Friday, March 26, 2010

சர்வதேச பதிவர் சங்கமம் அழைப்பிதழ் நிகழ்ச்சி நிரல்

சர்வதேசப் பதிவர் சங்கமம் நடத்துவது தொடர்பாக சர்வதேசப் பதிவர் சந்தித்து உரையாடியதை நாம் கடந்த வாரம் பார்த்தோம். இந்த வாரம் அந்த சந்திப்பு தொடர்பாக பல முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக அறிந்தோம்.

தலைவர் குடுகுடுப்பை, தளபதி நசரேயன் மற்றும் அண்ணன் அதுசரி அவர்களின் சீரிய முயற்சியால் கிட்டத்தட்ட சங்கம நிகழ்ச்சிக்கு அனுசரணையாளர்களை(Sponsors)ப் பிடித்து விட்டதாக அறிகிறோம். அந்நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்/நிகழ்ச்சி நிரல் நம் கையில் சிக்கியது. இங்கே அது உங்கள் பார்வைக்காக.


சர்வதேச பதிவர் சங்கமம் அழைப்பிதழ்

நண்பர்களே, சர்வதேசப் பதிவர்கள் சங்கமம் நடத்துவதென்று தீர்மானம் செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் துவங்கிவிட்டன. இந்த விழாவுக்கு நீங்கள் அனைவரும் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இந்த அழைப்பிதழுடன் நிகழ்ச்சி நிரலையும் இணைத்திருக்கிறோம்.


இடம்: டீ-கூ-வாங்க் தீவு, தென் அமெரிக்காவுக்குத் தெற்கே ஒரு தீவு
நாள்: 4/4/2010 ஞாயிறு


பல்வேறு நாடுகளிலிருந்து இந்த விழாவில் கலந்து கொள்ள சிறப்பு விமானங்கள் (நன்றி: டைகர்வுட் ஏர்லைன்ஸ்) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலந்து கொள்ள விரும்பும் பதிவர்கள் NOREPLY-COMMENT@BLOGGER.COM என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் விபரங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இந்தியா: இந்தியப் பதிவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்காக சென்னையிலிருந்து ஒரு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இந்த விமானம் சென்னை விமான நிலையத்திலிருந்து சனி காலை சரியாக 4:00 மணிக்குப் புறப்படும். இந்த விமானத்தில் பயணம் செய்ய விரும்பும் பதிவர்கள், தங்கள் பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் அல்லது குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை இப்படி எதாவது ஒரு அட்டையைக் கொண்டு வர வேண்டும். அப்படி எந்த அட்டையும் இல்லாதவர்கள், தங்கள் பள்ளிக்கூட ரேங்க் அட்டையையாவது கொண்டு வர வேண்டும். இது எதுவும் இல்லாதவர்கள் ஃபுட் போர்ட் அடிக்கக்கூட அனுமதிக்கப் படமாட்டார்கள்.

அமீரகம்: அமீரகத்தைச் சேர்ந்த பதிவர்களுக்காக, துபாய் விமான நிலையத்திலிருந்து சரியாக காலை 10 மணிக்கு இந்த விமானம் புறப்படும். விமானத்தில் மேலே சர்வதேசப் பதிவர் சங்கமம் என்ற போஸ்டர் ஒட்டியிருப்பது விமானத்தை அடையாளம் கண்டு கொள்ள உதவும். மேலும் இந்த விமானத்தில் ஒரு அண்டா பிரியாணியை முதலில் ஏற்றினால் தான் விமானம் புறப்படுமாறு தொழில்நுட்பம் செய்யப்பட்டுள்ளது. பிரியாணி இல்லாவிட்டால் பதிவர்கள் யாரும் பிரயாணம் செய்ய முடியாது.

சிங்கப்பூர், மலேசியா: சிங்கை மற்றும் மலேசியப் பதிவர்களுக்காக ஒரு கால் டாக்ஸி (உதவி: வரும் ஆனா வராது கால் டாக்ஸி சர்வீசஸ்) ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இந்த டாக்ஸி பிரபாகர் அண்ணன் அவர்களின் அப்பார்ட்மெண்ட் வாசலில் நிற்கும்.

ஐரோப்பா:ஐரோப்பாவைச் சேர்ந்த பதிவர்களுக்காக லண்டனில் இருந்து ஒரு பாய்மரப் படகு (உதவி: டைட்டானிக் கப்பல் கம்பெனி) மதியம் 12 மணிக்கு புறப்படுகிறது. பதிவர்கள் இப் பாய்மரப் படகில் பாய்ந்து ஏறிக்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறார்கள்.

