Wednesday, March 17, 2010

கனவு தேசம்

இந்தியாவில் என்றில்லை, உலகம் முழுக்கவே அமெரிக்கா ஒரு கனவு தேசம் என்றொரு நினைப்பு பரவலாக இருக்கிறது. அது உண்மையா? இல்லையா? என்பதை எடுத்துக் காட்டுவதே இப்பதிவுத் தொடரின் நோக்கம்.


1970களில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்த இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் தொழில்முறை பட்டப்படிப்பு படித்தவர்கள் – அதாவது டாக்டர்கள், இஞ்சினீயர்கள்.

அந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவில் படித்த இளைஞர்களுக்குத் தட்டுப்பாடு இருந்தது. ஏன் இருந்தது?

1940களில் அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டு வந்தது. அப்போது பெரும்பாலான ஆண்கள் போரில் படை வீரர்களாக பங்கு பெற்றிருந்தனர். அதனால் குழந்தைப் பிறப்பு கிட்டத்தட்ட இல்லவே இல்லை எனலாம். ஆக 1970களில் இளைஞர் தட்டுப்பாடு இருந்தது ஆச்சரியமில்லை தானே?

அப்போது இந்தியா போன்ற நாடுகளில் இருந்து படித்தவர்கள் சென்று அமெரிக்க விமான நிலையங்களில் இறங்கினால் போதும். அவர்களின் படிப்புத் தகுதியை பார்த்துவிட்டு விமான நிலையத்திலேயே க்ரீன் கார்ட் (நிரந்தரக் குடியிருப்பு உரிமை) வழங்குவார்களாம். அப்போது வந்தவர்களுக்கு கண்டிப்பாக அமெரிக்கா ஒரு கனவு தேசம் தான்.

ஏனென்றால் அப்போது இந்தியா வளர்ந்திருக்கவில்லை. டி.வி என்பதைப் பார்க்காத குடும்பங்கள் நிறைய. தொலைபேசி என்பது ஆடம்பரமாகக் கருதப்பட்டு வந்த நாட்கள் அவை. அப்படிப் பட்டவர்களுக்கு அமெரிக்காவில் இறங்கியது கார் வாங்குவது, ஃபோன் வைத்துக் கொள்வது தொலைக்காட்சிப் பெட்டியில் பத்துக்கும் மேற்பட்ட சானல்களைப் பார்ப்பது, எல்லாவற்றிற்கும் மேலாக கை நிறைய சம்பளம் வாங்குவது ஆகியவை பெரிய கனவு நனவானதாகவே இருந்திருக்கும்.

அடுத்த பத்து ஆண்டுகளில் அமெரிக்காவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியது. இந்த இளைஞர்களை Baby Boomers என்று அழைப்பார்கள். காரணம்? அதே உலகப்போர். உலகப்போர் முடிந்து நாடு திரும்பிய இளைஞர்களுக்கு 1950களில் குழந்தை உற்பத்தியைத் தவிர வேறு பெரிய பணி இல்லை போலும். அதனால் அதிகப்படியான இளைஞர்கள் 1980களில் இருந்தார்கள்.

இந்தக் காலகட்டத்தில் அமெரிக்கா வந்தேறிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த தன் பிடியை இறுக்கத் துவங்கியது.

விசா கட்டுப்பாடுகள் அதிகமாயின. 1990களின் இறுதியில் மீண்டும் இந்திய மூளை அவர்களுக்குத் தேவைப் பட்டது. இந்த முறை கணினித் துறையினர். ஆம், அனைவரும் கேள்விப்பட்டது தான். Y2K என்றழைக்கப்பட்ட பிரச்சனைக்குத் தீர்வெழுத இந்திய கணிப்பொறி வல்லுனர்கள் தேவைப் பட்டார்கள். மறுபடியும் இருகை விரித்து உள்ளே அழைத்துக் கொண்டது அமெரிக்கா.

