங்குறதா கஷ்டம்?

--
//
3இ பற்றி முதன் முதலில் தங்களுக்கு தங்களுக்கு தகவல் தெரிவித்தது அடியேன்தான் என்பதி நினைவு கூறக்கடமைப்பட்டுள்ளேன்..:))

//

நன்றிங்க்ண்ணா.. நீங்க மட்டும் அந்த எச்சரிக்கை குடுக்கலைன்னா..