அமெரிக்கா: அமெரிக்கப் பதிவர்களுக்காக ஒரு ஜெட் விமானம் பல்வேறு நகரங்களைத் தொட்டுச் செல்லும். அந்தந்த ஊரைச் சேர்ந்த பதிவர்கள் விமானம் அவர்கள் ஊரைத் தொட்டுச் செல்லும்போது ஒட்டிக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். எந்த நேரம் எந்த ஊருக்கு வரும் என்ற தகவல் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப் படும். (தீவிரவாதிகள் தாக்குதல் இருக்கலாம் என்று உளறல்துறை எச்சரிக்கை இருப்பதால் வெளிப்படையாக அறிவிக்க இயலாது)

மற்ற நாடுகளைச் சேர்ந்த பதிவர்கள் அவரவர் சக்திக்கேற்றவாரு, கால் டாக்ஸியோ, அரை டாக்ஸியோ, ஷேர் ஆட்டோவோ பிடித்து வந்து சேருமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

நிகழ்ச்சி நிரல்:

சனி மாலை 7:30

டீ-கூ-வாங் தீவில் உள்ள வாட் டைகர், நோ டைகர் ரிசார்ட்டில் (நிதி உதவி: ராஜபிச்சை பிரதர்ஸ் கார்ப்பொரேசன்) நடைபெறும் இந்த விழாவுக்கு வருகை தரும் அத்தனைப் பதிவர்களும் சனி மாலை 7:30 மணிக்குள் இந்த ரிசார்ட்டுக்குள் வந்து விட வேண்டும். சரியாக 8:00 மணிக்கு ரிசார்ட்டின் கதவு இழுத்துச் சாத்தப்படும். உள்ளே சென்றவர்கள் விழா முடியும் வரை வெளியே வர முடியாது என்பதை இங்கே அறிவிக்கக் கடமைப் பட்டுள்ளோம்.

சனி இரவு 8:30 இரவு உணவு

வழங்குபவர்கள் கேபிள் சங்கரின் கொத்துபரோட்டா - மூடி வச்சி மூணு நாளானாலும் மணம், குணம் குறையாதது

சனி இரவு 10:00 மணி - தூக்கம்

(உங்களுக்கான பாய், போர்வையை வழங்குபவர்கள் - கிழிசல் பாய் & கந்தல் போர்வை இன்கார்பொரேட்டட்)

ஞாயிறு 

காலை 6:00 மணி - துயிலெழும்புதல்

எச்சரிக்கை: இதற்கு மேலும் தூங்கும் பதிவர்கள் நிரந்தரமாகத் தூங்க வைக்கப் படலாம் - (பாதுகாவலர் உதவி - ராஜபிச்சை-பீத்தபாய செக்யூரிட்டி ஃபர்ம்)

காலை 6:01 - 8:30 மணி - பதிவர்கள் அனைவரும் தங்கள் காலைக்கடன்களை முடித்து குளித்து முடித்திருக்க வேண்டும்.
(நன்றி: செங்கக்கட்டி சோப்பு மற்றும் ஷக்கீலா துண்டுகள்)
குளிக்காத பதிவர்களுக்கு அரங்கத்தின் கடைசியில் இருக்கைகள் ஒதுக்கப்படும்.

காலை 8:30 மணி - காலை உணவு
(நன்றி: ஜெராக்ஸ் காப்பி கடை)

காலை 9:30 மணி - தமிழ்த்தாய் வாழ்த்து
(இந்நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்குபவர்கள் சித்தனாதன் விபூதி)

காலை 9:35 மணி - வரவேற்புரை - குடுகுடுப்பை
(இந்நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்குபவர்கள் ஜக்கம்மா ஜமுக்காளம்)

காலை 10:00 மணி - சிறப்புரை - ஓட்டையே இல்லாமால் கசியவிடுவது எப்படி? - சிறப்பு விருந்தினர் ஈரோடு கதிர்
(இந்த நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்குபவர்கள் - ஃபெவிகால் - ஓட்டைகளை அடைக்கச் சிறந்த சாதனம்)