அதோடு இந்திய மென்பொருள் நிறுவனங்கள் இப்போது மெதுவாக வளரத் துவங்கியிருந்தன. ஆஃப்ஷோர் மாடல் என்னும் வடிவில் கணினி வேலைகள் இந்தியாவுக்குப் படை எடுக்கத் துவங்கின. அதிலும் லாபம் பார்க்கத் துவங்கின அமெரிக்க கம்பெனிகள். ஆம், அமெரிக்காவில் ஒரு கணினி வல்லுனருக்கு ஒரு மணி நேரத்திற்கு $40-$50 வரை சம்பளம் கொடுக்க வேண்டும். அதோடு அவர்களுக்கான ஒரு இடம், ஒரு கணினி, கார் பார்க்கிங், மற்ற வசதிகள் என்றெல்லாம் கணக்குப் போட்டுப் பார்த்தால், ஒரு ஆளுக்கு $50-$60 வரை செலவிட வேண்டியிருக்கும். அதே நேரத்தில் இந்தியாவுக்கு அந்த வேலையை அனுப்பினால் $30-$40 க்குள் மொத்த செலவும் முடிந்து விடும். $20 வரை லாபம். இதெல்லாம் ஒரு மணி நேரத்திற்கு. ஒரு வாரத்துக்கு 40 மணி நேரம். 200 பேர் வேலையை இந்தியாவுக்கு அனுப்பியதாக கணக்கு வைத்துக் கொள்ளுங்க. 200 X 40 X 20 = $160,000 ஒரு வாரத்துக்கு மிச்சம். ஆக, மீண்டும் அமெரிக்காவில் வேலை வாய்ப்பு குறையத் துவங்கியது.

2000ம் ஆண்டு. புஷ் பதவி ஏற்றதும் அமெரிக்க பொருளாதாரம் சரியத் துவங்கியது. அதற்கு கிளிண்டனின் பொருளாதாரக் கொள்கை குற்றம் சாட்டப்பட்டது. பல இணைய நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன. மீண்டும் வேலையில்லாத் திண்டாட்டம் மெதுவாக தலை எடுக்கத் துவங்கியது.

போதாத குறைக்கு அல் கொயிதா 2001ல் உலக் வர்த்தக மையத்தை விமானங்கள் மூலம் தகர்த்தனர். உடனே வெகுண்டெழுந்த புஷ், ஆஃப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தார். அமெரிக்க பொருளாதாரம் சரியத் துவங்கியது.

2004ம் ஆண்டை ஒட்டி சற்றே நிமிரத் துவங்கிய பொருளாதாரத்தை இராக் மீது போர் தொடுத்து மீண்டும் குழியில் தள்ளத் துவங்கினார் புஷ்.

இது வரை அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சியைக் கண்டாலும் அது பொது மக்களை அவ்வளவாகப் பாதிக்கவில்லை. ஆனால் 2008ம் ஆண்டில் நிதி நிறுவனங்கள் அதிகப்படியாகக் கொடுத்த வீட்டுக் கடன்களால் பாதிக்கப்பட்ட போது அது நேரடியாக மக்களைப் பாதிக்க ஆரம்பித்தது. பலர் வேலையை இழந்தனர். பலர் வீட்டை இழந்தனர்.

இப்போது அமெரிக்கப் பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறது.

இப்போது தங்கள் நாட்டு குடிமக்களின் நலனையும் வேலையையும் பாதுகாக்க அமெரிக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முக்கியமாக விசா கட்டுப்பாட்டை அதிகப் படுத்தியிருக்கிறது.

ஒருவர் அமெரிக்காவுக்க வர விரும்பினால என்ன என்ன விசா வகைகள் இருக்கிறது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

39 comments:

Chitra said...

நல்ல அலசல் - நல்ல பதிவு.

மதுரை சரவணன் said...

நல்ல பதிவு. அக்கால நிலமை எடுத்து கூறிய விதம் அருமை. விசா கிடைத்துவிடும் ....பதிவுக்கு. வாழ்த்துக்கள்

நசரேயன் said...

//ஒருவர் அமெரிக்காவுக்க வர விரும்பினால என்ன என்ன விசா வகைகள் இருக்கிறது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.//

கள்ளத்தோணியிலே வர என்ன விசா தேவைன்னு சொல்லணும்

அரசூரான் said...

எளிமையா சொல்லி இருக்கீங்க. அமெரிக்கா கனவு தேசம் தான்... இனி (பகல்) கனவு தேசம். நம்மிடம் திறமை இருந்தால் இனி அந்த கனவை இந்தியாவிலிருந்தே காணலாம்.

அது சரி(18185106603874041862) said...

//
ஒருவர் அமெரிக்காவுக்க வர விரும்பினால என்ன என்ன விசா வகைகள் இருக்கிறது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.
//

அது யூஸ் ஆகாது...எந்த விசாவும் இல்லாம எப்படி வர்றதுன்னு வழி சொல்லுங்கய்யா...

அது சரி(18185106603874041862) said...

என்னது திடீர்னு கமெண்ட் மாடரேஷன் வருது??

Anonymous said...

//இப்போது அமெரிக்கப் பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறது.//

ஆஸ்திரேலியா அமெரிக்கா அளவு பாதிக்கப்படலைன்னாலும் கொஞ்சம் ஆடித்தான் போச்சு.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சரியான அலசல்..
( எப்படியும் இன்னும் 10 வருசத்தில, அவர்கள் நமது எம்பஸியில் க்யூவில் நிற்கும்
காலம் வரும்..வரனும் சார்..

அப்ப எல்லோரையும் உள்ளே அனுமதித்துவிட்டு ,
நாம் எல்லாம் அங்க போயிடலாம்..இத்தாலியயும் சேர்த்துக்கலாம்.சார் ப்ளிஸ்..)

மரா said...

மேற்கூறிய அனைத்தும் உண்மை. உண்மையத் தவிர வேறில்லை.

VISA said...

போடுங்கையா.....அமெரிக்காவ மேப்புல மட்டுமே பாத்து போய் சேந்திடுவனோன்னு பயமா இருக்கு

ONSITE IRUNTHA SOLAVUM HEHEHE

சந்தனமுல்லை said...

/நசரேயன் said...

//ஒருவர் அமெரிக்காவுக்க வர விரும்பினால என்ன என்ன விசா வகைகள் இருக்கிறது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.//

கள்ளத்தோணியிலே வர என்ன விசா தேவைன்னு சொல்லணும்
/

ஹிஹி..மீ டூ!

Saminathan said...

நல்ல பதிவு..
பிதற்றல்கள் தொடர வாழ்த்துக்கள் !

Unknown said...

//Chitra said...
நல்ல அலசல் - நல்ல பதிவு.//

டீச்சரே சொல்லிட்டீங்க. இன்னும் என்ன வேணும்?

Unknown said...

//Madurai Saravanan said...
நல்ல பதிவு. அக்கால நிலமை எடுத்து கூறிய விதம் அருமை. விசா கிடைத்துவிடும் ....பதிவுக்கு. வாழ்த்துக்கள்//

நன்றி சரவணன்

Unknown said...

//வானம்பாடிகள் said...
நல்ல பகிர்வு. நன்றி.///

டெம்ப்ளேட் டெம்ப்ளேட்

Unknown said...

//நசரேயன் said...
//ஒருவர் அமெரிக்காவுக்க வர விரும்பினால என்ன என்ன விசா வகைகள் இருக்கிறது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.//

கள்ளத்தோணியிலே வர என்ன விசா தேவைன்னு சொல்லணும்//

கள்ளத் தோணியில வர்றதுக்கு எதுக்குய்யா விசா வேணும்?

Unknown said...

//அரசூரான் said...
எளிமையா சொல்லி இருக்கீங்க. அமெரிக்கா கனவு தேசம் தான்... இனி (பகல்) கனவு தேசம். நம்மிடம் திறமை இருந்தால் இனி அந்த கனவை இந்தியாவிலிருந்தே காணலாம்//

நான் என்னோட பதிவுத் தொடரை முடிக்கிற முன்னாடியே நீங்களா ஒரு முடிவுக்கு வந்துட்டீங்களா.. சரிதான்.

Unknown said...