காலை 10:30 மணி - சிறப்புரை - கடவுளுக்குக் கத்தி சொறுகுவது எதற்காக? - பிரிட்டன் பேச்சாளர் அதுசரி
(இந்த நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்குபவர்கள் - மரங்கொத்தி மார்க் கைக்குட்டைகள்)

காலை 11:30 மணி - சிறப்புரை - தலை முடியும் கைக்கிளிப்பும் - நறுக்குன்னு நாலு வார்த்தை - சிறப்பு விருந்தினர் வானம்பாடிகள்
(இந்த நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்குபவர்கள் - கேரக்டர் சீவிளி மற்றும் சிணுக்கொடி)

நண்பகல் 12:30 மணி - மதிய உணவு


இந்த மதிய உணவை உங்களுக்கு வழங்குபவர்கள் பனகல் பார்க் கையேந்தி பவன் உரிமையாளர் சங்கம்


மதிய உணவுக்கு இடையில் சர்வதேச பதிவர் குழுமம் துவங்கி வைக்கப் படும். துவக்கி வைப்பவர்கள் இந்தியாவிலிருந்து வருகை தரும் அத்தனைப் பதிவர்களும்


மதியம் 1:30 மணி - பழகு தமிழில் அழகுதமிழ் - பழமை பேசி
(இந்த நிகழ்ச்சியை வழங்குபவர்கள் குந்தித்தூங்கு நெக் பில்லோ)

(மதிய உணவருந்தி மயக்கத்தில் இருக்கும் பதிவர்கள் இந்த சமயத்தில் கண்ணயரலாம்)

மதியம் 2:00 மணி - கலந்துரையாடல் - தங்கமணியிடம் அடிவாங்காமல் இடுகை தேத்துவது எப்படி? - நெறியாளர் முகிலன்
இந்த கலந்துரையாடலில் திருமணமான ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும். ஏனையோர் பார்வையாளர்களாக இருந்து பயன்பெறலாம்.


இந்த நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்குபவர்கள் - HardRock பூரிக்கட்டைகள்

மதியம் 2:45 மணி - சிறப்பு நிகழ்ச்சி - துண்டு, துண்டு, துண்டு, ஐ ரோஜா - பதிவர் நசரேயன், பின்னூட்டர் வில்லன் மற்றும் சில வடக்கூர்க்காரிகள் இணைந்து மிரட்டும் ஓரங்க நாடகம்.
இந்த நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்குபவர்கள் ஃபேர் அண்ட் ஹேண்ட்சம் க்ரீம்

மதியம் 3:00 மணி - கவிதைப் பட்டறை - நடத்துபவர் கலகலப்ரியா. உடன் உதவி செய்பவர் பலா பட்டறை ஷங்கர்.
இந்த நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்குபவர்கள் தெளியும்பித்தம் எலுமிச்சைகள் மற்றும் க்விக்-க்ரோ ஆயுர்வேதிக் ஹேர் க்ரோயிங் க்ரீம்

மாலை 4:00 மணி - எதிர்பட்டறை - நடத்துபவர் குடுகுடுப்பை
இந்த நிகழ்ச்சியை வழங்குபவர்கள் அங்கண்ணன் வயித்தெரிச்சல் மற்றும் வயிற்றுவலி மாத்திரைகள்

மாலை 4:30 மணி - 6:00 மணி - பல நாடுகளில் இருந்து வந்திறங்கும் பதிவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள மேடை வழங்கப்படும்.
நிகழ்ச்சிக்கு இடையில் டீ/காபி/சிற்றுண்டி வழங்கப்படும். (அண்ணன் உண்மைத்தமிழனுக்கு மட்டும் இறுதியாகவே அனுமதி வழங்கப்படும்)


இந்த நிகழ்ச்சியை வழங்குபவர்கள் -  மெரீனா பீச்சில் கடலை/சுண்டல்/மாங்கா விற்கும் பொடியர்கள் சங்கம்

மாலை 6:00 மணி - கேள்வி நேரம் - பதிவர்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு பதிவர் பட்டாபட்டி அவர்கள் பதில் கூறுவார். யாருக்கும் கிடைக்காத இந்த அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள்.

இந்நிகழ்ச்சியை வழங்குபவர்கள் ப.மு.க. 

மாலை 6:30 மணி - கதை சொல்லி - நான் எழுதிய இரண்டு கதைகள் - சின்ன அம்மிணி தான் எழுதிய கதைகளில் இரண்டை வாசித்துக் காட்டுவார்

இந்த நிகழ்ச்சியை வழங்க யாரும் முன்வராததால் சின்ன அம்மிணி தன் சொந்த செலவில் ஏற்பாடு செய்கிறார்.