//அது சரி said...
//
ஒருவர் அமெரிக்காவுக்க வர விரும்பினால என்ன என்ன விசா வகைகள் இருக்கிறது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.
//

அது யூஸ் ஆகாது...எந்த விசாவும் இல்லாம எப்படி வர்றதுன்னு வழி சொல்லுங்கய்யா.//

நீங்க யூ.கே சிட்டிசன் ஆனப்புறம் வரலாமே??

Unknown said...

//அது சரி said...
என்னது திடீர்னு கமெண்ட் மாடரேஷன் வருது??//

அது போன பதிவு போட்டதினால. யாராவது ஜட்ஜையோ சுப்ரீம் கோர்ட்டையோ திட்டிட்டா அப்புறம் நாம தான பொறுப்பு. அதுக்காக.. :))

Unknown said...

//சின்ன அம்மிணி said...
//இப்போது அமெரிக்கப் பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறது.//

ஆஸ்திரேலியா அமெரிக்கா அளவு பாதிக்கப்படலைன்னாலும் கொஞ்சம் ஆடித்தான் போச்சு//

ஆமாங்க. அமெரிக்கா அப்பிடிங்கிறது உலக சீட்டுக்கட்டு கோபுரத்துல அடி சீட்டு. இது ஆடிச்சினா உலகமே ஆடத்தான் செய்யும்.

Unknown said...

//பட்டாபட்டி.. said...
சரியான அலசல்..
( எப்படியும் இன்னும் 10 வருசத்தில, அவர்கள் நமது எம்பஸியில் க்யூவில் நிற்கும்
காலம் வரும்..வரனும் சார்..

அப்ப எல்லோரையும் உள்ளே அனுமதித்துவிட்டு ,
நாம் எல்லாம் அங்க போயிடலாம்..இத்தாலியயும் சேர்த்துக்கலாம்.சார் ப்ளிஸ்..)//

ஏன் பட்டு, இத்தாலி ஃபிகரு எதையாவது டாவடிக்கிறீங்களா?

Unknown said...

//மயில்ராவணன் said...
மேற்கூறிய அனைத்தும் உண்மை. உண்மையத் தவிர வேறில்லை.//

நன்றி மயில்ராவணன்.

Unknown said...

//VISA said...
போடுங்கையா.....அமெரிக்காவ மேப்புல மட்டுமே பாத்து போய் சேந்திடுவனோன்னு பயமா இருக்கு

ONSITE IRUNTHA SOLAVUM HEHEHE//

கண்டிப்பா சொல்றேன் விசா. உங்களுக்கில்லாததா?

Unknown said...

//சந்தனமுல்லை said...
/நசரேயன் said...

//ஒருவர் அமெரிக்காவுக்க வர விரும்பினால என்ன என்ன விசா வகைகள் இருக்கிறது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.//

கள்ளத்தோணியிலே வர என்ன விசா தேவைன்னு சொல்லணும்
/

ஹிஹி..மீ டூ!//

பப்புக்கிட்ட ஒரு தோணி வரையச் சொன்னீங்கன்னா வரைஞ்சி தரப் போறா,அத வச்சிட்டு அப்பிடியே வங்காள விரிகுடால இறங்கி ஆப்பிரிக்காவைச் சுத்தி அட்லாண்டிக் கடலத் தாண்டி வந்திங்கன்னா, நம்ம நசரேயன் வீட்டுக்கிட்ட தரை தட்டிரலாம்..:))

Unknown said...

//பூந்தளிர் said...
நல்ல பதிவு..
பிதற்றல்கள் தொடர வாழ்த்துக்கள் //

இதுல உள்குத்தெதுவும் இல்லையே?

கண்ணா.. said...

அருமை....ப்ளாஷ் பேக்கை 1940 ல் இருந்து ஆரம்பித்தது அட்டகாசம்

அடுத்த பதிவிற்கு வெயிட்டிங்

:)

S Maharajan said...

நல்லா பதிவு,அங்கேயே(அமெரிக்கா) இருந்து அலசிகிட்டு இருந்கிங்க போல

க.பாலாசி said...

நல்லவேள நான் அமெரிக்காவுல இல்ல...

அடுத்ததையும் போடுங்க பாப்போம்....

நாடோடி said...