இரவு 7:30 மணி - இரவு உணவு 

(இந்த உணவை உங்களுக்கு வழங்குபவர்கள் மீண்டும் கேபிள்சங்கர் கொத்துபரோட்டா. தாகசாந்தி வேண்டும் பதிவர்களுக்கு கார்க்கியின் காக்டெயிலும் வழங்கப்படும்)

நிகழ்ச்சியின் துவக்கத்திலிருந்து இறுதி வரை ரிசார்ட்டின் கேட்டுகள் அடைத்துச் சாத்தப்படும் என்பதை அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை அறிவித்துக் கொள்கிறோம். மீறி வெளியேறியே ஆக வேண்டும் என்பவர்கள் மூன்றாவது வாசலில் வைக்கப் பட்டிருக்கும் கலகலப்ரியா காபி அண்டாவிலிருந்து ஒரு குவளை காப்பியும், பக்கத்து சட்டியில் இருக்கும் கலகலப்ரியா கருப்பு சாம்பாரில் ஒரு கரண்டியும் குடித்துவிட்டு, அதன் பின்னும் உயிரோடு இருந்தால் வெளியேறலாம்.

நிகழ்ச்சி முடிந்ததும் பதிவர்கள் வீடு திரும்ப வாகன ஏற்பாடுகள் எதுவும் செய்யப் படவில்லை. இதற்கான அனுசரணையாளர்கள் கிடைக்காததே காரணம். ஆல்-இன்-ஆல் அழகுராஜா கடையில் சைக்கிள்கள் கேட்டுள்ளோம். அவர்கள் இன்னும் பதில் அனுப்பவில்லை. அவர்களின் பதில் வரவும் பதிவர்களுக்கு மின்னஞ்சல் முறையில் தகவல் தெரிவிக்கப்படும்.

அனைவரும் வருக ஆதரவு தருக.

47 comments:

Prathap Kumar S. said...

அய்யா முடில சாமி...

பிரியாணி சட்டி தற்போது கைவசம் இல்லாததால் அமீரகப்பதிவர்கள் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் அமீரக பதிவர்கள் சார்பில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்,,,

ஸ்ரீ.கிருஷ்ணா said...

சிரிச்சிகிட்டே இருக்கலாம் தல ..Full comedy..

Paleo God said...

ஐயா நான் ரெடி எங்க ப்ளைட்டு?? எங்க ப்ளைட்டு??எங்க ப்ளைட்டு??எங்க ப்ளைட்டு??எங்க ப்ளைட்டு??எங்க ப்ளைட்டு??எங்க ப்ளைட்டு??

:))

vasu balaji said...

ராஜ பிச்ச பிரதர்ஸ் ஸ்பான்சார் பண்ணி அதுக்கு வரத விட நான் ராப்பிச்ச எடுத்து பொழச்சிக்குவேன். எளக்கியம்! எடத்த மாத்து. இல்லாட்டி நான் இந்த ஆட்டைக்கு வரல:))

கலகலப்ரியா said...

இங்கயும் கெளம்பியாச்சா அப்பு... நடத்துங்கடி நடத்துங்க... நான் மன்னிச்சாலும் அந்த சாம்பார்ல இருக்கிற கத்தரிக்காத் துண்டு உங்கள மன்னிக்க மாட்டேன்னு அடம் புடிக்குது... சாம்பார் கைலதான் கைலாசம்னு விதிச்சிருந்தா நாம என்ன பண்ண முடியும்... ஸ்ஸ்ஸ்ஸபா... எப்புடீ எல்லாம் ரோசன பண்ணுராய்ங்கப்பு....

VISA said...

As I am suffering from fever kindly grant me 2 days leave.

Yours Faithfully,
Internaational Blogger.

Anonymous said...

ulaga maha.........yokkia pathivargal neria peru irukknga...so unga flight la earathukku taguthi?
nan charu,nityanantha koda dan varuvaen.avanga than best.

பிரபாகர் said...