//ஒருவர் அமெரிக்காவுக்க வர விரும்பினால என்ன என்ன விசா வகைகள் இருக்கிறது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம். //

நல்லா சொல்லுங்க ஏதாவது தில்லுமுல்லு செய்ய முடியுமானு பார்க்கிறேன்...

vasu balaji said...

//வானம்பாடிகள் said...
நல்ல பகிர்வு. நன்றி.///

டெம்ப்ளேட் டெம்ப்ளேட் //
ம்கும். நான் என்ன உங்கள மாதிரி இளந்தாரியா. மத்த விசா பத்தி கவலைப்பட. நமக்கு இது தகவல்தான். டூரிஸ்ட் விசாக்கு வேற என்ன கவலை:))

பனித்துளி சங்கர் said...

//
ஒருவர் அமெரிக்காவுக்க வர விரும்பினால என்ன என்ன விசா வகைகள் இருக்கிறது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.
//


அய்யோ என்னை காப்பாற்ற யாருமே இல்லையா ?????????????????


மீண்டும் வருவான் பனித்துளி !

பனித்துளி சங்கர் said...

நல்ல பகிர்வு நண்பரே .

மீண்டும் வருவான் பனித்துளி !

க ரா said...

நல்ல பகிர்வு. நன்றி.

வெற்றி said...

நான் வாழ்க்கையை ஆரம்பிக்கப் போறப்ப தான் இப்படியெல்லாம் நடக்கனுமா..ம்ம்ம் :(((

Paleo God said...

நல்ல துவக்கம் முகிலன், தொடருங்கள்..:)

வில்லன் said...

///அது சரி said...
//
ஒருவர் அமெரிக்காவுக்க வர விரும்பினால என்ன என்ன விசா வகைகள் இருக்கிறது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.
//

அது யூஸ் ஆகாது...எந்த விசாவும் இல்லாம எப்படி வர்றதுன்னு வழி சொல்லுங்கய்யா.////

வந்துட்டாரையா வந்துட்டாரு... நீங்க இப்படி கேப்பிங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்..... ஒரே குட்டைல ஊருண மட்டைங்க இல்லையா!!!! உடனே நசரேயன காண்டக்ட் பண்ணும்.... அவரு அப்படி தான் கள்ள தோணில வந்து இங்க பொட்டி தட்டிட்டு இருக்காரு.... எப்படி கள்ள தோணில வர்றது.... யார பாக்கணும் எவ்வளவு செலவாகும்னு ஒரு நல்ல விளக்கமே கொடுப்பாரு........

வில்லன் said...

///பட்டாபட்டி.. said...
சரியான அலசல்..
( எப்படியும் இன்னும் 10 வருசத்தில, அவர்கள் நமது எம்பஸியில் க்யூவில் நிற்கும்
காலம் வரும்..வரனும் சார்..

அப்ப எல்லோரையும் உள்ளே அனுமதித்துவிட்டு ,
நாம் எல்லாம் அங்க போயிடலாம்..இத்தாலியயும் சேர்த்துக்கலாம்.சார் ப்ளிஸ்..)////

நீறு கெஞ்சுரத பாத்தா ஏதோ இந்தியாவுல இருக்குற இத்தாலி புள்ளிக்கு வளைய போடுராப்புல இருக்கு..... பாத்து... அது ஒரு கெழடு....ஒருவேளை ஓல்ட் இஸ் கோல்டுன்னு நெனைக்கின்களோ என்னவோ..... நல்லா இருங்க.....

வில்லன் said...

//

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

நல்ல பகிர்வு நண்பரே .

மீண்டும் வருவான் பனித்துளி ! //
மீண்டும் வர முடியாது... இங்க நல்லா வெயில் அடிக்கு... பனித்துளி காணாம போய்டும்.... மீண்டும் வருட கடைசிலதான் வரமுடியும்....

ஹுஸைனம்மா said...

கிட்டத்தட்ட வளைகுடா நாடுகளின் நிலைமையும் இதுதான் (குடியுரிமை தவிர). இங்கயும் இப்ப இந்நாட்டு இளைஞர்களுக்கு, வேலையில்லாத் திண்டாட்டம் பெருகுவதால் விஸா கட்டுப்பாடுகள் நிறைய.