சிங்கையிலிருந்து ஒரு கால் டாக்சிக்கும் மேல் ஆள் இருப்பதால், ஒரு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்துக்கொண்டு வருவதாய் முடிவு செய்யப்பட்டு அதற்கான ஆயத்தங்களை செய்து வருகிறோம் எனும் மகிழ்வான செய்தியினை இங்கு தெரிவித்துக்கொண்டு, மற்ற தகவல்களை தனி இடுகையாக தருகிறோம் என உறுதி கூறி விடை பெறுகிறோம், நன்றி வணக்கம்....

பிரபாகர்...

பிரபாகர் said...

கலக்கல் நண்பா! அருமை.

பிரபாகர்.

பழமைபேசி said...

:-o)

குடுகுடுப்பை said...

பிரியாணி ஏற்பாடு பண்ணுங்க.சரியா வந்துடறோம்.

குடுகுடுப்பை எப்பயுமே பொதுச்செயலாலர்தான். தலைவர் அல்ல.

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
பிரியாணி ஏற்பாடு பண்ணுங்க.சரியா வந்துடறோம்.//


பிரியாணின்னு சொன்னாப் போதும்....வந்திடுவாரு....

//குடுகுடுப்பை எப்பயுமே பொதுச்செயலாலர்தான். தலைவர் அல்ல.//
//

பொதுச் செயலாளர்னு சரியா எழுதிப் பழகுங்க...அப்புறம் பாக்கலாம்!

அடுத்தது கையெழுத்து போடத் தெரிஞ்சிருக்கணும்....

நசரேயன் said...

//பழமைபேசி said...
//குடுகுடுப்பை said...
பிரியாணி ஏற்பாடு பண்ணுங்க.சரியா வந்துடறோம்.//


பிரியாணின்னு சொன்னாப் போதும்....வந்திடுவாரு....

//குடுகுடுப்பை எப்பயுமே பொதுச்செயலாலர்தான். தலைவர் அல்ல.//
//

பொதுச் செயலாளர்னு சரியா எழுதிப் பழகுங்க...அப்புறம் பாக்கலாம்!

அடுத்தது கையெழுத்து போடத் தெரிஞ்சிருக்கணும்....

March 26, 2010 2:26 PM//

யோவ் இதுக்கு மேலயும் உமக்கு அந்த பதவி தேவையா ?

துபாய் ராஜா said...

கலக்கல்.

Chitra said...

பிரியாணி உண்டுல? அமீரக பிரியாணி இல்லைனா, நான் வரல. சொல்லிபுட்டேன்.

வில்லன் said...

//சென்னையிலிருந்து ஒரு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. //
விமானம் or "V" மானம்

வில்லன் said...

//

Chitra said...

பிரியாணி உண்டுல? அமீரக பிரியாணி இல்லைனா, நான் வரல. சொல்லிபுட்டேன். //
உங்களுக்கும் அந்த காஞ்சிபோன தூரபோட வேண்டிய பிரயாணி வேணுமா....."ஏற்பாடு" பண்ணிட்டா போச்சி........

வில்லன் said...

//இந்த விமானத்தில் பயணம் செய்ய விரும்பும் பதிவர்கள், தங்கள் பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் அல்லது குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை இப்படி எதாவது ஒரு அட்டையைக் கொண்டு வர வேண்டும். //

இங்கே குறிப்பிட்ட எதுவுமே என்கிட்டே இல்ல......வியாபார அட்டை (BUSINESS CARD) இருக்கு போதுமா????

வில்லன் said...

/சிங்கை மற்றும் மலேசியப் பதிவர்களுக்காக ஒரு கால் டாக்ஸி (உதவி: வரும் ஆனா வராது கால் டாக்ஸி சர்வீசஸ்) ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இந்த டாக்ஸி பிரபாகர் அண்ணன் அவர்களின் அப்பார்ட்மெண்ட் வாசலில் நிற்கும்.//

இதுல எதாவது போஸ்டர் ஒட்டி இருக்குமா.....ஈசியா கண்டுபுடிக்க........

வில்லன் said...

//ஐரோப்பாவைச் சேர்ந்த பதிவர்களுக்காக லண்டனில் இருந்து ஒரு பாய்மரப் படகு (உதவி: டைட்டானிக் கப்பல் கம்பெனி) மதியம் 12 மணிக்கு புறப்படுகிறது///

படகுக்கு கேப்டன் யாரு நம்ம அது சரி ஐயாவா?.... மப்பு வாக்குல ஓரமா சாயாம இருந்தா சரி.....

வில்லன் said...

//அந்தந்த ஊரைச் சேர்ந்த பதிவர்கள் விமானம் அவர்கள் ஊரைத் தொட்டுச் செல்லும்போது ஒட்டிக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்//

ஒட்டிக்கொள்ள நாங்க என்ன போஸ்டரா???

வில்லன் said...

// சரியாக 8:00 மணிக்கு ரிசார்ட்டின் கதவு இழுத்துச் சாத்தப்படும். உள்ளே சென்றவர்கள் விழா முடியும் வரை வெளியே வர முடியாது என்பதை இங்கே அறிவிக்கக் கடமைப் பட்டுள்ளோம்.//

கதவ சாத்தினா என்ன!!!! சாத்தாட்டி என்ன!!!!! நாங்க காத்து மாதிரி தாண்டி விழுந்து வந்துருவோம்ல...........

வில்லன் said...

//சனி இரவு 8:30 இரவு உணவு

வழங்குபவர்கள் கேபிள் சங்கரின் கொத்துபரோட்டா - மூடி வச்சி மூணு நாளானாலும் மணம், குணம் குறையாதது//

சோம பானம்!!!! உற்சாக பானம் யாரு வழங்குரா????????????

வில்லன் said...

இரவு உணவுக்கு பிறகு "குடியும்" கும்மாளமுமா "குத்தாட்டம்" "ரிக்காடான்ஸ்" எதுவும் கெடையாதா....அப்பா நான் வரலை....

Anonymous said...

நான் ரொம்ப ஏழைப்பதிவருங்க. எனக்கு யாரும் ஸ்பான்ஸர் பண்ண மாட்டேங்கிறாங்க :)

//நன்றி: டைகர்வுட் ஏர்லைன்ஸ்) //
அது சீட்டா வுட் ஆகி ரொம்ப நாள் ஆச்சு.

வில்லன் said...

//குடுகுடுப்பை said...


பிரியாணி ஏற்பாடு பண்ணுங்க.சரியா வந்துடறோம்.

குடுகுடுப்பை எப்பயுமே பொதுச்செயலாலர்தான். தலைவர் அல்ல. //

ஏன் பண்ணுறத கமுக்கமா பண்ணிட்டு பழிய அடுத்தவன் (தலைவர்) மேல போடவா?????
அந்த "நாய் பத்திர ஊழல்" வழக்கு என்ன ஆனது......
சரியான ஆளுதான் நீறு....

வில்லன் said...

/

பழமைபேசி said...
//குடுகுடுப்பை said...
பிரியாணி ஏற்பாடு பண்ணுங்க.சரியா வந்துடறோம்.//


பிரியாணின்னு சொன்னாப் போதும்....வந்திடுவாரு....

//குடுகுடுப்பை எப்பயுமே பொதுச்செயலாலர்தான். தலைவர் அல்ல.//
//

பொதுச் செயலாளர்னு சரியா எழுதிப் பழகுங்க...அப்புறம் பாக்கலாம்!

அடுத்தது கையெழுத்து போடத் தெரிஞ்சிருக்கணும்.... //


இவரு ஒருத்தர் ஐயா......என்ன எழுதுறோம்னு முக்கியம் இல்ல.....என்ன சொல்லவரோம்கறது தான் முக்கியம்.....

அக்கினிச் சித்தன் said...

//முகிலனின் பிதற்றல்கள்//
நெத்தி அடி தலைவா!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிப் பார்த்தும்.. ”பட்டாபட்டி” பெயர் காணப்படாததால்..பதிவர் சங்கமம் நடக்கும் இடத்திற்க்கு.. அண்ணன் டேங்கர் லாரியை ஓட்டிவர முடிவு செய்துள்ளார்..


( பின்குறிப்பு.. இந்த முறை பட்டாபட்டி, லாரியில் விளக்கெண்ணெய் நிரப்பி.. விழாவுக்கு போவார், என தின குசும்பின் ரகசிய அறிக்கை கூறுகிறது..)


அண்ணே.. எனக்கு வருத்தம் இல்லைனே..
நானே பதிவர்களுக்கு, உணவு ஏற்பாட்டை செய்து கொள்கிறேன்...
அதற்கு மட்டும் அனுமதியளித்தால் போதுமானது...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@VISA said...
As I am suffering from fever kindly grant me 2 days leave.

Yours Faithfully,
Internaational Blogger.
//


இது கலக்கல் விசா சார்..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

முகிலன் அண்ணே..
என்னைய ஆட்டத்துக்கு சேர்த்ததுகிட்டதால..,

டேங்கர்ல.. டிரைவர் சீட்டுக்கு பக்கத்தில.. உங்களுக்கு மட்டும் நல்ல சாப்பாடு வெச்சுருக்கேன்
.
.
பதிவர்கள் சொல்லுவங்க..’வாங்க சாப்பிடலாமுனு’..உகூம்

சிரிச்சுகிட்டே திரும்பவும் சொல்லுவாங்க..உகூம்..


மீதி பதிவர்களை நான் பார்த்துக்குறேணே..
நன்றிங்கண்ணா..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

சிரிச்சு மாளலை முகிலன்.. அருமை அருமை.. நல்ல கற்பனை.. இந்த நிகழ்ச்சியை மட்டும் தொடர்ந்துகிட்டே இருங்க :))

ஜெய்லானி said...

// Chitra said...பிரியாணி உண்டுல? அமீரக பிரியாணி இல்லைனா, நான் வரல. சொல்லிபுட்டேன்.//

சித்ரா டீச்சர், நீங்க இன்னும் பிரியாணியை மறக்கலையா ?

ஜெய்லானி said...

//அண்ணே.. எனக்கு வருத்தம் இல்லைனே..
நானே பதிவர்களுக்கு, உணவு ஏற்பாட்டை செய்து கொள்கிறேன்...
அதற்கு மட்டும் அனுமதியளித்தால் போதுமானது.//

பட்டு தலைவா! உங்க பேர் லிஸ்டுல இருக்கு. விளக்கென்னை வானாம். கேட்டதும் இப்பவே வயத்தை கலக்குதே!!

சந்தனமுல்லை said...

/
காலை 9:35 மணி - வரவேற்புரை - குடுகுடுப்பை
(இந்நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்குபவர்கள் ஜக்கம்மா ஜமுக்காளம்)/

:))))

சந்தனமுல்லை said...

குட்டீஸ் நிகழ்ச்சி எதுவும் இல்லையாப்பா?!

க.பாலாசி said...

//கலந்துரையாடல் - தங்கமணியிடம் அடிவாங்காமல் இடுகை தேத்துவது எப்படி? - நெறியாளர் முகிலன்//

இதுக்காகவே வரணுமே... ஆமா எங்க ஈரோட்டுக்காரங்களுக்குன்னு ஏதாவது ஸ்பெஸல் மாட்டுவண்டி ஏற்பாடு பண்ணியிருக்கீங்களா?

Cable சங்கர் said...

:)

எம்.எம்.அப்துல்லா said...

கடல்மார்க்கமா வர்றவங்களுக்கு பரிசல்காரன் ஸ்பான்சர் பண்றதா சொல்லியிருக்காரு.

பனித்துளி சங்கர் said...

என்ன ஒரு வில்லத்தனம்?
சிரிக்க வச்சே கொன்னுடீங்க போங்க!!
கலக்கலான பதிவு!!

க ரா said...

:)

மன்னார்குடி said...

சூப்பர்.

Vidhoosh said...

//குந்தித்தூங்கு நெக் பில்லோ)//
/க்விக்-க்ரோ ஆயுர்வேதிக் ஹேர் க்ரோயிங் க்ரீம்///
//அண்ணன் உண்மைத்தமிழனுக்கு மட்டும் இறுதியாகவே அனுமதி வழங்கப்படும்)//
:)) சிரிச்சு முடிலங்க...

திவ்யாஹரி said...

உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்றுக் கொள்ளுங்கள் முகிலன்..

அது சரி(18185106603874041862) said...

நான் தான் மீட்டிங்குக்கு ரொம்ப லேட்டா வந்துட்டேன் போலருக்கே :)))

Unknown said...

பதிவைப் படித்து பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.. உங்கள் மேலான ஆதரவை பதிவர் சங்கமத்துக்கும் வந்திருந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்...

cheena (சீனா) said...

அன்பின் முகிலன்

சென்ற ஆண்டு சில தவிர்க்க இயலாத காரணங்களினால் கலந்து கொள்ள இயல வில்லை. ஒரு நல்ல சந்தர்ப்பத்தினை இழந்து விட்டேன். இந்த ஆண்டு முன்னேற்பாடாக - இப்பொழுதே இருக்கை முன் பதிவு செய்கிறேன். விரைவினில் விமான டிக்கெட் அனுப்பவும்.